Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா என்றா சும்மா இல்லைடா அவா இல்லைனே யாரும் இல்லை.

Featured Replies

முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம்

ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST]

Save This Page

Print This Page

Comment on This Article

A A A

Free Newsletter Sign up

Jayalalitha

Ads by Google

Indian Take Away

Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery!

www.thuisbezorgd.nl

Ads by Google

Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl

Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm.

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும்.

இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

முதல் தீர்வு - போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை, சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நடுவத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

இரண்டாவது தீர்வு- ஈழத் தமிழர்கள் கெளரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய ராஜபக்சே மறுத்தால், இலங்கை அரசு மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

அப்படிச் செய்தால், ராஜபக்சே பணிவதைத் தவிர, இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

தமிழகம் இன்று சீர்குலைந்து போயிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிதிலமடைந்துள்ளது. சிதைந்து போன, சீரழிந்து போன வீடாக தமிழகம் இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும். ஒரு வீடு பாழடைந்து இருந்தால் வெள்ளையடித்து, மராமத்து செய்து சரி செய்யலாம். ஆனால் வீடு இடிந்து போயிருந்தால் அதைப் புதிதாகத்தான் கட்ட வேண்டும். தற்போது தமிழகத்தின் நிலை இடிந்து போன வீடாகத்தான் உள்ளது. எனவே அது மறுசீரமைத்து புதுப்பித்து புதிதாக கட்ட வேண்டியுள்ளது. அதை நான் செய்தாக வேண்டும்.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் பொருளாதாரம் சீர்குலைவது வழக்கம். நான் முதலில் முதல்வராக இருந்து பின்னர் பதவியிலிருந்து அகன்று திமுக ஆட்சிக்கு வந்தபோதும் தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது திமுக. பின்னர் நான் ஆட்சிக்கு வந்தபோது கஜானா சுத்தமாக காலி செய்திருந்தது.

பின்னர் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் கஜானாவைக் காலி செய்திருந்தது திமுக அரசு. அப்போது தமிழகத்தின் நிலை குறித்து அனைவரும் கவலைப்பட்டனர். நலிவடைந்து போயிருந்த இந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது என்று உலக வங்கியே கூறியது. இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தாமல் சவாலாக ஏற்று பொருளாதாரத்தை நிமிரச் செய்தேன். கடன்களையும் அடைக்க நடவடிக்கை எடுத்தேன்.

தற்போதும் கூட கஜானாவைக் காலி செய்துதான் வைத்திருக்கிறது திமுக அரசு. ரூ. 1 லட்சம் கடனை தமிழக அரசு வாங்கி வைத்துள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும். நான் சரி செய்வேன்.

பொருளாதார சீர்குலைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என தமிழகத்தை மீட்க வேண்டிய சுமையை மக்கள் என்னிடம் சுமத்தியுள்ளனர். அதை ஏற்று நான் தமிழகத்தை மீட்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

நான் மக்களுக்குக் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். ஐந்து ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். கடந்த 2006லிலேயே அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னேரம் பீகார், குஜராத்தைத் தாண்டி நாம் முன்னேறியிருப்போம். அது நடக்காமல் போய் விட்டது.

இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்பட்டு குஜராத், பீகாரை விட சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்.

எனது உடனடி முக்கியத்துவம், சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான். அதேபோல நாங்கள் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு வைத்துள்ளோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தற்போது சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணித்து வருகிறது. எனவே அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை சுப்ரீ்ம் கோர்ட் பார்த்துக் கொள்ளும்.

இதுவரை இந்த ஆட்சியில் மக்கள் பெரும் பாடுபட்டு விட்டார்கள். இனிமேல் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தங்களது துயரங்களை மறந்து விட்டு இனிமேல் சிரித்துக் கொண்டே இருக்கலாம். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி, மக்களுக்கான வெற்றி. அவர்களுக்காக உழைக்க நாங்கள் தயாராகியுள்ளோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி தஸ்ட் தமிழ்.

திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா
:

புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம்
:

கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார் - ஜெயலலிதா
:

பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா
:

தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள்.
:

கருணாநிதியைக் கைது செய்ய வேண்டும்':

Edited by கலைஞன்

இது எவற்றையும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இணைப்புகளை தற்போது இணைப்பதற்கான அவசியம் இருப்பதாகவும் தெரியவில்லை.

தொடர்ந்து பகைமை பாராட்டி எதிரிகளை வளர்த்துக் கொண்டதும் தமிழரின் தோல்விக்குப் பிரதான காரணம்.

மோட்டுச் சிங்களவன் எனப் புத்திசாலித் தமிழரால் எள்ளி நகையாடப்பட்ட சிங்களவன் என்ன செய்கிறான்.

தன்னுடைய பொலிசார் 600 பேரின் கொலைக்குக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் பெருமளவு சிங்களப் படையினரைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த கருணாவிற்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளான். அதன் பொருள் கருணாவை மன்னித்து விட்டதோ அல்லது அவன் செய்த செயல்களை மறந்து விட்டதோ காரணமல்ல. மாறாக தனது தேவைக்காக இயன்றவரை அனைவரையும்; பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான்....

தமிழரின் இராஜதந்திர அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டாலே ஒழிய தமிழரின் விடிவு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது.....

  • தொடங்கியவர்

நான் சும்மா தமாஸுக்கு செய்தி இணைத்தேன் அதை நீங்கள் நம்பிட்டிங்களா? ஜய்யோ ஜயோ :lol:

பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை: சீமான்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=81260

புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=34951

புலிகள் எதிர்ப்பு - ஜெ. உறுதி!: http://www.yarl.com/forum3/index.php?showtopic=13815

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்தை இங்கு எழுதுவதில்லை. அரசியலில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை

  • தொடங்கியவர்

இதனால்தான் அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்தை இங்கு எழுதுவதில்லை. அரசியலில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை

அப்போ கருணா அம்மான் கூட நாங்கள் இனைந்து செய்ற்படலமோ? இப்ப அவரும் அரசியல்வாதி தானே :D

எல்லாம் குள்ள நரிகள்,

கலைஞன் குறிப்பிட்ட இனைப்புகள் யாவிலும் ஜெயலலிதா புலிகளை எதிர்ப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது.

இப்போதும் புலிகளை ஆதரிப்பதாகக் கூறவில்லை.

ஈழத் தமிழர் தமது உரிமைகளை பெறுவதற்கு தனது ஆதரவை வழங்குவார் என நம்புவோம்.

இது எவற்றையும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இணைப்புகளை தற்போது இணைப்பதற்கான அவசியம் இருப்பதாகவும் தெரியவில்லை.

தொடர்ந்து பகைமை பாராட்டி எதிரிகளை வளர்த்துக் கொண்டதும் தமிழரின் தோல்விக்குப் பிரதான காரணம்.

மோட்டுச் சிங்களவன் எனப் புத்திசாலித் தமிழரால் எள்ளி நகையாடப்பட்ட சிங்களவன் என்ன செய்கிறான்.

தன்னுடைய பொலிசார் 600 பேரின் கொலைக்குக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் பெருமளவு சிங்களப் படையினரைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த கருணாவிற்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளான். அதன் பொருள் கருணாவை மன்னித்து விட்டதோ அல்லது அவன் செய்த செயல்களை மறந்து விட்டதோ காரணமல்ல. மாறாக தனது தேவைக்காக இயன்றவரை அனைவரையும்; பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான்....

தமிழரின் இராஜதந்திர அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டாலே ஒழிய தமிழரின் விடிவு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது.....

நிச்சயமாக.

பழையதையே கதைத்துக்கொண்டிருந்தால் நிகழ்கால சந்தர்ப்பங்களையும் வரும்காலத்தையும் தொலைத்தவர்களாக மாறிவிடுவோம்.

அ. தி.மு.க. பலவற்றை எமக்கு எதிராக சொல்லியுள்ளதை யாரும் மறுக்கவில்லை, ஆனால், தி.மு.க. செய்துள்ளது. அதனால், தமிழர் தரப்பை பொறுத்தவரையில் முதலில் எம்மை செயாலால் ஏமாற்றிய தி.மு.க. கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை இருந்தது.

