Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!

Featured Replies

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!

அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே!

நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது.

சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.

அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவிக்கும்.

தமிழீழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களது கனவும், அந்த மண்ணுக்கே விலையாகிப்போன தமிழ் மக்களது விருப்பமும் திசை எங்கும் நிறைந்துபோய், எங்கள் சுவாசத்தினுள் இறங்கி எங்களைப் போர்க் களத்திற்கு அழைக்கின்றது. எங்களுக்கான ஜனநாயகப் போர்க் களம் விரிந்து செல்கின்றது.

எனது அன்பான தமிழ் மக்களே!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில், எனக்கு இந்த பரந்த உலகில் பெரும் கடமைகள் சுமையாக உள்ளன. எனது தவிர்க்க முடியாத கடமைகளின் பங்குதாரர்களாகவே நான் உங்களைப் பார்க்கின்றேன். கடந்த காலங்களின் கசப்புக்களும் என் மனதை அழுத்துகின்றன. தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே உள்ளேன். தவறானவர்களது வழிகாட்டல்கள் உங்களுக்கும் எனக்கும் பாரிய இடைவெளிகளை உருவாக்கியுள்ளதை நான் அறிவேன்.

விடுதலை நோக்கிய போர்க் களத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் போராளிகளே. அந்தப் பொர்க் களத்தில் எங்கள் ஒவ்வொருவருக்குமான பணிகள் வௌ;வேறானதாக இருப்பதனால், வேறுபாடுகள் போன்று தெரிந்தாலும் எங்களது இலக்கு ஒன்றாகவே இருக்கும். அது சுதந்திரத் தமிழீழத் தாயகமாகவே இருக்கும். அதில் எந்த வகையான சமரசத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்படாது. அதனாலேயே, சமரச அரசியல் நடாத்த முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க வருகையையும் நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.

எமது மண்ணின் விடுதலைக்காக 40,000 இற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். இரண்டு இலட்சத்திற்கும் குறையாத தமிழ் மக்கள் சிங்கள, இந்தியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். இத்தகையதொரு உச்ச விலையைச் செலுத்திய நாம், விடுதலைப் போராட்டத்தை சமரச அரசியலினுள் தொலைத்துவிட முடியாது.

எனது அன்பான தமிழ் மக்களே!

நாங்கள் எங்களது தாயகத்தை விடுவிக்கும் இலட்சியத்தில் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், நாம் புலம்பெயர் தேசங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களைச் சிதைப்பது என்பது, நாம் எங்களை அழித்துக்கொள்வதற்கு ஒப்பானது. விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களினாலும், போர்க் கள வெற்றிகளாலும், தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பற்றினாலுமே நாங்கள் புலம்பெயர் தேசங்களில் பலமான சக்தியாக உள்ளோம். அதனால்தான், எதிரி எங்களுக்குள் பிளவுகளையும், போட்டிகளையும் உருவாக்கி எங்களது புலம்பெயர் தளத்தின் பலத்தைத் தகர்க்க முற்படுகின்றான். இதனை நாம் புரிந்து கொண்டு, எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளது தேசியக் கட்டமைப்புக்கள் நடாத்தும் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கு எதிரி பலமான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றான். இதற்கு நம்மிலும் பலர் விலையாகிப் போயுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் இதுவரை காலமும் நடாத்தப்பட்டு வந்ததுபோலவே, இந்த வருடமும் மாவீரர் தினம் நிகழ்த்தப்படுவதே முறையானது. அதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடாத்துவதே அந்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

நம்மில் சிலர் மாவீரர் தின நிகழ்வுகளது அர்த்தத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதை மனவருத்தத்துடனும், வேதனையுடனும் பார்க்கிறேன். தனிப்பட்டவர்களது விருப்பு வெறுப்புக்களுக்காக தேசிய ஆன்மாக்கள் காயப்படுத்தப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது.

அன்பான தமிழ் மக்களே!

