Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காடு பற்றி எரிய லண்டனில் குத்தாட்டம்!! சந்தர்பவாதிகளாக சுட்டிக்காட்டி லண்டனுக்கு குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-08-31 21:19:07]

Rathika_sarathkumar_kuththaddaM150.jpg

காடு பற்றி எரிய கரடிக் காவடி எடுத்தது போல லண்டனுக்கு குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமார் கும்பல் !.. தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் , தமிழர்களுக்கான எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாதவர், தமிழ் பேசினாலும் தான் ஒரு சிங்கள வம்சதை சேர்ந்தவர் என்பதை எப்போதும் மனதிலும் செயலிலும் கொண்டவர் , நாடகம் போட்டு நல்ல கருத்துக்களை சொல்வதாக சொல்லும் இவரின் நாடகங்களில் ஈழ தமிழர்களுக்கு சார்பாக எதுவும் சொல்லபடுவதில்லை, மாறாக சிங்களவர்களை நன்றாக சித்தரித்து அவர்களை , நல்ல உள்ளம் படைத்தவர்கள் போல காட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்களவருகக்ககாக வக்காலத்து வாங்குபவர்.

குறிப்பாக கருணாநிதியோடு இவர் சேர்ந்து சண் மற்றும் கலைஞர் தொலைக்கட்சியில் அடித்த குமாளம் ஏராளம். தமிழ் திரை உலகினர் தமிழ் மக்களுக்காக பேசும் போதும் போராடும் போதும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடிக்கும் இவர் இப்போது மட்டும் தனது கூத்தாடி கூட்டத்துடன் லண்டன் கிளம்பத் தயாராகி விட்டார். அதாவது தமிழர்கள் செத்தால் என்ன வாழ்த்தால் என்ன என்னும் மனபக்குவம் கொண்ட இவர், தமிழர்களின் பணத்துக்காக கூட்டத்துடன் கிளம்பி லண்டன் வர உள்ளார். அங்கே ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு எனக் கூறி மூவரை தூக்கிலடத் துடிக்கிறது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகித்த ராதிகாவின் கணவர் சரத் குமார் அதற்காக என்ன செய்தார் ?

அங்கு மூன்று உயிர்கள் தூக்கு கயிறு முன் தவிக்கும் போது மவுனம் சாதிக்கும் இவர் குத்தாட்டம் போட்டு ஈழமக்களின் காசைச் சுரண்டிச் செல்லப் போகிறார். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இவர் என்ன செய்தார். கேட்டால் நான் நடிக்கை அரசியலுக்கு வரமாட்டேன் என்பார். ஆனால் ஈழத் தமிழர்களின் பணம் மட்டும் இப்போது வேண்டுமா ?

இவர்கள் போன்ற சந்தர்பவாத கூட்டங்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் மக்களே ! செந்தமிழன் சீமான் சொன்னது போல ஈழ விடுதலையை கொச்சை படுத்துபவர்கள் எவரும் வெளியே தலை காட்டாமல் செய்ய வீண்டும், செய்வார்களா லண்டன் தமிழ் மக்கள் ?

லண்டனில் இருந்து: சாம்பவி கனகரட்ணம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=49165&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Hmmm sariyana loosunga......

ஏனய்யா, காடை பற்றி எரிய விட்டனீங்கள்?????? ... போய் வெட்டி வீழ்த்தி இருக்கலாமே???????? ...... எல்லோரையும் எதிரியாக்கி விட்டு, என்னத்தை சாதிக்க போகிறீர்கள்????

... தேவைகள்/செய்ய வேண்டியவைகள் நிறைய இருக்கின்றது ... சிங்கள பொருள் புறக்கணிப்பு, வேற்றினத்தவருக்கு பிரச்சாரங்கள் பிரச்சாரங்கள், அழித்தவனை கூண்டில் ஏற்றுதல், .... அவற்றைச் செய்யுங்கள், முதலில்!!!! உதில் ஏதாவதையாவது செய்தீர்களா???????? ... நாலெழுத்து தமிழில் எழுத தெரிந்தவுடன், ஓர் இணையம் உடனடியாக, உடனேயே தேசியத்துக்கு உழைக்கிறார்களாம்??? சகிக்க முடியவில்லை!!! உந்தக்கூத்தை முன்பு ஆடித்தான் கேட்பாரற்று அழிந்தோம், இனியும் வேண்டாம்!!!!!!!....

