Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் - சு.பரமேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு கஸ்ரோ அண்ணையின் பங்கரை காட்டிக் கொடுக்கும் காணெளியையும் வன்னியிலுள்ள சிறீலங்கா இராணுத்தளபதிகளுடனும் டக்ளசுடனும் நிற்கும் காணொளியை நான் என் கண்ணாலை பார்த்திருக்கிறேன்.

அப்ப ஏழாலை நண்டு தண்ணீரைவிட்டுத் தரைக்கு வந்திட்டுதெண்டு சொல்றீங்களோ ஆதி ? :wub:

Edited by shanthy

  • Replies 62
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணத்தின் பின்பும் எங்களை கொல்ல அவனால் முடியாது..

ஆனால் எம்மால் முடியும்,,,

அததானே இப்போ பண்ணிகிட்டு இருக்கோம்,, ஆல்மொஸ்ட் எல்லாருமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Muga

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் எல்லோரையும்விட பரமேசுவரனுக்கு கேள்வி கேட்க....

அருகதையும் பொறுப்பும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சும்மா ஸ்கைப்பிலை விளையாட்டுக்காட்டிக் கொண்டு தலைமைச்செயலகம் என்று

ரப்பர்ஸ்டாம்பு அமைப்பாக இருக்கும் மலேசியா மாப்பிள்ளை சுபன்கும்பலுக்கு

பரமேஸ்வரனின் பெயரில் அறிக்கை கொஞ்சம் அதிகம்தான்.

பாசிசப்புலி என்று இந்தியராணுவ முகாம் காங்கேசன்துறைக்குள் இருந்து ஒலிபரப்புசெய்த

'பொடிகள்' எல்லாம் பரமேஸ்வரனை பற்றி கருத்து எழுதுவது கேவலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி ஆரம்பித்து வைத்த சுபன்தலைமையில் இருக்கிற தலைமைச்செயலகத்தின் சாதனை எது தெரியுமா?

இருபத்திஏழு மாதத்துக்குள்ளை 32 அறிக்கைகள் விட்டதுதான்.

முதலாவது அறிக்கை எது தெரியுமா?

கேபியை தமைலைச்செயலகத்தின் இணைப்பாளராக சுபனும்,ராமும் கையொப்பமிட்டு வெளியிட்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் எல்லோரையும்விட பரமேசுவரனுக்கு கேள்வி கேட்க....

அருகதையும் பொறுப்பும் உண்டு.

உண்மை. விசுகு அவர்களின் கருத்து ஏற்புடையதே.இன்றைய சூழலில் பொருத்தமானதும் கூட.

தமது உறவுகளை போர்முனையிலும், சிறைகளிலும், விதைகுளிகளிலும் தமிழுக்காய் ஈந்தளித்துவிட்டு வாழும் உறவுகளின் குமுறல் ஒருமுறை திரள்நிலையை அடையுமாயின் கைக்கூலிகள் காணாமல் போவது திண்ணம். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. கருத்துமோதலை ஒன்றாகக் கூடி ஆராயுங்கள். ஆனால் மாவீரர்களின் பெயரால் மக்களையும் ஒருங்கிணைந்த தேசிய எழுச்சியையும் சிதைக்காதீர்கள்.இதுவே இன்றைய தேவையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு கஸ்ரோ அண்ணையின் பங்கரை காட்டிக் கொடுக்கும் காணெளியையும் வன்னியிலுள்ள சிறீலங்கா இராணுத்தளபதிகளுடனும் டக்ளசுடனும் நிற்கும் காணொளியை நான் என் கண்ணாலை பார்த்திருக்கிறேன்.

கண்ணாலை பார்த்தால் இணைக்க வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் ஒன்றும் கணணியில் இருந்து எழுதும் ரகமல்ல.

