Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள்ள வேலை (சிறுகதை)

Featured Replies

கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான்,

,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று சென்றது ,

ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.

சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும் ,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன் ..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...

அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல..........இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்வம் .

டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது

வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது

இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட

வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்

வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று தெரிய வந்தது.

அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்...

செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான் ..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன்

ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள்

தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான்

வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று

எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை

ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது

யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை

திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால் ,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...

உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை ...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் ...ச்சேய்

இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை

இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது

இப்ப நான் அச்சா பிள்ளை

http://mithuvin.blog.../blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

நாகேஷ் நல்ல அனுபவஸ்தர். இப்படி மணித்தியாலச் சம்பளத்தில் தரகு வேண்டியே முன்னுக்கு வந்தவர்கள் பலர். பிரித்தானியாவிலும், ஹொட்டேல், பெற்றோல் நிரப்பு நிலையம், கடைகள், வீடு திருத்துதல் என்று தமிழர்களைத் தமிழர்களே அடிமாட்டுச் சம்பளத்தில் வைத்திருக்கின்றார்கள். கள்ள வேலை என்பதால் பலர் ஒன்றுமே சொல்லுவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடன் சேர்ந்து, சுரண்டலும் புலம் பெயர்ந்து விடுகின்றது போலும்!

அருமையான ஒரு படைப்பு, நாகேஷ்!

இலக்கியங்களும், கதைகளும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் போது. அவை உயிர் பெற்று விடுகின்றன!

இனிய ஒரு அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு, நன்றிகள்!

  • தொடங்கியவர்

கிருபன் ,புங்கையூரன் கருத்து கூறியது நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்

தோழர்மார் கத்திக்கத்தியே சமுகத்தை கெடுத்திருக்கினம்

  • தொடங்கியவர்

புத்தன் கருத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு, நன்றிகள்!

வட்டார வழக்கின் வீச்சுக்கு உங்கள் கதை ஓர் உரைகல் . உங்கள் அளவிற்கு என்னால் எழுத முடியாது . ஒருவகையில் நீங்களும் எனது ஆதார்ச எளுத்தாளர் தான் :) :) :) .

Edited by komagan

  • தொடங்கியவர்

வட்டார வழக்கின் வீச்சுக்கு உங்கள் கதை ஓர் உரைகல் .

கருத்துக்கு;நன்றி நிலாமதி...

கருத்துக்கு ;நன்றி,, கோமகன்,ஆஹா...என்னை வைத்து காமெடி கீமடி பண்ணேலைத்தானே... :lol: :lol:

தமிழர் எப்போதும் தங்கள் நலனுக்காக மாற்றானோடு சேர்ந்து தமிழரைக் கருவறுப்பது தொடர் கதையாகியுள்ளது. இதனைச் சிறுகதைக்குள் அடக்கியுள்ளீர்கள். அனுபவததின் பதிவு நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்

சகீவன் ,செம்பகன் ...கருத்து கூறியதுக்கு நன்றிகள்

ஒரு கில்டன் கொமிஷன் இன்று தான் கேள்விப்படுகிறேன் ஆனால் 1 2 இடங்களில் இப்படி பிரச்சனைகள் நடந்தனா ஆனால் வேலைக்கு சேர்த்து விட்டவனை சேர்ந்து ஆப்படிப்பதிலும் எங்கடை ஆக்கள் வல்லவர்கள் ஏதும் கொழுவல் என்றால் காட்டிக் கொடுப்பதிலும் வீரச்சுரர்கள்...........

டென்ஹில்டர் பக்கம் இந்த கிழங்கு கிண்டுறா வேலை கூட என் நினைக்கிறேன் நான் இருந்த பழைய இடத்தில் அழம் பறிப்பது தான் அதுவும் முதல் நாள் பழம் சாப்பிடுவதில் நேரம் போய்விடும் பின் கடும் வேலைதான் ( கூட பள்ளிக்கால விடுமுறையில் செல்வோம் இப்ப இருந்துவிட்டு1 2 கிழமை போய் செர்வேன்)

நன்றி நாகேஷ் ஜயா உங்கள் பதிவுக்கு....

Edited by வடிவேலு

  • தொடங்கியவர்

ஒரு கில்டன் கொமிஷன் இன்று தான் கேள்விப்படுகின்றே ஆனால் 1 2 இடங்களில் இப்படி பிரச்சனைகள் நடந்தனா ஆனால் வேலைக்கு சேர்த்து விட்டவனை சேர்ந்து ஆப்படிப்பதிலும் எங்கடை ஆக்கள் வல்லவர்கள் ஏதும் கொழுவல் என்றால் காட்டிக் கொடுப்பதிலும் வீரச்சுரர்கள்...........

டென்ஹில்டர் பக்கம் இந்த கிழங்கு கிண்டுறா வேலை கூட என் நினைக்கிறேன் நான் இருந்த பழைய இடத்தில் அழம் பறிப்பது தான் அதுவும் முதல் நாள் பழம் சாப்பிடுவதில் நேரம் போய்விடும் பின் கடும் வேலைதான் ( கூட பள்ளிக்கால விடுமுறையில் செல்வோம் இப்ப இருந்துவிட்டு1 2 கிழமை போய் செர்வேன்)

நன்றி நாகேஷ் ஜயா உங்கள் பதிவுக்கு....

வடிவேலண்ணை நன்றிகள் கருத்துக்கு...இப்ப நல்லவங்களாய் மாறிட்டாங்கள் போலை ..அப்ப ஒல்லாந்து முழுக்க தமிழாக்கள் ஆயிரத்துக்குள்ளை தான் இருக்கும்...இப்ப பத்து பதினைந்து ஆயிரத்தை தாண்டி விட்டியள் என்று நினைக்கிறன் ..அப்ப ஆட்கள் குறைவு இப்ப ஆட்கள் கூட என்றவுடன்..திருந்தி விட்டாங்கள் போலை ...சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வேலை செய்பவர்களை விட அதை ஊக்குவிப்பவருக்குத்தான் அதிக தண்டனை.

அந்தக்காலத்தில் எங்களுக்கு மொழியும் தெரியாது சட்டமும் தெரியாது..

அன்று நீங்கள் முறைப்பாடு செய்திருந்தால் ராஜனை உள்ளே தள்ளியிருக்கலாம்

உங்கள் எழுத்து நகைச்சுவை

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.