Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரும்பைத் தின்று கசாசயம் குடிப்பவர்

Featured Replies

ஏதோ ஒரு திரியில் கிருபன் எழுதிய பின்னோட்டத்தில் “இரும்பைத் தின்று கசாசயம் குடிப்பவர்” என்ற சொற்றொடரைப் பார்த்தேன். இதற்கு முன்னர் இதனைக் கேள்விப்பட்டதில்லை. மிகவும் சுவாரசியமானதும் வினைத்திறன் மிக்கதும் ஆன இநதச் சொற்றொடர் வாசிக்க வாசிக்க அர்ததம் கிளம்பும் ஆழம் மிக்கதாய் மலைப்பேற்படுத்துகிறது.

இது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கா, அல்லது இலக்கியத்தில் எழுந்ததா என்று தெரிய ஆவலாக உள்ளது. நிச்சயமாக இது ஈழத்தமிழரின் பாவனையில் உருவான சொற்றொடராயே இருக்கும் என்று எனக்குப் படுகிறது. யாரும் அறிந்தால் அறியத் தாருங்கள்.

அது போல், இவ்வாறான அரிதாகப் பாவனையில் இருக்கும் ஆழமான இனிமைனயான சொற்றொடர்கள் பேச்சு வழக்குகள் அறிந்தவர்கள் இத்திரியில் பின்னூட்டம் இடுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
:) "இரும்பைத் திண்டு தண்ணி குடிச்சாக்கள்" என்று எங்கள் வட்டாரத்தில் கடினமான காரியங்களை இலகுவாகச் செய்யக்கூடியவர்கள் என்ற பிரமிப்பைத் தருபவர்களைப் பற்றிக் கதைப்பார்கள். கூகிளில் தட்டிப் பார்த்தபோது தண்ணிக்குப் பதிலாக கசாயம் என்று தமிழ்நாட்டில் பாவனையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தான் பிரதியிட்டேன்.
  • கருத்துக்கள உறவுகள்

எமனைப் பச்சடிபோட்ட கள்ளர்..! :D

ஒருத்தரின் இயல்பை அல்லது ஒரு காரியத்தை பற்றி விபரிப்பதற்கு சுத்தி வளைக்காமல் பொட்டில் அடித்த மாதிரி கூறும் வட்டார வழக்கு வசனங்கள். இலக்கியமல்ல. இடத்திற்கு இடம் வேறுபடும்.

இரும்பைத் திண்டு தண்ணி குடிச்சவன்

எமனைப் பச்சடி போட்டவன்.

தண்ணிக்கால நெருப்பக் கொண்டு போறவன்

காணாதத கண்ட நாய்க்கு கறிச்சோறு நெய்ச்சோறு.

அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவன்.

நாயை கொண்டுபோய் நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கும்.

...................................................

Edited by thappili

இரும்பைத் தின்று கஷாயம் குடிப்பவர் = எக்ஸ்ஸிமோக்குப் பிறித் ('FERNCH FRIE") வித்தவர்கள் (இது பிரான்ஸ் வட்டார வழக்கு) :D:D:D:D:D

ஒருத்தரின் இயல்பை அல்லது ஒரு காரியத்தை பற்றி விபரிப்பதற்கு சுத்தி வளைக்காமல் பொட்டில் அடித்த மாதிரி கூறும் வட்டார வழக்கு வசனங்கள். இலக்கியமல்ல. இடத்திற்கு இடம் வேறுபடும்.

இரும்பைத் திண்டு தண்ணி குடிச்சவன்

எமனைப் பச்சடி போட்டவன்.

தண்ணிக்கால நெருப்பக் கொண்டு போறவன்

காணாதத கண்ட நாய்க்கு கறிச்சோறு நெய்ச்சோறு.

அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவன்.

நாயை கொண்டுபோய் நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கும்.

...................................................

சொல்லடை என்றும் சொல்லலாம் தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கிலை.... ஆளைச் சுருட்டி, அடிமடியில் வைப்பார்..

பனங்காட்டு நரி, உந்த சலசலப்புக்கு அஞ்சாது.

இளநீர் குடிச்சவன் ஆரோ.... கோம்பை சூப்பிறவன் ஆரோ....

மல்லாந்து படுத்துக் கொண்டு, எச்சில் துப்பக் கூடாது.

