Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

Featured Replies

பிரிவினை கோரும் மனநிலையில் தாயகத்து மக்கள் தற்போது இல்லை. அதற்கான அக புறச் சு+ழல்கள் இல்லை என்பதை தாயக மக்கள் செவ்வவனனே புரிந்துள்ளார்கள். அந்தவகையில் இது சம்மந்தரின் தனிப்பட்ட ஒரு கருத்தல்ல மறாக இது ஒரு பொதுக் கருத்து. தாயக மக்கள் நெருக்கடியான நிலமைகளுக்கேற்ப வழைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்தையும் அவசியத்தையும் உணர்ந்துள்ளார்கள். வாழ்வின் தக்கவைப்பிலேயே இனத்தின் இருப்பு தொடரமுடியும். புலத்து மக்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. சுதந்திரமாக தேசீயம் என்று கூவ முடியும். பிரிவினைவாதம் பற்றி கதைக்க முடியும். புலத்து தமிழனின் நிலைப்பாடும் தாயகத் தமிழனின் நிலைப்பாடும் வேறுவேறானதாகிவிட்டது. இந்த வேற்றுமைகள் நாழுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். புலம்பெயர் தமிழனின் பணம் இன்றைய காலகட்டத்தில் தாயகத்தில் பொருளாதரா ஏற்றதாழ்வை அதிகளவு ஏற்படுத்துகின்றது. ஐந்து லட்சம் பெறுமதியான வீடுகள் புலத்து தமிழர்களாகளால் ஐம்பது லட்சமாக உயர்த்தப்படும்போது வறிய மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களத்தால் நாடற்றவர்களாக தமிழர்களால் வீடற்றவர்களாக மறுபடி மறுபடி தமிழ் சிங்கள தேசீயவாதங்களால் நசுக்கப்படும் மக்களின் அவல வாழ்வு தொடரத்தான் செய்கின்றது. பொருளாதார ஏற்றதாழ்வுடைய இரண்டு தரப்பு எப்போதும் ஒரு பொதுக் கருத்துக்கு வரமுடியாது என்பது அடிப்படை. அது தவிர்ந்த அரசியல் சமூக முறண்பாட்டு நெருக்கடிகள் வேறானவை. புலத் தமிழனும் தாயகத் தமிழனும் ஒன்றாக பயணிப்பதற்கான அடிப்படை எதுவும் இல்லை.

தேர்தல் முடிவுகளும், அதன் பின்னரான கூட்டமைப்பு அறிக்கைகளும், தாயக ஊடக அறிக்கைகளும் உங்கள் கருத்தை மறுதலிக்கின்றன.

  • Replies 56
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகக் குறைந்தது ஐக்கிய இலங்கை என்று சொல்லக் கூட இந்த சம்பந்தத்துக்கு துணிச்சலில்லை. என்ன செய்வது? இந்திய எஜமான் எழுதிக் கொடுத்ததைத் தானே வாசிக்கமுடியும் இந்த கையாலகாத சம்பந்தத்தால்.

ஆனால் சம்பந்தர் அவர்களே போர்குற்ற கோரிக்கையை கைவிடச் சொல்வது என்பது மாபெரும் துரோகம். எங்களுக்கு இலங்கை மீது போர் குற்றம் சுமத்த வைக்க போதைய ஆற்றல் இல்லாது விடினும், எங்களால் நடந்தவற்றை கடைசி வரையும் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. இயன்றவரை இந்த போர் குற்றத்திற்காகப் போராடுவோம். அது தான் நாம் உங்களுக்கு கொடுக்கும் பதில்.

தேர்தல் முடிவுகளும், அதன் பின்னரான கூட்டமைப்பு அறிக்கைகளும், தாயக ஊடக அறிக்கைகளும் உங்கள் கருத்தை மறுதலிக்கின்றன.

தேர்தல் முடிவுகளை ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிரான மக்களின் எண்ணமாக கற்பனை செய்வதும் கூட்டுக் கொலைகாரர்களில் மகிந்தனுக்கு பதிலாக பொன்சேகாவுக்குப் பின்னால் நின்ற கூட்டமைப்பின் அறிக்கைகளும் இலங்கையை தமது நலன்களுக்கு ஏற்ப கையாழ்வதற்கு மேற்குலகம் பயன்படுத்தும் போர்க்குற்றம் எனும் துருப்புச் சீட்டும் மக்களின் தலையெழுத்தை என்றும் மாற்றியமைக்கப்போவதில்லை. ஊடகங்களோ அறிக்கைகளோ இதற்குள்ளாகவே சுற்றுகின்றது. இவற்றைக் கடந்து செல்ல முற்படவில்லை. போர்க்குற்றம் என்ற துருப்புச் சீட்டு மகிந்தரை அவரது ஆட்சியை குறிவைக்கின்றது தவிர சிங்களப்பேரினவாதத்தை இல்லை. மகிந்தருக்குப் பதிலாக சிங்களப்பேரினவாதத்துக்கு எதிராகவும் அதனூடாக தமிழர்களுக்கான தீர்வு முனைவாகவும் மாற்றுவதில் தமிழர்தரப்போ தமிழர்களின் ஊடகங்களோ எந்த முன்னேற்றமும் காணவில்லை. நிகழ்வுகளுக்குப் பின்னாலும் சம்பவங்களுக்குப் பின்னாலும் அதை தேசீயவாதத்துக்குச் சார்பாக பேசுவதும் கற்பனை செய்வதும் சுலபமானது ஆனால் நடைமுறை என்பதும் இலக்கை அடைவதென்பதும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் ஏற்படுத்துவதிலும் கடந்து செல்வதிலும் தங்கியுள்ளது.

புலம் பெயர்ந்து எந்த காட்டுகத்துகத்தியும் ஒன்றும் எடுபடப்போவதில்லை.பலர் இணையத்தில் இருந்து இலங்கையில் இருக்கும் தமிழனின் விதியை நிர்ணயிக்க நிற்கின்றார்கள்.

சம்பந்தருக்கும் கூட்டைமைப்பிற்கும் தாங்கள் என்ன செய்கின்றோம்,ஏன் செய்கின்றோம் என தெளிவாகத்தெரியும்.அவர்களின் வாழ்வே அதுதான்.

