Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் - ஆண்களிடத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள்...! ;)

Featured Replies

01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;)

02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;)

இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;)

03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;)

04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி விமர்சிக்கவோ.... , இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்... அப்படியிருந்தால் நல்லாயிருக்கும்... என்று கருத்துச் சொல்லவோ கூடாது! என்னதான் சொன்னாலும்... அவர்கள் தங்கள் விருப்பப்படி வைக்கத்தான் விரும்புவார்கள். உங்களுக்கு ஃபாஷன் என்றால் அவர்களுக்கு ஸ்டைல் ஆக்கும்! ;)

05.அடிக்கடி லேட்டாக வந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள்! அப்படிவிட்டால் ... நீங்கள்தான் பாவம்! இன்னும் லேட்டாக வருவார்கள்! அப்புறம் நாடியில கையை வைச்சுக்கொண்டு நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டியதுதான்! :)

06.மறந்து போயும்... ஏய் நீ ரொம்ப கெட்டபையன்டா! என்று சொல்லிவிடாதீர்கள்! அதற்குப் பிறகு அவனை நல்லவனாக... எப்பவுமே பார்க்க முடியாது. ;) :D இதுக்குமேல் உங்கள் இஷ்டம்!!! ;)

07.சின்னப்பிள்ளைத்தனமாக அப்பாவிபோல் இருப்பவர் என்றால் அவரில் லைட்டாக ஒரு கண் வைத்திருங்கள். ஏனெனில், அப்படி இருக்கும் ஆண்களைத்தான் தற்போதைய பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சின்னப்புள்ளத்தனமா நீங்க இருக்காதீங்க! அவதானம்! :D

08.அவர்கள் கடுப்பாக அல்லது ஏதாவது ரென்ஷனாக இருக்கும்போது எதுவுமே பேசாதீர்கள். அது தானாகவே அடங்கும். அதுவாக அடங்கவில்லையென்றால்....... பத்ரகாளி அம்மன் படத்தை அவருக்கு ஒருக்கா போட்டுக் காட்டுங்கோ! :D

09. வேலை விட்டு வீடுவந்த உடனேயே வேறு வேலையைச் சொல்லாதீர்கள்! வரும் வழியிலேயே யோசித்து, அடுத்த வேலைத்திட்டத்துடன்தான் வீட்டுக்கதவை திறக்கிற ஆட்கள் ஆண்கள்! அது என்ன வேலையாய் இருக்கும் என்பது .... ? (சத்தியமா எனக்குத் தெரியாது! :o )

10.சண்டை வரும்போது அதிகமாகத் திட்டிவிடாதீர்கள்!!! ஆண்கள், தாம் திட்டியதை அடுத்த நொடியே மறந்து விடுவார்கள்; ஆனால், தங்களைத் திட்டியதை இலகுவில் மறக்க மாட்டார்கள்! பார்த்து.... :D எதுக்கும் ரெக்கோர்ட் பண்ணி வையுங்கோ!

இன்னும் நிறைய இருக்கு....

உறவுகளே............. நீங்களும் தொடருங்களேன் !

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்
:D நல்லா இருக்கு..! :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

11) உண்மை சொல்வார்கள் என்று நினைத்து நான் அழகா இருக்கிறேனா என்று அடிக்கடி கேட்க வேண்டாம்

12. நான்கு சாத்துச் சாத்திவிடவும்!

  • கருத்துக்கள உறவுகள்

12. நான்கு சாத்துச் சாத்திவிடவும்!

பெண்களின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பாக வாழ அலைமகள் சொன்னமாதிரி ஆண்களே ஆஞ்சநேய பகவானுக்கு வெத்திலை மாலை சாத்தி உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்,...

பாவம் உங்கட கணவர்....

Edited by உடையார்

07.சின்னப்பிள்ளைத்தனமாக அப்பாவிபோல் இருப்பவர் என்றால் அவரில் லைட்டாக ஒரு கண் வைத்திருங்கள். ஏனெனில், அப்படி இருக்கும் ஆண்களைத்தான் தற்போதைய பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சின்னப்புள்ளத்தனமா நீங்க இருக்காதீங்க! அவதானம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 33

உருப்படியான ஆணை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பற்றி இத்தனை வாரங்களாக பார்த்தோம். இப்படி எல்லாம் ஜலித்து புடைத்து, ஆய்ந்து பரிசோதித்து தான் ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா? சும்மா அப்பா அம்மா சொல்லுகிற ஏதோ ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டினால் ஆகாதா? என்று நீங்கள் கூட யோசிக்கலாம்.