எங்கள் தாய்த்திரு நாடும், தமிழீழ மக்களும் எங்களது ஒன்றுபட்ட பலம் சிதறிப் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நீங்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நான் அறிவேன். எனவே, மாவீரர் தினம் என்ற மகத்தான நாள் குறித்து நாம் பிளவு பட்டு நிற்க முடியாது. அது தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைவுப் பாதைக்கே கொண்டு சென்றுவிடும். எங்களுக்குள் போட்டியும் வேண்டாம், போட்டி மாவீரர் தினமும் வேண்டாம்.

நாங்கள் ஒரே தலைவனின் பின்னே அணிவகுத்து நிற்பவர்கள். விடுதலைப் புலிகள் என்ற குறியீட்டுடன்

நிமிர்பவர்கள். நாம் எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக் கூடாது. ஒற்றுமை மட்டுமே எங்களது பலம் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். நான் பெரிது என்பதை மறந்து, நாட்டுக்காக நாம் எதையும் இழக்கச் சித்தமாக இருக்க வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில், நான் எனது மக்களது பெரும்பான்மைக் கருத்துக்களுக்கு இசைவாகவே நடக்கக் கடமைப் பட்டவன். எனவே, தமிழ் மக்களாகிய உங்களது விருப்பங்களே எனது முடிவாக இருக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் தினத்தை மையப்படுத்தி மக்கள் பிளவு படுவதை ஏற்றுக்கொள்ளாது. இரண்டவது என்ற பேச்சுக்கே இடமற்று, போட்டி மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகளைக் கைவிடும்படி அதனை ஏற்பாடு செய்பவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். மீறி, தமிழ்த் தேசிய தளச் சிதைவை நோக்கமாகக் கொண்டு எந்த நாட்டிலாவது போட்டி மாவீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டால், அதனைப் புறக்கணிக்கும்படி தமிழ் மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

http://tgtenews.com/...AF%8D/#more-213

Edited by akootha

இதுவரை ஒற்றுமையுடன் எழுச்சியாக நடைபெற்று வந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் அவ்வாறே நிகழ வேண்டும் என்பதற்கான உங்களின் வேண்டுகோளிற்கு நன்றி.

உங்களிற்கு துரோக முத்திரை தொடர்ந்து குத்தி வருபவர்கள் நடாத்தும் நிகழ்வாக இருந்தாலும் மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக எழுச்சியுடன் இடம்பெற வேண்டும் என்ற உங்களின் எண்ணம் உயர்வானது.

மற்றையவர்களும் உங்களின் வேண்டுகோளை ஏற்று போட்டி நிகழ்வுகளை கைவிடுவார்கள் என்றால் மகிழ்சியாக இருக்கும்.

போட்டிக்கு மாவீரர் தினத்தை நடத்தி அதனை இழிவடையச் செய்வதைவிடவும் அதனை செய்யாமலே விடலாம்.

இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை என்ன ?

இந்த அறிக்கையை வெளியிட்ட இணையத்தளம்

Balachandran, Sivaguru eelanadu@hotmail.com

eelanadu

19 rue Cail

Paris, 75010

France

என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது.

போக கூடாது என்று ஒதுங்கினால் சிங்களவன் வெற்றி பெற்றி விடுவான். வீட்டில் பூசிக்கலாம் என்று சொல்வது தவறு'

யார் உண்மையானவர்கள் என்பதை அறிய தாருங்கள். இதுவரை காலமும் செய்தவர்களே சரியானவர்கள் என்று நம்புகிறோம்.

கனடாவில் செய்தது போன்று எல்லாரும் சேர்ந்து ஒரு மாவீரர் காப்பகத்தை பிரச்சனையான நாடுகளில் உருவாக்கினால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இருபகுதியினரும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.அனைத்துத் தமிழ் மக்களும் ஓரிடத்தில் கூடி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதே ஒற்றுமைக்கு வழி சமைக்கும்.

இது சம்பந்தமாக நானும் அறிந்திருந்தேன். ஜீ ரி வி யிலும் இது பற்றிக் கதைத்திருந்தார்கள். விடயம் உண்மைதான். இதன் தாற்பரியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை என்ன ?