கேக்கிறவன் கேனையனாய், இருந்தால்.... எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

ஓசி.. என்றால், பொலிடோலும், குடிப்பார். (சிலர் சிங்களப் பேப்பரும் வாசிப்பார்கள்) :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சில வட்டாரச் சொற்றொடர்கள்

"கெடுகிறன் பந்தயம் பிடி"

"நாய்க்கு வேலையுமில்லை, நடக்க நேரமுமில்லை"

"பு**கில தெள்ளரிச்ச நாய் மாதிரி ஓடுப்பட்டு திரியிறார்" :lol:

சட்டிக்குள் உள்ளதுதான் அகப்பையில் வரும்

ஈயான் தேட்டை தீயான் வேட்டை.

சந்தனம் கூடிட்டு எண்டதுக்காக பு**கில அள்ளிப்ப் பூசுறதில்லை.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் கூடிட்டு எண்டதுக்காக பு**கில அள்ளிப்ப் பூசுறதில்லை.

சந்தனத்தை புக்கில பூசினால் நல்லது தானே.... தப்பிலி.smiley-face-book.gif1sm147Bible.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

கிருபன், இசைக்கலைஞன், தப்பிலி, கோமகன். தமிழ்சிறி அனைவரிற்கும் மிக்க நன்றி. என்னைப் பொறுத்தவரை, எங்கள் மொழியின் வீரியமும் இனிமையும் பேச்சு வழக்கு வார்த்தைப் பிரயோகங்களில் இலக்கியத்திற்குச் சற்றும் சழைக்காமல், அல்லது ஒரு படி மேலாக வெளிப்படுகின்றன. துரதிஸ்ரமான முறையில், இவை எழுதப்படுவதில்லை என்பதாலும் (எனக்குச் சோபாசக்தியின் எழுத்துப் பிடிப்பதற்கு இந்த வழக்குகளின் உள்ளடக்கமும் ஒரு முக்கிய காரணம்), நாங்கள் அல்லது எமக்கு அடுத்த தலைமுறை எங்கள் மண்ணில் இப்போது வாழ்வதில்லை என்பதாலும் எங்கள் மொழியின் இனிமையில் அதிகம் எங்களிற்கே தெரியாது போய்க்கொண்டிருக்கின்றது. அத்தோடு இவ்வழக்குகள் காவி நிற்கும் எங்கள் வரலாறு மற்றும் பாரம் பரியமும் தொலைகிறது. என்னைக் கேட்டால் "கெட்டவார்த்தைகளைக்" கூட எழுதி வைக்கவேண்டும் என்பேன். ஏனெனில் கோபத்திலோ, நகைச்சுவைக்கோ அல்லது இன்ன பிற உணர்வுகளை வெளிப்படுத்தவோ பல கெட்டவாhத்தைகள் பிரமிப்பூட்டும் வகையில் எம்மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இரும்பைத் தின்று கசாயம் குடித்தவர் என்ற சொற்பதம் கூட பல புரிதல்களைக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது: 1) மற்றையவர்கள் நினைத்தும் பார்க்கமுடியாத விடயத்தை இலகுவாகச் செய்து முடிக்கக்கூடியவராகத் தன்னைத் தானே காட்டிக்கொள்ளும் நபர் 2) வாழ்வை எப்போதும் எதிர்மறைக் கோணத்தில் துன்பகரமானதாக, கசப்பானதாக, கடினமானதாகப் பார்த்து மன உழைச்சலிற்கு உள்ளாபவர் (பெசிமிஸ்ட்) 3) உண்மையிலேயே சிக்கலான விடயங்களையும் கூட சர்வசாதாரணமாகச்; செய்து முடிக்கக் கூடிய விற்பன்னர் என்று மற்றையவர்களாற் கருதப்படுபவர் 4) எதனையும் எழிதானதாக நேரடியாகப் பார்க்க எடுக்க முடியாதவர். இப்படி சந்தர்ப்பத்திற்கேற்ப எத்தனையோ விதத்தில் உபயோகிக்கக்கூடியதாகப் படுகின்றது.

அதுபோன்றே மேலே உள்ள தௌ;ளு விடயம் மற்றும் சந்தண விடயம் முதலானவும் சுவாரசியமானதாய் உள்ளன :lol: :lol: . கோமகன் இணைத்த புலம்பெயர் கலாச்சாரத்தை உள்ளெடுத்த தமிழ் மொழிப் பாவனை சுவாரசியமானது.

