Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்

24 ஜூலை 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

24.07.2011

பத்திரிகைச் செய்தி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசு போர்;க்குற்றங்களை இழைத்திருக்கிறது எனவும், இது தொடர்பாக நீதியான விசாரணை தேவை எனவும் வற்புறுத்தி வரும் மிக முக்கியமான காலகட்டத்திலேயே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. சர்வதேச சமூகம் கொடுத்து வரும் இந்நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக அரசு உள்ளூராட்சித் தேர்தல்களில் வென்று தமிழ் மக்கள் தம் பக்கம் என்று காட்டுவதற்காகப் பெரும் பாடுபட்டது.

அரச இயந்திரம் முழுவதையும் களமிறக்கி உள்ளூராட்சித் தேர்தலை ஒரு யுத்தம் போல எதிர் கொண்டது. இலவசங்களை அள்ளி வீசியது. வேலைவாய்ப்பு;களை வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்தது. வேட்பாளர்களை என்ன விலை கொடுத்தேனும் வாங்க முயற்சித்தது. அவர்களை அச்சுறுத்தித் தேர்தலிருந்து விலக வைக்க முயற்சித்தது. உளவியல் ரீதியான பீதியை ஏற்படுத்திப் பொது மக்களை வாக்களிப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது. வாக்காளர்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றித் தாக்குதலும் நடாத்தியது. ஆனால் ஆசை வார்த்தைகளையும், அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது; தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பெரு வெற்றி பெற செய்துள்ளனர். அரசையும் அதன் தரப்பினரையும் படுதோல்வி அடைய செய்துள்ளனர்.

வடக்கு கிழக்கு இணைந்த தமது தாயக்கத்தில் சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சுயாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. எந்த சலுகைகளுக்காவும் அச்சுறுத்தல்களுக்காகவும் தங்கள் அரசியல் அபிலாசையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற செய்ததன் மூலம் மீண்டும் ஒரு முறை பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ஜனநாயக பூர்வமான தீர்வுக்கு தலை வணங்கி, இனி மேலும் காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வினை முன் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் மக்கள,; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ள அரசின் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை என்பதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் இந்த தீர்புக்கு மதிப்பளித்து இலங்கை அரசு சர்வதேச விசாரணையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது. தமிழ் மக்கள் தமது தாயகத்தில் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில்இலங்கை அரசைச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வற்புறுத்த வேணிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

எமது வேண்டுகோளை ஏற்றுப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் வாக்குச் சாவடிகளுக்குச் சாரி சாரியாகச் சென்று தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை ஒரு தேசியக் கடமையாக நிறைவேற்றி வைத்த தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பு தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

சுரேஸ்.க.பிறேமச்சந்திரன் பா.உ

இணைச் செயலர்,

உத்தியோக பூர்வ பேச்சாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயகப்போரில் கூட்டமைப்பின் வெற்றியை நிலைநாட்டிய வடக்கு-கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களுக்கும் அதன் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

அண்மையில் நடைபெற்ற உள்Sராட்சித் தேர்தல்களில் வடபகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மன்னார் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் அதன் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் தனது நன்றிகளை ஊடகங்களின் வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அவரது ஊடக அறிக்கையில்,

அரசாங்கக் கட்சியினரும் அவர்களுடன் இணைந்து போட்டியிட்ட ஈபிடிபியினரும் தங்களால் முடிந்தளவு சாம பேத தான தண்டவழிமுறைகளைப் பயன்படுத்தி இத்தேதர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முடிவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் அடித்துத் துன்புறுத்தியதுடன், உயி;ரச்சத்துறுத்தல் விடுத்து, கீழ்த்தரமான யுக்திகளைக் கையாண்டு, மக்கள் ஏதோ அரிசிக்கும் பருப்புக்கும் புடவைக்கும், வேட்டிக்கும் ஏங்குபவர்கள் என்று நினைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவற்றினை வழங்கி வாக்கு வேட்டையாடியபோதும், அரசாங்கத்தின் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தியபோதிலும் எமது மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களது இருப்பையும் அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்தவற்காகவும் உரிமையை வென்றெடுப்பதற்காகவுமான தங்களது தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்று மிகவும் ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் விவேகத்தையும் தீர்க்கமான முடிவையும் கொள்கைப்பற்றையும் மனமாரப் பாராட்டி நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இறுதி நிமிடம்வரை அராஜகங்களை மேற்கொண்டபோதிலும், எம்மால் பிரச்சாரத்தை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் போனபோதும் எமது மக்கள் மிகத் தெளிவாக எமது நிலையைப் புரிந்துகொண்டு இவை அனைத்திற்கும் சரியான அரசியல் தீர்வே முடிவுகட்டும் என்றுணர்ந்து வாக்களித்துள்ளனர். எனவே எமது மக்களின் தீர்ப்பை அரசாங்கம் புரிந்துகொண்டு எமதுணர்வுகளை விளங்கிக்கொண்டு விரைவான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு முயற்சிக்கும் என்று நம்புகின்றேன்.