ஈசன்,சுகன் யாதார்த்தமாக பதிவுகள்.

புலம் பெயர்ந்தவர்களின் தீர்வு தமிழீழம் தான் அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.(சாவா,பட்டினியா,பயமா எதுவுமில்லை.நேரத்திற்கு நேரம் ரேக் எவய் சாப்பாடு,புட்டி,குட்டி,கொலிடேய்,கார்,பங்களா,பிள்ளைகள் படிப்பு அதுவும் டொக்டர்)

புலம்பெயர்ந்தவர்களின் தாகம் தமிழீழதாயகம் இதை நம்பித்தான் முள்ளிவாய்க்கால் அவலமே அரங்கேறியது.

படித்த சம்பந்தரிடம் உந்த பருப்பு அவியாது.

தேர்தல் முடிவுகளை ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிரான மக்களின் எண்ணமாக கற்பனை செய்வதும் கூட்டுக் கொலைகாரர்களில் மகிந்தனுக்கு பதிலாக பொன்சேகாவுக்குப் பின்னால் நின்ற கூட்டமைப்பின் அறிக்கைகளும் இலங்கையை தமது நலன்களுக்கு ஏற்ப கையாழ்வதற்கு மேற்குலகம் பயன்படுத்தும் போர்க்குற்றம் எனும் துருப்புச் சீட்டும் மக்களின் தலையெழுத்தை என்றும் மாற்றியமைக்கப்போவதில்லை. ஊடகங்களோ அறிக்கைகளோ இதற்குள்ளாகவே சுற்றுகின்றது. இவற்றைக் கடந்து செல்ல முற்படவில்லை. போர்க்குற்றம் என்ற துருப்புச் சீட்டு மகிந்தரை அவரது ஆட்சியை குறிவைக்கின்றது தவிர சிங்களப்பேரினவாதத்தை இல்லை. மகிந்தருக்குப் பதிலாக சிங்களப்பேரினவாதத்துக்கு எதிராகவும் அதனூடாக தமிழர்களுக்கான தீர்வு முனைவாகவும் மாற்றுவதில் தமிழர்தரப்போ தமிழர்களின் ஊடகங்களோ எந்த முன்னேற்றமும் காணவில்லை. நிகழ்வுகளுக்குப் பின்னாலும் சம்பவங்களுக்குப் பின்னாலும் அதை தேசீயவாதத்துக்குச் சார்பாக பேசுவதும் கற்பனை செய்வதும் சுலபமானது ஆனால் நடைமுறை என்பதும் இலக்கை அடைவதென்பதும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் ஏற்படுத்துவதிலும் கடந்து செல்வதிலும் தங்கியுள்ளது.

ஐ .நாவில் ஒரு விசாரணை நடந்தால் அது வேறு விடயங்களுக்கும் வழிவகுக்கும்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வந்து முள்ளிவாய்க்காலுக்கு பிறகு மக்களின்ட முடிவுகளை புலமும் அகமும் மாறி மாறி அர்த்தப்படுத்தினம் மக்களின்ர முடிவு எப்பவோ தெளிவா சொல்லப்பட்டுள்ளது எங்கட மண்ணில நாங்க சுதந்திரமாய் இருக்க வேண்டும் என்று இத கால காலத்தில வந்த தலைவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்தினார்கள் சிலபேர் தவறி எதிரிக்கு இரையானர்கள் அது வேறு விடயம். ஆனால் இப்ப முள்ளிவாய்க்காலுக்கு பின்பு மக்கள் புலிகளை வெறுக்கினம், தமிழீழம் வேண்டாம் நாங்கள் சிங்களவனுடன் வாழ்வோம் வெளிநாட்டில் இருந்து விசைப்பலகையில்தான் ஈழம் பிடிக்கினம் என்று பலபேர் கதைத்துக்கொண்டு திரியினம்......உண்மையில் இறுதி காலகட்டங்களில் புலிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது ஆனால் இப்ப ஏன் புலிகள் அப்படி நடந்து கொண்டார்கள் ஏன் வலுக்கட்டாயமாக போராட்டத்திற்க்கு அழைத்தார்கள் என்பது புரிந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்க்கான சுழல் எதிரியால் உருவாக்கப்பட்டுள்ளது, தொடர்கின்றது......... ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் பெருவாரியாக கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள் அது புலிகள் காலத்திலும் சரி இப்பவும் சரி மக்களின் தீர்ப்பினை சரியாக புரிந்து கொண்டு செயற்படனும் இல்லையேல் சம்பந்தர் இல்ல எவர் என்றாலும் மக்கள் சக்திக்கு முன் துசிதான்.

எல்லோர் எழுதியதையும் இரண்டு முறை வாசித்து விட்டேன். இப்போது எனது குழப்பம்......

சம்பந்தர் எதையாவது புதிதாக அறிக்கைவிட்டு குழப்பியிருக்கிறாரா அல்லது தமிழ்னெட் புதிய குழப்பத்தை உண்டுபண்ணுகிறதா?

(ஆயுதப் போர் மூலமோ இல்லை) சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமோ சிங்களவர் எமக்கு எதையும் தரப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். சிங்களம் எந்தத் தீர்வுக்கும் வராத பட்சத்தில் சர்வதேசம் தலையிட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். மஹிந்த ஒரு சிறு அதிகாரத்தையும் தரப்போவதில்லை என்று சம்பந்தர் நம்புவதாகத் தெரிகிறது.

இந்த அணுகுமுறையை சம்பந்தர் உட்பட்ட கூட்டமைப்பினர் செயல்படுத்தவேண்டும்.

அதை நிரூபிக்க ஒரு காலக்கெடு விதித்து (ஒன்பது வட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது) அதன் பின்னர் ஜனநாயக பண்புகளுக்கு ஏற்ப சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

அதற்கான காலம் இன்று, நாளை அது கைவிட்டு போய்விடும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

"போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை"

தமது உறவுகளின் அழிவுக்குக் காரணமானவர்கள் யாராயிருந்தாலும் அதுவிடயத்தில் தமிழருக்கு என்றுமே நாட்டம் தேவை.