... இங்கும் சனத்துக்கும் உதுகளும் வேணும், நீங்கள் தடுக்க தடுக்க சனம் போகப்போகுதுதான்!!! அத்தனை பேரையும் துரோகிகள் ஆக்குங்களேன்??????????

... உந்த எழுத்து எழுதின இணைய வீரன், காடு எரிகிறதென்று விட்டு, தன் வீட்டு மூன்று நேரம் அவியும் உலையை நிறுத்தியா போட்டார்????????

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன... மீளாய்வு.

ராதிகா யார்?

எம்.ஆர். ராதாவின் மூன்றாம் தாராமான சிங்களத்திக்கு பிறந்த பெண்.

சரத்குமார் யார்?

எமக்கு சம்பந்தமே இல்லாத நாடார் கட்சியை சேர்ந்தவர்.

அவருக்கு, ராதிகா இரண்டாம் கலியாணம்.

ராதிகாவுக்கு இவருடன் மூண்டாம் கலியாணம்.

சரி.. போகுது, எண்டு விட்டாலும்...

ராதிகா... கருணாநிதியை...அப்பா,அப்பா எண்டு சொல்லி தனது காரியத்தை சாதித்தவர்.

இப்போ.... ஜெயலலிதாவின் ஆட்சியில் பூந்து, வந்து கல்லா கட்டப் போறாங்கள்.

புலம் பெயர் தமிழன் கூழ் முட்டை என்ற நினைப்பு அவங்களுக்கு.

சின்ன மீளாய்வு

கருணாநிதி யார்?

தமிழக முதல்வராக இருந்தவர்

அப்போ என்ன செய்தார்?

இந்திய அமைதிப்படை, நாடு திரும்புகையில் வரவேற்க மாட்டேன் என்று புறக்கணித்தவர்

இன்று என்ன செய்தார்?

40000 கேட்பாரற்று அழிய வழியேற்படுத்திக் கொடுத்தார்

சின்ன... மீளாய்வு.

சரத்குமார் யார்?

எமக்கு சம்பந்தமே இல்லாத நாடார் கட்சியை சேர்ந்தவர்.

http://www.youtube.com/watch?v=ew7n76qLRw0

http://www.youtube.com/watch?v=VoI6FdpGx80&NR=1

http://www.youtube.com/watch?v=TO_zKZdIvJ0&NR=1

http://www.youtube.com/watch?v=4nnlaX7_sWA&NR=1

Edited by Nellaiyan

டொராண்டோவிலும் தேசியவாதிகளின் குத்தாட்டம் இந்த வார இறுதியில்.இடைக்கிட குத்தாட்டம் போடாவிடில் தேசிய "உரு" இறங்க்கிவிடுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோவிலும் தேசியவாதிகளின் குத்தாட்டம் இந்த வார இறுதியில்.இடைக்கிட குத்தாட்டம் போடாவிடில் தேசிய உரு இறங்க்கிவிடுமாம்.

அர்ஜூன், உங்களது தேசியம்...

ஸ்ரீலங்காவுடன் மட்டுப் படுத்தப்பட்டது தானே....

பிறகேன்.... தமிழ் தேசியத்தைப் பற்றி, கதைப்பான்.

அர்ஜூன், உங்களது தேசியம்...

ஸ்ரீலங்காவுடன் மட்டுப் படுத்தப்பட்டது தானே....

பிறகேன்.... தமிழ் தேசியத்தைப் பற்றி, கதைப்பான்.

:icon_mrgreen:

... லண்டனில் இருந்து உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் எழுதிய சாம்பவி வெங்காயத்துக்கு ....

... கடந்த காலங்களில், எம் பலம், பலவீனம் தெரியாமல் எல்லோரையும் ஒதுக்கினோம். இழுத்துக் கொண்டு சென்று சிங்களவர்களிடமும் விட்டோம்!!! ஏன் தெரியுமா??? உங்களைப் போல் நாலு எழுத்து இணையங்களில் கிறுக்குகிறவர்களினால்!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் ... நேற்று எம்மை ஆதரித்த கருணாநிதி, இன்று சேர்ந்து அழித்தான்!!! நேற்று எதிர்த்த அம்மா, இன்று எம்மோடு சேர்ந்து நிற்கிறார்!!!