சர்வதேச சமூகம் வடக்கு-கிழக்கில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் மிகவும் அவதானத்துடன் கண்காணித்து வந்துள்ளது. எனவே எமது மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக அதன் கண்களைத் திறந்திருக்கும் என்றும் நான் நம்புகின்றேன். இதன் அடிப்படையில் சர்வதேச சமூகம் தனது பங்களிப்பைத் தங்கு தடையின்றிச் செய்யும் என்று எமது மக்களைப் போன்றே நானும் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், புலம்பெயர் உறவுகளும் வடக்கு-கிழக்கின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களும் தலைவர்களும் ஒய்வின்றி உறக்கமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு அயராது உழைத்துள்ளனர். அவர்களுக்கும்இவை அனைத்திற்கும் மேலாக ஊடகத்துறையினருக்கும் மன்னார் நகரசபையின் உறுப்பினர் என்ற வகையில் மன்னார் மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64566/language/ta-IN/article.aspx

தமிழர்களின் இந்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் முக்கியதுவம் கொடுத்துள்ளது

http://www.thehindu.com/news/international/article2290003.ece

http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=33843

http://www.indianexpress.com/news/proltte-tna-sweeps-local-polls-in-northern-lanka/821562/

http://english.aljazeera.net/news/asia/2011/07/20117246364782608.html

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: எவ்வளவுதான் உரத்துச் சொன்னாலும் அந்த ஒலி இந்தியாவைத் தாண்டி வெளியே கேட்கப்போவதில்லையே?? எமது குரலை சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்தும் நசித்துக்கொண்டே வருகிறது. ஆனால் இம்முறை என்ன செய்யப்போகிறதோ, யாரறிவார். ஏனென்றால் தான் விளையாடும் கூட்டமைப்பல்லவா மகிந்தனை வடக்கில் வீழ்ழ்த்தியிருக்கிறது?? ஆகவே இந்தியா தர்மசங்கடமான நிலையில் !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரும், தமிழரும் இலங்கைத்தீவில் இரு துருவங்களாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது தேர்தல் முடிவுகள்..! :unsure:

குறைந்தபட்சம் மக்கள் டக்ளசின் கட்சிக்கு வாக்களித்து இணக்க அரசியலுக்கு வருவார்கள் என நினைத்திருந்தேன்..! :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழ்த்தேசியத்துக்கு முழுதான வெற்றி, தெற்கில் சிங்களப் பேரினவாதத்திற்கு முழுதான வெற்றி. நிச்சயமாக நாடு இருதுருவங்களாகத்தான் இருக்கிறது. ஒரு நாடு இரு தேசிய இனங்களா அல்லது இரு நாடுகள் இருவேறு தேசிய இனங்களா என்பதை சர்வதேசம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ரகுநாதன்..

சர்வதேசம் அங்கிகரிப்பது இருக்கட்டும்..! தாயகத்து அரசியலை தாயக மக்களே தீர்மானிப்பார்கள்.. இதில் புலம்பெயர் தமிழர் சொல்வதற்கு எதுவுமில்லை என்று ஒரு சாரார் முன்னர் எமக்கெல்லாம் செவிட்டில் அறைந்தது மாதிரி சொல்லியிருந்தார்கள்..! :wub:

முடிவுகளைப் பார்த்தால் நாங்கள் எல்லாரும் சொன்னதைத்தான் தாயக மக்களும் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கு..! :huh: ஆக, இடையில் நின்று சைக்கிள் கேப்பில் கடாவெட்ட நினைத்தவர்கள் யாரென்பதை இப்போது அறியமுடிகிறது..! :rolleyes:

தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்

24 ஜூலை 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மக்கள் தமது கடமையை சரிவரச் செய்துவிட்டனர்.