இதில் ஒரு பெரிய சூட்சமமே இருக்கிறது. உலக ஜீவராசிகள் அனைத்திலுமே பெண் தான் தனக்கு வேண்டிய ஆணாய் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளூம். எந்த ஜீவராசியிலும் ஆண் பெண்ணை தேர்ந்தெடுப்பதே கிடையாது. இதை தான் டார்வின் செக்ஷுவல் செலக்ஷன் என்றார். அதாகப்பட்டது, பெண் இனம் ஆண்களை தர பரிசோதனை செய்து, “தி பெஸ்ட்” ஆணை மட்டுமே கலவிக்கு தேர்வு செய்யும். இப்படி நடக்கும் கலவியல் தேர்வில் ஜெயிக்கவே ஆண் மிருகங்கள் அழகழகான் கவர்ச்சி உருப்புக்களை வளர்த்து பெண் இனத்தை ஈர்க்க பார்க்கின்றன. ஆண் சிங்கத்தின் அழகான பிடரி, ஆண் மயிலின் அழகான தோகை, ஆண் சேவலின் அழகான கொண்டை, ஆண் யானையின் நீளமான தந்தம்…..அவ்வளவு என்ன ஆர்ஜண்டீனாவின் நீல அலகு வாத்தின ஆணுக்கு தான் உலகிலேயே மிக நீளமான ஆணுருப்பு, முழுதாய் அரை மீட்டர் நீளம்…..எல்லாம் எதற்காக? பெண்களை கவர்ந்து பாலியல் தேர்வில் வெற்றி பெறுவதற்காக!

இப்படி பெண் பாலியல் தேர்வை நடத்துவதும், ஆண் அதில் பங்கெடுத்து வெற்றி தோல்வியை சந்திப்பதும் தான் ஆரம்ப கால மனிதர்களுக்குமே நடைமுறையாக இருந்தது. உதாரணத்திற்கு இராமாயண சீதாயை எடுத்துக்கொள்வோமே….மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே ஸ்ரீ ராமன் வந்தாலும், அன்னலும் நோக்கி, அவளும் நோக்கியிருந்தாலும், அவள் சும்மா ஒன்றும் அவனை தேர்ந்தெடுக்கவில்லையே. ”மஹா விஷ்ணு அவதாரமாவது மண்ணாங்கட்டியாவது, முதல்ல சிவ தனுசை ஒடச்சி காட்டு, அப்புறம் நீ பாஸா ஃபெயிலானு நான் முடிவு பண்ணுறேன்”, என்று கறாராகத்தானே பாலியல் தேர்வை நடத்தினாள்.

அந்த கால இந்திய பெண்கள் எல்லாம் தற்தம் காதலனை/கணவனை இப்படி நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தேர்வு செய்ததினால் தான், முந்தைய கால இந்திய ஆண்களுக்கு வீரம் அதிகமாக இருந்தது. அதனால் தான் வெளிநாட்டு ஆசாமிகளிடம் நாம் தோற்காமல் இருந்தோம். ஆனால் போக போக, இந்திய பெண்கள் இந்த பாலியல் தேர்வு முறையை கைவிட்டு, பெட்டி பாம்பாய் அடங்கி போய், தராதரமே பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் கண்டவனுக்கும் கழுத்தை நீட்ட ஆரம்பித்தார்கள்…..அப்போதிலிருந்து இந்திய ஆண்களிம் வீரியம் குறைந்து போனது, வெளிதேசத்து ஆண்களுக்கு ஒட்டு மொத்த தேசமே அடிமை ஆகி போனது!

