Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த "இலங்கையின் கொலைக்களம்"! சனல்4 திரைப்படம்

Featured Replies

வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 11:10.15 PM GMT ]

இன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது கானக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.

அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.

SriLanka;s Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A special investigation by Channel 4 into war crimes in Sri Lanka is screened at the UN.

... எந்த அமைப்பும், எந்த ஊடகமும் செய்ய முடியாத காரியத்தை ... C4 செய்து முடித்திருக்கிறது ... வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்கு!

  • கருத்துக்கள உறவுகள்

... எந்த அமைப்பும், எந்த ஊடகமும் செய்ய முடியாத காரியத்தை ... C4 செய்து முடித்திருக்கிறது ... வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்கு!

உண்மை தான் நெல்லை!

இது தமிழன் என்ற தனிப்பட்ட இனத்திற்குச் சனல் 4 செய்த சேவை மட்டுமல்ல,மனித குலத்திற்கே செய்யப்பட்ட சேவையாகும்!!!

  • தொடங்கியவர்

எந்த அமைப்பும், எந்த ஊடகமும் செய்ய முடியாத காரியத்தை ... C4 செய்து முடித்திருக்கிறது ... வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்கு!

உண்மை தான் நெல்லை!

இது தமிழன் என்ற தனிப்பட்ட இனத்திற்குச் சனல் 4 செய்த சேவை மட்டுமல்ல,மனித குலத்திற்கே செய்யப்பட்ட சேவையாகும்!!!

"தேமதுரத் தமிழோசை

உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

உண்மைதான் நண்பர்களே நான் வணங்கும் மதத்தின் புனித பைபிளில் கூறப்பட்டதுபோல் நொந்து நூலாகி ஆதரவற்று அனாதைகளான உள்ளங்களிற்கு நான் என்றும் துணையாயிருப்பேன்.சனல் 4 இன் வடிவில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கொலைகள சனல்4 திரைப்படம் தொடர்பாக சனல்4 வெளியிட்ட காணொளி

[\youtube]

Edited by சீலன்

DAMNING VIDEO FOOTAGE ON SRI LANKA SENDS SHOCK WAVES IN GENEVA

Channel 4 Killing Fields Premiered To UNHRC

By Janith Aranze

1-DAMNING.jpg

Director of Killing Fields, Callum Macrae

In a sensational twist following the damning UN Panel Report on Sri Lanka, the United Nations Human Rights Council (UNHRC) on Friday, June 3 was shown video footage compiled by Britain’s Channel 4 television network, as evidence of government troops executing Tamil prisoners during the final stages of Sri Lanka’s bloody civil war against the LTTE in 2009.

The one hour documentary titled Killing Fields was screened in Geneva to the UNHRC on Friday at 11:00 a.m. It showed disturbing footage captured on mobile phones of the extra-judicial executions of prisoners, the aftermath of targeted shelling of civilian camps and dead female LTTE fighters who, according to a description provided by Channel 4, states that the women appear to have been raped or sexually assaulted and abused before being murdered.

The film also showed horrific atrocities carried out by the LTTE who used civilians as human shields as government troops closed in on Tiger held territory.

The Geneva session was attended by a delegation of four government representatives from Sri Lanka; Minister of Plantations and Human Rights Mahinda Samarasinghe, Minister of Healthcare and Nutrition Nimal Siripala De Silva, Attorney General Mohan Peiris and Head of Sri Lanka’s mission at the UN in Geneva, Kshenuka Seneviratne.

Director of Killing Fields, Callum Macrae, told The Sunday Leader that government representatives immediately rubbished the film. Macrae said, “They criticised the film and continued to insist that the video footage shown was not authentic. They claimed that the Lessons Learnt and Reconciliation Committee (LLRC) are investigating these issues and that everything will be fine in the end.” He insisted however, the government has no basis to doubt the footage. “The film has been absolutely, vigorously authenticated, not just by UN experts but by independent forensic pathologists and video experts we hired to examine the footage. Both experts have concluded there is no reason to doubt the footage,” Macrae said.

