Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

... லண்டன் EXCEL மண்டபத்தில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் நடாத்தப்பட இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!

Featured Replies

excel2011maaveerarnaalnikalvu.1.jpg

லண்டனில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் இம்முறை EXCEL மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வழமையாக லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறும் மண்டபத்தோடு பல மண்டபங்களை, இம்முறை TOP GEAR நிறுவனம் முன்பதிவு செய்ததை அடுத்து, இந்திய ஆதரவுக்குழுக்கள் அங்குள்ள தேசிய நினைவெழுச்சி நாளை நடத்துவதற்கு ஓர் சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனராம்.

அம்மண்டபம் 5000 மக்களையே கொள்ளக்கூடியதாக இருந்த நிலையிலும், தாம் முன்னைய மண்டபத்தைப் போல் பெரிய மண்டபத்தையே இம்முறை பதிவு செய்ததாகவும், அதே அளவு (ஏறக்குறைய 30 தொடக்கம் 50 ஆயிரம் மக்கள்) மக்களை கொள்ளக்கூடியதாக இருக்கும் என வானொலி, தொலைக்காட்சிகளில் இந்திய ஆதரவு முகமூடிக்கும்பல் தொடர்ந்து பிரச்சாரப்படுத்தி வந்த நிலையில், இம்முடிபை மண்டப நிர்வாகம் எடுத்திருப்பதாக தெரிகிறது. சிறிய மண்டபத்தில் அதிகமான மக்கள் கூடினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இம்முடிபு எடுக்கப்பட்டதாம்.

இந்நிகழ்விற்கான அனுமதி மண்டப நிர்வாகத்தில் மறுக்கப்பட்ட விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்னமே இந்திய முகமூடிக்கும்பலுக்கு தெரிந்திருந்தும், அவை தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்காமல் மறைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாறீடாக வேறு மண்டபத்தை அவசர அவசரமாக தேடிவிட்டு அறிவிப்போம் என இருக்கிறார்களாம். அதே நேரம் இவ்வனுமதி மறுக்கப்பட்டதையும், மற்றைய கும்பலின் தலையில் போட்டு, அவர்களினால்தான் இது தடைபட்டிருக்கிறது என்று பிரச்சாரத்திலும் ஈடுபட உத்தேசமாம்!

எது எப்படி இருப்பினும் ...

... தாயக விடுதலைக்காக தம் உயிரை அர்பணித்த மாவீர செல்வங்களின் நினைவு சுமந்த நாளை கேவலப்படுத்தி, புலத்தில் எம்மக்களின் அரசியல் செயற்பாடுகளை முடக்க, போட்டி/பிரிவுகளை மக்களிடையே உருவாக்க இந்திய புலனாய்வுத்துறை எடுத்த முயற்சியை மாவீரர்களின் ஆத்மா முறியடித்திருக்கிறது!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... தற்போது இந்திய ஆதரவு முகமூடிக்கும்பல், அவசர அவசரமாக லண்டனின் மேற்குப்பகுதியில் உள்ள ஓர் மைதானத்தை பதிவு செய்து, அங்கு ஆட்டத்தை கார்த்திகை 27ல் போட ஓடுப்பட்டு திரிகிறதாம்! ... இந்த மைதானத்தில்தான் ஜெனிவாவில் தன்னை அழித்த முருகதாஸின் இறுதிவணக்க நிகழ்வுகள் நடைபெற்றனவாம்!

... சனத்தை குளிருக்குள் நிற்க வைத்து சன்னி பிடிக்க செய்வதற்கு முகமூடிக்கும்பல் தயாரகின்றது போலிருக்குதாம்!

  • தொடங்கியவர்

.... லண்டனில் பல பகுதிகளில் இம்முறை மாவீரர் நாள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது! இவைகளை முன்போல் புலத்துக்காஸ்ரோக்கள் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது, நல்லது, ஆனால் ...

... கடந்த காலங்களில் விட்ட தவறுகளை .. வெளிப்படைத்தன்மை/கணக்கு வழக்குகள் ... ஆயுதங்களாக்கி நுளைந்த முகமூடிகளினால் ஏற்பட்ட மன உழைச்சல்களை (குறிப்பாக மாவீரர் குடும்பங்கள்) நன்கறிவார்கள்!! இனியாவது இத்தவறுகளை விடாது, அவற்றுக்கான தீர்வுகளை கண்டறிவார்கள் என நம்புகின்றோம்!!!

maveerar-naaal-2011-1.jpg

http://www.tnrf.org.uk/?p=120'>http://www.tnrf.org.uk/?p=120

http://www.tnrf.org.uk/?p=120'>http://www.tnrf.org.uk/?p=120

http://www.tnrf.org.uk

http://www.tnrf.org.uk

  • தொடங்கியவர்

... லண்டனில் கொல்ப் ஸ்ரிக்கினால் தாக்குதல்!

