Jump to content

பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் உறவுகளே

மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.

தலைப்பு

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

நடுவர்

செல்வமுத்து & தமிழினி

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

இளைஞன் (அணித்தலைவர்)

அனித்தா

விஷ்ணு

சிநேகிதி

அஜீவன்

மதன்

வர்ணன்

பிருந்தன்

குருக்காலபோவான்

மேகநாதன்

நாரதர்

வசம்பு

தீமை என்ற அணிக்காக

சோழியன் ( அணித்தலைவர்)

பிரியசகி

முகத்தார்

வியாசன்

அருவி

புளுகர்பொன்னையா

ஈஸ்வர்

ரமா

காக்காய்வன்னியன்

நிதர்சன்

தல

பூனைக்குட்டி

குருவிகள்

தூயவன்

இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.

புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்

நன்றி

வணக்கம்

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய தலைவராக இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை நாளை மாலை முன் வைப்பார்.

சீரழிந்துபோகிறார்கள் என்று வாதாட வந்திருக்கும் அணியின் தலைவர்சோழியன் அவர்கள் அதுவரை பொறுத்திருக்காமல் தனது அணிக்கு உரம்சேர்க்கும் கருத்துக்களை முன்வைத்து ஆரம்பிக்க விரும்பினால் ஆரம்பிக்கலாம்.

_________________

Posted

வணக்கம்.

இளையவர்க்கு நன்மையளிக்கும் வகையில், பயனளிக்கும் வகையில் பட்டிமன்றத்தை நடத்த

களமமைத்துத் தந்த இணைய ஊடகமான யாழ் களத்துக்கும், அதன் நிர்வாகத்தினர்க்கும்

எனது முதல் வணக்கம். பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து, கள உறுப்பினர்களை ஒருங்கமைத்து

நல்லதொரு பணியை சிறப்பாகச் செய்த இரசிகைக்கு நன்றிகலந்த வணக்கம். அடுத்து

பட்டிமன்றத்தின் நடுவர்களாக, எமது கருத்துக்களின் முன்நிலைப் பார்வையாளர்களாக

வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து

மற்றும் தமிழினிக்கும் சிறப்பு வணக்கம். இணைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறது என்று

தமது கருத்துக்களை களமிறக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், அவ்வணியைத்

தலைமையேற்றுள்ள சோழியான் அண்ணாவுக்கும் பண்பான வணக்கம். இறுதியாக எம்

இருதரப்பு வாதங்களையும், கருத்தாடல்களையும் வாசித்துப் பயனுற இருக்கும் ஏனைய

யாழ்கள உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் வணக்கம்.

அழிவிலிருந்து ஆக்கம் பிறக்கிறது. ஆக்கத்தின் செயற்தொடரில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

அந்தவகையில், உலகவரலாற்றின் மாபெரும் அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து

உருவாக்கம் பெற்றதே இந்த இணையம்.

அந்த இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்து வாழ் இளம் தமிழ்ச்சமூகம் நன்மையடைகிறதா? அல்லது

சீரழிந்துபோகிறதா? என்பதே யாழ் கருத்துக்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்

பட்டிமன்றத்தின் தலைப்பு.

தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய பரிமானங்களை உருவாக்கித் தந்த இந்த இணைய

ஊடகத்தால் நமது புலம்வாழ் இளஞ்சமூகம் அதிகம் நன்மையே அடைகிறது என்கிற

உண்மையை உறுதிபடக் கூற ஒன்றுபட்டிருக்கும் எனது அணிக்கு தலைமை ஏற்று, எமது

கருத்தியல் தளத்தை தெளிவுபடுத்தவும், அதற்கு வலுச்சேர்க்கவும் முதல் கருத்தாளனாக

எனது கருத்தை முன்வைக்கிறேன்.

இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத்தொழில்நுட்பத்தி

Posted

இரசிகை அவர்களின் ஒழுங்கமைப்பிலே, 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' என்னும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக முன்வந்திருக்கும் தமிழினி அவர்களே! திரு செல்வமுத்து அவர்களே! வாதப் பிரதி வாதங்களின் மூலமாக இன்றைய உண்மை நிலையை முன்வைக்கக் காத்திருக்கும் அணியிலுள்ள யாழ்கள உறவுகளே! மற்றும் பார்வையாளர்களே! முக்கியமாக களம் தந்த திரு மோகன் அவர்களே! தங்கள் யாபேருக்கும் எனது பணிவன்பான வணக்கங்களுடன், 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தலைப்பிலே எனது கருத்துக்களை முன்வைப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

விஞ்ஞான தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியின் மைல் கல் எனும் அளவிற்கு மானிட குலத்திற்கு வரப்பிரசாகமாக அமைந்திருப்பது 'இணையம்' என்றால் அதிலே ஐயமில்லை. பல்வேறு துறைகள் ஒட்டிய தேவைகளை, ஆலோசனைகளை, அறிவூட்டல்களை, தகவல் பரிமாற்றங்களை மிகவும் இலகுவாக்கி மானுட செளகரியங்களின் விரைவு நிறைவேற்றுதல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளதும் இணையம் என்றாலும் மிகையில்லை.

ஆனால், இத்தகைய இணையத்தின் பயன்பாடு, எம் இளைஞர்களைப் பொறுத்தளவில் எந்தவகையில் பயன்பாடாகிறது என்ற தேடலே இந்தப் பட்டிமன்றத்தின் நோக்கமாகும். அந்தவகையில் எனக்குத் தெரிந்த சில கருத்துகளை இங்கே முன்வைக்க விளைகிறேன்.

புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.

1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.

2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.

இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள். அவ்வளவுதான்.

இன்று புகலிட நாடுகளில் கணனி இல்லாத தமிழ் வீடுகளே இல்லை எனலாம். கணனியை இயக்கத் தெரிகிறதோ இல்லையோ... வானொலி, தொலைக்காட்சி முன்பு வரவேற்பறையில் அலங்காரப் பொருளாக இருந்ததுபோல.. இன்று கணனி அலங்காரப் பொருளாகவாவது வரவேற்பறையில் குந்திக்கொண்டிருக்கிறது. அந்தக் கணனியின் முன்னால் எத்தனை இளைஞர்கள் மணித்தியாலக்கணக்காக குந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. அதுவும் கணக்கிலடங்காதவர்கள். அப்பா அம்மாவை பார்த்தா.. 'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..' எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?!

காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்.

உதாரணமாக யாகூ சற் ரூம்களுக்கு போய் பாருங்கள். எம்மவரின் இணைய முன்னேற்றத்தை ஒலிவடிவிலேயே கேட்க முடியும். இப்படி கண்காணிப்பாளரற்ற சற் ரூம்களில் பங்குபற்றும் தமிழ் உறுப்பினர்களது எண்ணிக்கையையும் யாழ் போன்ற ஒழுங்கான கருத்துக்களங்களில் பங்குபற்றும் அங்கத்துவர்களின் எண்ணிக்கையையும் கவனியுங்கள். ஒரு வீதமாவது தேறுமா?!

எதிரணித் தலைவர் கூறியதுபோல, 'இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,

கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,

அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே

அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி' என்றால்.. 'சற் ரூம்'களிலே நேரத்தையும் காலத்தையும் கண்ணையும் பழுதாக்கிக்கொண்டு குப்பைகளை வாரி இறைக்கிறார்களே... அவர்களும் இளைஞர்கள்தானே?! அதாவது மாற்று அணித்தலைவரின் கணிப்பீட்டின்படி 80 வீத இளைஞர்களாவது இருப்பார்கள்தானே?!

சில விடயங்களை கூற வேண்டுமாயின் வேறு விடயங்களையும் துணைக்கு அழைக்கத்தான் வேண்டும். அதேபோல, 80ம் ஆண்டுகளிலேயே பெரும்பாலான தமிழர்கள் புலம்பெயர்ந்து காலூன்றினார்கள். அப்போது அவர்கள் 20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான இளைஞர்கள். அன்று அவர்கள் தமிழ் பாடசாலைகளை நிறுவினார்கள். அமைப்புகளை உருவாக்கினார்கள். வியாபாரங்களை ஆரம்பித்தார்கள். ஆக, இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்? என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவதையும் தவிர்க்க முடியாமலுள்ளது. இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிய முடையதாயின், அந்த நன்மையின் பயன்பாட்டை.. எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக் காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே!

தற்போது புலம் பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் இணையமானது, 'சற் ரூம்'களில் கூத்தடிக்கவும், அதனூடாக 'டேட்டிங்' காண வழி தேடலாகவுமே உள்ளது. இதைத் தவிர, இணையத்தால் அவர்களின் பயன்பாடு.. அந்தப் பயன்பாட்டினூடாக நமது இனம் பெற்ற பிரயோசனம் என்பது 'பூச்சியம்'ஆகவே என்மட்டில் தோன்றுகிறது.

ஆக, வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை.. எனவே, இணையமானது புலம்பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கிறது எனக் கூறி... மேலும் பல கருத்துகளை எனது அணியினர் முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து.. அவர்களை வாழ்த்தி.. விடைபெறுகிறேன். வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள்.

இளைஞனுடைய வாதத்தைப்படித்து அதற்காக என் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே சோழியான் தனது கருத்துக்களை முன்வைத்துவிட்டார். அப்படித்தான் நான் நேற்று எழுதியும் இருந்தேன். ஆனால் பின்னர் இரசிகை புதிய அணித்தலைவரைத் தெரிவுசெய்தார்.

இப்போது இரு அணித்தலைவர்களும் தமது கருத்துக்களை தந்துவிட்டனர் எனது கருத்துக்களை சிறிது நேரத்தில் வைப்பேன் அடுத்து கருத்துச்சொல்ல வருபவரை சிறிது பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இளைஞன் தனது பெயருக்கேற்றாற்போல் இளையவர்க்கு… என்று தனது வணக்கத்தினைச்சொல்லி வாதத்தினை ஆரம்பித்தார்.

"இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது என்கின்ற உண்மையை எதிரணியினர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா?" என்று கேள்விகளை எழுப்பினார்.

பக்கவாட்டில் வளர்வதும் ஒருவித வளர்ச்சிதானே! (அப்படியானவர்கள் மன்னிக்கவும்)

தமிழ் இணையத்தளங்கள் உலகிலே இரண்டாவது இடத்தில் இருப்பதைப்பற்றி அறிந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியான விடயம். ஆனால்

"இந்த இணையத்தளங்கள்தானே பிரச்சினைகளையும் உருவாக்கி, சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன"

என்று எதிரணியினர் வாதாட வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவந்தேன்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" இது இங்கே பொருந்துமா? (எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்).

கருத்தாட வந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இளைஞர்கள் என்று அடித்துக்கூறுகின்றார். எப்படி? பெயர்களைப் பார்த்து வயதுகளைக் கணிப்பது சரியா? இது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். (நான் வாதாட வந்திருக்கும் உங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பவில்லை, யாரும் பதில் தரவும் தேவையில்லை).

"குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்களைப் புறந்தள்ளுவதாகவும், இந்த அறிவிலிகளைத் தகர்த்தெறிந்து இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த இணைய ஊடகம் என்றால் மிகையாகாது" என்றும், "இளம் பெண்களின் கருத்தியல் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் தமது எண்ணத்தை, உணர்வுகளை வெளிப்படுத்த வழிசமைத்துக்கொடுத்திருப்பத

Posted

ஐயா நடுவர் அவர்களே! நான் இணையத்தின் அருமை பெருமைகளைப் பற்றி வாதிட வரவில்லை. இணையம் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றியே சிலதை கூறியுள்ளேன். மேலும் கருத்துக்களை நமது அணியிலுள்ளவர்கள் தருவார்கள். எனவே அடுத்தவருக்கு வழிவிடுகிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கங்கள். 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தனது அணியின் வாதத்தை ஆரம்பித்து இணையம் பற்றி அழகாகக்கூறி இளைஞனது ஒருசில கருத்தையும் தொட்டு வெட்டிச்சென்றார் சோழியான் அவர்கள். சோழியான் அவர்கள் சட்றூம் பற்றி திரும்பத்திரும்ப சொல்லிவிட்டுச்சென்றிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அணியின் தலைவர் சோழியான் அவர்களே, அனைத்துக் களஉறவுகளே "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழிந்தார்

"புலத்தில் வளரும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்" என்று பிரித்தார். இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது இப்படியான களங்களில் காண முடிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். "இல்லை" என்று தானே பதிலையும் கூறினார். நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும். (எதிர் அணியினர் இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டாம்)

இந்த சினிமா மோகம் உலகில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஒருவயதில் எல்லோரையும் தொட்டுச்செல்லும் ஒரு வியாதி என்று சொல்லலாம். இந்த வயதுக்கோளாறு உங்களையும் நிச்சயம் தொட்டிருக்கும். "களவையும் கற்று மற" என்று கூறுவார்கள். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்தானே! இதற்கு கணினி தேவையில்லை.

சி.டி அடிப்பது அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன், கேள்விப்படுகிறேன். இதற்குக் கணினி தேவைதான். கலியாணக்காட் அடித்ததுபற்றி ஒருமுறைதான் கேள்விப்பட்டேன். (இப்போது வெளியே மலிவாக அடிக்கலாம் என்று அவர்களுக்குக் கூறவேண்டும்).

சற் ரூம்களிலே போய்ப்பாருங்கள் காதலுக்கு வழிதேடுது என்று கூறினார். முன்னர் ஊரிலே காதலிக்கு கடுதாசி கொடுத்தால் கட்டிப்போட்டு கண்ணுக்கு மிளகாய்த்து}ள் போட்டுவிடுவார்கள். (என் அனுபவமல்ல) அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் இப்போது பெற்றோர்களாக இருக்கின்றார்கள். அதே கொள்கையைத்தான் இப்போதும் புலத்திலும் கடைப்பிடிக்கின்றார்கள். அப்போ இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது பருவக்கோளாறு. சற் ரூம் அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றதுபோல் இருக்கின்றது. (கோபிக்கவேண்டாம்).

மேற்கூறிய இரு களங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பிடுவது சரியல்ல என்று எண்ணுகிறேன். அங்கே 80 வீதம், இங்கே 80 வீதம். அப்போ 50 இற்கு 50 என்று கூறலாமா?

மீண்டும் 80 களைக் காரணம் காட்டினீர்கள். 60 களில் வந்தோரில் அதிகமானோர் வேலை செய்வதற்கு என்றுதான் வந்தார்கள். 70 களில் வந்தோர் படிப்பதற்கு என்றுதான் வந்தார்கள். ஆனால் நாட்டு நிலைமைகள் மாறியதால் 80 களில் வந்தோர் இரண்டுக்குமாகத்தான் வந்தார்கள். இப்படியெல்லாம் வருமென்று யார் கண்டார்கள்?

ஆகவே உங்களின் கருத்துப்படி இணையமானது சற் ரூம்களிலே கூத்தடிக்கவும், அதனு}டாக "டேட்டிங்" காணவும்தான் வழிவகுக்கின்றது என்று கூறினீர்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று எடுக்கலாமா?

இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிமுடையதாயின் அந்த நன்மையின் பயன்பாட்டை, எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக்காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே என்றும் கூறினீர்கள்.

நிச்சயம் வருவார்கள், தொட்டும் காட்டுவார்கள் என்றுகூறி தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி கூறி அடுத்தவரை அழைக்கிறேன்.

அனித்தா உங்கள் அணிக்கு பலம் கூட்டும் கருத்துக்களை முன்வைக்கவும்.

நன்றி

Posted

அனைவருக்கும் வணக்கம்.... :lol:

பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தி நடத்திவரும் இரசிகை அக்காவுக்கு முதலில் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் நடுவர்கள் செல்வமுத்து ஐயாவுக்கும் தமிழினி அக்காவுக்கும், வெள்ளித்தாமரையில் அமர்ந்திருக்கும் எம்மணித் தலைவர் இளைஞனுக்கும் எதிரணித் தலைவர் சோழியன் அண்ணாவுக்கும், பித்தளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் ஏனைய கருத்தாளர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கும் அனிதாவின் அன்பான பண்பான வணக்கங்கள்.. :P

எனக்கு முதல் வாதடிய எம் அணி தலைவர் இளைஞன் அவர்கள் எம் அணிக்கு வலு சேர்க்கும் அளவுக்கு நல் கருத்துக்களை வழங்கியிருந்தார்... அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

"புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்கிற தலைப்பின் கீழ் இணைய ஊடுகத்தால் இளையோர்கள் நன்மையே அடைகிறார்கள் என்று எனது அணிக்கு வலுச்சேர்க்க வந்திருக்கிறேன்...!

ஒகே விசயத்துக்கு வாரன்...

தாயகத்திலிருந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலத்திலோ வந்தவர்களில் பெரும்பாலானவர்களைத் தான் யாழ் களம் போன்ற தமிழில் கருத்தாடும் தளங்களில் காணமுடிகிறது என்று எதிரணித் தலைவர் சொல்கிறார். உண்மையை எதிரணித் தலைவர் ஒத்துக்கொள்கிறார். சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட சிலரையே, அதிலும் தமிழார்வம் உள்ளவர்களையே யாழ்களம் போன்ற கருத்துப் பரிமாறும் களங்களில் காணமுடியும் ஏன்றும் சொன்னார்...

எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...

சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!

இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தமிழில் கருத்தாடும் தளங்களில் கருத்தாடுவதால் மட்டுமே நன்மையடைய முடியும் என்பது யதார்த்தமல்ல... இணையம் என்பதே உலகைச் சுருக்கி திரையில் விரிப்பது. அப்பேற்பட்ட இணைய ஊடகத்தில் பல் மொழித்தளங்களின் பயன்பாடு என்பது அளப்பெரியது. எனவே இங்கு பிறந்து வளர்ந்த அல்லது இடையில் வந்தவர்கள்இ அந்தந்த நாட்டு மொழித் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் வேற்றுமொழித்தளங்களின் ஊடாக பல்வேறு நன்மைகளை அடைகிறார்கள் என்பதே உண்மை...!!!

'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..' எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?

ஐயா எதிரணித் தலைவர் அவர்களே, சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும், கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்தது, இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். யேர்மன் எழுத்தாளர் சோழியான் அண்ணா, சுவிசில் வசிக்கும் ஒளிப்பதிவுக் கலைஞர் அஜீவன் அண்ணா, போன்ற இன்னும் பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் கூச்சமில்லாமல் கவிதைகளை எழுதிப் பழகுகிறார்கள். தாயக செய்திகளை உடனுக்குடன் படிக்கிறார்கள். உலக நடப்புக்களை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை பெற்றோருக்கு தெரியாது தான் ஏனென்றால் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்கிறார்கள். எனவே பெற்றோரின் குறுகிற பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இளைஞர்கள் இணையத்தால் சீரழிகிறார்கள் என்ற வாதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது....!

எதிரணித் தலைவர் அவர்களே, மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும், பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

யாகூ சாற் ரூம்கள் பற்றி எதிரணித் தலைவர் குறிப்பிட்டார்.... அவர் கெட்டதை மட்டுமே ஒலிவடிவில் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.... அது ஒரு சிறு துளிதான். யாகூ அரட்டை அறைகளிலே ஒலிவடிவிலான பட்டிமன்றங்கள் நடந்தனவே அவற்றை நீங்கள் அறியவில்லையா? ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்..... எதிரணித் தலைவர் யாழ் போன்ற தமிழ்த் தளங்களை மட்டுமே மையமாக வைத்து தனது வாதத்துக்கு வலுச்சேர்க்கிறார்..... யாழுக்கும் அப்பால் பல வேற்றுமொழித் தளங்களின் மூலம் தமிழ் இளைஞர்கள் பயனடைகிறார்கள் என்பதுவும் அதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதுவும் எதிரணியினர் அறியவில்லைப் போல் உள்ளது....!

சாட் ரூம்களும், சினிமாத்தளங்களும் தான் இணையம் என்பது குறுகிய பார்வை. அதற்கும் அப்பால் விரிந்து பரந்த பயனுள்ள விதயங்கள் நிறைய உள்ளன. அவற்றை தமிழ் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள் பயனடைகிறார்கள்.....!

நடுவர் அவர்களே, இணைய ஊடகத்தால் புலம்வாழ் இளைய சமூகம் நன்மையடைகிறதா சீரழிகிறதா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் எதிரணித் தலைவர் நன்மையடைந்த இளைஞர்கள் எமது இனத்துக்கு என்ன தந்தார்கள் என்கிற அடுத்தகட்டக் கேள்வியைக் கேட்டு தமது வாதத்தின் பலவீனத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.... கேள்வியைத் திசைமாற்றி புலம்வாழ் தமிழ் இளம் சமூகம் இணைய ஊடகத்தால் தமிழர்க்கு என்ன நன்மை செய்தார்கள் என்று கேட்கிறார்கள்.... இருந்தாலும் அவரின் கேள்விக்கு எம்மால் நிறைய உதாரணங்களைத் தரமுடியும்... புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகம் நன்மையடைகிறது என்று தானே எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்த இளம் சமூகம் தானே நமது சமூகத்தின் தூண்கள்?

எதிரணித் தலைவர் கேட்ட கேள்விக்கு எனது பதில்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:

இன்று பெரும்பாலான பயனுள்ள தமிழ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்கள் யார்? தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தளங்களை வடிவமைத்து வழங்குபவர்கள் யார்? இளைஞர்கள் தான் என்கிற உண்மையை மறுக்கப் போகிறீர்களா? இன்று இந்த பயனுள்ள இணையத்தளமான யாழ் இணையத்தை வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற மோகன் அண்ணா இளைஞர் இல்லையா? இன்று உடனுக்குடன் செய்தியை ஓடிப்போய் புதினம் செய்தித்தளத்தில் பார்க்கிறீர்களே அதனை நிர்வகிப்பவர் யார்? ஒரு இளைஞர் தானே? வலைப்பதிவுகள் பலவற்றில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதையும் அதன்மூலம் தமிழில் பல நல்லவிதயங்களை அவர்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எப்படி மறந்துபோனீர்கள்? இலக்கிய இதழ்களான அப்பால் தமிழ், தமிழமுதம், பதிவுகள் போன்ற இணையத்தளங்களை மூத்தவர்கள் நெறிப்படுத்த தொழில்நுட்ப உதவிகள் செய்பவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழ் சமூகத்துக்கு எதனைச் செய்தார்கள் என்று கேட்கிறீர்களே தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உறுதுணையாக பல தளங்களை உருவாக்கி நெறிப்படுத்துபவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழீழப் இலக்கியப் படைப்புகள் பல வெளிஉலகத்துக்கு தெரியாமல் இருந்ததே அவற்றையெல்லாம் இணையம் ஊடாக உலகத்தமிழர்கள் அறியும் வகை செய்தவர்கள் யார்? html கற்போம், java கற்போம், வீடியோத் தொழில்நுட்பம் கற்போம், விஞ்ஞானம் அறிவோம் வாருங்கள் என்று தமிழ்சமூகத்தை தொழில்நுட்ப அறிவையும், அறிவியலையும் வளர்க்க இணையம் ஊடாக வழிசெய்தவர்கள் யார்? இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம்....

