Jump to content

சமையல்:நெத்திலிக் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'செப்' தாமு -19/08/2011

Smelts%20Fish%20Curry-jpg-1092.jpg

நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க... நெத்திலி குழம்பு வைக்கதானே......

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - ஒரு கை அளவு

தக்காளி - 3

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன்

தனியா தூள் - 3 டீ ஸ்பூன்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

எண்ணை - ஒரு குழிக்கரண்டி

கடுகு - ஒரு டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.

* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.

* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.

* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாருங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.

http://www.koodal.com/women/cooking/recipes.asp?id=1092&title=smelts-fish-curry

Link to comment
Share on other sites

நெத்தலிக் குழம்பு பார்க்க நன்றாக உள்ளது. :)

நெத்தலியை பொரித்தால் அல்லது தீயல் வைத்தால் சுவை அதிகம் :wub:

(ஒரு சந்தேகம் :unsure: நெய்த்தோலி தான் நெத்தலியாக மாறியதா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி பொரித்தும்,தீயல் செய்து சாப்பிடுவதும் தான் சுவை,சொதி வைத்தால் இடியப்பதுடன் சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி பொரித்தும்,தீயல் செய்து சாப்பிடுவதும் தான் சுவை,சொதி வைத்தால் இடியப்பதுடன் சாப்பிடலாம்

நல்ல சுவையாக சப்பிடுவிங்கள் போல் தெரிகின்றது. :D

நெத்தலிக் குழம்பு பார்க்க நன்றாக உள்ளது. :)

நெத்தலியை பொரித்தால் அல்லது தீயல் வைத்தால் சுவை அதிகம் :wub:

(ஒரு சந்தேகம் :unsure: நெய்த்தோலி தான் நெத்தலியாக மாறியதா?)

சின்ன வெங்காயம் அதிகம் சேர்த்தால் சூப்பராக இருக்கும் நண்பா ............ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலிக்கருவாட்டில் புளி வறுவல் செய்தாலே தனிச்சுவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலிக்கருவாட்டில் புளி வறுவல் செய்தாலே தனிச்சுவை

அது எப்படி செய்வது, கொஞ்சம் தகவல் தந்தால் செய்துபார்க்கலாம்.

Link to comment
Share on other sites

நெத்தலி குழம்பு உடலுக்கு நல்லது இதில் நிறைய கல்சியம் இரும்பு சத்து இருப்பதினால் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நன்று

Link to comment
Share on other sites

...

சின்ன வெங்காயம் அதிகம் சேர்த்தால் சூப்பராக இருக்கும் நண்பா ............ :D

ஓம் தமிழ் அரசு அண்ண, எங்கட அம்மம்மாட தீயலே தனி ருசி! :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெத்தலியில்..... குழம்பு கைக்கலாம், சொதி வைக்கலாம், பொரித்தும் சாப்பிடலாம்.

இதில் உள்ள முள்ளை இலகுவில் அகற்றலாம், என்பது இதன் தனிச் சிறப்பு.

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவலிற்கு, நான் பொரிந்து சாப்பிடுவதுதான் அதிகம், பிள்ளைகளுக்கும் கூட அதுதான் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலிக்கருவாட்டில் புளி வறுவல் செய்தாலே தனிச்சுவை

பக்கத்துவீட்டு வெள்ளையளை வெறுப்பேத்தோணுமெண்டால் கொஞ்ச நெத்தலிக்கருவாடு சொன்ன சாமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்துவீட்டு வெள்ளையளை வெறுப்பேத்தோணுமெண்டால் கொஞ்ச நெத்தலிக்கருவாடு சொன்ன சாமான்.

இப்போது வெள்ளையல் எமது சாப்பாட்டை பார்த்தால் நாக்கை தொங்க விடுகின்றனர் ஆசிய நாட்டு உணவகங்களில் பெரும்பாலான வெள்ளை இனத்தவர்கள்தான் கணக் ௬டியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

நெத்தலி மீனை தூள் / வெங்காயம் / பச்சை கொச்சிக்காய் போட்டு பிரட்டி எடுத்தால் புட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
தேங்காய் பால் - அரை டம்ளர்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை :

* மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும். 

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 

* புளியை கரைத்து வைக்கவும்.

* இஞ்சியை விழுதாக அரைக்கவும்.

BB4A65C5-080F-45F7-89AE-47201749A27A_L_s

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

4AC0E919-1EA2-4ABE-BA0B-FCAB9D7AEC78_L_s

* தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும். 

* அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

13833233-7B6E-4DDE-9E0C-7520F244084C_L_s

* அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும். 

61603642-067F-42A0-B62B-E36190A33B33_L_s

* மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

13DDE216-C6D4-473C-84EF-F06F4E5BB3E8_L_s

* நெத்திலி மீன் குழம்பு ரெடி.

 

http://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2016/07/11105452/1024886/nethili-fish-kulambu.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.