Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரியவர் உரியதை செய்ய வழி விடுங்கள் ! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Featured Replies

நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிட்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள்,

அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிட்சயம் தடுக்க முடியும்.

எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும்.

பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும்.

மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தமிழீழ விடுதலை போராட்டம், தாயாக பூமியில் வாழும் எமது உடன் பிறவாச் சகோதரர்கள் மானத்துடன் வாழ வேண்டும் போன்ற காரணிகளை மனதில் கொண்டு நிட்சயம் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் தடுக்க வேண்டும்.

இவ் விடயத்தில் விட்டுகொடுப்பதனால் யாரும் சிறியவராகவோ பெரியாவராகவோ மாட்டீர்கள்.

வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள். இவ்விடயத்தில் தயவு செய்து பேரம் பேசாதீர்கள். இவ்விடயத்தில் விடப்பிடியாக நிற்கும் உங்களை, சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போபவர்களென்று மக்களினால் சுமத்தப்படும் வீண் பழியை நீங்கள் சுமப்பீர்கள்.

வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய நீங்கள் அனுமதிப்பதன் மூலம் உங்கள் அமைப்பிற்கும் ஒர் மாபெரும் பெருமையை நீங்கள் தேடிக் கொள்வீர்களென்பதில் எவ்வித ஐயமில்லை. உங்கள் தரபில் நின்று குழப்பங்களை விரும்புவோர், நீங்கள் இன்னுமோர் மாவீரர் தினம் நிட்சயம் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக நிற்பார்கள்.

காரணம் இவர்களது இலக்கு தமிழ் தேசியம் சிதைக்கப்பட வேண்டுமென்பது மட்டுமல்லாது, இவர்களுக்கு இதன் அருமை பெருமை பற்றி அறியுமாளவிற்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ போதாமையும் காரணங்களாகவுள்ளான.ஆனால் உங்கள் அமைப்பு எதிர்காலத்தில் உண்மையான அரசியல் செயற்பாடுகளை மனதில் கொண்டதாக இருந்தால், தயவு செய்து சிறிலங்கா அரசின் சிந்தனைக்கு துணை போகாதீர்கள்.

ஐரோப்பிய குழப்பக்காரர்கள் மூலம் நீங்கள் புலம் பெயர் வாழ் மக்களின் உண்மை நிலையை ஒரு பொழுதும் அறிய மாட்டீர்கள். இவர்கள் மக்கள் எண்ணங்கள் அபிப்பிராயத்தை தினமும் திரிபு படுத்திக் கொண்டிருப்பதுடன், தமது சிந்தனைகளை, திட்டங்களை தினமும் தமது மூன்றாம் நான்காம் தரகர்கள் மூலம் மிகத் தவறான தகவல்களை உங்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக நீண்ட காலமாக நாம் அறிந்த உண்மை.

இறுதியாக, இப்பொழுது பெரும்பான்மையான புலம் பெயர் வாழ் மக்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளார்கள் என்பது தான் இன்றைய உண்மை நிலை? புலம் பெயர் வாழ்வில் ஓர் குறிப்பிட்ட மக்கள் முள்ளிவாய்காலின் பின்னர் எந்த பிரிவிற்கும் ஆதரவு அளிக்காது நாடு நிலையாக வாழ்வதை ஐரோப்பாவில் நாம் பெரிதும் காண்கிறோம். ஆனால் இரண்டு மாவீரர் தினம் நடைபெற்றால,; ஐரோப்பாவில் நாடு நிலையாக வாழும் மக்கள் கூட, சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு துணை போபவர்களை நிட்சயம் நிரகரிக்க முனைவார்கள்;.

“வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்’’ என்பது தமிழ் பழமொழி. மாவீரர் தினம் செய்வது சிறிய விடயமல்லா என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதே வேளை, ஒரு முழு வளர்ச்சி அடையும் முன்பே தேவையற்ற விடயங்களை செய்ய முனைவதால,; மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியுமா என்பதையும் நீங்கள் கடுமையாக சிந்திக்க வேண்டும்.