... பாரிஸில் வாள் வெட்டு!

... மீண்டும் லண்டனில் ...

... வட மேற்கு லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெற இருக்கும் மண்டபத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் அடித்து உடைக்கப்பட்டிருக்கின்றதாம், அத்தோடு அம்மண்டப உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்!!

... வரணி விநாயகனுக்கு தெரியாமலா இவை நடைபெற்றிருக்கும்?????

  • தொடங்கியவர்

சண் இன் லோமாருக்கு உண்மைகள் கொஞ்சம் நோகும்தான்! :icon_mrgreen:

நெல்லையன் எக்ஸ்செல் மண்டபத்தில் நடக்கவிருக்கும் மாவீரர் நாளை குழப்பி மக்களைச் சிறு சிறு மண்டபங்களிற்கு பிரிக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் முகமூடி மனிதர்களின் பொய்ப் பரப்புரையாக இருக்குமோ இது???

  • கருத்துக்கள உறவுகள்

இச் செய்தி உண்மையானால் மீண்டும் இன்னுமொரு இடத்தைத் தெரிவு செய்து போட்டிக்கு நடத்துவதைத் தவிர்த்து எல்லோரும் ஒரே அணியாக நடத்துவதற்கு உதவ வேண்டும்.

இச் செய்தி உண்மையானால் மீண்டும் இன்னுமொரு இடத்தைத் தெரிவு செய்து போட்டிக்கு நடத்துவதைத் தவிர்த்து எல்லோரும் ஒரே அணியாக நடத்துவதற்கு உதவ வேண்டும்.

புலவர் உங்களின் கருத்தே எனதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://dbsjeyaraj.com/dbsj/archives/2933

Two venues booked for ‘Great Heroes Day’ event in London cancelled at short notice.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கூட ( 19-11-2011, 11:50am ) ஐங்கரன் தொலைக்காட்சியில் லண்டன் EXCEL மண்டபத்தில் மாவீரர் நிகழ்வுக்கான அழைப்பு போனதாக எனது நண்பர் ஒருவர் சொன்னவர். :)

Edited by தமிழ் அரசு

http://www.tnrf.co.uk/2011/11/19/remembranceday2011-venue-changed/#more-456

என்னமாய் பிரச்சாரம் செய்தானுகள், வழமையாக நடைபெறும் மண்டபம், Excel மண்டபம் தான் மக்களால மனதால ஏற்றுக் கொள்ளப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் என்டு இன்னும் எத்தனையோ...... இப்ப?

முன்னமே சனம் கேட்டது ஏன் செப்டம்பரிலேயே நோட்டீசை வெளியில விட்டனியள் என்டு....? பதில் சொல்லிச்சினம் நோட்டீசை விட்டதால என்ன பிரச்சனை? சட்டப்படி பதிவு செய்த கொம்பனியால நடக்குது யாரலும் குளப்ப முடியாதெண்டு. இப்ப மற்ற குறூப்பை காரணம் சொல்லுறியள்.

அவனுகள் சின்ன மண்டபம் என்று திரும்ப திரும்ப சொன்னாங்கள். நீங்கள் என்னன்டால் பழைய பதிவுகளை, மக்களின் வரவுகளை கணக்கு பார்த்து தான் புக் பண்ணியதென்டு. மண்டப காரங்களும் பொலிசும் விசரே முந்திய காலங்களை பார்க்காமல் மண்டபம் தர என்டும் விட்டியல் றீலு. அதிலயும் விட்டியல் 13,990 சனம் தான் ஓரு நேரத்தில ஆக்ககூடியதாக மண்டத்தில இருந்ததெண்டு. இப்ப என்ன ஆச்சு?

இவ்வளவு நடந்தும் அடங்காமல் இப்ப இந்த இடத்தில செய்ய வெளிக்கிடுறியள்......

http://www.sklpc.com/mem/contact-us

உதுகளை விட்டிட்டு ஒன்று சேர வழியை பாருங்கள்.

