Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள புத்தி ஜீவிகளும் தமிழ் புத்தி ஜீவிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள புத்தி ஜீவிகளும் தமிழ் புத்தி ஜீவிகளும்

வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 7, 2011

சிங்கள புத்தி ஜீவிகள் எப்படி தனது இனத்திற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்? பேச்சில் மட்டுமல்ல செயலிலும் கூடத்தான். அண்மையில் ஓர் சிங்கள தொலைக்காட்சியில் தோன்றிய பேராசிரியர் நளின் சில்வா மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தோன்றி பச்சைப்பொய்களை கூசாது கொட்டித்தள்ளினர். இலங்கையில் போர் என்பதே நடக்கவில்லை. அங்கு ஓர் மனிதாபிமான மீட்பு பணியே நடந்தது என பேசினர். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக போராடும்படியும் வேண்டினார்கள். அதுமட்டுமல்ல, அதே வேளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் போரில் ஈடுபட்ட படையினர்க்கு தனது ஒரு மில்லியன் ரூபா சொத்தினையே எழுத்திக்கொடுத்தார். போரில் கொல்லப்பட்ட, சிறையில் உள்ள, சித்திரவதைக்குள்ளான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பற்றி இவர்கள் எதனையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. ஆனால் மறுவளமாக தமிழ் புத்திஜீவிகள், பேராசிரியர்கள், ஏன் அரசியல்வாதிகள் என கூறிக்கொள்ளும் தமிழர்கள் என்ன செய்கின்றார்கள்? ஒன்றில் சிங்களத்திற்கு வக்காளத்து வாங்குவார்கள் அல்லது அமைதியாக இருப்பதே நல்லது என ஒதுங்கி விடுவார்கள். ஒரு சிலரே துணிந்து கருத்துக்களை வெளியிடுவார்கள் அல்லது வாதிடுவார்கள். இந்த ஒரு சிலரின் கருத்துக்களும் தமிழினத்தில் சிங்களத்திற்கு துதிபாடுவோர்களால் மலினப்படுத்தபட்டே வருகின்றன. இது ஏன்?

நன்றி - ஈழநாதம்

மனித உரிமைகள், பயங்கரவாதம் என்ற பெயர்களில் தெரிந்தும் தெரியாமலும் ஏமார்ந்த, ஏமாற்றிய தமிழ் புத்தஜீவிகள் அதிகம்.

அதிலும் இந்த அமைப்பு, UTHR, http://www.uthr.org/, செய்த துரோகங்கள் அதிகம்.

இவர்களின் தளம் அன்று பலராலும் குறிப்பிடப்பட்டது, இன்று Jan, 2010 ற்கு பிறகு மௌனமாகவே உள்ளது http://www.uthr.org/new.htm.

Mission accomplished?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள், பயங்கரவாதம் என்ற பெயர்களில் தெரிந்தும் தெரியாமலும் ஏமார்ந்த, ஏமாற்றிய தமிழ் புத்தஜீவிகள் அதிகம்.

அதிலும் இந்த அமைப்பு, UTHR, http://www.uthr.org/, செய்த துரோகங்கள் அதிகம்.

இவர்களின் தளம் அன்று பலராலும் குறிப்பிடப்பட்டது, இன்று ற்கு பிறகு மௌனமாகவே உள்ளது http://www.uthr.org/new.htm.

Mission accomplished?

2009 க்குப் பின்னால் ஒரு அறிக்கைகளும் இல்லை..! :rolleyes:

மாதத்தையும் வருடத்தையும் இணைத்து சரிப்படுத்திவிட்டேன், நன்றி இசை.

சிங்களவர்கள் மத்தியில் புலம்பெயர்ந்து பயந்து வாழும் ஊடகவியலளர்கள் மட்டுமே, குறிப்பாக லசந்தவின் பாரியார், மட்டுமே சிங்கள அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்.