எதிரணித் தலைவர் அவர்களே கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !

எமது அணித்தலைவர் இளைஞன் சொன்னதுபோல ஆக்க நினைப்பவர்க்கு இணையம் ஊக்க சக்தி சீரழிய நினைப்பவர்க்கு சிறு துரும்பும் போதும்...!

நமக்குள் ஒளிந்துகிடந்த திறமையை வெளிப்படத்துவதற்கு களமமைத்துத் தந்த சுதந்திர ஊடகம் இணையம் என்றும் யாழ்களம் போன்ற பயனுள்ள இணையத்தளங்களினூடாக புதிய பல உறவுகளை அறிமுகப்படுத்தி நட்பு ஏற்படுத்தித்தந்ததும் இந்த இணைய ஊடகம் தான் எனக்கூறி எனது வாதத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறேன்...

மேலும் பல வலுசேர்க்கும் கருத்துக்களை எமது அணியினர் முன் வைப்பார்கள் எனவும் வெற்றி பெறுவோம் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்....! :wink: :P

நன்றி... வணக்கம்..!:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடடடே இத்தனை அழகான விவாதத்தை வாசிக்க வேண்டி உள்ளதே நேரடியாக கேக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை எனக்குள் எழுப்பிவிட்டு எல்லோரையும் தாமரையில் இருக்கச் செய்து தனது அணிக்கு வலுச்சேர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆணித்தரமாக வைத்துச்சென்றிருக்கிறார் அனித்தா.

அனித்தாவின் வாதத்தில் இருந்து..

ஏற்கனவே சினிமா மோகம் உள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தளங்களிற்குச்செல

Posted

'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' என்னும் தலைப்பில் நடைபெறும் இவ் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி நடுநிலைமை வகிக்க வந்திருக்கும் செல்வமுத்து ஐயாவிற்க்கும், தமிழினி அக்காவிற்க்கும் எனது முதற்க்கண் வணக்கம்!

இங்கே நான் உங்களோடு உறவாட வழி அமைத்துத்தந்த யாழ் இணைய ஊடகத்திற்க்கும், மோகன் அண்ணாவிற்க்கும், பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்தி செல்லும் ரசி அக்காவிற்க்கும் எனது பணிவான வணக்கம்!

அடுத்து, நமது அணிக்கு தலைமை தாங்க வந்திருக்கும் சோழியன் அண்ணாவிற்கும், அணி உறுப்பினர்களுக்கும், நன்மையே கொடுக்கும் இணையமென்று கருத்துக்களை கூற ஒருங்கிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், தலைவரான இளைஞன் அவர்களுக்கும், பட்டிமன்றத்தை பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஏனைய கள உறுப்பின்ர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.

'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' இதுவே நம் பட்டிமன்றத்தின் தலைப்பு.

எங்கள் அணிக்காக வாதாடிய அணித்தலைவர் சோழியன் அண்ணா கூறிய படி. இணையத்தளத்தின் பயன்களுக்கு மிகையானது எதுவும் இல்லை!! அத்தோடு இணையத்தளத்தினூடாகவே தான் நானும் உங்கள் உறவுகளை பெற்று, இங்கே உங்கள் எல்லோரின் முன்னில் என் கருத்துக்களை வைக்க வந்திருக்கின்றேன் என்பதையும் நான் மறுக்கவில்லை! ஆனால் எமது வாதம் என்னவோ அதை எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் (ஏன் மறைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.) ஆனாலும் அவர்களின் மறுப்பையும், மறைப்பையும் மீறி அவர்களுக்கு நம் தலைப்பை புரிந்து கொள்ள வைப்பதே எமது கண்ணான கடமை என எண்ணிக்கொண்டு எனது வாதத்தை தொடர விரும்புகிறேன்.

கனம் நடுவர் அவர்களே! இணையத்தளத்தின் முதல் தீமையாக நான் கூற விரும்புவது இணையத்தள்ங்களினாலும், இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். இதை நாம் யாழ் களத்திலேயே காணலாம். (ஏன் நான் என்னையே உதாரணமாக கூறுவேன்). இதில் நன்மை பெறுவார்களோ தீமை பெறுவார்களோ என்பதல்ல..அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள் என்பதே. ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! அப்படியாயின் முதல் தீமையை எதிரணியினர் தங்களையே உதாரணமாக எடுத்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

மேற்கோள்:

எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...

...என்றார், எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள்.

தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்)

மேற்கோள்:

சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!"

நடுவர் அவர்களே மேலே எதிரணி உறுப்பினர் அனிதா கூறியது போல் , சினிமா அடிப்படைக்காரணம் என்றாலும், சஞ்சிகைகளில் இளையோர் அலசிய விடயங்களை இணையம் இன்னும் விரைவாகவும், இலகுவாகவும் அவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு கடத்தியாக பயன்படுகிறதல்லவா..? அவர்களின் சினிமா மோகத்திற்கு இணையம் இதனால் இலகுவாக வழி வகுக்கின்றதல்லவா..?

ஆகவே எதிரணியினர் அந்தச் சினிமாவுக்காக இணையத்தைப் பயன்படுத்துவதை சீரழிவு இல்லை என்கிறீர்களா அல்லது இங்கே இணையத்தின் பயன்பாடு சீரழிவுக்கு பயன்படவில்லை என்கிறீர்களா......?

மேற்கோள்:

"தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள்."

தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். அவ்வளவுதான். இப்படியே பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு இருந்தால் எப்போது தான் உண்மை வெளிவரப்போகின்றது..?

இங்கே தான் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.

இளையோர்கள், சிறியோர்கள் என்றால், அவர்கள் வளர்ந்து வருபவர்கள், புதிய விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள், கூட படிப்பவர்களோ (அவர்கள் வேற்று நாட்டவராக இருந்தாலும் சரி) அல்லது கூடி பழகுபவர்களோ, செய்யும் காரியங்களை தாங்களும் செய்ய எண்ணுவார்கள். அது இள்மைக்கே உரிய ஒரு குணாதிசயமாகும். நீங்கள் சொன்னது போல, முற்றாக வேறு காலாச்சாரத்தைக்கொண்ட வேற்று மொழியினர்டன் பழகையில் வேற்று மொழியின் தளங்களை பயன் படுத்தவும் செய்கிறார்கள். இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும், வேற்று கலாச்சாரத்தை அவர்கள் பழகும் வாய்ப்பும், அதனால் நம் கலாச்சாரத்தோடு ஒன்றாத குணமும் உருவாகும் என்று. அதனால் அவர்கள் நாளடைவில் வேற்று நாட்டவர்களோடு(அவர்களின் கலாச்சாரத்தின் படி) தவறான இளமையோடு சம்மந்தப்படக்கூடிய எண்ணங்களையோ அல்லது அவற்றை உருவாக்கக்கூடிய தகவல்களை, படங்களை பெற வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு இணையம் ஒரு இலகுவான ஊடகமாக பயன்படுகின்றது. நாட்கள் செல்ல செல்ல...அதன் மேல் கொண்ட மோகம் அதிகமாக அவர்கள் நீங்கள் சொல்லும் நன்மைகளை விட்டு அவற்றையே நாடத்தொடங்குவார்கள்? இதை நீங்கள் மறுப்பீர்களா?? இல்லை இதற்கும் அவர்களின் இளைமையே காரணம் கூற்ப்போகின்றீர்களா? அப்படியே இளமையே காரணம் என்றாலும், அந்த இளமையின் வேகத்தையும் அந்த காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் உருவாகும் ஒரு வித துடிப்பினை, மோகத்தினை நீக்கும் படியாகவும், அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கவும் எத்தனை ஊடகங்கள் (இதில் தமிழ் ஊடகங்களும், நீங்கள் கூறிய அதே வேற்று மொழி ஊடகங்களும் அடங்கும்) பயன்படுகின்றன?? அதே குணாதிசயங்களை சாதகமாக்கி அதனூடாக பணம் பெற எத்தனை ஊடகங்கள் வழி வகுக்கின்றன.....? இரு வகையிலான இணையத்தளங்களின் எண்ணிக்கைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்....!

இதிலே நீங்கள் யாகூ பற்றி சொல்லலாம். பட்டிமன்றங்கள் நடத்துகின்றார்கள் என்று.

அங்கே சென்று நம் தமிழ் பிரிவில் பார்த்தால் நம் இளைய உறவுகள் தாகாத வார்த்தைகளால் மற்றவர்களைத் திட்டுவது தான் அதிகம். பட்டிமன்றம் எத்தனை தடவை நடத்தியிருப்பார்கள்...? ஆனால் தினமும் தாகாத வார்த்தைகளால் சண்டை என்பது நடக்கின்றது. மேலும் இப்படியான அரட்டைகளில் கீழ்தரமான பாலியல் விடயங்கள் பரிமாறப்படுகின்றன என்று, எம்.எஸ்.என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை அறையைத் தடை செய்திருப்பதை அறிவீர்களா? இது இளைஞர்கள் இணையம் மூலம் சீரழிகின்றனர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றதல்லவா!

மேற்கோள்:-

சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை

உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை

உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?

மறுக்கவில்லை, எதிரணித்தலைவர் அவர்களே! அதன் மறுபக்கத்தையும் பார்க்கும்படி கேட்கிறேன். புதிய உலகம்..அழகான அந்த உலகம் மட்டுமா நம் இளையோர் உருவாக்குகிறார்கள்?? இல்லையே அவர்களை அறியாமலேயே , இருக்கும் இந்த ஒரு உலகத்தினையும் மாற்றியல்லவா அமைக்கிறார்கள்...!

ஒரு வீட்டில் பிள்ளைகள் என்பவர்கள் அந்த வீட்டின் தூண்கள்!! புதிய உலகை உருவாக்குகிறார்கள் என்று உங்களைப்போல் பல புலம் வாழ் பெற்றோரும் நினைத்து எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள் கூறியது போல் ஒரு குறுகிய வட்டத்தையோ, சதுரத்தையோ அமைத்துக்கொண்டு இருந்தால், இருக்கும் இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..?

புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகமும் நன்மையடைகிறது என்று...அனிதா அவர்கள் கூறினார். அவரின் கருத்தை அப்படியே நான் எடுத்துக்கொண்டால், தூண்களான இளம் சமூகம் நன்மை அடைந்து முன்னேறா விடினும் சீரழிந்து கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமில்லையா..அவை கூறிய்து போல் அது மொத்த

தமிழ் சமூகத்திற்கும் கேடு இல்லையா. ..!

