Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை நேட்டோ படைகள் காப்பாற்ற முயற்சி செய்தபோது இந்தியா தடுத்ததாம் என்கிறார் டலஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை நேட்டோ படைகள் காப்பாற்ற முயற்சி செய்தபோது இந்தியா தடுத்ததாம் என்கிறார் டலஸ்!

  • பிரசுரித்தவர்: NILAA September 7, 2011

thalivar.jpg

இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான் வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான் நேட்டோவின் கனவு பலிக்காது போனதாக வும் அவர் கூறியுள்ளார்.

தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை இராணுவத்தின் எட்டு படைப்பிரிவுகள் முல்லைத்தீவு நோக்கி முன்னேறிச் சென்றபோது, பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் முக்கிய தளபதிகளையும் வான்வழியாக மீட்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிஸ்டவசமாக இந்தியா துணை நின்றதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார். இலங்கைக்கு எப்போதுமே ஒரு உண்மையான நண்பனாக இந்தியா இருப்பதாகவும் அதன் மூலமே விடு தலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://mykathiravan....a-news/?p=14383

சிங்கள பேரினவாதம் இந்தியாவுடன் இணைந்து, மக்களை நேட்டோ படைகள் காப்பாற்ற விடாமல் தடுத்து, அவர்களை அழித்து, ஒரு போர்குற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த உண்மையை 'தலைவர், குடும்பம், மூத்த தளபதிகள்' என பொய் சொல்லி சிங்களமக்களை ஏமாற்றுகின்றது.

இவங்கள் வகையாக மாட்டிய வேதாள இந்தியாவை அம்மியிலை வைச்சு அரைக்கிறாங்கள். தாங்கள் சொல்வது உண்மையென்றால் அவற்றிக்கேற்ப ஆவணங்களை வெளியிடலாமே.

Edited by மல்லையூரான்

சிங்கள, இந்திய இனப்படுகொலைக் கும்பலே தமிழினத்தை அழித்து வந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இதெல்லாம் பசப்புகள். அப்படி நேட்டோ படைகள் காப்பாற்ற வந்திருந்தாலும் தலைவர் சென்றிருப்பாரா என்பது சந்தேகமே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன பிரச்சின? இந்தியா அப்படிச் செய்யவில்லை என்கிறீர்களா?? நாய் வேஷம் போட்டால் குரைப்பதைத்தவிர வேறு வழியில்லை. சிலர் அதைக் கன கச்சிதமாகச் செய்கிறார்கள்.

கழுதை கெட்டு குட்டிச்சுவரானது போல எல்லாம் அவங்கள்தான் நாங்கள் பொறுப்பல்ல என்கிறீர்களா?

இந்த நியூஸ் எல்லாம் உண்மையாவே இருக்காது!

நேட்டோ என்ன டாக்ஸியா ? நெனைச்ச உடன வந்து ...பிக்கப் பண்ண?

28 யானைங்க சம்பந்தப்பட்டது.......... ஜாக்கிரதை... ஓகேவா?

அதுக்குன்னு பல பார்மாலிட்டீஸ் எல்லாம் நெறைய இருக்கு!

பைதவே.........

தன்னோட தலைவனையே ...பாவாம் பிறபாகரன் என்கிற பரம்பரை நாங்க!

எங்களை வந்து எவனாவது காப்பாத்துவானா?

தங்களோடு ஒரே நகைசுவையாய் இருக்கிறது போங்கள் தமிழரசு! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ரஜீவ் கொல்லப்பட்டதால்த்தான் இதெல்லாம் நடந்தது. ஆகவே கணக்குச் சரி என்று சொல்ல வருகிறீர்கள். ரஜீவ் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பதாவது தெரியுமா?? அல்லது புலிகள் திமிர்பிடித்துப்போய் தேவையில்லாமல் அவனைக் கொன்றார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?? நீங்களுற்பட பலருக்கு ரஜீவ் கொலைதான் இதற்கெல்லாம் காரணம் என்ற நினைப்பிருக்கு. ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன இல்லாவிட்டாலென்ன இந்தியாவைப் பொறுத்தவரை தமிழருக்கு நல்லது நடக்க விடப்போவதில்லை. அதற்கு உங்களது ரஜீவ் அனுப்பிய கொலைப்படையே சான்று.