... போராட்டத்தில் நிற்கும் சீமானும், தன் வயிற்றுக்காக படவேலைகளிலும் நிற்கிறார்!! இல்லையேல் சோறு போடுவீர்களா????

... இனியாவது கிறுக்குவதற்கு முன் .... சிந்தித்து கிறுக்கிங்கோ, தயவுசெய்து!!!

(இத்தனைக்கும் சின்னத்திரையில் படுத்தும் எழுகிறீர்கள் போல் கிடக்குது!!! னாம் படங்களும் பார்ப்பதில்லை, இப்படியான நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை!! ஆனால் உங்கள் போன்றவர்கள் தான் எதிர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள் போல் உள்ளது???)

Political career

Sarathkumar joined Dravida Munnetra Kazhagam (DMK) in 1996. DMK fielded him in the Tirunelveli Loksabha Constituency during 1998 parliamentary elections and he lost to Kadambur Janarthanan of ADMK by a margin 6000 Votes. In 2002, DMK made him a Rajyasabha member. He left DMK before 2006 Assembly elections, owing to differences with Tamil Nadu Chief Minister M. Karunanidhi's family members. He joined AIADMK along with his wife Radhika Sarathkumar and campaigned vigorously for that party. Radhika was dismissed from AIADMK for anti-party activities in October 2006. He also left AIADMK in November 2006, citing his workload in the film industry as a reason.

On 31 August 2007, Sarathkumar floated a new party named Akila India Samatuva Makkal Katchi.[5] He has vowed to bring back Kamarajar rule in Tamil Nadu. His party received less than 1% of the votes in the Thirumangalam (Tamil Nadu) by-election.

In the 2011 elections All India Samathva Makkal Katchi had alliance with AIADMK and has contested on its symbol at 2 constituencies and he has elected to represent Tenkasi Constituency.

நடிகர் சரத்குமாருக்கு ஓர் அன்பு மடல்

sarathkumar.jpgஅன்புக்குரிய சரத்குமாருக்கு வணக்கம். தங்கள் பிறந்த நாள் கடந்த 14 ந் திகதி என்று பத்திரிகை வாயிலாக அறிந்தோம். ஈழத்தமிழர்களின் அவல நிலைகண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவதாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையை வாசித்தபோது எம் இதயம் நெக்குருகியது.

உலகறிந்த நடிகராக, தமிழக சட்டசபையின் உறுப்பினராக,நடிகர்சங்கத் தலைவராக இருக்கும் தாங்கள் ஈழத் தமிழர்கள் அவலப்படும் போது எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாமென்று நீங்கள் அறிவித்தபோது - கைக்குட்டையால் எங்கள் முகங்களை மூடி விம்மி அழுதோம். எங்கள் அழுகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று நீங்கள் எங்கள் மீது கொண்ட அளவுகடந்த பாசம். மற்றையது, எங்கள் இனத்தின் போக்கு.

ஓ ! நாங்கள் இசை விழாக்களில் களித்து இன்புறுகின்றோம். கேக் வெட்டி வீடுகளில் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம். திருவிழாக்களில் சினிமாப்பாடல்களைப் பாடி மகிழ்வுறுகின்றோம். எல்லாக் கொண்டாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறத்தில் தறப்பாளுக்குள் குந்தியிருந்து தன் குழந்தைக்கு விஷ­ ஜந்துக்கள் தீண்டாமல் காவல் செய்யும் தமிழ்த் தாய்,மறுபுறத்தில் இன்னிசைக் கச்சேரியில் இன்புறும் தமிழ்ச்சமூகம்.

எங்களுக்காக நீங்கள் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கை விடும்போது நாங்களோ... என்ன செய்வது! எங்களின் நிலைமை அப்படியாயிற்று. இவற்றை நினைத்துதான் விம்மி அழுகின்றோம். அன்புக்குரிய நடிகர் சரத்குமார் அவர்களே, உங்கள் போன்ற தமிழ்ப் பற்றாளர்களின் கருத்துக்களும் செயல்களுமே எங்களை ஆற்றுப்படுத்துகின்றன. தமிழக சட்டசபையில் தீர்மானம், சகோதரன் சீமானின் நியாயமான கேள்விகள், பழ நெடுமாறன் ஐயாவின் விடாத முயற்சி, அண்ணன் வைகோவின் ஆணித்தரமான பேச்சு, இவற்றைத் தவிர எங்களுக்கு எதிர்காலம் உண்டென நினைப்பதற்கு வேறு எதுவும் இல்லை.