குற்றவாளிகளை கூண்டில் ஏற்றியே தீரவேண்டும், அது இந்தியாவாக இருந்தாலும் கூட. தேர்தல் வெற்றியின் பின்

சம்பந்தன் சொல்லும் புதுக்கதை வண்டிமாடு பாதைமாறி பக்கவாட்டில் இழுக்க முயற்சிக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பழுத்த தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுக்கும் உதவாமல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது தான் இன்றும் தொடரும் கதை.

சம்பந்தன் என்ற போக்கிரியைப் பற்றி தொடர்ச்சியாக விமர்சித்தபோது சம்பந்தன் துதி பாடியவர்கள் இப்போது என்ன சொல்ல வருகிறார்கள்?

தமிழின அழிப்புக்கு துணை போனவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் விழுந்தடித்து சம்பந்தனுக்கு ஜால்ரா போட்டுள்ளனர்.

மறை கழன்று போய்விட்ட சம்பந்தனுக்கு இனி பொருத்தமான இடம் அங்கொடை தான்.

Voicing on behalf of the present establishment in New Delhi, sections in the Tamil National Alliance (TNA) unnecessarily declaring against independence of Eezham Tamils and discouraging war crimes investigations are worst of the crimes committed not merely against Eezham Tamils but against human civilization, said Tamil national as well as Left political circles in the island and in the diaspora to TamilNet on Monday. The comments have come responding to TNA views expressed after its victory and during its campaign in the civic elections. TNA leader Sampanthan interpreted the victory as Tamil wish for solutions within ‘united Sri Lanka’ and a confidential document circulated among ‘friends of the TNA’ during the civic elections said that the war crimes investigations were actually directed against India than against Colombo, and hence Tamils should not pin hopes on them.

இந்த ரகசிய அறிக்கையை தெரியவந்த தமிழ்னெட் அதை எப்போதாவது பிரசுரித்திருக்கிறதா? அதன் விபரங்கள் என்ன?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சுகன் என்பவரின் கருத்து மிகவும் அபந்தமானது. புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இரண்டும் இரு துருவங்கள் என்ற அதீத கற்பனையில் அவர் வாழ்கிறார். (ஒருவேளை அவரின் குடும்பங்களை அவர் முழுமையாக வெளிநாட்டுக்கு எடுத்து விட்டார் போலும்.). ஆனால் யதார்த்தம் அப்படி அன்று.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் சொந்தம் தாயகத்தில் உண்டு. கருத்துப் பரிமாறல்கள் நிகழ்கின்றன. இதன் அடிப்படையில் தான்.. ராஜபக்சவின் பிரமாண்ட உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக்கு அஞ்சிய கூட்டமைப்பு.. இறுதியில் புலம்பெயர் மக்களின் காலடியில் வந்து வீழ்ந்தது. ஐயோ எங்களுக்கு ராஜபக்ச போல பண பலம் இல்ல.. உங்கட தாயக உறவுகளைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு வாக்குப் போடச் சொல்லுங்கோ என்று வந்து கெஞ்சினார்கள்.

கூட்டமைப்பு இப்போ லண்டனிலும் ஒரு கிளையை அமைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஆக.. புலம்பெயர் மக்களின் உணர்வுகளில் இருந்து தாயக மக்கள் விலகி இருக்கிறார்கள் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோடம். ஒரு குறுகிய நோக்கம் கொண்ட கண்ணோட்டமும் கூட. எதற்கெடுத்தாலும்.. தலித்தியம் பேசி சமூகக் கூறுகளை ஆழப்படுத்தும் சுகன் போன்றவர்கள் ஒரு இனம் துருவப்படுவதை இட்டு நிச்சயம் சந்தோசப்படவே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பும் கூட.

அடிப்படையில் சம்பந்தர் என்ன சாணக்கியம் செய்து எதனை இதுவரை சாதித்தார்..??! முள்ளிவாய்க்காலின் பின் சம்பந்தர் சாதித்த சாதனைகள் என்ன..??!

போராளிகளை விடுவித்தாரா..??! உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கினாரா..???! மக்களை பூரணமாக மீளக் குடியமர்த்தினாரா..??! மீளக் குடியேறிய மக்களின் புனர்வாழ்வை உறுதி செய்தாரா..??! மீண்ட போராளிகளுக்கு என்ன நலத்திட்டங்களை செய்து வருகிறார்..???! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேவையான எதையுமே சம்பந்தர் இந்த அரசுடன் பேசி சாதித்ததாகத் தெரியவில்லை. இந்த அரசுடனான இரண்டாம் கட்டப் பேச்சின் பின் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.. சிறையில் உள்ள காணாமல் போன போராளிகளின் மக்களின் விபரங்களை அரசு வெளியிடச் செய்வேன் என்று. இன்று வரை அது வந்ததாகத் தெரியவில்லை. ஒரு சாதாரண விடயத்தைக் கூட பேசி வெல்ல முடியாத சம்பந்தர்.. 64 ஆண்டு கால இனப்பிரச்சனைக்கு தமிழ் மக்கள் விரும்பும் வடிவில் ஒரு தீர்வை பெற்றுக் கொண்டுப்பார் என்பது வெறும் கனவே.

இருந்தாலும்.. அவரின் அற்ப ஆசைக்கு ஏன் தடையிடுவான் என்று விட்டுப் பிடித்தால்.. அவரோ.. எதிரிகளை பாதுகாப்பதன் மூலம்.. சலுகை பெறலாம் என்று கனவு காண்கிறார். ஏன் அதை கருணா டக்கிளஸ் செய்ய முடியவில்லை. அவர்களை விடவா சம்பந்தன் அதிகம் செய்துவிடப் போகிறார். இன்று சம்பந்தனும்.. டக்கிளசும்.. கருணாவும்.. ஒரு நேர் கோட்டில் தானே பயணிக்க நிற்கிறார்கள். இதில் சம்பந்தன் எதில் மற்றவர்களில் இருந்து வேறுபடுகிறார் என்றால்.. அவர் தேசிய தலைவரின் எண்ணத்தில் உதித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதைத் தவிர.. வேறு எதுவும் அவர் புதிதாகச் செய்யவில்லை.