கூட்டணியை ஆதரிப்பதென்று நீங்கள் எடுத்த முடிவு, இன்று அவர்களை ஆட்டுவிக்கும் இந்தியாவையும் ஆதரிப்பதென்கிற நிலைக்கு அப்பாலும் சென்று, அவர்கள் செய்த அநியாயத்தை ஒன்றில் சரியென்று நியாயப்படுத்துவதிலோ அல்லது அப்படி நடக்கவேயில்லை என்று சத்தியம் செய்வதிலோ வந்து நிற்கிறது.

மொத்தத்தில் கழுதை தேந்து கட்டெறும்பாகத்தான் வந்து நிற்கிறது !!!!!

கழுதையால் வேறு எதைத்தான் செய்ய முடியும்.

ராஜீ கொலையும் தமிழர் அழிவும் சம்பந்தப்படுத்தாமலே சில முடிவுகளைப்பார்க்கலாம். ராஜீவின் கொலையை இந்தியா என்ற தேசம் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அது சமார்த்தியம். உலக அளவில் தடைசெய்யப்பட்டு இறுதிக் கணங்களில் கூட தமிழரின் குரல்கள் உலகின் காதுகளில் கேட்கப்படாமல் போனதற்கு அதுவும் ஒருகாரணம்தான்.

நான் யாரை ஆதரிப்பது என்பது வேறுவிடயம். நீங்கள் ஆதரவு கொடுத்தவர்களின் பக்கம் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.

அநியாயங்கள் எவையும் சரியென்று நியாயப்படுத்த முடியாது. எந்தக் காலத்திலும் அநியாயம் அநியாயந்தான். இப்போதைய தேவை என்ன, அதைப் பெறுதலில் யாரை இணைத்துக் கொள்ளலாம் என்பதுதான் எனது நிலைப்பாடு. இந்தியாவை தூரத்தில் வைத்துக் கொண்டிருப்பதால் தமிழருக்குக் கிடைக்கவேண்டிய அற்ப விடயங்கள் கூடக் கைநழுவிப் போயிருக்கின்றது. இது எல்லோராலும் புரியப்பட்ட ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், உங்களது கருத்துக்கள் இந்தியாவை அரவணைக்க வேண்டும் என்பதாகவே.. உள்ளது.

தலைவர் பிரபாகரன் இந்தியாவை எமது தந்தை நாடு என்றே... சொல்லி வந்தார்.

அதனை உதாசீனப்படுத்திய இந்தியாவை, எப்படி நம்ப முடியும்.

அதற்குக் காரணங்கள் பலவுண்டு. அதெல்லாம் இங்கு தேவையில்லையென்றே நினைக்கின்றேன். தமிழரை இந்தியா அழிக்கிறது என்ற விடயம் தவறானது. ஒரு காலகட்டத்தில் சிங்களவரையும் இந்தியா அழித்துத்தானுள்ளது.

எதற்காக இதுவெல்லாம் நடக்கிறது எனின் இலங்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் இந்தியா தன்னிடமே வைத்துக் கொள்ள முயல்வதுதான் வெளிப்படையாகத் தெரிகிறதே. ஆக இங்கு நம்பிக்கையென்பது ஒரு பொருட்டல்ல. இந்தியாவைத் தமிழர்பக்கம் சார்வதற்கான முயற்சிகளும் சிங்களத்தை இந்தியாவிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகளும்தான் முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, ஸ்ரீலங்காவில் காலூன்றிய நிலையில்...

இந்தியாவின் எண்ணம் நிறைவேற சந்தர்ப்பங்கள் அரிது.

"கடல் வற்றுமென்று, மீன் பிடிக்காமல்... குடல் வற்றி செத்த கொக்கின் நிலை" எமக்கு.

கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதற்குத்தான் எதுவுமில்லாமல் நிற்கிறோமே சிறி. ஒன்று கொக்கு நீந்தப் பழகியிருக்க வேண்டும். அல்லது மீன் கரைக்கு வரவேண்டும். இதில் இரண்டுமே நடவாதது.

"இந்தியாவின் எண்ணங்கள் நிறைவேற சந்தர்ப்பங்கள் அரிது" என்று குறிப்பிட்டுள்ளீர்களே அதுதான் நமக்குத் தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை எவருமே இதயசுத்தியுடன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. அவருக்கு நம்பிக்கையானவர் மூலம் உறுதியளிக்கப் பட்டிருக்கலாம்! அவருக்கு வைக்கப் பட்ட பொறியில் அவர் சிக்கி விட்டார் என்பதே உண்மையாக இருக்கலாம்!

ஆகவே நம்பிக்கையென்பதில் பிரச்சனையிருக்கிறது. தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லையென்பது முழுமையான உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறோமா?? எப்போது இது நடந்தது ?? எம்மைத் தூரத்தில் தள்ளி வைத்திருப்பது இந்தியா என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவுடன் நட்புப்பாராட்ட எத்தனை தடவைகள் நான் ஆதரிக்கும் (நீங்கள் 2009 வரை ஆதரித்து வந்தவர்கள் !! "அந்த அமைப்பினர்" முயன்றனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். 1987 இலிருந்து இன்றுவரை தமிழின அழிப்பிலி கண்ணும் கருத்துமாக இந்தியா இருக்கும்போது நாம் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறோம் என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. 2009 சிங்களத்தினூடாக இந்தியா நரபலியாடியது, ஆனால் அதன்பிறகு கூட அதனது ரத்த வெறி அடங்கவில்லை. இன்றைக்குவரை சிங்களத்தைப் பாதுகாபதில் அது எவ்வளவிற்கு முன்னிற்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் கவுன்சிலில் இரண்டுமுறை வேறு நாடுகளால் சிங்களத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இந்தியாவே முன்னின்று உடைத்தெரறிந்தது. அண்மையில்கூட இந்திய வெளிவிவகார மைச்சரும் காங்கிரஸ் உயர்பீடமும் வெளியிட்டுவரும் அறிக்கைகளைப் பாருங்கள், யாரை யார் தூரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது புரியும். சவுத் ஏஷியா அனலயிசிங் குறூப் எனப்படும் இந்தியாவைச் சேர்ன்த முன்னால் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அல்லொசகர்களால் நடத்தப்படும் அமைப்பின் அண்மைய அறிக்கையைப் படித்துப்பாருங்கள், அதில் இந்தியா வேண்டுமெண்றே இன்றுவரை செய்துவரும் துரோகத்தனங்கள் தெரியும்.

நீங்கள் கூறும் இந்தியாவைத் தள்ளிவைத்திருக்கும் அன்த அமைப்பினர் யாரென்பதை முதலில் விளக்குங்கள். அவர்கள் மக்களா, நாடுகடந்த அரசா, பதமிழர் பேரவையா...அல்லது எவருமில்லாத "அவர்களா"??

இந்தியாவிடம் முடிந்தளவில் கெஞ்சிப் பார்த்துவிட்டோம், இனி எப்படிக் கெஞ்சுவது என்றுதான் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள், இன்னுமொரு முறை முயன்று பார்க்கலாம்.