நடுவர் அவர்களே! நம் இளையோர் இணையத்தால் நன்மை மட்டுமே அடையாத பட்சத்தில் அவர்களின் நன்மையில் பங்கு கொள்ளும் தமிழ் சமூகம், அதே இளையோர்கள் சீரழிந்தாலும் பங்கு பெறும் அல்லவா? பல நன்மைகளை பெற்று முன்னேறினால் பாராட்டும் நம் சமூகம் (அநேக சமயங்களில்) ஒரே ஒரு சீரழிவினையோ, தீங்கையோ பெற்றால் அதன் இரட்டிப்பு மடங்காக தூற்றும் இல்லையா....?? ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.! இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில் எத்தனை எத்தனை சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் , பெண்களை அவமானப்படுத்தும் கேடான படங்கள், செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் ஏன் எதிரணியினர் எண்ணிப்பார்க்கத்தவறி விட்டனர்...?(இல்லை தவற்றி விட்டனரா..?)

இறுதியாக அனிதா அவர்கள்

டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... ! என்று அடித்து கூறினார்.

புலம் பெயர் நாடுகளில் எத்தனை தடவைகள் இப்படியான சடங்குகள் நடை பெறுகின்றன? அதுவே எத்தனை வீடுகளில் கணணிகள் இருக்கின்றன?

சடங்குகள் மூலம் இப்படியானவற்றை தவறான பாதைக்கு இழுத்துச்செல்லக்கூடிய தகவல்கள் பரிமாறப்படுவதிலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கணணி முன்னால் அதிகமாக பரிமாறப்படுகின்றன என்பதை நீங்கள் அறியவில்லையா...? அதனால் வரும் விளைவுகள் இன்னும் அதிகமானதென்பதை நீங்கள் உணரவில்லையா....?

இறுதியாக நடுவர் அவர்களே! எத்தனையோ காலமாக நம் ஈழ மக்களுக்கும் நன்மையே தந்த அந்தப்பெரும் கடல் கூட ஒரு நாளில் அத்தனை நன்மைகளுக்கும் பதிலாக ஈடற்ற நம் உறவுகளின் உயிர்களை அள்ளிச்சென்றது. நன்மைகளை பெறலாம்...வேறு வழிகளில்! உடலினை விட்டுச்சென்ற உறவுகளின் ஆருயிர்களை திருப்பிப்பெற முடியுமா..? அதே போலவே இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல். நன்மைக்கு பதிலாக நம் இளையோர்களின் இளமையும் இணைந்து அவர்களின் ஈடற்ற, திருப்பி பெற முடியாத எதிர்காலத்தை சீரழிக்கின்றது...என்று வருத்தத்தோடு கூறி......

இந்த அருமையான பட்டிமன்றத்தில், வாதிட எனக்கு வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து, நம் அணியினர் வெற்றி பெற இன்னும் பல சத்தான கருத்துக்களோடு காத்திருக்கும் நம் அணி உறுப்பினர்களை வாழ்த்தி , மலரப்போகும் இப் புத்தாண்டு உங்களுக்கும், எல்லோருக்கும், ஒரு இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டி..., விடை பெறுகின்றேன்.

நன்றி வணக்கம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள் என்ற அணிக்காக தனது கருத்தை வைத்த ப்ரியசகி அவர்கள். முன்னால் கருத்தை வைத்துச்சென்ற அனித்தாவின் கருத்துக்களையும் வெட்டிப்பேசி தனது கருத்தையும் கூறிச்சென்றிருக்கிறார். அதுமட்டும் அல்ல உள்ளங்களை உருக்கும் உண்மை ஒன்றையும் பகிர்ந்துவிட்டுச்சென்றிருக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கும் செல்வமுத்து ஜயா... மற்றும் தமிழினி அக்காவுக்கும் எனது பணிவான வணக்கங்கள். எமது அனைத்து கருத்து பரிமாற்றத்துக்கும் வழிசமைத்துத் தந்த மோகன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்த உறவுக்கும்... பின்னணியில் பட்டி மன்றம் சிறப்பாக நடக்க காரணியாக இருக்கு சகோதரி ரசிகை அவர்களும் எனது வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அணித்தலைவர்கள்.... மற்றும் எனது , எதிர் அணி உறுப்பினர்களுக்கும்... பார்த்துப்பயன் பெறும் உறவுகளுக்கும் எனது வணக்கத்தையும்.. புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு எனதுவாதத்துக்கு வருகிறேன்.

பிரியசகி கூறியது:-

இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...!

நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் யத்தையும் சேர்த்து கொல்வது எவ்வகையில் பொருத்தமாகும்??

பிரியசகி கூறியது:-

தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

தவறான கருத்து இது... தாயகத்தில் இருந்து வருபவர்கள் ஒப்பீட்டுரீதியில் தமிழ்கலாச்சாரங்களில் ஈடுபாட்டுடன்.... போராட்ட உணர்வுகளுடன் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களை குறைகூறுவது தவறு. தாயக உணர்வுகளுடன் கூடிய நிகழ்வுகளில் பங்கேற்கும் இளையோர்களில் எத்தனை தமிழே அதிகம் பேசத்தெரியாத தமிழ் இளையோர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக சுனாமி நேரத்தில் நிதி சேகரிப்பில் எத்தனை பேர் ஈடு பட்டார்கள்.

இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.

நடுவர் அவர்களே... புலம் பெயர்நாடுகளில் இயந்திரமயமான ஒரு இளைஞனின் வாழ்க்கையில்.... அவனது வாழ்வை மேம்படுத்தவும்... இலகுபடுத்தவும்... ஒரு இணையமானது எப்படி உதவி புரிகிறது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்... எனது அணித்தலைவர் பல கருத்துக்களை கூறிய போதிலும்.... நானும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.

காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.

வெளியில் செல்லும் போது... காலநிலை தகவல் மற்றும் போக்குவரத்து சாதனங்கள்.. பாதை விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

பாடசாலை நேர அட்டவணை மாற்றங்களை அறிந்துகொள்ளவும்..... பாடசாலை நேரம் தவிர ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இலகுவான ஒரு ஊடகமாகவும்.... நினைத்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு நோட்ஸை பெற்று கொள்ளவோ... ஒரு சந்தேகத்தைதீர்த்துக் கொள்ளவோ..வீட்டுப்பாடங்களை செய்து அனுப்பவும்.. அவற்றுக்கான பிழைதிருத்தங்களை பெற்றுக்கொள்ளவும் இந்த இணையம் பயன்படுகிறது.

யாகூ சாட் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எதிர் அணியினர் இங்கே கவனிக்கவும்.... சாட் மூலமாக வீட்டுப்பாடங்களை நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி செய்கிறார்கள் ( குரூப் ஸ்ரடி ) பாடவிபரங்களை இணையங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

குடும்பத்தை பிரிந்துவாழும் இளையோர் குடும்பத்துடன் இணைந்திருக் சாட் மற்றும் சாட்டுக்கு இணையாக சொல்லகூடிய தொலை பேசி சேவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல... புதிய உறவுகளை பற்று அதனால் பயன் அடைபவர்கள் எவளவு பேர் இருக்கிறார்கள். உதாரணமாக.. இந்த பட்டி மன்றம் சிறப்பாக நெறிப்படுத்தபடுவது சாட் மூலமே.... நாம் இணையத்தில் பெற்றுக்கொண்ட உறுவுகளுடன் சேர்ந்தே என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.

ஆகா அப்படியா?? சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா?? இது பற்றி பிரியசிக்கு தெரியாதா??

எத்தனையோ நல்லவிடயங்கள் இருக்கையில்... எதோ ஒரு உறுதிப்படுத்தமுடியாத தகவலை கூறி தனது கருத்தை கூற முற்படுகிறார் சகி....

மேலும்.........எதை படிக்கலாம் என்று யோசிப்பவர்கள்.. அவற்றை தெரிவு செய்யவும்.... அவற்றுக்கு விண்ணப்பிக்கவும்... படித்து முடித்தோர் நல்லதொரு வேலையினை தேடிப்பெற்றுக்கொள்ளவும்.. அவற்றுக்கு விண்ணப்பிக்கவும். இணையத்தை பயன் படுத்திக்கொள்ளவில்லையா??

மேலும் வங்கி நடவெடிக்கைகள்.. பிரயாண ஒழுங்குகள்... டிக்கட் செய்தல்... பொருட்களை சந்தைப்படுத்தவும்... கொள்வனவு செய்யவும்... வாழ்த்துகளையும் கடிதங்களையும் அனுப்புதல் பெற்றுக்கொள்ளுதல்... சிறந்த வாழ்வு துணையை பெற்றுக்கொள்வது போன்ற எத்தனையோ வகையான விடயங்களுக்கு இந்த இணையம் பயன்படவில்லையா??

எதிர் அணியினர் கேட்கலாம்.. இவை எல்லாம் இணையம் இல்லாமலே சீராக நடக்கவில்லையா என்று. நடந்தன அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால்... மற்றய ஊடகங்களைவிட.... விரைவாக.. இலகுவாக... மலிவாக... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அத்துடன் இவ்வாறான அனைத்து விடயங்களுக்கும் பயன்பட்ட மற்றைய ஊடகங்களை பின் தள்ளிவிட்டு இணையம் முதல் நிலையில் இருக்கிறது. இதனால் நமது இளையோர் நேரத்தையும் பணத்தையும் குறைவாக செலவு செய்து இலகுவாக தமது இலக்குகளை அடைவதற்கு இணையம் வழி செய்கிறது என்று கூறுகிறேன்.

வேலைச்சுமையுடன் வரும் ஒரு இளைஞம் ரிலாக்ஸ் பண்ணுவதற்கு.. தனது சுமைகளை மறந்து அடுத்த நாள் உற்சாகமாக தனது வேலையை செய்வதற்கு ஒருபொழுது போக்கு சாதனமாக இணையம் பயன்படுகிறது ( பாடல்களை படங்களை செலவின்றி பெற்றுக்கொள்ளல், அரட்டை மற்றும் பல.... )

இணையத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்கள்... தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் இளையோர் நன்மையே அடைகிறார்கள் என்ற தலைப்பில் தனது கருத்தை மிக அழகாக வைத்துச்சென்றார் விஸ்ணு. ( நேரில பட்டி மன்றம் வைச்சா அடிபிடி நடக்குமோ??)

பிரியசகியின் கருத்தை வெட்டிச்சென்ற விஸ்ணு மனக்கட்டுப்பாடின்மையே ஒருவிடயத்திற்கு அடிமையாவதற்குக்காணரம். மனக்கட்டுப்பாடற்றவர்கள் தான் இணையத்திற்கு அடிமையாகிறார் என்கிறார். அலைபாயும் மனசுடையவர்கள் இளையோர் எதையும் கையாண்டு பார்க்கவேண்டும் என்று எண்ணும் வயசு என்கிறார்கள்.. இளையோரிடம் மனக்கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியுமோ..?? பார்ப்போம் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன கருத்து வருகின்றது என்பதை

இணையமானது சிறுவயதில் இங்கு வந்த இளையோருக்கு தாயக உணர்வை ஊட்டும் பணியைச்செய்கிறது என்று விஸ்ணு கூறுகிறார்.. குறிப்பாக TYO என்கின்ற ஒரு இணையத்தை சுட்டிக்காட்டுகிறார்.. பல்லாயிரக்கணக்கான இணையங்கள் இருக்கையில் ஒரு சில இணையங்கள் தாயக உணர்வை ஊட்டினால் போதுமா என்கின்ற கேள்வியை எழுப்புவார்களோ எதிரணியினர்..??