இந்த அறிக்கையை வெளியிட்ட இணையத்தளம்

Balachandran, Sivaguru eelanadu@hotmail.com

eelanadu

19 rue Cail

Paris, 75010

France

என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை போலியானது இது பற்றி நாடுகடந்த அரசு அறிவித்திருக்கிறது.இந்த அறிக்கையை தயாரித்தவர் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் ஒரு உளவாளி .இவரது வேலை அதிகமாக தேசியம் பேசி பிளவுகளையும் மோதல்களையும் தூண்டிவிடுவது; இவர் தொடர்பாக ஏற்கனவே பாரிசிலுள்ள சைபர் கிறைம் பிரிவில் எழுத்துமூல முறைப்பாடு செய்ப்பட்டிருக்கிறது. நான் அறிந்த வரை உருத்திரா அண்ணாவும் இன்று இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளார். இந்த நபர் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டிருப்பார்.அதற்கு காரணம் இவர் தனது எசமான்களுக்கு மாதம் இத்தனைபேருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் என்று கணக்கு காட்டவேண்டும்.அப்போது தான் கொடுப்பனவு கிடைக்கும்.இவர் அனுப்பும் மின்னஞசல்களை நீங்கள் பார்த்தீர்களானால் தமிழ் சமூகத்தை பிளவு படுத்தி மேதவிடவது தான் என்று உங்களுக்கு புரியவரும். கேபி குழு துரோகி சிறீலங்கா அரசாங்கத்தின் நிகச்சி நிரல் என்ற செல்லாடல்கள் வரிக்கு வரி நிறைந்திருக்கும் .கோத்பாய கேபியை அங்கே சேர்த்து வைத்தக்கொண்டு இங்கே புலத்தில் அவருக்கு பதிலாக இன்னொரு குழுவை கேபி கேபி குழு துரொகிள் என்று கூவிக் கூவிச் சொல்லி மக்களை குளப்பிவிடுவதற்கு என்று இன்னொரு குழவை இயக்கிவருகிறான்.அந்தக் குழுவை சேர்ந்தவர்தான் இந்த நபர். ஊங்களுக்கு சந்தேகம் இருந்தால் இவர் எழுதியவைகளை எடுத்து வைத்து ஒரு முறை ஒப்பிட்டுப்பாருங்கள்

நீங்களுத் தயவு செய்து இவரிடம் இருந்து மின்னஞ்சல் வந்தால் கீழ் கண்ட சைபர் கிறைம் பிரிவு முகரிக்கு முறைப்பாடு செய்யுங்கள்

l'OCLTIC, l'Office Central de Lutte contre la Criminalité liée aux technologies de l'information et de la comunication.

B.E.F.T.I. - 163 avenue d'Italie - 75 013 Paris

Tél. : 01 40 79 67 50

0000

l'OCLTIC, l'Office Central de Lutte contre la Criminalité liée aux technologies de l'information et de la comunication.

101 rue des Trois Fontanot 92000 Nanterre Tel: 0149274927

0000

O.C.L.C.T.I.C - cybercriminalité

MINISTERE DE L'INTERIEUR

Direction Centrale de la Police Judiciaire

11, Rue des Saussaies

75800 Paris Cedex 08

Téléphone : 01.40.07.69.49

Télécopie : 01.40.07.29.76

E-mail : oclctic@interieur.gouv.fr

ou formulaire sur le site du Ministère de l'intérieur

0

Edited by navam

எல்லா நாடுகளில் அனைத்துலக தொடர்பகம் நடாத்தும் மாவீரர் நாள் நிகழ்வுகளிற்கு தலைமைச் செயலகம் போட்டி மாவீரர் நாள் நடாத்துகிறது.

லண்டனில் எக்ஸ்செல் மண்டபத்தில் வழமையாக நடைபெறும் மாவீரர் நாளிற்கு போட்டியாக அனைத்துலக தொடர்பகம் மாவீரர் நாள் நடாத்துகிறது.

