Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தேர்தல் முடிவுகள் -அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

ஐயா எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாதோ..???

அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது..............

  • Replies 103
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக-132, திமுக 25, தேமுதிக-23 இடங்களில் முன்னிலை

------

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு?-திமுக-தேமுதிக கடும் மோத

அட, கடவுளே.... எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கும் தி.மு.க. அல்லாட வேண்டிப் போச்சுதா....

ஈழத்தமிழனுக்கு செய்த வேலைக்கு.... சட்டசபையில் தி.மு.க. கடைசி வாங்கிலை இருப்பதே பொருத்தமானது. :D

அப்போ

ஐயா எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாதோ..???

அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது..............

:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

s_6f48b914b47842bda806226b1ddd7666.gif

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் திருமா நிலை .....

கருணாநிதியிடமிருந்து வாரிசு அரசியல் கற்ற ராமதாசின் நிலை....

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஆப்பெண்டால்ல் ஆப்பு, அப்படியொரு ஆப்பு !!! பேஷ் பேஷ்...ரொம்ப நல்லாருக்கு !!!!!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

பாளையங்கோட்டை: திமுக வெற்றி

பாளையங்கோட்டை அமைச்சர் மைதீன்கான் 625 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

வருங்கால முதல்வர் அண்ணன் புரட்சித் தலைவர் கப்டன் விஜயகாந்த வாழ்க.......

தங்கபாலு??????????????????எங்கை எபப்டி நிலமை அவரின்/...

இப்ப பாருங்கோ கொஞ்ச நாளில் காங்கிரஸ் திமுகா பெரிய சண்டை பிடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் ஆவுடையப்பன் தோல்வி

நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வெற்றி பெற்றுள்ளார்.

சபாநாயகர் ஆவுடையப்பன்(திமுக ) 55,079 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இப்ப பாருங்கோ கொஞ்ச நாளில் காங்கிரஸ் திமுகா பெரிய சண்டை பிடிப்பார்கள்.

ம்ம்ம்

அதையும் நாம் விரைவில் கண்டுகழிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

s_6f48b914b47842bda806226b1ddd7666.gif

:lol: ஆப்பெண்டால்ல் ஆப்பு, அப்படியொரு ஆப்பு !!! பேஷ் பேஷ்...ரொம்ப நல்லாருக்கு !!!!!!!!!

smiley_dance01.gifsmiley_dance02.gifdance-smiley13.gifdance-smiley12.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. மகளிர் அணியினரின் ஆட்டம் நல்லாயிருக்கு. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம்: 41 தொகுதிகளின் முடிவு அறிவிப்பு

தமிழகத்தில் 41 தொகுதிகளின் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டவற்றில் அதிமுக 23,

தேமுதிக 3,

மார்க்சிஸ்ட் 3,

இந்திய கம்யூனிஸ்ட் 3,

சமத்துவ மக்கள் கட்சி 1,

திமுக 5,

காங்கிரஸ் 2

தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

திமுக-தேமுதிக கடும் போட்டி: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜய்காந்த்?

வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 15:18 [iST]

சென்னை: இந்தத் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு வெற்றி வாகை சூடியது அதிமுக மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணி கண்ட விஜயகாந்தின் தேமுதிகவும்தான்.

இந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஒற்றுமையில்லாத பிரச்சாரம், ஜெயலலிதா- விஜயகாந்த் இடையிலான ஈகோ மோதல்கள் என பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும், அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி பெரும் வெற்றியைக் குவித்துள்ளது தேமுதிக.

இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களே அதிகமாக நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படுதோல்வியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளனர்.

இப்போதைய நிலவரப்படி தேமுதிக 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. திமுகவும் 24 அல்லது 26 இடங்களைத்தான் பெறும் என்ற நிலையில் தான் முன்னிலையில் உள்ளது.

எனவே திமுகவை விட ஒரு இடம் அதிகமாகப் பிடித்தாலும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 13, மே 2011 (16:11 IST)

எடப்பாடி: அதிமுக வெற்றி

எடிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பழனிச்சாமி 34,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் கார்த்திக் 69,586 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

nakkheeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
kolainjar20110513185753.jpg

வடிவேலு to விஜயகாந்த் : நான் உங்கள திட்டினது எல்லாம் நிஜம்னு நினைச்சிங்களா ? சும்மா தமாசுக்கு . ஐயோ ஐயோ...

:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்

சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார்.

'ரிசல்டுக்குப் பிறகு எல்லாமே மாறும், அப்போது பேசிக்கிறேன்' என்று கூறினார், ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதிமுக அபார மெஜாரிட்டியுடன் ஆட்சியப்பிடிக்கப் போகிறது. வடிவேலுவால் விமரிசிக்கப்பட்ட விஜயகாந்த் 25 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கிறார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரச்சாரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்கள், சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே அவரது வீட்டுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீடடைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/movies/news/2011/05/heavy-police-security-vadivelu-house-aid0136.html

வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு to விஜயகாந்த் : நான் உங்கள திட்டினது எல்லாம் நிஜம்னு நினைச்சிங்களா ? சும்மா தமாசுக்கு . ஐயோ ஐயோ...

:lol::D

:rolleyes::D:D

விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி!

சென்னை: பத்து இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்தத் தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்துள்ள இந்தத் தோல்வி தமிழ் உணர்வாளர்களுக்கு சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலித் சக்தியா, தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக இருப்பவர் தொல். திருமாவளவன். திமுக கூட்டணியில் இடம் பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸை எதிர்த்து கடுமையாகக் கூட குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டவர்.

ஈழம் பற்றி எறிந்தபோது இவர் கொதித்தெழுந்து குரல் கொடுத்தபோதெல்லாம், திமுக மூலமாக அவரை அடக்கி வைத்தது வீணாய்ப் போன காங்கிரஸ். இவரை எம்.பியாகக் கூட ஆரம்பத்தில் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. கடுமையாகப் போராடித்தான் எம்.பி தேர்தலில் போட்டியிடவே முடிந்தது திருமாவளவனால்.

ஈழத்தில் என்ன நிலை காணப்படுகிறது என்பதை அறிவிதற்காக காங்கிரஸ் தரப்பில் இலங்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் அனுப்பப்பட்டபோது அதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். அப்போது அங்கு எதுவுமே பேசக் கூடாது என்று கண்டிஷன் போட்டு திருமாவளவனையும் அழைத்துச் சென்றது காங்கிரஸ்.

அங்கு போய் சர்வாதிகாரி ராஜபக்சேவை சந்தித்தபோது, நீங்கள் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இல்லையென்றால் செத்துப் போயிருப்பீர்கள் என்று அந்த தமிழ் ரத்தங்களைக் குடித்த ராஜபக்சே முழங்கியபோது ஒரு காங்கிரஸ் எம்.பியும், திமுக எம்.பியும் கூட ராஜபக்சேவைக் கண்டித்துப் பேசவில்லை.

இப்படி திமுகவுக்கும், கருணாநிதிக்கும் இக்கட்டு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்ட திருமாவளவன், இந்த தேர்தலில் கூட சீட்டுக்காக திமுகவை அதிகம் நெருக்கவில்லை.

நிறைய சீட்கள் கேட்டார் என்றாலும் கிடைத்தது பத்துதான். இருந்தாலும் அதிலும் திருப்திப்பட்டுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தி மிகத் தீவிரமாக திமுகவுக்காகப் பிரசாரம் செய்தார் திருமாவளவன்.

ஆனால் என்ன புண்ணியம், ஒரு இடத்தில் கூட திருமாவுக்கு வெற்றி கிடைக்கவில்லையே. இது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ் உணர்வாளர்களுக்கும் கூட பெரும் ஏமாற்றம்தான்.

நிச்சயம் திருமாவளவனின் வாக்கு வங்கியில் குறைபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர், கண்டிப்பாக சிறுத்தை வேட்பாளர்களுக்காக வேலை பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான் திருமாவளவன் கட்சியினர் தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்க முடியும்.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை திருமாவளவன் குறைத்துக் கொண்டதும் கூட அவருக்கு எதிராக வாக்குகள் திரும்பியிருக்கக் காரணமாக இருக்கலாம்.

எப்படியோ, தமிழக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தமிழ் உணர்வுள்ள மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த தோல்வி பேரிடிதான்.- தற்ஸ் தமிழ் -

ஐயா கருணாநிதியின் கல்லறையில்......

ஆட்சி வரும் போகும்.

