Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசியஸ் கிளே ( cassius clay)

Featured Replies

2007 ஆவணி காலை 7.30 மணி, 27 வருடத்திற்கு பிறகு கோண்டாவில் சந்தியில் கொண்டுவந்து நண்பன் என்னையும் மனைவியையும் இறக்கி விட்டு எதற்கும் முதல் நந்தவனம் போய் பாஸ் எடுங்கள்,பிறகு மற்ற அலுவல்கள் எல்லாம் என்றான்.

எனது சந்தி,நான் காலகாலமாக உழுது திரிந்தசந்தி அந்நிய பிரதேசமாக காட்சி அழித்தது.தெரிந்தவர் எவருமில்லை.சனங்ககள் திரியுது எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.பான்ஸ்சோட திரியிற எனது மனுசி புலி அலுவலகம் என்று சல்வார் அணிந்து வந்தார், எல்லாம் ஒரு நடிப்பு அதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.

நந்தவனத்தில் போய் இருக்கின்றேன்.சற்று தள்ளி எங்களது தோட்டக்காணி,அருகில் நான் சிக்சர் சிக்சர் ஆக அடித்து தள்ளிய விளையாட்டு மைதானம்.யாருடனாவது கதைக்க வேணும் போலுள்ளது தெரிந்த முகம் எதுவுமில்லை,இருப்பவர்களும் இறுகிய முகத்துடன் ஆணி அடித்தது போல் இருந்தார்கள்.

சில கேள்விகளுடன் அவர்களது விசா எடுத்து வந்துவிட்டேன்.(அதை எழுத விரும்பவில்லை).நண்பர் வரமட்டும் திரும்ப சந்திக்கு போகின்றேன்.அதே இயக்கத்துடன் சந்தி இயங்குகின்றது ஆனால் ஒரு செயற்கைத்தனம் தான் அதில் இருந்தது.ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற உணர்வு அங்கு எள்ளவுமில்லை.

கூனிய முதுகுடன் ஒரு வயோதிபர் என்னை அணுகுகின்றார்.

" தம்பி நீர் மாஸ்டரின் மகன் தானே,நான் கள்ளு சீவுகின்ற ரத்தினசிங்கம்"

பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி தாண்டி டிப்போ வரமுதல் இருக்கின்றது எங்களது காணி. இங்குதான் தோட்டவாழ்க்கையே நான் கற்றது.உருளைகிழங்கு,புகையிலை,மிளகாய் ,கத்தரி,வெங்காயம் எதுவும் வைப்போம்.மாடுகளை வேறு கொண்டு வந்து மேய விடுவோம்.

எமது காணிக்கருகில் ஒரு கள்ளுக்கொட்டில்.எமது தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அடிக்கடி போய் ஓய்வெடுக்கும் இடமது .நானும் அங்கு போயிருக்கின்றேன்.சிறிய கொட்டில்.நிலத்தில் மணல் போட்டு சுற்றவர இருப்பதற்கு பனம் குத்தி போட்டு மிக துப்பராவாக எந்தநேரமும் கூட்டி பெருக்கி, கள் மணமில்லாமல் சில வாடிக்கையாளார்களுடன் கலகலப்பாக இருக்கும்.அதன் உரிமையாளர்தான் ரத்தினசிங்கம்.நாங்கள் குறிப்பாக எனது அக்காமார் அவனை "கசியஸ் கிளே" என்றுதான் அழைப்பார்கள்.

மினுங்கும் கறுப்பு உடம்பு, சுருட்டைமுடி,கட்டையாக கட்டிய சாரம்.இடுப்பில ஒரு சிறு பனை ஓலையால் செய்தகூடு. அதில் கள்ளு சீவ தேவையான பாளைகத்தி,உருண்டையான ஒரு தடி இருக்கும் தோளில் கள்ளை சேகரிக்க சுரைக்காய் முட்டி தொங்கும்.எனக்கு புரியாவிட்டாலும் அக்காமாருக்கு அவன் ஆண் அழகனாக இருந்திருக்கின்றான்.இல்லாவிட்டால் அந்த பெயர் வர நியாமேயில்லை.

ஒரு நாள் நான் தோட்டத்தில் தம்பியுடன்விளையாடிக்கொண்டிருக்கின்றேன். பலத்த கேட்க கூடாத வார்தைகள் பறக்கின்றது. பனை மரத்தில் இருந்தபடியே பொன்னையனும் கீழே இருந்து சுப்பையனும் கொட்டி தீர்கின்றார்கள்.இருவருமே கள்ளுக்கொட்டில்கள் சற்றுதள்ளி வைத்திருக்கின்றார்கள்.பொன்னையன் மிக நெடுந்துயர்ந்த அந்த ஊர் சண்டியன்.சுப்பையன் அந்த ஊருக்கு பெண் எடுத்து வந்தவன்.பயமறியாதவன்.ஏற்கனவே இவர்களுக்கிடையிலான வாக்குவாதங்கள் ஊர் அறிந்ததும், எனக்கு அப்பா சயிக்கிலில் அவர்கள் கொட்டில்களை கடக்கும் போது சொல்லி தந்த விடயங்களும் ஆகும்.

