Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனால் முடியாததை உங்களால் செய்ய முடியுமா?சிங்களத்தின் மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனால் முடியாததை உங்களால் செய்ய முடியுமா?சிங்களத்தின் மிரட்டல்

Sunday, July 10, 2011, 18:15கட்டுரைகள்

“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களைத்திரட்டி போராடுவோம் என சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்திற்கு கிடைத்த சிங்கள அரசின் பதிலாகவே இதனைப்பார்க்க முடியும். என்றாலும் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க மஹிந்த ஒரு நாடகத்தினை மேடை ஏற்றியே ஆகவேண்டும்.

அதில் ஒன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு என சிறிலங்கா அரசினால் தெரிவிக்கப்பட்ட ‘பாராளுமன்றத் தெரிவுக் குழு’ ஆகும் இந்த விடயத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசு பட்டபாடு பெரும் பாடாகிப் போனது. கடைசியில் காரியம் கைகூடாத நிலையில் குறிப்பிட்ட விடயத்தைப் சபையில் சமாப்பிக்க முடியாது போய் விட்டது. எப்போது மீண்டும் சமர்ப்பிப்பது என்று திகதி கூறாமலேயே சிறிலங்கா அரசு விடயத்தைச் சமாளித்து விட்டது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இது ஒரு பாரிய ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பது தொடர்பில் ஆளுந்தரப்பிலிருந்து எழுந்த பாரிய எதிர்ப்பலையே இது ஒத்தி வைக்கப்பட்டமைக்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. சிரேஷ்ட அமைச்சரான திஸ்ஸ விதாரண கூட அரசின் இந்தத் தீர்மானம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கூடிய சர்வகட்சிக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் என்ற வகையில் அவர் தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினாலும் எதுவுமே ஆகப் போவதில்லை என்ற அவரின் நம்பிக்கையின் வெளிப்பாடே அந்தக் கருத்தாகும்.

அண்மையில் சிறிலங்கா அரசு தலைவரின் அலரி மாளிகையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின போது கூட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமது ஆதரவை முழுமையாகத் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான சிரேஷ்ட அமைச்சர்கள் இந்த விடயத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அவை தோல்வியடைந்தமை தொடர்பிலும் அவர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான ஆணைக் குழுக்களையும் தெரிவுக் குழுக்களையும் நியமித்துக் காலத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை என்றும் அவ்வாறு செயற்பட்டால் சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு தமிழர்களுக்கு அதிகபட்சத் தீர்வினை வழங்கும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படும் எனவும் அவர்கள் அங்கு கருத்துத் தெரிவித்தனர் எனவும் தகவல் கசிந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தி இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீhத்து வைப்பதே சிறந்தது என்ற கருத்து அங்கு மேலோங்கிக் காணப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கருத்துகளை ஒட்டு மொத்தத்தில் பார்க்கப் போனால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உண்மையான விருப்பம் இல்லாத நிலையில் சர்வதேசத்துக்குப் பயந்தும் ஒன்றுபட்ட தேசத்துக்கு ஆபத்து வருமோ என்ற என்ற அச்சம் காரணமாகவுமே அவர்கள் இப்படித் தெரிவித்துள்ளார்கள் என்றும் கொள்ள முடியும்.

ஆனால் இந்த விடயத்தில் ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க அங்கு வீறாப்புடன் நடந்து கொண்டதாகவும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் தேவை இல்லையெனக் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் சம்பிக்கவைப் பொறுத்த வரையில் அவர் பௌத்த இனவாதி மட்டுமல்ல.. தமிழனத்தின் சிங்களத் துரோகியுமாவார் சிறிலங்கா அரசை ஒரு சர்வதேச சண்டியனாகக் காட்டிக் கொள்ளவே அவர் என்றும் முயற்சிப்பவர். இவரின் அண்மைக்கால இனவாதக் கருத்துகள் விமல் வீரவன்சவை தண்ணி கேட்கும் அளவுக்கு முந்தி நிற்கின்றன.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் தமிழ் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்புப் பிரசாரங்களை ஆரம்பிப்போம். அரசும் தோற்கடிக்கப்படும்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க வழங்கிய பதில் அவரது தமிழின விரோதப் போக்கை அப்படியே காட்டியுள்ளது.

“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் ஆயுதங்கள் சிங்களவர்களை ஒருபோதும் மண்டியிடச் செய்யவும் இல்லை. அதே போன்று தமிழினத்திடம் சிங்கள இனம் மண்டியிட வேண்டிய அவசியமும் இல்லை. என்ற உண்மை அப்படியே இருக்க அமைச்சர் சம்பிக்க இவ்வாறு தெரிவித்திருப்பதானது தென்னிலங்கைச் சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி மீண்டும் அவர்களை தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காகவே என்றுதான் கூற வேண்டும்.