Edited by Donkey

அனைத்துலக செயலகம் தான் புலியைம். சனத்தையும் அழிச்சதென்டால் நீங்கள் மாவீரர் தினத்தையும் அழிக்க நிக்கிறியள்.

இது ஒரு பிழைப்பு ,,,,,

இந்த யாழ் களத்திலே இரு பிரிவினராக பிரிக்கும் அளவுக்கு சிறீலங்கா இந்தியா சதிவலையில் விழுந்துள்ளது ஈழத்தமிழினம் இதெல்லாத்தையும் சரிசெய்ய யாரும் இல்லை, தேசியத்தலைவரை நேசித்த மக்கள் இப்போது நாளுக்கு நாள் புதிதாக தோன்றும் இவர்கள் யாரையும் நம்ப தயாராக இல்லை திரும்பவும் சூரியத்தேவன் வந்து இவற்றை தீர்த்தால் மட்டும்தான் இந்த பிரச்சனை எல்லாம் தீரும்.

இந்த யாழ் களத்திலே இரு பிரிவினராக பிரிக்கும் அளவுக்கு சிறீலங்கா இந்தியா சதிவலையில் விழுந்துள்ளது ஈழத்தமிழினம் இதெல்லாத்தையும் சரிசெய்ய யாரும் இல்லை, தேசியத்தலைவரை நேசித்த மக்கள் இப்போது நாளுக்கு நாள் புதிதாக தோன்றும் இவர்கள் யாரையும் நம்ப தயாராக இல்லை திரும்பவும் சூரியத்தேவன் வந்து இவற்றை தீர்த்தால் மட்டும்தான் இந்த பிரச்சனை எல்லாம் தீரும்.

இன்று சிங்களம் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துகின்றது.

எமக்குள் பிரச்சனைகளை உருவாக்க சிங்களம் முயலும்பொழுது அவர்களுக்குள் பிரச்சனைகளையும் அவர்களுக்கு எதிராக பரப்புரைகளையும் முனைப்பாக எடுப்பதே எம்மை ஒற்றுமையாக்கும்.

  • தொடங்கியவர்

... EXCEL மண்டபத்தில் இம்முறை மாவீரர் நாள் நடைபெற மாட்டாது என்பது, இக்கும்பலுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது!! ..

1) மிக சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனர்! ... 30 தொடக்கம் 40 ஆயிரம் மக்கள் வரும் நிகழ்விற்கு 5 ஆயிரம் மக்களை கொள்ளும் மண்டபமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது!

2) இந்நிகழ்வு நடைபெற இருப்பது தொடர்பாக பொலிஸாரின் அனுமது 48 தினங்களுக்கு முன் பெற்றிருக்க வேண்டுமாம்! ஆனால் அப்படி ஒன்றுமே பெறப்படவில்லையாம்!

3) பொலிஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பின் வரும் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து (முன்னைய நிகழ்வுகளுக்கு வந்த மக்களின் தொகை) மண்டபம் போதியளவு இல்லை என அனுமதி மறுக்கப்பட்டிருக்குமாம்! இது இவர்களுக்கு தெரிந்தே இருந்ததாம்!

4) ..

... உண்மையில் EXCEL மண்டபத்தில் மட்டுமல்ல, லண்டனில் எந்த ஒரு இடத்திலும் மாவீரர் நாள் நடத்தப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது! ...

1) மற்றைய குழுவோடு பல சமரசங்களுக்கு போய், EXCELளில் மட்டும் மாவீரர் நாளை நடாத்த படாப்பாடு பட்டிருந்தனராம்!

2) தாம் ஒதுங்குகிறோம், நீங்கள் EXCELஇல் முன்னின்று நடாத்துங்கள் என்றும் நல்ல பிள்ளைகள் வேடமும் போட்டுப் பார்த்தனராம்!

3) ஏனைய இடங்களில் மற்றைய குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபங்களின் நிர்வாகங்களுக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டு, அந்நிகழ்வுகளை குழப்ப பல முயற்சிகளை எடுத்திருக்கின்றனர்!

4) ..

... நல்லவேளை இவர்களுடன் சமரசத்துக்கு சென்று, EXCELஇல் மட்டும் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால், இன்று நாமம் போட்டு விட்டு குந்தி இருந்திருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கும்!

..