பெரும்பாலான கூட்டமைப்பினர் வழமைபோல்

- அடுத்த தேர்தல் வரை ஓடி ஒளிக்காமல்,

- தமிழரின் அடிப்படை உரிமைகளை அடகு வைக்காமல்,

- தமிழின விரோதிகளின் சேவகர்களாக மாறாமல்,

- வெற்று அறிக்கைகளை விட்டு, வெற்றுப் பேச்சுவார்த்தையில் கழிக்காமல்

தமது கடமையை சரிவரச் செய்வார்களா என்பது தான் எல்லார் முன்னாலும் உள்ள கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்..

சர்வதேசம் அங்கிகரிப்பது இருக்கட்டும்..! தாயகத்து அரசியலை தாயக மக்களே தீர்மானிப்பார்கள்..

இதில் புலம்பெயர் தமிழர் சொல்வதற்கு எதுவுமில்லை என்று ஒரு சாரார் முன்னர் எமக்கெல்லாம் செவிட்டில் அறைந்தது மாதிரி சொல்லியிருந்தார்கள்..! :wub:

முடிவுகளைப் பார்த்தால் நாங்கள் எல்லாரும் சொன்னதைத்தான் தாயக மக்களும் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கு..! :huh: ஆக, இடையில் நின்று சைக்கிள் கேப்பில் கடாவெட்ட நினைத்தவர்கள் யாரென்பதை இப்போது அறியமுடிகிறது..! :rolleyes:

இதைத்தான் நானும் எழுதவந்தேன்

மறுத்து எழுதுபவர்கள் தாயகத்துடன் விலகியே இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Edited by விசுகு

இதுவே சிங்கள ஆட்சிக்கு கீழேயான கடைசி தேர்தல் என எண்ணி உழைப்போம்.

எமது போராட்டம் ஒரு நீண்ட அஞ்சல் ஓட்டம் (relay). மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் துணையாக ஓடவேண்டும்.

கூட்டமைப்பும், புலம்பெயர் அமைப்புக்களும் ( நா.க.அ., உலகத் தமிழர் பேரவை. ,,) தமிழக அமைப்புக்களும் ஒரே இலக்கையே நோக்கி நகருகின்றன.

இந்த முடிவுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்குலக நாடுகளில் 'தேர்தல் முடிவுகள் - இது தாயக மக்களின் ஆணை' என கூறி ஒரு அரசியல் தீர்வை நோக்கி வேகமாக நகரவேண்டும்.

தமிழக அமைப்புக்களும், முதலமைச்சரும் புது டெல்லியை அதன் கொள்கையில் ஒரு மாற்றம் வரும்வரை ஆக்கபூரவமாக ஒரு திட்டமிடலுக்கு அமைய வேலைப்பாட்டுக்களை தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தபட்சம் மக்கள் டக்ளசின் கட்சிக்கு வாக்களித்து இணக்க அரசியலுக்கு வருவார்கள் என நினைத்திருந்தேன்..! :D:wub:

டக்ளஸ் தன்னுடைய ஆட்களைத் தேர்தலில் நிறுத்தி மகிந்த மாத்தயாவின் சதுரங்க விளையாட்டைக் குழப்பிவிட்டார். எனவே டக்ளஸ் மீண்டும் ஒருமுறை தனது மந்திரி பதவியை இராஜினாமா செய்யக்கூடும் ^_^:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழ்த்தேசியத்துக்கு முழுதான வெற்றி, தெற்கில் சிங்களப் பேரினவாதத்திற்கு முழுதான வெற்றி. நிச்சயமாக நாடு இருதுருவங்களாகத்தான் இருக்கிறது. ஒரு நாடு இரு தேசிய இனங்களா அல்லது இரு நாடுகள் இருவேறு தேசிய இனங்களா என்பதை சர்வதேசம்தான் தீர்மானிக்க வேண்டும்.

