Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா, வடிவாத் தெரியுமா அது பறவைக் கிளி தான் என்று? :huh::blink::unsure:

ஏன் கேட்கிறேன் என்றால் கிளி சோறு, அப்பளம், வடை பாயாசம் என்று தமிழரின்ர full menu தான் விரும்பி சாப்பிடுது... :D

குட்டி.. அது தமிழ்க்கிளி போலத் தெரியுது..! :lol:

டிஸ்கி: நெடுக்கிட்ட குடுத்தால் சோறுபோடாமலே கொண்டுபோட்டிடுவார்..! :(:lol:

  • Replies 159
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இப்போது இருப்பவை விலையுயர்ந்த மீன்வகைகள் அல்ல.. இங்கு வந்த புதிதில் காலநிலை வித்தியாசங்களுக்கேற்ப மீந்தொட்டியை பராமரிப்பு செய்யும் முறை தெரிந்திருக்கவில்லை.. அதனால் பல உயிர்களைக் காவுகொள்ள நேர்ந்துவிட்டது..! :wub:

அப்போது வாழ்க்கை வெறுத்து வாள் வால் மீன் (? :lol: ) அதாவது swordtail fish வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். இது ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு. இப்போது அவற்றின் எத்தனாவது தலைமுறையோ தெரியாது. குட்டிமேல் குட்டிபோட்டு பெருகிவிட்டது.. :D அப்போதிருந்து புதிய மீன்களை வாங்குவதை நிறுத்தி விட்டேன்..! :wub:

:D :D :D :D :D மீன் குஞ்சு ...கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவற்றில் நாட்டமில்லை. காரணம் அவற்றை எடுத்து வளர்த்தால் ஒழுங்காக பராமரிக்கணும். பிள்ளைகள் போல் வளர்த்துவிட்டு ஏதாவது நடந்துவிட்டால் மனம் தாங்காது. அத்துடன் வருடத்தில் ஒரு மாதம் நாங்கள் வீட்டில் நிற்கமாட்டோம்.

ஆனால் எனது மக்கள் ஒரே நச்சரிப்புத்தான் நாய் வளர்ப்போம் பூனை வளர்ப்போம் மீன் வளர்ப்போம் என்று.

அதுதான் ஆத்தையுடன் சேர்த்து 5 வளர்க்கின்றேனே என்று அடக்கிருக்கின்றேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அடக்கல் சரிவரும் என்பதுதான் தெரியவில்லை .

titchp-albums-some-our-english-budgerigars-picture846-general-aviary-shot.jpg

எனக்கும் இப்படி கன கிளிகள் வளர்க்க விரும்பம்தான் ... இங்கு வேலையிடத்திலும் பன்னாட்டு பல கிளிகள் இருக்கின்றன, வீட்டுக்கு கொண்டு போகலாம்? மனுசி விடுகிறாள் இல்லை!!! ... இருக்கிறதையே வளர்க்கக் காணோம்? வேறு தேவையோ? என்கிறாள்! ... கேள்வி நியாயமாக பட்டது ... கிளியை வீடு கொண்டு போய் வளர்ப்பதை விட்டு விட்டேன்!

மாற்றீடாக .. அழகிய தோட்டம் .. அதில் பத்துக்கு மேற்பட்ட சிட்டுக்குருவிகள், இரண்டு சோடி றொபினுகள், இரு புளூ வின்ஞ், .. அவைகளுக்கு சாப்பாடு போட்டு விட்டு ... பார்த்துக் கொண்டு கணணிக்கு முன்னுக்கு இருக்க ஓர் ஆனந்தம்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி: நெடுக்கிட்ட குடுத்தால் சோறுபோடாமலே கொண்டுபோட்டிடுவார்..! :(:lol:

அட பாவமே

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கள் பாவம் அவற்றை ஒரு தொட்டியில் அடைத்து வைத்தால் அவர்களுடைய வாழ்க்கை என்பது ஒரு 3 அடி தொட்டிக்குள்ளேயே முடிகின்றது. ஆனாலும் அதை பார்த்து ஆனந்தமடடைய ஒரு மனித கூட்டமே இருக்கிறது..........

மீன்கள் அடைபட்டுவிட்ன அவர்களுக்கு 3அடி சுவரே உலகென்றாகிவிட்டது.

