Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வையே எதிர்பார்க்கிறாம் சம்பந்தன் கூறுகிறார்: .

Featured Replies

Wednesday, 15 June 2011 05:11

. .ஐக்கிய இலங்கைக்குள் சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்ப்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வன்முறையற்ற நிலைமையானது அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் சம்பந்தனுடன் அண்மையில் உரையாடியுள்ளார். இது தொடர்பாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது;

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்துவது இது தான் முதல் தடவையல்ல. ஆனால், தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதியானதாக அமைய வேண்டுமென்பது பலரினது எதிர்பார்ப்பாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது. அல்லது ஆகக் குறைந்தது முடிவின் ஆரம்பமாகவாவது இருக்க வேண்டுமென்பது பலரின் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் ஆகும். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் 6 சுற்றுப்பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் அவை அதிகளவு முன்னேற்றகரம் இல்லாதவையாகவே உள்ளது. கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்பாக இரு தரப்புமே அதிகளவுக்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இந்த விடயத்தில்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு காண்பது வரலாற்றுபூர்வமான வாய்ப்பாக இருப்பதாக தமிழ் அரசியலின் மூத்த தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் கூறிவிட்டு கொடுப்புக்குள் சிரித்தார்.

தற்போது தோல்விகண்டுள்ள தமிழ்ப் புலிகளுடன் அவரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்புகளைக் கொண்டிருந்ததாக இலங்கையிலுள்ள பலர் விமர்சிக்கின்றனர். ஆனால், சிறுபான்மையினரின் அரசியலில் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக அவர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மையில் கடலுக்கு சமீபமாக இருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள அவரின் அலுவலக அறையில் ஜாக்கிரதையாகமப்பும் மந்தாரமுமான பிற்பகல் வேளையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். பேச்சுவார்த்தைகள் பற்றி வெளிப்படுத்துவதில் அதிகளவு கவனத்துடன் சம்பந்தன் இருந்தார். ஆனால், அவரும் அவரின் சகாக்களும் அரசாங்கத்திடம் எழுப்பிய கவலைகள் அக்கறைகள் தொடர்பாக பகிர்ந்துகொள்வதற்கு விருப்பமானவராகக் காணப்பட்டார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு என்பனவற்றில் அதிகளவு வேறுபாடுகள் இல்லாமல் இருப்பது ஒருவிடயமாக இருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரை சென்று பார்வையிட முடியாமல் இருப்பது மற்றொரு விடயமாகும். 810 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியாக சுமார் 800 புலி சந்தேக நபர்களும் ஆதரவாளர்களும் இருக்கின்றனர். அத்துடன், நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்பத்தினர் சென்று பார்வையிட முடியாமல் உள்ளது. "மகன்மார், கணவன்மார், சகோதரர்கள் யுத்தத்தின் இறுதியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதன் பின் பார்க்க முடியவில்லை அவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படவில்லை' என்று சம்பந்தன் கூறினார்.

பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு சந்தித்திருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விவகாரம் தொடர்பாக மட்டுமன்றி வட, கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவது மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவதாகத் தென்படுவது போன்ற விவகாரங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஐக்கிய இலங்கைக்குள் சாத்தியமானளவுக்கு அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கலை நாம் எதிர்பார்க்கின்றோம். வன்முறையற்ற நிலைமையானது எமக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது இதன் மூலம் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் பயனைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று சம்பந்தன் கூறினார்.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் காணிபிராந்தியங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தயங்குவது சச்சரவுக்கான விவகாரமாக உள்ளது. இந்தத் தடவையும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை இந்த விவகாரமானது தடம்புரளச் செய்யக்கூடியதாக உள்ளது.

"இந்தியாவில் காணி, பொலிஸ் அதிகாரங்களை யார் கொண்டுள்ளார்கள்?' என்று சம்பந்தன் கேட்டார்.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/5906-2011-06-14-23-42-51.html

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தமிழருக்கு ஒரு நல்ல தீர்வு தந்தாலும் சம்பந்தனும் இந்தியாவும் அதை வேண்டாம் என்று தட்டி விடுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையே முன்னெடுத்துச் செல்ல முடியாத இவரா தமிழினத்தை முன்னெடுத்துச் செல்லப் போகின்றார்!

தனி நாடு கேட்டால் தான், போலிஸ் அதிகாரத்திலாவது வந்து நிற்கும்!

ஆரம்பக் கோரிக்கையே அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்றால், பஞ்சாயத்துக்கு உரிய அதிகாரம் கூடக் கிடைக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கருணாநிதி நம்பர் 2..

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் இப்படிசொன்னால்,முன்பு புலிகள்தான் வைப்புறுத்தி செய்தார்கள் எனச்சொல்லி அவர்களில் பழியை போட்டு தப்பலாம்.