உண்மையும் அதுதான் இந்த இரண்டு இனங்களும் ஒருபோதும் சேர்ந்து வழவேமுடியாது இதைத்தான் மீண்டும் மீண்டும் தேர்தல்கள் மூலம் நிருபித்துள்ளார்கள் தமிழ் ஈழ மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் அங்கிகரிப்பது இருக்கட்டும்..! தாயகத்து அரசியலை தாயக மக்களே தீர்மானிப்பார்கள்.. இதில் புலம்பெயர் தமிழர் சொல்வதற்கு எதுவுமில்லை என்று ஒரு சாரார் முன்னர் எமக்கெல்லாம் செவிட்டில் அறைந்தது மாதிரி சொல்லியிருந்தார்கள்..! :wub:

முடிவுகளைப் பார்த்தால் நாங்கள் எல்லாரும் சொன்னதைத்தான் தாயக மக்களும் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கு..! :huh: ஆக, இடையில் நின்று சைக்கிள் கேப்பில் கடாவெட்ட நினைத்தவர்கள் யாரென்பதை இப்போது அறியமுடிகிறது..! :rolleyes:

தாயக மக்கள் தேர்தலில் த.தே.கூ.க்கு வாக்களித்து சொன்ன செய்திக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதை வைத்து சொல்லும் செய்திக்கும் வித்தியாசம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர் தலைமைகளின் தலையாட்டி பொம்மையாக த.தே.கூ. இல்லை என்று தெரியாதா?

தமிழ் மக்கள் வன்முறையற்ற ரீதியில் தமது அரசியல் அபிலாசைகளை அடைய த.தே.கூ. மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதும், என்னதான் பணத்தை வாரியிறைத்தாலும், அடக்கி ஒடுக்கினாலும் சிங்களவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யத் தயாரில்லை என்றும் சொல்லியிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் ஆயுத வன்முறை மூலம் இனித் தமிழீழம் எடுக்கமுடியாது என்பதையுணர்ந்து போர்க்குற்றத்தை வைத்து தமிழீழம் அடையலாம் என்றுதானே செயற்படுகின்றனர். அத்தோடு த.தே.கூ. ஐயும், நாடுகடந்த அரசையும் (தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும்) தமது கட்டுப்பாட்டுக்குள் செயற்படுத்தத்தானே இன்னமும் விரும்புகின்றனர். :blink:

இதுவே சிங்கள ஆட்சிக்கு கீழேயான கடைசி தேர்தல் என எண்ணி உழைப்போம்.

எமது போராட்டம் ஒரு நீண்ட அஞ்சல் ஓட்டம் (relay). மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் துணையாக ஓடவேண்டும்.

கூட்டமைப்பும், புலம்பெயர் அமைப்புக்களும் ( நா.க.அ., உலகத் தமிழர் பேரவை. ,,) தமிழக அமைப்புக்களும் ஒரே இலக்கையே நோக்கி நகருகின்றன.

இந்த முடிவுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்குலக நாடுகளில் 'தேர்தல் முடிவுகள் - இது தாயக மக்களின் ஆணை' என கூறி ஒரு அரசியல் தீர்வை நோக்கி வேகமாக நகரவேண்டும்.

தமிழக அமைப்புக்களும், முதலமைச்சரும் புது டெல்லியை அதன் கொள்கையில் ஒரு மாற்றம் வரும்வரை ஆக்கபூரவமாக ஒரு திட்டமிடலுக்கு அமைய வேலைப்பாட்டுக்களை தொடரவேண்டும்.

நல்ல உதாரணம். தாயக மக்கள் தெளிவான வெற்றியுடன் தடியை TNA, TGTE, WTC................. போன்றோரிடம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது எல்லோரும் சேர்ந்து மிகுதி வெற்றியை ஈட்டவேண்டும்

Edited by மல்லையூரான்

தாயக மக்கள் தேர்தலில் த.தே.கூ.க்கு வாக்களித்து சொன்ன செய்திக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதை வைத்து சொல்லும் செய்திக்கும் வித்தியாசம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர் தலைமைகளின் தலையாட்டி பொம்மையாக த.தே.கூ. இல்லை என்று தெரியாதா?