இறுதியாக , நான் ஆதரிக்கும் "அந்த" அமைப்பினர் பற்றி...அவர்கள் உங்களுக்கு யார்?? அவர்கள் எப்போது உங்களைப்பொறுத்தவரை "அவர்களாக" மாறினார்கள் ??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இலங்கை நிலைப்பாடு ஜே வி பி கலகத்தை ஒடுக்க இலங்கைக்கு ஆதரவு அளித்தது பின் தமிழ் போராளிகளுக்கு ஆயுதம் அளித்து இலங்கையில் கலகத்தை ஏற்படுத்தியது அதற்கு பனிப்போர் காலத்தில் இந்தியாவிற்கு நேரெதிர் நிலைப்பாடு கொண்ட கொள்கை கொண்ட இலங்கைக்கு அலுப்பு கொடுக்கவே அதனை செய்தது .ஆனால் தீர்வு என்ற போர்வையில் இலங்கையில் தனது நலன்களை முதன்மைப்படுத்தி ஓர் அரை குறை தீர்வை வைத்துவிட்டு,அதை கூட நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாமல் தனது நலன்களுக்கு குறுக்கே நின்ற தமிழரின் பேரம் பேசும் ஆற்றலை அகற்ற முற்பட்டது,ஒப்பந்த சரத்துகலை நிறைவேற்றுவதற்கு பதிலாக தலைவரை கொல்லுவதற்கு பிரம்படி சந்தி நிகழ்வுக்கு முன்னாகவே முயற்சித்தது அதில் ஒரு முயற்சி இலங்கை இராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

பின்னாளில் தலைவரல்லாத ஒரு மாற்று தலைமை உருவாக்கப்ப்படுமிடத்து தமிழர் விடுதலைக்கு நிபந்தனையின்றி உதவி வழங்கப்படும் என்று இந்தியா ஒரு கருத்தை உருவாக்கி உண்மை என நம்பவைக்கப்ட்டு தமிழர் களுதருக்கபட்டனர்,

இப்போ தமிழரது பேரம் பேசும் ஆற்றல் இளக்கபட்ட நிலையில் இந்தியாவின் உதவியுடன் எவகையான தீர்வினை தமிழர் எட்டலாம் ?

இந்தியாவின் களுத்தருப்பின் பின் மேற்கு நாடு ஒன்றிடம் விடுதலை புலிகள் உதவி கோரினர் அந்த நாட்டின் உளவு அமைப்பு தலைவரை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த போது அதை மறுத்து விட்டார் ஏனெனில் தான் மற்றவர்களின் கை பொம்மையானால் எமது மக்கள் அடிமையாகி விடுவர் என்பதாலேயே ,தனது காலத்தில் முடியாவிட்டாலும் அடுத்த தலை முறைக்கு போராட்டத்தை ஒழுங்காக கையளிக்கவேண்டும் என்ற அவரது அடுத்த தலைமுறை தொடர்பான நம்பிக்கை இப்போது எப்படியுள்ளது?

இந்தியா நிட்சயமாக எமக்கு நண்பன் என்று சொல்லும் காலம் வெகு விரைவில் வரும் அப்போது இந்தியா தொடர்பான உண்மையான தெளிவில்லாத இதே நிலையில் இருந்ததால் மீண்டும் அதுவும் வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இனம் ஒரு பிரபல்யமான வரலார்ரியலாலர்களால் குறைப்படும் சொல்லப்படும் வருத்தத்திற்குரிய இனம் எமது இனமே.

ரகுநாதன்,

இந்தியாவை மீறி எந்தச் செயல்களும் இலங்கையில் நடைபெறாது என்பதுதான் எனது வாதம். அதைத்தவிர யாரையும் தாக்கவேண்டும் என்பது எனது எண்ணமல்ல. தமிழினம் தனது அழிவைச் சந்தித்ததற்குக் காரணம் இந்தியாவுதான் என்பதை நான் மறுக்கவில்லை. அதன்பிறகான எமது தேவைகள் இன்னமும் அப்படியேயிருக்க, அதை ஓரளவு பெறுவதாயினும் அதற்கு இந்தியாவின் உதவிதான் தேவை. இதுதான் சாரம்.

பிரபாகரனை எவருமே இதயசுத்தியுடன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. அவருக்கு நம்பிக்கையானவர் மூலம் உறுதியளிக்கப் பட்டிருக்கலாம்! அவருக்கு வைக்கப் பட்ட பொறியில் அவர் சிக்கி விட்டார் என்பதே உண்மையாக இருக்கலாம்!

Edited by sukan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.