Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி

29kanimo.jpg

சிறையிலிருந்து விடுதலையாகி தில்லியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த கனிமொழி.

புது தில்லி, நவ. 29: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி தில்லி திகார் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியிருந்தது.

கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர்.

ஆனால் சிறையில் இருந்து வெளியேறிய கனிமொழி, தம்மை அழைத்துச் செல்வதற்காக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற கார்களில் ஒன்றில் நொடிப் பொழுதில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் கணவர் அரவிந்தன், திமுக எம்.பி.க்கள் சிலரும் சென்றனர்.

40 நிமிடங்களில் மத்திய தில்லியில் உள்ள தனது வீட்டை அடைந்த கனிமொழிக்கு, அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கியதும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவருக்குப் பூங்கொத்து அளித்தார்.

கனிமொழி விடுதலையானதை, வீட்டில் கூடியிருந்தவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவன இயக்குநர்கள் ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோரும் திகார் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து இரவு 7.30 மணிக்கு கனிமொழி விடுதலை செய்யப்பட்டதாகவும், மற்ற நான்கு பேரும் ஒரே காரில் சிறையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் திகார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா தெரிவித்தார்.

முன்னதாக, கனிமொழியை சிறை வளாகத்துக்குள் சென்று வரவேற்பதற்காக திமுக எம்.பி.க்கள் சிலருக்கு அனுமதியளிக்கப்பட்டது. எனினும் சிறையின் எந்த வாயில் வழியாக கனிமொழி வெளியே வருவார் என்பது இறுதிவரை தெளிவாகத் தெரியாத நிலை இருந்தது. இதனால் பத்திரிகையாளர்களும், கனிமொழியை வரவேற்க வந்தவர்களும் தவித்தனர்.

3-ம் தேதி வரை தில்லியில்: 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையிலேயே கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதிவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருப்பதால், அதுவரை கனிமொழி சென்னைக்குச் செல்ல மாட்டார் என்று தெரிகிறது.

கடந்த மே 20-ம் தேதி கனிமொழியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அன்று முதல் 193 நாள்கள் அவர் சிறையில் இருந்திருக்கிறார். உயர் நீதிமன்றம் திங்கள்கிழமையே ஜாமீன் வழங்கிவிட்டது. இருந்தாலும் அந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல், சிறப்பு நீதிமன்றத்துக்கு அலுவல் நேரம்வரை வந்து சேராததால், மேலும் ஒருநாள் அவர் சிறையில் இருக்க நேர்ந்தது

.http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=514646&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ராஜபக்ச அவர்கள் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி ஆறுதல் சொல்வாரா? அல்லது வெற்றித்திலமிடுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை வளர்க்க சிறை சென்றவர் என்னும் பட்டத்தை கனிமொழி பெற்றுக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை வளர்க்க சிறை சென்றவர் என்னும் பட்டத்தை கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இப்ப எல்லாம் ஜாமீல வாறதையே பெரிய வரப்பிரசாதமா நினைக்கிறாங்கப்பா. கொண்டாட்டமா கொண்டாடுறாங்கப்பா.

நீதிமன்றத்தில் தீவிர குற்றங்களுக்காக இவர் விசாரணையில் உள்ளார். இவர் மீது தீவிர பிரிவுகளின் கீழ் சி பி ஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. அதை மறைக்க.. இந்த வரவேற்பு நாடகம்..!

கனிமொழி ஜாமீனில் வந்தாலும்.. நிம்மதியாக இருக்க முடியாது. காரணம்.. அவர் மீதான வழக்கு பலமான நிலையில் உள்ளதால். அதனை பலவீனப்படுத்தும் செயல்களில் அவர் இறங்க.. நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதெல்லாம் இந்தியாவில்... சகஜம்...! :):icon_idea:

ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி

29kanimo.jpg

!</span></span>

எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன். :icon_idea::D

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

03.jpg 08.12.11 ஹாட் டாபிக்

றுமாத சிறை வாழ்க்கைக்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் கனிமொழி. கவிஞர், கருணாநிதியின் மகள், ராஜ்யசபா எம்.பி. என்று இருந்ததை விட, சிறை வாழ்க்கைக்குப் பின் அவருக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

தேர்தல் தோல்வி, தமிழகத்தில் தி.மு.க.வினர் கைது போன்ற எல்லாவற்றையும் விட, மகள் சிறையில் இருப்பதுதான் கருணாநிதியை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. ஜாமீன் வழங்கு வது தொடர்பான உத்தரவை நீதிபதி வி.கே.ஷாலி வழங்கிய போது கனிமொழியின் உறவினர்களோ, தி.மு.க. தலைவர்களோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருக்கவில்லை.