தமிழ் மக்கள் வன்முறையற்ற ரீதியில் தமது அரசியல் அபிலாசைகளை அடைய த.தே.கூ. மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதும், என்னதான் பணத்தை வாரியிறைத்தாலும், அடக்கி ஒடுக்கினாலும் சிங்களவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யத் தயாரில்லை என்றும் சொல்லியிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் ஆயுத வன்முறை மூலம் இனித் தமிழீழம் எடுக்கமுடியாது என்பதையுணர்ந்து போர்க்குற்றத்தை வைத்து தமிழீழம் அடையலாம் என்றுதானே செயற்படுகின்றனர். அத்தோடு த.தே.கூ. ஐயும், நாடுகடந்த அரசையும் (தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும்) தமது கட்டுப்பாட்டுக்குள் செயற்படுத்தத்தானே இன்னமும் விரும்புகின்றனர். :blink:

இந்த தேர்த்தலில் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பல உதவிகளை கேட்டிருந்தது. அவர்களும் செய்திருந்தனர்

எங்களுக்குள் இருக்கும் பிரிவினைகைளை ஒதுக்கி, அதை ஊக்குவிப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி, எமக்குள் ஒற்றுமையை வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு, ஊக்குவித்து பயணிப்போம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும், புலத்தே உள்ள ஊடகங்கள் தம் கடமைகளை சரியாக சரியான வேளை செய்தன. இவைகளும் அங்கு சில தாக்கங்களையாவது ஏற்படுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

கூட்டமைப்பும் தம் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

ஆனால் ...

எமக்கு நாம் எதிர்பார்ப்பது உடனே நடந்தேற வேண்டும் இல்லையேல் வெடிதான், அது அங்கு சரி வராது. அவர்கள் அங்கிருக்கும் நிலைமைகளை நாம் உணர வேண்டும். பல நெழிவு சுளிவுகளுக்கூடு செல்லுதல் வேண்டும். அதற்கு மேல் அவர்களின் உயிராபத்துகள், ... இவைகளை உணராது ... கடந்த காலங்களில் புலத்திலிருந்து அனுப்பப்பட்ட குதிரைக்கு காசு கட்டி காவல் கிடந்ததையும், குதிரையை நம்பி கூட்டமைப்பை உடைத்தெறிய புலத்துப் பூசாரிகள் முனைந்ததவைகளும் இனி நடைபெறக்கூடாது!!!!!!

புலத்தோடு இணைந்து செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கும். அவர்கள் தம் கடமையை சரியாக செய்வார்கள்/செய்ய வேண்டும். புலத்தில் இருப்பவர்கள், அவர்களை எதிர்பாராது தமது கடமைகளை செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எப்போதுமே தெளிவாகவே இருக்கிறார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை தங்கள் முடிவுகளை தீர்க்கமாக எடுக்கிறார்கள்.புலத்தில் இருப்பவர்களுக்கும் களத்தில் இருப்பவர்களுக்கும் எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன.எல்லாவற்றையும் இழந்து பசியால் வாடும் மக்களின் உடனடித்தேவைகளே உரிமைகளை விட முக்கியம் என்று சொல்லும் கேபி போன்றவர்களின் கருத்துக்களை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.பிச்சையை விட சுதந்திரமே தேவை என்பதை நெத்தியடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.கூட்டமைப்பின் வெற்றிக்கு இந்தத்தேர்தலில் பங்கு பற்றாத தமிழ்க்காங்கிரஸ் தலைமையிலான கட்சியினரும் ஒரு காரணம்.அவர்களை வெளியில் விடாது அவர்களையும் அரவணைத்து அனைத்து தமிழர்களும் உறுதியாக ஒரே குரலில் சர்வதேசத்துக்கு எமது தேவைகளை உரத்துச் சொல்ல வேண்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை, கிருபன்,

புலத்திலுள்ள மக்கள் தமது விருப்பங்களை தாயகத்தில் மேல் திணிக்கிறார்கள் என்று ஒருசாரார் இதுவரை சொல்லி வந்தனர். ஆனால் அப்படியல்ல, தாயக மக்களும் விரும்புவதுகூட தன்மானமான வாழ்வைத்தான் என்பதை நேற்றைய தேர்தல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயுதரீதியான இன்னுமொரு போராட்டத்தை புலத்திலுள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் போர்க்குற்றங்கள் மீதான விசாரணை என்று வரும்போது தாயக மக்களால் இன்றைய சூழ்நிலையில் எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் சொல்லியவாறூ அங்கு தற்போதுள்ள சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை. சாதாரண உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரங்களுக்கே சிங்களப் பயங்கரவாதம் போடும் தடைகளைப் பார்க்கும்போது போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆகவேதான் புலத்தில் இவ்விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை தமிழர்கள் எடுத்துவருகிறார்கள். அது தவறில்லையே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை புலத்திலுள்ளவர்களுக்கு ஏன் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள். கூட்டமைப்பு மீதான விமர்சனம் என்பது அவர்களை அடக்கி ஆள்வதற்கானதென்று நினைக்கிறீர்களா?? கூட்டமைப்பின் இந்திய சார்புக் கொள்கை, ஆளாளுக்கு ஒவ்வொரு கதை பேசுதல், உள்வாங்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன , ஆனால் இவை எவையுமே அவர்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக நான் நினைக்கவுமில்லை, அப்படிச் செய்யவும் முடியாது.