இதை விட முக்கியமானதொன்று ... இக்கும்பல், மாவீரர் குடும்பம்பங்களை கவுரவித்தல் நிகழ்வை மாதங்களுக்கு முன்னமே நிகழ்த்தி விட்டதாம்! உண்மையில் அப்போ தாயகத்தில் இவைகள் மாவீரர் வாரத்தில் தானாம் நடைபெறுவது வழமையாம், புலமெங்கும் கூட இவ்வாறு தானாம் நடைபெற்றது! ... ஆனால் இக்கும்பலின் மர்ம விளையாட்டில் ...!!

...

காஸ்ரோக்களினால் லண்டனில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர்நாள் ஒழுங்கு செய்யப்பட்டதில், ஹரோ பகுதியில் நடைபெற இருந்த மண்டபத்தின் இருந்த இரு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டும், மண்டப உரிமையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும், அவரினது குடும்ப உறுப்பினர்கள் கடத்தப்படுவர் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனால், நடைபெற இருந்த நிகழ்வு அங்கு நடைபெறாது என்கிறார்கள்!! ... ஆனால் ஹரோ பகுதியில் வேறொரு இடத்தில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

http://dbsjeyaraj.co...j/archives/2933

Two venues booked for ‘Great Heroes Day’ event in London cancelled at short notice.

In a separate development,Sangeethan the Vinayagam group leader in Britain is being questioned”for reasons unknown” by the Police in London

... இத்தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை? ... கேணல் சங்கீதன்(இவர் தன்னை கேணல் என்று சிலருக்கு அறிமுகப்படுத்தினாராம்!!!) இங்கு தங்குதடையற்று இராணுவ அதிரடித்தாக்குதல்களை நடாத்தவும், ஐரோப்பா நாடெங்கும் பறக்கவும், இந்தியாவிற்கு பறந்து வரவும் (பகிரங்கமாக சொல்கிறாராம் தான் இந்தியாவிற்கு அடிக்கடி போய் வருகிறேன் என்பதனை!!!)... இவர்களுக்கு தெரியாமலா????? ... பின்பு என்னத்துக்கு விசாரணை?????

ரொறன்ரோவில் வழமையாக நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்விற்குப் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக உழைத்த நல்ல உள்ளங்களிற்கு நன்றி

இன்று சிங்களம் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துகின்றது.

எமக்குள் பிரச்சனைகளை உருவாக்க சிங்களம் முயலும்பொழுது அவர்களுக்குள் பிரச்சனைகளையும் அவர்களுக்கு எதிராக பரப்புரைகளையும் முனைப்பாக எடுப்பதே எம்மை ஒற்றுமையாக்கும்.

  • தொடங்கியவர்

... முழுப்பூசனிக்காயை ஒரு கைப்பிடி சோற்றினுள் புதைக்கும் ...

india.gif

எதிர்வரும் 27.11.2011 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்ந தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம் மாற்றப்பட்டுள்ளது

தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் 25.08.2011 முதல் ExCeL மண்டபத்தை முற்பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பணிகளும் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட சிலரால் ExCeL மண்டபத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தம்மீது செலுத்தப்பட்ட அதிக அழுத்தங்கள் காரணமாக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைத்து ExCeL நிர்வாகத்தினால் மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ExCeL மண்டபம் முன்பதிவு செய்து தகவல் வெளியிட்ட பின்னர் ExCeL மண்டபம் தொடர்பான பல சர்ச்சைகளை சில ஊடகங்கள் வெளியிட்டன. அதேபோன்று தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு ExCeL மண்டபத்தில் நடைபெறவுள்ளது தொடர்பாக பல்வேறு சவால்கள் எமது தமிழினத்துக்குள் இருந்தும் விடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை வழமை போன்று ExCeL மண்டபத்தில் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மண்டபம் நிறுத்தப்பட்டுள்ளது.

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே! மாவீரர்களுக்கு உரித்துடையோரே மிகுந்த சவால்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் இவ் ExCeL மண்டபத்தினை ஏற்பாடுசெய்து மாவீர தெய்வங்களுக்கு வணக்க நிகழ்வு செவ்வனே நடைபெற நாம் செய்த சகல முயற்சிகளும் தாங்கள் அறிந்ததே. தாம் செய்யும் செயலின் விளைவுகளை சரிவர உணராத சிலரினால் மேற்கொள்ளப்பட்ட மோசமான நடவடிக்கைகளினால் நாம் இம் மண்டபத்தினை இழக்க நேரிட்டது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக எமது உணர்வுகளை யாரும் அழத்துவிட முடியாது.

