Jump to content

கருணாநிதி மருத்துவமனையில்


akootha

Recommended Posts

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீர் வழித் தொற்று ( Urinary tract infection) பாதிப்பால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

88 வயது தலைவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக திமுக வட்டாரம் கூறியது.

அதேவேளையில், சிறுநீர் வழித் தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

http://news.vikatan.com/?nid=5082

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மருத்துவர்கள் யாரும் இருந்தால்

இந்த வியாதியின் குணங்களைப் பற்றியும்

அதன் தாக்கத்தைப் பற்றியும்

அதன் விழைவுகளைப் பற்றியும்

அறியத் தந்தால்......

Link to comment
Share on other sites

யாரங்கே கவிதை, இரங்கற்பா, துயர் பகிர்வோம் பகுதியில் கருத்துக்கள் எழுத தயாராகுங்கள். நல்ல செய்தி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகு காலத்தில் கல்யாணம் பண்ணவன் எல்லாமே நல்லாத்தான் இருக்கான் ... இவன் இவனுடைய அடிபொடிகள் செஞ்சி ராமசந்திரன் (இவன் 4 கல்யாணம் பணியவன்...) எவன் ஏழு ஊரு சொத்தை ஜவுளி அமைச்சராக இருந்த போதே வளைச்சு போட்டுட்டான்... வைக்கோ கண்டுக்கல..அகதி முகாம அமைக்க ஊர் கல்லாங்குத்து( ஊருக்கு ஒதுக்குபுற்மாக உள்ள கல்குன்று) காட்டிய கசுமால பயல் ... இன்னுமொரு கைத்தடி எ.வ வேலு... இவனுங்க எல்லாம் நரகத்திற்கே விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய பயலுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி சிறையில் இருப்பது தான் தற்பொழுது கலைஞருக்கு முக்கிய கவலை. கலைஞர் கருணாநிதி சிறந்த தகப்பனாக விளங்கினார். தனது பிள்ளைகளுக்காக கட்சியினை வளர்த்தார். தனது பிள்ளைகளின் நலனுக்காக ஈழத்தமிழர்களின் அழிவுக்கு காங்கிரசு அரசுக்கு துணை போனார்.

Link to comment
Share on other sites

இவருக்கு ஏதும் நடப்பதாயின் மாவீரர் வாரம் முடிந்த பின் நடக்கட்டும். எம் மாவீரர் செல்வங்களிற்காக கடைப்பிடிக்கப்படும் இந்த புனித வாரத்தில் இந்த சுயநல கிருமியின் சாவு நடந்து விடக்கூடாது

Link to comment
Share on other sites

அயல் நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி கற்க வழியில்லாமல் இருப்பதால், தமிழக அரசு தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி கற்க உதவும் படி தமிழக அரசை பல்லாண்டு காலமாக மன்றாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு செவி கொடுக்க மறுக்கும் திராவிட ஆட்சியாளர்கள் தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களில் இன்றைய தலைமுறையினர் தங்கள் தாய் மொழியை மறந்து போய் பெயரளவில் தமிழர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்டும் காணாதது போல் இருக்கும் பிழைக்க வந்த திராவிட ஆட்சியாளர்கள், இன்று ஏதொ ஒரு பொதுக்கூட்டத்தில், யாரோ ஒருவர் இயற்றிய தீர்மானத்திற்கு செவிமடுத்து தமிழ் நாட்டில் உருது, அரபு, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை சமச்சீர் கல்வியில் சேர்த்து அதன் மூலம் தமிழை தமிழர் நாட்டிலிருந்து விரட்ட முடிவெடுத்துவிட்டன இந்த தெரு நாய்(திராவிட) கழகங்கள்.

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக உள்ள இடங்களிலேயே தமிழ் பள்ளிகளை அந்தந்த மாநில அரசுகள் மூடிக்கொண்டிருக்க அதனைத் தட்டிக் கேட்காத தெலுங்கன் கருணாநிதி நம் தலையில் மட்டும் மிளகாய் அரைப்பதேன்?. ஈழத்தமிழர் உரிமை குறித்து மட்டும் பேசும் தெருவிட(திராவிட) அமைப்புகள் ஏன் இதனைக் கண்டித்து அறிக்கை விடுவதில்லை? ஏன் அந்த அமைப்புகளில் தலைமையும், முக்கியப் பதவிகளும் வேற்றினத்தாரிடம் உள்ளதாலா?

இவையனைத்தையும் கண்டும் காணாததைப் போல் இருக்கும் தமிழா உனக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும்?

2042Churavam22_small.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே!நல்லசெய்தி இப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில மணிநேரத்திலேயே அப்பலோ மருத்துவமனையிலிருந்து கருணாநிதி டிஸ்சார்ஜ்

karunanithi.jpg

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி சில மணித்தியாலங்களிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வைத்தியர் தேவராஜன் சென்று பரிசோதித்தார். அப்போது அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நேற்றிரவு 9.55 மணியளவில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுநீரக சிறப்பு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது கருணாநிதியின் வழமையான மருத்துவ சோதனை நடவடிக்கையே என திமுக தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக அதிமுக அரசினால் பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு, முன்னைய திமுக ஆட்சி தான் காரணம் என பழி சுமத்தி ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பதற்கு, கருணாநிதி கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்டு, சபையில் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திட்டங்களை எல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, "இன்றைய சீர்கேடுகளுக்கு எல்லாம் தி.மு.க., அரசு தான் காரணம்' என ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயம் தானா?இந்த ஆறு மாத கால ஆட்சியில், எந்தப் புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் துவங்கப்படவில்லை.

ஆனால், நான் நீலிக்கண்ணீர் வடிப்பதாக ஜெயலலிதா முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். தமிழக மக்கள் காதுகளில் இனியும் ஜெயலலிதா பூ சுற்ற முடியாது இவ்வாறு கருணாநிதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/india/2056-2011-11-21-20-33-14?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
    • திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024   திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நிறை கொண்ட காண்டாமணி வெள்ளிக்கிழமை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது   லண்டன் மாநகர் வாழ் இந்து மக்களின் முன்னெடுப்பில் உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை இந்து மக்களின் பங்களிப்புடனும் , திருக்கோணேஸ்வரப் பெருமானுக்காக லண்டனில் தயாரிக்கப்பட்ட 1000 கிலோ நிறையுடைய நவீன முறையில் மின்சாரத்தில் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காண்டா மணியானது வெள்ளிக்கிழமை பெருமானின் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபையினரிடம் கையளிக்கப்பட்டது.   https://www.ilakku.org/திருக்கோணேஸ்வரர்-பெருமா/
    • ந‌ட‌ந்து இருக்க‌லாம் நேபாள் அணி சின்ன‌ அணி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ அணி   நெத‌ர்லாந் ப‌ல‌ வ‌ருட‌மாய் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கு இங்லாந்தை இர‌ண்டு முறை 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் வென்ற‌ அணி   நெத‌ர்லாந் அணியில் கூட‌ தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாடின‌வை ஒரு சில‌ நெத‌ர்லாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் அணியில் இருக்கின‌ம்   ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணிய‌ நெத‌ர்லாந் அணி போன‌ கிழ‌மை தோக்க‌டிச்ச‌வை பெரிசா தோக்க‌டிச்ச‌வை😁..........................................
    • அப்படி நான் சொல்ல வரவில்லை. எங்களின் கவனம் அதில் இருக்கவில்லை என்று சொல்ல வந்தேன். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.