தாயகத்தில் இன்று மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு சில தவறான நடவடிக்கைகளை எடுத்துவிடக் கூடாதே என்கிற கவலைதான் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாக இருக்கலாமே அன்றி அவர்களை அடக்கி ஆளும் நோக்கத்தினால் அல்ல என்பதுதான் நான் நினைப்பது.

அதேபோல நாடுகடந்த தமிழீழ அரசானது புலத்தில் தான் இயங்குகிறது. அதை புலத்திலுள்ளவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறார்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? புலத்திலுள்ள மக்களால் உருவாக்கப்பட்டதுதானே நாடுகடந்த அரசு, பிறகெப்படி அதை அவர்களே அடக்கியாள நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியும்? ஆனால் சில தனிப்பட்ட மனிதர்கள் அப்படி நினைக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது கைகூடப்போவதில்லை.

அருமையான இரு கருத்துக்கள்

நாம் எமக்குள் உள்ள ஒற்றுமைகள் காரணமாகவே இன்றும் இணைந்துள்ளோம். வேற்றுமைகளை முடிந்தால் மறந்து/மன்னித்து உழைப்போம் பொது இலக்கை நோக்கி.

பிச்சையை விட சுதந்திரமே தேவை என்பதை நெத்தியடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.கூட்டமைப்பின் வெற்றிக்கு இந்தத்தேர்தலில் பங்கு பற்றாத தமிழ்க்காங்கிரஸ் தலைமையிலான கட்சியினரும் ஒரு காரணம்.அவர்களை வெளியில் விடாது அவர்களையும் அரவணைத்து அனைத்து தமிழர்களும் உறுதியாக ஒரே குரலில் சர்வதேசத்துக்கு எமது தேவைகளை உரத்துச் சொல்ல வேண்டும்.

இதை சர்வதேசத்திற்கு (ஐ.நா, அமெரிக்கா, சீனா, இந்தியா, உருசியா, ஐரோப்பிய யூனியன், ....) நாம் கூறல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்

தமிழர்கள், வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் இருந்து, என்றைக்குமே விலகிப் போகவில்லை!

இதைத் தெளிவாகவே, ஒவ்வொரு தடவையும் திரும்பத் திரும்ப நிரூபிக்கின்றார்கள்!

இதில் கூட்டமைப்பு, பெருமைப் பட எதுவும் இல்லை என்பது எனது கருத்து!

கல்லைத் தூக்கி, நாயை அடிக்கும் போது, கல்லு பெருமைப் படுவது போலத் தான் கூட்டணி பெருமைப் படுவது!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை, கிருபன்,

புலத்திலுள்ள மக்கள் தமது விருப்பங்களை தாயகத்தில் மேல் திணிக்கிறார்கள் என்று ஒருசாரார் இதுவரை சொல்லி வந்தனர். ஆனால் அப்படியல்ல, தாயக மக்களும் விரும்புவதுகூட தன்மானமான வாழ்வைத்தான் என்பதை நேற்றைய தேர்தல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயுதரீதியான இன்னுமொரு போராட்டத்தை புலத்திலுள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் போர்க்குற்றங்கள் மீதான விசாரணை என்று வரும்போது தாயக மக்களால் இன்றைய சூழ்நிலையில் எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் சொல்லியவாறூ அங்கு தற்போதுள்ள சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை. சாதாரண உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரங்களுக்கே சிங்களப் பயங்கரவாதம் போடும் தடைகளைப் பார்க்கும்போது போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆகவேதான் புலத்தில் இவ்விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை தமிழர்கள் எடுத்துவருகிறார்கள். அது தவறில்லையே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை புலத்திலுள்ளவர்களுக்கு ஏன் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள். கூட்டமைப்பு மீதான விமர்சனம் என்பது அவர்களை அடக்கி ஆள்வதற்கானதென்று நினைக்கிறீர்களா?? கூட்டமைப்பின் இந்திய சார்புக் கொள்கை, ஆளாளுக்கு ஒவ்வொரு கதை பேசுதல், உள்வாங்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன , ஆனால் இவை எவையுமே அவர்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக நான் நினைக்கவுமில்லை, அப்படிச் செய்யவும் முடியாது.

