Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயரும் நாங்களும்

Featured Replies

ஆனால் பல இடங்களில் ஸ்பானிய Romero பெரு Romeroவை மதிப்பதில்லை. அவர்களுக்கு மொழியையும் இல்லை பெயரும் இல்லை, எல்லாமே நாங்கள் தந்தவை என்ற பொருள்பட கூறியதுண்டு.

இதே நிலை அமேரிக்கா வாழ் ஆபிரிக்க மக்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர்.

பிரித்தானியாவில் நீண்டகாலமாய் வாழும் சில கறுப்பின மக்களின் கடைசிப் பெயர்கள் (Surname -Family Name) அதிகமாக சில பெயர்களுக்குள்ளேயே (Roberts, Philips , Jackson .....) அடங்கும்.

காரணம் அவர்களை அடிமையாய் வைத்திருந்த பொழுது இருந்த எஜமானர்களின் பெயரை அவரது surname ஆக மாறினார்கள்.

சிங்களவர்களில் பலரும் தமது ஊரின் பெயர்களை குடும்பப்பெயராக கொண்டுள்ளனர். மல்வத்தை,

உதயகொட என. இதனால் அவர்கள் அதிகம் நாட்டுப்பற்று உள்ளவர்களாக தெரிகின்றது.

எம்மில் அந்தகுறை உள்ளது.

அதனால் எமது கள உறவுகள் பலரும் தமது பெயரில் தமது ஊரை இணைத்துள்ளனர்: மல்லையூரன், புங்கையூரன், நுணாவிலான், தும்பளையான்,... :D

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் எமது கள உறவுகள் பலரும் தமது பெயரில் தமது ஊரை இணைத்துள்ளனர்: மல்லையூரன், புங்கையூரன், நுணாவிலான், தும்பளையான்,... :D

இவர்களுடன் பருத்தியன்..! :rolleyes:

இவர்கள் எல்லோரும் தாயகப் பற்றுடன் இருப்பது கவனிக்கத்தக்கது..! :D

எனது பெயர் KUGATHASAN

இதை பிரெஞ்சுக்காறர்கள் கொலை செய்துவிடுவார்கள். ஆனால் எனது தகப்பனாரின் பெயரை சுப்பிரமணியம் என்று என்னைவிட அழகாக உச்சரிப்பார்கள்.( சுப்பிரமணியத்தை அதாவது தமிழ்க்கடவுளை ஏற்கனவே அறிந்திருப்பதலோ என்னமோ)

ஆனால் வேலையிடத்தில் வீட்டில் கூப்பிடுவதுபோல் தாசன் என்றே அழைக்கும்படி விட்டுவிடுவேன்.

எதற்காகவும் பெயரை மாற்றியது கிடையாது. யாழ் உட்பட. விசுவலிங்கம் சுப்பிரமணியம் குகதாசன்(விசுகு)

விசுகு அண்ணா,

உங்கட பெயரை Cougar Dawson என்று எழுதி வெள்ளையிடம் குடுங்கோ..! :D சரியா படிச்சுக் காட்டுவினம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களில் பலரும் தமது ஊரின் பெயர்களை குடும்பப்பெயராக கொண்டுள்ளனர். மல்வத்தை,

உதயகொட என. இதனால் அவர்கள் அதிகம் நாட்டுப்பற்று உள்ளவர்களாக தெரிகின்றது.

எம்மில் அந்தகுறை உள்ளது.

அதனால் எமது கள உறவுகள் பலரும் தமது பெயரில் தமது ஊரை இணைத்துள்ளனர்: மல்லையூரன், புங்கையூரன், நுணாவிலான், தும்பளையான்,... :D

சிங்களவர்களிடம் உள்ள நாட்டுப் பற்று எம்மவர்களிடம் கிடையாது. குறிப்பாக வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர்களிடம் கிடையாது. அவர்கள் ஓடி வந்ததே.. மேற்குலக செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கைக்காகத் தானே. அப்படி இருக்க.. எப்படி.. நாட்டுப் பற்று..???!