ஆகையால் எங்கள் மீதான அன்பிற்கும் பாசத்திற்கும் என்றும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் தமிழ்ப்பற்று வாழ்க, வளர்க. இந்நேரத்தில் அன்புக்குரிய கலைஞர் ஐயாவை விசாரிக்காமல் விட முடியாது.

நீங்கள் திரைப்படத்தில் நடித்தீர்கள். அவர் அரசியலில் நடித்தார். உங்கள் திரைப்பட நடிப்பை தவிர வேறு எந்த நடிப்பும் நிலைக்காது.

முடிந்தால் நாம் கூறிய இத் தத்துவத்தை கலைஞர் ஐயாவிடம் சொல்லி விடவும்.

நன்றி வலம்புரி

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8571:2011-07-16-12-54-04&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

அர்ஜூன், உங்களது தேசியம்...

ஸ்ரீலங்காவுடன் மட்டுப் படுத்தப்பட்டது தானே....

பிறகேன்.... தமிழ் தேசியத்தைப் பற்றி, கதைப்பான்.

வானொலி வைத்து சுத்தி,ரீ,வி வைத்து சுத்தி,பின்னர் பத்திரிகை நடாத்தி சுத்தி இப்ப இணையத்தில் வைத்து சுத்தும் பிளானா?

ரொம்ப ரொம்ப லேட் தமிழ்சிறி.நீங்களும் உரு ஆடுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வானொலி வைத்து சுத்தி,ரீ,வி வைத்து சுத்தி,பின்னர் பத்திரிகை நடாத்தி சுத்தி இப்ப இணையத்தில் வைத்து சுத்தும் பிளானா?

ரொம்ப ரொம்ப லேட் தமிழ்சிறி.நீங்களும் உரு ஆடுவீர்களா?

பல மாவீரர்களை தந்த... யாழ் இந்துக்கல்லூரியில் படித்த உங்களது கருத்தையும், கொள்கையையும் நினைக்க... கேவலமாயிருக்கு.

யாழ் இந்து மாணவர்க்கே... நீங்கள் ஒரு, அவமானச்சின்னம்.

  • கருத்துக்கள உறவுகள்

Nellaiyan Anna sabash sariyana Karuthu inthA saambavi mathiri koncha loosu kootangal irukku..... Chumma ellathukkaiyam pirachanai panikidu.....

தம்பி அது நீர் தீர்மானிக்கின்றது இல்லை,

என்னுடன் பழகியவர்களுக்கு அது தெரியும்,சும்மா வேஷம் போடுபவனையும் உண்மையானவர்களையும் பிரித்துப்பார்க்க படித்த இந்து மாணவர்களுக்கு தெரியும்,அதுதான் கனடாவில் இருந்து என்னை லண்டனுக்கு கூப்பிட்டவர்கள்.அதை விட இங்கும் என்னை ஒருவிழாவிற்கு பிரதம விருந்தினராகவும் கூப்பிட்டார்கள்.

தேசியம் பேசி எமது இனத்தையே அழித்த சுயநலவாதிகள் ஒதுக்கப்படும் நாட்கள் வெகுதுரமில்லை.அவ்வளவும் நடிப்பு அது இந்துவுடன் எடுபடாது.

எந்த இயக்கத்திலாவது போராட போனவர்களை மதித்துத்தான் நாம் நடக்கின்றோம்,வேஷம் போட்டு கூத்தடிப்பவர்களை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு, கொக்கு வைத்த விருந்துக்கு காகம் போன கதையும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இணையத்தில் வைத்து சுத்தும் பிளானா?

தேனி மாவட்டத்தின் பெயரால் தான் தேனி கூனி இணையங்கள் வந்தது என பெருமைப்பட்டு கொள்ளும் நீங்கள் தேசியத்துக்காக எப்படி அல்லும் பகலும் பாடுபடுகிறது என ஒரு சிறு விளக்கம் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் மீதான இராணுவ, போலீஸ் தாக்குதல்களை நேரில் பார்த்தவள் நான்: நடிகை ராதிகா

[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 09:01.02 AM GMT ]

adhika.jpg

இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, சென்னையில் நேற்று திரைப்படத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் உரையாற்றுகையில் நான் இலங்கையில் சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான இராணுவ, போலீஸ் தாக்குதல்களை நேரில் பார்த்தவள் என நடிகை ராதிகா கூறினார்.

சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (FEPSI) தலைவர் எஸ்.விஜயன் தலைமை தாங்கினார்.

இதில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, விஜய டி.ராஜேந்தர், எஸ்.பி.முத்துராமன், அமீர்ஜான், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், ராதிகா, கவிஞர் தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நடிகை ராதிகா பேசுகையில்,

நான் இலங்கையில் படித்து வளர்ந்தவள். சிறுமியாக இருக்கும்போதே தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்களை நேரில் பார்த்தவள். கலவரம், தீவைப்பு, சிங்கள ராணுவத்தின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு மத்தியில் நானும், என் தம்பியும் ஒருமுறை சிக்கிக் கொண்டோம்.

என் தம்பியை குப்பை தொட்டியில் மறைத்து வைத்து, அவன் உயிரை காப்பாற்றினேன். அந்த போராட்டம் இன்னும் ஓயவில்லை. இலங்கை தமிழர்கள் அன்பானவர்கள். அவர்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்றார்.

இயக்குனர் டி.ராஜேந்தர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களை போன்ற ஒரு பாவப்பட்ட இனத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள், மராட்டியத்தை சேர்ந்தவர்கள், பஞ்சாபிகள் தாக்கப்பட்டால், அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை தமிழ் இன உணர்வு தீ பற்றிக்கொண்டே இருக்கும். தனி ஈழம் பிறந்தே தீரும். தமிழா, அதுவரை சோர்ந்து விடாதே என்றார்.

கவிஞர் தாமரை பேசுகையில்,

மொழி, பாண்பாடு அடிப்படையில் தேசிய இனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழனும் ஒரு தேசிய இனம்தான். தமிழன் மனதில் வன்முறை கிடையாது. வந்தாரை வாழ வைப்பான். போரை நிறுத்து, ஆயுதம் கொடுப்பதை நிறுத்து என்று இலங்கை அரசிடம் நாம் கேட்கிறோம். ஆனால் இன்னும் போர் நிற்கவில்லை.

இங்கே நாம் நிதி திரட்டுவதில் பலன் இல்லை. ஒரு பக்கம் குண்டு போட்டு கொல்கிறான். இன்னொரு பக்கம் பால் ஊற்றுவது எதற்காக? இந்த பணம் ராஜபக்சேவுக்குத்தான் போய் சேரும். மனசாட்சி உள்ள எவரும் நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், நான் தமிழச்சி என்றார்.

http://tamilwin.mobi/view.php?20EWvt20erjYO2ebeG5H3bdB9CQ4dc42f3cc47pM2d43uQF3a02VLG3e

இலங்கைத் தமிழர்களுக்காக மாபெரும் பேரணி – நடிகர்கள் முடிவு

sarathkumar-01.jpgசென்னை, ஜூன் 28:

இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் தங்கள் தாய்பூமியில் வாழ்வதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து மாபெரும் பேரணி நடத்த நடிகர் சரத் குமார் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மீனவர் நலன்காக்க கச்சத் தீவை மீட்கக் கோரியும் ஈழத்தமிழர்கள் சமஉரிமை பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவும் நடிகர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத் குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர் மனோரமா தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்ததாகவும், அந்த விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சரத்குமார் பின்னர் தெரிவித்தார். தற்போது தமக்கு மிகுந்த அவசரமான பணிகள் இருப்பதாகவும் பாராட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் கூறியதாகவும் அவர் சொன்னார்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரி்க்கவும் இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் தங்கள் தாயகத்தில் வாழவும் பிற நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்றை நடிகர் சங்கம் நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திரைப்படத் துறையினர் பயன்படுத்துவதற்காக பையனூரில் முன்பு அளிக்கப்பட்ட நிலம் 99 வருட குத்தகையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலாக நலிந்த கலைஞர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக வழங்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாக ராதா ரவி தெரிவித்தார்.