ஆனால் மனிதர்கள் நாங்கள் உலகை சுற்றி அறிவை பெறலாம்............. ஏன் மீன் தொடடியையே பாhத்துகொண்டு மீனை போலவே?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவற்றில் நாட்டமில்லை. காரணம் அவற்றை எடுத்து வளர்த்தால் ஒழுங்காக பராமரிக்கணும். பிள்ளைகள் போல் வளர்த்துவிட்டு ஏதாவது நடந்துவிட்டால் மனம் தாங்காது. அத்துடன் வருடத்தில் ஒரு மாதம் நாங்கள் வீட்டில் நிற்கமாட்டோம்.

ஆனால் எனது மக்கள் ஒரே நச்சரிப்புத்தான் நாய் வளர்ப்போம் பூனை வளர்ப்போம் மீன் வளர்ப்போம் என்று.

அதுதான் ஆத்தையுடன் சேர்த்து 5 வளர்க்கின்றேனே என்று அடக்கிருக்கின்றேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அடக்கல் சரிவரும் என்பதுதான் தெரியவில்லை .

நீங்கள் வீட்டில் நிற்காவிட்டால் என்ன விசுகு அதற்கு எல்லாம் சாப்பாடு போடுறமாதிரி மெசின் விற்காமலா இருக்கப்போகினம்

  • கருத்துக்கள உறவுகள்

மீன் தொட்டி பாக்கிறதுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அதைப் பற்றி இணைத்த அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்.நீங்கள் எல்லாம் எழுதும் போது எனக்கும் ஏதாச்சும் மீன் இல்லாட்டிக்கு குருவி என்று வாங்கி வளர்க்க வேணும் போல் இருக்கு..பார்ப்போம்... :)

நல்ல முயற்சி. நல்ல குருவியா பார்த்து வளருங்கள்.

  • தொடங்கியவர்

பனங்காய், உவை Tropical Fish அல்லவா? .. ph levelஐ தொடர்ந்து பேண வேண்டும் அல்லவா?

... என் நண்பரொருவரும் இப்படி நிறைய வைத்திருந்தார். தொட்டியினுள் கறுப்பாக படிய தொடங்கி விட்டது, உள்ளிருந்த கற்களும் ஊத்தைகளையும் அகற்ற முடியாமல் இருந்ததாம். மனுசன், ஓர் நாள் மீனுகளை சிறிய பாத்திரத்துக்குள் எடுத்து வைத்து விட்டு, தொட்டியையும், உள்ளிருந்த எல்லாவற்றையும் வடிவாக கழுவி விட்டு ... பல தடவை கழுவினாராம் பின் தண்ணீரில் ... மீண்டும் மீன்களை உள் விட்டு விட்டாராம் ... மறுநாள் பார்க்க எல்லாம் மிதந்ததாம் ... இறந்து ...என்னவென்றால் கற்களை வெண்மையாக்க நல்ல Bleach போட்டு கழுவினாராம்!! :lol:

எமக்கு ph 7.1 இல் பைப் தண்ணி வரும்.. அதையே peat மூலம் புவர் அடிச்சு 6.5 க்கு இறக்கிவிடுவேன்.. ஒவ்வொரு முறை தண்னிமாத்தும்போதும் இதையும் செய்வேன்.

கறுப்பு பாசி.. BBA algae எனப்படும் ஒருவகை பாசி.. இது பொஸ்பேட் அதிகரிப்பதாலும், கரியமிலவாயு 30ppm க்கு மேலும் கீழும் போய்வருவதாலும் ( கால்வாசிக்கு மேல் தண்ணி மாத்துதல்.. அதிக குமிழ் பம்புகள் உபயோகிப்பு) இது வளரத்தொடங்கும்.. இதுக்கு ஓர்காணிக் கார்பன் திரவத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம்.. ஒருக்கா வந்து விட்டால்.. அதுவும் தாவரங்கள் நிறைந்த தொட்டியில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம்... ஆனால் வழிகள் உண்டு..

  • தொடங்கியவர்

தமிழில் தேவதை மீன்.

மிச்சத்தை பார்க்க...... கீழே... கிளிக் பண்ணவும். :)

தமிழில் இதுக்கு வௌவால் மீன் எனச்சொல்லுவோம்..