சம்பந்தன் தேர்தலுக்கு தேர்தல்.. இப்படி ஒவ்வொரு குழப்பகர அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கிறார். சிங்கள அரசுடன் பேச்சு தோல்வி என்றதும்.. எந்த வகையில் போராடி என்றாலும்.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று தடாலடி.. அறிக்கையும் தருவார். இது சம்பந்தனின் எந்த வகை சாணக்கியன் என்பது அவரின் கூத்துக்கு தாளம் போடுபவர்கள் தான் விளக்க வேண்டும்..!

சம்பந்தன்.. தன்னால் முடியவில்லை என்றால் இந்த இக்கட்டான சமயத்தில் குழப்பங்களை விளைவிக்காமல்.. தகுதி வாய்ந்த இளையவர்களின் கையில் பதவியை கையளித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வதே நன்று.

அண்ணர் அர்ஜீனுக்கு, சம்பந்தனை விட சாணக்கியமான மிகப் பல பட்டங்கள் பெற்ற இளைஞர்கள் இன்று தலைமை தாங்க தயாராக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் பிரபாகரன் படிக்காதவன்.. அவருக்கு ஒன்றும் தெரியாது என்ற அந்த ஏளனமான.. அறியாமை மிகு மூட எண்ணங்கள் கொண்ட அர்ஜீன்கள் எம்மத்தியில் இன்றும் இருக்கின்றனர். நான் என் வாழ்நாளில்.. சம்பந்தனையோ.. அல்லது நீலனையோ.. அமிர்தலிங்கத்தையோ.. சிங்கள கல்விமான்கள் புகழக் கேட்டதில்லை.. (ஒப்புக்காக நீலனை புகழ்வது.. கதிர்காமரைப் புகழ்வது போன்றதல்ல).. ஆனால்.. பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பை பற்றி உளமாரப் போற்றிப் பேசிய சிங்கள பேராசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.. என் காதால் அவற்றை கேட்டிருக்கிறேன். இங்கு வந்து அர்ஜீன் என்ற அந்த பேரறிஞர் இதை மறுதலிக்க முடியாது.

அதேபோல்.. பிரபாகரனை விடவும் திறமையான இளைஞர்கள் இன்று இருக்கக் கூடும். அவர்களின் கையில் பதவியை கொடுத்துவிட்டு சம்பந்தன் இதய நோய்க்கு ஆளாகி உள்ள உடலுக்கு ஓய்வு கொடுப்பதே நன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துக்கள். நன்றி நெடுக்ஸ்.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் சொந்தம் தாயகத்தில் உண்டு. கருத்துப் பரிமாறல்கள் நிகழ்கின்றன.

இவர்கள் புலத் தமிழர்களை ஏதோ சந்திர மண்டலத்திலிருந்து வந்தவர்கள் போலல்லவா சித்தரிக்கிறார்கள். புலத்திலிருக்கும் அண்ணன் சொல்வதை தாயகத்தில் வாழும் தம்பி கேட்பானா அல்லது இந்தியாவுக்கு ஜால்ரா போடும் சம்பந்தன் சொல்வதை கேட்பானா? :wub:

எல்லோர் எழுதியதையும் இரண்டு முறை வாசித்து விட்டேன். இப்போது எனது குழப்பம்......

சம்பந்தர் எதையாவது புதிதாக அறிக்கைவிட்டு குழப்பியிருக்கிறாரா அல்லது தமிழ்னெட் புதிய குழப்பத்தை உண்டுபண்ணுகிறதா?

இந்த மூலக்கட்டுரை தமிழ்நெட்டில் வந்த ஒரு 'ஆய்வுக்கட்டுரை'. இதில் நிறையவே 'எதிர்வுகூறல்களை' ( assumptions) வைத்தே எழுதப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் அண்மையில் நடந்த தமிழக தேர்தல் முடிவுகள் போன்று எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றியை கூட்டமைப்புக்கு தந்துள்ளது. இந்த கட்டுரை மூலம் அவர்கள் சம்பந்தர் 'தவறு இழைக்கக்கூடாது' என்பதே செய்தியாக, ஒருவித அரசியல் அழுத்தமாக, தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிங்களம் போர்க்குற்ற விசாரணைகளுக்கே அதிகம் பயப்படுகிறது.(அதற்குத்தான் பொதுத்தேர்தலுக்கு செலவளிக்காத காசை பிரதேசசபைத்தேர்தலில் செலவளித்து பெருமெடுப்பில பிரச்சாரம் செய்தது).சம்பந்தர் அதையும்இல்லாமல் செய்யப் போகிறாராம்.இணக்க அரசியல் செய்ய வெளிக்கிட்டால் வீட்டுச் சின்னத்தையும் இழந்து கோவணத்துடன் நிற்க வேண்டியதுதான்.இணக்க அரசியல் செய்தவர்களின் வரலாறு தெரியா விட்டால் டக்கிளஸ் கரணா போன்றவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

2009 மேக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட உயர்ந்த அரசியல் கோரிக்கையை முன் வைத்த கஜேந்திரன் போன்றோரின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் இரண்டு தேசங்களின் இணைப்பாட்சி கோரிகையை முன்வைத்த சிவாஜிலிங்கம் போன்றோரின் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணிக்கும் விழுந்த வாக்குகள் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் நுண்ணரசியலை தெளிவாக முன்வைத்துள்ளது.

கூட்டமைப்பு உறுப்பினர்களை விட எப்பவும் ஒரு படி முன்னேறி தீவிர `தேசியம்` பேசுபவரான சிவாஜிலிங்கம் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டிதுறையில் ஆகக்கூடுதலாக 1165 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாது இடத்துக்குகே வந்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை மக்கள் அளித்த வாக்குகள் சொல்லும் நுண்ணரசியல் என்ன?

அதாவது,

இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் மூலம் கூட்டமைப்பு அடையக்கூடிய உயர்ந்த பட்ச ஒரு அரசியல் தீர்வு நோக்கி நகர்வதே ஆகும். கூட்டமைப்பினால் ஒரு சமஸ்டியை அல்ல வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைக்கூட கொண்டு வரமுடியுமென தமிழ் மக்கள் தவறுதலாகக்கூட கனவு காணவில்லை.