http://suriyantv.com/?p=4505

அண்மைக்காலங்களில் சரத்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். கெட்லைன் டுடேயில் வந்த ஈழத்தமிழரகளின் அவலத்திலும் ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைத்திருக்கிறார்( பார்க்காதவர்கள் இப்பகுதியில் நெல்லையன் இணைத்த காணொளிகளைப் பாருங்கள்) . ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு எனக் கூறி மூவரை தூக்கிலடத் துடிக்கிறது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகித்த ராதிகாவின் கணவர் சரத் குமார் அதற்காக என்ன செய்தார் என்று கேட்கிறார் சாம்பவி. ஆனால் தமிழகசட்டசபையில் எல்லாக்கட்சிகளின் ஆதரவுடன் ஜெயலலிதா தூக்குத் தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட்டவர். ஜெயலலிதா கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் சரத்குமார் என்பது அம்மணி சாம்பவிக்கு தெரியவில்லை போல இருக்கிறது. அதாவது சாம்பவியின் கருத்தினைப்பார்க்கும் போது ராதிகா சிங்களவர். ஆகவே தமிழருக்கு ஆதரவு இல்லை என்று சொல்கிறார். விஜய் டீவியில வந்த ஜோடி நம்பர் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லையா சாம்பவி அக்கா?. அதில பிரான்சில இருந்தும் இலண்டனில் இருந்தும் சென்று ஆடிய ஈழத்துக் கலைஞரின் நிகழ்வில் ஈழ அவலம் வந்த போது ராதிகா அழுததைப் பார்க்கவில்லையா?. ராதிகாவின் அம்மா சிங்களவ்ர் என்றால் எங்கட காவல்துறை பொருப்பாளராக இருந்த நடேசன் அய்யாவின் மனைவி சிங்களவர் இல்லையா? அவரும் சிங்கள இராணுவத்தினால் கொல்லப்பட்டாரே.

அண்மைக்காலங்களில் ஈழத்தமிழருக்கு ஆதராவாக கதைக்கும் சரத்குமாருக்கு எதிராக யார் கதைப்பார்கள்? சிங்கள அரசிற்கு விருப்பமானவர்கள் தான் கதைப்பார்கள். அப்படியானால் சாம்பவி சிங்களத்தின் உளவாளி என்று சொல்லலாமா?

அப்பு தமிழ் அரசு எதை யாழில் இணைக்கவேண்டும் என்று யோசித்து விட்டு யாழில் இணையுங்கள். சும்மா கண்ட கிண்ட குப்பைகளை யாழில் இணைத்து அண்மைக்காலங்களில் எமக்கு ஆதரவாகக் கதைக்கும் சரத்குமாரை எமக்கு எதிராகத் திருப்பவேண்டாம்

... லண்டனில் இருந்து உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் எழுதிய சாம்பவி வெங்காயத்துக்கு ....

... கடந்த காலங்களில், எம் பலம், பலவீனம் தெரியாமல் எல்லோரையும் ஒதுக்கினோம். இழுத்துக் கொண்டு சென்று சிங்களவர்களிடமும் விட்டோம்!!! ஏன் தெரியுமா??? உங்களைப் போல் நாலு எழுத்து இணையங்களில் கிறுக்குகிறவர்களினால்!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் ... நேற்று எம்மை ஆதரித்த கருணாநிதி, இன்று சேர்ந்து அழித்தான்!!! நேற்று எதிர்த்த அம்மா, இன்று எம்மோடு சேர்ந்து நிற்கிறார்!!!

... போராட்டத்தில் நிற்கும் சீமானும், தன் வயிற்றுக்காக படவேலைகளிலும் நிற்கிறார்!! இல்லையேல் சோறு போடுவீர்களா????

... இனியாவது கிறுக்குவதற்கு முன் .... சிந்தித்து கிறுக்கிங்கோ, தயவுசெய்து!!!

()

சொன்ன வழி அழகு நெல்லியன். எழுத வெளிப்படுபவர்கள் தாங்கள் அப்போதைக்கு நினைப்பதை மட்டுமே எழுதிவிடுகிறார்கள். முக்கியமாக இப்படிப்பட்டவர்கள்தான் குழப்பவாதிகளாகவுள்ளனர்.

மனசாட்சி உள்ள யாராவது சொல்லுங்கள்?