ஆகையால் மக்களின் ஆதரவு குறையக்கூடிய எந்த வேலை திட்டங்களிலும் தயவு செய்து இறங்காதீர்களென மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி – வணக்கம்

ச. வி. கிருபாகரன்- பிரான்ஸ் 07 செப்டம்பர் 2011

http://akkinikkunchu.com/new/

தமிழர் தாயகத்தில் போரினால் பெற்றோர்களை இழந்த 80ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் 16 இருந்து 17 ஆயிரம் பேர் மாவிரர்களுடைய அல்லது மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.இதில் 8ஆயிரம் பேர் கல்வியை முற்றாக நிறுத்திவிட்டார்கள்.அதிலும் 4ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் வரை ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800 குழந்தைகள் அதுவும் மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்141 குழந்தைகள் அநாதரவான நிலையில் பிச்சை எடுக்கிறார்கள்.

இந்த உரியவர்கள் கடந்த இரண்டு வருடத்தில் இந்தக் குழந்தைகளுக்காக என்ன செய்தார்கள்?எந்தவித சித்தரவதையும் அச்சுறுத்தலும் இல்லாத ஐரோப்பிய சிறைகளில் இருந்த தங்களது சகாக்களின் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதி திரட்டிய இவர்கள் இந்தக் குழந்தைகளின் நலனுக்கக மாவிரர் குடும்ப நிதியம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கலாம் அல்லவா?

இன்றைக்கு இந்த உரியவர்களிடம் இருக்கும் பேராட்டத்தின் பேரால் சேர்த்த சொத்துக்கள் இந்தக் குழந்தைகளின் பசிப் பிணியை தீர்க்கப் போதாதா?அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டப் போதாதா?

நம்பிக்கை ஓளியும் யாழ்கள உறவுகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய நேசக்கரம் செய்ததில் 100ல் ஒரு பங்காவது இந்த உரியவர்கள் செய்திருக்கிறார்களா? நேசக்கரத்தக்குக்கு நெருக்கடி கொடுத்ததும் நம்பிக்கை ஒளியை துரோகள் ஆக்கியதும் தானே இவர்கள் செய்த வேலை.

'மாவிரர்கள் புனிதமானவர்கள்.'

அவர்களுடைய புனிதத்தை கெடுக்காதீர்கள்

'மாவிரர் தினத்தோடு விளையாடாதீர்கள்' என்று ஓங்கி உரத்துக் கத்தும் இவர்கள் அந்தப் புனித்தை மதித்திருக்கிறார்களா?

ஓரு மாவிரனின் பெற்றோர் தனது பிள்ளைக்கு மனமுருகி அஞ்சலித்து சமர்ப்பணம் செய்யும் பூவை திருட்டுத்தனமாக எடுத்துவந்து இன்னொரு மாவிரனின் பெற்றோருக்கு விற்பதற்கு பெயர் தான் புனிதமா?

ஓரு பூவை 2 யுரோவுக்கு அல்லது பவுண்சுக்கு மாவீரரின் பெற்றோருக்கு விற்று காசாக்கிக் கொண்டு அது போராட்டுத்துக்கான நிதி சேகரிப்பு என்று நியாயப் படுத்த தெரிந்த இந்த உரியவர்களுக்கு போராட்டத்துக்கு தங்களது பிள்ளைகளையே கொடுத்த மாவிரர்களின் பெற்றோர்களிடம்; ஒரு நூறு யுரோ அல்லது பவுண்ஸ் கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் தந்திருப்பார்கள் என்பதில் ஏன் நம்பிக்கையில்லாமல் போனது?

சுரி 2009 முள்ளிவாயக்கால் வரை தான் நிதி தேவைப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 2009,2010 மாவிரர் தினங்களிலும் இதே தவறைத்தானே அதாவது அஞ்சலித்து வைத்த புவை திரும்ப எடுத்து விற்கும் வேலை தானே செய்யப்பட்டது.தாயகத்தில் இருந்து வந்து இதில் கொண்டு இந்தத் தவறை தட்டிக் கேட்ட மாவிரர் குடும்பங்களை துரோகிகள் குழப்பவாதிகள் என்று தானே இந்த உரியவர்கள் முத்திரை குத்தினார்கள்!

