Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் வேண்டும்……

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தக்களரியில்

அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்

ஈழப் போர் எழுமென முரசறைகின்றன

காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு

ஈழமண் எரிய எரிய

தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்

நாற்பதாயிரம்

இளையதலைமுறையை கருக்கிப்போட்டது

கையறு நிலையில்

கடல் நீர் ஏரியில்

குண்டு பட்டுச் சிதைந்து

மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண

நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து

கோமகன்கள் தடாகத்தில்

எங்கள் குருதிதிதான்

ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக

Nila-Kasi-wed4-300x199.jpg

எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள்

ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க

காசியண்ணைக்குப் போர் வேண்டும்

ஏய்த்துப் பிழைத்த அரசியல்

கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப்

காசியண்ணைக்குப் போர் வேண்டும்

ஆம் போரிடுவர்

எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும்

உரிமைக்காய் போர் வேண்டும்

உழைப்பவன் ஆட்சிக்காய்

ஒருமித்தெழுகின்ற போர் வேண்டும்

Nila-Kasi-wed21-199x300.jpg

வீதியெங்கும் செம்பதாகை

ஏந்தி அணிவகுக்கும் போர்வேண்டும்

வீணருக்கு இரத்தப் பொட்டிட்டே

போரெழுந்து

தமிழர் புதைகுழியானது வன்னிநிலம்

யாரெழுந்தும்–நீ

போரிடென்றால் இனி நம்பார்

தாம் எழுந்தே அணிவகுப்பர் பார்……

கங்கா

15/11/2011

மறுஆய்வு தளத்தில் வந்த கவிதை. படித்ததில் பிடித்ததை பகிர்வது அஸ்வினி.

Nila-Kasi-wed4.jpg

Nila-Kasi-wed21.jpg

Edited by aswini2005

  • கருத்துக்கள உறவுகள்

பொழிப்புரை:

தாயக விடுதலை என்று இனிப்பேசுவோரெல்லாம் அடுத்த கணமே தற்கொலை செய்திடுக.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் சிந்திக்க வேண்டிய இணைப்பு! நன்றிகள், அஸ்வினி!

தமிழரை அழிக்கும் தேசத்திலிருந்து போர்… போர்….

நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நீங்கள் போராடுங்கள்! என்பதா? போர்…போர்… என்றவர்கள் இங்கு போராளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். மாவீரரையே கேவலப்படுத்துகிறார்கள். மீண்டும் போர்! எஞ்சியுள்ளவர்களையும் காவு கொள்ளவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொழிப்புரை:

தாயக விடுதலை என்று இனிப்பேசுவோரெல்லாம் அடுத்த கணமே தற்கொலை செய்திடுக.. :lol:

தியாகம் என்றால் என்ன? (சத்தியமா நான் இதை கேட்கவில்லை. நீங்களே கேழுங்கோ) :wub:

அஸ்வினி,,,

இந்த கவிதைய எழுதுன ..உங்க மங்காவுக்கு சொல்லுங்க..........

காசியண்ணாவின் அந்த ஒரு கருத்தில்.......நானுட்பட சிலர் முரண்பட்டோம்........

அதுக்காக அவரை வெறுக்கிறோம்னு அர்த்தம் ,,,

சிங்களவன் இருக்கும்வரை,,, எந்த தமிழனுக்கும் வராது!!

அந்த .மாபெரும் தேசகவிஞனை ,,, லொள்ளு பண்ணுறமாதிரி...

கேணைத்தனமா எல்லாம் கவிதை கிழிக்க கெளம்பாதீங்க,,,

ஏன்னா,,, எதிரிகளை கிழியாய் கிழிக்க ,,, அவரபோல கவிதை..ம்ம்.....

அது யாருக்குமே சரிப்பட்டுவராது! :)

  • கருத்துக்கள உறவுகள்

அய் மீண்டும் அஸ்வினி கன காலத்திற்கு பிறகு .அது சரி நறுக்கு கவிஞரை எதுக்கு திட்டிறியள் அவர்பாட்டிற்கு நொறுக்குத்தீனியை போட்டால்தானே விசிலடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகம் என்றால் என்ன? (சத்தியமா நான் இதை கேட்கவில்லை. நீங்களே கேழுங்கோ) :wub:

ஜீவா பாண்டியன் கதைச்ச பாதிதான் இருக்கு மிச்சத்தை காணவில்லை பிரபாகரனை சாதி சொல்லி திட்டியிருந்தார் ஒரு இடத்திலை இவர்தான் தற்சமயம் புதுமாவீரர் நாள் நடத்துபவர்களிற்கு தலைமை தாங்குபவர்.

ltte003.jpg

இவரது மனைவி பிள்ளைகள் கனடாவில் உள்னர் இவர் மலேசியாவில் இருந்து தற்சமயம் நியுசிலாந்து சென்று அசேலம் அடித்துள்ளார்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஸ்வினி,,,

இந்த கவிதைய எழுதுன ..உங்க மங்காவுக்கு சொல்லுங்க..........

