Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் சீமான் தொடர்பான செய்திகள். அவதானம் வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி செய்திகள் எழுதப்படுவதுடன்.. தமிழகத்தில் அண்ணன் சீமானின் எழுச்சியை இட்டு அச்சப்படும் சிங்கள மற்றும் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் வகையிலும் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இன்று செய்திகள் ஆக்கப்படுகின்றன.

அதுவும் ஈழத்தமிழர்கள் நடத்தும் சில ஊடகங்களும் அண்ணன் சீமான் தேசிய தலைவருக்கு எதிராக செயற்பட முனைவது போலவும் எதிரிகளுக்கு வக்காளத்து வாங்கி கற்பனைகளை எழுதி வருகின்றன.

தமிழ் சின் என் என்.. போன்ற இணைய ஊடகங்கள்.. இப்படியான எதிரிக்கு துணை போகும் பிரச்சாரங்களை அடிக்கடி எடுத்து வரும் நிலையில்.. அவற்றின் செய்திகளை இணைப்பவர்கள் தயவுசெய்து அவதானமாக இருந்து செயற்படுங்கள்.

அண்ணன் சீமானின் தனிப்பட்ட நலனில் அக்கறை இருந்தாலும் அவரின் அரசியல் தலைமைத்துவமும் வீச்சும் கொள்கை உறுதியுமே மக்களுக்கு தேவை. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் சிரத்தை செய்ய வேண்டியதில்லை. அப்படி தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயப் போனால்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. சோனியா.. மகிந்த ராஜபக்ச என்று எல்லோரினதும் தனிப்பட்ட வாழ்க்கைகளுக்குள் அடங்கிக் கிடக்கும் அசிங்கத்தில் 1% தானும் அண்ணன் சீமானிடம் இருக்கப் போவதில்லை என்பது உறுதி. அதுவும் சினிமாத் துறை சார்ந்த அவருக்கு நடிகைகளோடு தொடர்பு ஏற்படுவது இயல்பானது. ஒரு இளைஞனாக அழகான பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் இயல்பானது. அது அவரின் சொந்தப் பிரச்சனை. அதற்கும் அவரின் தெளிவான அரசியல் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.

அண்ணன் சீமானின் அரசியல் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத இந்திய ஆளும் வர்க்கத்தினதும் சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் சதிக்கு குதிபோடும் கூட்டங்களே.. உங்கள் கற்பனைக் குதிரைகளை அவிழ்த்துவிட்டு தமிழின அழிவை ஊக்குவிப்பதை விடுத்து.. ஏதாவது உருப்படியா செய்ய முடியும் என்றால் செய்து தொலையுங்கள்.

எனவே மக்கள் இவ்வாறான செய்திகள் தொடர்பில் விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும். வதந்திகளை நம்பி தலைவர்களின் மீது அவநம்பிக்கை வளர்க்கக் கூடாது. தொடர்ந்தும் அண்ணன் சீமானின் பின்னாள் அணிதிரண்டு அவரை வீழ்த்த நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடியும் பாடமும் கற்பிக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

.. அங்கு சீமானை உடைத்தெறிவதென முடிபு கட்டி செயற்பாடுகள் ... இங்கு புலத்திலும் எம் குப்பைகள், குப்பை குப்பையாக எழுத்துக்கள்!!

நேற்றுவரை தமிழ் ஈஎன்என் அல்லது சிஎன்என் என்கின்ற மண்ணாங்கட்டி பற்றி எவரும் இங்கு அலட்டிக்கொள்ளவில்லை. நான் நீண்டகாலமாக குறிப்பிட்ட தளத்தினை விமர்சித்து வந்தேன். அண்மையிலும் மேற்கண்ட தளத்தை மேற்கோள்காட்டி ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி பற்றி கருத்து கூறினேன். யாழ் உறவுகள் குறிப்பிட்ட தளத்தை மேற்கோள் காட்டி நூற்றுக்கணக்கான செய்திகளை ஊர்ப்புதினத்தில் இணைத்தார்கள். நிருவாகமும் கண்டுகொள்ளவில்லை. நேற்றுவரை பொத்திக்கொண்டு இருந்தவர்கள் இன்று ஆக்கிரோசம் அடைந்ததன் மர்மம் என்ன? நேற்றுவரை தேசியத்தின்பால் அக்கறை கொண்டதாக கருதப்பட்ட தளம் இன்று எப்படி துரோகிகளின் தளமானது?