மாவீரர்களே இதுவரை உங்களிற்குத்தான் வணக்கம் செலுத்தி வந்தோம்.

இனி உங்களை வணங்கும் நாளிற்கும் வணக்கம் செலுத்தும் நிலைமையை உருவாக்கப் போகிறாங்கள் இந்த தலைமைச் செயலக, அனைத்துலக தொடர்பக வீரவான்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!

இவரின் மீது மக்களுக்கு என்னும் நம்பிக்கை வைக்கவில்லை அப்படியிருக்கையில் இவரின் வேண்டுகோள் மக்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் ?

தேசியத்தலைவரில் வைத்த நம்பிக்கையை இவர்கள் மீது வைக்க மக்களால் முடியவில்லை,

இவர்கள் மீது நம்பிக்கை வரும்படி காத்திரமான விடயங்கள் எதுவுமே செய்யவில்லை,

நா. க. த. அரசின் பிரதமரை சிலர் KP யுடன் சேர்ந்து இயங்குகின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது இதைதேளிவு படுத்தவேண்டிய தேவையுள்ளது.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு மீது நம்பிக்கை வைக்கவில்லை என்கின்றீர்கள் தமிழ்அரசு. மற்றவர்களில் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். மற்றவர்களின் காத்திரமான நடவடிக்கைகள் எது என்று சொல்ல முடியுமா? சொல்லப் போனால் புலத்தில் இருக்கின்ற அமைப்புக்கள் எதுவுமே காத்திரமான நடடிக்கைள் எதுவுமே இல்லை.

தங்களுக்குள் குத்துப்படுவதும், மற்றய அமைப்புக்களை உடைப்பதற்காக சதித்திட்டம் தீட்டுவதும் தான் இவர்களின் வேலை. கனடாவைப் பொறுத்தவரை முன்ணனி அமைப்பின் செயல்கள் படுமோசமானவை. மற்றவர்களின் போராட்டங்களைக் குழப்புதற்காக இடையில் ஆட்களை அனுப்புதல்... ஏன் நாடு கடந்த அரசாகட்டும், தமிழ் காங்கிரஸ் ஆகட்டும். இதர வன்னி அமைப்புக்களாகட்டும். அவற்றை உடைப்பதற்காக செய்கின்ற அநியாயங்கள் சொல்லில் அடங்காதவை.

2009ம் ஆண்டு காலங்களில் தாங்கள் சாராத அமைப்புக்கள் ஆராவது வீதியில் போராட்டங்கள் செய்தால் அதற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே நடந்து கொண்டார்கள். பிற்பாடு நாடு கடந்த அரசு வந்தபோது அதை உடைப்பதற்காக ஒரு சிலரை உள்ளே அனுப்பித் தங்களின் கையப்படுத்த முயன்றார்கள். அது சாத்தியப்படவில்லை.

இப்போது தமிழ் காங்கிரஸ் ஐ உடைப்பதற்காக முயன்று கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது. ஏன் எனில் அது ஒரு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கனடியத் தமிழர்களை முன்னிலைப்படுத்தும் அமைப்பு என்பதால் தங்கள் சார்பான உறுப்பினர்களை நாடு கடந்த அரசு பாணியில் முயற்சி செய்கின்றார்கள். எவ்வளவோ பணி மக்களுக்குச் செய்ய வேண்டியிருக்க, இப்படி ஒரு நயவஞ்சகச் செயல் வேதனையானது. தமிழ்க்காங்கிரஸ் தனது செயலைக் குறைத்துக் கொண்டால் அதற்கு முழுக்காரணம் இவர்களின் அழுத்தம் தான் காரணமாக இருக்கும்......

இதை எல்லாம் ஏன் எனில் அவர்கள் மீது தனிப்பட்ட கோபமில்லை. இன்று வரை அந்த அமைப்புத் தவிர வேறு எந்த அமைப்பிலும் இருந்ததில்லை. ஆனால் எல்லோரும் சோகமான வேளை என்னால் ஒன்று சேருவார்கள். ஆனால் இங்கே முள்ளிவாய்க்கால் வரை மரணித்துப் போன மக்களின் முன் இருந்தபடி சொத்துப் பிரிக்க அடிபடுகின்றார்கள் என்ற வேதனை.