களத்தில் எல்லாவற்றையும் எழுதமுடியாது என்ற கட்டுப்பாடு உள்ளபோதும், இயலுமானவரை தெரிந்த அரிய பேச்சு வழக்குகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை பகிர்ந்தவர்களிற்கும் இனிமேல் பகிர உள்ளவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு விடையத்தில் உங்களுடன் முரண்படுகின்றேன். கெட்டவார்த்தைகள் ஓர் ஆரக்கியமான சொல்லாடல் இல்லை. கெட்டவார்த்தைகள் எப்போதுமே பெண்களன் இனப்பெருக்க உறுப்புகளை அடிப்படையாக வைத்தே பின்னப்படுகின்றன. யாரும் ஆண்களின் பாலியல் உறுப்புகளை கெட்டவார்த்தைகளாகக் கதைப்பது குறைவு. இலக்கியத்தில் புதுமைகள் செய்கின்றோம் என்று மனவக்கிரங்களை திணிப்பது நாகரீகமில்லை இந்த அலையில் பெண்களும் அள்ளுப்படுவது தான் கவலையான விடையம். என்னைக் கேட்டால் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே இந்தக்கெட்ட வார்த்தைகள் எனபேன்.

  • தொடங்கியவர்

கோமகன்,

கெட்டவார்த்தைகள் என்பது வெறும் உறுப்புக்களின் பெயராகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. தமிழைக் கூட நீச பாசை என்று சமஸ்கிரதித்தினோடு தாழ்த்தி ஒப்பிடப் படுகின்றது. கோவிலில் தமிழில் தேவாரம் பாடுவது ஆண்டவனிற்கு அடுக்காது என்று வழக்குத் தொடரும் அழவிற்கு நம்புவது உலகில் நடக்கிறது. அது போன்று மனவக்கிரங்கள் என்று நீங்கள் கூறுகின்ற விடயமாகத் தான் இருப்பினும் கூட அது எவ்வாறு வக்கிரம் என்றோ, அல்லது எதனால் அது வக்கிரம் என்று ஆகின்றது என்றோ, அல்லது அத்தகைய வக்கிரங்கள் என்ன சமூக நிலையில் என்னகாரணங்களால் எவ்வாறு சொல்லாடல் ஆகியன என்றோ அறியக்கூடாது என்றோ நினைக்கின்றீர்களா?

ஒரு விடயத்தை ஒத்துக்கொள்கின்றேன், பிரபல்யம் அடைவதற்காக மற்றையவர்கள் கதைக்கப்பயப்படுகின்ற விடயங்களைத் திரும்பத்திருப்பக் கூறுவதை ஒரு வெறும் உத்தியாய சிலர் இணையத்தளங்களில் பயன்படுத்துவது உண்மை தான். ஒரு விடயத்தை ஏன் கூறுகின்றோம் என்ற அடிப்படைக்காரணங்கள் இன்றி வெறுமனே சில வார்த்தைகளைத் திருப்பத்திருப்பக் கூறிவிட்டு அதை முற்போக்கு அல்லது புதுமை என்று கருதுவது நடக்கிறது தான். அவ்வாறு வெறும் வார்த்தைகளைக் கூறுவதால் மொழியின் அழகோ அடிப்படையோ உணரப்படமுடியாது. ஆனால், புதிதாக சொற்றொடர்களை உருவாக்கும்படி நான் கூறவில்லை, இருக்கின்ற சொற்றொடர்கள் ஏன் இருக்கின்றன, எவ்வாறு வந்தன என்று பார்;ப்பதில் கெடுதல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே கூறியதுபோன்று யாழ்போன்ற ஒரு பொதுவான களத்தில் ஒருவேளை அவை எழுதப்படமுடியாதன. ஆனால் எழுதவேபடமுடியாதன என்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

வக்கிரம் புனிதம் போன்ற சிந்தனைகளில் அல்லது அவற்றின் வரைவிலக்கணம் போன்றவற்றில் நானும் நீங்களும் உடன்பட்டுத் தான் ஆகவேண்டும் என்பதில்லை.

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

உரியவன் இல்லாட்டில் ஒரு முழம் கொட்டான்.

சந்தனத்தை புக்கில பூசினால் நல்லது தானே.... தப்பிலி.smiley-face-book.gif1sm147Bible.gif

சிறி

எந்த புக்கில பூசவேண்டும் என்று சற்று எடுத்துரைப்பீர்களா? :unsure::blink::lol:

அதுபோன்றே மேலே உள்ள தௌ;ளு விடயம் மற்றும் சந்தண விடயம் முதலானவும் சுவாரசியமானதாய் உள்ளன :lol: :lol: .