ஏஞ்சல் மீனை தேவதை மீன் எண்டு மொழிபெயர்திருப்பது பிழை.. :lol:

  • தொடங்கியவர்

பனங்காய் எழுதியுள்ள சாதனங்கள் பாவித்தால் (6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள் / 2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்) பாசி (கறுப்பு) பிடியாது என நினைக்கிறேன்.

UV பில்டர் மட்டும் பாசியை கட்டுப்படுத்தும்.. பாசி வரக்காரணம் அமோனியா/ நைட்ரெட் தான் காரணம்.. இவை உருவாக காரணம்.. மீன்களின் கழிவுக்கேத்த பில்டர் பலம் போதாமை.. உக்கும் உணவு / இலைகள்..

பாசி படியாமல் இருக்க தொட்டியில் குறைந்தது இரண்டு சுத்திகரிப்புப் பட்டைகளாவது (filters) இருக்க வேண்டும்.

பாசிக்கும் ஸ்பொஞ்சும் சம்பந்தமில்லை..

எனது பொழுது போக்கு, badgi வளர்ப்பது!

சிட்னியின் காலநிலைக்கு நின்று பிடிக்கக் கூடிய பறவைகள்!

நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

titchp-albums-some-our-english-budgerigars-picture846-general-aviary-shot.jpg

எனக்கும் விருப்பம்... சிறிய வயதில் நூத்துகணகில் வைத்திருந்தேன்.. என்ன.. இவை எப்பொது சத்தம்போட்டுக்கொண்டிருக்கும்... இங்க வளர்த்தால் நொய்ஸ் போழூஷனில் இருத்து அபராதம் வரும்..

வீட்டில் 10 வருடமாக ஒரு கிளி உண்டு. விரும்பி வாங்கியதல்ல. வேறொருவர் வாங்கியது. நான் அதற்கும் சோறு போட வேண்டி வந்துள்ளது.

சோறு தவிர அப்பளம், பிஸ்கற், சொக்கிளேற், சிப்ஸ் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடும். பழங்களை அதிகமாக விரும்பாது.

கதைக்க பழக்கி பார்த்தனீங்களா?

  • தொடங்கியவர்

ஐயோடாப்பா மீன் தொட்டியை வீட்டிலை வைக்காதேங்கோ.......கெட்டசாமான்....நானும் ...போத்தில்லை மீன் வளர்த்து....பிறகு சின்னத்தொட்டியிலை வளர்த்து......ஆசையள் கூட....பெரிய தொட்டி வாங்கி....மீனுகள்.....காய்ஞ்ச மரக்குத்தியள்......பவுண்டேசன் கல்லுகள் எண்டு எல்லாத்தையும் காசுகுடுத்து வாங்கி தண்ணித்தொட்டிக்கை வைச்சு அழகு பாத்த எனக்கு.....உப்புமீன் தொட்டி வைச்சு அழகுபாக்க ஆசை வந்துது...அண்டு புடிச்ச நசல்...வேண்டாமடா ராசா வேண்டாம் :(

உப்பு தண்ணி டாங்க்.. பயங்கர கஸ்டம் என்ன அண்ணே.. நான் ரெண்டு முறை ட்ரை பண்ணி.. துன்பத்தில்தான் முடிந்தது.. தொடங்கினால் இதோடையே நேரம் போகும்.. மற்றும் உபகரணங்கள் ஒவ்வொரு கிழமையும் மெயிடெயின் பண்ணவேண்டும்.. மற்றும் உப்புத்தண்ணி தயாரிக்க பட்டபாடு.... துன்பமோ துன்பம்..

வாள் வால் மீன் (? :lol: )

:lol::lol:

மீன் தொட்டி பாக்கிறதுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அதைப் பற்றி இணைத்த அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்.நீங்கள் எல்லாம் எழுதும் போது எனக்கும் ஏதாச்சும் மீன் வாங்கி வளர்க்க வேணும் போல் இருக்கு..பார்ப்போம்... :)

http://www.fishforums.net/index.php?/forum/26-your-new-freshwater-tank/

  • கருத்துக்கள உறவுகள்

பாசிக்கும் ஸ்பொஞ்சும் சம்பந்தமில்லை..