உருத்திரகுமார் கேபி கூட இயங்குவதாக குற்றச்சாட்டு உண்டு என்கின்றீர்கள். அதற்கு ஏதாவது ஆதாரங்கள் உங்களிடம் இருக்கின்றதா? அல்லது வழமை போல மற்றவர்களை உடைப்பதற்காக இந்த முதன்மை அமைப்பின் பாணியிலான குற்றச்சாட்டா??

சில விடயங்களை நாங்கள் பேசாமல் விடுவோம். என்ற நம்பிக்கையில் இவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இந்திய உளவுத்துறைகளுக்கு கிடைத்த பாரிய வெற்றி இது. முள்ளிவாய்க்காலின் பின் தானாச்சு தன் குடும்பமாச்சு என்று புலத்தில் வாழும் ஈழத்தமிழன் ஏதோ ஒரு உணர்வோடு ஒன்றுகூடி மாவீரரை நினைவுகொள்ளும் ஒரே நாள் இது தான். அதற்கும் ஆப்பு வைத்து விட்டாங்கள்.

அடேய் பரதேசி நாய்களே! எல்லம் இந்த பாழய் போன காசுக்காத்தானே போரட்டத்தை வியாபாரமாக்கி கடைசியில் தலைவரையும் ஏமாற்றி எல்லாத்துக்கும் சங்கூதினீர்கள்! போதியளவு உழைத்துவிட்டீர்கள் தானே? பின் ஏன் இனத்தை கருவறுக்கும் இந்த கொலைவெறி இன்னும் அடங்கவில்லை?

மாவீரர் நாளில் எதிரி வெற்றி கொள்ளக் கூடாது என்பதற்காகவே மாவீரரானவர்கள் எத்தனை பேர்? இத்தகைய நாளை உங்கள் சொந்த நலனுக்கும் பாவிக்கும் கேடு கெட்டவர்களே ... நீங்கள் சொந்தப் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கும் பயல்களிலும் கேவலமானவர்கள்!

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!

உங்களுக்குள்ளகவே போட்டி வந்து ஒரு வருடத்தில் நாடுகடந்த ஜனநாயக அணி என்று இரண்டா பிளந்துவிட்டு இப்போது ஒற்றுமை குறித்து வேண்டுகோள்???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை என்ன ?

இந்த அறிக்கையை வெளியிட்ட இணையத்தளம்

Balachandran, Sivaguru eelanadu@hotmail.com

eelanadu

19 rue Cail

Paris, 75010

France

என்ற பெயரில் பதியப்பட்டுள்ளது.

நல்லசெய்தி என்று வந்தால்...

இணையவன் போட்டுக்கொடுத்துவிட்டார்.

பாலசந்திரனுக்கே வெளிச்சம். ஆனால் அவருக்கு மணி கட்டியது யார்...???

சில விடயங்களை நாங்கள் பேசாமல் விடுவோம். என்ற நம்பிக்கையில் இவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது...

பலரும் என்பதே சரியானது

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குள்ளகவே போட்டி வந்து ஒரு வருடத்தில் நாடுகடந்த ஜனநாயக அணி என்று இரண்டா பிளந்துவிட்டு இப்போது ஒற்றுமை குறித்து வேண்டுகோள்???

கடைசி வாரம் வரை நாடு கடந்த அரசு என்பதைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள், திடீரென்று அதற்குள் நுழைந்து போட்டி போட்டதும், பின்னர் திட்டமிட்டு வெளியேறியதும் அந்த அமைப்பு என்பதைப் பலவீனப்படுத்தவே என்பது குழந்தைக்குக் கூடப் புரியக் கூடிய செயல்.