உடனுக்குடன் உலகச்செய்திகளைமட்டும் அல்ல தாயகத்துச்செய்தியையும் அறிய இணையம் உதவி செய்கிறது. இது நன்மையில்லையா..?? என்கிறார் விஸ்ணு. அது தானே இது நன்மையில்லையா என்ன..??

பத்துப்பேர் மத்தில் பூரணமான ஒருவனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இணையம் உதவுகிறது என்கிறார்.?? எப்படி செய்தியை உடனுக்குடன் அறிந்தால் மட்டும் பூரணத்துவம் அடைந்துவிட முடியுமா..?? பதில் வருகிறதா பார்ப்போமே..??

காலநிலை அறிவது பள்ளித்தேவைகளை நிறைவேற்றுவது என்று எத்தனையோ தேவைகளுக்கு இந்த இணையம் பயன்படுகிறது என்கிறார் விஸ்ணு.

இன்னொன்று... பள்ளித்தேவைகளுக்காக (ஒப்படைக்காக) இணையத்தில் தகவல்களைத்தேடும் மாணவர்கள் இணையத்தில் உள்ளவற்றை அப்படியே பிரதி பண்ணி அதனை ஆசிரியரிடம் தங்கள் ஆக்கமாக கொடுக்கிறார்கள். அப்படிக்கொடுக்கையில் அதாவது இன்னொருவருடைய அவரது ஆக்கத்தை பிரதி பண்ணிக்கொடுப்பதால் குறிப்பிட்ட மாணவனுக்கு என்ன பயன்..?? குறிப்பிட்ட மாணவன் குறிப்பிட்ட பாடத்தை தானாய் படித்து அதற்குரிய விடையைத்தேடாது பிறர் எழுதியுள்ளதை பிரதி பண்ணிக்கொடுப்பதன் மூலம் அவன் அறிவு வளர்கிறதா..?? நடைமுறை ரீதியாக தான் படித்ததை பிரதியிடவேண்டிய சூழ்நிலில் அவனால் என்ன செய்யமுடியும்..?? குறிப்பாக கூகுல் போன்ற இணையத்தில் பாடத்தின் தலைப்பை எழுதிவிட்டால் தேவையான விடயங்கள் வரும் அவற்றை கொப்பி பண்ணிக்கொடுக்கும் போது பயன் என்ன..?? மாறாக மாணவன் வாசித்து அதை விளங்கிக்கொண்டு தனது சொந்த பதிலை தானாய் எழுதும் போது அவனது அறிவு விருத்தியாகிறது. (பலர் இதையே செய்கிறார்கள் ஒருசிலர் விதிவிலக்கு..) இது நன்மையா என்ன..??

வங்கி நடவடிக்கைகள் பிரயாண ஒழுங்குகள் போன்றவற்றை இணையத்தின் ஊடாக மிக இலகுவாக செய்துமுடிக்கலாம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்

Posted

நீதி தவறாது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் போல அமந்திருக்கும் நடுவர் செல்வமுத்து ஜயா அவர்களுக்கும் தனது பேரிலேயே தமிழையும் தமிழ்பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழினி அம்மா அவர்களுக்கும் எனது முதல் வணக்கங்கள் (பாண்டிய மன்னன் நீதி தவறி தீர்ப்பு வழங்கியதால் என்ன நடந்தது என்பது நடுவருக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்) தேவையில்லாமல். . . . மன்னிக்கவும். . . . நல்ல கருத்துள்ள பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகைக்கும் இங்கு நடாத்துவதற்கு அனுமதியளித்த கள நிர்வாகத்துக்கும் நன்றிகள் நல்லதொரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கவேணுமெண்ட ஆதங்கத்துடன் சோழியன் அவர்களுக்கு கீழ் அணிவகுத்து நிற்கும் தோழர்களுடன் நானும் இருப்பதில் பெருமையடைகிறேன் எதிர் தரப்பில் பரிதாபமாக ஏண்டா இதுக்கை வந்து மாட்டுப்பட்டம் எண்டு முழிபிதுங்க அமந்திருக்கும் எமது எதிரணியினருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்

நடுவர் அவர்களே எனக்கு முன்னால் பேசிய விஷ்ணுதம்பி சிப்பாய்கள் கொமாண்டோ என்று சொல்லி ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வந்து எமது அணியினரையும் உங்களையும் பயப்படுத்தப்பாக்கிறார் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேணும் எண்டு கேட்டுக் கொள்கிறேன்

திடீரெண்டு அணியிலை கடைசி ஆட்டக்காரர் முன்னுக்கு வந்தால் எதிரணியினருக்கு ஒரு பயம் இருக்கும்தான். . . . சரி இண்டைக்கு தலைப்பு இணையம் புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு நன்மையை தருகுதா அல்லது தீமையை தருகுதா என்பதே.. . . .முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே அவர்கள்தான் என்ன செய்வார்கள் அங்கை பாருங்க. . .இருக்கிற எல்லாரும் சின்னஆட்கள் இந்த வயசிலை தாங்கள் பிடிச்சதான் சரி எண்டு நிப்பார்கள் எங்கள் அணியில் இருப்பவர்கள் போல அறிவான அனுபவசாலிகளின் கருத்துக்களை அவர்கள் காலவோட்டத்தில் உள் வாங்கி தங்களைத் திருத்திக் கொள்ளுவார்கள் எண்டு நம்புகிறேன்

எதிரணியில் எனக்கு முன்னம் வந்த விஷ்ணு தம்பி இணையத்தில் சீரழிவுகள் இருக்குது தான் ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் கெட்டுப் போவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு எண்டு கூறிச் சென்றார் அப்ப அவரே ஒத்துக் கொள்கிறார் இந்த மனக்கட்டுப்பாடு எங்கடை இளைஞர் இடத்தில் இருக்கிறதா எண்டதுதானே பிரச்சனையே எதை பாக்கப்பிடாது எண்டு சொல்லுகிறோமோ அதைதான் முதல் போய் பாத்துவிட்டு மற்றவேலை பார்ப்பார்கள் அந்த இளமைத் துடிப்பால் அதிகம் ஈடுபடுபவர்களே அதிகம் என்றே நாம் வாதாடுகிறோம் சரி அப்பிடி மனக்கட்டுபாடோடு சாமியாரைப் போல இருந்தால் தம்பியனுக்கு ஏதோ வருத்தம் எண்டு வைத்தியரிட்டை போற பெற்றோரைத்தானே பாத்திருக்கிறம்

இன்னெண்று குறிப்பிட்டார் சிறந்த வாழ்க்கைத்துனையை பெற்றுக் கொள்ள இணையம் உதவி செய்கிறது எண்டு ஜயா. . .குறிப்புப் பாத்து நேரை போய் பெம்பிளையும் பாத்து பத்துப் பேரிட்டை விசாரித்து செய்யிற கலியாணங்களே பிச்சுக்கிது இந்த லட்சணத்திலை இணையத்திலை போய் பெம்பிளை எடுத்தால். . . . .சிலவேளைகளில் விஷ்ணு போன்றவர்களுக்கு அப்பிடி செட் ஆகியிருந்தால் சந்தோஷம். . .அடுத்தது வேலைப்பளுவால் வீடு வாற இளைஞனுக்கு இணைய அரட்டை புத்துணர்ச்சியை தருவதாக. . .இது நல்ல பகிடி ஒரு இளைஞன் உற்சாகமாக திடகாத்திரமாக இருக்கவேணுமெண்டால் ஜீம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யுங்கோ அல்லது பீச்சுப் பக்கமா போய் அப்படியே கடலை போட்டுட்டு . .மன்னிக்கவும் . . கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நடந்திட்டு வாங்கோ எப்பிடி மனசிலும் உடம்பிலும் உற்சாகம் வரும் எண்டு தெரியும் இதை விட்டுட்டு அறை புூட்டிப்போட்டு கணணிக்கு முன்னாலை குந்தியிருந்தால் உற்சாகம் வராது தலையிடிதான் வரும்

எதிர்தரப்பு தலைவர் கூறினார் தொழிநுட்ப வளர்ச்சி இணைய வளர்ச்சி மேல் நோக்கி இருக்கவேணுமா? கீழ் நோக்கியிருக்கவேணுமா எண்டு . . .நாங்கள் அதை மறுக்கவில்லை அவர்கள் சொல்லுவது போல எந்தப்பக்கத்திலையாவது வளர்ந்துட்டுப் போகட்டும் ஆனால். .அந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேணுமெண்டதே எமது கருத்து அதே போல இன்னெண்டையும் குறிப்பிட்டார் இளம் பெண்கள் சுதந்திரமாகவும் தமது கருத்துக்களை சொல்வதுக்கு இடமளிக்கிறது எண்டு ஜயா இதுக்கு முன்னம் பத்திரிகைகளில் பெண்கள் சுதந்திரமாக கருத்துகள் எழுதவில்லையா. . ?ஆனா இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எத்தனை பெண்கள் இணையத்தின் ஊடாக எங்களைப் போல நல்லா ஆண்களை எல்லாம் கவிழ்த்திருக்கிறார்கள் எண்டு சொல்லட்டா. . .(வேண்டாம் அது வேறை பட்டிமன்றமாகப் போய்விடும்) இன்று புலத்தில் இருப்பவர்கள் பணவிசயத்தில் ஒரு குறையுமில்லாமல்தான் இருக்கிறார்கள் அவர்களின் இந்த நாகாPக வளர்ச்சியில் கணணி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கையாளப்படுகிறது. தனது பிள்ளை இணையத்தில் புகுந்து விளையாடுவான் எண்டு சொல்லிப் பெருமைப்படுகிறவர்கள் பிள்ளைகள் இணையத்தில்; எங்கை புகுந்து நிக்கினம் எண்டதை ஏன்தான் பாக்கிறார்கள் இல்லையோ தெரியேலை. . இதற்கு காரணம் சில இடங்களில் படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் இருப்பது பிள்ளைகளுக்கு வசதியாகப் போய் விட்டது அல்லது வெளிநாட்டு நாகாPகத்தில் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது அழகில்லை எண்டு எண்ணமும் சில பெற்றோரிடம் இருக்கலாம் இப்பிடி அளவுக்கு அதிகமான சுதந்திரமும் கவனிப்பாரற்று இருப்பதாலும் இளைஞர்கள் தவறான வழியில் இணையத்தை பயன்படுத்த உதவுகிறது

