Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ வினா விடை

Featured Replies

  • தொடங்கியவர்

4. சிவ மூலமந்திர இயல்

1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீக்ஷை பெற்றவராய் உள்ளவர்.

3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?

கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.

5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?

சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.

7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?

சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.

8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?

உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.

9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?

வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.

  • Replies 95
  • Views 19.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நித்திய கரும இயல்

1. நாடோறும் நியமமாக எந்த நேரத்தில் நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை விட்டெழுதல் வேண்டும்.

2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

விபூதி தரித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல் வேண்டும்.

மலசமோசனம்

3. அதற்குப் பின் யாது செய்யத் தக்கது?

மலசல மோசனஞ் செய்யத்தக்கது.

4. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்?

திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி இடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்.

5. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் ஆகாது?

வழியிலும், குழியிலும், நீர்நிலைகளிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும், சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், அறுகம் பூமியிலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும், மலையிலும், மலசலங் கழித்தல் ஆகாது.

6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?

பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.

7. எப்படி இருந்து மலசலங் க்ழித்தல் வேண்டும்?

தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.

8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.

10.இப்படி செய்தபின் யாது செய்தல் வேண்டும்?

அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும், கண்களையும், நாசியையும், காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத் தரஞ் சலம் வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.

11.வாய் கொப்ப்ளித்த பின் யாது செய்தல் வேண்டும்?

தலைக்கட்டு இல்லாமல் மூன்று முறை ஆசமனஞ் செய்தல் வேண்டும்.

12.ஆசமனம் எப்படி செய்தல் வேண்டும்?

வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரல் அடியில் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

13.சௌசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லையானால் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் கொண்டு, ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலங் கழித்து சௌசஞ் செய்து விட்டு பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலங்கொண்டு, வாய் கொப்ப்ளித்துக் கால் கழுவுதல் வேண்டும்.

  • தொடங்கியவர்

God-shiva-wallpaper-with-12-jyoti-ling.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாவலர்! தொடருங்கள் வாழ்த்துகள்!!

  • 5 months later...
  • தொடங்கியவர்
Creative_Wallpaper_Lord_Shiva_026484_.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ArumugaNavalar அவர்களே,

உங்கள் ஆக்கம் சிறப்பு. முடிந்தவரையில் ஆங்கிலத்திலும், தந்தீர்களானால் குழந்தைகளைப் பார்க்க வைக்க முடியும். வளர்ந்தோருக்கு வழங்கினால் சில வேலை கிண்டல்களும் வரும்.

இங்கே தமிழ் கற்க வைப்பதே பெரும் பாடு. அதன் பின்னர் சமயம் கற்க வைப்பது மிகவும் கடினம்.

இந்து சமயம் பல தலை முறைகளைக் கடந்து வந்துள்ளது. அவ்வப் போது வாழ்ந்தவர்கள் தங்கள் கால மக்களின் புரிதலுக்கு ஏற்ப கருத்துக்களை, கதைகளாக கூறி உள்ளனர். அதனை இப்போது உள்ள வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள குழந்தைகளுக்கு அதனையே சொல்லும் போது மிகக் கவனமாக சொல்ல வேண்டும்.

உதாரணமாக அம்மா உமாதேவியார் குளிக்கும் போது வந்த அப்பா சிவபெருமானைத் தடுத்தால் கோபம் கொண்ட அப்பா பிள்ளையின் தலையினை வெட்டி பின் உமாதேவியார் கவலை கொண்டதால் முதலில் எதிர்ப்பட்ட யானை ஒன்றின் தலையினை எடுத்து வைத்த தாலே பிள்ளையாருக்கு யானைத் தலை வந்தது என்று சொன்னால் எந்த பிள்ளையும் 'How can a God do this violent act' என்றே கேட்கும்.

இவ் வகை கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அந்த வகையில் எனக்குப் திருப்தியாகப் பட்ட ஒரு தளம் www.hindukidsworld.org. இந்த தளம் கூட ஆறுமுக நாவலருக்கு சமர்ப்பணம் செய்யப் பட்ட ஒன்று தான்.

அதனையும் பாருங்கள். தொடருங்கள். நன்றி.

மேலும் நீங்கள் admin@hindukidsworld.org ஊடாக அவர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் ஆக்கங்கள் அங்கே வருவதற்க்கு உதவலாம் என்பது எனது தாழ்மையான கோரிக்கை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி,

உங்கள் கேள்விகள் புரிகின்றது.

வியபிசாரம் = பிறர் பெண் அடைய விரும்புதல் என நினைக்கின்றேன்.