ஆக பெண்கள் இயற்கையின் பிரதிநிதிகள். இயற்கை தன் “சர்வைவல் ஆஃப் தி ஃபிட்ட்டெஸ்ட்” நிபந்தனையை பெண்களை கொண்டே அமல் படுத்துகிறது. அதனால் தான் உலகின் எல்லா ஜீவராசியிலும் பெண்ணே பாலியல் தேர்வுகளை முடிவு செய்கிறது. ஐந்தறிவு இருக்கும் ஜீவன்களே இவ்வளவு உஷாராக இன தேர்வு செய்யும் போது, ஆறு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்ளூம் மனித பெண், இன்னும் எவ்வளவு உஷாராக தன் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆக, இது வரை சொன்ன அத்தனை துணை தேர்வு குறிப்புக்களையும் வைத்து, மிக எச்சரிக்கையாய், ஆணை அலசி சிறந்தவனாய் ஒருவனை பார்த்து choose செய்து விட்டீர்களா? வெரி குட்! இனி இவனை எப்படி கை ஆள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆனால் அதற்கு முன்னால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான அறிவியல் ரகசியம் ஒன்று! ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இதென்ன பிரமாதம், சின்ன குழந்தை கூட சொல்லுமே, இருவருக்கும் பிறப்புருப்பு வெவ்வேறாக இருக்கிறது, அது தானே என்கிறீர்களா? அது சரி, இந்த பிறப்புறுப்புக்கள் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? அந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா? இதற்கு காரணம் ஆண் உடம்பில் ஊறும் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரு ஹார்மோன்.

நாம் இந்த தொடரில் ஏற்கனவே பேசிய சமாசாரம் தான், இருந்தாலும், உங்களுக்காக ஒரு சின்ன கதை சுருக்கம்: ஜனிக்கும் போது எல்லா மனித குழந்தைகளுமே பெண் பாலாய் தான் ஜனிக்கின்றன. அந்த குழந்தையின் மரபணுக்களில், ஒரு Y குரோமோசோம் இருந்தால், அந்த கருக்கு 6 வாரங்கள் ஆகும் போது இந்த Y குரோமோசொம், அந்த பொடியனின் உடம்பில் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த டெஸ்டோஸ்டீரோன், அந்த குட்டி உடம்பு முழுக்க பறவி, ஏற்கனவே பெண் வடிவமாய் இருக்கும் அவன் உடம்பையும் மூளையையும் ரீவையரிங் செய்து ஆண்மை படுத்தி விடும். இது என்ன புது கதையா இருக்கே, ஆதாரமில்லாம நான் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க தோன்றுகிறதா?

ஆதாரம் 1: ஆண்களுக்கு இருக்கும் முலைகள். எப்படியும் இவன் தான் பாலே கொடுக்க போவதில்லையே, அப்புறம் எதற்காக அவனுக்கு முலைகள்? ஏன் என்றால், அவன் தோல் உருவான ஆரம்ப நாட்களிலே அவன் உடம்பு பெண் வடிவாய் இருந்ததால், முலைகளும் அமைந்து விட்டிருந்தன. அதற்கு அப்புறம் தானே அவன் ஆணாய் மாறினான்? அதனால் முலைகள் அப்படியே தங்கிவிட்டன!

ஆதாரம் 2: சில குழந்தைகளுக்கு இந்த ஆண்மை படுத்தும் படலம் முழுமை பெறாமல், பாதியிலேயே நின்று விடுவதுண்டு…..அப்போது பிறப்புருப்பிலோ, மூளையிலோ, பாலினமாற்றம் முழுமை பெறாமல் அரை குறையாக இருப்பதினால், பிறந்து வளர்ந்த பிறகும் இந்த பாலியல் அடையாள கோளாறூகள் தொடர்வது உண்டு.

ஆக தகுந்த அறிவியல் ஆதாரங்களை வைத்து நமக்கு இப்போது தெரியும் பாலியல் உண்மை: இந்த ஆண் என்பவன் தன் தாயின் கருவில் இருந்த அந்த ஆரம்ப 6 வாரங்களுக்கு பெண் பாலாய் தான் இருந்தான். அதற்கு பிறகே ஆணாய் மாறினான். இப்படி பாலின மாற்றம் ஏற்பட்ட போது, அவன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது போலவே அவன் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் முதல் மாற்றம்: அவன் மூளையின் மொழி மையம் சின்னதாகி போனது. முகத்தை பார்த்து ‘என்ன மூடில் இருக்கிறாள் இவள்?” என்று கண்டு பிடிக்கும் மூளையின் பாகமும் அவனுக்கு சிறுத்துவிட்டது. இதை போலவே குரலை வைத்து ஒருவரின் மனநிலையை யூகிக்கும் தன்மையும், ஒரே சமயத்தில் பல தகவலகளை ஒரிங்கிணைத்து யோசிக்கும் தன்மையும் அவனுக்கு இல்லாமல் போனது.