மாவீரர்கள் என்பவர்கள் தேசத்தின் சொத்து.அதேபோல மக்களே புலிகள் புலிகளே மக்கள். இது தான் உண்மை. வுpடுதலைப் புலிகள் இயக்கம் என்பது தனி ஒரு பிரிவுக்கு சொந்தமானதல்லது.அது தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் பொதுவானது. தேசியத்தலைவர் என்று சொல்கிற போது அவர் தனி ஒரு பிரிவினருடைய தலைவர் அல்ல! அவர் தமிழ் மக்களுடைய தலைவர்! மக்களை பிளவு படுத்தவும் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் துரோகி பட்டம் கொடுக்கவும் அவர்களது படங்களையும் விபரங்களையும் ஊடகங்களில் வெளியிட்டு எதிரிக்கு காட்டிக் கொடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை! அது எந்த விதத்திலும் தேசியச் செயற்பாடும் இல்லை.

ஏனவே மாவிரர்கள் வியாபாரப் பொருட்கள் அல்ல!இன்றைய காலகட்டத்தில் யார் அனைவரையும் ஓரணியில் இணைத்து மாவீர்களது நினைவுகளை உண்மையாக நினைவு கூர முற்படுகிறார்களோ எவரொல்லாம் மாவீரர் குடும்பங்களை பராமரிக்க வேண்டும் அவர்களது குழந்தைகளக்கான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை கொண்டிருக்கிறார்களே அதற்காக உழைக்கிறார்களோ அவர்கள் நடத்தும் மாவிரர் நிகழ்வுகள் தான் உண்மையான மாவிரர் நிகழ்வாக இருக்கும்

மாவிரர்களுடைய சுவரொட்டிகளை கிழித்தெறியும் உரியவர்களுக்கும் மாவிரர்களுடைய துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்த சிங்கள் பேரினவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழர் தாயகத்தில் போரினால் பெற்றோர்களை இழந்த 80ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் 16 இருந்து 17 ஆயிரம் பேர் மாவிரர்களுடைய அல்லது மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.இதில் 8ஆயிரம் பேர் கல்வியை முற்றாக நிறுத்திவிட்டார்கள்.அதிலும் 4ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் வரை ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800 குழந்தைகள் அதுவும் மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்141 குழந்தைகள் அநாதரவான நிலையில் பிச்சை எடுக்கிறார்கள்.

இந்த உரியவர்கள் கடந்த இரண்டு வருடத்தில் இந்தக் குழந்தைகளுக்காக என்ன செய்தார்கள்?எந்தவித சித்தரவதையும் அச்சுறுத்தலும் இல்லாத ஐரோப்பிய சிறைகளில் இருந்த தங்களது சகாக்களின் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதி திரட்டிய இவர்கள் இந்தக் குழந்தைகளின் நலனுக்கக மாவிரர் குடும்ப நிதியம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கலாம் அல்லவா?

இன்றைக்கு இந்த உரியவர்களிடம் இருக்கும் பேராட்டத்தின் பேரால் சேர்த்த சொத்துக்கள் இந்தக் குழந்தைகளின் பசிப் பிணியை தீர்க்கப் போதாதா?அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டப் போதாதா?

நம்பிக்கை ஓளியும் யாழ்கள உறவுகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய நேசக்கரம் செய்ததில் 100ல் ஒரு பங்காவது இந்த உரியவர்கள் செய்திருக்கிறார்களா? நேசக்கரத்தக்குக்கு நெருக்கடி கொடுத்ததும் நம்பிக்கை ஒளியை துரோகள் ஆக்கியதும் தானே இவர்கள் செய்த வேலை.

'மாவிரர்கள் புனிதமானவர்கள்.'

அவர்களுடைய புனிதத்தை கெடுக்காதீர்கள்

'மாவிரர் தினத்தோடு விளையாடாதீர்கள்' என்று ஓங்கி உரத்துக் கத்தும் இவர்கள் அந்தப் புனித்தை மதித்திருக்கிறார்களா?