Edited by akootha

கருத்தரங்கு

சமீபத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள்

இது ஆச்சரியம் தான்

இருந்தாலும் உண்மை

எல்லோரும் தங்களை அறிமுகம் செய்தனர்

பழைய புதிய இடது சாரிகள் வலது சாரிகள்

இலக்கிய வாதிகள்

நாத்திக வாதிகள் ஆத்திக வாதிகள்

மதவாதிகள் சாதிய வாதிகள்

வைத்தியர்கள் பொறியியலாளர்கள்

இவ்வாறே லட்சம் வரை அறிமுகம் தொடர்ந்தது

புத்திஜீவிகள் கூட்டம் ஒன்று கூடியதால்

சிங்களவர்கள் சிலர் மிரண்டனர்

இருந்தும் எவர் ஒருவரும் தமிழர் என்று

அறிமுகம் செய்யாததால்

பயம் எதுவும் இல்லை என்று

சோலியை பார்க்க சென்றனர்

சென்றவர்களில் ஒருவன் கேட்டான்

என்ன தமிழர் எல்லோரும் ஒன்று கூடுகினம்?

அப்படி சொல்லப்படாது

அவங்களுக்கு தெரியாததை போதிக்க கூடாது

அமைதியாக நட என்று பதிலுரைத்தான்

பின்னர் இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கு

மங்களவிளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி

மதியபோசனம் தேனீர் விருந்துடன் நிறைவுற்றது

http://paramaa.blogspot.com/

கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்துவிட்டீர்களா அல்லது உண்மையில் ஒன்றும் தெரியாதா?

காசைத் தாங்கோ புலிகள் தமிழீழம் தருவார்கள் என்ற கோசம் மட்டுமே முன்வைக்கபட்டது.எப்படி என்று கேட்டாலே துரோகியாக்கிய கதை எல்லாம் எங்குபோய்விட்டது.

இதற்கு ஏன் புத்திஜீவிகளின் பங்கு.

வாயைதிறந்தவர்கள் வாய் மூடப்பட்டது அல்லது மூடவைக்கப்பட்டது,அல்லது சேர்ந்து ஒத்து ஊதவைக்கபட்டது.

எவ்வளவு புத்திஜீவிகள் ஆரம்பத்தில் உதவ வந்து ஒதுங்கிபோனதுகள் தெரியாது போலும்.

இப்போதுதான் சிறிது ஜனநாயகம் எம்மவர் மத்தியில் தொடங்குகின்றது,அதையும் யாரும் கிள்ளி எறியாமல் இருந்தால் சரி.

UTHR இன் செயற்பாட்டாளர்கள் என உங்களால் கூறப்படும் socalled புத்திஜீவிகள் எல்லாம் செயற்பட வேண்டிய அவசரமோ அவசியமோ அவர்களுக்கு இல்லை. பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடைந்து நீண்ட நாட்களாகின்றன. சோசலிசம் கதைத்தாலும் பிள்ளைகளை தனியார் பாடசாலையிலேயே கற்பித்தார்கள். இரண்டு மூன்று வீடுகள். அதைவிட நிறைய சொத்துக்கள்.

UTHR ஐ நம்பியது யார் பிழை?

அவர்கள் அகராதியில் புத்திஜீவி என்றால்

புத்திஜீவி = புத்தியை பாவித்து ஜீவிப்பது

இந்த திரியில் வினவப்பட்டது எவ்வாறான பங்களிப்புக்களை தமிழ் புத்திஜீவிகள் சிங்கள புத்திஜீவிகள் தமது இனங்களின், மக்களின் உரிமைக்காக நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுக்கின்றார்கள் என்பதாகும். அந்த வகையில் சிங்கள புத்திஜீவிகளின் சின்னமாக பார்க்கப்படக்கூடியவர்களில் ஒருவர் அமைச்சர் பீரிஸ்.

அதேவளை பாலித கோகன, ரோகான் குணவர்த்தன, விஜசிங்க கூட வெளிநாடுகளில் கல்வி கற்றும், சட்ட வல்லுனர்களாக இருந்தும், உலகில் எவ்வாறு பல்லின கலாச்சரா நாடுகள் முன்னேறியுள்ளன என தெரிந்தும் தமிழினத்தை அடிமையாக்குவதிலும், அழிப்பதிலும், மனித உரிமைகளை மறுப்பதிலும் முன்னிற்கும் புத்திஜீவிகள்.