இன்னும் பார்த்தால் சிவனுக்கு 'ஹரிஹரன்' எனும் புதல்வர் கூட இருக்கின்றார்.

இறைவன் என்பது ஒரு பயபக்தியான உணர்வு. அது எம்மை ஒரு ஒழுக்கமுடன் வாழ வைக்கும்.

ஒரு அளவுக்கு மேல் கேள்வி கேட்க கிளம்பிய பெரியார் ஒழுக்கம் இழந்து தனது முதிய வயதில் ஒரு வயது குறைந்த பெண்ணை மணம் செய்து நாறினார்.

அதே பகுத்தறிவு பேசிய கருணாநிதி ஒழுக்கம் இழந்து மூன்று மனைவிகளுடனும் ஒரு மகள் சிறை செல்ல வைக்கும் அளவுக்கு தாளவில்லையா?

ஆணாதிக்கம் மிக்க தமிழகத்தில் சொந்தங்கள் ஏதும் இன்றி இறைதுணை மட்டுமே கொண்ட ஜெயலலிதா சாதித்தது ஏராளம் என்பது எனது தாழ்மையான கருத்து.

உலெகங்கும் கிளைகள் கொண்ட புகழ் பூத்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், வியபிசாரம் காரணமாக ஒழுக்கம் கெட்டு, கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர் முருகபக்தர்.

சமயங்கள் போதிப்பதில் எமக்கு தேவையான விடயங்களை மட்டும் எடுப்போம்.

பிடிக்காவிடில் ஒதுங்கி நிற்போமே, நன்றி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

அன்புள்ள நாதமுனி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70942

இந்த திரியில் ஆங்கில சைவ வினா விடை உள்ளது.

  • தொடங்கியவர்

தந்த சுத்தி

14.சௌசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?

தந்தசுத்தி செய்யத் தக்கது.

15.எதனாலே தந்த சுத்தி செய்தல் வேண்டும்?

சலத்தினாலே கழுவப் பெற்ற பற்கொம்பினாலேனும், இலையினாலுலேனுந் தந்த சுத்தி செய்தல் வேண்டும்.

16.எந்தத் திக்கு முகமாக இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்?

கிழக்கு முக்மாகவேனும், வடக்கு முகமாகவேனும், இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்.

17.தந்த சுத்தி எப்படி செய்தல் வேண்டும்?

பல்லின் புறத்தேயும் உள்ளேயும் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, அவற்றினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டு விட்டு, சலம் வாயிற் கொண்டு பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவுதல் வேண்டும்.

18.நின்று கொண்டாயினும் இருந்து கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாமா?

பண்ணல் ஆகாது.

ஸ்நானம்

19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?

ஸ்நானஞ் செய்யத்தக்கது.

20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?

ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.

21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.

25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும் கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.

26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.

27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?

சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படிம்படி துடைப்பது.

28.கடி ஸ்நானமாவது யாது?

சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படும்படி துடைப்பது.

  • தொடங்கியவர்

அநுட்டானம்

29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?

சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.

போசனம்

30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?

கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.

35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்

36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?

சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.

37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?

தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.

38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?

அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல் வேண்டும்.

39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?

வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.

40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?

அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப் பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு. அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.

41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும்?

இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.

42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?

சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.

43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.

44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும் அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.

45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?

இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகுதல் வேண்டும்.

  • தொடங்கியவர்

படித்தல்

46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?

உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.

இரவிற் செய்யுங் கருமம்

47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?

மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.

48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?

போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.

49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழகே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைட்த், சிவபெருமானைச் சிந்த்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடகே தலை வைத்தல் ஆகாது.

50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.

என்னாது, சிவபெருமானுக்கு நாலு குழந்தைங்களா? நேக்கு இன்னிக்குத்தான் தெரியும்! :unsure:

சிவனுக்கும் கிருஸ்ணருக்கும் பிறந்த ஐயப்பன் எங்கே?

ஸுவாமியே! சரணம் ஐயப்பா!

  • தொடங்கியவர்

5. சிவாலய தரிசன இயல்

1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?

திருக்கோயில்.

2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.

3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?

தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.

4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?

வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?

பிரதக்ஷணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.

14. எப்படி பிரதக்ஷணம் பன்னல் வேண்டும்?

இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷணம் பண்ணல் வேண்டும்.

15. பிரதக்ஷணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.

16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?

முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.

18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?

இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?

அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.

20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?

அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.

21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.

22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?

சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

  • தொடங்கியவர்

6. தமிழ் வேத இயல்

1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

Nalvar.jpg

3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்

6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

2533623482_002dfd27a5.jpg

10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

thiruganasambandar.jpg

(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.

(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.

(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.

(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.

