Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரும், சுரேசும் மகிந்தவின் சதியில் வீழ்ந்து விட்டனரா?- இரா.துரைரத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்

தங்களது கருத்தை வாசித்தேன்.

அந்த மக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்பெறட்டும்.

இந்த குற்ற விசாரணை நாம் மறுத்தாலும் வந்தேதீரும்

  • Replies 79
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ். நகரில் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பவற்றைக் கூறித்தான் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்றனர். அதன் பின்னர் இப்போது அரசுடன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண இணங்குவது என்பது துரோகம் என்றார் அவர்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமது கட்சியின் அடிப்படையை மீறுவதை தனது கட்சி ஏற்காது என்பதால் 13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது என்று கூறிய தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சம்பந்தனும் இருந்தார். இன்று அவரே அரசுடன் அது பற்றிப் பேசுகிறார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் எந்த அடிப்படையில் இந்தப் பேச்சு நடத்தப்படுகிறது? மாகாணசபை ஒற்றை ஆட்சியின் கீழ் அடங்கிய விடயம்தான். பொலிஸ் காணி அதிகாரம் இல்லாமல் பேசுவதில் பொருள் இல்லை. மாகாண சபையில் முதலமைச்சருக்கோ உறுப்பினர்களுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அத்தனை அதிகாரங்களும் ஆளுநர் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நடக்க இருக்கும் மாகாண சபைத் தேர்தலை நாங்கள் நிராகரிப்போம். தேர்தல் மூலம் மக்களின் தனித்துவமும் சுய இறைமையும் இழக்கப்பட்டுவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

http://www.seithy.co...&language=tamil

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ். நகரில் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பவற்றைக் கூறித்தான் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்றனர். அதன் பின்னர் இப்போது அரசுடன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண இணங்குவது என்பது துரோகம் என்றார் அவர்.

தாயகத்தில், ஜனநாயக ரீதியில், இந்தக்குரல் எதிர்க்கட்சியாக பார்க்கப்படலாம்.

இவர்கள் இப்படி அங்கிருந்தே கூறுவது மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் விழிப்புணர்வையும் பொறுப்பையும் கூட்டும் என நம்பலாம்.

நோர்வேக்கு செம்பு தூக்கியவர்கள் இப்போது இந்தியாவுக்கு காவடி எடுக்கின்றனர்.சர்வதேச அரசியல் நிலமைகளசி சரிவர நாம் பயன் படுத்தினால் எம்மால் பலவீனமான நிலையிலும் பயனை அடைய முடியும்.சிங்களத்தின் சீனச் சார்பு என்பதை மேற்குலகம் அச்சத்துடன் நோக்குகிறது, இந்திய கொள்கைவகுப்பாளர்களால் தாம் சிறிலங்கா விடயத்தில் பிழையாக வழி நடாத்தப்பட்டதாகவே மேற்குலகு கருதுகிறது.விகிலீக்ஸில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதுவர் நாரயணன் பற்றிக் கூறீய விடயங்களைக் கவனித்தால் நாம் தெளிவாக இதனைக் கவனிக்கலாம்.மேற்குலகம் சிறிலங்காவைத் தமது பிடிக்குள் கொண்டு வரப் பாவிப்பது போர்க்குற்ற விசாரணையை.இதற்க்குக் காரணம் இந்தியா சிறிலங்கா மீது கொண்டிருந்த ஆளுமை என்பது முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டது.இன்று போர்க் குற்ற விசாரணை ஒன்றே சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வர இருக்கும் ஒரே அயுதம்.மேற்குலகம் சிறிலங்காவில் இரு வேறு அரசியற் சக்திகள் இருப்பதே தமக்கு சிறிலங்கா அரசை நிரந்தரமாகக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும் என்னும் நிலைக்கு வந்த்து விட்டன.இந்தத் தருணத்தைக் கூட்டமைப்புத் தலமை சரியாகப் பயன் படுத்தப் போகிறதா அல்லது தவற விடப் போகிறதா என்பதே இன்றிருக்கும் கேள்வி.முன்னர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வருவார்கள் ஆனால் இப்போது அமெரிக்க ராஜாங்கச் செயலர்கள் நேரடியாக வருகிறார்கள், ஏன் என்று யோசித்தால் தற்போதைய கொள்கை வகுப்பு எங்கு நடை பெறுகிறது என்பது விளங்கும்.