அதுக்கும் மேலாக அவரின் மூத்த சகோதரியின் மகள் கோதை ஒரு மாவீரர்

அவரின் இன்னொரு சகோதரி 27 வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர் (கடைசிநாள் வரைக்கும்)

அவரின் சகோதரியின் கணவர்தான் பிரிகேடியர் மணிவண்ணன்

மற்றும் அவருடைய மூத்த சகோதரர்கள் இப்போதும் பாதுகாப்பற்ற நாடுகளில் நிற்பதால் அவர்களின்

வரலாறு தேவையில்லை.

இவ்வளவு வலிகளும் நிறைந்த வாழ்வினூடு வந்தவர்தான் பரமேஸ'வரன்

அவர் எழுதினது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமோ ஆதரிக்கவேண்டுமோ என்றது முக்கியம் இல்லை.

அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்.அது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலை பார்த்தால் இணைக்க வேண்டியது தானே.

ஊரில் நான் வாழ்ந்த நாளில் .............

ஊரில் இருந்த எல்லா புளியமரத்திலும் பேய் இருந்தது. பேய் கண்டவரை கண்டவர்களாகவே எல்லோரும் வாழ்ந்தோம்.

இத்தனை வருடங்கள் கழித்து பேயை கண்டவர்களை தேடிபோனேன் யாருமே இல்லை. எல்லோரும் கண்டவரை கண்டவர்கள்.

சும்மா இருந்த புளிக்கு இந்த நிலை...........

இப்படி இருந்த புலிக்கு என்ன நிலைமை இருக்கும்?

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்

கண்ணாலை பார்த்தால் இணைக்க வேண்டியது தானே.

... கண்ணாலை பார்க்க கொடுத்தது யார்????? ... கேபியா?????????

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

"சரி", "பிழை" .. இரண்டும் இணைய வேண்டுமா????

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94296&pid=705156&st=0&#entry705156

சரியும், தவறும் இணையமுடியாது.

இணைப்புத் தொடர்பாகக் கதைப்பது, வெறும் கதையாக தொடர்ந்து இருக்கும்.

ஊரில் இருந்த எல்லா புளியமரத்திலும் பேய் இருந்தது. பேய் கண்டவரை கண்டவர்களாகவே எல்லோரும் வாழ்ந்தோம்.

இத்தனை வருடங்கள் கழித்து பேயை கண்டவர்களை தேடிபோனேன் யாருமே இல்லை. எல்லோரும் கண்டவரை கண்டவர்கள்.

சும்மா இருந்த புளிக்கு இந்த நிலை...........

இப்படி இருந்த புலிக்கு என்ன நிலைமை இருக்கும்?

100 விகிதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலை பார்த்தால் இணைக்க வேண்டியது தானே.

நுணாவுக்கு பகிடி வெற்றி தெரியேல்ல. :mellow::wub:

நண்டு கஸ்ரோ அண்ணையின் பங்கரை காட்டிக் கொடுக்கும் காணெளியையும் வன்னியிலுள்ள சிறீலங்கா இராணுத்தளபதிகளுடனும் டக்ளசுடனும் நிற்கும் காணொளியை நான் என் கண்ணாலை பார்த்திருக்கிறேன்.

உங்கள் கண்ணால் கண்ட காணொளியை வெளியில காட்டீட்டு பந்தி பந்தியா எழுதலாமே ஆதி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேசுவரன் அண்ணாச்சி நீங்கள் இந்தியாவில் இருந்த காலத்தில் இருந்தே உங்களது மேன்மை தங்கிய தேசிய சேவைகளை???? நான் அறிவேன்.

உங்களுடைய பொப்புலாரிட்டிக்கு நீங்கள் சாரசரி அரசியல் வாதிகள் மாதிரி அறிக்கை எல்லாம் விடலாமா? எச்சல் மண்டபத்துக்கு முன்னால் அனைவரும் ஒன்றுமைப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமே?

நன்றி உணர்வு, பொறுப்புணர்வு இந்த இரண்டும் இல்லாதவரிடம் தமிழின உணர்வு பொங்கி எழுந்தால், பிரபாகரன் கூட போக்கில்லாதவர் என்று இகழப்படலாம்.