தாயகத்தில் இன்று மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு சில தவறான நடவடிக்கைகளை எடுத்துவிடக் கூடாதே என்கிற கவலைதான் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாக இருக்கலாமே அன்றி அவர்களை அடக்கி ஆளும் நோக்கத்தினால் அல்ல என்பதுதான் நான் நினைப்பது.

அதேபோல நாடுகடந்த தமிழீழ அரசானது புலத்தில் தான் இயங்குகிறது. அதை புலத்திலுள்ளவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறார்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? புலத்திலுள்ள மக்களால் உருவாக்கப்பட்டதுதானே நாடுகடந்த அரசு, பிறகெப்படி அதை அவர்களே அடக்கியாள நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியும்? ஆனால் சில தனிப்பட்ட மனிதர்கள் அப்படி நினைக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது கைகூடப்போவதில்லை.

த.தே.கூ. இன் அரசியலில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் ஒரு சரியான தீர்வுக்கு முழுமையாக உழைக்கின்றார்கள் என்று சொல்லுவதைவிட, இந்தியாவின் ஆலோசனைகளின்படிதான் செயற்படுகின்றார்கள். இப்படித்தான் இங்கு தற்போது கூட்டமைப்பின் வெற்றியில் மகிழும் பலரும் நினைகின்றார்கள். அதுதான் கூட்டமைப்பை சரியான பாதையில் "வழிநடத்த" விரும்புகின்றார்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுக்கு

நானும் இதில வாக்கு அளித்தேன் ஆனால் மக்கள் அந்த****** நபர்களிடம் எல்லாவற்றையும் வாங்கி எடுப்பதை பார்த்து அதிர்ந்து போனேன் ஆனால் அவர்களூக்கு விழுந்த ஆப்பூ இப்பவும் சொல்லி கதைக்கிறம் [எனது உறவினர் ஒருவரும் வென்று விட்டார் உள்ளூராட்சி தேர்தலில் என்பதில் மகிழ்ச்சி] :D

தமிழரசு கட்சி :)

தமிழர் தேசியக்கூட்டமைப்பை உடைக்கவும் சம்பந்தரை தலைவர் பதவியில் இருந்து அகற்றவும் நடந்த புலம்பெயர்ந்தவர்களின் கூத்துக்கள் இங்கு பலருக்கு தெரியாது போலிருக்கு.

புலம்பெயந்ர்ந்த புலிவாலுகள் இன்னமும் தாம் தான் தமிழர்களின் ஏகப்பிரநிதிகள் என்ற நினைப்பில்.விசுகுவும்,இசைக்கும் நடந்த பல விடயங்கள் தெரியாதுபோல.கஜேந்திரன்,பத்மினி இல்லாமல் போனதும் வால்காட்டநினைத்த சிவாஜிலிங்கம் வாலைசுருட்டியதும் சம்பந்தரின் சாணக்கியம்.புலம் பெயர்ந்த அலுகோசுகளின் சொல் கேட்டிருந்தால் இன்று மேடையில் வரதராஜபெருமாளும்,சித்தார்த்தனும்,ஆனந்தசங்கரியும் இருந்திருக்கமாட்டார்கள்.

சம்பந்தரை வானொலியில் கொண்டுவந்து தேசியத்தை விற்கின்றீர்கள்,இந்தியாவின் கூலியா எனக்கேள்விகேட்டு போனையையே கட் பண்ணவைத்தார்கள்.நாலு காசுவைத்திருந்தால் எவரையும் வாங்கலாம் என நினைத்தார்கள்.(அது புலிக்கு தான் பொருந்தும்.)

அவர்களுக்கு என்றொரு அரசியல் இருக்கு அதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்,மக்களும் அவர்கள் பின்னால் இதிலெங்கே புலம் பெயர்ந்தவர்கள் பங்கு?

உங்களுக்கு அடிபடவே நேரம் காணது?

மே 19 பின் பலர் இன்னமும் கோமாவில்.