தாமதமாகக் கிடைத்த செய்தி!

ஜாமீன் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் காத்திருக்கும் ராசாத்தி அம்மாள் கூட அன்று மதியம் டெல்லியில் இருந்து சென்னை கிளம்பி விட்டார். நீதிமன்ற உத்தரவை வழக்கறிஞர்கள் மூலம் அறிந்த டி.ஆர்.பாலு உடனடியாக கருணாநிதியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். காலையில் இருந்தே டி.வி.யில் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த கருணாநிதிக்கு, மகிழ்ச்சியில் கண்ணீர் வந்து விட்டதாம். விமான நிலையத்தில் இருந்த ராசாத்தி அம்மாளுக்கு அந்தச் செய்தி தாமதமாகத்தான் கிடைத்தி ருக்கிறது. செய்தி அறிந்ததும் சந்தோஷத்தில் திணறி இருக்கிறார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட போது கனிமொழி, 2 ஜி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பாட்டியாலா நீதிமன்றத்தில் இருந்தார். டி ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க எம்.பி.க்கள் அங்கு நேரில் சென்று ஜாமீன் கிடைத்த விவரத்தையும், தங்கள் வாழ்த்துகளையும் கனிமொழிக்குத் தெரிவித்தனர்.

தூங்காத இரவு!

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் இருவரும் தலா ஐந்து லட்ச ரூபாய் ஜாமீன் வழங்கினர். அந்த உறுதிமொழிப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அளித்து உத்தரவு நகலைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஜாமீன் கிடைக்கப் பெற்றவர்களின் உறவினர்கள் நீதிபதி ஓ.பி. ஷைனியிடம் தாழ்மையாக கோரிக்கை வைத்தும், மாலை 5.30 மணிக்கு அவர் சென்று விட்டார். இதனால் திங்கட்கிழமை இரவே திஹார் சிறையில் இருந்து வெளியே வர கனிமொழியால் முடியவில்லை. அன்றிரவு அவர் தூங்காமல் விழித்தே இருந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ராசாவின் மனைவி வாழ்த்து!

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்து கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கனிமொழியின் கைகளைக் குலுக்கி வாழ்த்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாட் டியாலா நீதிமன்றத்திற்கு வந்து கனிமொழியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு ஜாமீன் கிடைத்த ஐந்து பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை நீதிபதி ஓ.பி.ஷைனி பிறப்பித்தார். இதையடுத்து, மாலை 4..15 மணிக்கு அனைவரும் திஹார் சிறைக்கு கொண்டு செ ல்லப்பட்டனர். சிறை விதிமுறைகளின் படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இரவு சுமார் 7.15 மணிக்கு கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்துபேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அழகிரி போட்ட கையெழுத்து!

சிறை விதிகளின் படி, ஒருவர் ஜாமீனில் வெளியே செல்லும்போது ‘நான் இவருக்கு இந்த உறவு’ என்று ஒருவர் கையெழுத்திட்டு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி, கனிமொழிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ‘எனது தங்கை கனிமொழியை எனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறேன்’ என கையெழுத்திட்டார்.

கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமாரும் விடுதலையானார். அவரை வரவேற்க, அவரது குடும்ப த்தினர் அங்கு வந்திருந்தனர். சரத்குமாரின் குழந்தையைத் தூக்கி, முத்தம் கொடுத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் கனிமொழி. தி.மு.க.வினர் அனைவரும் சரத்குமாருக்கு வாழ்த்துத் தெரிவிக்க, தயாநிதிமாறன் மட் டும் சரத்குமாரை கண்டுகொள்ளவில்லை.

சிறையில் கனிமொழி பயன்படுத்திய உடை, புத்தகங்கள் எதையும் அவர் திரும்பவும் எடுத்து வரவில்லை. ‘‘எனது டிரெஸ், சால்வை அனைத்தையும் அங்கிருந்த கைதிகளுக்குக் கொடுத்து விட்டேன். புத்தகங்களை சிறையில் இருக்கும் நூலகத்திற்குத் தந்து விட்டேன்.’ என்று கணவர் அரவிந்தனிடம் சொல்லியிருக்கிறார்.