கலைஞர் ராகவன் பரஞ்சோதியை துரோகி எனக்கூறி குறிப்பிட்ட தளத்தில் (வெட்டி ஒட்டி?) பிரசுரம் செய்யப்பட்ட செய்திகளை யாழ் உறவுகள் ஊர்ப்புதினத்தில் இணைத்து மகிழ்ந்தார்கள். தற்போது அதே தளம் சீமான் அவர்கள் பற்றிய செய்தியை பிரசுரிக்கும்போது அதை இங்கு மொட்டைமனிதன் எனும் பெயரில் ஒருவர் வெட்டி ஒட்டும்போது அதை நிருவாகம் அகற்றியது ஏன்?

+++

மேற்கண்ட தளத்திற்கு சென்று சீமான் அவர்கள் பற்றிய செய்தியை பார்த்தேன் (மொட்டை மனிதன் அவர்கள் இணைத்த செய்தியை தலைப்பை பார்த்துவிட்டு வாசிக்கும் முன்னரே அகற்றிவிட்டார்கள்). முன்பு கலைஞர் கமலகாசன் கூறியதாக சொல்லி மேற்கோள் காட்டிய கருத்தையே இங்கும் மீண்டும் கூறுகின்றேன். எனது கலையை இரசியுங்கள், எனது தனிப்பட்ட வாழ்வினுள் தலையை நீட்டாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்cnn இன் செய்திகள் இணைக்கபடுவதை இங்கு தடை செய்யப்படவேணும், முன்பும் சில தளங்கள் தடை செய்யப்பட்டன. அதனுடன் சேர்த்து இதையும் தடை செய்ய வேண்டும். கண்ட கண்ட குப்பைகளை போடும் இடமாக யாழ்களத்தை அனுமதிக்க முடியாது, தேள்வை ஏற்பட்டால் தமது இணையங்களில் அந்த குப்பைகளை கொட்டட்டும். யாரும் படித்தால்தானே. யாழில் போடுவதால்தான் இந்த குப்பைகளை படிக்க வேண்டி இருக்கிறது, இதால் ஏற்பட்ட மன உழைச்சலுக்கு நிர்வாகம் என்ன சொல்ல போகிறது.

தாயகத்தில் அன்றாடம் பல சகோதரிகள் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்த விடயங்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் திறனற்ற இந்த ஊடகங்களுக்கு, இப்படியான கிளுகிளுபபுச் செய்திகள்தான் உயிர்நாடி. தாங்கள் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக இப்படியான செய்திகளை வெளியிட்டு எதிரிகளுக்குத் துணை போகிறார்கள். அதுவும் நடிகையுடன் சம்பந்தப்பட்டது. பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

அந்தச் செய்தி உண்மையெனில், அது சீமானின் தனிப்பட்ட பிரச்சனை. காதலிப்பதும் பிரிவதும் அவரவர்களின் சொந்தப் பிரச்சனை.

நிச்சயம் ஊடகங்கள் தேசியம், இனம், மொழி என்ற பற்றுக்கள் கொண்டவையாக இயங்கவேண்டும்.

அவ்வாறு அவர்கள் எல்லோரும் இயங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அப்படியானால் என்ன செய்யலாம்? இதற்கு ஒரு ஏகமனதான சரியான முடிவு இல்லை.

- வாசிப்பர்வர்கள் அவசரப்படாமல் எல்லாவற்றையும் முடிந்தளவுக்கு வாசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

- வாசகர்களுக்கு முன்னால் பல தெரிவுகள் முன்வைக்கப்படல் வேண்டும்

- நாளடைவில் வாசகர்கள் சில ஊடகங்களை வாசிக்காமல் விடுவார்கள் இல்லை அதன் நம்பகத்தன்மையை நிராகரிப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை;

என் மீது எந்த குற்றமும் இல்லை :

சீமான் பரபரப்பு பதில்

01.06.2011 அன்று மாலையில், நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் நேரடியாக பதில் எதுவும் கூறவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மூலம் விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சீமான் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘’நடிகை விஜயலட்சுமி கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்.

நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். எனது கட்சித் தோழர்களும் அவருக்கு உதவி உள்ளனர். இது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. என்னிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்வது எனது சுபாவம். அந்த அடிப்படையில் தான் நடிகை விஜயலட்சுமிக்கு உதவி செய்தேன். இதன் பிறகு அவரிடம் இருந்து எனது செல்போனில் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்.கள் வரத் தொடங்கின.

என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும். மேலும் ஆவிகளை ஏவி விட்டு நீங்கள் என்னை கொல்லப்பார்க்கிறீர்கள், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று ஒரு தடவை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. உடனே நான் என் நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன்..

விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். சேரன் வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப்பதாகவும் கூறினார்.

அதன் பிறகு நான் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். தி.மு.க., காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர்.

நான் தலைமறைவாகி விட்டதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை. அப்படி ஒரு கோழைத் தனமான முடிவு எடுக்க எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை வழக்குகளை கண்டு நான் பயப்படுபவன் அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள பாலியல் வல்லுறவு வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.

எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தை எள்ளவும் தளரவைக்க முடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55234

தமிழகத்தில் கடந்த லோக்சபாவிற்கான தேர்தல் முடிந்தவுடன் ... இந்திய மத்திய அமைச்சரான சிதம்பரத்தின் மகன் கார்த்திக் தலைமையிலான ரவுடிக்கும்பல், அத்தேர்தலில் ஈழப்பிரட்சனையை வைத்து காங்கரசுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட இயக்குநர் பாரதிராஜாவின் சொத்துக்கள் ஏறக்குறைய அனைத்தையுமே நாசமாக்கினர், தமிழக பொலிஸார், யார் செய்தார்கள் என்று தெரிந்தும், பாராமுகமாக இருந்தனர். அத்தாக்குதலின் பின் பாராதிராஜாவின் வாய் நிரந்தரமாக மூடச் செய்து விட்டார்கள்!

... இன்று சீமானை அடக்க ... இந்த பெண் கருவியாக்கப்பட்டிருக்கிறார்.

அதனை புலத்திலும் குழப்பி அடிக்க புலத்தில் மர்ம நபர்களால் இயக்கப்படும் இத்தகைய இனையத்தளங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீமானை முடக்குதவற்காக பின்னப்பட்ட வலை

இத்தகைய பல வடிவங்கள் சீமானை நோக்கி இன்னும் பல முளைவிடும் இவைகள் சீமானை அடக்குவதற்கு முயல்பவர்கள் சீமானை அழிக்கவும் தயங்க மாட்டார்கள். இனிவரும் காலங்களே சீமானுக்கு அதிக பாதுகாப்புத் தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி என்று அறியபடும் பட்சத்தில் செங்கல்பட்டு முகாம்தான்

jaffar.jpg

.. ஜாபர் சேட்டு அகதிகள் துறைக்கு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார் அவன் ஒரு மோசமான களவாணி பயல்.. போக இந்த விஜயலட்சுமி கேசு முடிந்து.. திருமணத்திற்கு தடை கிடை ஏதும் வாங்காம இருக்கணும்.. எத்தனை வாய்தாவோ ??? காங்கிரஸ்காரன் கண்ணில் பட்டு தொலைந்தால் அவ்வளவுதான்... கேசில் இருந்து வெளியவர.....பொழுது விடிஞ்சுறும்... :( :( :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை தமிழ் ஈஎன்என் அல்லது சிஎன்என் என்கின்ற மண்ணாங்கட்டி பற்றி எவரும் இங்கு அலட்டிக்கொள்ளவில்லை. நான் நீண்டகாலமாக குறிப்பிட்ட தளத்தினை விமர்சித்து வந்தேன். அண்மையிலும் மேற்கண்ட தளத்தை மேற்கோள்காட்டி ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி பற்றி கருத்து கூறினேன். யாழ் உறவுகள் குறிப்பிட்ட தளத்தை மேற்கோள் காட்டி நூற்றுக்கணக்கான செய்திகளை ஊர்ப்புதினத்தில் இணைத்தார்கள். நிருவாகமும் கண்டுகொள்ளவில்லை. நேற்றுவரை பொத்திக்கொண்டு இருந்தவர்கள் இன்று ஆக்கிரோசம் அடைந்ததன் மர்மம் என்ன? நேற்றுவரை தேசியத்தின்பால் அக்கறை கொண்டதாக கருதப்பட்ட தளம் இன்று எப்படி துரோகிகளின் தளமானது?