" ஒருவன் சாவுவரை உண்ணா நோன்பு இருப்பது, புகழுக்காக" என்றும் ஒரு சிலர் சிந்தனையால் கணக்குப் பார்க்க முடிகின்றது.

பர்மேஷ்வரன் கருத்து மட்டும் என்ன, பிரபாகரன் கருத்துக்கூட விவாதிக்கப் படலாம், மறுகருத்து மொழியப்படலாம் பதிலுக்கு கருத்தாளனை கொச்சைப் படுத்துவது நிரம்பி வழியும் ஜனனாயகப் பண்பின் பாதிப்பா?

மாவீரநாள் நிகழ்வினூடு எமது இனம் அடையும் பலன்களாக கொள்ள வேண்டியவை;

* அங்கே கூடும் மக்களின் தொகையால் பிற சக்திகளுக்கு எமது ஒற்றுமையில் வலிமையைக் காட்டுகின்றோம்.

* எந்த தடை வந்தாலும் எமது உரிமையை தேடும் அவா எந்த நிலையிலும் தீர்ந்து போகாது என்ற துடிப்பைக் காட்டுகின்றோம்.

இந்த மாவீரர் நிகழ்வை செயவது எந்த சக்தி, எவளவு பணம் இதில் கொள்ளை அடிக்கின்றார்கள் என்ற பிரச்சினைகள் எல்லாம் இப்போது பிரச்சினையாக அவசியம் இல்லை.

வழமையாக நடந்த அதேவகையாக நடத்தப் பட்டாலே போதும் என்று ஆகின்றது இன்று. ஆனால் மறுதரப்பு இதைக் குழப்பும் தரப்பு என்ற நிலையாகத்தான் மக்களால் பெரிதாகப் பார்க்கப்படுகின்றது. இரு தாய், ஒரு குழந்தைக்கு போட்டி போட்டு குழந்தையை சரிபாதியாய் வெட்டி யாவது பெறத்துடிக்கின்ற தாய்க்கு நிகராகவே இந்த மாவிரர் நிகழ்வை குழப்பி தமது முதன்மைத் தனத்தை நிரூபிக்க துடிப்பவரின் நிலை கருதப் படுகின்றது.

"சரி", "பிழை" .. இரண்டும் இணைய வேண்டுமா????

http://www.yarl.com/...=0

பிழையானவர்கள், ஏன் பிழையானவர்கள் என்பதற்கான ஆதரங்களை முன் வைத்தால் மக்கள் முடிவு எடுக்க முடியும்.ஆனால் இரண்டு தரப்புமே அளையாள் துரோகிகள் என்று சொல்கிறார்கள் ஒழிய அதற்கான ஆதாரங்களைக் காடுகிறார்கள் இல்லை.

சர்வதேசச் செயலகத்தைச் சேர்ந்தோரே தமக்கு தலமைச் செயலகத் துரோகிகளை நம்பிக்கையானவர்கள் என அறிகுமுகப்படுதியதாக கூறினார்களே? அதற்க்கு என்ன பதில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழையானவர்கள், ஏன் பிழையானவர்கள் என்பதற்கான ஆதரங்களை முன் வைத்தால் மக்கள் முடிவு எடுக்க முடியும்.ஆனால் இரண்டு தரப்புமே அளையாள் துரோகிகள் என்று சொல்கிறார்கள் ஒழிய அதற்கான ஆதாரங்களைக் காடுகிறார்கள் இல்லை.

சர்வதேசச் செயலகத்தைச் சேர்ந்தோரே தமக்கு தலமைச் செயலகத் துரோகிகளை நம்பிக்கையானவர்கள் என அறிகுமுகப்படுதியதாக கூறினார்களே? அதற்க்கு என்ன பதில்?