அடுத்து, வென்ற கட்சியை வைத்து செய்விக்க வேண்டிய வேலைகள் உள்ளன. அவற்றை எவ்வாறு செய்விக்கலாம் என்பதை ஆராய்ந்து அணுகவேண்டும். எமது நலன்களை எவ்வாறு இந்த நேரத்தில் வெல்லலாம் என்பதே எமது தேவையும் குறிக்கோளும்.

இந்திய குள்ளநரியர்களிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும்..

இவர்களை எப்படி எமக்கு உதவி செய்யவைக்கமுடியும்?

இவர்கள் ஏன் எமக்கு உதவி செய்யவேண்டும்?

எண்டு ஒருகணம் யோசியுங்கள்......................................................... ஒரே பதில்................................................ இவர்களால் முடியாது.

அரசியலில் நிரந்தர நண்பனுமல்ல நிரந்தர எதிரியுமில்லை.. ஆனால் அரசியல்வாதிகளுக்கும் குள்ளநரிகளுக்குமிடையேயான வித்தியாத்தை அறிந்துகொள்ளுங்கள்.... தயவு செய்து நேரத்தையும் பொருளையும் வீணாக்குவதை தவிருங்கள்..

அப்போ கருணா அம்மான் கூட நாங்கள் இனைந்து செய்ற்படலமோ? இப்ப அவரும் அரசியல்வாதி தானே :D

டக்ளஸ், சங்கரி, பிள்ளையான், எண்டு லிஸ்ட் நீண்டு கொண்டேபோகும்..

அரசியலில் நிரந்தர நண்பனுமல்ல நிரந்தர எதிரியுமில்லை.. எண்டு அடிக்கடி சொல்லி சுய இன்பம் கண்டுகொண்டுதிரியும் எங்கட சனத்தை கன்டால்.. பரிதாபம் மட்டுமில்லை கோபம்கூட வருகிறது....

நிச்சயமாக.

பழையதையே கதைத்துக்கொண்டிருந்தால் நிகழ்கால சந்தர்ப்பங்களையும் வரும்காலத்தையும் தொலைத்தவர்களாக மாறிவிடுவோம்.

அ. தி.மு.க. பலவற்றை எமக்கு எதிராக சொல்லியுள்ளதை யாரும் மறுக்கவில்லை, ஆனால், தி.மு.க. செய்துள்ளது. அதனால், தமிழர் தரப்பை பொறுத்தவரையில் முதலில் எம்மை செயாலால் ஏமாற்றிய தி.மு.க. கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை இருந்தது.

அடுத்து, வென்ற கட்சியை வைத்து செய்விக்க வேண்டிய வேலைகள் உள்ளன. அவற்றை எவ்வாறு செய்விக்கலாம் என்பதை ஆராய்ந்து அணுகவேண்டும். எமது நலன்களை எவ்வாறு இந்த நேரத்தில் வெல்லலாம் என்பதே எமது தேவையும் குறிக்கோளும்.

பாவம் நீங்கள்...

Edited by Panangkai

ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்றால் தான் அம்மாவுக்கு வெற்றி கிட்டியது என்று இல்லை.

ஆனால், அந்த பிரச்னையை தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக தொடர்ந்தும் நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்பதே முக்கியம். அதன் மூலம் தமிழக மக்கள் விழிப்பாக இருப்பார், எனவே அங்குள்ள அரசியலிலும் அது முக்கிய இடம் பிடிக்கும். அது ஒன்றே டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கும்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கலைஞர் கருணாநிதியை விட செல்வி ஜெயலலிதாவே சிறந்த முதலமைச்சராக விளங்கமுடியும்.

போர்க்குற்றங்கள் என்று பார்த்தால் இலங்கையின் நடவடிக்கைகளின் பின்னணியில் இந்தியா உள்ளது. இந்தியாவின் நலன்களிற்கு எதிராக அதேசமயம் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவான வகையில் செல்வி ஜெயலலிதா ஏதாவது செயற்பாடுகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஏதாவது சிறிய குரல் கொடுக்கக்கூடும். அதுவும் இலங்கை அரசின் இராசதந்திர வலைகளில் அகப்பட்டு விரைவிலேயே காணாமல் போய்விடும்.

தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை கடற்படை விடயத்தை செல்வி ஜெயலலிதா கலைஞர் கருணாநிதியை விட மிகவும் காரசாரமான விதத்தில் நிச்சயம் கையாள்வார் என எதிர்பார்க்கலாம். அத்துடன் கச்சதீவு பிரச்சனையும் இனிவரும் காலங்களில் செய்திகளில் இழுபடப்போகின்றது.

ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக ஆட்சி மாற்றம் அதிக அளவில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தப்போவது இல்லை.

தமிழ் ஊடகங்கள் அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளை நம்மவர்கள் வளர்க்கக்கூடியவகையில் செல்வி ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியை பிரபலப்படுத்துகின்றன.

ஐ.நா.வின் போர்குற்ற விசாரணைகளில் மேற்குலகம் ( அமேரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரித்தானியா) மற்றும் ஜப்பான் என சிங்கள நாட்டை, ஐ.நா.வுடன் அனுசரித்து போக கேட்டுள்ளன.

இந்தியா இன்று என்ன செய்யப்போகின்றது?, என்பது இன்னும் தெளிவாக இல்லை. இந்த வேளையில் தமிழக மக்களின் செய்தி புது டெல்லியால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நம்பலாம்.

மேலும், பாகிஸ்தான் சீனாவுடன் அதிகம் நெருங்கி செல்வதும், சீனாவுடன் சிங்களம் நெருக்கமாக சென்றுவருவதும் புது டெல்லிக்கு தெரியும். தமக்கு கொழும்பில் செல்வாக்கு குறைந்து செல்வதையும், அதுவே தமது இருப்புக்கு பாதகமாக அமையலாம் என்பது தெரியும். அதனால், போர்குற்ற சந்தர்ப்பத்தை தனது நலத்திற்காக (தமிழரின் அல்ல) என்றாலும் இந்தியா பாவிக்கும் என நம்பலாம். அந்த சுயநல நோக்கங்களுக்குள் நாமும் எமது நலன்களை அடக்கவேண்டும்.

உலகளவிலும்,தமிழ்நாட்டிலும் நடக்கும் மாற்றங்களை பார்க்க தமிழனின் விடிவிற்கான வெளிச்சம் சிறிது தெரிகின்றது.திரும்பவும் போய் நாங்கள் பழைய பல்லவி பாடவெளிக்கிட்டால் நடுரோட்டுத்தான்.

இந்தியாவிற்கு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களில் சம்பந்தம் உள்ளது. தவிர, இந்தியப்படைகளின் இலங்கை வருகையின்போது செய்த நேரடி குற்றங்களும் நிலுவையில் உள்ளது. இந்தவகையில் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்பதில் தெளிவு எங்கு உள்ளது என்றால்.. அது தனது குற்றங்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று எதிர்பார்க்கலாம். அத்துடன், ஐ.நா அறிக்கையில் கூறப்படும் த.வி.பு புரிந்த போர்க்குற்றங்கள் விடயத்தில் செல்வி ஜெயலலிதா கரிசனை காட்டமாட்டார் என்றும் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா

தானே பெரியவர் தானே புத்திசாலி என நினைப்பவர்

இவரையும் மகிந்தவையும் ஏதாவது ஒரு விடயத்தில் முரண்பட வைத்துவிட்டால்............

