Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் நடந்த களியாட்டம்! (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Germany20_1-300x224.jpg

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள சிறீலங்கா துதரகத்தில் கடந்த தீபாவளி நாள் அன்று தமிழ்துரோக கும்பலை ஒன்றுகூட்டி களியாட்ட நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் சென்ற தீபாவளி தினமன்று போர்க்குற்றத்தை மற்றும் தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கவும் யேர்மன் மக்கள் மத்தியில் தமக்கு சார்பான கருத்தை உருவாக்கவும் இதரசலுகைகளுக்காக சிங்களவரின் எண்ணத்தை செயல்வடிவமாக்க துணைநிற்கும் தமிழர்கள் என்று கூற முடியாத விலைபோன துரோக கும்பல்களை விலை வாங்கி ஆடம்பர களியாட்ட நிகழ்வொன்றை ஜேர்மன் சிறீலங்கா துதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வினை பேர்லின் வாழ் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள்.

எனினும் களியாட்ட நிகழ்வின் தகவல்களை அறிந்து கொண்ட பேர்லின் வாழ் தமிழ் மக்கள் தூதரகம் அமைந்திருக்கும் இடத்தின் அயலவர்களுக்கு இலங்கை அரசின் முகமூடியை கிழிக்க பிரச்சாரத்தில் இறங்கினர் .

சனல் 4 ன் இலங்கையின் கொலைக் களம் காணொளி தட்டுக்களையும் சில நாட்களுக்கு முன்னரே விநியோகித்தனர் .தீபாவளி தின களியாட்ட விழாவிற்காக இலங்கை தூதரகம் மேற்கு யேர்மனியில் இருந்தும் ஒரு சில விலைபோன கைக்கூலிகளை மதுபானம் கொடுத்து இறக்குமதி செய்திருந்தனர் .அதை தொடர்ந்து தூதரகம் வளாகம் முழுவதும் களியாட்ட கிளப்பாக மாறியது .

பல இளம் பெண்கள் அங்கு நடனமாடியதை அவதானிக்க முடிந்தது .அத்தோடு அங்கு யேர்மன் காவல்துறை பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தது .யேர்மனிய மக்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே காணப்பட்டனர் .

முக்கியமாக உலகமே ஒன்றுபட்டு போர்க்குற்றவாளி என்று சிறிலங்கா அரசை குற்றம்சாட்டி நிற்கையில் மன்னார் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புப் போரை நடாத்திய சிங்களப்படையின் ஒரு பிரிவையே தலைமையேற்று வழிநடாத்திய இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் முன்னிலையில் ஈழத்தமிழர் என்றே கூற முடியாத மானம் விலைபோன துரோகக் கும்பல் சிலர் நாட்டியம் ஆடினார்கள் .

எமது தேசியத் தலைவர் காட்டும் வழியில் நிமிர்ந்து நிற்கும் இளையோர்கள் தொடர்ந்தும் மனம் தளராமல் விடுதலையை நோக்கிய பாதையில் செல்வார்கள்.

அத்தோடு மிக விரைவில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து தமிழீழ மண்ணுக்காய் தம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் மற்றும் மக்களின் கனவையும் நிஜமாக்குவார்கள் என்பது சத்தியம் .

இது போன்ற பொய் பிரச்சார நிகழ்வை இலங்கைத் தூதரகம் கடந்த இரு ஆண்டுகளாக மிக தீவிரமாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Germany20_1.jpgGermany20_2.jpgGermany20_3.jpgGermany20_4.jpgGermany20_5.jpg

http://www.tamilspy.com/?p=15025

  • கருத்துக்கள உறவுகள்

"தேனி"க்கூட்டமும் உள்ளுக்குள் நின்றதாக நண்பர் ஒருவர் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் புலிகள் ஆயுதம் மவுனிக்கும் வரையும் சிங்களவனுக்கு முண்டு கொடுத்து கொண்டு இருந்தது இந்த தேனீ கூட்டம் கேட்டால் சொல்வார்கள் புலிகள் மக்களை கொடுமை படுத்துகின்றார்கள் என்று இப்போது சிங்களவன் செய்யும் பயங்கரவாதத்தை ஏன் கண்டிப்பதில்லை அப்படியானால் இவர்களின் உண்மையான உள் நோக்கம் என்ன ?

