Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன்:ரொட்னாம் (Tottenham) பகுதியில் கலவரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்னாம் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கடந்த வியாழன் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் காவல்துறைக்கு எதிராக வன்முறையில் இறங்கியதால்.. நேற்றுப் பிற்பகலில் இருந்து இரவு உட்பட அப்பகுதியில் தீவிர கலகம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காவல்துறைக்குச் சொந்தமான ரோந்து வாகனங்கள்.. பொதுமக்கள் பயணிக்கும் இரட்டை அடுக்கு பேரூந்து.. கடைகள்... சொத்துக்களுக்கு தீயிடப்பட்டுள்ளதுடன்.. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டும் உள்ளன.

அப்பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தும்.. இரவு பெற்றோல் குண்டுகள் வீசி தீமூட்டும் செயல்களில் வன்முறைக் கும்பல்கள் ஈடுபட்டிருந்ததை பிபிசி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இருந்தும் கலகம் அடக்கும் காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு கலகத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.

காவல்துறை தரப்பில் இதுவரை 10க்கும் உட்பட்டவர்களுக்கு இந்தக் கலகத்தால் காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.. யாரேனும் யாழ் கள உறவுகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ என்று தெரியவில்லை..?!

மேலதிக விபரங்கள் இங்கு...

http://www.bbc.co.uk/news/uk-england-london-14434318

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நான் தப்பினதே அருந் தப்பு :lol:

கடவுளே நான் இரண்டு நாட்களுக்கு முதல்தான் இந்தப்பக்கமாக ஒருதங்களை பார்க்கப்போய் வந்தேன் நல்ல காலம் தப்பிவிட்டன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நான் தப்பினதே அருந் தப்பு :lol:

சும்மா விடாதீங்கோ.................... ரதி நீங்கள் என்ன EDMONTON இல் அல்லது ENFIELD இல் அல்லது WALTHAMSTOW இல்லா அல்லது SEVAN SISTER இல் அல்லது WOODGREEN இல் இருக்கின்றீர்கள் ...?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா விடாதீங்கோ.................... ரதி நீங்கள் என்ன EDMONTON இல் அல்லது ENFIELD இல் அல்லது WALTHAMSTOW இல்லா அல்லது SEVAN SISTER இல் அல்லது WOODGREEN இல் இருக்கின்றீர்கள் ...?

இல்லையே ரதி டொட்னாமில்[TOTTENHAM] கூட இருக்கலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே ரதி டொட்னாமில்[TOTTENHAM] கூட இருக்கலாம் ^_^

ஹ .......ஹ ....... :lol: :lol: :lol: :lol:

Edited by Newsbot

  • கருத்துக்கள உறவுகள்

ஹ .......ஹ ....... :lol: :lol: :lol: :lol:

எதற்கு சிரிப்பு என்டு சொன்னால் எல்லோரும் சேர்ந்து சிரிக்கலாமெல்லோ

ஒரு இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து சமூக விரோதிகள் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களும் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள் போலுள்ளது. இதில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பும் அதிகமாம்.

கறுப்பு இனத்தவர்கள் அதிகம் வாழுமிடம். நீண்டகாலமாகவே பெரிதான அபிவிரித்த்திகளோ சமூக முன்னேற்றமோ இன்றி குற்றச் செயல்களுக்கு பெயர் போன இடம். இதுகால வரை இங்கு உள்ள கறுப்பு இனத்தவர்களின் அரசியல் தலைவர்களும் தங்களின் வாக்கு வங்கியாகவே இம் மக்களை பாவித்தார்கள். அவர்களின் முன்னேற்றம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை.

தமிழர்கள் Tottenham குறைவாகவே வாழ்கிறார்கள்.

இதனை அண்டியுள்ள Woodgreen , Edmondon , Walthamsow போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சூறையாடப் பட்ட கடைகளுக்கு நட்டம் இல்லை. அவை இழந்தவற்றுக்கு மேலால் காப்புறுதியில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் இப்படியான சூறையாடல் இங்கிலாந்தில் நடந்தது என்னும் போது.... அதன் மீது வைத்திருந்த மதிப்பு குறைகின்றது.