எமக்கு ஒரு வழியை அவர் திறப்பார். :rolleyes::rolleyes::rolleyes:

அத்துடன்

கருணாநிதியினதும் அவரது வாரிசுகளினதும் பெயர் கெட்டுள்ள இன்றையநிலையில் ஈழத்தமிழருக்கு ஏதாவது செய்து தன் பெயரைப்பொறிக்கவும் தமிழத்தில் ஒரு நல்லபெயரை பெறவும் அவர் முயலக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கருணா அம்மான் கூட நாங்கள் இனைந்து செய்ற்படலமோ? இப்ப அவரும் அரசியல்வாதி தானே :D

நான் அரசியல்வாதிகளைச் சொல்கிறேன். சொந்தப்புத்தி இல்லாத ஜந்துகளை அதில் சேர்க்கவேண்டாம் emoticons_14_64.png

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கான அரசியல் சூழல் மீண்டும் கருணா+ காங்கிரசு ஒருவருக்கு ஒருவர் காலை வாராமல் ஒற்றுமையாக இருந்தால் ..கனிமொழி நிச்சயம் காப்பாற்றபடுவார்.. மத்திய அரசின் .. பிரம்மாஸ்திரம் 356 சட்டபிரிவின் படி ஜெ ஆட்சியினை கலைக்கவும் தயங்காது.. போக ஜெ இதை தவிர்ப்பதற்கு .. பாரளுமன்ற வாக்கெடுக்குப்பாக ஒன்று பாரதிய ஜனதா அல்லது மூன்றாவது அணி (கம்னிய்ஸ்டுகளின் .. இதர சில்லரை கட்சிகளுடன்)இதில் தலைமை தாங்கும் அளவுக்கு ஜெவுக்கு விட்டு கொடுத்து போகும் அளவுக்கு தலைமைபண்பு இல்லாமை வேறு விடயம்..

தேசிய அரசியலில் இதை தவிர வேறு ஒன்றும் ஜெ வால் செய்ய இலாது... தமிழ்நாட்டில் காங்கிரசுடன் இனி கூட்டணி வைப்பதற்கே எவனும் இனி தயாராக இருக்கமாட்டான்..(ஈழசிக்கலில் இனி மேலாவது இதய சுத்தியுடன் செயல்படுமானால் அக்கட்சி ஏதாவது மேலும் ஒன்று இரண்டு சீட்டு பெற இயலும் போக இங்க இருக்கும் நிலைப்பாடு.... (ஈழதமிழர் X காங்கிரஸ்) )

டிஸ்கி:

ஜெவும் ஒரு பெண் என்பதால் இயற்பியலில் எதாவது மாற்றம் நிகழும்..எனவே போர்குற்ற ஆவணங்கள் அதுவும் பெண் போரளிகளுக்கு ஏற்பட்ட நிலை.. ஈழ பெண்களின் தற்போதைய நிலை தொடர்ப்பாக தொடர்ச்சியாக இவருடைய கட்சியினரிடம் எடுத்துரைத்து தொடர்புகளை பேணுவதன் மூலம் சில நல்ல மற்றங்களை எதிர்பார்க்கலாம்.. இதிலும் இனி குறிப்பாக மத்திய அரசு தமிழக மீனவர் சிக்கலில் எடுக்கும் நிலையும் கவனிக்க தக்கது. ஒத்துவருவது இல்லை என்றால் எதிர்ப்பவர்களை விழ வைக்க குல்மால் வேளைகளில் கட்டாயம் ஜெ இறங்குவார்.. அதாவது காங்கிரசு கூட்டணி கட்சிகளை பிரித்து போண்டியாக்குவது.. சொறிந்து சோப்பு போடுவது இவரிடம் இல்லாத குணம் :rolleyes:

டிஸ்கிக்கு டிஸ்கி:

அதுவும் மிடியாவிட்டால் ஆட்சியெல்லம துறக்கமாட்டார் ஜெ.. சோனியாவை அடங்காபிடாரி .. இத்தாலி ஓடுகாலி.. பதிபத்தி இல்லாதவர்.. போர்பஸ் விசாரணை மறுபடியும் தொடங்குக.. (இது இன்னோரு கருணாநிதி போல இல்ல) இதான் உண்மை நிதர்சனம்... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தியாவை கூட சிங்களம் போர்குற்ற விசாரணைகளில் மாட்டிவிடலாமா?

ஆயுதம் கொடுத்த இந்தியா செய்தது இரண்டாம் தர கொலை (2nd degree mureder). அதை செய்த சிங்களம், முதலாம் தர குற்றவாளி ( 1st degree murder).