எல்லாம் இடத்தைப் பொறுத்தது. :D

Edited by thappili

  • தொடங்கியவர்

உரியவன் இல்லாட்டில் ஒரு முழம் கொட்டான்.

இதன் அர்தம் என்ன?

இதன் அர்தம் என்ன?

உதாரணமாக

உங்கள் பிள்ளைகளை , காணியை நீங்கள் பராமரிக்காமல் மற்றவர்களின் பொறுப்பில் விட்டால் - உங்கள் சொந்தக் கவனிப்பில் வரும் விளைவை விடக் குறைவாகவே இருக்கும்.

அதாவது உங்கள் பராமரிப்பில் வரும் அறுவடையை விட குறைவாக கிடைக்கும்.

முழம் - ஒன்றரை அடி (சுமார் 45 cm ) என நினைக்கிறேன்.

கொட்டான் - குறைந்தளவு (இந்த வட்டார வழக்குச் சொல் இடத்துக்கு இடம் வேறுபடும்)

ஓ.. நான்கூட ஏதோ ஒரு வில்லங்கமான மீனிங்கை நினைச்சு வச்சிருந்தன்..! :o:rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் thappili :)

  • கருத்துக்கள உறவுகள்

இறைக்கிற கிணறு தான் ஊறும்....., இறைக்காத கிணறு நாறும்.

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சையில பார்க்கத் தெரியும்.

அடி மரத்தால் ஏறி, கொப்பால் இறங்கிறவர்.

சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.

நனைச்சு, சுமக்கிற வேலை பார்க்கக் கூடாது.

சிறி

எந்த புக்கில பூசவேண்டும் என்று சற்று எடுத்துரைப்பீர்களா? :unsure::blink::lol:

ஐயோ..... வேண்டாம் தப்பிலி, பிறகு வில்லங்கமாய் போயிடும். :rolleyes::D

தனக்கு தனக்கு என்றால், சுளகு படக்குப் படக்கு என்றடிக்குமாம்.

சொல்லடை என்றும் சொல்லலாம் தப்பிலி

விளக்கத்திற்கு நன்றி கோமகன்.

ஓ.. நான்கூட ஏதோ ஒரு வில்லங்கமான மீனிங்கை நினைச்சு வச்சிருந்தன்..! :o:rolleyes::lol:

என்ன நினைத்தீர்கள் என்பதை எழுதுங்கள். அதற்கும் ஒரு சொல்லடை இருக்கும். :D

எழுத்துச் சிரங்கு பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது

அவன் பேனையால் சொறிஞ்சு கொண்டேயிருப்பான்.

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி

போடப்போட தின்னுற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணாது

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுதாம்

பருவ வயதில பண்ணிக்குட்டியும் வடிவு

குடிப்பது கூழ் , கொப்பிளிப்பது பன்னீர்

அதிகாரி கு* விட்டால் அமிர்த வஸ்து, தலையாரி கு* விட்டால் தலையை வெட்டு

வேலியில் போற ஓணானை பிடிச்சு வேட்டியில விட்டது மாதிரி... (நான் அடிக்கடி நினைச்சு நினைச்சுச் சிரிப்பது :D )

கோமகன்,

கெட்டவார்த்தைகள் என்பது வெறும் உறுப்புக்களின் பெயராகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. தமிழைக் கூட நீச பாசை என்று சமஸ்கிரதித்தினோடு தாழ்த்தி ஒப்பிடப் படுகின்றது. கோவிலில் தமிழில் தேவாரம் பாடுவது ஆண்டவனிற்கு அடுக்காது என்று வழக்குத் தொடரும் அழவிற்கு நம்புவது உலகில் நடக்கிறது. அது போன்று மனவக்கிரங்கள் என்று நீங்கள் கூறுகின்ற விடயமாகத் தான் இருப்பினும் கூட அது எவ்வாறு வக்கிரம் என்றோ, அல்லது எதனால் அது வக்கிரம் என்று ஆகின்றது என்றோ, அல்லது அத்தகைய வக்கிரங்கள் என்ன சமூக நிலையில் என்னகாரணங்களால் எவ்வாறு சொல்லாடல் ஆகியன என்றோ அறியக்கூடாது என்றோ நினைக்கின்றீர்களா?