பல நாடுகள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிடுமாறு கேட்டபோது தேசியத்தலைவர் தனிஈழம் என்ற கொள்கையில் உறுதியுடன் ஒரே கொள்கையுடன் இருந்தவர்தான் எமது தேசியத்தலைவர் என்பதை குறிப்பிட்டு சொல்லமுடியும்.

களிமண் மூளை சம்பந்தனுக்கு இன்னமும் அதிகபட்ச தீர்வு என்ன என்று சொல்லத் தெரியவில்லை?

"குறைந்த பட்சம் முழுமையான காணி, போலிஸ் அதிகாரம் இல்லாத தீர்வை ஒருபோதும் தமிழர் ஏற்றுக்க கொள்ளமாட்டார்கள்" என்று சொல்ல வக்கில்லாத தேவாங்கு தான் சம்பந்தன். இந்தக் கோணங்கி அரசியல்வாதி திருகோணமலையில் பிறந்து, திருமலை வாழ் தமிழ் மக்களின் மானத்தை வேறு விற்றுவருகிறது.

தமிழர் பிரச்சினை பற்றி தெளிவில்லாத புறம்போக்கு தமிழ் அரசியல்வாதிகளால் ஒரு பயனும் இல்லை.

சம்பந்தரைக் குறை கூறுவதில் பயனில்லை. ஒரு அராஜகக் கும்பலிடையே வாழும் தமிழினம் தற்போதைக்கு எந்த சுதந்திர வார்த்தைகளையும் பயன்படுத்த முடியாது. புலிகள் கேட்டதையே இன்னும் பலபேர் கேட்கின்றார்கள். அவர்களுக்கு ஒருபோதும் அதைக் கொடுக்க மாட்டேன் எனக் கூறும் ராஜபக்ஷ எவர் தமிழருக்கு உரிய உரிமை பற்றிக் கதைத்தாலும் அந்தக் குருத்திற்கும் கருத்தின் உரிமையாளர்களுக்கும் பாதகமான முடிவுகளைத்தான் நிச்சயமாக எடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது புலிகளின் கோரிக்கையே அல்ல.1977 ஆம் ஆண்டு சுதந்திரமான பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஏகமனதாக ஜனநாயக ரீதியில் கேட்கப்பட்டது.அதனை தனி ஒரு சம்பந்தரால் மாற்ற முடியாது.மீண்டும் மக்களிடம் போய் குறைந்த பட்ச அதிகாரம் போதும் என்று ஆணை எடுத்து வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் இப்படிசொன்னால்,முன்பு புலிகள்தான் வைப்புறுத்தி செய்தார்கள் எனச்சொல்லி அவர்களில் பழியை போட்டு தப்பலாம்.

பல நாடுகள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிடுமாறு கேட்டபோது தேசியத்தலைவர் தனிஈழம் என்ற கொள்கையில் உறுதியுடன் ஒரே கொள்கையுடன் இருந்தவர்தான் எமது தேசியத்தலைவர் என்பதை குறிப்பிட்டு சொல்லமுடியும்.

தயவுசெய்து தேசிய தலைவரோடு இப்படியான மூன்றாம் தர அரசியல்வாதிகளை ஒப்பிட வேண்டாம். தேசிய தலைவர் கொண்ட கொள்கையில் என்றுமே உறுதியாக இருந்து அதற்காகவே தன்னை தன் குடும்பத்தை என்று எல்லாத்தையும் அர்ப்பணித்தவர். அவர் எங்கே சந்தடியில் சிந்து பாடும் சம்பந்தன் எங்கே..??!

சனல் 4 சொன்னது போல.. யுத்தம் சம பல மற்றதாக இருந்ததால் தான் தலைவர் பெரிய இராணுவப் பின்னடைவை காண நேரிட்டது. சர்வ பலம் மிக்க நாடுகளின் உதவியோடு யுத்தம் அவர்களாலேயே திட்டமிட்டு நடந்தப்பட்டதால் ஒரு போராளி அமைப்புக்கு அதனை இராணுவ தொழில் நுட்ப ரீதியில் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் ஏற்பட்ட தோல்வியே எமது பின்னடைவுகள்..! அவை பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றமை.. தலைவரின் காரணமல்ல.. சர்வதேசத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்கு உதவும் கொள்கையின் நிமித்தமாகும். ஐநா தொடங்கி இந்தியா வரை எமது இன அழிவிற்கு உதவி நிற்கின்றன என்பது வேதனையான உண்மை.

சம்பந்தன் போன்றவர்கள்.. எதையாவது பெற்றுக் கொடுத்தாலே அது பெரிய விசயம். நிச்சயமாக இவர்களால் எதுவும் முடியப் போறதில்லை. சம்பந்தன் போன்றவர்கள் புலம்பெயர் சமூக மக்களிடம் இருந்து தூர விலகிச் செல்வதாகவே தெரிகிறது. இது அவர்களுக்கும் மொத்த இனத்திற்கும் ஆபத்தானது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.