எமது போராட்ட வரலாற்றில் பல துரோகச் சம்பவங்களை நாம் சந்தித்துள்ளோம். அவற்றையெல்லாம் எந்த மனவுறுதியுடன் கடந்து வீறுநடை செய்தோமோ அதே மன உறுதியுடன் இச்சம்பவத்தினையும் நாம் கடந்துசெல்ல உறுதி பூண்டுள்ளோம். எமது மாவீரச்செல்வங்களின் ஆசியும் உண்மையின் வழிநடத்தலும் உறுதுணையாக உள்ளது. மண்டபம் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர மாவீரர் தினம் நிறுத்தப்படவில்லை.

எனவே புதிய பொலிவுடன் எழுச்சியோடு சிறந்த முறையில் எமது தேசிய விழுமியங்களுக்கேற்ப மாவீரர்களுக்கான நிகழ்வு பிறிதொரு இடத்தில் ஏற்பாடாகிவருகிறது. உரிய ஏற்பாடுகள் முடிந்தவுடன் ஓரிரு தினங்களில் நிகழ்வு நடைபெறும் இடம் தங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

எனவே எமது அன்பு உறவுகளே! எவ்வாறு ஒரே இடத்தில் ஒருமித்து எமது மாவீர தெய்வங்களை வணங்குவதற்கு உறுதி கொண்டுள்ளீர்களோ அதே மன தெளிவுடன் மாவீரர் வணக்க நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தமிழத் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை ஆவணரீதியாக மக்களாகிய உங்களுக்கு நடந்த சம்பவங்களை தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். இருந்தும் ExCeL மண்டபத்தின்மீது எம்மால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதினால் எவ்வகையான ஆவணங்களை வெளியிட முடியும் என்பது தொடர்பாக சட்ட ஆலேசனைக்காக காத்திருக்கிறோம். எமக்கான சட்ட அனுமதி கிடைத்தவுடன் நிச்சயமாக எம்மால் இறுதிவரை ExCeL மண்டபத்துடன் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களும் மக்களாகிய உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

சூழலைப் புரிந்துகொண்டு ExCeL மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்த ஊடக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைக் கூறிக்கொள்வதோடு தொடர்ந்தும் தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தி முடிக்கும்வரை உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தந்துதவுமாறு அன்போடும் பணிவோடும் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழத் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கிய இராட்சியம்

இப்பொழுது பிரச்சினை பிரித்தானிய பொலீசிடம் சென்றுள்ளது, வாழ்த்துக்கள் நெல்லையன் . இப் போது சந்தோசமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி பிரித்தானிய அரசும் பொலிசும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்த நிலமை வரும் என்று தெரிந்தே தயவு செய்து ஒற்றுமையாக வாருங்கள் என்று சொன்னோம். அப்படிச் சொன்னவர்களையும் துரோகிகள் என்றீர்கள்.

செய்ய வேண்டிய வேலைகள் செயற்திட்டங்கள் பல இருந்தும் , அதிகாரப் போட்டிக் குழுக்களின் இழுபறியில் உடைந்து போவது மாவீரரின் எமது மக்களின் தியாகங்களுமே. இதில் நீங்கள் ஒருவரும் வெல்லப் போவதில்லை மாறாக மக்களால் நிராகரிக்கப் படப் போகிறீர்கள்.

  • தொடங்கியவர்

நாரதர்,

... நீங்கள் பிழையாக புரிந்திருக்கிறீர்கள்! இங்கு முன்னைய கும்பலை நியாயப்படுத்த முற்படவில்லை! அவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளின் அறுபடையே இந்தக் குழப்பங்கள்! மேலும் இவர்கள் தான் இந்த குழப்பவாதிகளில் பலரை யுத்தநிறுத்த காலகட்டத்தில் உள் அணைத்தவர்கள்!

ஆனால் ...

இந்த ஒற்றுமை/ஒன்றாக சேர்ந்து செய்வோம் என்ற அழைப்பெல்லாம் வெறும் ஏமாற்றே! மக்களை ஏமாற்ற இந்த புத்தம் புதுக்கும்பல் கையாண்ட நாடகங்கள்!!