இந்த கூட்டம் மதுவை கண்டால் மொய்க்கதான் செய்யும். அது தான் போல் தங்களுக்கு தேடி சரியான பெயர் இட்டு கொண்டார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"தேனி"க்கூட்டமும் உள்ளுக்குள் நின்றதாக நண்பர் ஒருவர் கூறினார்.

கவனம் நுணா தள்ளி நில்லுங்கோ தேனீ கொட்டீடும். :lol:

நானறிஞ்சதில தேசியக்கூட்டத்திலிருந்தும் சில தலையள் தெரிஞ்சதாம். :wub:

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசமாய்ப்போவார்....

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் நுணா தள்ளி நில்லுங்கோ தேனீ கொட்டீடும். :lol:

நானறிஞ்சதில தேசியக்கூட்டத்திலிருந்தும் சில தலையள் தெரிஞ்சதாம். :wub:

தேனிகளும் என்று தான் சொன்னேன். நீங்களும் அர்ஜுனை குறைய விடுவதில்லை என்ற முடிவோடு தான் இருக்கிறீர்கள். :lol:

Edited by nunavilan

அக்கா ... ஜெகத் டயசுக்கு கச்சேரி வை வையென்று அன்று வைத்திருந்திருப்பார்???? ... கொடுத்து வைச்சவனடாப்பா!!!! ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா ... ஜெகத் டயசுக்கு கச்சேரி வை வையென்று அன்று வைத்திருந்திருப்பார்???? ... கொடுத்து வைச்சவனடாப்பா!!!! ^_^

!?

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய்ப்போவார்....

அதானே நாசமாப்போக. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

!?

தேவ தாசிகள் கூடத் தேவையேற்படின், சங்கீதம் பாடுவதுண்டு!

அதற்காக?

தீபாவளி கொண்டாட்டத்திற்கு வீட்டில் இடம்போதாதோ என்னவோ? :icon_mrgreen: :icon_mrgreen:

இந்த படங்களை எடுத்து வெளியில் விட்ட உறவுக்கு நன்றிகள் :D

ஐயா! அகோத்தா நாங்களும் நாளைக்கு நாறப்போகிறோம். நாளைக்கு கனடாவில் நாடகமும் இருக்காம்.வேளைக்கு வந்தால் உள்ளுக்கு போகிறவன்களையாவது யார் எனபார்க்கலாம்

ஐயா! அகோத்தா நாங்களும் நாளைக்கு நாறப்போகிறோம். நாளைக்கு கனடாவில் நாடகமும் இருக்காம்.வேளைக்கு வந்தால் உள்ளுக்கு போகிறவன்களையாவது யார் எனபார்க்கலாம்

பின்வாசல் பக்கமும் கமராவுடன் நிற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா ... ஜெகத் டயசுக்கு கச்சேரி வை வையென்று அன்று வைத்திருந்திருப்பார்???? ... கொடுத்து வைச்சவனடாப்பா!!!! ^_^

:lol: :lol: :lol:

இவர்களைப்போன்றோர்தான் எமது விடுதலை இயக்கத்தை அழிக்கவேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்த நா.. . இதுகள் என்னும் எஜமானர் விசுவாசத்துக்காக கு.... தான் செய்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

தேவ தாசிகள் கூடத் தேவையேற்படின், சங்கீதம் பாடுவதுண்டு!

அதற்காக?

விட்டுகொடுப்பு அரசியல் புலிகளுக்கு புரியவில்லை. அதுதான் இப்படி அழிந்துபோனார்கள்.

இவர்களாவது நன்றாக செய்கிறார்கள் என்று சந்தோசபடுவோம் என்றில்லாமல். இப்படி திட்டினால் எப்படி தமிழ் வாழும்? (இதவிட சாகலாம்).

நீங்கள் சர்வதேச அரசியல் படித்த விட்ட பிழைகளை ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் படிப்பதில்லையா?