காசியண்ணாவின் அந்த ஒரு கருத்தில்.......நானுட்பட சிலர் முரண்பட்டோம்........

அதுக்காக அவரை வெறுக்கிறோம்னு அர்த்தம் ,,,

சிங்களவன் இருக்கும்வரை,,, எந்த தமிழனுக்கும் வராது!!

அந்த .மாபெரும் தேசகவிஞனை ,,, லொள்ளு பண்ணுறமாதிரி...

கேணைத்தனமா எல்லாம் கவிதை கிழிக்க கெளம்பாதீங்க,,,

ஏன்னா,,, எதிரிகளை கிழியாய் கிழிக்க ,,, அவரபோல கவிதை..ம்ம்.....

அது யாருக்குமே சரிப்பட்டுவராது! :)

ஏன்னா அறவு படிச்சனுங்க புடிச்சிச்சி அதான் பக்கெண்டு புடிச்சாந்து போட்டம். நேக்கும் உந்த கவிதைய எழுதின மங்காவில செம கடுப்பண்ணே.

நீங்கேண்ணா டென்சனாவுறீங்க ? நாங்க கெளப்பலைண்ணா நீங்கதா கொழம்பறீக. போதும்ணா.

காசியண்ணாடை கவிதைண்ணா எனக்கு உசிருங்கண்ணா. அப்புடியான கவிஞனை இந்தக் கேணப்பயலுக கிழிக்க கெளம்பிட்டாங்கன்னதை பொறுத்துக்க முடியாமத்தாண்ணா யாழில போட்டமண்ணா. நீங்கச்சும் நாயம் கேப்பீங்கண்டு நம்பி. ஆனா நீங்கண்ணா.

பொழிப்புரை:

தாயக விடுதலை என்று இனிப்பேசுவோரெல்லாம் அடுத்த கணமே தற்கொலை செய்திடுக.. :lol:

ஏங்க நீங்க தற்கொலைக்குப் போறீக ?

ஜீவா பாண்டியன் கதைச்ச பாதிதான் இருக்கு மிச்சத்தை காணவில்லை பிரபாகரனை சாதி சொல்லி திட்டியிருந்தார் ஒரு இடத்திலை இவர்தான் தற்சமயம் புதுமாவீரர் நாள் நடத்துபவர்களிற்கு தலைமை தாங்குபவர்.

சாத்ஸ் நீங்களுமா? அந்த மெண்டல் ......தலைவரோட சாதி பத்தி பேசினதால,,,

தாழ்ந்துபோனது அவரா..? இல்ல தலைவரா?

எது எப்டி ஆனாலும், தலைவர் இருக்கும்போது,,,திட்டினாலும்,,,

அவர் இல்லாம போனபின்பும் மாவீரர் நிகழ்வுக்கு ,, தலைமை தாங்கினா...

அவருக்கு என் சல்யூட்!

ஏன்னா தலைவர் இருக்கும்போது......

அவர் புகழ்பாடியவங்கதானே... இப்போ ...

பாண்டியனைவிட ...அவர் பெயரை நாறடிக்கிறாங்க!! :)

எம் மக்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது!

கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கும் குரலுக்கும் நிகராக தமிழரை எழுச்சிப் படுத்திய கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரையைத் தவிர யாருமில்லை. மிச்சம் மீதியாய் ஒலிக்கும் ஒரு கவிக்குரலையும் தயவுசெய்து....கேவலப்படுத்த வேண்டாமே!

இதற்கு முதல் ஒரு பத்துலட்சம் பிறந்தநாள் சாமத்திய கலியாணப் போட்டோ வந்திருக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் வேண்டும் என்றில்லை, பேர் வேண்டும் என்று புது புது படைப்பாளிகள் எங்கள் அவலத்தை வைத்து

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் - வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்

துடைக்க மறப்பேனா ?