பொலிசார் அதனை ஆரம்பத்திலேயே... கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்திருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் பிரான்சில் இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்ட போது கூட பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தினார்களே தவிர கடைகளை உடைத்து கொள்ளையடிக்கவில்லை.

ஆனால் இப்படியான சூறையாடல் இங்கிலாந்தில் நடந்தது என்னும் போது.... அதன் மீது வைத்திருந்த மதிப்பு குறைகின்றது.

அடப்பாவமே, இந்த பிரித்தானியர்கள் பெரிய குழப்பம்காலிகள்.

இவர்கள் எந்த உதைபந்தாட்ட போட்டிகளிலும் பெரிய குழப்பம் விழைவிக்கும் கில்லாடிகள்.

நேற்றிரவும் Walthamstow , Ponders End , Enfield , Brixton ஆகிய இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

சில இடங்களில் களவெடுத்த பொருட்களை மலிவு விலையில் விற்கிறார்களாம்.

மக் டொனால்ட்ஸ் ஒன்றில் 'பேர்கர்' பொரித்துச் சாப்பிட்டார்களாம். :D

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவும் Walthamstow , Ponders End , Enfield , Brixton ஆகிய இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

சில இடங்களில் களவெடுத்த பொருட்களை மலிவு விலையில் விற்கிறார்களாம்.

மக் டொனால்ட்ஸ் ஒன்றில் 'பேர்கர்' பொரித்துச் சாப்பிட்டார்களாம். :D

சூறையாடியவர்களுக்கு, சாமத்திலை பசி வந்திட்டுது போலை.... :lol:

இங்குள்ள தொலைக்காட்சியில் பார்த்தேன்... எதிர் பார்த்ததை விட மிக மோசமாக தீ வைப்பும், கொள்ளையடிப்பும் நடந்துள்ளது.

சூறையாடியவர்களுக்கு, சாமத்திலை பசி வந்திட்டுது போலை.... :lol:

இங்குள்ள தொலைக்காட்சியில் பார்த்தேன்... எதிர் பார்த்ததை விட மிக மோசமாக தீ வைப்பும், கொள்ளையடிப்பும் நடந்துள்ளது.

ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுதொகையினர். சந்தர்ப்பத்தைப் பாவித்து சமூக விரோதிகளும் களவேடுப்பவர்களும் ஜோதியில் கலந்துகொண்டார்கள்.

இனவாத வெள்ளை பெண் அரசியல்வாதி ஒருவர், இங்கு வெள்ளை அல்லாதவர்கள் வருகிறார்கள் எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை, நான் இங்கிலாந்திற்குப் போகிறேன் அன்று சொல்லி உங்கு வந்தார். கொஞ்ச நாள் இருக்கும்.. இங்கிலாந்து வெள்ளைக்கார நாடே அல்ல என்று சொல்லி திரும்பவும் இங்கு ஓடி வந்து விட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் இங்குள்ள அரச,வர்த்தக நிறுவனங்களை நேரத்துடன் மூடச் சொல்லி காவல் துறையினரின் கட்டளையிட்டதால் நகரம் வெறிச் சோடியுள்ளது :(

Hackney, Peckham, Lewishamஆகிய இடங்களிலும் பதட்ட நிலை உருவாகியுள்ளது பகுதியில் Double Decker பஸ் ஒன்றும் தீயிடப்பட்டுள்ளது.

riots-in-hackney-pic-bbc-626290892.jpg

a-bus-is-attacked-during-riots-in-hackney-pic-sky-245908596.jpg

இன்று பிற்பகல் Hackney London Oxford Street, Walthamstow, Chingford Enfield போன்றபகுதிகளில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. Facebook, Twitter and Blackberry மூலம் குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று பலரால் கூறப்படுவதால் தயவு செய்து உங்கள் குடும்பத்தில் உள்ள இளையோர்களையும், நண்பர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள். இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கூறுங்கள்.

http://www.bbc.co.uk/news/10318089

Birmingham கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அங்கும் பதட்ட நிலை உருவாகியுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பொலிஸ் ரொம்ப..... நல்லவங்களா.... இருக்கிறாங்க. குட்டி.