ஒரு இறையாட்சி உள்ள நாடு என்ற வகையில் சிங்களம் யுத்த தளபாடங்களை வாங்க அதற்கு உரிமையுள்ளது. அது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கூட வாங்கி உள்ளது. அதை இந்தியா, சீனா உடைப மேற்கத்தைய உலக நாடுகளும் விற்றுள்ளன.

ஆனால், அந்த ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது போட்டு கொன்றதும், சரணடைந்த ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பின் உறுப்பினர்களையும் கொன்றதுதான் போர்குற்றம். அதை யார் செய்தார்கள்?

இந்த போர்குற்றத்தில் சிங்களம் வேண்டுமென்றால் மற்றைய நாடுகள் உட்பட யாரையும் தனது உடன்பாடிகளாக வெளிப்படையில் சொல்லாது. ஏனெனில் அது அதற்கு ஒத்தாசை செய்த பல நாடுகளை, அதிகமானவை, கோபத்திற்கு இல்லாகும், சிங்களத்தை மேலும் பல நாடுகள் தம்மிடம் இருந்து தள்ளிவைக்கும்.

ம்ம் தோழர் அகூதா நிறைய சிந்திக்கிறார்..

டிஸ்கி:

தானமும் தர்மமும் தனக்கு மிஞ்சினால் தான்... இது தானத்திற்கு மட்டும் அல்லது இது தனி ஒரு மனிதனுக்கு மட்டும் அன்று.. தன்னை மீறிய செயல்பாடுகள் வரும் போது சிங்களம்.. கட்டாயம் போட்டு தாக்க தயங்காது.

இவன் என்னவோ ஜி.எல் பீரீஸ் (இவன் வெளிநாட்டில் பி.எச்டி படித்து போட்டு தாய் நாட்டுக்கு குப்பை கொட்டுபவராம்) கடந்த காலத்தில் கதிர்காமர் .. இவர்களை போன்ற இவனிங்களிடமே

வார்தை விளையாட்டு சொல் சிலம்பம் தங்கியுள்ளது

(எடுத்துகாட்டு-1: இலங்கை போர்குற்றம் vs இது நாங்கள் செய்யும் புனரமைப்புகளை மட்டுபடுத்தும்)

(எடுத்து காட்டு- 2 புலிகள் vs அமெரிக்கா மட்டும் போர் செய்யலாமா?)

(எடுத்துக்காட்டு - 3 தமிழகமக்கள் ஈழதமிழர்களுக்காக போராட்டம் vs இந்திய அரசு என்றும் எங்கள் நண்பன் . நாங்கள் அவர்களுடைய இளைய சகோதரிகள்)

போக ஜனநாய்கத்தில் சொல் சிலம்பம் முக்கியம் ..அதை ரூம் போட்டு சிந்தித்து ஈழ தோழர்கள் பழகி கொள்ள வேணும்... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ கருணா அம்மான் கூட நாங்கள் இனைந்து செய்ற்படலமோ? இப்ப அவரும் அரசியல்வாதி தானே :D

கருணாவோ, டக்ளஸோ, சங்கரியாரோ இவர்களில் எவரும் மக்கள்-சக்திகளால் உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. எமது எதிரியினுடைய தயவினால் மட்டும் உருவாக்கப் பட்டவர்கள். எனவே நாம், இவர்களால் ஒரு துரும்பு பயனும் அடைய மாட்டோம். ஆனால் மக்கள் சக்தி என்ற குறீயீட்டுத் தலைமைகளை நாம் விவேகத்துடன் தான் கையாள வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சும்மா தமாஸுக்கு செய்தி இணைத்தேன் அதை நீங்கள் நம்பிட்டிங்களா? ஜய்யோ ஜயோ :lol:

உது.... தானே.... வேண்டாங்கிறது.

நீங்கள் தமாசுக்கு இணைக்க, யாழ்களத்தில் உங்களுக்கு ஊர்ப்புதினம் பகுதியா.. கிடைச்சது.

வென்ற பெண்ணை வாழ்த்தப் பாருங்கள். தமாசை அப்புறம் வைச்சுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.