கலைஞர் ராகவன் பரஞ்சோதியை துரோகி எனக்கூறி குறிப்பிட்ட தளத்தில் (வெட்டி ஒட்டி?) பிரசுரம் செய்யப்பட்ட செய்திகளை யாழ் உறவுகள் ஊர்ப்புதினத்தில் இணைத்து மகிழ்ந்தார்கள். தற்போது அதே தளம் சீமான் அவர்கள் பற்றிய செய்தியை பிரசுரிக்கும்போது அதை இங்கு மொட்டைமனிதன் எனும் பெயரில் ஒருவர் வெட்டி ஒட்டும்போது அதை நிருவாகம் அகற்றியது ஏன்?

+++

மேற்கண்ட தளத்திற்கு சென்று சீமான் அவர்கள் பற்றிய செய்தியை பார்த்தேன் (மொட்டை மனிதன் அவர்கள் இணைத்த செய்தியை தலைப்பை பார்த்துவிட்டு வாசிக்கும் முன்னரே அகற்றிவிட்டார்கள்). முன்பு கலைஞர் கமலகாசன் கூறியதாக சொல்லி மேற்கோள் காட்டிய கருத்தையே இங்கும் மீண்டும் கூறுகின்றேன். எனது கலையை இரசியுங்கள், எனது தனிப்பட்ட வாழ்வினுள் தலையை நீட்டாதீர்கள்.

மேற்படி இணைய ஊடகம் வெளியிட்டு வந்த சில செய்திகள் தொடர்பில் முன்னரும் தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம். நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். மேற்படி ஊடகம் அருந்ததி ராய் அவர்களின் பேட்டியை இட்டு அவரை மிக மோசமான விமர்சனம் செய்து எழுதியதை அடுத்து அதன் உண்மை முகத்தை இனங்காட்டி அதில் இருந்து செய்திகளையோ பிற ஆக்கங்களையோ இணைப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை கவனிக்காதது எமது தவறல்ல..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பூஜா தரப்போகும் புகார்?

சீமானுக்கு எதிராக மேலும் ஒரு சதி!

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட Poojaபொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.

பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில் மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது நம் காதுக்கு வந்த ரகசிய சோர்ஸ் ஒன்று.

தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்திருப்பார் சீமான். ஒரு நடிகைக்கும் இயக்குனருக்குமான உறவு அதோடு முடிந்து போயிருக்கும். அப்படம் வெளிவந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் தனது சொந்தங்களை பார்க்க போயிருந்தாராம் பூஜா. அங்கு வைத்து அவரிடம் ஒரு கட்டாய புகார் எழுதி வாங்கியிருக்கிறதாம் இலங்கை அரசு. அதில் பூஜா சீமானை ஒரு குணக்கேடர் என்று சித்தரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த விவகாரமும் விஜயலட்சுமியின் புகாரோடு இணைந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

- தமிழ் சினிமா

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தொடர்பான செய்திக்கு காரணம் காங்கிரஸ் கட்சி

seemaanseeting.jpg

- புகைப்படம் நக்கீரன் இணையத்தில் இருந்து

காய்க்கின்ற மரம் தான் கல்லடி வாங்கும். இந்த அலைகள் எல்லாம் சீக்கிரமே ஓய்ந்து போய்விடும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.