பொன்னையன் பனையால் கிழே இறங்குகின்றான் ,எனக்கு நெஞ்சு பட படவென அடிக்கின்றது.கிணத்தடியை விட்டு அரக்கவில்லை.நிலத்திலிருந்து ஆறு, ஏழு அடி இருக்கும் போது முட்டியை எறிந்துவிட்டு பொன்னையன் சுப்பையனை நோக்கி பாய்கின்றான்.இருவரும் கட்டி பிரண்டு எமது தோட்டத்திற்குள் வந்து உருளுகின்றார்கள்.சனம் கூடி வேடிக்கை பார்க்கின்றது .பொன்னையன் சுப்பையனை ஓரளவு மடக்கிவிட்டான்.சுப்பையன் மெதுவாக இடுப்பில் இருந்த பாளை கத்தியை எடுத்து பொன்னையனின் பின்கால் குதியை வெட்டிவிட்டான் .பொன்னையன் வலியால் குளறுகின்றான்.சுப்பையன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான்.நானும் தம்பியும் விக்கித்து நிற்கின்றோம்.

அப்பா வந்து இருவரையும் சயிக்கிளில் ஏற்றிக்கொண்டு போகும் போது சொன்னார்.பொன்னையன் இனி வாழ்நாளில் கள்ளு சீவமுடியாதபடி சுப்பையன் பிளான் பண்ணி செய்துவிட்டான் என்று.பொன்னையன் இரத்தினசிங்கத்திற்கு தூரத்தி சொந்தம்.

ஆறு மாதங்கள் கடந்திருக்கும், பொன்னையன் ஆசுப்பத்திரியால் வலக்காலை கெந்தியபடியே வெளிவந்தான் ஆயுளுக்கும் மரம் ஏறமுடியாது.ஒர் இரவு இரண்டுமணிளவில் பொலிஸ் வாகனங்ககள் ஓடிய சத்தம் கேட்டு அப்பாவும் நானும் போய் பார்த்தால் இருண்ட அந்த புளியமரத்தடியில் சுப்பையன் குற்றுயிராக கிடக்கின்றான்.சுருள் வாளால் யாரோ ஏற்றி இழுதிருக்கின்ர்ரர்கள்.ஒரே இரத்தமயம்.உறவினர்கள் ஒரே காட்டுத்கத்தல்.

எனக்கு பயமெடுபட பல நாட்கள் எடுத்தது.வெளிநாடு வரும்வரை அந்த புளியமரமடிக்கு இரவில் போவதில்லை. எமது தோட்டத்தில் உருளைகிழங்கு நன்கு விளைந்திருந்தது.சந்தோசமாக சாக்குகளில் மூட்டை மூட்டைகளாக கட்டிக்கொண்டிருந்த போது போலிஸ் ஜீப் வந்து தோட்டத்தடியில் நிப்பாட்டி இரத்தினசிங்கதை விலங்கிட்டு கூட்டிக்கொண்டு போனார்கள்.

கோட்டில் சுப்பையனை கொலை செய்ததற்காக இரத்தினசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள்.

நான் ஒரு ஆயிரம் ரூபா கசியஸ் கிளேக்கு கொடுத்துவிட்டு நண்பனின் காரில் ஏறிக்கொண்டேன்.

குறிப்பு- எனக்கு நிஜ கசியஸ் கிளேயை கண்ணில காட்டக்கூடாது. காரணம் ஞ்யிறு எப்ப வரும் இசை அணித்தேர்வில் "வாசமில்லா மலரித்து வசந்தை தேடுது " இந்த முறையும் முதலாவது இடமோ என ஆவலுடன் வானொலிக்கருகில் இருக்க அண்ணர் வந்து தான் ஆங்கில சனல் கேட்கவேண்டும் என்று எனது தோட்பட்டையில் குத்தி துரத்திவிடுவான். அந்த நேரம் அவன் விரும்பிக் கேட்கும் பாட்டு.

'MOHAMAD ALI MOHAMAD ALI HE STNGS LIKE A BUTTERFLY"

கொஞ்ச நாளில் அவன் லண்டன போய் சேர 'இளையநிலாபொழிகின்றது" முதலாவதாக வர தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன்.

.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, அர்ஜுன்!

பழைய நினைவுகளை மீண்டுமொருமுறை மீட்டித்தந்தமைக்கு!