ஓரு மாவிரனின் பெற்றோர் தனது பிள்ளைக்கு மனமுருகி அஞ்சலித்து சமர்ப்பணம் செய்யும் பூவை திருட்டுத்தனமாக எடுத்துவந்து இன்னொரு மாவிரனின் பெற்றோருக்கு விற்பதற்கு பெயர் தான் புனிதமா?

ஓரு பூவை 2 யுரோவுக்கு அல்லது பவுண்சுக்கு மாவீரரின் பெற்றோருக்கு விற்று காசாக்கிக் கொண்டு அது போராட்டுத்துக்கான நிதி சேகரிப்பு என்று நியாயப் படுத்த தெரிந்த இந்த உரியவர்களுக்கு போராட்டத்துக்கு தங்களது பிள்ளைகளையே கொடுத்த மாவிரர்களின் பெற்றோர்களிடம்; ஒரு நூறு யுரோ அல்லது பவுண்ஸ் கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் தந்திருப்பார்கள் என்பதில் ஏன் நம்பிக்கையில்லாமல் போனது?

நல்லதொரு கருத்து.

சாதாரண முட்டாள்களுக்கே விளங்கக் கூடிய விடயம் இது. பேராசையும் சுயநலமும் உள்ளவர்களிடம் இருந்து எந்த வித நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

50,000 ஐரோவுக்கு மாவீரர் நினைவு நாள் நிகழ்வு செய்ய.... வெள்ளைக்காரனுக்கு சுளையாக பணம் கொடுக்கத் தெரிந்தவர்கள், மாவீரர் குடும்பத்தினர்க்கு அறக்கட்டளை நிறுவி, உதவி செய்ய பின் நிற்பது மிகவும் கேவலமான செயல்.

"என்னுடைய பெயர்

என்னவென்று

எனக்கு தெரியாது

நான் யாரென்பதும்

மறந்து விட்டது

ஆனால் -

ஒன்று மட்டும்

எனக்கு நல்ல ஞாபகம்

நான்

மரணமாகவில்லை

அகால மரணமானேன்"

எஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் என்பது இழுக்கிற பக்கமெல்லாம் இழுபடுவதற்கோ பிரிக்கிற பக்கமெல்லாம் பிரிவு படுவதற்கோ உரிய நாள் அல்ல....

ஒற்றுமையாக ஒரே இடத்தில் மாவீரர் நாள் நடாத்தப்படவேண்டும்... இன்னும் காலங்கடந்துபோகவில்லை... இந்த மாவீரர் நாளை உரிமைகொண்டாடுபவர்கள்?????... ஆகட்டும் அல்லது இனிமேல் எங்களுக்குத்தான் உரிமை???? என்று வந்தவர்கள்

(யார் இவர்களெல்லாம் தம் வீட்டுக் கொல்லைக்குள் உரிமைகளைப்பூட்டி வைக்க) ஆகட்டும் முதலில் மாவீரர் நாளின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளுங்கள். பிரிவுபட்ட மாவீரர் நாளை தமிழர் சமூகம் முன்னெடுத்து நடாத்துமானால் அது அந்த மண்ணின் மைந்தர்களைக் கொச்சைப்படுத்துவதாகவே அமையும்... எங்கும் எதனிலும் முரண்படுங்கள் மாவீரர் நாளை கீரைக்கடைக்கு ஒப்பாக தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். இந்த நிலையை மாற்றி அமைக்கக்கூடிய பொறுப்பாளர்கள் யாராகிலும் இதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து தீர்வு காணுங்கள்.... அப்படிக் காணாது போயின் இனிவரும் காலங்களில்..... நீங்களே சிங்கள ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதிகமாக எங்கள் கண்மணிகளை உழுது புதைத்தவர்களாவீர்கள்..

மக்கள் மௌனமாக இருக்கிறார்களே அன்றி மரணித்துப்போகவில்லை.

பெண்ணால் பிரிந்தார்கள் பணத்தால் பிரித்தார்கள்.

என்னைபொறுத்தவரை மே19 தான் இனி மாவீரர் தினமாக்கப்படுவது ,

மாவீரர்களுக்கான நிஜமான அஞசலியாக அமையும்!