இவ்வாறான இனவாத முகமுடைய பல கட்சிகளை உள்ளடக்கியவர்களைக் கொண்ட இன்றைய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிச்சயமாகத் தீர்வினை வழங்கமாட்டாது என்பது இதன் மூலம் தெளிவடைகிறது. அதேவேளை சிறிலங்கா அரசுக்கும் தான் தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறானதொரு நிலையே தேவை என்பதும் யதார்த்தமானது.

இவைகள் ஒரு புறமிருக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவைத் தாம் நிராகரிப்பதாகவும் அதில் பங்கு கொள்ளப் போவதில்லையென்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.வி. போன்றன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இதுவே.

அரசில் அங்கம் வகிக்கும் இன்னொரு சிறுபான்மை இனக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தனது நிலைப்பாட்டினை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அக்கட்சி இடம்பெறமாட்டாது என அறிய வருகிறது.

ஆக மொத்தத்தில், பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டால் இடம்பெறப்போகும் கட்சிகள் ஆளுந்தரப்பைச் சேர்ந்த கட்சிகள் மட்டும்தான் என்ற நிலையே இன்று உள்ளது. சம்பிக்கவின் ஹெல உறுமய, விமலின் தேசிய சுதந்திர முன்னணி, டக்ளஸின் ஈ.பி.டி.பி, றிசாத்தின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகளின் பங்களிப்புடன் பாராளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டால் நல்லதொரு தெருக் கூத்தாடிகளின் நாடகத்தை நம்மால் பார்க்க முடியும். தவிரவும் பிரபாகரனால் செய்ய முடியாததை இனிமேல் யாராலும் செய்ய முடியாது என்ற மமதையில் உள்ள சிங்களத்திடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது மாறாக அனைத்துலகம் அல்லது மூன்றாவது சக்தி ஒன்றின் தலையீடே பிரச்சினையை தீர்க்க ஏதுவாக அமையும்.

ஈழ நாதத்துக்காக கொழும்பிலிருந்து சித்தன்….

http://www.tamilthai.com/?p=21449

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்”

அப்படியாயின் புலிகளுடன் போரிட 21 நாடுகளை ஏன் அழைத்தீர்கள், தனியே நின்று போராடி புலிகளை தோற்க்கடித்திருக்கலாமே அது உங்களால் ஒருபோதும் முடியாது முடிந்திருந்தால் 30 வருடங்கள் எதற்கு ?

Edited by தமிழ் அரசு

மொக்கு சிங்களவனே , நீ தமிழன் நிலத்தை பிடிப்பாய், பிடித்தால் விட்டுவிட்டுப் போகமாட்டாய் என்று

புலிகளுக்குத் தெரியுமடா , எங்களுக்கு இப்போது தேவை ஐ. நா அங்கீகாரம், அதற்காகத்தான் இந்த தியாகம் ,

இது தற்காலிகமானது , முதலில் ஐ . நா தனது பணியை தொடங்கட்டும் , அதன்பிறகு நில மீட்பு வேள்வி

தொடங்கும்போது தெரியும் உன்னோட வண்டவாளம் . பொறுத்திரு மவனே !

  • கருத்துக்கள உறவுகள்

“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்”

முட்டாள்

பிரபாகரன் எல்லாவற்றையும் வைத்திருந்தும் ஏன் பின்னோக்கி போனார் என்பதை அறியாது உளராதே.

அது ஒரு வீரனுக்கு மட்டுமே உரித்தானது. ஏன் பின்னால் போறான் என்று தெரியாமல் வீரம் காட்டிய நீ புரிந்து கொள்ளமாட்டாய்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மற்றும் அனைவருக்கும்,

முள்ளிவாய்க்காலில் நடந்துமுடிந்தது தமிழ்த்தேசியத்தின் ராணுவ ரீதியான முனைப்பின் தோல்விதான் என்பதை நாம் முதலில் ஏற்றுகொள்ளுதல் வேண்டும். நாம் வேன்டுமென்றே பின்வாங்கினோம் என்பதைவிட எமக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. பின்வாங்குதல் என்பது எமது வளங்களைப் பாதுகாத்துக்கொண்டு இடங்களை விட்டகலுவது. ஆனால் முள்ளிவாய்க்காலில் சேமித்துவைப்பதற்கென்று எதுவுமே எம்மிடம் இருக்கவில்லை. கடைசியாகவிருந்த ஒற்றைப் போராளியைக் கூடச் சிங்களவன் தலையில்த்தான் சுட்டுக் கொன்றான்.