இப்படித்தான் முன்பு நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.. :D ஒருமுறை பாசித்தொல்லை அதிகமாகி விட்டிருந்தது. ஒரு கிழமையில் முழுத்தொட்டியும் பச்சை நிறமாகிவிடும். கடைசியில் ஒரு வளர்ப்புமீன் கடையில் இருப்பவர்களை துருவித்துருவி விசாரித்து சில உண்மைகளை அறிந்துகொண்டேன். :wub: (அவர்கள் இலகுவில் விடயங்களை வெளியே விடமாட்டார்கள் :unsure: ).

சுத்திகரிப்புப்பட்டையை குறிப்பிட்ட அளவு காலத்துக்கு மாற்றாது விடும்போது அதில் ஒருவகை பக்டீரியா வளரும். இது பாசியை இரசாயன ரீதியாக உடைக்கும். அடிக்கடி பட்டையை மாற்றுவதால் இந்த பக்டீரியா வளர்வதற்குச் சந்தர்ப்பம் அற்றுப் போகிறது. :rolleyes:

அவர்கள் சொன்னபடி இப்போது பட்டையை சிலகாலம் விட்டுப் பிடிக்கிறேன். இதற்கென ஒரு சிறு அளவுமானியும் கடைகளில் கிடைக்கிறது. இது எப்போது பட்டையை மாற்றவேண்டும் என்று அண்ணளவாக அறியத்தரும்.

இந்த முறைகளை இப்போது பின்பற்றுகிறேன். பாசித்தொல்லை இல்லை..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு ஞாயிரும்.. 25% மாத்துவேன்... சனி இரவு புதிய தண்னி கெமிகள்களினால் சுத்திகரிக்கப்பட்டு.. அமசொன் ஆத்து மண்டல் களி கலந்து.. கீட்டர் போட்டு இரவு முழுக்க குமிழ் அடிக்க விடுவேன்.. நாயிரு காலை தண்ணியை டெஸ்ட் பண்ணி விட்டு மாத்திவிடுவேன்..

நானும் கிழமைக்கு ஒரு தடவை தண்ணி மாத்துறன், ஆனால் குஞ்சு வேகமாக வளர மாட்டாதாம், அதிகம் உணவு போட்டால் வேகமாக வளருமா? குஞ்சு வளர உங்கள் அனுபவங்கலை சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கிழமைக்கு ஒரு தடவை தண்ணி மாத்துறன், ஆனால் குஞ்சு வேகமாக வளர மாட்டாதாம், அதிகம் உணவு போட்டால் வேகமாக வளருமா? குஞ்சு வளர உங்கள் அனுபவங்கலை சொல்வீர்களா?

சில வலைத்தளங்களில் விளம்பரம் செய்கிறார்களே..! :lol:

சரி.. சரி.. விசயத்துக்கு வருவம்.. சாப்பாடு கனக்கப் போடக்கூடாது.. அமோனியா கூடிப்போய் மீன்கள் செத்துவிடும். :unsure: மற்றும்படி மீன்குஞ்சுகளை தினமும் பார்த்துக்கொண்டிருந்தால் வளர்வது போல் தெரியாது.. கிழமைக்கு ஒருநாள் பார்க்கவும்..! :lol:

சுத்திகரிப்புப்பட்டையை குறிப்பிட்ட அளவு காலத்துக்கு மாற்றாது விடும்போது அதில் ஒருவகை பக்டீரியா வளரும். இது பாசியை இரசாயன ரீதியாக உடைக்கும். அடிக்கடி பட்டையை மாற்றுவதால் இந்த பக்டீரியா வளர்வதற்குச் சந்தர்ப்பம் அற்றுப் போகிறது. :rolleyes:

இந்த கிருமிகள் நீரில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து அமோனியாவை அகற்ற உதவுகின்றன. முக்கியமாக பட்டையை கழுவும் பொழுது ஏற்கனவே மீன் தடாகத்தில் உள்ள நீராலேயே கழுவ வேண்டும். புதிய நீரால் கழுவினால் இந்தக் கிருமிகள் அழிந்துவிடும். uv மின்குமிழ் பொருத்தப்பட்ட சுத்திகரிப்புச் சாதனம் (filter) பாவித்தால் பாசி பிடியாது.

Edited by thappili

நானும் கிழமைக்கு ஒரு தடவை தண்ணி மாத்துறன், ஆனால் குஞ்சு வேகமாக வளர மாட்டாதாம், அதிகம் உணவு போட்டால் வேகமாக வளருமா? குஞ்சு வளர உங்கள் அனுபவங்கலை சொல்வீர்களா?