கனடாவில் விடுதலைப்புலிகள் தடை வருவதற்கு முன்னரான காலத்தில் அதை இலகுவாக்க கருத்துக்களில் ஒன்று 'சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல்' என்பது. இதை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (HRW) சிறுவர் நலன் பகுதியை சேர்ந்த ஜோ பேக்கர் Jo Becker, இவர் இங்கு கருத்தரங்குகள் ஏற்படுத்தினார், பத்திரிகை ஆசியர்களை கண்டு கதைத்து ஆசிரியர் தலையங்கங்கள் தடைக்கு ஆதரவாக எழுத வைத்தார். இவருக்கு ஆதரவாக புள்ளிவிபரங்களை ஆதரங்களுடன் சமர்ப்பித்தவர்கள் UTHR.

UTHR தமிழ் புத்திஜீவிகள் இன்று மௌனம் காப்பது கீழ்வரும் இரண்டில் ஒன்றில் அவர்கள் குறிக்கோளாக இருந்தது என பார்க்கலாம்:

1. ஏமாற்றப்பட்டர்கள்: உண்மையிலேயே மனித உரிமைகள், மக்கள் உரிமைகள் என்பனவற்றை நம்பினார்கள்.

சிங்களம், அரசு என்ற காரணத்தால் ஒருபோதும் தமிழர்களின், சிறுவர்கள் உட்பட, மனித உரிமைகளை மீறாது என நம்பினார்கள், ஏமாந்தார்கள்.

இன்று அதே சிங்களம் ஒன்றில் அவர்களை பலத்தால் இல்லை பணத்தால் வாயை மூடி வைத்திருக்கலாம்.

2. ஏமாற்றினார்கள்: ஆரம்பத்திலிருந்தே பணத்திற்கும் புகழுக்கும் தமது இனத்தின் மேல் அன்பு உள்ளவர்கள் போல காட்டி பணமும் புகழும் சம்பாதித்தார்கள் .

UTHR புத்திஜீவிகள் சிலரை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் நடுநிலையாளர்கள் அல்ல.

UTHR புத்திஜீவிகள் சிலரை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் நடுநிலையாளர்கள் அல்ல.

arjun :wub:

சில எடுத்துக்காட்டுக்களுடன் சொல்லுங்கள்,

பேராசிரியர் துறைராஜா, பேரசிரியர், இராஜேஸ்வரன், டாக்டர் இலகுப்பிள்ளை.. பேராசிரியர் எலியஸர்,பேராசிரியர் இராமசாமி,பேராசிரியர் சொர்ணராஜா, பேராசிரியர்..மலர்.. உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள்... ஏன் இந்திய இராணுவகாலத்தில் கூட இலண்டனில் உள்ள அர்ச்சுனா சிற்றம்பலம் தொடக்கம்..மட்டுமல்ல இந்தியா , தமிழ் நாடு உட்பட பல பேராசிரியர்கள்.. இன விடுதலைக்காக பணி புரிந்தார்கள் அவர்களை எல்லாம் புலிகள் ஓரங்கட்டினார்களா?.. அதைவிட இலங்கையின் முன் நாள் சட்ட மா அதிபர் தொடக்கம் எல்லோரும் பணி புரிந்தார்களே..

தவிர புத்திவழங்கபோகின்ரோம் என்று நாடகமாடி நடித்து விடுதலைப்போராட்டத்தை சீரளிக்க நினைக்கும் சக்திகளுடன் கூட்டு சேர்ந்த தந்திரிகலை இயக்கம் புறகணித்துதான் வந்துள்ளது...

ஆனால் ஒன்று அர்ஜுன் சொல்வது போன்று இப்போதுதான் இரண்டு வருடம் ஆகின்றதே எத்தனை புத்திஜீவிகள் என்ன செய்கின்றார்கள்.. முடிந்தால் குறிப்பிடுங்கள்.. புலி எதிர்ப்புவாதத்தை நாசூக்காக மனித உரிமை என்றும் சர்வாதிகாரம் என்றும் சொன்னவர்களை காணவில்லையே...