கிருபன் வெறும் அமைப்புக்களைக் குறை கூறுவதில் யாருக்கு என்ன பயன்? நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்று சுய விமரிசனம் செய்தால் , நாமே அமைப்பாகலாம்.சரியானா அமைப்பைக் கட்டுதல் அல்லது இருக்கின்ற அமைப்புடன் வேலை செய்து சரியான வழியில் செல்லுதல் என எம் மீதே உண்மையான விமரிசனம் திரும்பும்.சும்மா ஒன்றுமே செய்யாமால் மற்றவன் சரியான அமைப்பிக் கட்டிப் போராட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் வாழ் நாள் முழுவதும் அதனைத் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

தமிழீழம் தான் எமது ஒரே தீர்வென்று சொல்ல எமக்கு உரிமையுண்டு ஆனால் அது சாத்தியமா? என்பதுதான் கேள்வி.புலம்பெயர்ந்த பல அமைப்புக்கள் இப்போ இதே கோசத்தை வைக்கின்றார்கள்,மேற்குநாடுகளின் பார்வை இப்போ எம்பக்கம் திரும்பியிருக்கு அதனால் சாத்தியம் என்பதுபோல் கதையளக்கின்றார்கள். கடந்தகாலங்களிலும் இப்படியாகத்தான் இவர்கள் தமது அமைப்பின் இருப்பும் பணம் சேர்ப்பும் பற்றியே கவலைபட்டார்களே ஒழிய யதார்த்தமும் அங்குள்ள மக்கள் பற்றியும் எள்ளளவும் அக்கறையில்லை,இதை நம்பவும் பின்னால் இழுபடவும் ஒரு கூட்டம் இருந்தால் அது அவர்களுக்கு காணும்.

இவர்களே தொடர்ந்து சம்பந்தன் மேல் சேறடிப்பதும் கூட்டமைப்பை உடைப்பதற்குமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.கஜேந்திரன்,கஜேந்திரகுமார் இவர்கள் சொல் கேட்டு கடைசியில் என்ன நடந்தது.மக்கள் உங்களை ஏற்கவில்லை உங்கள் தேசிய வேசமும் வாய்க்கவில்லை இனி வெற்றிபெற்றவர்கள் செய்வதை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? தேசியத்தைவிற்கின்றார்கள்,சுயநிர்ணயயுரிமை பற்றி கதைக்கின்றார்களில்லை என்று ஏன் கூச்சல் இடுகின்றிர்கள்.மக்கள் அவர்களை தெரிவுசெய்தது அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்ததால் தான்.

புலம்பெயர்ந்தவர்கள் ஊர்வலத்தை வையுங்கோ,மகிந்ஹ்தாவை உள்ளுக்க போடுங்கோ பிரச்சனையில்லை ஆனால் இங்கிருந்து கொண்டு அங்கிருப்பவர்களுக்கு தீர்வு வைக்காதையுங்கோ.

புலிகளையும் அழித்து,நாப்பதாயிரம் சனத்தையும் கொன்று மிகுதிப்பேரை நடுத்தெருவில் விட்டதும் காணும் எஞ்சியிருப்பவர்களையும் உங்கள் கனவிற்காக தொலைத்துவிடாதிர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

snapback.pngபுலவர், on 18 September 2011 - 08:52 PM, said:

can u help me?i can't wri;te in tamil.

இந்த இணைப்பில் எழுதி, பின் வெட்டி இங்கே கொண்டு ஒட்டுங்கள்.

???????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

can u help me?i can't wri;te in tamil.

புலவர்!நீங்கள் பாமினி எழுத்துமுறையில் எழுதுபவர் என நினைக்கின்றேன்.இந்த இணையதளத்தில் முயற்சி செய்து பாருங்கள்.அங்கே எழுதி விட்டு அதை கொப்பிபண்ணி அதை இங்கே இணைத்து விடுங்கள்.

http://www.jaffnalib...ols/Unicode.htm

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையைக் கண்டு பிடித்து விட்டேன்.நன்றி கு.சா அண்ணா!change theme இல் மாற்றம் செய்தேன் சரி வந்து விட்டது.இந்தப் பிரச்சினையால் இவ்வளவு நாளும் கருத்தெழுத முடியாமல் போய்விட்டது.