இடைக்கிடை brine shrimp (ஒருவகை இறால் இனம்) போன்ற உணவுகளை கொடுக்க வேண்டும். அத்துடன் lettuce இலையை சில நாட்கள் தண்ணீரில் ஊறவிட்டால் ஒருவகை வழுவழுப்பான பொருள் உருவாகும். அதனையும் குஞ்சு பொரித்தவுடன் சில காலத்திற்கு கொடுக்க வேண்டும். அவித்த முட்டை மஞ்சள் கருவும் கொடுப்பார்கள். அது நீரை நாறடித்து விடும்.

மேற்குறிப்பிட்டவைகள் தங்க மீன் குஞ்சுகளுக்கானது. மற்றைய இனத்தைப் பற்றி தெரியவில்லை.

நானும் கிழமைக்கு ஒரு தடவை தண்ணி மாத்துறன், ஆனால் குஞ்சு வேகமாக வளர மாட்டாதாம், அதிகம் உணவு போட்டால் வேகமாக வளருமா? குஞ்சு வளர உங்கள் அனுபவங்கலை சொல்வீர்களா?

:lol: :lol:

சில வலைத்தளங்களில் விளம்பரம் செய்கிறார்களே..! :lol:

சரி.. சரி.. விசயத்துக்கு வருவம்.. சாப்பாடு கனக்கப் போடக்கூடாது.. அமோனியா கூடிப்போய் மீன்கள் செத்துவிடும். :unsure: மற்றும்படி மீன்குஞ்சுகளை தினமும் பார்த்துக்கொண்டிருந்தால் வளர்வது போல் தெரியாது.. கிழமைக்கு ஒருநாள் பார்க்கவும்..! :lol:

சித்தனின் கேள்விக்கும் அதற்கு இசையின் (மீன்குஞ்சு) பதிலையும் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை...

:lol: :lol:

  • தொடங்கியவர்

நானும் கிழமைக்கு ஒரு தடவை தண்ணி மாத்துறன், ஆனால் குஞ்சு வேகமாக வளர மாட்டாதாம், அதிகம் உணவு போட்டால் வேகமாக வளருமா? குஞ்சு வளர உங்கள் அனுபவங்கலை சொல்வீர்களா?

உடனடியாக வளரவேண்டுமெண்டா.... தலையில் தட்டிக்கொடுஙள்.. குஞ்சு வளர்ந்துவிடும்... :lol::lol:

சீரியஸ்ஸா சொன்னா..... ட்ரொப்பிகல் மீனெண்டால் டெம்பரேச்சரை 28c க்கு உயர்த்திவிட்டு அதிக புரதம் உள்ள உணவு வகைகளை 3 தரம் குடுங்கோ.. கிழமைக்கு ரெண்டுதரம் தண்ணிமாத்துங்கோ... குஞ்சு பொரிச்சு முதல் 3மாசம் இது அவசியம்...

டிஸ்கஸ் (penang eruption) மீன் விருத்தி செய்த அனுபவங்கள் உண்டு... வெப்பத்தை 32c க்கு ஏத்திவிட்டு.. மாட்டு இதயம்,, விட்டமின் குளிசைகள்,,வாழைப்பழம்,,சிப்பிச்சதை,,கீரை எல்லாத்தையும் ஒண்டா அரைச்சு, நாளுக்கு நாலுமுறை கொடுத்து.. ஒவ்வொருநாளும் தண்ணிமாத்தவேண்டும்.. மூண்டு மாதத்தில் குஞ்சு 2"/3" வளரும்.. ஒரு குஞ்சு £30 பவுனுக்கு..... நூத்திசொச்சம் குஞ்சுகளை வித்தேன்...

Edited by Panangkai

  • தொடங்கியவர்

இப்படித்தான் முன்பு நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.. :D ஒருமுறை பாசித்தொல்லை அதிகமாகி விட்டிருந்தது. ஒரு கிழமையில் முழுத்தொட்டியும் பச்சை நிறமாகிவிடும். கடைசியில் ஒரு வளர்ப்புமீன் கடையில் இருப்பவர்களை துருவித்துருவி விசாரித்து சில உண்மைகளை அறிந்துகொண்டேன். :wub: (அவர்கள் இலகுவில் விடயங்களை வெளியே விடமாட்டார்கள் :unsure: ).