(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.

(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.

(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.

(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.

(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.

(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.

(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.

(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.

(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.

  • தொடங்கியவர்

11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

Thirunavukkarasar.jpg

(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.

(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.

(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.

(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.

(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.

(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.

(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.

Edited by ArumugaNavalar

பைபிள தமிழில் மொழி பெயர்த்து இந்த உலகத்திற்கு கொடுத்தவரும் அந்த சைவசமயி ஆறுமுகநாவலர் தான். சைவத்தை பழிப்பதால் எந்த சைவனும் வந்து பயங்கரவாதியா மாறி குண்டு வைத்து கொலை பண்ண மாட்டான். அல்லது வீடு வீடா போய் மதமும் மாற்ற மாட்டான். மதத்தில இளிச்சவாய் மதம் இந்து. மொழியில இளிச்சவாய் மொழி தமிழ் அப்பிடி பலருக்கு நினைப்பு.

http://aarumuganaavalar.blogspot.ch/

http://swisstamilsangam.blogspot.ch/

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

si-am.png

12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.

(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.

(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.

(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.

%5Cimages%5CSundarar.gif

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

சைவ வினாவிடை என்ற பெயரில் குறித்த ஒரு சாதியினருக்காக எழுதப்பட்டுள்ள வினா விடை இது. இதில் பெரும்பாலான விடைகள் இன்றைய காலத்திற்குத் தகுந்ததாக இல்லாதிருப்பதுடன் சுகாதாரத்திற்குப் புறம்பானவையாகவும் உள்ளன. சைவ சமயத்தின் பெயரில் இவ்வாறான பிற்போக்குத் தனமான கருத்துக்களைச் சுமப்பதை விட குப்பையில் போடலாம்.

மனித முன்னேற்றத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளாத எந்தவொரு மதமோ மொழியோ கலாச்சாரமோ நிலைத்திருக்க முடியாது.

சைவ வினாவிடை என்ற பெயரில் குறித்த ஒரு சாதியினருக்காக எழுதப்பட்டுள்ள வினா விடை இது. இதில் பெரும்பாலான விடைகள் இன்றைய காலத்திற்குத் தகுந்ததாக இல்லாதிருப்பதுடன் சுகாதாரத்திற்குப் புறம்பானவையாகவும் உள்ளன. சைவ சமயத்தின் பெயரில் இவ்வாறான பிற்போக்குத் தனமான கருத்துக்களைச் சுமப்பதை விட குப்பையில் போடலாம்.

மனித முன்னேற்றத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளாத எந்தவொரு மதமோ மொழியோ கலாச்சாரமோ நிலைத்திருக்க முடியாது.

நாங்களும் இதே கேள்வியை கேக்கத்தான் இருந்தனாங்கள் . ஆனால் எங்களாலை சபை குழம்பினதாய் இருக்கக் கூடாது எண்டு விட்டிட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

இளகிய.... இரும்பைக் கண்டால்...

அடிப்பவன், குண்டியைத் தூக்கித், தூக்கி அடிப்பானம்.

சைவ சமய விசயம், ஆறுமுகநாவலர் போன்ற.. வாய் பேசாத பிராணிகளுக்குள் வந்து, துப்புக்கெட்ட வீரத்தனம் காட்டும் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கமில்லையா?

முஸ்லீம்... விசயத்தில் உங்களால்... ஒரு கருத்து எழுத துணிவிருக்கா?

உங்கள் முகத்தில் காறித் துப்புங்கள்.

நீங்களெல்லாம்... என்ன முகத்தை வைத்துக் கொண்டு, இந்த உலகில் வாழ்கிறீர்கள்.

தூ.................

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக பார்க்கின்றேன்

சைவ மதத்தின் பெரால் பல திரிகள் தொடர்ந்து திறக்கப்பட்டு அதற்குள் சிலர் துப்பவதில் ஈடுபடுகின்றனர். :( :(

சிறி சொன்னது போல்

வேண்டாம் இந்தத்துப்புதல்கள்.

முடிந்தால் உதவி செய்யயாவிட்டாலும்

ஒதுங்கியிருங்கள்.

நன்றி.

நான் மேலே மேற்கோள் காட்டிய கருத்தைத் தெரிவித்தவர் வாய்பேசாத அப்பாவியா ? அதில் தமிழர்களைப் பிரித்து துவேசத்தை வளர்க்கும் கருத்துக்கள் உங்களுக்குச் சரியாகத் தெரிகிறதா ?