இவை எல்லாம் பெண் உருவாய் இருந்த போது அவன் மூளையில் இருந்த மையங்கள் தான். ஆனால் அவன் மூளையினுள் டெஸ்டோஸ்டீரோன் பாய்ந்த பிறகு இந்த மையங்கள் மறைந்து அதற்கு பதிலாக, பொருட்களை லாவகமாக கையாளும் தன்மையும், துள்ளியமாய் குறி பார்க்கும் தன்மையும், திசைகளையும், தூரங்களையும் யூகிக்கும் தன்மைகளும் அவனுக்கு புதிதாய் ஏற்பட்டன…..

இந்த தன்மைகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும் ஏன் இருக்கின்றன? பெண்களுக்கு ஏன் அவ்வளவாக இல்லை? என்கிறீர்களா?

சபாஷ்! சரியான கேள்வி. அதற்கு பதிலும் ரொம்ப ஸ்வாரசியமானதே. மனித புணர்ச்சியில் பெண்ணுக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவள் சும்மா இருந்தாலே போதும். ஆனால் ஆணூக்கோ, உடல் பாகங்களை ஒருங்கிணைத்து செயல் பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அவனுக்கு இந்த co-ordination சரியாக வரவில்லை என்றால், அவன் இன பெருக்கத்திற்கே லாயக்கி அற்றவனாய் போய் விடுவானே. அதனால் தான் மனித ஆணுக்கு மட்டும், இந்த கண், கை, உருவ ஒருங்கினைப்பு ரொம்பவே அவசியமான ஒரு தேவை. இந்த தேவையை அனுசரித்து தான் இயற்கை அவனுக்கு இதற்குண்டான மூளை இனைப்புக்களை புதிதாக உருவாக்கி தருகிறது. இப்படி கலவியல் தேர்வில் வெற்றி பெற இயற்க்கை இவனுக்கு கொடுத்த, இந்த பொருத்தி ஆளும் தன்மையை தான் மனித ஆண் ஆயுதம் செய்யவும், வேட்டை ஆடவும் பயன் படுத்திக்கொண்டான். இந்த மூளை மாற்றங்கள் எல்லாம் அவனை ஒரு நல்ல வேட்டுவனாக்க உதவின.

இந்த வேட்டுவ மூளை அவனை திறமையாக வேட்டையாடி வம்சம் வளர்க்க வைத்தாலும், ஒரு பெண்ணிடம் நைசாக பேசி, அவள் முக ஜாடையை புரிந்துக்கொண்டு நடக்கும் பக்குவமெல்லாம் இல்லாதவனாய் அவனை இது மாற்றிவிட, பாவம் ஆண்கள்……அப்போதிலிருந்தே பெண்களிடம் பேச்சில் தோற்று போக ஆரம்பித்தார்கள்.

இந்த பாழாய் போன இயற்கை ஏன் இப்படி ஆண்களின் பேச்சு மையத்தை சின்னதாக்கி தொலச்சிதோ, என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது…..என்ன செய்வது மனித பெண்ணின் இடுப்பு எலும்பின் இடுக்கு வழியே பிரசவிக்க வேண்டுமானால் குழந்தையின் தலை ஒரு குறிப்பிட்ட சைஸ்ஸில் இருந்தால் தான் முடியும். மனிதர்களோ குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள்….சிங்கம், புலி, மாதிரி மாமிச பட்சினிகளாய் இருந்தால், பரம்பரை பரம்பரையாக வேட்டையாடிய பழக்கத்தில் மூளையும் ரெடிமேடாய் வேட்டைக்கென்றே வடிவமைக்கபட்டதாய் இருந்திருக்கும். மனிதனோ பழம் தின்னி குரங்கு வகையை சேர்ந்தவன்…..ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மின் ஏற்பட்ட ஒரு கொடும்பனி காலத்தின் போது, பஞ்சம் பிழைக்க அவன் உணவு முறையை மாற்றினான்……திடீரென்றூ மாமிச பட்சினியாய் மாறினான்…..இதை அனுசரித்து, அவன் மூளையினுள் சில புதிய வேட்டுவ மையங்களை உருவாக்க வேண்டிய அவசர கட்டாயம் இயற்கைக்கு. இந்த புதிய மையங்களை மூளையில் நிருவினால், அப்போது தலை சுற்றளவு பெரியதாகிவிடுமே? அதிலும் ஒரு பிரச்சனை, பிரசவத்தின் போது இடுப்பு எலும்பில் அகலத்திற்கு உட்பட்டே சுசுவின் தலை இருந்தாக வேண்டும். அதனால் தான் வேட்டையின் போது அதிகம் தேவை படாத, மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் ஏரியாக்கள் எல்லாம் அவுட். அதற்கு பதிலாக வேட்டுவ ஏரியாக்கள் இன்!