எதிர் தரப்பினர் கூறலாம் இணைய வசதி இருப்பதால்தான் இப்பிடியொரு பட்டிமன்றத்தை நடத்தக்கூடியதாக இருக்கிறது எண்டு .. வருஷத்திலை ஆத்தி பு|த்தாப்போல ஒரு நிகழ்ச்சி இதை வைத்துக் கொண்டு இணையம் நன்மையை தருகிறது எண்டு நடுவர்கள் வரமாட்டார்கள் எண்டு நம்புகிறேன் ஆனா இதிலும் ஒன்றை கவனிக்க வேணும் இங்கு கருத்தாடுபவர்களின் உண்மையான திறமையை எங்களால் அறிய முடியுமா? மேடையில் பேசுவதுக்கும் இதுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்வீர்கள்தானே இந்த இணைய வசதி ஒரு துடிப்புள்ள இளைஞனை நாலு சுவத்துக்கு இருந்து தனிய சிரிச்சுக் கதைப்பது பார்பவர்களுக்கு பைத்தியக்காரனோ என எண்ண வைக்கிறது எண்டு சொன்னாலும் தவறில்லைதானே. . ஒரு தங்கை குறிப்பிட்டா இணையத்தளங்களில் இருக்கும் ஆபாசப்படங்கள் புத்தங்களில் இல்லையா எண்டு. . .நல்ல கருத்து ஒரு புத்தகத்தை வைத்துப் பாக்கும் போது அறிவு குறைந்த பெற்றோராலும் அதை கண்டு கண்டிப்பதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு (நான் இருக்கும் நாட்டிலை அப்படியான புத்தகங்களுக்கும் கறுப்பு மையடிச்சுத்தான் விடுகிறாங்கள் என்னத்தைப் பாக்கிறது) ஆனால் இணையத்தில் அப்பிடியா. . .? டவுண்லோட் பண்ணி கணணியில் ஒளிச்செல்லோ வைக்கிறீயள் எங்கை போய் தேடுறது

அண்மையில் இந்தியாவின் இணையத்தள சேவர் அமைப்பொண்றிடம் இளைய சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் கேட்டார்கள் இணையத்திலிருக்கும் ஆபாச தளங்களை தடைசெய்ய முடியாதா எண்டு அதுக்கு அவர்கள் கூறினார்கள் ஒருநாளுக்கு இணையத்தில் வருபவர்களில் 75 சதவீதமானவர்கள் அப்பிடியான தளங்களைத்தான் பார்வையிடுகிறார்கள் மிகுதி 25 வீதம்தான் சாதாரண தளங்களுக்கு போவதாக இந்த நிலையில் அப்பிடியான தளங்களை தடை செய்தால் நாங்கள் எல்லாரும் மூட்டைகட்ட வேண்டியதுதான் என்று . . .அப்போ இப்பிடியான தளங்களை நம்பித்தான் அவையின்ரை வாழ்க்கையே போகுது என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான தளங்களை பார்வையிடுபவர்கள் இளைஞர்கள் எண்டுதான் நம்புகிறேன்;. . . .

இணையத்தில் பலதரப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது என்கிறார்கள் மறுக்கவில்லை ஆனால் எமது இளைய சமுதாயம் எப்பிடியான செய்திகளை உள் வாங்குகிறார்கள் எண்டு கவனிக்கவேணும் அன்று எனது நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் அவரின் 15 வயதுள்ள மகன் அங்கிள் இந்த வீடீயோ பாத்தீங்களா எண்டு கணணியிலை ஒரு படத்தைக் காட்டினான் நான் திகைத்து போய்விட்டேன் என்னவெண்றால் அண்மையில் ஈராக்கில் அல்ஹாய்தா தீவிரவாதிகளால் பிடிக்கபட்ட ஒரு பயணகைதியை கொலை செய்யும் காட்சி அதுவும் தலையை துண்டாக வெட்டி மற்றைய கையில் எடுத்து காட்டுகிறார்கள் எனக்கு இதை சொல்லும் போது கை நடுங்குது ஆனா இந்த சிறுவன் இதை அடிக்கடி போட்டுப் பாக்கிறான் இப்பிடி மனநிலையுள்ள அந்த பையன் இதை செய்து பாத்தால் என்ன எண்டு வெளிக்கிட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை அப்ப இந்த இணைய வசதியால் ஒருவன் கொலையாளி ஆவதுக்கும் அதை எப்பிடி செய்வது என்பதுக்கும் ஜடியா குடுப்பதாகவும் நாங்கள் எடுக்கலாம்தானே. . . .

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்த நாடாவது ஆபாச தளங்களை தடை செய்ய முன்வருகுதோ அதன் பிறகு நாங்கள் பார்க்கலாம் எவ்வளவு இளைஞர்கள் இணையத்தை விருப்புடன் பாக்கிறார்கள் எண்டு அதுக்கு எந்த நாடும் முன்வராது . . (ஆனா. . .ஓரே ஒரு நாடு இருக்குது. .அந்த பாவப்பட்ட பாலவனத்து நாட்டிலிருந்துதான் எனது கருத்தை சொல்லுகிறன் ஜயா) மீண்டும் விஞ்ஞான வளர்ச்சி நாகாPகம் எண்டு அறிமுகமான இணையம் எமது இளைஞரை சோம்பேறிகளாக்கி உடல் திடகாத்திர மில்லாத நோயாளிகளாக் கூட மாற்றியிருக்கிறது /மாற்றுகிறது என்று கூறி வாய்ப்பு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் நன்றி

வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாண்டிய மன்னிற்கு செல்வமுத்துவை ஒப்பிட்டு களமிறங்கியிருக்கும் முகத்தார் வெருட்டிறமாதிரியும் இருக்கு.. முகத்தார் வீட்டில் அல்ல பட்டிமன்றத்திலும் தனது ஆளுமையைக்காட்டியிருக்கிறார

Posted

மத்தியஸ்தர்களான செல்வமுத்து ஆசிரியருக்கும் தமிழினியக்காவுக்கும் எனது மாண்புமிகு வணக்கம்.இருதரப்பு சகபாடிகளுக்கும் அன்பான வணக்கம்.நாங்கள் பட்டி மன்றம் நடத்தும் அழகையும் வாதப் பிரதிவாதங்களையும் மகிழ்வோடு பாரத்துக்கொண்டிருக்கும் சபையோருக்கும் பணிவான வணக்கம்.எங்களுக்கெல்லாம் இவ்வரிய வாய்ப்பை வழங்கிய ரசிகைக்கு நன்றி.

"இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?"

சோழியன் அண்ணா இளைஞர்கள் எம்மினத்துக்கு என்ன தரவில்லையென்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்டனீங்கள்.எங்கட இளைஞர்களான "தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் தாயகத்துக்குச் சென்று அங்குள்ள எம் சகோதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ இவ்மைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாயகம் சென்று ஆங்கிலம் மற்றும் கணனி வகுப்புக்களை நடத்துகிறார்கள்.அவர்களுக்கு இங்கு பொழுது போகவில்லையனெறா அங்கு போய் உதவி செய்கிறார்கள்.நீங்கள் சொல்ற மாதிரி இங்கு பிறந்து வளர்ந்தவரகள் என்ற வேறுபாடெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவில்லை.சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணையத்தால் புலம் பெயர் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தனது தரப்பு விவாதத்தை அழகாக வைத்துச்சென்ற சினேகிதி பல கருத்துக்களையும் வெட்டிச்சென்றார். (விஸ்ணு கொமாண்டோக்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்பான் புரியுது)

சரி சிநேகிதியின் கருத்திற்கு வருவம்....

எதிரணித்தலைவர் சோழியான் அவர்களது கேள்விக்கு பதில் வைத்துச்சென்ற சிநேகிதி இளையோர் தாயகத்திற்குச்செய்த

உதாரணங்களையும் காட்டிச்சென்றார். களத்தில் பல இளைஞர்கள் சேந்து தமது ஊரில் ஒரு விளையாட்டுமைதானம் கட்டிக்கொண்டிருப்பதாக கூறிய நினைவு.. ஆங்காங்கே பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் தாயகத்திற்கு தம்மால் ஆனதைச்செய்து கொண்டிருக்கிறார்கள் பல இளையோர். அதேபோல் தாயகம் என்ற பெயரைக்கூறி சின்ன இடைவெளிக்குள் தங்கள் வங்கிகளை நிறைக்கும் இளையோர்களும் இருக்கிறார்கள்.

மற்றக்கருத்திற்கு வருவம்..

இணையத்தால் தான் அடையும் நன்மை என்று பலவற்றைக்குறிப்பிட்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும் இன்றைய புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையம்

எவ்வளவு கேடுகள் விளைவிக்கின்றது என்ற உண்மையை சொல்லி இளைஞர்களை

திருத்தவேண்டும் என்ற அவாவுடன் களத்தில் நியாயத்துக்காக வாதாடிக்கொண்டிருக்கும்

எனது அணி நண்பர்களே. சமுதாயம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்றவகையில்

உண்மையை தெரிந்தகொண்டும் ஒப்புக்காக வாதாடிக் கொண்டிருக்கும் எதிரணியினரே

அனைவருக்கும் எனது வணக்கம். இரசிகை ஒரு அருமையான தலைப்பை கொடுத்து

அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சீடியில் படம் பதிவது காட் அடிப்பது தவறா? அவற்றால் பணம் பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தால் தவறில்லை. இணையத்தில் அடுத்தவனுடைய மனைவிக்கு தூண்டில்போடுவதுதான் தவறு. முன்பெல்லாம் திருமணமாகாத பெண்களுக்கு வலைவிரித்தவர்கள் இப்போது மணமான பெண்களை இணையத்தில் தேடுகின்றார்கள். இது வளர்ச்சிதானே. யாழ் இணையத்தில் கிருபன் என்ற இளைஞன் இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற தலைப்பில் அசிங்கமான கட்டுரையை எழுதியதை கள உறவுகள் மறந்திருக்கமாட்டார்கள். யாழ்களத்தை குழந்தைகளும் பார்வையிடுகின்றனர் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றது. சிலகாலத்துக்கு முன்னர் ஒரு சிறுமி இணைந்திருந்தது.இப்படியான கட்டுரைகளை அவர்கள்பார்க்கமுடியுமா? இதைப்பார்த்தபால் பெற்றோர்கள் இணையத்தை விரும்புவார்களா?

இன்னுமொரு இளைஞன் தன்னுடைய இணையம் என்று ஒரு அதி ஆபாச இணையத்தின் முகவரியை யாழில் இணைத்திருந்தான்.

ஐயா எதிரணித் தலைவர் அவர்களேஇ சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும்இ கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்ததுஇ இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை....

படத்தை இணையம் இல்லாமல் தரவிறக்கம் செய் அனித்தா ஏதோ ஒரு புதுவழி கண்டுபிடித்திருக்கின்றார் போலும் (அதை எங்களுக்கும் சொல்லுங்கள்)

எதிரணித் தலைவர் அவர்களேஇ மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும்இ பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

பேரூந்துகளில் இறக்கி வைத்திருக்கலாம் அனித்தா மாட்டினால் தர்மஅடியும் கிடைக்கும். ஆனால் இணையத்தில் அடி கிடைக்காதது என்பது வசதி அல்லவா?