Elaborating further, Macrae said that the whole meeting lasted approximately two hours, with him answering questions at the end. “The whole meeting went on for around 2 hours, the room was packed, people expressed real, genuine shock at what they had seen. It was one of the most fascinating meetings I’ve ever been a part of,” he stated, adding, “the government tried to fight a war without witnesses, however they did not account for satellite images and mobile phones.”

In light of this new evidence, Macrae stressed the need for the UN and the international community to act upon it. “The international community cannot turn its back on Sri Lanka, this evidence needs to be acted upon otherwise it leaves potential for future tragedies to occur,” he asserted.

Early last week, Seneviratne expressed her displeasure to the UNHRC at the way the UN High Commissioner for Human Rights, Navi Pillay has continually referred to the UN Panel’s report, which she claims is based on ‘unverified information.’

“The High Commissioner unbecomingly deems it appropriate to call for action on the recommendations of the said report, which are based on unverified information and also un-sourced, and would remain so for the next 20 years,” Seneviratne stated to the UN session in Geneva. She went onto claim that the policies of the Sri Lankan government are based exclusively on the welfare of its citizens. Seneviratne said, “The policies of the government are solely based on ensuring the welfare of its people and therefore is well aware of its responsibilities.”

http://www.thesundayleader.lk/2011/06/05/damning-video-footage-on-sri-lanka-sends-shock-waves-in-geneva/

Edited by Nellaiyan

போர்க்குற்ற விசாரணை அதிகரிக்கிறது அழுத்தம்சனல்-4 வீடியோவால் மீண்டும் சர்ச்சை

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத் தொடரில் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற ஆவணப்படம் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று புதிய அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளன. மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் இந்த அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைப் பற்றி பிரிட்டனின் "சனல்4" தொலைக்காட்சி ஒருமணி நேர ஆவணப்படத்தைத் தயாரித்திருந்தது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் காண்பிக்கப்பட்டது. பலநாடுகளின் தூதர்கள் அதனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கலங்கினர். அதில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளைத் தம்மால் பார்க்க முடியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.

ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருந்த பிரதி சட்டமா அதிபர் ஏ.எம்.டி.நவாஸ், அந்தக் காட்சிகள் பொய்யானவை என்று பின்னர் கலந்துரையாடலில் மறுத்தார். அந்த வீடியோ நம்பகத்தன்மையற்றது என்றார்.

ஆனால், கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், போர்க் குற்றங்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கக்கூடிய குற்றங்களில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என்பதை இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

"அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. வைத்தியசாலைகள் போன்ற இடங்கள் மீது மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு தடவை இரண்டு தடவைகள் அல்ல. 65 தடவைகள் நடத்தப்பட்டுள்ளன'' என்றார்.

ஆவணப்படத்தைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கா தூதர் எலீன் டொனாகோ, "போர்க் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒரு தடவை இது நிரூபித்துள்ளது'' என்றார்.

"ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆக்கபூர்வமான வகையில் பதிலளிக்குமாறு இலங்கை அரசிடம் நாம் வலியுறுத்து கிறோம். இலங்கை மக்களின் நல்லிணக்கத்துக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்குமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கொழும்பு சிந்திக்க வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம் பற்றி அரசு கூறிவருகின்ற போதும், வடக்கு மக்களின் சார்பில் பேசவல்லவர்களிடம் கேட்டால் அங்கு "எதுவுமே நடக்கவில்லை'' என்பதை அறிய முடியும் என்று காட்டமாகத் தெரிவித்தார் அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த பீற்றர் பிலின்டர்.

http://onlineuthayan.com/News_More.php?id=13527299105550396

இணைப்பிற்கு நன்றி,

வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த "இலங்கையின் கொலைக்களம்"! சனல்4 திரைப்படம்

முடிந்தால் தலைப்பை சரியாக மாற்றிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

... எந்த அமைப்பும், எந்த ஊடகமும் செய்ய முடியாத காரியத்தை ... C4 செய்து முடித்திருக்கிறது ... வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்கு!