அர்ஜுன்,

"புலிகளையும் அழித்து,நாப்பதாயிரம் சனத்தையும் கொன்று மிகுதிப்பேரை நடுத்தெருவில் விட்டதும் காணும் எஞ்சியிருப்பவர்களையும் உங்கள் கனவிற்காக தொலைத்துவிடாதிர்கள்"

இங்கே பல இணைப்புக்கள் தாயகத்தில் இருந்து நேரடியாக மக்கள் குரல்களாக இணைக்கப்படுகின்றது. அதில் அவர்கள் 'கிரீஸ்' பூதங்கள் பற்றியும், வடக்கின் 'இருள்' வசந்தத்தையும் பலமுறை கூறி அனாதரவாக உள்ள நிலையை கூறியுள்ளார்கள்.

நாங்கள் எவ்வாறு மறந்து வாழ முடியும்?

இரா-துரைரத்தினம் லூசு...........

காலாட்டிகிட்டே சும்மா கூலா கட்டுரை எழுதுறதுபோல இல்ல... தற்காலகட்ட அரசியல் நெருக்கடி /போராட்டவழிமுறை!

இல்ல....தெரியாமதான் கேக்குறேன்....

சுரேசும் ,சம்பந்தனும் வெளீப்படையாவே மஹிந்தகூட போய் சேர்ந்தால் ..யாரால என்னதான் செய்யமுடியும்?

மக்கள் புறக்கணிச்சுவாங்கன்னு .........கட்டுரை மீண்டும் எழுதுவீங்களா துரை?

சரி .. மக்களால் நூற்றுக்கு நூறுவீதம் ஏற்கப்பட்ட , மாற்று தலைமை ஏதும் இருக்கா எங்ககிட்ட?

தனக்கு யால்ரா போடுற ,,போர் பயிற்சி பெற்ற நம்ம ஒட்டுகுழுக்கழுக்கே...அரசபடைகளின் பாதுகாப்பு +..ரைபிள் வைச்சிருக்க வேற அனுமதி கொடுத்திருக்கான் சிங்களவன்!

எல்லாமே..முடிஞ்சுபோய்ச்சு....!

தம் உயிர் பாதுகாப்பு உட்பட..எதுவுமே இல்லாத இந்த முதியவர்கள் .

இனி ,எவர் காலை பிடித்தாவது இருக்கும் சாதகமான வழிகளை பயன்படுத்தி ,ஒரு தீர்வை நோக்கி எடுக்கும் முயற்சிகளை ..கொச்சைபடுத்தாதீங்க துரை!

ஆயிரமாயிரம் மைல்கள் தூரத்துக்கு அப்பால போய் ...அந்தந்த நாட்டு அரசின் பிரஜாவுரிமை &பாதுகாப்பு பெற்று வாழுற , பெரும்பாலான புலம்பெயர்தமிழனே.....இலங்கை அரசியல்பத்தி ..இணையத்துலகூட பேசுறத குறைத்து கொண்டுட்ட்டான்- ஏன்னா பயம்!

எங்கே தேடி கண்டுபிடித்திடுவானோ சிங்களவன் நம்மை என்னு பயம்!

சிங்களவனுக்கு நடுவிலயே தினமும் தூங்கி விழிக்கும்,,அவங்க நிலமை எவ்ளோ கடினமானதுன்னு புரியவே மாட்டீங்களா துரை!?

உங்களுக்கு பிரபல்யம் தேவைன்னா ........... நானு சில ஐடியாக்கள் தர்ரேன்...

நடிகை சோனாவ ,,எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் பாலியல் பலாத்காரம் பண்ணிட்டாராம்..