அனித்தா அவர்கள் சினிமாவை குறை கூறினார். போய்ஸ் படத்தில் ஒரு இளைஞனை நிர்வாணமாக ஓடவைத்ததும் தொப்புளில் பம்பரம் விட்டதும் ஓம்லெட் போட்டதும். இளைஞர்களால்தான் அது சினமாவின் தவறல்ல. அதை கையாள்பவர்களின் தவறு. அதே சினிமாவைக்கொண்டு தமிழ்ஈழத்தில் போராட்டத்தை வளர்க்கின்றனர். வி;ஞான தொழில் நுட்பத்தை எப்போதும் இளைஞர்கள்தான் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ஒரு இளைஞன் தன்னுடைய சகமாணவியுடன் உடலுறவுகொண்டதை கைத்தொலைபேசியில் படம்பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

இணையத்தில்

விஷ்ணு கூறியிருந்தார் வங்கி நடவடிக்கைகளை செய்யலாம் என்று ஆம் செய்யலாம். அவர்களுடைய தகவல்களை தெரிந்து கெண்டு வங்கி கணக்கில் மோசடிகளும் செய்கின்றார்கள் அல்லவா?

இணையத்தினால் பலருடைய உழைப்புக்கள் வீணாகப்போகின்றது .மென்பொருள் திருட்டுக்கள். கிறடிற்காட் மோசடி என்று இளைஞர்கள் தொல்லை செய்கின்றனர். சாதாரண இணையத்துக்கு கூட நிம்மதியாக செல்லமுடியாதவாறு ஆபாசப்படங்களும் எங்கள் கணனிகளை தொல்லைப்படுத்துபவர்களுமாக இணையத்தின் உபயோகத்தை சீரழிக்கின்றனர்.

இன்னும் சொல்லிக்கொண்டெ போகலாம் அதை செய்வதற்கு என்னுடைய அணியில் பலர் இருக்கின்றனர். வருவாகள்

உந்த கொமாண்டோக்களை அசரவைக்க எங்கள் கரும்புலிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

நடுவர்ககளே எதிரணியினர் வெற்றி பெற தங்கத்தாமரை அப்பிடி இப்பிடி என்று குளிர வைக்க பார்ப்பார்கள் மயகத்தில் தவறான தீர்ப்பளித்து தீமைக்கு துணை போகமாடடீர்கள் என்ற நம்பிக்கையில் பின்னால் வர இருக்கும் எமதணிபொங்கியெழும் மக்கள் படைக்கு வழிவிட்டு

வாய்பளித்த இரசிகைக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறிது இடைவெளியின் பின்னர் விவாதம் மீண்டும் தொடர்கிறது. (எல்லாரும் தூங்கீட்டினம் போல பக்கத்தை இருக்கிறவை தட்டிஎழுப்புங்கோ)

சரி வியாசன் அவர்கள் இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக என்ன சொல்லிச்செல்கிறார் என்று பார்ப்போம்.

என்ன இருக்கைக்கா பஞ்சம் ஏதோ ஓரு ஆசனத்தில உக்காத்தாச்சு அது தான் வேணும் இது தான் வேணும் என்று சண்டை போடல. எல்லாத்தாமரையும் அவரவர்க்களிடத்தையே இருக்கட்டும். (இந்தத்தாமரை விசயம் வம்பாய்ப்போச்சு)

கருத்துக்கு வருவோம் இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைத்த அந்த அணித்தலைவரின் கருத்தைக்குறிப்பிட்டு

உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்

இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்

தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?

அந்த இணையங்கள் எத்தனையோ தோன்றி மறைந்துவிட்டன என்கிறார் அவை குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இணையப்பக்கங்களிள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்கின்றது என்பதால் தமிழ் இளையோர்கள் அவை யாவற்றாலும் நன்மை அடைகிறார்கள் என்று அறுதியிட்டுக்கூறமுடியாது அத்தோடு அவை யாவும் நன்மை பயக்கும் இணையங்கள் தான் என்றும் கூறிவிடமுடியாது. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்காக இலவச வசதிகளை பற்பல இணையங்கள் உருவாக்கிக்கொடுத்திருக்கி

Posted

பட்டிமன்றத்தின் நடுவர்களாக,

தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து மற்றும் தமிழினிக்கும்

பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த இரசிகைக்கும்

இங்கு பங்கு பற்ற இடம் தந்த யாழ் களத்துக்கும்

எதிரணித் தலைவராக இருக்கும் சோழியனுக்கும்

அவரது குழுவினருக்கும்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள்

இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள்

என்ற எமது அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைஞனுக்கும்

எமது பக்க சார்பாக பேசும் நண்பர்களுக்கும்

இவற்றை ரசித்து சுவைக்கும் வாசக நண்பர்களுக்கும்

என் இனிய வணக்கம்.

எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,

அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி!

இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும்,

அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...

இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி

நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம்

என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...

வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை..

அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.

அது போலவே நல்லவைகளை விட

தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன.

எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும்

ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே

பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே?

அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.

எனவே

ஒரு சிறு கதையோடு இந்த பட்டி மன்றத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன்.

உங்கள் அனுமதி நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு சிறப்பு மிக்க நாடகமொன்றைக் காண இரண்டு நண்பர்கள் திரையரங்கு ஒன்றுக்கு சென்றார்களாம்.

அந்த நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்த அழகான கதாநாயக நடிகையின்

கடைசி அத்தியாயமான அவள் இறக்கும் காட்சி வந்த போது

அரங்கமே நிசப்தத்தின் உச்சத்தை அடைந்து காணப்பட்டதாம்.

நாடகத்தில் அமிழ்ந்து போயிருந்த இரு நண்பர்களில் ஒருவர்

விழித்த கண் வாங்காது மேடையை பார்த்து விறைத்து நின்று கொண்டிருந்த அடுத்த நண்பரிடம் கேட்டாராம்.

"நடிப்பு எப்படி என்று?"

அதற்கு கண் வாங்காது மேடையை பார்த்து கொண்டிருந்த நண்பர் சொன்னாராம்

"இன்னும் கொஞ்சம் துணி விலகாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்." என்று..........

இது போலத்தான் நம் எதிரணியில் பலர்

நல்லவற்றை நுகரத் தெரியாது.

தவறான வழிகளில் போய் மூக்குடைபட்டு வந்து

இங்கே தமது அவலங்களைக் கொட்டுகிறார்கள்.

இது போன்ற அனுபவங்கள் எமது அணியினருக்கு கிடைத்ததில்லை.

காரணம் இதற்கான தேவை எமக்கில்லை என்பதை ஆரம்பம் முதலே விளக்கி வந்திருக்கிறார்கள்.

இனியாவது அப்படியான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். :?:

காரணம் இந்த பட்டி மன்றம் நிச்சயம் இவர்களை நல் வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை

எமது அணியினருக்கு உண்டு.

எனவே வெட்டிப் பேசுவதை தவிர்த்து,

.....................

எதிரணி நண்பர்கள் தெரியாமல் இருக்கும் சில விடயங்களை முன் வைப்பது நல்லது எனக் கருதுகிறேன்.

சர்வதேச தகவல் வலைப்பின்னலில் சிக்கிய

உலக அரசியல் , அமெரிக்காவில் இராணுவ தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ,

முதலில் கணனிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வலைப் பின்னல்,

பூகோள, நிர்வாக எல்லைகளைக் கடந்து

உலகின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கும்

இணையமாக வியாபித்திருப்பதற்கான சான்று கொண்ட

பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

அரச நிர்வாகத்தில் இருந்து

பொழுது போக்கு வரை மட்டுமல்ல

அனைத்துத் துறைகளையும் இணையம்

இன்று ஆக்கிரமித்திருக்கிறது.

அது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுகிறது.

கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமானதாக திகழ்கிறது.

ஒட்டுமொத்தமாக கூறுவதானால்,

இணையம் என்பது தகவல் புரட்சிக்கான ஆணிவேர்

என்ற நிலையில் இருந்து

சமூக மாற்றத்திற்கான இயந்திரம் என்றவாறு

உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில்

தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் மட்டுமல்ல மனித உயிர் காப்பதற்கான அறுவைச் சிகிச்சைகள் கூட

இணைய ஊடக வழி மூலம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.

இன்று இணைய ஊடகம்,

வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள் என்று

பார்க்கும் திசை எங்கும் தமிழ் மொழியை வியாபிக்க வழி வகுத்திருக்கிறது.

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

என்னும் உயர்நோக்கத்தின் பல பரிமாணங்களாக

இணையம் தமிழை உலகெங்கும் பரப்ப வழி செய்திருக்கிறது.

அதாவது

இணைய பத்திரிகையாக - சஞ்சிகையாக -

தளமாக -மின்நூலகமாக - ஒலி-ஒளி வடிவாக ...................இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான

சிறப்பாய் பார்ப்போமானால் மிகப் பெரிய மின் நூலகங்களை

தமிழ் இணையப் பல்கலக்கழகங்கள் வடிவமைத்துள்ளது.

இவ் இணைய நூலகங்களில்

பாடத்திட்டம் தொடர்பான நூல்களும்

குறிப்புதவி நூல்களும் உள்ளன.

சங்க இலக்கியங்கள் முதல்

இக்கால இலக்கியங்கள் வரை

எல்லாத் தமிழ் இலக்கியங்களும்

இந்த மின் நூலகங்களில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஒளி- ஒலிக் காட்சிகளும்

தமிழ்ப் பண்பாட்டுடன் தொடர்பான பரதநாட்டியம், நாதசுர இசை, ஏறு தழுவல் முதலானவற்றின் ஒளி- ஒலிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களும் மின்நூலகத்தில் தரப்பட்டுள்ளன.

ஏனைய உலக மொழிகளும் அடக்கம்.

சாதாரண நூலகத்திலிருந்து இந்த மின்நூலகங்கள் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது.

தேவைப்படும் நூலை உடனே எடுத்துப் படிக்க இயலும்.

ஒரு நூலில் தேவைப்படும் பகுதியை மட்டும் உடனே தேடிக் கற்க இயலும்

பல்வேறு நூல்களில் உள்ள பல்வேறு கருத்துகளைத் தேடுதல் வசதியின் மூலம் ஒரே இடத்தில் திரட்டிக் கற்க இயலும்.

ஒரே நேரத்தில் ஒரே நூலை எத்தனைபேர் வேண்டுமானாலும் எங்கே இருந்தும் படிக்க இயலும்.

இப்படியான பணிகள் மூலம்

ஒருவரால் விரும்பிய ஒன்றை கற்பதற்கு கல்வி நிலையங்களை நாடிப் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை.

நாடு விட்டு நாடு போக வேண்டியதில்லை.

இணைய வழி முலமே எதை வேண்டுமானாலும் எங்கிருந்தும் கற்கலாம்.

எந்த ஒரு கல்வி கற்கும் செயலுக்கும் அடிப்படத் தேவைகளான பாடங்களும் கலந்துரையாடல்களும் -

பயிற்சிகளும் தன் மதிப்பீடுகளும் - நூலகம்/அகராதி

- இறுதித் தேர்வுகள் போன்ற இவை அனைத்துமே, ஆங்கிலத்தில் (ஏனைய மொழிகளில்) மட்டுமல்ல தற்போது தமிழ் இணையதளக் கல்வியிலும் இடம்பெற்றுள்ளன.

பாடங்களுடன், பயிற்சிகள், தன்மதிப்பீடு வினாக்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இணைய வாயிலாகவே ஆசிரியருடன் கலந்துரையாடும் (CHAT) வசதியும் வழங்கப்படுகின்றது.