இவர்கள் என்ன தான் பெயரை மாற்றினாலும்.. தோலை மாற்ற முடியாது. குணத்தை மாற்ற முடியாது. அது வெள்ளைகளுக்கு நல்லாவே தெரியும்.

இவைட பந்தா அவைக்குள்ள மட்டும் தான் எடுபடும்..!

நாங்களும் தான் வேலை செய்திருக்கம்.. ஆரம்பத்தில் அவங்க பெயரை உச்சரிக்க எங்களுக்கு கஸ்டமா இருந்திச்சு.. அவங்களுக்கு எங்க பெயர் கஸ்டமா இருந்திச்சு. அப்புறம் பழகப் பழக.... அவங்க எங்க பெயரை நல்லா உச்சரிக்கிறாங்க.. நாங்க அவங்க பெயரை உச்சரிக்கிறம்.

இதில.. இடையில.. பெயர் மாத்தி.. சில பேர்.. தாங்கள் வெள்ளைக்காரங்களுக்கு போட்டியா போகப் போறம் என்றது.. கொஞ்சம் ஓவர் திமிர்..! அநாவசியமானது. உடம்புக்கு சேதாரம். :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

நெ.கா.அ.நீங்கள் கூடத் தான் யாழில் இம்மட்டு பெரிய பெயரை வைச்சுக் கொண்டதால் எங்களுக்கு சுருக்க வேண்டி வந்துட்டு....இது எப்படி இருக்கு? :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரைபெயர்குமாரசாமி எங்கேயும் எப்போதும் :D ...........சகுனமே இல்லாத சகுனியளின்ரை பெயரை தனக்குத்தானே வைச்சுக்கொண்டு....சிங்களவன் நாட்டை விட்டு ஓடேல்லையாம்...அவனுக்கு நாட்டுப்பற்றாம்.....மற்றது எங்கடையளின்ரை குணத்தை மாத்தேலாதெண்டு வெள்ளையளுக்குநல்லாய்த்தெரியுமாமெல்லே.......என்னதுசிங்களவனுக்கு நாட்டுப்பற்று அதிகமோ? துவேசத்துக்கும் நாட்டுப்பற்றுக்கும் வித்தியாசம் தெரியேல்லையாக்கும்.......ஓ போகத்துக்கு போகம் இன அழிப்பு செய்த சிங்களவனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது :o

வெளிநாடுகளிலை இருக்கிற சிங்களவனெல்லாம் சமூகசேவை செய்யவந்தவங்கள் எண்டு நினைக்கிறன் :rolleyes:

நெ.கா.அ.நீங்கள் கூடத் தான் யாழில் இம்மட்டு பெரிய பெயரை வைச்சுக் கொண்டதால் எங்களுக்கு சுருக்க வேண்டி வந்துட்டு....இது எப்படி இருக்கு? :):icon_idea:

கக்கக்க போ :lol: :lol: :lol:

டொராண்டோவில் ஒரு சிறப்பு வைத்தியரை சந்திக்க வேண்டிய தேவை. குடும்ப வைத்தியர் தந்தார் பெயரை, தொலைபேசி எண்ணை. பெயர் சற்குணரத்தினம் என இருந்தது. மனத்துள் பெருமையும் மகிழ்ச்சியும் ததும்பியது.

நாளும் வந்தது. அங்கு தாதிமார் உட்பட சகலரும் பெயரை டாக்டர் சற்குணரத்தினம் என அழகாக அழைத்தனர். பின்னர் அவரின் முதல்பெயர் அறிந்தேன், அபகாய். இது என்ன பெயர் என எண்ணி அறிய ஆவலானேன். மெல்ல கதையை தொடுத்தேன்.