'கீசகன் வதம்' மாதிரி இருட்டுக்குள்ளேயே யுத்தம் புரிய இருவரும் விரும்புகின்றார்கள். வெளிச்சத்திற்கு வந்தால் மூலப்பகை சபைக்கு வந்துவெடுமே என்பதில் இருவரும் கவனமாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

பிரித்தானிய தமிழர் பேரவை இரு தரப்பையும் அழைத்து பல சமரசத் திட்டங்களை முன் வைத்தது.சர்வதேசச் செயலகத்தைச் சார்ந்தோர் எந்த முயற்சிக்கும் உடன் படவில்லை. தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்ட நினைப்பவர்கள் அதற்கான பலாபலன்ங்களை அனுபவிக்க நேரிடும் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. கெடு குடி நற் சொல் கேளாது.

எங்கள் எல்லோரையும்விட பரமேசுவரனுக்கு கேள்வி கேட்க....

அருகதையும் பொறுப்பும் உண்டு.

ஏன் உண்ணாவிரதம் இருந்து 77ஆயிரம் பவுன்ஸ் கேஸு போட்டு எடுத்ததுக்காகவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

அப்ப நீங்கள் அண்ணை இல்லை என்று செல்லுறீங்களா.... அப்போ அனைதுலக தொடர்பக காரரை பகிரங்கமாக அதை சொல்லச் செல்லுங்கோ.

தலைமைச் செயலகம் 2009 முன்னும் வெளிநாட்டிலேயும் இருந்தது. தலைமைச் செயலகம் என்றது அண்ணையின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகளை இயங்க வைத்த அதி உயர் நிர்வாக கட்டமைப்பு.இயக்கத்தினுடையை செயற்பாடுகள் எங்கே எல்லாம் இருந்ததோ அங்கே எல்லாம் தலைமைச் செயலகத்தின் செயற்பாடும் இருந்து.பாலா அண்ணை எல்லாம் தலைமை செயலகத்தை வழிநடத்தி செயற்பட்டவர்.அவர் ஒன்றும் ; லண்டனிலை இருந்து கொண்டு அனைத்துலக செயலகத்துக்கு கீழ் இயங்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று தகட்டு இலக்கம் உடைய 6 பேர் தான் அனைத்துலக செயலகத்தின் சார்பில் வெளிநாட்டில் இருந்தவர்கள். அவர்களுக்கும் இயக்கம் சம்பந்தமா முடிவெடுக்கிற அதிகாரம் இருக்கவில்லை.அவை தங்கடை பிரச்சனையை கஸ்ரோ அண்ணைக்கு சொல்லுற அதிகாரம் தான் அவைக்கு இருந்தது.கடந்த காலத்திலை கூட அண்ணை தலைமை செயலகத்துக்கு உத்தரவிட அது அரசியல் துறைக்கு உத்தரவிட அரசில்துறை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ்; இருந்த மாவீரர் நடுவத்துக்கு ஊடக தன்னுடைய துணை நிர்வாகப்பிரிவான அனைத்துலகச் செயலகத்தால் வெளிநாடுகளில் மாவீரர் தினம் நிகழ்த்தப்பட்டது.மாவீரர் தின அறிக்கை என்பது அண்ணையின் பெயரில் தலைமை செயலகத்தால் தான் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும்.கடந்தகாலத்தில் வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட மாவிரர் நிகழ்வுகள் தலைமை செயலகத்தின் கீழ் தான் நிகழ்த்தப்பட்டன.

விடுதலைப்புலிகள் இயகக்த்துக்குள் உள்ள முரண்பாட்டை இயக்கம் தீர்த்துக் கொள்ளும் .அது தான் இயக்க வரலாறு.வெளியிலை இருந்து ஒருதரும் பிரச்சனைகளுக்கு சாம்பிறாணி போட்டு ஊதிப் பெருக்கி குளிர்காய வேண்டாம்.

அண்ணை இருக்கிறாரோ இல்லையோ எண்ட விவாதமும் வேண்டாம்.