பிரிவினை ,போர்குற்றம் எதையும் நாங்கள் தூக்கி பிடிக்காவிடிலும் சிங்களம் எமக்கு ஒன்று தராது என்பதை இந்தியாவுக்கு காட்டுவதற்கு இந்த அறிக்கையை விட்டிருக்கலாம் (அவர் அந்த அறிக்கையை சொல்லியிருந்தால்)

இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் மூலம் கூட்டமைப்பு அடையக்கூடிய உயர்ந்த பட்ச ஒரு அரசியல் தீர்வு நோக்கி நகர்வதே ஆகும். கூட்டமைப்பினால் ஒரு சமஸ்டியை அல்ல வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைக்கூட கொண்டு வரமுடியுமென தமிழ் மக்கள் தவறுதலாகக்கூட கனவு காணவில்லை.

இது கொஞ்சம் ஒவராக தெரியவில்லை ..உங்களுக்கு

ஈழம் கேட்ட டக்கிளஸ்,பிள்ளையான்,கருணா,இனியபாரதி போன்றோர் ஜக்கிய இலங்கையில் அரசுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நின்று தோல்வியை தழுவியுள்ளனர்.

ஈழம் கேட்ட கூட்டமைப்பினர் தனித்து நின்று அமோக வெற்றியிட்டியிருக்கினம்...இதில் இருந்து என்ன தெரியுது என்றால் எங்களுக்கு பிரச்சனையிருக்கு தீர்வை தா .. என தாயக தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதுதான்......

2009 மேக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட உயர்ந்த அரசியல் கோரிக்கையை முன் வைத்த கஜேந்திரன் போன்றோரின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் இரண்டு தேசங்களின் இணைப்பாட்சி கோரிகையை முன்வைத்த சிவாஜிலிங்கம் போன்றோரின் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் ஈழம் கேட்ட டக்கிளஸ், பிள்ளையான், கருணா, இனியபாரதி போன்றோர் ஜக்கிய இலங்கையில் அரசுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நின்று தோல்வியை தழுவியுள்ளனர் என்பதாக தமிழ்த் தேர்தல் அரசியலை ஒரு panorama வாக பார்க்கப்பழகிக் கொள்ளவேண்டும்.

இதில் சுகன் என்பவரின் கருத்து மிகவும் அபந்தமானது. புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இரண்டும் இரு துருவங்கள் என்ற அதீத கற்பனையில் அவர் வாழ்கிறார். (ஒருவேளை அவரின் குடும்பங்களை அவர் முழுமையாக வெளிநாட்டுக்கு எடுத்து விட்டார் போலும்.). ஆனால் யதார்த்தம் அப்படி அன்று.

யதார்த்தம் என்றைக்கும் பேசப்பட்டதில்லை. முள்ளிவாய்க்கால் வரை உள்ள வரவிட்டு அடிப்பாங்கள் என்ற யதார்த்தத்துக்குப் புறம்பான மைய அரசியலையே பேசிவந்திருக்கின்றோம். மக்களின் வாழ்வு வதைமுகாம்களில் முடங்கிக் கிடப்பது யதார்த்தமாக இருக்க நாடுகடந்து அரசு அமைத்து அமர்வுகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். நாட்டைத் துறந்த வாழ்க்கை முறையே புலப்பெயர்வின் அடிப்படை யதார்த்தம். அதை அடியோடு நிராகரித்து தேசீயம் பேசிக்கொண்டிருக்கின்றோம். யதார்த்தம் என்பதற்கு அர்த்தமே இல்லாத நிலையில் அதுகுறித்து எதுவும் பேசுவதற்கில்லை.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் சொந்தம் தாயகத்தில் உண்டு. கருத்துப் பரிமாறல்கள் நிகழ்கின்றன.

எனது கருத்தும் அதைத்தான் சொல்கின்றது. இங்கே நிகழ்வதாகச் சொல்லப்படுவது விடுதலை குறித்த கருத்தல்ல தேசியம் குறித்த கருத்தல்ல மாறாக சிங்களத்தால் நசுக்கப்பட்ட மக்களை மேலும் எவ்வாறு சுரண்டுவதென்ற பணப்பரிமாற்றமே. பொருளாதரா அடிப்படையில் புலம்பெயர்ந்த நாம் முதல்தர முதலாளிகளாகவும் தாயகத்தில் இருக்கும் சொந்தங்கள் இரண்டாம் தர முதலாளிகளாகவும் வெளிநாட்டுத் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் உழைப்பு உறிஞ்சப்படுவதற்கு ஏதுவான புதிய வர்க்க விருத்தியே நடைபெறுகின்றது.

கருத்துப்பரிமாற்றங்களில் என்ன அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது எத்தனை லட்சம் செலவளித்து திருமணம் சமாத்தியவீடு திருவிழ உழவியந்திரங்கள் வாங்குவது சிறுவர்த்தகங்கள் உருவாக்குவது சமநிலையை குலைத்து அதீத விலையில் காணிகள் வாங்குவது ஆடம்பர வீடகள் கட்டுவது நீச்சல் குழங்கள் கட்டுவது இவ்வாறான பொருளாதார விருத்தி என்பது ஆழும் சிங்கள அரசுடன் தவிர்க்க முடியாத நெருக்கத்தை நிர்வாக ரீதியில் ஏற்படுத்தவே செய்கின்றது. இவ்வாறன உறவு நிலையை தேசியத்துக்கு எதிரானதாக கொள்ளமுடியுமே தவிர தேசியவாதமாக ஒருங்கிணைவாக இன ஐக்கியப்பாடு நோக்கிய நகர்வாக இருக்கமுடியாது. பெரு முதலாளிகள் கையில் நாடுகடந்த அரசும் சிறு முதலாளிகள் (சொந்தக்காரர்) ஊடாக அதை நடைமுறைப்படுத்துவதும் என்பதும் சிங்களப் பேரினவாதத்தை விட மோசமானதொரு சிந்தனை முறையே.