தணிகாசலத்தாரின் மகன் "பேபி" தயாபரன் .... வாங்கிய காசுகளை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள்!!!! ... சில காலங்களுக்கு முன் ஜீப் எரிக்கப்பட்டதை மறந்து விடாதீர்கள்???? தேசியத்தின் பணத்தில் வியாபாரம் ... நாடு கடந்த அரசு வெளிவிவகார அமைச்சர் பதவி ஒரு கேடு!!!

... நாடு கடந்த அரசு ... அப்போ, அவர்களும் இந்த பிரிவினை மாவீரர் நாள் கொண்டாட்டத்துக்கு ஆதரவா??????????

.... இன்றுவரை நா.க.த.அ செயதது ஒன்றுமில்லை!!! ... ஏதாவது கிழித்தார்கள என்று யாராவது ஒன்றை சொல்லட்டும்???? ... இன்று மாவீரர் நாள் ஒன்றுதான் உருத்திரகுமார் கும்பலுக்கு சதியை நாறடிக்க கிடைத்திருக்குது?????

தணிகாசலத்தாரின் மகன் "பேபி" தயாபரன் .... வாங்கிய காசுகளை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள்!!!! ... சில காலங்களுக்கு முன் ஜீப் எரிக்கப்பட்டதை மறந்து விடாதீர்கள்???? தேசியத்தின் பணத்தில் வியாபாரம் ... நாடு கடந்த அரசு வெளிவிவகார அமைச்சர் பதவி ஒரு கேடு!!!

எங்கடா இன்னும் ஆளை காணலையே எண்டு பார்த்தன் .. நீங்கள் நடத்துங்கோ அர்ச்சனையை.. :lol:

இலங்கை இந்திய உளவுத்துறைகளுக்கு கிடைத்த பாரிய வெற்றி இது. முள்ளிவாய்க்காலின் பின் தானாச்சு தன் குடும்பமாச்சு என்று புலத்தில் வாழும் ஈழத்தமிழன் ஏதோ ஒரு உணர்வோடு ஒன்றுகூடி மாவீரரை நினைவுகொள்ளும் ஒரே நாள் இது தான். அதற்கும் ஆப்பு வைத்து விட்டாங்கள்.

அடேய் பரதேசி நாய்களே! எல்லம் இந்த பாழய் போன காசுக்காத்தானே போரட்டத்தை வியாபாரமாக்கி கடைசியில் தலைவரையும் ஏமாற்றி எல்லாத்துக்கும் சங்கூதினீர்கள்! போதியளவு உழைத்துவிட்டீர்கள் தானே? பின் ஏன் இனத்தை கருவறுக்கும் இந்த கொலைவெறி இன்னும் அடங்கவில்லை?

மாவீரர் நாளில் எதிரி வெற்றி கொள்ளக் கூடாது என்பதற்காகவே மாவீரரானவர்கள் எத்தனை பேர்? இத்தகைய நாளை உங்கள் சொந்த நலனுக்கும் பாவிக்கும் கேடு கெட்டவர்களே ... நீங்கள் சொந்தப் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கும் பயல்களிலும் கேவலமானவர்கள்!

இது நூறு வீதம் உனக்குத்தான் நண்பா உன்னுடைய கா ..... கொ .........படலம் கொஞ்ச நஞ்சமா

Edited by athiyan

இது நூறு வீதம் உனக்குத்தான் நண்பா உன்னுடைய கா ..... கொ .........படலம் கொஞ்ச நஞ்சமா

அண்ணா, ... கா .. கொவோ? கொ .. காவோ? என்பதல்ல பிரட்சனை! ... பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிச்ச கதையாக ... வேண்டாம்!!