ஆனால்

முள்ளிவாய்க்காலில் ஐயா கருணாநிதி காப்பாற்றுவார்

என்று கடைசிவரை நம்பியிருந்த தமிழ் உறவுகளின் போன உயிர் திரும்பி வராது.

ஆட்ச்சிக்கு வருமுன் கொடுக்கிற வாக்குறுதிகள்

ஆட்சி நாற்காலியில் உட்கார உதவும்.

ஆனால் வாக்களித்தவர் நிலைமை

இலவு காத்த கிளிதான்.

தமிழை வளர்த்தார்.

தமிழை செம்மொழி ஆக்கினார்.

தமிழ் நாட்டில்,

அறுபது ஆண்டு காலம் அரசியல் செய்து

பலமுறை முதல்வரானார்.

உலகத்தமிழினத்தின் தலைவரானார்.

ஆனால் ஆயிரம் ஆயிரம் தமிழ் உயிர்கள்

தம்மைக் காப்பாற்றுமாறு அவலக்குரல்கள் எழுப்பிய போது...

பொங்கி வந்த தமிழக உறவுகளின் உணர்வுகளை மழுங்கடித்தார்.

நான்குமணி நேர உண்ணாவிரத நாடகமாடினார்.

நயவஞ்சகமாக எதிரிகளுக்கே துணை போனார்.

டெல்லிக்குதிரைகள் பந்தயத்தில் வெல்ல

வாலில் தொங்கினார்.

அரச கட்டிலை காதலித்தார்.

மன்மோகனுக்கு தமிழன் சாதல் கடிதம் எழுதினார்.

எல்லாம் முடிந்து போனது.

ஐயா கருணாநிதி தம்மைக் காப்பற்றுவார்

என்றிருந்தவர்களின் குற்றுயிர் உடல்கள்,

முள்ளிவாய்க்காலில் மண்போட்டு மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

அவர்மட்டும் மீண்டும் ஒருதடவை ஆட்சிக்கட்டில் கனவு கண்டார்.

ஆனால், முழுத் தமிழகமே விழித்துக் கொண்டது.

அவர் ஆசை கனவு கலைந்தது.

ஐயா கருணாநிதியின் கல்லறையில் இப்படித்தான் எழுதப்படும்.

http://www.youtube.com/watch?v=9ZwaZJSpJXo

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி

ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார்.

இதில் 91,194 வாக்குகள் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 30375 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் திருமாவளவனின் வாக்கு வங்கியில் குறைபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர், கண்டிப்பாக சிறுத்தை வேட்பாளர்களுக்காக வேலை பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான் திருமாவளவன் கட்சியினர் தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்க முடியும்.

:D :D :D

காங்கிரசில் இருபவர்கள் எல்லாம் தலைவர்கள் மட்டும் தான்..! இந்த லட்சணத்தில் அவர்கள் தேர்தலில் வேலைசெய்வார்களாமா? :lol:

காங்கிரசுக்குக் கிடைத்த ஒருசில இடங்களுமே திமுக வாக்குவங்கியால் வந்தவைதான்..! :rolleyes:

... மீண்டும் ... நம்ம ஆதரவுக்(??) கட்சிகள் ... மதிமுக, பாமக, விசி ... பிழையான முடிபெடுத்து விட்டன ....... நாமாவது கடந்த கால குப்பைகளை கிளறாது ... தருணத்தில் சரியான ஆதரவுக்கரத்தைப் பிடிப்போம்!!!!

அதிமுக-148, தேதிமுக-26, திமுக-24 இடங்களில் முன்னிலை

ஆவுடையப்பனை இசக்கி சுப்பையா(அதிமுக) 25,000 வித்தியாசத்தில் வீழ்த்தினார்

கரூர்-செந்தில்பாலாஜி (அதிமுக) 44272 வித்தியாசத்தில் வெற்றி

சங்ககிரி: 30689

இன்றைய தீர்ப்பைவிட நாளைய தீர்ப்பையே கருணாநிதி பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றார்.இன்றைய தீர்ப்பு கடைசிக்காலங்களில் அவர் ஓரளவு எதிர்பார்த்ததுதான்.நாளைய தீர்ப்பு வீட்டில பக்கத்தில படுக்கவும் வழியில்லாமல் பண்ணிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.