Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ravichna.jpgravichandran.jpg

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.

ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதற்காக, டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 2 சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை செயல் இழந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

நினைவாற்றலை முற்றிலுமாக இழந்து, கோமா' நிலையில் இருந்த அவருக்கு, தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நடிகர் ரவிச்சந்திரன் 25.07.2011 அன்று இரவு சென்னையில் உயிரிழந்தார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நடித்த "காதலிக்க நேரமில்லை, சபதம், இதயக் கமலம், உத்தரவின்றி உள்ளே வா, ஊமை விழிகள்" இன்றும் ரசிக்ககூடிய கலை விருந்துகளில் சில...

"தொடுவதென்ன..தென்றலோ.. மலர்களோ...? "

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்..!."

"காதல்.. காதல்.. என்று பேச கண்ணன் வந்தானோ...!"

இவரின் நடிப்பில் வந்த பாடல்கள் இன்றும் பாடலோடு அவரின் ஒன்றிணைந்த நடிப்பும் என்றும் மனதை விட்டு அகலாதவை...

அறுபதுகளில்... ஏன் இன்றும் எங்கள் மனதை அள்ளிச் செல்லும் இக்கலைஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் !

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

ரவிச்சந்திரன், ஜெயசங்கர் காலம், கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் காலம் போல.

இவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்!!!

மறக்கமுடியாத நடிகர்களில் ஒருவர்.கலர் படங்கள் வந்த காலங்களில் கலர் fபுள்ளாக வந்தவர்.

காதலிக்க நேரமில்லை,நான்,இதய கமலம்,அதேகண்கள் இன்னமும் கண்ணுக்குள் நிற்கின்றது.

"உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா" யாரும் மறக்கமுடியுமா?

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 26, ஜூலை 2011 (9:40 IS

ரவிச்சந்திரனின் மறைவை நம்ப முடியவில்லை: ராஜஸ்ரீ

71 வயதான பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் 25.07.2011 அன்று இரவு மரணம் அடைந்தார். டைரக்டர் ஸ்ரீதரால் காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன். நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்.

ரவிச்சந்திரனின் மறைவு குறித்து நடிகை ராஜஸ்ரீ கூறியதாவது,

ரவிச்சந்திரன் நடித்த முதல் படமான "காதலிக்க நேரமில்லை' படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. நான் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானதால் படப்பிடிப்பின்போது என்னை சீனியர் நடிகை என்று மிகுந்த மரியாதை கொடுப்பார்.

ஆனால் அவரைப் பார்த்தால் அறிமுக நடிகராகவே தெரியாது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அண்மையில் விஜய் டி.வி.யில் நாங்கள் இருவரும் பங்கேற்ற "காஃபி வித் அனு" நிகழ்ச்சி எங்களை "காதலிக்க நேரமில்லை' காலத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து மூன்று நாள்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் பார்த்தேன். அவருடைய மறைவை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58362

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் நின்றவை - அஞ்சலிக்காக..

தொடுவதென்ன தென்றலோ.. மலர்களோ...

பனியில் வந்த துளிகளோ... கனிகளோ...

உடலெங்கும் குளிராவதென்ன...

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன...

படம்: சபதம் (1971)

http://youtu.be/F4bOpRJdVNM

மாதமோ ஆவணி, மங்கையோ மாங்கனி..

நாளிலே நல்ல நாள், நாயகன் வென்ற நாள்..

நாலிலே ஒன்றுதான், நாணமும் இன்றுதான்..

நாயகன் பொன்மணி, நாயகி பைங்கிளி..

படம்: உத்திரவின்றி உள்ளே வா (1971)

http://youtu.be/q7NolKhpgtE

சிலை செய்ய கைகள் உண்டு.. தங்கம் கொஞ்சம் தேவை!

சிங்கார பாடல் உண்டு.. தமிழ் கொஞ்சம் தேவை!!

படம்: ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (1971)

.

.

  • கருத்துக்கள உறவுகள்

'கலை நிலவு' ரவிச்சந்திரன்

இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.

முதல் படத்திலேயே கதாநாயகன்

முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்

முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்

முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்

1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).

காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.

"காதலிக்க நேரமில்லை"

முதல் குட்டு மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்ப, முதல் படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் அறிமுகமானார் ரவி. அப்படத்தில் மூன்று ஜோடிக்காதலர்கள். அதில் ஒரு நாயகனையும் நாயகியையும் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். வழக்கமாக இவ்வாறு அறிமுகம் செய்யும்போது புதிய நாயகனையும், புதிய நாயகியையும்தான் ஒருஜோடியாக எல்லோரும் போடுவார்கள். ஆனால் ஸ்ரீதர் இதிலும் புதுமை செய்ய எண்ணி, பழைய நடிகர் முத்துராமனுக்கு புது நடிகை காஞ்சனாவை ஜோடியாகவும், புது நடிகர் ரவிச்சந்திரனுக்கு பழைய நடிகை ராஜஸ்ரீயை ஜோடியாகவும் போட்டார். அதாவது ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு அனுபவம், ஒரு அறிமுகம்.