ஆணின் மூளை மாற்றங்களை புரிந்துக்கொள்ளாத பெண்கள், “இவன் ஏன் என்னை போல சரளமாக பேச மாட்டேன் என்கிறான்? என் முகத்தின் பாவத்தை இந்த முட்டாள் புரிந்துக்கொள்ளவே மாட்டானா?” என்றெல்லாம் கவலை படுகிறார்கள்.

அவனுக்கு நிறைய பெண் சவகாசம் இருந்திருந்தால், “ஓகோ, பெண்கள் எல்லோரும் இப்படி தானா?” என்று அவன் அந்த அனுபவத்திலாவது புரிந்துக்கொண்டிருப்பான். பெண்களோடு அதிகம் பழகாத உத்தம புத்திரனாக அவன் இருந்தால் போச்சு, பெண்களின் இந்த வாய் மொழியும், உடல் மொழியுமே போதும் அவனை திக்கு முக்காக்கிவிட!

ஆகையால், ஸ்நேகிதிகாள், உங்கள் ஆணை ஹாண்டில் செய்ய, நீங்கள் முதலில் அவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்…..அவன் டெஸ்டோஸ்டீரோனால் மாற்றியமைக்க பட்ட ஒரு புது பிறவி. அவன் உங்களை மாதிரி இல்லை. உங்களை போலவே அவனும் பேசணும், புரிஞ்சிக்கணும், அன்பை வெளிபடுத்தணும் என்றெல்லாம் அவனிடம் ஓவராய் எதிர்ப்பார்க்காதீர்கள். இதை எல்லாம் அவனால் செய்ய முடியாது, காரணம் இதற்கு உண்டான மூளை மையங்களே அவனுக்கு அவ்வளவாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச மொழி மையத்தை வைத்து கொண்டு, ஏதோ அவனால் முடிந்தது, கொஞ்சம் சொதப்பலாக பேசினாலும், “பரவாயில்லை, இத்துனூண்டு மொழி மையத்தை வெச்சிக்கிட்டு, எனக்காக சிரமப்பட்டு இவ்வளவு பேசுகிறானே” என்று அவன் முயற்சிக்கு மதிப்பெண் கொடுங்கள். அவனை அவனாகவே இருக்க அனுமதியுங்கள். வித்தியாசங்களை மதித்து, அவனை ஏற்றுக்கொள்ள உங்களை தயார் படுத்திக்கொள்ளூங்கள்….

Understand his biology. இயற்கையாகவே அவனுக்கு இருக்கும், இந்த இயலாமைகளை புரிந்துக்கொண்டு, அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்…..அப்புறம் பாருங்கள், அவனை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸியாகிவிடும் என்று!

By Dr N Shalini

Psychiatrist

linguamadarasi.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ஆண் என்பவன் கண்டிப்பாக வேலைக்குப் போயே ஆக வேண்டியவன். சரி, இப்போது உங்களுக்குப் பலவிதமான ஆண்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களில் உங்களுக்கு யாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆண் 1

எனக்கு வேலைக்குப் போகவே மூடு இல்லை. விட்டா ஆஃபீசுலேயே படுத்துத் தூங்கிடுவேன் என்று நினைக்கிற ரகம்.

ஆண் 2

இந்த ஆஃபீசுக்கெல்லாம் மனுஷன் போவானா? எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது என்கிற ரகம்.

ஆண் 3

தாத்தா காலத்துலேர்ந்து கட்டிக் காப்பாத்திட்டு வர குலத் தொழில். இதை கண்டினியூ பண்றது என் கடமை இல்லையா? அதான் செய்யுறேன், என்கிற ரகம்

ஆண் 4

இந்த வேலைதான் எனக்கு உயிர். எனக்கு லைஃபே என் வேலைதான், என்கிற ரகம்.