உடனே ஒரு ஆய்வு செய்யுங்க இதபத்தி! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தை விபரங்களை வெளியிடுவதில்லை என இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் சொல்வதையே சொறிலங்கா செய்யாது. இந்த இலட்சணத்தில் மூடிய கதவுக்குள் நடக்கும் ஒப்பந்தங்களை அமுல்படுத்தி விட்டுத்தான் மகிந்த அடுத்த வேலை பாப்பானாக்கும்? நல்ல சோக்காயிருக்கு போங்கோ! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நடக்கிற பேச்சுவார்த்தை, அல்லது அதற்குரிய முனைப்புகள், சம்பந்தராலோ அல்லது அவருக்கு வோட்டுப்போட்டவர்களாலோ, அல்லது இந்தியாவிலாலோ அல்லது முள்ளிவைக்காலில் புதைந்து போனவர்காலோ ஏற்பட்டதன்று. மாறாக இங்கே மேற்குலகம் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஒரு முயற்சிசியின் ஒரு படியாகவே பார்க்க முடிகிறது.அது ஏன் என்பது தான் தெரியாமல் உள்ளது. இது தெளிவாக இந்தியாவின் கைகளை மீறி நடக்கிற விடயம். - BBC போன்ற ரோ நடத்துகிற செய்தி நிறுவனங்கள் இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்திலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம். உதாரனத்திர்ற்கு, காப்பர் பொதுநலவாய மகாநாட்டுக்கு போகமாட்டார் என்கிற செய்தி BBC தமிழ் பகுதியில் இல்லை. அதேவேளை அந்த நேரத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆடை வடிவமைப்பில் சிங்களவர் ஒருவர் வந்த செய்தி உண்டு- ஒரு கல்லில் 2 மாங்காய்- புலம் பெயர் செயர்பாட்டாகளை மட்டம் தட்டுவது- என்னதான் நீங்கள் செய்தாலும் சிங்களவர் வருகிறார்கள், அவர்களுடையா ஆடைகளுக்கு தேவை இருக்கு என்கிற தோற்றப்பாடு- மற்றது பெரியளவில் உலகில் நடக்கிற மாற்றத்தை சொல்லாமல் விடுகிறது- BBC சிங்கள சேவையில் அது வந்துள்ளது - ஏனெனில் அது ஆங்கில மொழியில் வருவதால்.

திரும்பவும் தொடக்கதிர்ற்கே வந்தால், இங்கே அமெரிக்காவோ, மேற்குலகமோ எந்தளவு தூரம் இதில் ஈடுபடும் என்பது சொல்லமுடியாமல் உள்ளது. இங்கே போர் குற்றம் என்று வரும் போது தனியே களத்தில் நின்ற சிப்பாய்களோ, அல்லது அவர்களுது அதிகாரிகளோ, அல்லது இலங்கை அதிபரோ மாத்திரம் அன்றி அது இந்தியாவையும் பாதிக்கும். ஏனெனில் பல சந்தர்பங்களில் இந்தியாவின் நேரடி, மறைமுக பங்கு உண்டு. இதை சிங்களம் எந்தளவு தூரம் சாதகமாக பாவிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.-புலிகளையும் இந்தியாவையும் மோத விட்டது போல் . இலங்கைக்காக மேற்குலகம் இந்தியாவுடன் முரண்பட தயார என்பதுதான் இப்போது உள்ள அடுத்த கேள்வி?

முடிவாக சம்பத்தனையும் அவர்களுடைய கோஷ்டிகளையும் பப்பாவில ஏத்துகிறது என்று எல்லாரும்தான் முடிவெடுத்தாப் பிறகு அவர்கள் அதை இன்னும் கொஞ்சம் வடிவாக செய்தால் என்ன என்ற குரல் பிழையானதல்ல? சிலவேளை கேள்விகள் கேக்கிற முறைகள் பிழையாக இருக்காலாம், ஆனால் கேள்விகள் அல்ல.

இங்கே பப்பாவில் என்று சொன்னதிர்ற்கு காரணம், "யாழ்பாணத்தில்" நடக்கிற கிரீஸ் பூதத்தை தடுக்க ஒரு ஆர்பார்ட்ட போரணி நடத்த வக்கிலாதவர்களுடன்- அதற்கு அனுமதி பெற முடியாதவர்களுடன்,- ஒருவர் """தீர்வு திட்டம்""" பற்றி போசப்போகிறார்கலாம் என்றால் "கேக்கிறவன் கேனையன் என்றால் எருமையும் ஏரோ ப்ளேன் ஓடுமாம்"

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாருhளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் கீறீஸ் பூதம்; பற்றி பாராளுமன்றில் உரையாற்றியைத கேட்க முடிந்தது.........அது உரை என்று சொல்வதை விட கர்ஜனையாக அமைந்திருந்தது........

என்ன ஒரு தில் வேணும் பாராளுமன்றில் இப்பிடி உரையாற்ற...........உண்மையில் அவருக்கு ஒரு ஒஒஒ போடு......

அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.

உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள்.

அது மட்டுமா ஒருவொருக்கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள்.

ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக்கொருவர் உறைப்பாக காட்டிக் கொண்டு மேடைகளில் முழங்கினாலும் உள்ளுக்குள் இனிப்பாக பேசி அரசியல் செய்கின்றார்களோ என்று எண்ணும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

நேற்று மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் பிள்ளையானும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அருகருகாக அமர்ந்து அன்பாக அளவளாவினார்கள்.