ஒரு விடயத்தை ஒத்துக்கொள்கின்றேன், பிரபல்யம் அடைவதற்காக மற்றையவர்கள் கதைக்கப்பயப்படுகின்ற விடயங்களைத் திரும்பத்திருப்பக் கூறுவதை ஒரு வெறும் உத்தியாய சிலர் இணையத்தளங்களில் பயன்படுத்துவது உண்மை தான். ஒரு விடயத்தை ஏன் கூறுகின்றோம் என்ற அடிப்படைக்காரணங்கள் இன்றி வெறுமனே சில வார்த்தைகளைத் திருப்பத்திருப்பக் கூறிவிட்டு அதை முற்போக்கு அல்லது புதுமை என்று கருதுவது நடக்கிறது தான். அவ்வாறு வெறும் வார்த்தைகளைக் கூறுவதால் மொழியின் அழகோ அடிப்படையோ உணரப்படமுடியாது. ஆனால், புதிதாக சொற்றொடர்களை உருவாக்கும்படி நான் கூறவில்லை, இருக்கின்ற சொற்றொடர்கள் ஏன் இருக்கின்றன, எவ்வாறு வந்தன என்று பார்;ப்பதில் கெடுதல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே கூறியதுபோன்று யாழ்போன்ற ஒரு பொதுவான களத்தில் ஒருவேளை அவை எழுதப்படமுடியாதன. ஆனால் எழுதவேபடமுடியாதன என்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

வக்கிரம் புனிதம் போன்ற சிந்தனைகளில் அல்லது அவற்றின் வரைவிலக்கணம் போன்றவற்றில் நானும் நீங்களும் உடன்பட்டுத் தான் ஆகவேண்டும் என்பதில்லை.

உங்கள் நாகரீகமான பண்பான விமர்சனத்திற்கு நன்றிகள்.உங்கள் கருத்திற்கு ஒரு பச்சையும் குத்தியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.தெரியாத பலவற்றை அறிந்து கொண்டேன்.இதில் பதிவிடும் அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பார்த்த ஒரு படம். சிவகுமார் பல பெண்களை ஏமாற்றி கெடுத்துக் கொண்டு திரிவார். அவரை ரஜினி அது கூடாது என எச்சரிப்பார். அதேபோல் சிவகுமாரும் ஒரு இக்கட்டில் மாட்டுப்பட்டு ரஜினியிடம் வர ரஜினி சொல்லுவார் " கடப்பாறையை முழுங்கிவிட்டு கசாயம் குடித்தால் " சரியாகுமா என்று. ( படம்: புவனா ஒரு ? யாய் இருக்கலாம்).

" வானத்தால போற சனியனை ஏணி வைச்சு இறக்கினது மாதிரி".

" உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை" என்பார்கள்.

" நக்கிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன"

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்"

"தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை"

" நாயை நடுக் கடலில விட்டாலும் நக்கித்தான் குடிக்கும்"

Edited by suvy

  • தொடங்கியவர்

அனைவரிற்கும் மிக்க நன்றி.

"எழுத்துச் சிரங்கு பிடித்தவன் பேனாவால் சொறிந்துகொண்டே இருப்பான்" எனற வாக்கியமும் அற்புதமாய் உள்ளது.

இரும்பைத் தின்று கசாயம் குடிப்பவர் என்பதில் கசாயம் குடித்தலைக் கடினமான செயலிற்கான உவனாமாக அதாவது இரும்பபை உண்பதைப் போன்ற ஒரு கடினமான செயலாக நினைத்திருந்தேன். ஆனால் சுவி இணைத்த "கடப்பாறையை விழுங்கி விட்டு கசாயம் குடித்தால் சரிப்படாது" என்பதில் கசாயம் முற்றாக வேறொரு கோணத்திலும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

நன்றி அனைவரிற்கும்.

ஒரு சிறிய (துருப் பிடித்த) இரும்பு பொருட்களால் கையில், காலில் காயம் ஏற்பட்டால், இரும்பில் உள்ள கறளால் விஷம் உடம்பில் ஏறாமல்/ ஏறிய விஷம் உடலைப் பாதிக்காமல் இருக்க வேர்க்கொம்பும், மரமஞ்சள் வேறு இலை குழை எல்லாம் போட்டு கசாயம் காய்ச்சிக் குடிக்கக் கொடுப்பார்கள். (அது பாட்டி/ மூலிகை வைத்தியம் என்று நினைக்கிறேன்)

சிறிய இரும்பிலுள்ள விசத்தை அகற்றத்தான் கைமருந்தாக பாவித்திருபார்கள், அதை சாக்காக வைத்து அலவாங்கை விழுங்கிட்டு கசாயத்தை குடிக்க நினைக்கிறது ரொம்ப ஓவர்... :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.