நிலைமை மிக மோசமாகிக் கொண்டு போகின்றது போல் உள்ளது.

லண்டன் பொலிஸ் ரொம்ப..... நல்லவங்களா.... இருக்கிறாங்க. குட்டி.

நிலைமை மிக மோசமாகிக் கொண்டு போகின்றது போல் உள்ளது.

Eastham இலும் ஆரம்பித்து விட்டதாக அறிவித்துள்ளார்கள்...

பிரித்தானிய பிரதம மந்திரி, உள்ளநாட்டுதுறை அமைச்சர், லண்டன் மேயர் எல்லோரும் கோடை விடுமுறையில் போயிருக்கும் நேரம் பார்த்து போட்டுத்தாக்கிறாங்கள், ஒரு நல்ல தலைமையின் கட்டளை இல்லாமல் லண்டன் இப்படி ஆகிக் கொண்டு போகிறது.. விடுமுறையை பாதியில் நிறுத்தி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்கள்... (ஆமியின் தலையீட்டால் இதனை நிறுத்த முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் வந்ததும் என்ன நடக்குது என்று பார்ப்பம்...)

லண்டன் பொலிஸ் ரொம்ப..... நல்லவங்களா.... இருக்கிறாங்க. குட்டி.

நிலைமை மிக மோசமாகிக் கொண்டு போகின்றது போல் உள்ளது.

விட்டால் பூந்து விளையாடுவார்கள். வெளியில் தெரியாது. கைகள் கட்டப்பட்டுள்ளன.

அரசின் கடன் சேமிப்புத் திட்டத்தால் போலீசார் பலரும் வேலை இழக்கிறார்கள். அதனால் வெறும் கடமைக்கே நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் பூந்து விளையாடுவார்கள். வெளியில் தெரியாது. கைகள் கட்டப்பட்டுள்ளன.

அரசின் கடன் சேமிப்புத் திட்டத்தால் போலீசார் பலரும் வேலை இழக்கிறார்கள். அதனால் வெறும் கடமைக்கே நிற்கிறார்கள்.

தப்பிலி, உவையளை ஒரு நாளில் அடக்க.... ஜேர்மன் பொலிஸை அனுப்பவா? gifauto_0052.gif

Edited by தமிழ் சிறி

தப்பிலி, உவையளை ஒரு நாளில் அடக்க.... ஜேர்மன் பொலிஸை அனுப்பவா? gifauto_0052.gif

ஒருமுறை ஜெர்மனியில் கண்ட அனுபவம் உண்டு. வெளியில் வைத்தே அடிப்பார்கள்.

லண்டன் போலிஸ் உள்ளுக்குள் வைத்தே முடித்து விடும். :D

ஜேர்மனி பொலிஸ் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது, ஆமியை இறக்குவதை தவிர. ஆமியால் மட்டுமே முடியும், என்னம் ஒன்று இரன்டு நாட்களுக்கு தொடந்தால் ஆமியை கொன்டுவருவார்கள், சூட்டீங்க் ஆடருடன்.

தற்பொழுது ஈஸ்ராகாம் நிலமை கொன்சம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, ஆனால் பார்க்கிங்கில் அடக்கமுடியவில்லை, 75%கறுப்பினத்தவர்களுடன் அடிமட்ட வெள்ளையளும் இதில் ஈடுபட்டுள்ளதை கண்ணூடாக பார்க்க முடிந்தது.

இஸ்ராகாம் பார்க்கிங்கிலிருந்து புலி ஒண்டிப்புலி. :)

வன்முறை தீவிரமாக பரவுகிறது.

ஒலிம்பிக் ஸ்டேடியம் தீக்கிரையாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. விடுமுறையில் இருந்த பிரதமரும் நகரபிதாவும் இன்றுதான் விழித்தெழுந்து நாடு திரும்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.