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தவை எல்லாமே எம்மைப்பொறுத்தவரை முழுமையான இழப்புகள்தான். அதனால் எமக்கு ஏதும் நண்மை என்றால் சிங்களவனின் கொடூரத்தின் விஸ்வரூபம் உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது.

ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்தில் தலைவர் உற்பட எவருமே இப்படியானதொரு முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பொதுமக்களின் ஒட்டுமொத்தப் படுகொலையின் மூலம்தான் எமக்கொரு விடிவு பிறக்க வேண்டுமன்றால் எமது போராட்டத்தில் அர்த்தமில்லை.

முள்ளிவாய்க்கால் எமது போராட்டத்தின் இறுதியல்ல, அது சோர்வடைந்த எமது தாயக விடுதலிப் போராட்டத்தில் பயணத்தில் ஒரு மயில்க்கல், ஒரு தரிப்பிடம், அவ்வளவுதான். இங்கிருந்து மீண்டும் எழுந்திருப்போம். முள்ளிவாய்காலின் ரணங்களைக் காவிச்சென்று எமது தாயக தேசத்தை மீட்டெடுப்போம். அதற்கு எம்மாலனதைச் செய்வோம்.

சிங்களவன் வீரம் பேசினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. தனது யுத்தத்தில் வென்றவன் அப்படித்தான் பேசுவான். எம்மைப்பொறுத்தவரை எமது யுத்தம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் நன்றி.

உண்ணாவிரதமிருந்த அயர்லாந்து எம்.பீ பொபி சான்ஸ் சொன்னான் "எங்கள் அடுத்த பரம்பரையின் முகத்தில் தோன்றும் சிரிப்புத்தான் எதிரியின் தோல்வி" என்று .அதுதான் இன்று எமக்கு தேவை.பழங்கதை கதைத்து பெருமை பேசுவதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதோட................................... வந்திட்டார் பழங்கதை தேவை இல்லை என்று....................................................................................................... தலைவரின் ஒவ்வொரு நகர்வுகளுமே எமக்கு ஆயிரம் செய்திகள் சொல்லும்......சொல்லியிருக்கின்றார்............. விடுதலைப்போரட்டத்தின் பாதை கடினமானதே அதை பழங்கதை புதுக்கதை என்று உணர்வாளர்களால் பிரித்து பார்க்கமுடியாது ஏன் என்றால் அங்கு பலப்பல அளவிட முடியாத தியாகங்களும் இராணுவ, ராஜதந்திர நகர்வுகளும் மக்களுக்கான பணிகள் என்று பல கட்டமைப்புகளை கொண்டது இன்றும் கூட சிறிலங்கா அரசு மிச்சம் இல்லாமல் எமது விழுமியங்களை அழிக்கின்றதே என்ன காரணம் என்று கூட புரியவில்லையா???!!

அர்ஜன் உங்களுக்கு முதலும் ஒருமுறை சொல்லியிருந்தேன் அந்த இணைப்பினை பின்பு இணைக்கின்றேன்.......... நீங்கள் சொல்லும் நல்ல சிறிலங்கா இங்க இல்ல எமக்கு வேண்டும் சுதந்திரம்!!! முடிந்தால் அதற்க்கு ஒத்துழையுங்க அதுவே உங்களுக்கும் நல்லது! நாம் ஒரு நாள் தாயகத்தில் நிமிர்வோம்!! அன்று நீங்கள்????!!!

Edited by tigertel

  • கருத்துக்கள உறவுகள்

கோழைகளின் சரித்திரம் தொடருகின்றது!

துட்டகைமுனு--------> எல்லாளன்

சம்பிக்க+இந்தியா+சர்வதேசம்(?) --------> பிரபாகரன்

இதில் நீங்கள் பெருமைப் பட என்ன இருக்கின்றது?