... கடந்த சில வாரங்களுக்கு முன்னும் இங்கிருக்கும் ஓர் நடுநிலை ஊடகவியலாளர், இந்த புத்தம்புது கும்பலின் முக்கியஸ்தகருடன் மாவீரர்நாளை ஒரே இடத்தில் செய்வது குறித்து 5 மணிநேரம் பேசினாராம்! முதலில் தாம் ஒதுங்குகின்றோம் EXCELல் அவர்களே நடத்தட்டும் என்றார்களாம், பின் தம்மால் தனித்து மட்டுமே ஓரிடத்தில் நடாத்த முடியும் என்றார்களாம், பின் சடுதியாக ஓர் குழு அமைக்க வேண்டும், அதில் தாம் கூறும் நா.க.த.அ இன் அங்கத்தவர்களும், இம்மண்டபத்துக்கு 60000 பவுண்ஸுகளை கொடுத்த மூவரும், வேறு சிலரும் இருக்க வேண்டும் என்றார்களாம். ... அவர்களுடைய நிபந்தனைகளும், குழப்பகரமான அணுகுமுறைகளால் வெறுத்த இவ்வூடகவியலாளர் ஏறக்குறைய 5 மணி நேர பேச்சின் பின் உங்களுடன் நான் வந்து ஒற்றுமையை பேசியது, என் நேரத்தை விரயமாக்கி விட்டேன் என்று கூறி வெளியேறினாராம்!!

ஆனால் சில பிரித்தானிய அமைப்புகளுக்கு, இப்புதுக்கும்பல் தாம் ஒன்றாக மாவீரர்நாளை நடாத்த தயார் என்ற நாடக வசனத்தை பேசி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இப்புதுக்கும்பலில் நேற்றுவரை இங்கிருந்து ஆட்களை பிடித்து சென்று கோத்தாவின் கால்களில் போட்ட பலர் இப்போ இணைந்து மாவீரர்நாளாம்????

நல்லதோ? கெட்டதோ? ... இப்புதுக்கும்பலின் இணைந்திருக்கும் பலரின் நடவடிக்கைகளின் உண்மைநிலை பற்றி பல கேள்விகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள் வாயிலாக கேட்கப்பட்டுள்ள்து, யாழ், ஒருபேப்பர் உட்பட!!! இன்றுவரை எப்பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது!! உண்மைநிலைமை தெரியும் மட்டும் இந்த ஒற்றுமை நாடகத்தை பின் தள்ளிப்போட்டு, மாவீரர்நாளை புலத்தில் தனியே நடத்துவதுதான் நல்லது!!!

  • தொடங்கியவர்

உண்மை/பொய்மைகள் தெரியவில்லை!! ... வந்திருக்கும் ஓர் கேணல் அவிட்டாராம் ...

... எங்களைப் பார்த்து கனக்க கேள்விகள் கேட்கிறார்கள், நாம் இப்போது பதிலளிக்க போவதில்லை! எல்லாவற்றுக்கும் அம்மானின் குரல் வரும்போது கேள்விகள் அடங்கிப் போகும் ..என்று ஓர் பாரிய அதிர்வேட்டை!!!!!!!!!!!!!!!!!!!!!!!

... முந்தானாத்து ... புதிய தேசியத்தலவர் கேபி!

.... நேத்து ... தளபதி ராம்!!

.... இனி ... அம்மானாம்???????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை/பொய்மைகள் தெரியவில்லை!! ... வந்திருக்கும் ஓர் கேணல் அவிட்டாராம் ...

... எங்களைப் பார்த்து கனக்க கேள்விகள் கேட்கிறார்கள், நாம் இப்போது பதிலளிக்க போவதில்லை! எல்லாவற்றுக்கும் அம்மானின் குரல் வரும்போது கேள்விகள் அடங்கிப் போகும் ..என்று ஓர் பாரிய அதிர்வேட்டை!!!!!!!!!!!!!!!!!!!!!!!

... முந்தானாத்து ... புதிய தேசியத்தலவர் கேபி!

.... நேத்து ... தளபதி ராம்!!

.... இனி ... அம்மானாம்???????

மக்கள் இவர்கள் ஒருவரையும் நம்பத்தயாரில்லை தேசியத்தலைவர் அவர்களைமட்டும்தான் நம்புகின்றனர். அப்படி இருக்கும்போது கே பி வந்தும் பயனில்லை அம்மான் வந்தும் பயனில்லை

சும்மா மக்களையும் குழப்பி தாங்களும் குழம்புகின்றனர் ஒரு சிலர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.