ஏன்னா அன்றோடுதான் , தாயக ,புல தேசியம் ,..உணர்வுகள், கட்டுக்கோப்பு ...

என்றாவது , எம் மக்கள் தன் இலடசியத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு ,

மண்டையோடு சிதற செத்துப்போன கடைசிப்போராளி...............

இவையனைத்தும் ஒன்றாகவே மரணித்துப்போன கடைசிநாள்~!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலையான விடயம் என்னவென்றால் மாவீரர் நிகழ்வை நடத்த இருக்கும் எந்தொரு தரப்பும் அவர்களின் பெயர் பணம் புகளுக்காகவே பாடுபடுகின்றார்களே ஒழிய எமக்காக தங்களது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் பற்றிய சிந்தனையே இவர்களுக்கு இல்லை இந்த நிகழ்வை ஒரு வியாபாரமாக செய்து இதில் வரும் பணத்தை சுருட்டிக்கொள்வதே இந்த ஈனப்பிறவிகளின் பேராசையும் நோக்கமும், தமது பிள்ளைகளை சகோதரர்களை உறவினரை இழந்தவர்கள் அவர்களின் நினைவுடனே ஆறுதல் இன்றி நடைப்பிணமாக வாழ்கின்றார்கள் இவை அனைத்தையும் சீர் செய்ய அந்த ஆண்டவன்தான் வரவேண்டும், ஒருநாள் வருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் அதுவரை தமிழ் இனம் மிஞ்சுமா ?

தேசிய மாவீரர் நாள் தொடர்பாக பாரிஸ் லாசப்பல் பகுதியல் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் இன்று தமிழ் தேசியத்தக்கு எதிரான விசமிகள் சிலரால் கிழித்தெறியப்பட்டுள்ளது;. இதற்கு மாவீரர் ஏற்பாட்;டுக் குழு தனது கடுமையான கண்டத்தை தெரிவித்துள்ளது.

தேசியத் தலைவரின் படத்தையும் மாவீரர் நினைவுத்தூபியையும் தாங்கியிருக்கும் வண்ணம் அமைந்திருந்த இந்த சுவரொட்டிகளை கிழிந்தெறிந்த இந்த நபர்கள் சிறீலங்கா அரசு எமது தாயகத்திலே எமது மாவிரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை தகர்தெறிந்து அழித்தொழித்த ஈனச் செயலை புலத்தில் அவர்கள் சார்பில் தொடர்ந்திருப்பதாக தேசிய மாவீரர் நாள் எற்பாட்டுக் குழு தனது கண்டனத்தில் தெரிவித்திருக்கிறது.

ஒரு சின்ன வேண்டுகோள்...

போராட்டம் தோல்வி அடைந்ததுக்கு காரணம்.. போராளிகளையும் ஆதரவாளர்களையும் விட துரோகிகளும் கோடாரிக்கம்புகளும் பெரும்பான்மையாக தமிழர்கள் மத்தியில் இருந்தது என்றால் மிகையாகாது.. இன்னும் சொல்லப்போனால் உலகமே பார்த்து வியக்குமளவுக்கு 10/90% என்னும் விகிதாசாரத்தில் இருந்து கருவறுத்தார்கள்.. வழிந்த ரத்தத்தை அள்ளிக்குடித்துவிட்டு.. இன்னும் இன்னும்.. எண்டு நிக்கிறார்கள்...

எல்லாம் போதுமய்யா.. பொயி அவனவன் வேலையை பருங்கைய்யா..

  • கருத்துக்கள உறவுகள்

நவம் உங்களுக்கு பச்சை குத்த என்னிடம் வைப்பு இல்லை.என்றாலும் உங்கள் மேலான கருத்துக்கு ஒரு ஓ :)

என்னும் என்னென்ன நடக்கப்போகுதோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் பின்னரும் நாம் தோற்கவில்லை

என்று வாழ்கின்ற மக்களை

இவர்கள் தோற்கடித்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரியவர் வருவதற்கு பெரிசுகள் நீங்கள் தான் வழிவிட வேண்டும்.(இளையோர் வருவதற்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.