Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.

20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.

மீடியா வெளிச்சம்படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.

சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்றபடியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப் பையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.

'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும், ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதற வைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’

''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக் கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப் போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

-ஆனந்தவிகடன்

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

------

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

-------

குடும்பமாய் சேர்ந்து.... கொள்ளையடிக்கிறது,

மாட்டுப் பட்டால்.... கட்சியை துணைக்கு இழுக்கிறது.

இது, எந்த ஊர் நியாயமப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் தாய்களுக்கும், அவர்களின் ஒவ்வொரு குழந்தையும் 'ஆதித்தன்கள் தானே கனிமொழி!

அவர்கள் எவ்வளவு துடித்திருப்பார்கள் என்று இப்போதாவது நினைத்துப் பாருங்கள்!

உங்களுக்காவது உங்கள் 'ஆதித்தன்' உயிரோடு இருக்கின்றார்! அவர்களுக்கு அதுவும் இல்லையே!!!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் பரம்பரை

இனி எங்கும் நிம்மதியாக குந்தமுடியாது.................................... :(

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பமாய் சேர்ந்து.... கொள்ளையடிக்கிறது,

மாட்டுப் பட்டால்.... கட்சியை துணைக்கு இழுக்கிறது.

இது, எந்த ஊர் நியாயமப்பா.புதிய இதுதான் சனநாயகம்.

சரத் பொன்..அரக் காச்சட்டையோடை ஜெயில்

கனிமொழி முக்குத்தி இல்லாமல்... ஜெயில்...

இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்க இல்லை...

அடுத்தது இத்தாலியும் மகிந்தாவும் தான்... ஒரு நாள் நடக்கும்....

கடவுள் இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
:lol: "டெல்லியிலுள்ள உங்க செல்வாக்கைப் பாவிச்சு எம் மகளக் காப்பாத்த உங்களால முடியலயே?" என்று கனியின் தாய் கருணாவிடம் எரிஞ்சு விழுந்தாவாம்.....இதையேதான் நாங்களும் அப்போது கேட்டோம்....தில்லியுள்ள உங்கள் செல்வாக்கைப் பாவித்து இந்தப் படுகொலைகளை நிறுத்துங்கள் என்று. ஆக உங்களுக்கு தில்லியில் எந்தச் செல்வாக்குமில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. சும்மாதான் சொக்கத்தங்கத்தை உரசிக்கொண்டு நின்றிருக்கிறீர்கள் !!!!!!வயசு போன காலத்திலும் கருணாவுக்கு மன்மத ஆசை !
  • கருத்துக்கள உறவுகள்

பண்ணினது கேப்பமாரித்தனம்..! இதுக்குள்ள செண்டிமெண்ட் வேறை..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணினது கேப்பமாரித்தனம்..! இதுக்குள்ள செண்டிமெண்ட் வேறை..! :wub:

கேப்பமாரித்தனம் என்றால் என்ன டங்கு? :rolleyes:

விரிவான விளக்கம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

கேப்பமாரித்தனம் என்றால் என்ன டங்கு? :rolleyes:

விரிவான விளக்கம் தேவை.

அதுதான் கருனாநிதி செய்தது :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் கருனாநிதி செய்தது :lol::lol:

அப்பாடா.. சஜீவன் நீங்கள் வந்து காப்பாத்திட்டீங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் கருனாநிதி செய்தது :lol::lol:

அப்பாடா.. சஜீவன் நீங்கள் வந்து காப்பாத்திட்டீங்கள்..! :lol:

இசையின், வாயாலை... கேப்பமாரித்தனத்தை எடுப்பம், என்றால்... சஜீவன் நீங்கள் கருணாநிதியின் மொத்த வரலாறையும் படிக்கச் சொல்லிப்போட்டீங்கள். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

]டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

images1-2.jpg

images2-1.jpg

வன்னியிலே பிணச்சூடு ஆறமுன்..... நீ நடத்திய திருவிளையாடல்களை ஒருகணம் திரும்பிப்பார்.கெஞ்சிக்கேட்டும் ......பதவிகளுக்காக படியிறங்காத செம்மொழி செம்மறிகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.