,தமிழ்நாட்டில் தீக்குளித்து ஒரு பெண் தற்கொலை,இன்னமும் தூக்குத்தண்டனை பற்றி முடிவு தெரியாது,தமிழ்நாடே குழம்பிப்போய் இருக்கும் இந்நேரத்தில் டொராண்டோவில் இரண்டு நாளுக்கு அசத்தபோவது யாரு கலைஞர்களை அழைத்து கொண்டாட்டம் தேவைதானா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் எதிரியாக்கி விட்டு, என்னத்தை சாதிக்க போகிறீர்கள்???? - நெல்லையன்

சரியாகச் சொன்னீங்க நெல்லியான். இப்படி கேழ்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் பாணியில் கிறுக்குகிறவர்களால் தனிமைப் பட்டு அழிந்தவர்கள் நாங்கள். திரும்பவும் ஆரம்பிக்க வேண்டாம். திரு சரத்குமாரும் திருமதி ராதிகாவும் ஈழத் தமிழர்களுக்குச் சார்பானவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. - - வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுவது ,சொல்வதை விட மிகவும் குறைவாகவே செயலில் இடுபடுகின்றோம். நான் உட்பட இதுதான் இன்றைய கவலைக்கிடமான நிலை,

இப்போது யார் சொல்வதை நம்புவது, யார் யாருக்கு வேலை செய்கின்றார்கள் என அலசி ஆராய்வதிலே நேரம் கழிகின்றது இந்த நிலையில் மேலும் குழப்பங்களை மக்கள் மத்தியில் உருவாக்க எதிரியானவன் பல வழிகளிலும் தனது கைக் ௬லிகளையும் ஏவியுள்ளான் இந்த நிலையில் மக்களை சரியான வழியில் நடத்தி செல்வதற்கு முதலில் நம்பிக்கையானவர்கள் தேவை என்பதே உண்மையாகும் !

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சி உள்ள யாராவது சொல்லுங்கள்?

,தமிழ்நாட்டில் தீக்குளித்து ஒரு பெண் தற்கொலை,இன்னமும் தூக்குத்தண்டனை பற்றி முடிவு தெரியாது,தமிழ்நாடே குழம்பிப்போய் இருக்கும் இந்நேரத்தில் டொராண்டோவில் இரண்டு நாளுக்கு அசத்தபோவது யாரு கலைஞர்களை அழைத்து கொண்டாட்டம் தேவைதானா?

கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு காலத்துக்கு முன்பிருந்து ஆயத்தங்களை மெற்கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.. :unsure: (திம்புப் பேச்சுவார்த்தைக்கு வட்ட மேசைகளை ஒழுங்கு பண்ணியதை நினைத்துப் பார்க்கவும்..! :mellow: )

இந்திய, தமிழ்நாட்டு நிகழ்வுகள் அண்மையில் நடந்தவை.. இப்போது நிகழ்வை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலவாகும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? :unsure:

பி.கு.: நான் கொண்டாட்டத்துக்கு வாறன்.. நீங்களும் வாறீங்களா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

... லண்டனில் இருந்து உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் எழுதிய சாம்பவி வெங்காயத்துக்கு ....

... கடந்த காலங்களில், எம் பலம், பலவீனம் தெரியாமல் எல்லோரையும் ஒதுக்கினோம். இழுத்துக் கொண்டு சென்று சிங்களவர்களிடமும் விட்டோம்!!! ஏன் தெரியுமா??? உங்களைப் போல் நாலு எழுத்து இணையங்களில் கிறுக்குகிறவர்களினால்!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் ... நேற்று எம்மை ஆதரித்த கருணாநிதி, இன்று சேர்ந்து அழித்தான்!!! நேற்று எதிர்த்த அம்மா, இன்று எம்மோடு சேர்ந்து நிற்கிறார்!!!

... போராட்டத்தில் நிற்கும் சீமானும், தன் வயிற்றுக்காக படவேலைகளிலும் நிற்கிறார்!! இல்லையேல் சோறு போடுவீர்களா????

... இனியாவது கிறுக்குவதற்கு முன் .... சிந்தித்து கிறுக்கிங்கோ, தயவுசெய்து!!!

(இத்தனைக்கும் சின்னத்திரையில் படுத்தும் எழுகிறீர்கள் போல் கிடக்குது!!! னாம் படங்களும் பார்ப்பதில்லை, இப்படியான நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை!! ஆனால் உங்கள் போன்றவர்கள் தான் எதிர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள் போல் உள்ளது???)