தான் பிறந்தது நைஜீரியாவில் என்றார். பெற்றோர்கள் வேலை நிமிர்த்தமாக அங்கு சென்றனராம். அதனால் அவருக்கு அந்த நாட்டு பெயரினை வைத்தனராம் ^_^ பின் கனடாவுக்கு வந்து இவர் வைத்தியரானார். தமிழ் தெரியாதாம், ஆனால் கொஞ்சம் விளங்குமாம் என்றார். திருமணம் செய்தது வெள்ளை இனத்தவரை, பிள்ளைகளும் உண்டு ஆனால், தமிழ் பெயர்கள் இல்லை :(

Edited by akootha

மொறிசியஸ், ரெயூனியன், குவாதலூப் (Guadeloupe) போன்ற இடங்களுக்கு இந்தியாவிலிருந்து தமிழர்கள் கூலிகளாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ளனர். இப்போதும் தமிழர்களின் வம்சாவழியினர் அங்கு உள்ளனர். ஆனால் இவர்கள் தமிழர்களில்லை. இத் தமிழர்கள் முதலில் இழந்தது தமது மொழியை. இரண்டாவது கலாச்சாரம், மதம். இறுதியாக இப்போதும் சிலரிடம் ஒட்டியிருப்பது கொச்சைத் தமிழ்ப் பெயர்கள்தான். பெயர்கள் மாத்திரம் இவர்கள் தமிழர்களாக இருக்க உதவவில்லை.

சிங்கப்பூர், மலேசியாவிற்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னும் தமிழர்களாக இருப்பதற்கான காரணம் அவர்களின் இந்தியாவுடனான கலாச்சாரத் தொடர்பும் தமிழ் மொழிக்குக் கிடைத்த அங்கீகாரமும் தான்.

பிரான்ஸில் சீனர்கள் உள்ளனர். இங்கு வந்ததும் அவர்களில் பலர் முதலில் செய்வது பெயர்மாற்றம் அல்லது இரண்டாவது பெயர் சேர்ப்பு. இவர்களின் பெயரை உச்சரிப்து கடினம் என்ற காரணமாக இருக்கலாம். ஆனால் சீனர்கள் தமது மொழியையோ கலாச்சாரத்தையோ மறக்க மாட்டார்கள். அத்துடன் பொருளாதாரத்தில் நன்றாக முன்னேறியுள்ளனர்.

ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் பெயரை மாற்ற மாட்டார்கள். இவர்கள் தமது மதத்திற்கே அதிக முன்னுரிமை கொடுப்பதால் அம் மதத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் பெயரும் மொழியும் கலாச்சாரமும் அரேபியாவை ஒட்டியிருக்கும்.

ஆகவே ஒருவரது பெயர் அவரது மொழியை-இனத்தைத் தக்கவைக்கப் போதுமானதாக இல்லை. இடம்பெயர்ந்த ஒருவர் தனது இனத்தை-மொழியை இழந்தாலும் இன்னொரு இனமாக அவர் மாறத் தடையாக இருப்பது அவரது வெளித் தோற்றம் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ரைபெயர்குமாரசாமி எங்கேயும் எப்போதும் :D ...........சகுனமே இல்லாத சகுனியளின்ரை பெயரை தனக்குத்தானே வைச்சுக்கொண்டு....சிங்களவன் நாட்டை விட்டு ஓடேல்லையாம்...அவனுக்கு நாட்டுப்பற்றாம்.....மற்றது எங்கடையளின்ரை குணத்தை மாத்தேலாதெண்டு வெள்ளையளுக்குநல்லாய்த்தெரியுமாமெல்லே.......என்னதுசிங்களவனுக்கு நாட்டுப்பற்று அதிகமோ? துவேசத்துக்கும் நாட்டுப்பற்றுக்கும் வித்தியாசம் தெரியேல்லையாக்கும்.......ஓ போகத்துக்கு போகம் இன அழிப்பு செய்த சிங்களவனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது :o

வெளிநாடுகளிலை இருக்கிற சிங்களவனெல்லாம் சமூகசேவை செய்யவந்தவங்கள் எண்டு நினைக்கிறன் :rolleyes:

கக்கக்க போ :lol: :lol: :lol:

சிங்களவன்.. சிறீலங்காவை தனக்கு சொந்தமாக்க.. உயிரை விட்டான்.. பயங்கரவாதம் என்று சொல்லி இனப்படுகொலையை ஒற்றுமையா நிண்டு செய்தாங்கள். இப்ப அதற்கு பயனை அனுபவிக்கிறாங்கள்.