நீங்கள் மேலே குறிப்பிட்ட எவரும் நான் குறிப்பிட்டத்தில் மூன்றாவது பகுதியினர்.(அதாவது ஒத்து ஊதியவர்கள்.)

எவரையாவது சுயமாக இயங்கவிடார்களா?

இலகுபிள்ளைக்கு என்ன நடந்தது என தெரியும் தானே? லண்டனில் இருந்து போனெ ஜெயதேவனுக்கு என்ன நடந்தது? ஆரம்பத்தில் புலிகளுடன் இருந்த பலர் கடைசிவரை இருக்கவே இல்லை.

தங்களுக்கு மேல் படித்தவன் இருந்தால் பிரச்சனை என பயபட்டார்கள் .

தமிழ்செல்வனும்,புலித்தேவனும்,கருணாவும் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பிற்கு தலைமை தாங்கியதை போல வெட்ககேடு வேறெதுவும் இல்லை,பாலசிங்கமே நக்கல் அடித்தது மறந்துபோய்விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் படிக்கவில்லை என்றும் தாங்கள் படித்த ஆட்கள் என்று சொல்லி ஒரு தறுதலைக்கூட்டம் தமிழீழம் வாங்கி தருகிறோம் என்று கூறி எமது மக்களை காட்டிக்கொடுத்தது மட்டுமில்லாமல் இந்திய அடிவருடிகளாக மாறினார்கள். இவர்கள் சிந்திக்க தெரியாமல் இருந்தார்கள் என்பது சுத்தப்பொய். சுயநலவாதிகளாக மாறினார்கள் என்பது தான் உண்மை.

மக்களுக்காக போராடுவதற்கு சாதாரண அறிவும் தம்மை மக்களுக்காக அர்ப்பணிக்க கூடிய மாவீரர்கள் தான் தமிழ் மக்களுக்கு தேவைப்பட்டனர்.அவர்கள் பேச்சால் அல்ல செயலாலும் காட்டினார்கள்.இன்றும் அவர்கள் மக்கள் மனதில் அவர்கள் நிற்பதற்கும் அது தான் காரணம்.

சிங்கள புத்திஜீவிகள் கொல்வின் ஆர்.டி சில்வாவில் இருந்து பிரபாகரனை megalomaniac என்று சொன்ன கொழும்பு பல்கலைகளக பேராசிரியர் வரை இனவாதிகள் தான்.தமிழர்களின் எந்த புத்திஜீவியும் சிங்களவர்களின் தோலை உரித்து செருப்பாக போடுவோம் என்று கூறியதாக நினைவில் இல்லை.

இப்போதுதான் இரண்டு வருடம் ஆகின்றதே எத்தனை புத்திஜீவிகள் என்ன செய்கின்றார்கள்.. முடிந்தால் குறிப்பிடுங்கள்.. புலி எதிர்ப்புவாதத்தை நாசூக்காக மனித உரிமை என்றும் சர்வாதிகாரம் என்றும் சொன்னவர்களை காணவில்லையே...

புலிப்பாசிசம் அழிந்த களிப்பில் மூழ்கி திளைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றினார்கள்: ஆரம்பத்திலிருந்தே பணத்திற்கும் புகழுக்கும் தமது இனத்தின் மேல் அன்பு உள்ளவர்கள் போல காட்டி பணமும் புகழும் சம்பாதித்தார்கள் .

இவர்கள் நல்லவர்கள் போல் நடித்து தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.ஒட்டுக்குழுக்கள் நேரடியாகவே தமிழ் மக்களை கழுத்தறுத்தார்கள்.ஒரே ஒரு வித்தியாசம் மறைமுகமாக/நேரடியாக கழுத்து அறுத்தார்கள்.

எவரையாவது சுயமாக இயங்கவிடார்களா?

ஒட்டுக்குழுக்கள் புலிகள் மேல் பழிகளை தொடர்ந்து போடுவது தாம் நல்லவர்களாக காட்டுவதற்கும் தமது பிழைகளை மறைப்பதற்கும் ஆகும்.ஒரு ஒட்டுக்குழுவானவன் துணிவிருந்து தாம் பிழை விட்டுள்ளோம் என்று தமிழ் மக்களை பார்த்து மன்னிப்பு கேட்கட்டும் பார்ப்போம்.கடைசி வரை கேட்க மாட்டார்கள்.காரணம் முதுகெலும்பு இல்லாதவர்கள்.