அண்ணை என்பது தாயக விடுதலைக்காக உண்மையாக உழைக்கிற ஒவ்வொருவரையும் வழிநடத்திற மாபெரும் சக்தி;. 47 ஆயிரம் மாவீரர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் அண்ணையை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்.அவருடையை தலைமைத்துவத்தை வழிகாட்டலை ஏற்றுத்தான் மாவீரர்கள் தாயக விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கியவர்கள்.

அண்ணையின் மோலான நம்பிக்கை அவரின் பெயரைச் சொல்லி எடுத்த உறுதிமொழி. அண்ணையின் வழியில் அவரது தலைமையை ஏற்று நாங்கள் நடப்போம் என்று நம்புகிறவர்கள் எல்லாம் இந்த ஊதிப் பெருக்கி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை கணக்கிலை எடுக்காமல் வேலைகளைச் செய்வேம்.

தலைவர் உயிருடன் இருந்தால் தலைமைச்செயலகம், வன்னியிலோ அல்லது தலைவர் இருக்கும் இடத்திலேயோதான் இருந்திருக்கும், தலைசெயலகமும் புலம்பெயர்ந்து ஜரோப்பா வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தலைவரை விட்டு தலைமை செயலகம் தனித்தே வரவேண்டிய தேள்வை என்ன? தலைவர் இயங்கு நிலையில் இல்லை என்பதை நிரூபிக்கவா? தலைவரே இயங்கு நிலையில் இல்லையென்ற பின்னர் தலமை செயலகம் மட்டும் இயங்குவது எப்படி? அல்லது தலைமை செயலகம் என்ர பெயரில் இயங்குபவர்கள் யார்? தலைவர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தலைமை செயலகம் ஒருபோதும் தலைவரை விட்டு வராது, தலைவரை விட்டு வந்தவர்கள் தலைவரின் விசுவாசிகளாக ஒருபோதும் இருக்கவும் முடியாது.

மாவீரர் தினத்தை குழப்ப நினைப்பவர்கள் ஒரு போதும், தலைவரையோ, மண்ணையோ, மாவீரகளையோ நேசித்தவர்களாகஇருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் லா சப்பலில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர்தின சுவரொட்டியில் தலைவரின் படத்தை பார்த்து மனோ அண்ணை அவர்கள் அழுததாக கேள்விப்பட்டேன். அழுது அழுது அவர் சொன்னது. எமக்காக எல்லாவற்றையும் தந்த அந்த மனுசனுக்கு ஒரு அஞ்சலி செய்யுங்கடா என்று. இப்படியே உண்மையை மறைத்து மறைத்து அவரது பெயரையும் தியாகத்தையும் தமிழர் மறறந்துவிடப்போகிறார்கள் என்று அழுததாக கேள்விப்பட்டேன்.

இங்கு சிலர் மாவீரர்தினத்தை குழப்புகிறார்கள் என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. யாருக்கு அஞ்சலி செய்வது என்பதிலேயே குழப்பம்.

அந்தக்குழப்பம் தீரும்வரை...................???????????

இல்லை என்றபகுதியும் இருக்கு என்ற பகுதியும் இனி ஒட்டப்போவதில்லை.

அந்தவகையில் இனி மக்களிடம் அவரவர் தமது கருத்துக்களையும் உண்மைகளையும் எதிர்கால திட்டங்களையும் முன் வைக்க அனுமதிப்பதே நல்லது. அதன் மூலம் மக்கள் எதை ஆதரிக்கின்றார்களோ அதுவே இனி நிரந்தரமாக முடியும்.

பொய் சொல்பவர்கள் என்றோ துரோகிகள் என்றோ அரச அல்லது றோவின் கைக்கூலிகள் என்றோ எவரும் இல்லை. அதை வேறு ஆட்கள் சொல்வதும் சரியல்ல. மக்கள்முன் வாருங்கள். முடிவு மக்கள் கையில்.