ஆண் 5

கிடைச்ச வேலை எதுவா இருந்தாலும் கரெக்டா செய்யணும். ஆனா வேலை நேரம் முடிஞ்சி வீட்டுக்குப் போனா அதெல்லாம் அப்படியே மறந்துவிடுவேன்.

ஆண் 6

என் பாஸ்னா எனக்கு உயிர். அவருக்காகத்தான் இந்த வேலையச் செய்யறேன் என்கிற ரகம்.

ஆண் 1 : இவன் சரியான சோம்பேறி. எந்த விதமான வேகமோ, உத்வேகமோ, சாதிக்கும் வெறியோ இல்லாத இவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சூனியமாகி விடும். அதனால் `பாவம் பார்த்து தேர்ந்தெடுத்தேன். திருந்திடுவான்னு நினைச்சேன்' என்றெல்லாம் உங்கள் மேலான குணங்களை கற்பூர வாசனையே தெரியாத கழுதைகளுக்குக் காட்டி வீண்டிக்காதீர்கள்.

ஆண் 2 : எல்லா அலுவலகங்களிலுமே பாலிடிக்ஸ் இருக்கும். இதை எல்லாம் கடந்து ஜெயிக்கத் தெரிகிறவன் தான் ஃபிட்டான ஆண். அதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடித்துக்கொண்டு, சதா அலுத்துக்கொள்ளும் இந்த வகை ஆண்கள், பெஸிமிஸ்டுகள் என்பதால், இவர்களுடன் நீங்கள் ரொம்ப நேரம் சேர்ந்திருந்தால் இவரின் இந்த இருட்டான அணுகுமுறை உங்களுக்கும், தொத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

ஆண் 3 : தன் முனைப்பில்லாமல், வெறுமனே தன் பரம்பரை கௌரவம், அல்லது வருமானத்தை அடைகாக்கும் இந்த வகை ஆண்களுக்கு எல்லாமே சுலபமாக ரெடிமேடாகக் கிடைத்து விடுவதால், போராடும் குணம் அதிகமாக இருப்பதில்லை. அதனால் சோர்ந்து, மெத்தனமாய் கிடந்து உடல் ஊதிப் போய், சுவாரசியமே இல்லாமல் சலித்துக்கொண்டிருப்பார்கள் இந்த வகை ஆண்கள்.

ஆனால் இதே `பரம்பரை' சொத்துக் கேட்டகரியில் வேறு சில ரக ஆண்கள் இருப்பார்கள். தாத்தா சின்ன கடைதான் வெச்சிருந்தார். நான் பெரிசா, புதுமையா, பிரம்மாண்டமா மாற்றி அமைக்கப் போறேன் என்று தன் தாத்தா விட்டுப் போன அஸ்திவாரத்தில் தன் சொந்த முயற்சியால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முயன்று, பல சமயங்களில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகை முனைப்புள்ள ஆண்கள் என்றால் எப்போதுமே ஓ.கே. தான்.

ஆண் 4 : ``வேலை தான் உயிர்'' என்கிற ஆண்களை அநேகப் பெண்களுக்குப் பிடிக்கும். இவனை மாதிரி ஒரு கெட்டிக்காரனுக்கு வாழ்க்கைப்பட கொடுத்து வெச்சிருக்கணுமே என்று நினைப்பார்கள். ஆனால் இந்த வகை ஆண்களிடம் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இவர்களுக்கு வேலை தான் காதலி, மனைவி, தாய், மகள் எல்லாமே. வேலை மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் அவர்களை முழு நேர ஷ்ஷீக்ஷீளீணீலீஷீறீவீநீ ஆக்கிவிடுவதால் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் சதா சர்வகாலமும் தன் தொழிலே கதி என்று இருந்துவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள், ``சே, எனக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்குறானா? இவனுக்கு நான் முக்கியமே இல்லை போல'' என்று நினைத்து நினைத்தே நொந்து போவார்கள். காரணம், அளவிற்கு மீறிய இவனின் வேலை மோகம். அதனால் அவன் தொழிலே அவளுக்கு ஒரு சக்களத்தி ஆகிவிட, கசப்புதான் மிஞ்சும். ஆக இந்த வகை ஆண்கள் எல்லாம் வீட்டில் வைத்து மேய்க்க சிரமமானவர்கள் என்பதனால் இவர்களும் அவ்வளவாக தேறுவதில்லை.