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

இனப்பற்றை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்திய தேர்தல் முடிபு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வெற்றி கூட்டமைப்பு என்ற எல்லை கடந்து தமிழினத்திற்கான வெற்றி என்று வியாக்கியானம் செய்யும் அளவில் பெருமை பெற்றுள்ளது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த- உணர்வுபூர்வமான இனப்பற்றையும் எங்கள் உரிமையைப் பெற்றாக வேண்டும் என்பதில் கொண்டுள்ள திடசங்கற்பத்தையும் வெளிப்படுத்துவதாக இத்தேர்தல் முடிபு அமைந்துவிட்டது.

தமிழ் மக்களின் மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை மழுங்கடித்த பின்னர் தமிழ் மக்கள் ‘ஐயா பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்று சொல்வார்கள் என்ற கருத்து இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்தது.

ஆனால் ஆட்சியாளர்களின் அந்தச் சிந்தனை முற்றுமுழுதாகத் தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது. அதேநேரம் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்ற கோ­ஷங்களுடன் வடபகுதிக்குள் நுழைந்த இந்த நாட்டின் ஜனாதிபதி, அவர் சார்ந்த அமைச்சர்கள் காட்டிய அதீத அக்கறைப்பாடே உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களை உத்வேகம் அடையச் செய்தது என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடபகுதியில் களம் அமைத்து தேர்தல் வெற்றியை தமக்காக்குவதற்கு முயற்சி செய்யாதிருந்தால், தமிழ் மக்கள் இந்தளவு தூரம் வாக்களித்திருக்க மாட்டார்கள் என்பது நிஜம்.

வன்னியில் எங்கள் இனத்தை கொன்றழித்து ஆற்றலைய வைத்துவிட்டு எங்களிடம் வாக்குப் பெற்று வெற்றியடைந்து அதை சர்வதேச சமூகத்திற்குக் காட்டி போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்புவதற்காகவா உங்கள் அபிவிருத்தி உபாயம் - இதோ! நாங்கள் யார் என்பதை காட்டுகின்றோம் எனத் தமிழ் மக்கள் கூறுவதாக தேர்தல் முடிபை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு பல்வேறு விடயங்களைச் சுட்டி நிற்கின்றது. அதில் ஒன்று சிங்கள அரசியல் தலைமையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21063

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்த அலுகோசுகளின் சொல் கேட்டிருந்தால் இன்று மேடையில் வரதராஜபெருமாளும்,சித்தார்த்தனும்,ஆனந்தசங்கரியும் இருந்திருக்கமாட்டார்கள்.

இவர்கள் இருந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்தது என்று சந்தில சிந்து பாடாதீர்கள். இவர்கள் இருந்தும் (இந்தியாவின் திணிப்பால்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு பெயருக்காகத் தான் வாக்களித்தார்கள்.

நீங்கள் சொன்ன இந்த மூவரும் டக்கியோடு இணைந்து நின்றால் கூட இதே முடிவுகள் தான் வந்திருக்கும் என அடித்துக் கூறுவேன்.

வாழு, வாழ விடு என்ற செய்தியை தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்: மனோ கணேசன்

1. இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்;. நீங்களும் வாழுங்கள், எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள் என்ற எளிமையான செய்தியை தான் உறுதியான முறையிலே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள்&quot; என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2. இன்றைய சர்வதேச சூழலிலே அரசாங்கம் முகங்கொடுக்கும் நெருக்கடிகளிலிருந்து இதன் மூலம் தப்பிவிடலாம் என அரசாங்கம் கணக்கு போட்டது. இதற்காகவே முழுமையான அரசாங்க இயந்திரமும் வடக்கு மாகாணத்திலே முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது.

3. எங்கள் கிராமங்களும், பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். ஆனால் அபிவிருத்தி தொடர்பிலான முடிவுகளை நீங்கள் கொழும்பிலே இருந்து எடுக்காதீர்கள். அந்த அதிகாரங்களை எங்களிடம் தாருங்கள் என தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கூறியுள்ளார்கள்

4. புலிகளின் கோரிக்கைக்கும், இன்றைய கூட்டமைப்பின் கோரிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய தருணம் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும். போரின் இறுதிக்கட்டத்தின் போது தமிழ் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்துள்ளார்கள்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25292-2011-07-25-11-57-38.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.