பிரபாகரனால் எது முடியவில்லை? அன்று இலங்கையின் தலை நகரில் நடந்த அகிம்சை போராட்டம் பற்றி, உலகுக்கு எதுவும் தெரியாது ,அவர்களின் மண்டை உடைக்கப்பட்டது தெரியாது! ஆனால் இன்று அளவெட்டியில் ஒரு சிறிய கூட்டத்தை ராணுவம் குழப்பினால் அமெரிக்காவரை செய்தி போகுது ...விளக்கம் கேட்கப்படுகிறது! காசு காசு எண்டு அலையும் ஐரோப்பியனே...தனது நாட்டின் இறக்குமதியில் சிறிதளவேணும் பயன் இருந்தாலும் ,அது வேண்டாமென்று இலங்கைக்கான ..வரி சலுகைகளை நிறுத்த முயற்ச்சிக்கிறது! மகிந்த இலண்டன் போய் நிம்மதியாய் திரும்பி வரமுடியாமல் இருக்கிறது...கோத்தபாயா அமெரிக்கா போக யோசிக்கவேண்டி இருக்கிறது!... பிரபாகரன் இன்றைக்கு இல்லையென்று சொல்லும் ..அறிவுஜீவிகளே ... பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் நீங்கள் பயந்ததை விட இப்போ ஆயிரம் மடங்கு உங்களுக்கு உதறல் எடுக்கிறதே !... இதுதான் அவர் விரும்பிய ..சிங்களதேசத்திற்க்கு தமிழன் கொடுக்கவேண்டிய சர்வதேச அழுத்தம்!இதுதான் தமிழனுக்கு பிரபாகரன் பெற்றுத்தந்த வெற்றி!

கூட்டமைப்பினர் சொன்னதற்கே இந்தக் கேள்வியென்றால், சாதரணகுடிமக்களின் வாழ்க்கையினைக் கருத்திலெடுக்காத கருத்து இது. சும்மா சொல்லக் கூடாது. சிங்களம் உள்நாட்டில் நன்றாகத்தான் விளையாடுகிறது. ஆனாலும் சர்வதேசத்தையும் இவ்வாறு எதிர்ப்பதற்கு அதற்குச் சரியான துணை இருப்பதால்தான் இப்படி முடிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு ஏதாவது பேசுவதும், ஏதாவது எழுதவேண்டும் என்பதற்காக எழுதுவதும், எழுதலாம் பேசலாம் ஆனால் எல்லாவற்றுக்கும் வழிவகுத்து கொடுத்தவர் தலைவர் பிரபாகரன்தான், இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது உலகயே போர்க்களத்திலும் சரி அரசியலிலும் சரி பல புதுமைகளை நிகழ்த்திக்காட்டியவர் அவரைபற்றி எழுதுவதர்ர்க்கு என்னிடம் பெரிதான அறிவாற்றல் கிடையாது, ஒன்றுமட்டும் உறுதி தைவருக்கு நிகராக யாரும் வரவும் இல்லை வரப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.முள்ளிவாய்க்காலில் மௌனித்தது. போராட்டத்தின் ஒரு வடிவம் மட்டுமே.அது மௌனிக்கும் போது போரட்டத்திற்கான அடுத்த வழியைத் திறந்து விட்டே சென்றிருக்கிறது.அதன் விளைவுதான் சர்வதேசத்தின் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் ஆகும்.தமிழர் பிரச்சனை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது.போராட்டத்திற்குள் ஐநா இழுத்து விடப்பட்டிருக்கிறது.சரியான உறுதியான பதில் சொல்லாமல் ஐநா நழுவ முடியாது.உள்ளுக்குள் இருக்கும் உதறல்களின் விளைவே வெளியில் வீராப்புப் பேசி சிங்கள மக்களை உசுப்பி விடும் மேற்படி பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பிக்கவுக்கு துணிவிருந்தால் சனல்4 காட்சிக்கு பதில் கூறட்டும் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் நன்றி.

உண்ணாவிரதமிருந்த அயர்லாந்து எம்.பீ பொபி சான்ஸ் சொன்னான் "எங்கள் அடுத்த பரம்பரையின் முகத்தில் தோன்றும் சிரிப்புத்தான் எதிரியின் தோல்வி" என்று .அதுதான் இன்று எமக்கு தேவை.பழங்கதை கதைத்து பெருமை பேசுவதல்ல.

அர்ஜீன் அண்ணா பழங்கதை கதைத்து எப்படி பெருமை பேச வேண்டாமோ அதே மாதிரி மற்ற இயக்கங்கள் அழிந்த கதையையும் பேசாமல் இருந்தால் அதுவும் எதிர்காலத்திற்கு நல்லது

எமது விடுதலை வேள்விக்கு காரணமே சம்பிக்க போன்ற இன அழிப்பாளர்களே. இவர்களால் தான் எமக்கு அரசியல் தீர்வும் கிட்டும்.

( இணைப்பில் இருந்து )

புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

ஒன்று.. புலிகள் போராடியிருக்காவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமுமே அழிக்கப்பட்டிருக்கும்..

இரண்டு..புலம் பெயர் தமிழன் என்ற பலமிக்க சக்தி உலகில் பிறந்திருக்காது..

இந்த இரண்டு விடயங்களையும் மனதில் ஏந்தி நடவுங்கள்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=85484

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.