விட்டுகொடுப்பு அரசியல் புலிகளுக்கு புரியவில்லை. அதுதான் இப்படி அழிந்துபோனார்கள்.

வி. நவரத்தினம், வி. பொன்னம்பலம், ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. அமிர்த லிங்கம், சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி வரத ராசப் பெருமாள், கதிர்காமர், குமார சூரியர், சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், டக்கிளஸ், கெ.பி.......... இவர்களில் யாராவது எப்பவாது எதையாவது விட்டு கொடுத்து தமிழருக்கு எதையாவது பெற்றதுண்டா?

(புலிகள் விட்டுக் கொடுக்க வெளிக்கிட்டு அழிந்தார்கள். சண்டையில் ஒரு சாணக்கியம் - கீழே விழுந்தவன், விழுத்தியவனுக்கு வெற்றி என்று கூறி எழுந்து கை குலுக்கி விட்டு, விழுத்தியவன் தனது வாளைக் கை நழுவ விட உடனே அவன் களுத்தை வெட்டி விடுவது)

இவர்களாவது நன்றாக செய்கிறார்கள் என்று சந்தோசபடுவோம் என்றில்லாமல்

இவர்கள் சந்தோசமாக இருக்கலாம் இப்போ. ஊரார் உற்சாகமாக வரவேற்க, உடுப்பு நடப்பாய் ஊர்வலம் வந்து, கோவில் வாசலில் இறைவனின் தரிசனத்தில் நின்று கொண்டு, களுத்தில் தூங்கும் மாலையில் இருக்கும் இலையை ரசித்து தின்னும் ஆடும் ஒருதவை வாழ்க்கையை அனுபவிப்பது உண்டு மருதங்கேணி..

நீங்கள் சர்வதேச அரசியல் படித்த விட்ட பிழைகளை ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் படிப்பதில்லையா?

படித்தென்ன பிரயோசனம்?. ஈழத்தில் நடந்தவையே எமக்கு ஞாபகத்தில் நிற்பதில்லையே.

Edited by மல்லையூரான்

Germany20_2.jpg

... உந்த தலையிலை சாணை பிடிக்கக்கூடியவர் ... ஈ, பீ, தேனியை சேர்ந்தவரோ????? ... தீபாவளிக்கு ஃகாட் பிளெஷிங் வாங்க சிறிலங்கா எம்பசி போனவையளோ??? ... உந்த படத்தில் நிற்கிற சின்னனுகளை ... டயசுக்கு இரையாக்கா விட்டால் சரிதான்!

இவர்கள் பலரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது எம்மவர் பலரது செய்கைகள்தான்.

புலிக்கு தேவாரம் பாடி சுத்துகிறவனை விட இவர்கள் எவ்வளோ மேல் .

கோபத்தில் உங்கள் வார்த்தைகளும் விசத்தைதான் கக்குகின்றன.புலிக்கு போனதெல்லாம் யாருக்கு இரையானவர்கள் ?ஏன் உங்களுக்கு இந்த கீழ்தரமான சிந்தனைகள் .

உங்கடை அரசியலை நீங்கள் சரியாக செய்ய கற்றுக்கொள்ள முதல் மற்றவனை பிழை பிடியாதயங்கோ .

உருப்படியான நாகரிகமான சமுதாயத்தை உருவாக்க இனியாவது முயற்சி செய்யுங்கோ .எல்லோருக்கும் உரு வேற்றி விட்டு தொலைந்துபோனார்கள் அவர்கள் இப்பவும் அந்த உருவில நின்று ஆடாதிர்கள், மனிதர்களாக மாற ஆவது முயற்சியுங்கள்

சரி விடுவம்...இப்பதான் அவங்கள் இல்லையெல்லே......பிறகேன் சிங்களவனுக்கு இன்னும் குடை புடிக்கினம்?.....இவையளைப்போல கன விடுதலையளுக்கு தடையாய் இருந்தவங்கள் இப்ப இல்லை......இனியென்ன தயக்கம்????தங்கடை தங்கடை விடுதலைப்பாதையைமுன்னெடுக்கிறதுதானே????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.