நோயில் இருந்து மயங்கி வளைந்து

நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்

பாயில் நெளிந்து மரண மடைந்து

பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து

சிதைந்து முடிந்தாலும் - என்றன்

தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்

தாங்க மறப்பேனா ?

பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு

பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்

கால்கை பிடித்தாலும் - என்னைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்

தோழமை கொண்டாலும் - அந்த

வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை

வீழ்த்த மறப்பேனா ?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்

பூட்டி வதைத்தாலும் - என்றன்

அங்கம் பிளந்து விழுந்து துடிக்க

அடிகள் கொடுத்தாலும் - உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்

தூள்பட நேர்ந்தாலும் - ஒரு

செங்களம் ஆடி வரும் புகழொடு

சிரிக்க மறப்பேனா ?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மக்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது!

கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கும் குரலுக்கும் நிகராக தமிழரை எழுச்சிப் படுத்திய கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரையைத் தவிர யாருமில்லை. மிச்சம் மீதியாய் ஒலிக்கும் ஒரு கவிக்குரலையும் தயவுசெய்து....கேவலப்படுத்த வேண்டாமே!

உங்க கருத்துக்கு மறுஆய்வில ஒரு அன்பர் தனக்குத் தெரிஞ்சதையும் எழுதியிருக்கார். அது இதுதாங்க.

kannan selvan says:

2011/11/19 at 9:49 pm

உறுப்பினர்

எம் மக்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது!

கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கும் குரலுக்கும் நிகராக தமிழரை எழுச்சிப் படுத்திய கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரையைத் தவிர யாருமில்லை. மிச்சம் மீதியாய் ஒலிக்கும் ஒரு கவிக்குரலையும் தயவுசெய்து….கேவலப்படுத்த வேண்டாமே!

0

கவிதைகளையும் காதலிக்கலாம்…. !

-ஒருவன்-

“கவிதைகள்”

யாழ் களத்தில் இப்படி ஒருத்தர் இதுக்கு கொமன்ஸ் போட்டிருந்தார். காசியும் புதுவையும் முந்தி தமிழரசு கட்சி – இடதுசாரி கட்சி மேடைகளில் ஏறி இரு கவிகளும் மாறி மாறி திட்டி தீர்த்தை இந்த கவிதை அறிந்திரார்.

புதுவை எழுச்சி ஊருக்கு தான் ஏற்படுத்தினவர் தன்ர குடும்பத்துக்கு உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தவில்லை. தன்ர பெட்டை புலிகள் இயக்கத்தில் சேர , அவகளோட சேர்ந்து ஆட போட்டாள் என்று சொன்ன கவிஞர் அல்லவோ புதுவை.

பின்னர் ஒரு மாதிரி பெட்டையையும் இயக்கதில இருந்து கிளப்பி லண்டனுக்கு அனுப்பிய கவியன்றோ.

கரும்புலிக்கும் தரைப்புலிக்குமெல்லா தறுதலை புலிக்கும் பாட்டு இயற்றிவிட்டு சரணடைந்த கவியலோ?

காசியண்ணனுக்கு நாட்டுக்கு வரச்சொல்லி குருவிபோட் அனுப்பிறதாய் சொல்லி தம்பி தூது அனுப்பி பாதுகாப்பாய் எடுப்பதாய் சொல்லியும் தட்டிக்கழித்த உணர்ச்சி கவியல்லோ?

காசியண்ணனை மீட்டு போர் தொடுக்க நாட்டுக்கு அழைத்துச்செல்ல காசியண்னருடன் பேசிய புலி கூட உயிரோடு இந்திய சிறையில் தான் இருக்குது காண்.

காசி இப்போ போர் தொடுக்கப்போகிறாராம். எங்கிருந்து எந்த படையை வைத்து? எந்த ஆயுதத்தால்?

அணுகுண்டா? கவிக்குண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"காசியண்ணனுக்கு நாட்டுக்கு வரச்சொல்லி குருவிபோட் அனுப்பிறதாய் சொல்லி தம்பி தூது அனுப்பி பாதுகாப்பாய் எடுப்பதாய் சொல்லியும் தட்டிக்கழித்த உணர்ச்சி கவியல்லோ?"

பக்கத்தில நிண்டு நோட்டு எடுத்தது போல் நம்மவர்கள் எடுத்து விடுவார்கள். ஆதாரம், அரிதாரமேல்லாம் கேக்க கூடாது.

aswini2005:

உங்க கருத்துக்கு மறுஆய்வில ஒரு அன்பர் தனக்குத் தெரிஞ்சதையும் எழுதியிருக்கார். அது இதுதாங்க.

kannan selvan says:

2011/11/19 at 9:49 pm

உறுப்பினர்

எம் மக்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது!

கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கும் குரலுக்கும் நிகராக தமிழரை எழுச்சிப் படுத்திய கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரையைத் தவிர யாருமில்லை. மிச்சம் மீதியாய் ஒலிக்கும் ஒரு கவிக்குரலையும் தயவுசெய்து….கேவலப்படுத்த வேண்டாமே!

கவிதைகளையும் காதலிக்கலாம்…. !

-ஒருவன்-

“கவிதைகள்”

யாழ் களத்தில் இப்படி ஒருத்தர் இதுக்கு கொமன்ஸ் போட்டிருந்தார்.

காசியும் புதுவையும் முந்தி தமிழரசு கட்சி – இடதுசாரி கட்சி மேடைகளில் ஏறி இரு கவிகளும் மாறி மாறி திட்டி தீர்த்தை இந்த கவிதை அறிந்திரார்.

புதுவை எழுச்சி ஊருக்கு தான் ஏற்படுத்தினவர் தன்ர குடும்பத்துக்கு உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தவில்லை. தன்ர பெட்டை புலிகள் இயக்கத்தில் சேர , அவகளோட சேர்ந்து ஆட போட்டாள் என்று சொன்ன கவிஞர் அல்லவோ புதுவை.

பின்னர் ஒரு மாதிரி பெட்டையையும் இயக்கதில இருந்து கிளப்பி லண்டனுக்கு அனுப்பிய கவியன்றோ.

கரும்புலிக்கும் தரைப்புலிக்குமெல்லா தறுதலை புலிக்கும் பாட்டு இயற்றிவிட்டு சரணடைந்த கவியலோ?

காசியண்ணனுக்கு நாட்டுக்கு வரச்சொல்லி குருவிபோட் அனுப்பிறதாய் சொல்லி தம்பி தூது அனுப்பி பாதுகாப்பாய் எடுப்பதாய் சொல்லியும் தட்டிக்கழித்த உணர்ச்சி கவியல்லோ?

காசியண்ணனை மீட்டு போர் தொடுக்க நாட்டுக்கு அழைத்துச்செல்ல காசியண்னருடன் பேசிய புலி கூட உயிரோடு இந்திய சிறையில் தான் இருக்குது காண்.

காசி இப்போ போர் தொடுக்கப்போகிறாராம். எங்கிருந்து எந்த படையை வைத்து? எந்த ஆயுதத்தால்?

அணுகுண்டா? கவிக்குண்டா?

அவருடைய கருத்துக்களில் உள்ள சில வரிகள் தெளிவாக அவர் யாரென்று தெளிவாக விளக்கி நிற்கும்போது...... இதற்கு நான் முழு விளக்கம் கொடுக்க விரும்பவில்லை!

அவ்வளவுதான்!

இணைப்புக்கு நன்றி அஸ்வினி!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஸ்வினி, தமிழீழ தேரை உயிரை கொடுத்து இழுக்கும்போது, தேரை இழுப்பவர்கள் மட்டும் முக்கியமல்ல.

ஐந்தாயிரம் பேர் இழுக்கும் தேரை திசை திருப்ப ஒரு ஒல்லி நோஞ்சான் கட்டையோடு பக்கத்தில் நடந்து வருவார்.

அவரை போய் தேரை இழு, மேல ஏறி அருச்சனை செய், நாதஸ்வரத்திற்கு சால்ரா போடு, எண்டெல்லாம் ஆக்கினைபடுத்தினால் தேர்

தடம் மாறி செல்லம்மக்காவிண்ட படலையை பிச்சு கொண்டு போயிடும்.

இப்போது தமிழகத்தில் வந்திருக்கும் பெரியமாற்றத்திற்கு முக்கிய காரணிகளில் காசி அண்ணன் ஒருத்தர் என்றபடியால் முதுகில் குத்த கிழம்பிவிட்டார்கள் கேள்வி கேதீஸ்வரங்கள்.

அது சரி, ஸ்ரீ லண்காவிண்ட பிரதி அமைச்சர் அபிவிருத்தி செய்கிறேன் என்று விட்டு கிளப்புகளில் தண்ணி அடிச்சு கெட்ட ஆட்டம் போடுவதை பற்றி தட்டி கேட்கலாமே?

கேக்கலாம் ஆனால் பயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.