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி உங்களை விட எனக்கு அதிகமாகத் தெரியும். :)

யாழில் முஸ்லிம்களைப் பற்றி கேவலமாகத் திட்டுவதுதான் வீரம் காட்டுவதா ? இன்று அவர்கள் இலங்கை மொத்தச் சனத்தொகையில் 10 வீதத்தை எட்டியுள்ளனர். கிழக்கில் தமிழர்களை விட அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். மத மாற்றம் மூலமும் மத பரப்புரை மூலமும் முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகரித்துச் செல்கிறது. சைவம் யாழ் மாவட்டத்தை நோக்கிக் குறுகிச் செல்கிறது. இது எதனால் என்று முதலில் சிந்தியுங்கள். இது பற்றி இத் திரியில் மேற்கொண்டு விவாதித்து தலைப்பைத் திசை திருப்ப விரும்பவில்லை.

சைவ சமயத்தைப் பற்றி விளக்கிக் கூறும் இந்த சைவ வினாவிடை எவ்வாறு சைவத்தின் வளர்ச்சியில் அல்லது தமிழரின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பது பற்றி முடிந்தால் விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இணையவன் சொல்வதில் என்ன பிழை? முதலில் எங்கட சமயத்தில் உள்ள பிழைகளை திருத்துவோம் பிறகு அடுத்தவர் மதத்தை பற்றிக் கதைக்கலாம்...இந்த சாதி பற்றிய ஆமுகநாவலரின் கருத்தை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?...அடுத்தவனை மட்டம் தட்டி,அவனில் பிழை கண்டு கடைசியில் நாம் தான் அழிந்து போகிறோம்...முதலில் எங்கட‌ மதத்தில் என்ன பிழை இருக்குது எதற்காக எம் மக்கள் மதம் மாறுகிறார்கள் எனப் பார்த்து அதை தவிர்க்கிற வழியைப் பாருங்கோ...இப்படிப்பட்ட சாதிய கருத்துக்களை ஆதரிப்பதன் மூலம் நீங்களும் ஒரு சாதி பார்க்கும் சாதியவாதி தான்.

தம்புள்ளையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டதை அறிந்ததும் சவூதி அரேபியத் தூதரகம் தனது விசனத்தை வெளியிடுகிறது.

ஆனால் தமிழர் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் தகர்க்கப்பட்டு புத்தர் குடியேறுகின்ற போதிலும் அது குறித்து பேச இந்துக்களைப் பெரும்பான்;மையாகக் கொண்ட இந்தியாவோ அங்குள்ள இந்து அமைப்புக்களோ தயாராயில்லை.

இதுவாவது பறவாயில்லை இந்துக்களைக் கொன்று குவித்த சிங்கள அரசாங்கத்திற்கெதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என இந்துக்களின் பிரதான அமைப்பெனக் கருதப்படும் ஆர். எஸ்.எஸ்அமைப்பு அறிக்கை விடுகிறது.

இதற்கிடையில் இந்துக்களின் ஒற்றுமை குறித்து எப்படிப் பேசுவது?

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே மேற்கோள் காட்டிய கருத்தைத் தெரிவித்தவர் வாய்பேசாத அப்பாவியா ? அதில் தமிழர்களைப் பிரித்து துவேசத்தை வளர்க்கும் கருத்துக்கள் உங்களுக்குச் சரியாகத் தெரிகிறதா ?

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி உங்களை விட எனக்கு அதிகமாகத் தெரியும். :)

யாழில் முஸ்லிம்களைப் பற்றி கேவலமாகத் திட்டுவதுதான் வீரம் காட்டுவதா ? இன்று அவர்கள் இலங்கை மொத்தச் சனத்தொகையில் 10 வீதத்தை எட்டியுள்ளனர். கிழக்கில் தமிழர்களை விட அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். மத மாற்றம் மூலமும் மத பரப்புரை மூலமும் முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகரித்துச் செல்கிறது. சைவம் யாழ் மாவட்டத்தை நோக்கிக் குறுகிச் செல்கிறது. இது எதனால் என்று முதலில் சிந்தியுங்கள். இது பற்றி இத் திரியில் மேற்கொண்டு விவாதித்து தலைப்பைத் திசை திருப்ப விரும்பவில்லை.

சைவ சமயத்தைப் பற்றி விளக்கிக் கூறும் இந்த சைவ வினாவிடை எவ்வாறு சைவத்தின் வளர்ச்சியில் அல்லது தமிழரின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பது பற்றி முடிந்தால் விவாதிக்கலாம்.

இணையவன்

தங்களுக்கான பதில் அன்று அது.

இது போன்ற திரிகளையும் அதில் வரும் தற்போதைய சூழலில் பொருந்தாத வசனங்களை மீளவும் இங்கு இணைப்பவர்களையே நான் சாடினேன்.

தவறாக பொருள் தந்திருப்பின் அதற்காக வருந்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.