ஓகே...

முதலாவது... இந்த ஒட்டுகுழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வேறுயாருமெல்ல.. இவர்களும் தமிழர்களதான்.. அதுவும் கணிசமான தொகையில்..

இரண்டாவது.. முக்கல்வாசி பேருக்கு அக்கறையில்லை.. போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட என்னுடைய உறவினர்களே.. எனக்கு வேறுவேலையில்லை எண்டு நக்கலடித்திருக்கிரார்கள்..

நாம் தயாரில்லை எண்டுதான் நினைக்கத்தோன்றுகிறது +1

மே 2009 இற்குப் பின்னான ஸ்ரீலங்கா சம்பந்தமான UTHR இன் மனித உரிமை அறிக்கைகளை இங்கு யாராவது தயை கூர்ந்து பட்டியலிடுவீர்களா?

முன்பு ஆலையடியின் கீழ் இருந்து புலிகள் அப்பம் சுட்டால் கூட Special Report வெளியிடும் மேன்மை தங்கிய UTHR சோஷலிச பொறுப்பாளர்களுக்கு இவற்றை வெளியிடும் ஆர்வமுண்டா?

டிஸ்க்கி

அண்மைக்காலங்களில் பிரித்தானியாவில் இயங்கும் மிகவும் கீழ்மட்ட முதலாளித்துவ ஊடகமான (புத்தி ஜீவிகளின் பார்வையில்) Channel 4 வின் ஒளிப்பதிவில் கூட , சில பல கிராபிக்ஸ் வேலைகள் செய்து பயங்கரவாதிகளின் உடல்களை காண்பித்ததாக ஞாபகம்.

மாண்புமிகு அர்ஜுன் விடுத்லைப்புலிகள் இருந்த காலத்தில்தான் மனிதாபிமானமென்ற சொல்லிற்கு தமிழினத்தில் வரைவிலக்கணம் சொல்லப்பட்டதடா.............. உன் தலைவர் தேவானந்தர் உனக்கு சொல்லித்தந்த கருத்தை சொல்லி தமிழரை குழப்ப்பாதே நாயே.

தமிழ்சூரியனுக்கு வணக்கம்,

யாரையும் வார்த்தை குறைந்த சொற்களை பாவித்து நாம் குறை கூறுவதை விடவும், செயல் வடிவில் நாம் செய்துகாட்டி அதன் மூலம் அவர்களையும் உள்வாங்குதலே எம்மினத்தை, இந்த களத்தை பலப்படுத்தும்.

நன்றி.

புத்திஜீவிகள் என்று தனித்து இனம் காண்பதும் இன விடுதலை சமூக விடுதலை இன ஐக்கியப்பாடு சார்ந்து சமூகத்தை நெறிப்படுத்துதலில் அவர்களின் பங்கு பெரும்பான்மையாக எதிர்மறையாக இருக்கின்றது. இது இந்த இனத்தின் பெரும் தூரதிஸ்டம் என்றே சொல்ல வேண்டும்.

புத்திஜீவிதம் என்பதே சமூக முரண்பாட்டின் உச்ச அடயாளமாக இருக்கின்றது. ஏற்றதாழ்வுகளை சமன்படுத்த முனையும் ஒரு புதிய சமூக அடயாளமாக உள்ளது. எந்தக் காரணிகளாலும் மாற்றமுடியாத நிலையான சாதிய அடயாளத்தை தக்கவைக்கும் போட்டியும் அதிலிருந்து விடுபடும் போட்டியும் புத்திசீவி என் புதிய அடயளத்தை நோக்கி நகர்கின்றது. பொருளாதார மேம்பாடும் இதனுடன் இணைந்துகொள்கின்றது. இரு வேறு சாதியர்கள் சமூக அந்தஸ்த்துப்போட்டியில் எஞ்சினீயர் டொக்டர் பேராசிரியர் ஆசிரியர் அல்லது ஏதோ ஒன்றை இலக்காக்குகின்றனர். இயல்பாக கல்வி கற்றல் என்பதை கடந்து குழந்தைப்பருவத்தில் இருந்தே அது ஒருவகை திணிப்பாக நிர்பந்தமாக மாறிவிடுகின்றது. இயல்பான சுயவிருப்பங்களில் சமூக நிர்பந்தம் சார்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதால் தலமைத்துவப்பண்பை இழந்த புத்திஜீவிகள் உருவாகின்றார்கள். இவர்களிடம் இருந்து சமூக வழிநடத்தலை எதிர்பார்க்கமுடியாது. மாறாக சமூகச் சிதைவுக்கே வித்திடுகின்றது.