சுத்திகரிப்புப்பட்டையை குறிப்பிட்ட அளவு காலத்துக்கு மாற்றாது விடும்போது அதில் ஒருவகை பக்டீரியா வளரும். இது பாசியை இரசாயன ரீதியாக உடைக்கும். அடிக்கடி பட்டையை மாற்றுவதால் இந்த பக்டீரியா வளர்வதற்குச் சந்தர்ப்பம் அற்றுப் போகிறது. :rolleyes:

அவர்கள் சொன்னபடி இப்போது பட்டையை சிலகாலம் விட்டுப் பிடிக்கிறேன். இதற்கென ஒரு சிறு அளவுமானியும் கடைகளில் கிடைக்கிறது. இது எப்போது பட்டையை மாற்றவேண்டும் என்று அண்ணளவாக அறியத்தரும்.

இந்த முறைகளை இப்போது பின்பற்றுகிறேன். பாசித்தொல்லை இல்லை..! :D

நான் பட்டைகள் பாவிப்பதில்லை..... செரமிக் கற்களும் பில்டர் மீடியாக்களும்... தண்ணி பொலிஷ் பண்ண சாதரண பஞ்சும்தான் உபயோகிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழை, யாழுக்கு வருபர்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது..ஒன்று பலதும் தெரிந்து வைத்திருக்கிறாகள், மற்றது, பொழுது போக்குவதர்ர்கேனவும் கொஞ்சம் நேரமும், வசதியும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த மீன் வளர்ப்பு, குளத்துக்க குளிக்கையில் இன்னுமொராலை சேர்த்து கொண்டு சறத்தின்ர 4 மூலையையும் தண்ணிக்க அமத்தி வைத்திருந்து போட்டு டக்கெண்டு தூக்கினால் மீன்கள் வரும். அதை பார்த்துப்போட்டு திரும்ம குளத்தில விடுவது. - ஒரு நாள் இரண்டுநாள் கோர்லிக்ஸ் போத்தில்ல பிடித்து வைத்திருந்த அது 3 - 4 மனித்தியாத்தில செத்து போடும்.

பிறகு கொஞ்ச காலம் ப்ளக் மொரிஸ் என்கிற மீன், பிறகு 2 - 3 ரெட் மொரிஸ்..கடைசியில் 2 ,3 கோல்ட் பிஸ்..ஒருக்கா பைட்டர் குட்டி போட்டு..

இப்ப மகளுக்கு 2 மீன் வாங்கி கொடுப்பம் என்று நினைத்தனான், ஆனால் உங்கட கதைகள கேட்ட தலை சுத்துது..பார்ப்பம்.

நன்றி அனைவருக்கும் ..பயனுள்ளதாய் இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

மீன் தொட்டி அழகாக இருக்கிறது.அதற்குப் போட்ட இசை சோகமாக இருக்கிறது.பலருடைய அனுபவங்களை அறியக் கூடியதாக இருந்தது.பயனுள்ள பதிவு.

மற்றது, பொழுது போக்குவதர்ர்கேனவும் கொஞ்சம் நேரமும், வசதியும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

பரபரப்புமிக்க மேற்குலக வாழ்க்கையில், கொஞ்சம் ஒடி ஒளிந்து சூட்டைத் தனித்துக் கொள்ளவே இந்த மீன்தொட்டி.

இப்ப மகளுக்கு 2 மீன் வாங்கி கொடுப்பம் என்று நினைத்தனான், ஆனால் உங்கட கதைகள கேட்ட தலை சுத்துது..பார்ப்பம்.

சகல உபகரணங்களும் (மின்குமிழ், சுத்திகரிப்பு இயந்திரம்) பொருத்தப்பட்ட, பராமரிப்புக் குறைந்த சிறு மீன் தொட்டிகள் குறைந்த விலைக்கு (20 பவுன்கள்) கிடைக்கின்றன. மூன்று நான்கு தங்க மீன்கள் வளர்க்கலாம்.

மற்றும்படி சாரன் இல்லாமல் ஆற்றில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. குறைந்தது ஒரு உறுப்பாவது பாதிக்கப்படலாம். :D

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குளிர் தண்ணீர் மீன் வளர்ப்பு பற்றி சொல்வீர்களா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.