புலம்பெயர் தமிழனுக்கும் தாயகத் தமிழனுக்குமான உறவு அரசியல் ரீதியாக கட்டியெழுப்பவேண்டுமாயின் அது சொந்தக்காரனுடாடன பணப்பரிமாற்றத்தால் அதுசார்ந்த உறவுகளால் சாத்தியப்படாது மாறாக புலத்தவனின் உழைப்பு தாயகத்தில் உள்ள மக்களிற்கு சமமாக பகிரப்படவேண்டும். ஏற்றதாழ்வுகளை குறைப்பதாக இருக்கவேண்டுமே தவிர அதிகரிப்பதாக இருக்கக் கூடாது. புலத்தவன் ஒருவனின் உழைப்பு தாயகத்தில் பொருளாதரா ஏற்றதாழ்வை ஏற்படுத்துமாயின் சுரண்டலுக்கு வழிவகுக்குமாயின் அங்கே தேசியவாதம் தோற்றுப்போகும். ஏனெனில் மொழி கலாச்சாரம் பண்பாடு வாழ்விடம் எல்லாவற்றையும் தாண்டி தேசியவாதத்தில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துவது பொருளாதாரமே. பொருளாதரா முன்னேற்றம் நோக்கிய புலப்பெயர்வே மக்கள் வெளியேற்றமே தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகியது என்பதை மறுக்கமுடியாது.

சொந்தக்காரனூடான உறவுவும் பரிமாற்றமும் என்பது மிக விரைவாக சிங்கள மேல்வர்க்கத்துடன் இணைந்துகொள்ளும். இதை நாம் வரலாற்றில் நிறையவே கண்டிருக்கின்றோம். தமிழ்த்தேசியத்தை ஆரம்பித்த மேட்டுக்குடிகளும் புத்திஜீவிகளும் சிங்களத்துடன் பின்னர் கைகோர்த்துக்கொண்டதும் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இருந்து விலகிநின்றதும் ஏற்கனவே நடந்ததுதான்.

. பொருளாதரா முன்னேற்றம் நோக்கிய புலப்பெயர்வே மக்கள் வெளியேற்றமே தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகியது என்பதை மறுக்கமுடியாது.

இது சரியாகவே இருக்ககூடிய கருத்து என்று, எழுதும்போதே, சரிபார்த்துக்கொண்டீர்களா?

இதில் சுகன் என்பவரின் கருத்து மிகவும் அபந்தமானது. புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இரண்டும் இரு துருவங்கள் என்ற அதீத கற்பனையில் அவர் வாழ்கிறார். (ஒருவேளை அவரின் குடும்பங்களை அவர் முழுமையாக வெளிநாட்டுக்கு எடுத்து விட்டார் போலும்.). ஆனால் யதார்த்தம் அப்படி அன்று.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் சொந்தம் தாயகத்தில் உண்டு. கருத்துப் பரிமாறல்கள் நிகழ்கின்றன. இதன் அடிப்படையில் தான்.. ராஜபக்சவின் பிரமாண்ட உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக்கு அஞ்சிய கூட்டமைப்பு.. இறுதியில் புலம்பெயர் மக்களின் காலடியில் வந்து வீழ்ந்தது. ஐயோ எங்களுக்கு ராஜபக்ச போல பண பலம் இல்ல.. உங்கட தாயக உறவுகளைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு வாக்குப் போடச் சொல்லுங்கோ என்று வந்து கெஞ்சினார்கள்.

கூட்டமைப்பு இப்போ லண்டனிலும் ஒரு கிளையை அமைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஆக.. புலம்பெயர் மக்களின் உணர்வுகளில் இருந்து தாயக மக்கள் விலகி இருக்கிறார்கள் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோடம். ஒரு குறுகிய நோக்கம் கொண்ட கண்ணோட்டமும் கூட. எதற்கெடுத்தாலும்.. தலித்தியம் பேசி சமூகக் கூறுகளை ஆழப்படுத்தும் சுகன் போன்றவர்கள் ஒரு இனம் துருவப்படுவதை இட்டு நிச்சயம் சந்தோசப்படவே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பும் கூட.

அடிப்படையில் சம்பந்தர் என்ன சாணக்கியம் செய்து எதனை இதுவரை சாதித்தார்..??! முள்ளிவாய்க்காலின் பின் சம்பந்தர் சாதித்த சாதனைகள் என்ன..??!

போராளிகளை விடுவித்தாரா..??! உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கினாரா..???! மக்களை பூரணமாக மீளக் குடியமர்த்தினாரா..??! மீளக் குடியேறிய மக்களின் புனர்வாழ்வை உறுதி செய்தாரா..??! மீண்ட போராளிகளுக்கு என்ன நலத்திட்டங்களை செய்து வருகிறார்..???! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேவையான எதையுமே சம்பந்தர் இந்த அரசுடன் பேசி சாதித்ததாகத் தெரியவில்லை. இந்த அரசுடனான இரண்டாம் கட்டப் பேச்சின் பின் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.. சிறையில் உள்ள காணாமல் போன போராளிகளின் மக்களின் விபரங்களை அரசு வெளியிடச் செய்வேன் என்று. இன்று வரை அது வந்ததாகத் தெரியவில்லை. ஒரு சாதாரண விடயத்தைக் கூட பேசி வெல்ல முடியாத சம்பந்தர்.. 64 ஆண்டு கால இனப்பிரச்சனைக்கு தமிழ் மக்கள் விரும்பும் வடிவில் ஒரு தீர்வை பெற்றுக் கொண்டுப்பார் என்பது வெறும் கனவே.

இருந்தாலும்.. அவரின் அற்ப ஆசைக்கு ஏன் தடையிடுவான் என்று விட்டுப் பிடித்தால்.. அவரோ.. எதிரிகளை பாதுகாப்பதன் மூலம்.. சலுகை பெறலாம் என்று கனவு காண்கிறார். ஏன் அதை கருணா டக்கிளஸ் செய்ய முடியவில்லை. அவர்களை விடவா சம்பந்தன் அதிகம் செய்துவிடப் போகிறார். இன்று சம்பந்தனும்.. டக்கிளசும்.. கருணாவும்.. ஒரு நேர் கோட்டில் தானே பயணிக்க நிற்கிறார்கள். இதில் சம்பந்தன் எதில் மற்றவர்களில் இருந்து வேறுபடுகிறார் என்றால்.. அவர் தேசிய தலைவரின் எண்ணத்தில் உதித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதைத் தவிர.. வேறு எதுவும் அவர் புதிதாகச் செய்யவில்லை.