பேராசிரியர்கள் கைலாசபதி சிவத்தம்பி போன்றவர்களின் தலமுறைவரை வாழ்ந்த பண்டிதமணிகள் சிரோன்மணிகள் சாதி சமயம் சார்ந்த வட்டத்தில் இருந்து வெளியே வந்தது கிடையாது. புத்திஜீவிதம் காலகாலம் சமூக ஒடுக்குமுறைக் கருவியாக பயன்பட்டது.சமூகத்தை அடிமைப்படுத்துவதிலும் அடிமைக்குணத்தை வளர்பதிலும் தலையாய பங்கை வகித்தது. பண்டித சிரோன்மணிகளுக்கு அடுத்ததாக சமூக முரண்பாடுகளை லேசாக தொட்டார்கள். சமூக முரண்பாட்டுக்குள்ளாக அந்த முரண்பாடுகளில் நலன்தேடும் கூறாக உயிர்வாழும் புத்திஜீவிதத்தால் இனவிடுதலைக்கு எதிர்மறை விழைவையே ஆற்றமுடிந்தது. இப்போதும் அதுவே தொடர்கின்றது.

சாதிகள் முரண்பட்டது. சமயங்கள் முரண்பட்டது. பிரதேசங்கள் முரண்பட்டது. இயக்கங்கள் முரண்பட்டது. புத்திசீவிகள் முரண்பட்டுக்கிடந்தார்கள். சமூக முரண்பாடுகள் இனத்தை அழிப்பவனுக்கு துணையானது. இதற்கு புத்திஜீவிதம் ஒன்றும் விதிவிலக்கில்லை. இலங்கை அரசுக்கு அதிகமாகச் சொம்பு தூக்கியவர்கள் புத்திஜீவிகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நீங்கள் மேலே குறிப்பிட்ட எவரும் நான் குறிப்பிட்டத்தில் மூன்றாவது பகுதியினர்.(அதாவது ஒத்து ஊதியவர்கள்.)

எவரையாவது சுயமாக இயங்கவிடார்களா?

இலகுபிள்ளைக்கு என்ன நடந்தது என தெரியும் தானே? லண்டனில் இருந்து போனெ ஜெயதேவனுக்கு என்ன நடந்தது? ஆரம்பத்தில் புலிகளுடன் இருந்த பலர் கடைசிவரை இருக்கவே இல்லை.

தங்களுக்கு மேல் படித்தவன் இருந்தால் பிரச்சனை என பயபட்டார்கள் .

தமிழ்செல்வனும்,புலித்தேவனும்,கருணாவும் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பிற்கு தலைமை தாங்கியதை போல வெட்ககேடு வேறெதுவும் இல்லை,பாலசிங்கமே நக்கல் அடித்தது மறந்துபோய்விட்டதா?

ஜெயதேவன் புத்திஜீவி என்று சொல்கின்ற உம்முடன் கதைத்து பிரயோசனம் இல்லை. ஆங்கிலம் தெரிந்தா புத்திஜீவியா?

பேராசிரியர் இராஜேஸ்வரன்,பேராசிரியர் சொர்னராஜா, முன் நாள் சட்டமா அதிபர் தொடக்கம் எங்கே ஒத்து ஊதினார்கள் ஒரு எடுத்துக்காட்டை கூற முடிந்தால் கூறவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.