சேகர் .. பாவம், மூன்று சகோதரர்களை இழந்தவர்தான்! இளைய சகோதரர் ஜேம்ஸ், இந்திய இராணுவ காலங்களில் எனக்கு பழகும்/தொடர்ந்து சந்திக்கும்/பாதுகாக்கும் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன! சேகரும் லண்டனில் புலிகள் காலூன்ற படாதபாடு பட்டவர். பின் கிட்டண்ணா வந்த பின் பொறுப்பு இவரிடம் எடுக்கப்பட்டு சாந்தனிடம் கொடுக்கப்பட்டதில் மன உளைச்சலுக்கு உட்பட்டவர். அந்தக்கோபம் இன்று??? மற்றும்படி இன்று லண்டனுக்கு வெளியே 400 மைல்களுக்கு அப்பால் உள்ள அவரது குடுமப பிஸ்னஸை பார்க்கவே அவருக்கு நேரம் போதது! மாதத்தில் வார இறுதியில் ஒரு சந்திப்பு ... நா.க.த.அ என்பதற்காக!!

தணிகாசலம் தயாபரன் .. ஜனகன் வாத்தி என்றழைக்கப்ப்ட்ட பேபி .. இவர் சேகருக்கு திருமண உறவுமுறை! இன்று சேகரையும் பிழையான வழியில் இட்டுச் செல்கிறார்! பல கோளாறுகளுக்கு காரணகர்தா! வந்தது கொண்டது வியாபாரம் ஆர்ம்பித்தது எல்லாம் தமிழ்த்தேசியத்தின் புண்ணியத்தில்! ... தாருங்கள் என்று கேட்டால் ... தலைவர் வரட்டும் என்கிறாராம்!!! ... இன்று நாகதஅவில் வெளிவிவகார அமைச்சராம்!!!!!!!!!!!

... என்ன கூத்தும் ஆடுங்கள்!! ... ஆனால் உந்த மாவீரர்நாளை வைத்து மட்டும் ஆடாதீர்கள்!!!!!!!!

Edited by Nellaiyan

எனது இரத்த உறவுகளுக்கு நான் கூற விரும்புவது இது ஒன்றுதான் ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் உணர்வில்தான். இன்று நம் தேசியதலைமையின் எந்ததொடர்புமின்றி நாம் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அன்று எமக்காய் எம் விடிவிற்காய் தியாகம் செய்து இன்று புலம்பெயர்நாடுகளில் சிறைகளில் வாழும் உண்மையானவர்கள் வளர்த்த அமைப்புக்கள் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்புக்களால் ஒருங்கிணைப்பு செயப்படுகின்ற மாவீரர் தின நிகழ்வுகளில் நாம் பங்கு பெற வேண்டும் என்பதுதான் இன்றைய யதார்த்தமாகும்.ஏனெனில் புதிதாக உருவாக்கியவர்கள் புதியவர்களாகவே இருக்கட்டும். யார் உண்மை யார் போய் என்பதை எதிர்காலம் தீர்மாநிக்கமுன் நாம் யதார்த்தமாக செயற்படுவதுதான் மாவீரர்கள் வீரத்திற்கு நாம் கொடுக்கும் கௌரவம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காலையில் வீட்டில் மாவீரர்களுக்கு விளக்கு ஏறற்றுவோம். அடுத்து மாவீரர் வணக்கநிழ்வுக்கு செல்வோம். ஆனால் இந்தமுறை வழமையான நிகழ்வுக்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு மற்றவர்களின் நிகழ்ச்சிக்கு போவதாக இருந்தேன்.

காரணம் ஒன்றே ஒன்றுதான். தலைவருக்கு மாலை போடுவதுதானே தங்கள் இலட்சியம். அது முடிந்துவிட்டது. இனி தங்களது அடுத்த கட்டத்தை மக்கள் முன் வையுங்கள் என கேட்பதற்காக..................

விசுகு அண்ணா உங்களை சிலநாட்கள் காணவில்லை என்று நான் நினைத்ததுண்டு ஆனாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து யதார்த்தமான கருத்தினை கூறியுள்ளீர்கள்.

உண்மையில் தேசியத்தலைவருக்கு கடந்த காலத்திலும் யாரும் மாலை போடமுடியவில்லை. நிகழ்காலத்திலும் யாரும் மாலை போடமுடியவில்லை எதிர்காலத்திலும் யாரும் மாலை போடமுடியாது என்பதுதான் உண்மையாகும்.ஏனனில் பரம்பொருளை பொய்யானவர்கள் நெருங்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.