உண்மை

தமிழன் வெட்கப்படவேண்டிய விடயம்.

சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது ஒன்றாகி உழைக்க முன்வரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கத்திலும் ஒற்றுமையின்றி தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டு நாறும் தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமைகளை சேனல்4 நிறுவனம் வெளியுலகிற்கு கொணர்ந்த சேவை பாரட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியது.

இங்கேயும்(தமிழ் நாட்டில்) சில சோற்றிலடித்த பிண்டங்கள், இனத்தலைவர் என வெட்கமில்லாமல் சொல்லிக் கொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

தமிழன் வெட்கப்படவேண்டிய விடயம்.

சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது ஒன்றாகி உழைக்க முன்வரணும்.

விசுகு அண்ணை,

தமிழன் இதில் வெட்கப்பட என்ன இருக்கு? Channel 4 வின் இன்றைய ஒளிக்காட்சிகளுக்கும் காரணம் தமிழர்களே..! அதன் கதாநாயகர்களும் தமிழர்களே.. மாண்டவர்களும் தமிழர்களே..!

ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தமிழினம் ஏதோ ஒரு வகையில் தடைகளை உடைக்கிறது... மகிழ்வோம்... மேலும் நற்பணிகள் செய்வோம்..! :rolleyes:

என்னை ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. பெருமையும் கூட.. :D

  • தொடங்கியவர்

முடிந்தால் தலைப்பை சரியாக மாற்றிவிடுங்கள்.

மன்னிக்கவும் பிழையான தலைப்பை தவறுதலாக ஒட்டியதற்கு. தலைப்பைத்திருத்தியவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை,

தமிழன் இதில் வெட்கப்பட என்ன இருக்கு? Channel 4 வின் இன்றைய ஒளிக்காட்சிகளுக்கும் காரணம் தமிழர்களே..! அதன் கதாநாயகர்களும் தமிழர்களே.. மாண்டவர்களும் தமிழர்களே..!

ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தமிழினம் ஏதோ ஒரு வகையில் தடைகளை உடைக்கிறது... மகிழ்வோம்... மேலும் நற்பணிகள் செய்வோம்..! :rolleyes:

என்னை ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. பெருமையும் கூட.. :D

உண்மைதான் இசை

ஆனாலும் அவர்களின் தொடர்ச்சியாக எமது தொழிற்பாடு இன்னும் அதிகரிக்கணும். அவர்களது தியாகங்களால் கிடைத்த இந்த சாட்சியங்களை வைத்து தமிழ் இனம் அடுத்த கட்டத்துக்கு நகரணும் அதற்கான செயற்பாடுகளில் எமது பங்களிப்பு ஒற்றுமையுடன் வீரியமுடன் தொடரணும் என்ற அங்கலாப்பே எனக்கு.

தங்கள் கருத்துடன் எந்த மாற்றுக்கருத்தம் இல்லை. தமிழினம் போரென்றாலும் அகிம்சை என்றாலும் அதை திறம்பட செய்து உலகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளது.

  • தொடங்கியவர்

தமிழினம் போரென்றாலும் அகிம்சை என்றாலும் அதை திறம்பட செய்து உலகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளது.

உண்மை நண்பர்களே. து மட்டுமன்றி இராஜதந்திர அணுகுமுறையிலும் ஓர் அத்தியாயத்தை இன்றைய தமிழ் சமூகம் எழுதிக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.ஆனாலும் நான் வாழும் நாட்டில் ஓர் சில படித்தவர் என்று சொல்லும் திறமை சாலிகள் இலங்கையின் தூதரகத்திற்குக்காட்டும் விசுவாசம் பேராத்திரத்தைக்கிளப்புகிறது.......இவர்களிருவரின் வாழ்க்கையிலிருந்து கூட திறமைசாலிகள் எப்படியிருக்க வேண்டும் என்று இவர்களுக்குப்புரியாதா...............

post-7765-0-93885600-1307281608_thumb.jp

post-7765-0-09885600-1307281631_thumb.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.