பாளைக் கத்தியின் கூர்மை, நினைக்கவே உடம்பெல்லாம், புல்லரிக்குது!!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிர்வுகள் சுவாரசியமானதாகவும், சிறுகதையளவில் அடக்கமாகவும் உள்ளது. :rolleyes: திரைப்பட இயக்குனர்கள் உதவி இயக்குனர்களிடம் காட்சிகள் சொல்லுமாறு கேட்பார்களாம். நீங்கள் அதுக்குப் போகலாம்..! :lol:

ஆ........... கிட்ட வந்திட்டியள் அர்ஜூன் . அனேகமாய் நீங்கள் கிழக்கு கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையடியா இருக்க வேணும் . நானும் அடி கோண்டாவில் தான் , ஆனால் மேற்கு நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடி . அந்த தவறணை எனக்கு நல்லாத்தெரியும் , சித்தப்பாவோட சின்னனில வந்திருக்கிறன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அர்ஜுன் தன் எழுத்தின் தகமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் எதோ ஒன்றை எங்கேயோ காணவில்லை என்று தேடினேன்....

....பொன்னையனுக்கும் சுப்பையனுக்கும் பிரச்சனை வரக் காரணம் என்ன என்றும் கூறியிருந்தால்

இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாயிருக்கு அர்ஜுன் அண்ணா. ஊரிலே நாங்கள் இவர்களை "Pilots" எண்டுதான் கூப்பிடுறனான்கள் காரணம் அடிக்கடி மேலே போய் வருவது. கதை பற்றி சில சந்தேகங்கள் முடிந்தால் குறை நினைக்காமல் தெளிவு படுத்த முடியுமா.

1)2007 ஆவணி என்று கூறியிருக்கிறீங்கள் ஆனால் 2006 நடுப்பகுதியில் A9 மூடப்பட்டு போராளிகள் எல்லாரும் வன்னிக்கு போய் விட்டார்களே, அத்துடன் நந்தவனமும் மூடப் பட்டு விட்டது என்று நினைக்கிறேன். தெளிவுபடுத்துவீங்களா?

2)"கோட்டில் சுப்பையனை கொலை செய்ததற்காக இரத்தினசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள்." என்று கூறியிருக்கிறீங்கள் அப்புறம் நீங்கள் அவரை ரோட்டிலே சந்தித்ததாகவும் கூறியிருக்கிறீங்கள், ஒரே ஆள் தானே, அப்பிடி எண்டா ஆள் எப்பிடி கொலை கேசில உள்ளுக்க போய் கெதியில வெளியால வந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ நமெ='Tகும்பலயன்' டிமெச்டம்ப்='1320790042' பொச்ட்='703814']

நன்றாயிருக்கு அர்ஜுன் அண்ணா. ஊரிலே நாங்கள் இவர்களை &ஃஉஒட்;Pஇலொட்ச்&ஃஉஒட்; ?

[/ஃஉஒடெ]

நீங்கள் ஒரு 35007

  • கருத்துக்கள உறவுகள்

2)"கோட்டில் சுப்பையனை கொலை செய்ததற்காக இரத்தினசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள்." என்று கூறியிருக்கிறீங்கள் அப்புறம் நீங்கள் அவரை ரோட்டிலே சந்தித்ததாகவும் கூறியிருக்கிறீங்கள், ஒரே ஆள் தானே, அப்பிடி எண்டா ஆள் எப்பிடி கொலை கேசில உள்ளுக்க போய் கெதியில வெளியால வந்தார்?

தும்பளையான்..

ஆயுள் தண்டனை என்றால் 14 வருடங்கள்தான் என்று நினைக்கிறன்..! :rolleyes:

  • தொடங்கியவர்

கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் .

வாத்தியார் இருவருக்கும் இடையில் கள்ளு வியாபார போட்டிதான் கொலையில் முடிந்தது ,

தும்பளையான் ஆண்டு 2005 .சுட்டிகாட்டியதற்கு நன்றி ,நான் அங்கு நிற்கும் போது தான் கதிர்காமரை போட்டார்கள்.

அடுத்து கொலை நடந்தது எனக்கு சிறுவயதாக இருக்கும் போது அந்த இடத்திற்கு பின்னர் போக பயப்பட்டதாக எழுதியுள்ளேன்.

Cassius Clay பின் முஸ்லிமாக மதம் மாறியபோது வைத்தபெயர் தான் Mohamad Ali

  • கருத்துக்கள உறவுகள்

குதிகால் வெட்டி ஒருவரின் பிழைப்பைக் கெடுக்கவேண்டும் என்று வெளிக்கிட்டு உயிர் போனதுதான் மிச்சம்.. பழைய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி..

சி.கு. இந்த வருடம் ஊர் போய் வந்தவர்கள் பனை மரத்துக்குக் கீழ் இருந்து உடன் கள் குடிக்கமுடியவில்லையே என்று வருத்தப்பட்டார்கள். இறக்கும் கள் எல்லாம் தவறணையில்தான் விற்கவேண்டுமாம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.