சம்பந்தன் தேர்தலுக்கு தேர்தல்.. இப்படி ஒவ்வொரு குழப்பகர அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கிறார். சிங்கள அரசுடன் பேச்சு தோல்வி என்றதும்.. எந்த வகையில் போராடி என்றாலும்.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று தடாலடி.. அறிக்கையும் தருவார். இது சம்பந்தனின் எந்த வகை சாணக்கியன் என்பது அவரின் கூத்துக்கு தாளம் போடுபவர்கள் தான் விளக்க வேண்டும்..!

சம்பந்தன்.. தன்னால் முடியவில்லை என்றால் இந்த இக்கட்டான சமயத்தில் குழப்பங்களை விளைவிக்காமல்.. தகுதி வாய்ந்த இளையவர்களின் கையில் பதவியை கையளித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வதே நன்று.

அண்ணர் அர்ஜீனுக்கு, சம்பந்தனை விட சாணக்கியமான மிகப் பல பட்டங்கள் பெற்ற இளைஞர்கள் இன்று தலைமை தாங்க தயாராக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் பிரபாகரன் படிக்காதவன்.. அவருக்கு ஒன்றும் தெரியாது என்ற அந்த ஏளனமான.. அறியாமை மிகு மூட எண்ணங்கள் கொண்ட அர்ஜீன்கள் எம்மத்தியில் இன்றும் இருக்கின்றனர். நான் என் வாழ்நாளில்.. சம்பந்தனையோ.. அல்லது நீலனையோ.. அமிர்தலிங்கத்தையோ.. சிங்கள கல்விமான்கள் புகழக் கேட்டதில்லை.. (ஒப்புக்காக நீலனை புகழ்வது.. கதிர்காமரைப் புகழ்வது போன்றதல்ல).. ஆனால்.. பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பை பற்றி உளமாரப் போற்றிப் பேசிய சிங்கள பேராசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.. என் காதால் அவற்றை கேட்டிருக்கிறேன். இங்கு வந்து அர்ஜீன் என்ற அந்த பேரறிஞர் இதை மறுதலிக்க முடியாது.

அதேபோல்.. பிரபாகரனை விடவும் திறமையான இளைஞர்கள் இன்று இருக்கக் கூடும். அவர்களின் கையில் பதவியை கொடுத்துவிட்டு சம்பந்தன் இதய நோய்க்கு ஆளாகி உள்ள உடலுக்கு ஓய்வு கொடுப்பதே நன்று.

நல்ல கருத்துக்கள்.

பிரபாகரனைப் போல் தமிழின விரோதிகளை எதிர்கொள்ளும் சிறப்புத் திறமைகள் உள்ள இளைஞர்களிடம் ... என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறுக்கவில்லை!

தமிழீழபோராட்டம் தோற்றுப்போனதற்க்கு, புலம்பெயர் தமிழனை குற்றம் சாட்ட எவருக்கும் அருகதையில்லை!

இந்த புலம்பெயர் தமிழன் மட்டுமில்லையென்றால், பழைய 303,ஷொட் கண்,இத்துப்போன, இந்தியன் எஸ்.எல்.ஆர், எஸ்.எம்.ஜி, வேலை செய்யுமோ செய்யாதோ என்ற நிலையிலிருந்த ஏ3ஜி3, ஏ1ஜி3.....என்று எதிரியுடன் ஒப்பிடுகையில் ...ஆயுத ரீதியில் சமநிலை இல்லாது எப்போதோ அழிந்து போயிருக்கும் புலிகள் இயக்கம் !

உலகம் முழுவதும் கைவிட்ட நிலையிலும் ஜெயசிக்குறு நடவடிக்கையில், அங்கு சிக்கிகொண்ட மக்கள்போராளிகளுக்கான, உணவுத்தேவை, உயிர்காப்பு மருந்துகள், அதனையும்மேவி,போராளிகளுக்கான ஆயுத பலத்தை தந்ததும் ,புலம்பெயர் தமிழனே!

அதனால்தான்,ஓடிபோனவர்கள் என்று புலம்பெயர்தமிழனை அழைத்த அதே கவி.புதுவை , புலம்பெயர்ந்த நம் சொந்தங்களே என்று பாசம் ஒழுக அழைத்தார்!

பொருளாதார உதவி ஒரு புறம் போகட்டும், அரசியல் நகர்வாய்...கொட்டும்பனியிலும் குளிரிலும்,முதியவர்கள்,பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள்,பெண்கள் என.............எமக்காய் நீதிகேட்டு எத்தனை நாள் வீதிவீதியாய் தம் சக்தி தேயும்வரை அலைந்தார்கள்?

இன்று விடுதலைபோராட்டம் தோற்றதற்கு பிரதான காரணம், புலம்பெயர் தமிழன் இல்லை மிஸ்டர்.சுகன்!.

களத்தின் சம நிலையை புரட்டிப்போட்டு,மண் அள்ளிமூடி எமது போராடடத்திற்க்கு ஈமசடங்கு நடாத்தியது ஒப்பீட்டளவில் எம்மிடம் துளியளவு கூட இல்லா, எதிரியின் கனரக ஆயுதங்களே!! அதனை ஈடு செய்யக்கூடிய வழிகள் எமக்கு தடைப்பட்டதுமே!

புலம்பெயர் மக்கள் பிரதானமாய் இருந்ததாலல்ல!.......இன்று புலிகளில்லை...இதே புலம்பெயர் தமிழன்தான் சிங்களவனுக்கு மிகப்பெரிய ஆப்பு எங்கிறது, யாருக்கு விளங்குதோ....இல்லையோ.......... மஹிந்தவுக்கு நன்னாவே தெரியும்!

சுகனுக்கு புரியுதோ இல்லியோ.........இதுல இருந்து சிங்களவன் புரிந்து கொண்டது என்னான்னா............புலிகள் விட்டாலும்,புலம்பெயர்தமிழர்கள் சிங்களவனை விடுவதாய் இல்லை!!!