ஆண் 5 : எதைச் செய்தாலும் சரியா செய்யணும், மத்தபடி, வேலைய முடிச்சமா வீட்டுக்குப் போனமான்னு இருக்கணும் என்கிற இந்த வகை ஆண்கள் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கமாட்டார்கள். அதென்னது, மிஷின் மாதிரி வர்றான், வேலையை பற்றே இல்லாம செய்யுறான், முடிஞ்சதும் போயிகிட்டே இருக்கானே, என்று லேசாக எரிச்சல் கூட வரலாம். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா, இந்த வகை ஆண்கள் தான் தொடர் உறவிற்குத் தோதானவர்கள். எதிலுமே ஓவர் ஈடுபாடில்லாமல், எப்போதுமே மிதமாக இருக்கும் சுபாவம் தான் உறவிற்கு பலத்தைக் கொடுக்கும். ஆக இந்த வகை ஆண் என்றால் எப்போதுமே ஓ.கே!

ஆண் 6 : இந்த வகை ஆண்கள் ஓவர் இமோஷனல் டைப் என்பதால், இவர்களின் இந்த அளவிற்கதிகமான உணர்ச்சி விகிதமே போகப் போக உங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அதனால், இந்த வகை ஆண்களும் ஊகூம்!

ஆக, சிநேகிதிகளே, உங்களை முற்றுகை இடும் ஆண்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன குணங்களின் கலவைகளாக பல ஆண்கள் இருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், நிறை, குறை இரண்டையும் எடை போட்டு, அவற்றுள் எது அதிகம் என்பதை சரியாகக் கணித்துப் பாருங்கள். வெறும் அவனுடைய வேலை, மற்றும் அது பற்றிய அவன் அபிப்ராயத்தை வைத்தே இத்தனை தரப்பரிசோதனை செய்ய முடியும் என்பதால் இந்த வாரம் இதையே ஹோம் ஒர்க்காக செய்து பாருங்கள்.

By Dr N Shalini

Psychiatrist

linguamadarasi.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா பேமாளி ஆண்களுக்குத் தான் சரி. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா பேமாளி ஆண்களுக்குத் தான் சரி. :lol::D:icon_idea:

என்ன நீங்க அவங்களை இதை வாசிக்கிற கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டீங்களா..............

  • கருத்துக்கள உறவுகள்

01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;)

02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;)

இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;)

03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;)

04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி விமர்சிக்கவோ.... , இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்... அப்படியிருந்தால் நல்லாயிருக்கும்... என்று கருத்துச் சொல்லவோ கூடாது! என்னதான் சொன்னாலும்... அவர்கள் தங்கள் விருப்பப்படி வைக்கத்தான் விரும்புவார்கள். உங்களுக்கு ஃபாஷன் என்றால் அவர்களுக்கு ஸ்டைல் ஆக்கும்! ;)

05.அடிக்கடி லேட்டாக வந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள்! அப்படிவிட்டால் ... நீங்கள்தான் பாவம்! இன்னும் லேட்டாக வருவார்கள்! அப்புறம் நாடியில கையை வைச்சுக்கொண்டு நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டியதுதான்! :)

06.மறந்து போயும்... ஏய் நீ ரொம்ப கெட்டபையன்டா! என்று சொல்லிவிடாதீர்கள்! அதற்குப் பிறகு அவனை நல்லவனாக... எப்பவுமே பார்க்க முடியாது. ;) :D இதுக்குமேல் உங்கள் இஷ்டம்!!! ;)

07.சின்னப்பிள்ளைத்தனமாக அப்பாவிபோல் இருப்பவர் என்றால் அவரில் லைட்டாக ஒரு கண் வைத்திருங்கள். ஏனெனில், அப்படி இருக்கும் ஆண்களைத்தான் தற்போதைய பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சின்னப்புள்ளத்தனமா நீங்க இருக்காதீங்க! அவதானம்! :D

08.அவர்கள் கடுப்பாக அல்லது ஏதாவது ரென்ஷனாக இருக்கும்போது எதுவுமே பேசாதீர்கள். அது தானாகவே அடங்கும். அதுவாக அடங்கவில்லையென்றால்....... பத்ரகாளி அம்மன் படத்தை அவருக்கு ஒருக்கா போட்டுக் காட்டுங்கோ! :D