உங்கள் கருத்தை வரவேற்கிறேன் நெல்லை

கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு காலத்துக்கு முன்பிருந்து ஆயத்தங்களை மெற்கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.. :unsure: (திம்புப் பேச்சுவார்த்தைக்கு வட்ட மேசைகளை ஒழுங்கு பண்ணியதை நினைத்துப் பார்க்கவும்..! :mellow: )

இந்திய, தமிழ்நாட்டு நிகழ்வுகள் அண்மையில் நடந்தவை.. இப்போது நிகழ்வை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலவாகும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? :unsure:

பி.கு.: நான் கொண்டாட்டத்துக்கு வாறன்.. நீங்களும் வாறீங்களா? :huh:

கனடாவில் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால் இதற்க்கு ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்ல விருபுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரஜனிக்காந்த் ஆனாதைச் சிருவர்களுக்கும் ஊனமுற்ற ச்சிறுவர்களுக்கும் என்று சுவிஸில் கலைநிகழ்ச்சி செய்ய விருபினார் அதற்க்கான முழு வேலைகளையும் புங்குடுதீவை சேர்ந்த ஒருவர் செய்தார் பலாயிரம் அனுமதிச் சீட்டுக்கள் விற்ற நிலையில் சுவிஸ் கலையகம் அந்த பொறுப்பை எடுத்து தாங்கள் நடத்த விரும்பி அந்த சுவிஸ் செயற்ப்பாட்டாளரை தொடர்பு கொண்டு கேட்டார்கள் அவரும் உடனே ரஜனிக்கு தெரியப்படுத்தினார்கள் அதற்க்கு ரஜனி விரும்பவில்லை காரணம் தமிழ்நாட்டில் அதைஅரசியலாக்கி புலிகளுக்காக ரஜனி கலைநிழக்ச்சி செய்தார் என்று பர்ப்பிவிடுவார்கள் ஆகவே அவர்களிடம் பொறுப்பை கொடுக்காது வறும் லாபத்தில் ஒரு தொகை வழங்கலாம் என்று ஆனால் அதற்கு சுவிஸ் கலையகம் மறுப்பு தெரிவித்து தாங்கள் இந்த கலைநிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க மாட்டொம் என்று சத்தியவான் சபதம் எடுத்தார்கள் அதன் விளைய்வு விமானநிலையத்தில் வந்து இறங்கிய ரஜனியை சுவிஸில் அனுமதிக்காது போராட்டம் ரஜனியும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பி போய்விட்டார்( முதல் முதல் தழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து பெற்ற வெற்றி அதுதான்) இதனால் கலைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர் நஷ்டப்பட்டார் அவருக்கு ரஜனி சிறு தொகை கொடுத்தார் மாறாக ரஜனி சென்னை சென்று இந்த ஆர்ப்பாட்டத்தைப்பற்றியோ அதன் பின் இருக்கும் அமைப்பை பற்றியோ வாயே திறக்கவில்லை( அன்றைக்கு ரஜனியும் புலிகள் எதிர்ப்பு கருத்து சொன்னால் இருந்ததும் போய் இருக்கும்) ............................. ஆனால் சுவிஸ் கலையக அமைப்பைளருக்கு பெரிய சந்தோசம் ..

இந்த சமபவத்துக்கு பின் ரஜனி ஜரோப்பாவில் கலைநிகழ்ச்சி செய்ததாக நான் அறியவில்லை.

இப்ப என்ன சொல்ல வாறேன் என்று எனக்கே புரியவில்லை. :D:)

ஆனால் இந்த பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.

குருக்கால் *** விட்டால் மனக்காது.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சி உள்ள யாராவது சொல்லுங்கள்?

,தமிழ்நாட்டில் தீக்குளித்து ஒரு பெண் தற்கொலை,இன்னமும் தூக்குத்தண்டனை பற்றி முடிவு தெரியாது,தமிழ்நாடே குழம்பிப்போய் இருக்கும் இந்நேரத்தில் டொராண்டோவில் இரண்டு நாளுக்கு அசத்தபோவது யாரு கலைஞர்களை அழைத்து கொண்டாட்டம் தேவைதானா?

கண்டிப்பா தேவையில்லை, அதை அங்குள்ள மக்களும் அதை நடாத்தியவர்களும் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.