இங்கு 2 மாவீரர் நிகழ்வு நடந்தால் நான் அதற்கும் செல்வேன். அவர்கள் சொல்வதையும் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப்பற்றியும அறிய. இன்னும் ஒன்று எங்கும் மாவீரர் தினம் இரண்டாக இல்லை. நிகழ்வுகளே இரண்டாக நடைபெறுகின்றன. இரண்டுக்கும் வேறுபாடுண்டு.

  • தொடங்கியவர்

பிரித்தானிய தமிழர் பேரவை இரு தரப்பையும் அழைத்து பல சமரசத் திட்டங்களை முன் வைத்தது.சர்வதேசச் செயலகத்தைச் சார்ந்தோர் எந்த முயற்சிக்கும் உடன் படவில்லை.

நாராயணா, எந்த பிரித்தானிய தமிழர் பேரவையை பற்றி கதைக்கிறீர்கள்! உண்மையில் அன்று பிரித்தானிய தமிழர் பேரவையை தொடங்க பாடுபட்ட பலர் ஒதுங்கியுள்ளனர்/ஒதுக்கப்பட்டுள்ளனர்! 2044ல் தமிழ்த்தேசியத்துக்குள், புலத்து காஸ்ரோக்களினால் கலை பண்பாட்டுக்கழகத்துக்கு உதவி செய்யவென்று அழைத்து வந்தவர், இன்று பி.ரி.எப்பின் தலையை கைப்பற்றி, இவ்வளவு கூத்துகளுக்கும் பின்னணியிலாம்! ... நல்ல கூட்டம்தான் சமரசத்துக்கு முனைந்திருக்கிறது!!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

கேபி ஆரம்பித்து வைத்த சுபன்தலைமையில் இருக்கிற தலைமைச்செயலகத்தின் சாதனை எது தெரியுமா?

இருபத்திஏழு மாதத்துக்குள்ளை 32 அறிக்கைகள் விட்டதுதான்.

முதலாவது அறிக்கை எது தெரியுமா?

கேபியை தமைலைச்செயலகத்தின் இணைப்பாளராக சுபனும்,ராமும் கையொப்பமிட்டு வெளியிட்டதுதான்.

... இந்த "இராமசுபன்" அல்லது "சுகி" என்றழைப்பட்டும், மலேசியாவில் இருந்து தமிழ்த்தேசியத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்போகிறவரின் ... உண்மையை தேடுங்கள்???? இப்போது புலத்தில் புதிதாக சஞ்சரித்திருப்பவர்களுக்கும், இந்த இராமசுபனுக்கும் தொடர்புகள் இல்லையோ என்று, வந்திருப்பவர்களிடம் கேளுங்கள்???? ... பல உண்மைகள் வெளிவரும்!

... முள்ளிவாய்க்காலில் இருந்து இற்றை வரைக்கும் இராமசுபன், அதே தொலைபேசி இலக்கத்தில் இருந்துதான் இங்குள்ள முன்னாள்களுக்கு அழைப்பு விடுகிறாராம்!!! ... புலிக்கு சவுண்ட் கொடுத்தவர்களையே விட்டு வைக்காத உலகம், இந்த இராமசுபன் மலேசியாவிற்கு தலைமைச்செயலகத்தை நகர்த்தி செயற்பட பார்த்துக் கொண்டிருக்கிறது????

... கேட்டால் துரோகிகள் என்று ஒருவரும் இல்லை, எல்லாம் அஞ்சலி எப்படி செய்வதில் ஏற்பட்ட பிணக்காம் என மொட்டை அடிப்பார்கள்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் இருந்தவர் எல்லாம் செத்தால்தான் அவர் கருத்து கூறலாம்.என்றால்

உண்ணாவிரதம் இருந்தவர் அப்பிடீயே சாகவேண்டும் .அப்போதுதான் அது போராட்டம் என்றால்

தங்களை தாங்களே புலநாய்வு புலிகள் என்றும் சயனைற்று கழுத்தில் கட்டியிருந்தவர் என்றும் சவடால் அடிக்கும் சங்கீதனும்,தமிழரசனும் எப்படி தப்பினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.