09. வேலை விட்டு வீடுவந்த உடனேயே வேறு வேலையைச் சொல்லாதீர்கள்! வரும் வழியிலேயே யோசித்து, அடுத்த வேலைத்திட்டத்துடன்தான் வீட்டுக்கதவை திறக்கிற ஆட்கள் ஆண்கள்! அது என்ன வேலையாய் இருக்கும் என்பது .... ? (சத்தியமா எனக்குத் தெரியாது! :o )

10.சண்டை வரும்போது அதிகமாகத் திட்டிவிடாதீர்கள்!!! ஆண்கள், தாம் திட்டியதை அடுத்த நொடியே மறந்து விடுவார்கள்; ஆனால், தங்களைத் திட்டியதை இலகுவில் மறக்க மாட்டார்கள்! பார்த்து.... :D எதுக்கும் ரெக்கோர்ட் பண்ணி வையுங்கோ!

இன்னும் நிறைய இருக்கு....

உறவுகளே............. நீங்களும் தொடருங்களேன் !

நீங்கள் எழுதினதில் ஏழாவது விடயம் நடைமுறையில் இல்லை... தற்போது எல்லாம் பெண்களுக்கு ரவுடி மாதிரி இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;)

பதில் தெரியாததால்தானோ!

  • தொடங்கியவர்

:D நல்லா இருக்கு..! :rolleyes:

சில நாட்களுக்கு முன் முகப்புத்தகத்தில் நான் எழுதியிருந்ததனை சில மாற்றங்களோடு இங்கு பதிந்திருக்கின்றேன்!

நன்றி டங்குவார் அண்ணை! :):rolleyes:

11) உண்மை சொல்வார்கள் என்று நினைத்து நான் அழகா இருக்கிறேனா என்று அடிக்கடி கேட்க வேண்டாம்

அய்யய்யோ இதை மறந்திட்டனே!!!! :o :lol: பரவாயில்லை நீங்கள் சொல்லிட்டீங்கள் உடையார்!!!!! :D

12. நான்கு சாத்துச் சாத்திவிடவும்!

ஏன் இந்தக் கொலைவெறி???? :o:huh: நாங்கள் பாவந்தானே!!!??? :unsure:

07.சின்னப்பிள்ளைத்தனமாக அப்பாவிபோல் இருப்பவர் என்றால் அவரில் லைட்டாக ஒரு கண் வைத்திருங்கள். ஏனெனில், அப்படி இருக்கும் ஆண்களைத்தான் தற்போதைய பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சின்னப்புள்ளத்தனமா நீங்க இருக்காதீங்க! அவதானம்!

ம்ம்ம்ம்ம்ம்........... நீங்களும் அப்பிடித்தான் போல கிடக்கு! எதுக்கும் உங்களில ஒரு கண் வச்சிருக்கோணும்!

  • தொடங்கியவர்

நீங்கள் எழுதினதில் ஏழாவது விடயம் நடைமுறையில் இல்லை... தற்போது எல்லாம் பெண்களுக்கு ரவுடி மாதிரி இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் :lol:

ம்ம்ம்ம் இதுவும் சரிதான்! :)

அதுசரி............. அப்ப உங்களுக்கும் அப்பிடித்தான் இருக்கோணும் எண்டுறியள்! :rolleyes:

ரவுடி மாதிரித்தானே............. எங்கட பெடியளுக்கு மேக்கப் வேணாம்! வாய் போதும்!!! :)

என்னதான் ரவுடியா இருந்தாலும் கலியாணத்துக்குப் பிறகு காவடிதான் தூக்கோணும்! தலைவிதி!!! :lol:

Edited by கவிதை

  • தொடங்கியவர்

பதில் தெரியாததால்தானோ!

பதில் தெரியுதோ இல்லையோ......... பின்விளைவுகள் பற்றி முன்னாடியே தெரிஞ்சிருந்தால் கண்டபடி கேள்விகள் காதில் வருவதை தவிர்த்திருக்கலாம்! :o

பதில் தெரிஞ்சு நாங்கள் என்னதான் செய்யப் போறம்! :unsure: "சட்டம்" ஒன்று தலையணை வடிவில் இருக்குது........ மறந்து போச்சோ!!!!!! :rolleyes::wub: பேசாம இருங்கோப்பா! :mellow::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.