இதை இங்கு ஏன் சுட்டிக்காட்டப்படுகின்றதென்றால் இவர்கள் வெளியில் சும்மா மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஊடகங்களுக்காகவும் ஒருவொருக்கொருவர் விரோதிகளாக காட்டிக்கொள்கின்றார்கள்.

இவர்களின் வார்த்தைகளை நம்பி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்கின்றார்கள் இதனால் ஏமாறுவது அப்பாவி பொது மக்களே.

அறிக்கை விடுவது போன்றும் மேடைகளில் ஆவேசப்படுவது போன்றும் மக்கள் நம்பிப்போட்ட வாக்குகளில் அரியாசனம் அமர்ந்த, இவ்வாறான ஒவ்வொரு அரசியல்வாதியும் சுயநல அரசியில் செய்யாமல் உண்மைக்குண்மையாக செயற்படுவதே மக்களுக்குச் செய்யும் முதல் கடமையாகும். இதுவே பலரின் கோரிக்கையுமாகும்.

எனவே இவ்வாறாக வெளிவேடத்துடன் செயற்படுபவர்கள் இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் உண்டு அவர்களையும் விரைவில் நாம் அறியலாம்.

nn1.jpg

nn2.jpg

nn3.jpg

nn4.jpg

manithan.com

சம்பந்தனும் சுமந்திரனும் அடிக்கடி கூறிக் கொள்வது தாம் தமிழர்களின் அடிப்படைகளைக் கைவிடவில்லை என்று.மக்களுக்கு அவ்வாறு கூறிக் கொண்டு இரகசியமாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று சொல்லாமால் இவர்கள் என்ன பேச்சுவார்த்தை நாடாத்துகிறார்கள்? எந்த வித அதிகாரமும் அற்ற மாகண சபையைப் பெற்ற வரதராஜப் பெருமாள் கடைச்யில் என்ன ஆனார்? கூட்டணி மாவட்ட சபையைத் தமீழீழம் என்று சொல்லி ஜீப் ஓடி கடைசியில் என்ன நடந்தது? கீரீஸ் பூதம் மகிந்தர் கிண்ட்டப் போய் ,அது எங்கு வந்த்து முடிந்துள்ளது.இங்கே போர்க்குற்ற ஆகட்டும் கிறீஸ் பூதம் ஆகட்டும் மேற்குலகின் கண்களுக்கு அதனைக் கொண்டு செல்பவர்கள் புலம் பெயர் தமிழர்கள். நாம் எமது மக்களுக்கு அனீதி இழைக்கப்படும் போதெல்லாம் அதனை உலகின் கண்களுக்குக் கொண்டு போயுள்ளோம்.இன்று தமிழரின் போராட்டப் பலம் புலம் பெயர் தேசத்திலும் தமிழ் நாட்டிலும் தான் இருக்கிறது.மக்கள் போராடுகிறார்கள், கூட்டமைப்பு அந்தப் போராட்டங்களைக் கைவிட்டு மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடாத்துகிறது.அவர்கள் வரலாற்றில் இருந்த்து எதனையும் கற்பதாகத் தெரியவில்லை.புலம் பெயர் தேசத்தின் போராட்டக் களத்தில் நிற்க்கும் எமக்கு , கூட்டமைப்பின் தலமையின் நடவடிக்கைகளை எமது மக்களின் நலனின் பாற்பட்டு விமர்சிக்க உரிமை இருக்கிறது.மீண்டும் ஒரு தவறான பாதையில் இந்தியாவின் குறிப்பாகத் தற்போதைய காங்கிரசு அரசின் வழி நடாத்தலில் கூட்டமைப்பின் தற்போதைய தலமை செல்லுமானால் அது மக்களால் மீண்டும் தூக்கியெறியப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைப் பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார்? – சுமந்திரன்!

Published on September 19, 2011-6:44 am

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது.

இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என அரச தரப்பு கூறியதை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட கூட்டமைப்பு புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திரிகளால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை எந்தவித தயக்கமும் இன்றி குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்(தங்களை புத்திஜிவிகள் என நினைக்கின்ற) ஏற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக நேற்றைய வீரகேசரி இப்படியான பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளாது ஒரு இறுதித் தீர்வை முன்வைத்தே பேச வேண்டும் என புத்திஜீவிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வேண்டிக் கொள்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச் செய்தி சம்பந்தமாக அரசாங்கப் பத்திரிகையான தினகரன் இன்று வெளியிட்ட செய்தியில் ‘பேச்சுவார்த்தைப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சுமந்திரன் புத்திஜீவிகள் என்றால் யார் என்று அந்தப் பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யார் அந்தப் புத்திஜீவிகள் எனத் தெரியாதவிடத்து அதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்’.

பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கிகாரத்திற்காக தெரிவிக்குழுவிற்கு முன்வைப்பதை விட கூட்டமைப்பு புத்திஜீவிகள் தெரிவுக் குழுவுடனே பேச்சுவார்த்தை நடாத்துவது சிறந்தது என்கிறார் கொழும்பின் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

http://www.saritham.com/?p=34937

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவிக்குழுவின் பரிசீலனைக்கு விடப்படும் என்றால்?????????பெரும்பான்மை இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நா.ம.தெரிவிக்குழு அதைத் தூக்கி குப்பையில் போடாது என்பது என்ன நிச்சயம்?????????????நாடாளு மன்றத் தெரிவுக்குழு முற்றிலும் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தல்ல.அங்கே தமிழர்களுக்குச் சார்பாக எதுவும் நடக்காது.இது எல்லோரையும் பேய்க்காட்டும் நடவடிக்கை.தமிழர்களின் கையறு நிலையில் வேறு நல்ல தெரிவுகள் இல்லாத நிலையில் ததேகூ அமைப்பிற்கு வலிமையான மாற்றுக் கட்சிகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பு எதைச் செய்தாலும் தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கும் வரை கூட்டமைப்பு எதேச்சாதிகாரமாக நடப்பது தொடரும்.இது கூட்டமைப்புக்கோ தமிழருக்கோ நல்லதல்ல.

  1. //அதேவேளை பேச்சுகள் மீண்டும் ஆரம்பமானதை நான் வரவேற்கின்றேன் என்றார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
    இதேவேளை, போர்க் காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி மஹிந்த அரசைக் காப்பாற்றிய அமெரிக்காவும் இந்தியாவும் இப்பொழுது வேறு வடிவில் மஹிந்த அரசைக் காப்பாற்ற முனைகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜனநாயக சோஷலிச கட்சித் தலைவர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய.
    புலம்பெயர் தமிழர்கள் இன்று அரசுக்கு எதிராகவும், அரசியல் தீர்வை வலியுறுத்தியும் போராடுகின்றனர். இந்நிலையில், உள்நாட்டில் நாமும் போராட்டங்களை முன்னெடுத்தால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும். மாறாக அமெரிக்காவையும், இந்தியாவையும் நம்பினால் அது பகல் கனவாகும்.
    “இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றோம் என்ற போர்வையில் அமெரிக்க அரசு மஹிந்தவைக் காப்பாற்றும் நாடகத்தைத் தொடங்கியுள்ளது என்பது தெட்டத்தெளிவு. ஏனென்றால், மஹிந்த அரசு வளர்வதற்கு வித்திட்டதே அமெரிக்காதான்.
    “இவ்வாறான ஓர் நாட்டின் அதிகாரியான ரொபேர்ட் ஓ பிளேக் பிரதான பாத்திரத்தை ஏற்று நடிக்கின்றார். அதுவும் இலங்கை அரசின் வலது கையாகச் செயற்படும் இந்தியாவால்தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்பதை நினைத்தாலே நகைச்சுவையாக உள்ளது” என்றார் ஜனநாயக சோஷலிஸக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.
    //
  2. விகிரம்பாகுவுக்கும் சிறிலாலுக்கும் விளங்குவது சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஏன் விளங்கிதில்லை?

இந்தியாவின் எடுப்பார்கைப் பிள்ளையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்குமாயின் மீண்டும் ஒரு பாரிய ராஜதந்திரத் தோல்வியை தமிழர்கள் சந்திப்பார்கள் என்று சிவாஜிலிங்கம் கனடியத் தமிழ் வானொலிக்குத் தெரிவித்தார்.

தற்போதைய பேச்சுக்வார்தைகள் தொடர்பில் மக்கள் அதிருப்த்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டர். பேச்சுக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவே முடிவுகளை எடுக்கின்றது. ஒரு சிலர் எடுக்கும் முடிவுகளை மற்றயவர்கள் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்துகொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு தனது நிகழ்ச்சி நிரலின் கீழ் தெளிவாகச் செல்கிறது. இலங்கை அரசின் பங்காளிக்கட்சியான கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் குணசேகராவை தற்காலிக வெளிநாட்டமைச்சராக நியமித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடன் பேசவைத்து - இந்தியா மூலமாக கூட்டமைப்பை பேச்சுவார்தைக்குச் செல்லுமாறு சொல்லவைத்துள்ளார்கள்.