நாங்கள்.. அவனை அடிக்கிறம் விரட்டிறம் என்று வெளிக்கிட்டு.. நாங்கள் கிளம்பி பத்திரமா.. மேற்கு நாடுகளுக்கு வந்து அகதி என்ற பெயரில் செற்றிலாகிட்டம். இப்ப இங்க இருந்து கொண்டு.. அங்க பார்த்து கொட்டாவி விடுறம். அடியுங்கோடா.. எழும்புங்கோடா என்று சவுண்டு விடுறம்.. ஆனா நாங்கள் அதைச் செய்யமாட்டம். ஏன்னா.. நாங்கள் சுழியன்கள்.. வாழப் பிறந்தனாங்க.. நீங்க அடிவாங்கிச் சாகப் பிறந்தனீங்க..!

இதில.. சிங்களவனோடு ஒப்பீடு வேற.... அவன் தமிழனை அடிக்கிறதிலையாவது ஒற்றுமையா நிண்டான். இதுகள் சிங்களவனை அடிக்கிறதில கூட ஒற்றுமையில்ல.. இதில நாட்டுப் பற்று.. பெயர் பற்று புட்டுக்கிட்டு நிற்குதாமில்ல. கேக்கிறவன்.. கேணயன் என்றால்.. எருமை மாடு ஏரேபிளேன் ஓட்டுமாம். :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் பருத்தியன்..! :rolleyes:

இவர்கள் எல்லோரும் தாயகப் பற்றுடன் இருப்பது கவனிக்கத்தக்கது..! :D

எனது பெயரிலேயே இனவாதம் இருப்பதாக யாழ்களத்தில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் கூறினார் என்பது குறிப்பிடதக்கது யுவர் ஆனர். :lol: :lol:

மேலும் வல்வை சகாரா, வல்வை சிவா, வல்வை இந்தி, வாகையூரான், கொக்குவிலான் என்று பல கள உறவுகளும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரிலேயே இனவாதம் இருப்பதாக யாழ்களத்தில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் கூறினார் என்பது குறிப்பிடதக்கது யுவர் ஆனர். :lol: :lol:

மேலும் வல்வை சகாரா, வல்வை சிவா, வல்வை இந்தி, வாகையூரான், கொக்குவிலான் என்று பல கள உறவுகளும் இருக்கிறார்கள்.

இனவாதம் இல்ல.. பிரதேசவாதம்.. நுணாவிலான் அண்ணா..! :lol::D:icon_idea:

இனவாதம் இல்ல.. பிரதேசவாதம்.. நுணாவிலான் அண்ணா..! :lol::D:icon_idea:

பிரதேசவாதமில்லை அது. ஊர்வாதம். :icon_idea:

கூட்டிக்கழித்துப் பார்த்தால் மொத்தத் தமிழனுக்கும் 'மொடக்குவாதம்' :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிஞ்ச ஒராளுக்கு தியாகராசா எண்டு பெயர்..பாஸ்போட்டிலையும் அப்பிடித்தான் இருக்கு.....அவரை போறவாற இடங்களிலையும்...காணுற இடங்களிலையும் ராசா அண்ணை.... ராசா அண்ணையெண்டு கூப்பிடுவன்...அதுக்கு அவரும் ஒரு மாதிரி பாத்துக்கொண்டு போவார்...அண்டு ஒரு கலியாணவீட்டிலையும் இவரை கண்டவுடனை ராசா அண்ணை எப்பிடி சுகமோ எண்டு கேட்டன்....அதுக்கு தம்பி இஞ்சை வாரும் எண்டு சொல்லி...மறைவிடத்துக்கு என்னை கூப்பிட்டு.....ஏன் தம்பி ராசா எண்டு என்னை பட்டிக்காட்டு ஆக்கள் கூப்புடுறமாதிரி கூப்புடுறியள்? ராஜா எண்டு வடிவாய் கூப்பிடலாம் தானே எண்டார்....அவர் சொன்னதோடை எனக்கு அஞ்சும்கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது.

கதைஇப்பிடியும் போகுது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில கூட்டிக்கழிச்சு என்னட்டையும் வந்தாச்சோ????

வல்வை ஊர்வாதம் என்றால் சகாறா என்ன வாதம் நெடுக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.