'காதலிக்க நேரமில்லை' கதையை இங்கே சொல்வது, கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான படம் அது. அதில் ஸ்ரீதர், கோபு, கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வின்சென்ட், பி.என் சுந்தரம், எடிட்டர் என்.எம்.சங்கர் ஆகியோர் பெரிய ராஜாங்கமே நடத்தியிருந்தனர்.

முதல் படத்திலேயே ரவிச்சந்திரனுக்கு பி.பி.எஸ் குரலில் நான்கு அருமையான பாடல்கள். (முத்துராமனுக்கு ஜேசுதாஸ் குரலில் இரண்டு பாடல்களும் சீர்காழியின் குரலில் ஒரு பாடலும் தான். அதுபோக நாகேஷ் சச்சு ஜோடிக்கு ஒரு பாடல்). விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேன் சொட்டின. இன்றுவரை அவையனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கப்படுகின்றன. பாடலின் தரத்துக்கேற்றாற்போல வின்சென்ட் - சுந்தரம் கூட்டணியின் அற்புதமான ஒளிப்பதிவு. காஞ்சனாவையும், ராஜஷ்ரீயையும் ரவிச்சந்திரன் டீஸ் செய்து பாடும் 'உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா?' என்ற சாதாரண பாடலில்தான் கேமரா என்ன விளையாட்டு விளையாடியிருக்கும்?. ஆளியாறு அணைப்பகுதியில் படமாக்கப்பட்ட வெளிப்புறக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. 'அனுபவம் புதுமை' மற்றும், 'நாளாம் நாளாம் திருநாளாம்' பாடலின் மெலோடியைப்பற்றியெல்லாம் பேச நிச்சயம் எனக்கு தகுதியில்லை. ஆனால் 'நாளாம் நாளாம்' பாடலை செட்போட்டுப் படமாக்கியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. அதைவிட சென்னை மெரீனாவில் படமாக்கியிருந்த 'என்ன பார்வை உந்தன் பார்வை' காட்சியமைப்பிலும், படமாக்கிய விதத்திலும் சூப்பர்.

படம் துவக்கத்திலிருந்து 'வணக்கம்' வரை நகைச்சுவை கொடிகட்டிப்பறந்தது. காதல் ஜோடிகளோடு சேர்ந்துகொண்டு, பாலையா, நாகேஷ், சச்சு, பிரபாகர் (சச்சுவின் அப்பா) ஆகியோரும் நகைச்சுவையில் கலக்கினர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சித்ராலயா கோபுவின் வசனங்கள். போதாக்குறைக்கு படத்தில் ரவிச்சந்திரன் வைத்திருக்கும் அந்த டப்பா காரும் நமக்கு சிரிப்பை மூட்டியது. அதுவரை சோகம், செண்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த முத்துராமனுக்கு, காதலிக்க நேரமில்லையில் அவர் ஏற்றிருந்த 'டூப்ளிகேட்' பணக்கார கிழவன் வேடமும், அதில் அவர் கொடுத்த நகைச்சுவை சரவெடிகளும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதன்முதலாக ஜெமினி கலர் லேபரட்டரியில் வண்ணப்பிரதிகள் தயாரானதும் இப்படத்துக்குத்தான். (அதற்குமுன் வந்த கர்ணன், படகோட்டி ஆகிய ஈஸ்ட்மன் கலர்ப்படங்கள் மும்பை ஃபிலிம் செண்ட்டரில் ப்ராஸஸிங் செய்யப்பட்டன).

முதல் படமே 200 நாள் படமாக அமைய, 'வெள்ளிவிழா நாயகன்' என்ற சிறப்புப்பட்டத்துடன் திரையுலகில் வலம் வரத்துவங்கினார் ரவிச்சந்திரன்.

நன்றி : The Hub

.

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு: முதல்வர் இரங்கல்

26-jayalalitha300.jpg

சென்னை, ஜூலை.26: நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கள் உட்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன். 1964 ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தைத் துவக்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த

ரவிச்சந்திரனின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Dinamani

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தற்பொழுது அரசியல் செல்வாக்கில் இருக்கும் முன்னால் நடிகையுடன் காதல் ஏற்பட்டதினால் அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்த பிற்காலத்தில் தமிழக அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த நடிகரால் இவருக்கு தொடர்ந்து கதா நாயகனாக நடிக்க நெருக்குதல் ஏற்பட்டதாக ஒரு தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள், நல்ல திறமையான நடிகர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் தற்பொழுது அரசியல் செல்வாக்கில் இருக்கும் முன்னால் நடிகையுடன் காதல் ஏற்பட்டதினால் அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்த பிற்காலத்தில் தமிழக அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த நடிகரால் இவருக்கு தொடர்ந்து கதா நாயகனாக நடிக்க நெருக்குதல் ஏற்பட்டதாக ஒரு தகவல்.

கருணாநிதி தான் இப்பிடியான வேலை செய்யக் கூடிய ஆள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.