சிங்கள அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை மிகவும் கெட்டித்தனமாக நடத்துகையில் தமிழர் தரப்பு மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. சனல் 4 மற்றும் போர்க்குற்றம் என்பவற்றை சாதகமாக்கிக் கொண்டு முன்னகரவேண்டுமே ஒழிய அவற்றின் பலனைக் கெடுக்கும் வகையில் பேச்சுக்களை நடத்தக் கூடாது.

புலம் பெயர் மக்கள் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாகவே ஒரு தீர்வு கிட்டும். வெறுமனே கூட்டமைப்பால் அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம் - சர்வதேச தலையீட்டால் நாடு பிரியும் என்ற ஒரு அபாயம் வந்தால் மட்டுமே அரசாங்கம் தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்றும் கூறினார்

http://www.pathivu.com/news/18462/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்கள் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாகவே ஒரு தீர்வு கிட்டும். வெறுமனே கூட்டமைப்பால் அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம் - சர்வதேச தலையீட்டால் நாடு பிரியும் என்ற ஒரு அபாயம் வந்தால் மட்டுமே அரசாங்கம் தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்றும் கூறினார்

இவ்வளவு உலக அழுத்தம் இருந்தும் கிறீஸ் பேய் விளையாட்டு மகிந்த அரசு விளையாடுவது இதற்கு சிறந்த உதாரணம்.

India won’t push for federalism in Lanka’

P K Balachandran

Express News Service

Last Updated : 19 Sep 2011 10:11:13 AM IST

COLOMBO: BJP MP and chairman of the Public Accounts Committee (PAC) of Parliament, Murli Manohar Joshi, has indicated that India will not push Sri Lanka to adopt a federal constitution to solve the long-festering Tamil question in the island nation. Joshi told Indian correspondents here on Sunday, that India had no intention of pressing Sri Lanka to adopt any particular type of constitution to solve the ethnic question. Whether the constitution should be federal or unitary was a matter to be decided through discussions between the various stakeholders in Lanka itself, he said.

While the Tamils have been pressing for federalism, the Rajapaksa government is for a unitary structure with a powerful Centre. Joshi felt that India could not take a firm view on this because the future was unpredictable. One could not rule out the possibility of everyone agreeing to a unitary system eventually, he said. India’s sole interest was in seeing that Lanka became a united, peaceful, democratic, multi-ethnic and multi-lingual State, in which the Tamils felt that they were full and equal citizens of the country, enjoying equal rights, Joshi said. Though he was in Colombo for a private function, Joshi met Prime Minister D M Jayaratne, External Affairs Minister G L Peiris and the Tamil National Alliance MPs, R Sampanthan and Suresh Premachandran.

India won’t push for federalism in Lanka’

One could not rule out the possibility of everyone agreeing to a unitary system eventually, he said. India’s sole interest was in seeing that Lanka became a united, peaceful, democratic, multi-ethnic and multi-lingual State, in which the Tamils felt that they were full and equal citizens of the country, enjoying equal rights, Joshi said.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் யார்? என்பதும் அவற்றில் ஆளும் கட்சியினர் - எதிர்க்கட்சியினர் தாக்கம் எவ்வளவாக உள்ளதும் என்பதும்

மற்றும் பாதுகாப்பு செயலாளர் தாக்கம் என்பதும் தமிழர் தரப்பால் ஆழமாக பார்க்கப்பட வேண்டியது.

இந்த ஜோசி கூறுவது போன்று ஒற்றையாட்சி முறைக்குள் தமிழர்கள் முழு உரிமைகளுடனும் வாழுவது என்பது இவர் சிங்கள் அரசின் அழைப்பிலேயே வந்துள்ளார் என எண்ணவைக்கின்றது.