தவிரவும் இணைய வழித் தேர்வுகளை மேற்கொள்ளவும், எழுத்துத் தேர்வு எழுதவும் தொடர்பு மையங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் எத்தனை எத்தனை.................

ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல்

தமிழில் வலைத்தளங்கள் இருக்காது போனாலும்

ஒரு மாபெரும் அதீதமான வளர்ச்சி தமிழ் இணையத்தளங்கள் ஊடாக உருவாகியதை

யாராலும் மறுக்க முடியாது.

இணைய வழி தமிழ் வலைப்பதிவுகள்

மெல்ல மெல்ல தமிழ் இணைய உலகில்

தனக்கென தனியானதொரு இடத்தை பிடித்து வருகின்றன.

இன்னொரு முக்கியமான நிகழ்வு

ஏராளமான புதியவர்கள் உற்சாகத்துடன்

தமிழில் புதிய ஆக்கங்கள்,

வெளியான தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மின்பதிப்பாகவும் தந்த வண்ணமுள்ளனர்.

இணையத்தின் ஆணி வேரே Integration என்னும் ஒருங்கிணைப்புதானே?

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று முன்னோர் சொன்னவற்றை இணைய வழி செயல்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது.

உலகெங்கும் பரந்து வாழும் மக்கள்

முகம் தெரியாமல் இருந்தாலும்

ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து

கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்

நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.

அது

நிலவில் மனிதன் கால் பதித்ததற்கு ஒப்பானது.

வளர்ந்து வரும் வலைப்பதிவுலகத்தின் போக்கை பார்க்கும் போது

இதுவரை வலைப்பதிவு வைப்பதெல்லாம் வெறும் புகழுக்காக, மறுமொழிக்காக எழுதப்படுபவை..

வீண்வேலை என்று கருத்து தெரிவித்து வந்தவர்களே கூட

இன்று வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதிலிருந்து

இணைய உலகில் இதற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் முக்கியதுவத்தை உணரலாம்.

எண்ணிக்கையின் அடிப்படையிலும் சரி,

தொழில்நுட்ப ரீதியாகவும் சரி- வலைப்பதிவுகளில் நாம் காணும் சீரான வளர்ச்சியும், அடுத்தடுத்த படிநிலையை அடைவதில் இருக்கும் உத்வேகமும் இணையம் சம்மந்தப்பட்ட தளங்களில் இருப்பது என்பது கண்கூடு.

யாகு குழுவில் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குழுக்கள் இருக்கின்றன.

அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி...

வலைப்பூக்களில் பல திறமையான எழுத்தாளர்கள் இன்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..

ஈழத்தவரான நமக்கு சொந்தமான பல தமிழ் எழுத்துப் பொக்கிசங்கள்

யாழ் நூலக எரிப்போடு மண்ணாகி விட்டது.

அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும்

மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.

இன்றைய நிலை அன்று இருந்திருந்தால்

எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?

எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப் பார்க்கும் போது, மனம் கனிய வாய்ப்பிருக்கிறது..

அதுவே பலருக்கு ஒரு பதிவாகவும் ஆகி விடும்.

பலர் எழுதும் கட்டுரைகள் மூலம் அவர்களது பயமற்ற குரலை தமிழில் வெளிப்படுத்தியது என்றால், பயமற்ற சிந்தனைகளை இணையத்தில் வெளிப்படுத்தக் காரணமாய் இருந்ததும் இருந்து வருவதும் இணையதளம் என்று சொல்லலாம்.

இணையதளங்கள் "தமிழின் மிக முக்கியமான விவாதங்ககளுக்கு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள்

இணைய வழி விவாதிக்கப் பட்டுள்ளன.

இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது.

பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள்,

தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம்

இங்கே வெகு சாதாரணம்.

ஒருவர் நெடுநாள் வலை பதிக்கவில்லையெனில் அவரைப்பற்றிய கவலைகளையும், விசாரிப்புகளையும் சக வலைப்பதிவாளர்களிடையே காணலாம்.

இப்படி இணையத்தின் மூலம் துளிர்க்கும் நட்புகளும், கிடைக்கும் தொடர்புகளும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை பயப்பனவாக இருப்பதை அவரவர் வாழ்க்கையில் அறியலாம்.

கதை, கவிதைகள் அல்லாமல் அறிவியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, நடப்புச் செய்திகள், விமர்சனங்கள் என்று இணையம் அளவுக்கு ஆழமாகவும் அறியாப் பிரதேசங்களைத் தொட்டும் எழுதப்பட்ட கட்டுரைகளை இடம் பெற வைத்த சிறப்பு இணையத்துக்கு உண்டு.

மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.

சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.

"சிறியோரை இகழ்தலும் இலமே" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்

சம-மரியாதை தருகிறது.

புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.

புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.

இது தமிழனின் துரதிர்ஷ்டம்.

அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.

மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.

குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.

வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத

மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.

வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும்.

இணையத்தாலும் வலைப்பூக்களாலும் அச்சு ஊடகங்களுக்கும் நிறைய நன்மை இருக்கிறது.

இன்றைய சூழலில் திரைப்பட விமர்சனங்கள் கிடைக்கின்றன.

நல்ல நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், பழைய கால நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் போன்றவை அச்சு ஊடகங்களில் கிடைப்பதில்லை.

இவை இணையத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.

ஜப்பான், சீனா, கொரியா, தைவான், கொங்காங், போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில்,..........

ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது.

கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு

அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.

அன்று தொடங்கிய அப் பணி விரிந்து வளர்ந்தது.

உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில்

இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது.

வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.

மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள

மாபெரும் கொடையே இணைய ஊடகம்.

தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தள மேடையே இணைய ஊடகம்தான் என்பதில் ஐயப்பாடு இருக்காது.

உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு,

மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறவும்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியவும்; உற்பத்தியாகும் பொருள்களை வாங்கவும்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான்.

நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணி முன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இயக்குவதுபோல்) இயக்க முடியும்.

சமகால தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அடைய வேண்டுமென்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றன.

இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலத்தில்

பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம்,

தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும்.

தரும்.

மெல்ல அல்ல விரைவாகவே தமிழ்

இணையத்தில் சிறக்கும்.

அடுத்த தலைமுறை தமிழின் பெருமையை உணர இணையத்தின் பிரதான மொழியாக

தமிழ் மொழி அமைய வேண்டும் .

இது உண்மைதான்.

தமிழிலமைந்த பயன்பாட்டு மென்பொருட்கள் பெருக பெருக இன்றுள்ள இளைய தலைமுறையும் தமிழை மறக்க மாட்டார்கள்.

இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.

இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.......

எனக் கூறி

எமது நண்பர்கள் நாங்கள் விட்டுச் சென்ற மிகுதியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு

வாய்ப்பு தந்த அனைவருக்கும்

நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

தனது விவாதத்தை ஆளமாக வைத்துச்சென்றிருக்கிறார் அஜீவன் அவர்கள்.

அவரது கருத்தில் இருந்து.

எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,

அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! தற்காக முயற்சி செய்யாமல்

இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...

என்று கூறிகிறார் அஜீவன். எந்த ஒருவிடயத்திலும் உள்ள நிறைகளை எந்த அளவிற்கு நாங்கள் ஏற்கிறோமோ

அதே அளவிற்கு அதில் உள்ள குறைகளைப்பற்றியும் நாங்கள் சிந்திக்கதவறின் அந்த முயற்சியில் உள்ள மறைமுகமான அல்லது நேரடியான பாதகங்களை நாங்களே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்படுவோம். நிறைகளை ஏற்கத்தயாராக இருக்கும் முயற்சியாளன் கண்டிப்பாக குறைகளையும் ஏற்கத்தயாராக இருக்கவேண்டும் இல்லையே அவனால்

வெற்றிபெறமுடிமா..?? குறைகள் சொல்கிறார்கள் என்பதற்காக முயற்சியைக்கைவிடமுடியுமா..?? எதிர்நீச்சல் போட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டின் அவற்றைச்செய்து வெற்றி அடைவது ஒரு முயற்சியாளனது கடமை நொந்து கொண்டு ஒதுங்கிக்கொள்வது தனது முயற்சியில் அந்த முயற்சியாளனிற்கு இருக்கின்ற நம்பிக்கையின்மையையே காட்டும்.

வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான

மதிப்பு கூட தருவதில்லை உலகம்.

உண்மை வாழும் போது மிகவும் தூற்றப்பட்ட கலைஞர்கள் நம் தமிழ் வரலாற்றில் இருக்கிறன்றார்கள். ஆனால் தூற்றுகிறார்கள் என்று அவர்கள் துவண்டுபோனார்களா..?? பாரதியார் எத்தனை எதிர்ப்புகளிற்கு மத்தியில் எத்தனை போராட்டங்கிற்குள்ளும் தனது படைப்புக்களை வழங்கிவிட்டுச்சென்றிருக்கி

Posted

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நடுவர் அவர்களிற்கும், இளையோரை நல்வழிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் தவறாகப் போய்க்கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட சோழியன் அண்ணாவின் தலமையில் இங்கு இருக்கும் என்அணி சக நண்பர்களிற்கும், கெட்டுப்போகிறார்கள் என்று தெரிந்தும் சும்மா ஒப்புக்காக வாதாட வந்திருக்கும் எதிரணி நண்பர்களிற்கும் முதலில் வணக்கங்களைக் கூறிக்கொண்டு நேரடியாக விவாதக்களத்தில் இறங்குகின்றேன்.

எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும். நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.

அவர் நல்லதொரு கதையையும் சொல்லிச் சென்றார்; அதில் நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல், படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் . எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.

எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட 80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.

நடுவர் அவர்களே எமது எதிரணி நண்பர்களிற்கு தலைப்பை ஞாபகப்படுத்துவதே எம் வேலையாய் போச்சு பாருங்க. இதுதான் இணையம் அவர்களிற்கு கொடுத்த நன்மைபோல் உள்ளது, தலைப்பை விடுத்து மற்றைய விடயங்களில் திசை திருப்புவது. இதை எதுக்கு இப்ப சொல்கிறேன் என்றால் இப்பட்டிமன்றத்தில் அலை என்றெல்லாம் சொல்லி எம்மைப் பயப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய அலைக்கும் இப்பட்டிமன்றத் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்பது அவர்களிற்குத்தான் வெளிச்சம்.

அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை. இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.

"பட்டிமன்றம் தொடர்வோமா" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.

ஆக புலம்பெயர்ந்த இளையோர் இணையத்தால் சீரழிந்து போகிறார்கள் என்று முடிவாகக் கூறி எனக்கு அடுத்து வந்து விவாதிக்க இருக்கும் என் அணிச் சகோதரர்கள் சீரான விளக்கங்களை உங்களிற்கு அளிப்பார்கள் எனக்கூறிக்கொண்டு இவ்வாய்பை அளித்த இரசிகைக்கும், தளத்திலே இடம் தந்து உதவிய மோகன் அண்ணாவிற்கும் நன்றியைக் கூறி நடுவர் அவர்கள் நல்ல ஒரு தீர்ப்பைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

நன்றி,

வணக்கம்.

(நேரம் ஒத்துழைக்க மறுத்ததனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மனம்வருந்துகிறேன். நன்றி.)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.