எமது தொடரும் விடுதலைப்போராட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கி முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் புலம்பெயர் மக்களின் கைகளில் தரப்பட்ட நிலையில், சிலர் இன்று அது ஏன் தோற்றது என விளக்கங்கள் தந்தவண்ணம் உள்ளனர். அதில் இது புதுமையானது:

பொருளாதரா முன்னேற்றம் நோக்கிய புலப்பெயர்வே மக்கள் வெளியேற்றமே தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகியது என்பதை மறுக்கமுடியாது.

மேலே உள்ள கூற்று, கீழே உள்ள இனவழிப்புக்காரனின் செய்தியை உண்மையாக்குகின்றது.

அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார்.

அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.

2009 மேக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட உயர்ந்த அரசியல் கோரிக்கையை முன் வைத்த கஜேந்திரன் போன்றோரின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் இரண்டு தேசங்களின் இணைப்பாட்சி கோரிகையை முன்வைத்த சிவாஜிலிங்கம் போன்றோரின் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணிக்கும் விழுந்த வாக்குகள் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் நுண்ணரசியலை தெளிவாக முன்வைத்துள்ளது.

ஜனநாயகம் என்பது நுண்ணறிவு குறைந்த அரசியல் அமைப்பு முறை. ஒரு தனிபட்ட நபரை, நம்புவது நம்பாததில் கூட தங்கியுள்ளது. அவரின் கொள்கைகள் புறக்கணிக்கபடலாம். புஸ்சும் கிட்லரும் பதவிக்கு வந்தவர்கள். வடக்கு-கிழக்கு தற்காலங்களில் இலங்கையில் கல்வி அறிவுகுறைந்த மாகாணங்கள். அவர்கள் ஒருநேர வயிற்று சோறுக்கு தாளம் போடுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, மக்களை மடையராக நினைத்து, அரசாங்கம் சோற்றுபாசல் கொடுத்து வாக்கு வாங்க பார்த்தது. இந்த உண்மையை மறைத்து, தமிழ்மக்களின் நுண்ணரசியலை மெச்சப்போவது என்பது உண்மையான மனச்சாட்சியான ஒரு ஆய்வு அல்ல.

அரசு 50 யாருக்கு ஒரு ஆமி மாதிரி போட்டு அவர்களைக்காவலில் வைத்திருக்கிறது. 110,000 ஊறவினர்களை ஒருமாதத்தில் கொலை செய்தது. ஒரு தமிழ்ப்பெண், தனது களைக்கோ, பசிக்கோ, நோய்க்கோ சரி, பசாசுகள் அலையும் சூழலில் ஒருநாள் தன் வேதனைக்கு நிம்மதியாக படுத்து எழும்பமுடியாது. இந்த நிலைக்கு தம்மை ஆக்கி வைத்திருக்கும் அரசாங்கத்தை விளக்குமாறு எடுத்து விரட்டி கலைக்க வாகளித்தார்களே தவிர, அவர்கள் தேவானந்தா வேண்டுமேன்றோ, ஆனந்தசங்கரி வேண்டுமென்றோ வாக்களிக்கவில்லை. கிட்டலர் தவறுதலாகக்கூட கனவு காணதவற்றைல்லாம் தமிழ்மக்களுக்கு செய்துவிட்டு அரசாங்கம் அவர்களுக்கு அரசியல் படிப்பிக்கபோய், அவர்களிடம் தேவையானபடி வாங்கிக்கட்டிய போது அதற்குள் சிவாஜிலிங்கம் என்ன கஜேந்திரன் பெரிய மாறுதலைக் கொண்டு வந்திருக்க முடியாது. தமிழரசுக்கட்சியை விட்டுபோனதற்காக நவரத்தினத்தை கைவிட்டு விட்டு தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த ஊர்காவத்துறை மக்கள் இந்தமுறை தமிழரசுக்கட்சிக்கு காட்டியிருக்கும் நுண்ணரசியலை பார்த்தால் தெரியும் எல்லாம் எங்கே நிற்கின்றன என்று.

இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் மூலம் கூட்டமைப்பு அடையக்கூடிய உயர்ந்த பட்ச ஒரு அரசியல் தீர்வு நோக்கி நகர்வதே ஆகும்.

கூட்டமைப்பு எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தருவதை பெற்று கொள்ளபோகிறோம் என்று கூறவில்லை. யாரும் எந்த கூட்டமைப்பு பிரதிநிதியையும் கொண்டு இதை ஒப்பிவிக்கமுடியாது. கூட்டமைப்பு சொல்லாத ஒன்றுக்கு வாக்களிக்க போகும் தமிழ்மக்களுக்கும், தமிழ்மக்கள் சொல்லாத ஒன்றை செய்யபோகும் கூட்டமைப்புக்கும் பெரிய நுண்ணரசியல் தெரியுமென்றால் அந்தகதை சோற்றுப்பாசல் கொடுத்து வாக்கு வாங்க நினைத்த அரசியலுக்கு சரி.

கூட்டமைப்பினால் ஒரு சமஸ்டியை அல்ல வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைக்கூட கொண்டு வரமுடியுமென தமிழ் மக்கள் தவறுதலாகக்கூட கனவு காணவில்லை.

அது மட்டுமல்ல அரசு, கூட்டமைப்பு எதையாவது கேட்டால் துரியோதனன் கூறியதுபோல் 'ஐந்து ஈ அமரக்கூட இடம் தரமாட்டேன்" என்று சொல்லும் என்பதும் அவர்களின் நுண்ணரசியலுக்கு புரியும். அரசு சோற்றுப்பாசலுடன் அவர்களின் நுண்ணரசியல் அறிவை வாங்கபார்த்தது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளின் அழுத்தத்தால் அரசின் ஏமாற்று பேச்சுவார்தைகளுகு போகும் போது தாம் கூட்டமைப்புடன் தான் இருக்கிறார்கள் என்று வெளி நாடுகளுக்கு காட்டி கொள்ளவே இப்படி வாக்களித்தார்கள். சிங்கள அரசு ஐந்து ஈ ஆடும் இடம் கூட கூட்டமைப்புக்கு கொடுக்காது. அதை வெளி நாடுகள் தான் தீர்த்துவைக்கவேண்டும். கூட்டமைப்பு இந்தியா காணும் என்று நினைக்கிறது. புலம் பெயர்மக்களின் முயற்ச்சி, சர்வதேச தலையீடாகும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.