இந்தியாவை மீறி தமிழர் தரப்பு எதையாவது எதிர்பார்க்கலாமா? - எகிப்திய பாடம்

ஹோஸ்னி முபாரக் அரபு நாடுகளின் ஒரு முக்கியமான நாடான எகிப்தை போலி தேர்தல்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை மேற்குலக இஸ்ரேலிய நலன்களுக்கு அமைய ஆட்சி செய்துவந்தார். ஆனால் அங்கே உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவை தனது விருப்பத்திற்கு எதிராக ஒரு முடிவை எடுக்க வைத்து புது சரித்திரம் படைத்தது.

இந்தியாவை மீறி தமிழர் தரப்பு எதையாவது எதிர்பார்க்கலாமா? - பாலஸ்தீனிய பாடம்

அறுநூறு மில்லியன்கள் அரபர்கள், பலம்பொருந்திய இஸ்லாமிய நாடுகள், பல நூறு பேச்சுவார்த்தைகள், சில சமாதானத்திற்கான நோபல் பரிசுகள், இலட்சக்கணக்கான உயிர்கள் - பாலஸ்தீனம் தனிநாடாக முடியாது என்பதே இஸ்ரேல்- அமெரிக்க நிலைப்பாடு.

இன்று அபாஸ் அவர்கள் ஐ.நா.வுக்கு முன்னால் தமது நாட்டின் அங்கீகாரத்தை கேட்டு வந்துள்ளார்.

மேற்குலகம் இதை தடுக்க முனைந்தது, தோல்வி கண்டுவிட்டது. இப்பொழுது வீட்டோவை பாவித்தால் அதன் உண்மை முகம் தெரிந்துவிடும் எனப்பயப்படுகின்றது.

இந்தியாவை மீறி தமிழர் தரப்பு எதையாவது எதிர்பார்க்கலாமா? - கோசவா பாடம்

எவ்வாறு சிங்களத்திற்கு இந்திய உதவியதோ அதேபோன்று யுகொசிலாவியாவுக்கு உருசியா உதவியது, படுகொலைகளை தெரிந்தும் ஆயுதம் வழங்கியது, இறுதிவரை கோசவா உருவாவதை தடுக்க முயன்றனர்.

ஆனால் மேற்குகலம் இனி ஒரு போரை, படுகொலையை தனது மண்ணில், ஐரோப்பாவில், விரும்பவில்லை. கோசவாவை அங்கீகரித்தது.

மேலே கூறப்பட்ட உதாரணங்கள், உதாரணங்கள் மட்டுமே. இவை போன்றே எமது பிரச்சனையிலும் மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால், மாற்றங்கள் எப்படியும் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றும் அதற்காக நாம் நம்பிக்கையுடன் உழைக்கவேண்டும் என்பதே முடிவாகவும் பார்க்கப்படலாம்.

இந்தியாவின் இலங்கை மீதான வெளிவிவகார கொள்கை எதை முதன்மையாக வைத்துப்பின்னப்படுகின்றது?

விடுதலைப்புலிகள் பலமான இராணுவக்கட்டுப்பாட்டுடன் போராடி தனிநாடு பெற்றுவிடக்கூடாது என்பது முன்னர் கூறப்பட்ட காரணம். அவர்கள் அவ்வாறு வென்றால் அது தமிழத்தில் தனிநாட்டு கோரிக்கையை இல்லை இந்தியாவில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு பலம் தருவதாய் அமையும் எனக்கூறப்பட்டது.

இன்னுமொரு காரணமாக இராஜீவ் கொலையும் காங்கிரசின் பழிவாங்கும் படலமும் கூறப்பட்டது.

அடுத்ததாக மேற்குலக 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' கூறப்பட்டது.

இந்தக்காரணங்களை சிங்களம் பலவேறு வழியிலும் பாவித்து எம்மை அழித்தது.

இன்று இந்தியாவை விட சீனா கூடுதலாக ஆதிக்கம் செலுத்துகின்றது. தமிழகத்தில் தேசிய உணர்வு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தேசியளவில் பலம் குறைந்துள்ளது. மேற்குலகம் 'பயங்கரவாதத்திற்கு எதிரான' யுத்தத்தை முடித்து பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்துகின்றது. அரசியல் ரீதியாக

'அரபு எழுச்சி' புது நம்பிக்கையை சர்வாதிகாரிகளுக்கு எதிராக தந்துள்ளது.

மாறியுள்ள மற்றும் மாறுகின்ற உலக ஒழுங்கில் இந்தியாவும் தனது இலங்கை மீதான கொள்கையை மாற்றியே ஆகவேண்டும். மாற்றமால் போனால் அது தன்னை அழிப்பதற்கு தானே காரணமாகி விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.