யார் தருவார் சாக்லேட்?

சிறையில் இருக்கும்போது அங்குள்ள கைதிகளின் குழந்தைகளுடன்தான் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சாக்லேட் வாங்கி வரச்சொல்லி அந்தக் குழந்தைகளுக்குத் தருவார். கனிமொழி விடு தலையான செய்தியறிந்த அந்தக் குழந்தைகள், ‘ஆன்ட்டி வெளியே போயிட்டா, இனி எங்களுக்கு யாரு சாக்லேட் வாங்கித் தருவா’ என்று கலங்க, கனிமொழியும் அழுது விட்டாராம். ‘‘முன்னாள் முதல்வரோட பொண்ணுங்கிற எந்த பந்தாவும் இல்லை. சிறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு, இயல்பா இருந்தாங்க’’ என்பது கனிமொழி குறித்து திஹார் சிறை அதிகாரிகள் கொடுத்திருக்கும் குட் சர்டிஃபிகேட்.

சிறையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததும், வெகு நாட்களுக்குப் பிறகு மகனிடம் அழுகையும், கொஞ்சலுமாக அதிக நேரம் பேசியிருக்கிறார்.தொடர்ந்து ராசாத்தி அம்மாளிடமும், கருணாநிதியிடமும் பேசியிருக்கிறார். சந்தோஷத் தில் ஒருவருக்கொருவர் பேச வார்த்தையே வராமல் கலங்கியிருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவே மத்திய அமைச்சர் நாராயணசாமி உட்பட மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் தொலைபேசி மூலம் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.. தமிழ்நாட்டில் உள்ள அவரது நண்பர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டே இருக்க, முகம் நிறைய மலர்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார் கனிமொழி. அழகிரியின் மனைவி காந்தியும் தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார்.

சமாதான ஸ்டாலின்!

புதன்கிழமை அதிகாலையில் கனிமொழியைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித் தார். கனிமொழியின் விடுதலை ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கனிமொழிக்குப் பதவி கொடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றே தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்ததும், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ள்ளார். தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அங்கே இருக்க, கனிமொழிக்குப் பதவி கொடுப்பது பற்றி பேச்சு வந்திருக்கிறது. ‘‘ஏற்கெனவே குடும்ப அரசியல் பண்ணினதாலதான் நாம் தோத்துப் போனதா சொல்றாங்க. இப்ப கனிமொழிக்கு பதவி ரொம்ப அவசியமா?. பதவி வேணும்னு அவங்க உங்ககிட்ட கேட்டாங்களா?’’ என்று கடுப்படித் துவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பியிருக்கிறார் ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுதான் ஸ்டாலினை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ‘‘கனிக்குப் பதவி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனா பதவி கொடுக்கணும்னு தலைவர் விரும்பினா, அவர் சந்தோஷத்துக்காக நான் ஒத்துக்கறேன்’’ என்று வேலுவிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

கட்சிப்பதவி மட்டும் இல்லை, மத்திய அமைச்சர் பதவியும் கனிமொழிக்கு வேண்டும் என்பதில் ராசாத்தி அம்மாள் உறுதியாக இருக்கிறாராம். கனிமொழிக்குக் கொடுக்கப்படும் பதவிகள் பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றில் முதன்மை தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய ராசாத்தி, ‘‘இது மாதிரி டம்மி பதவி எல்லாம் என் பொண்ணுக்குத் தேவையில்லை. துணை பொதுச் செயலாளர் போல எதாவது பதவிதான் அவளுக்கு வேணும். தலைவர் நிச்சயம் அதைச் செய்வார். ஆனா, என் பொண்ணை மத்திய அமைச்சர் ஆக்குறதுதான் என் லட்சியம்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆவேசப்பட்டிருக்கிறார்.

‘‘சாத்தியமா?’’ என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியதற்கு, ஊழல் வழக்கில் சிறைக்குப் போய்விட்டு மீண்டும் மத்திய அமைச்சரான சிபுசோரனை உதாரணம் காட்டியிருக்கிறார் ராசாத்தி அம்மாள். மத்தியில் தி.மு.க. தரப்பில் காலியாக உள்ள இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளும் அவர் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாம்.

மகள் விடுதலையில் மகிழ்ந்து போயுள்ள கருணாநிதி, ‘‘கனிமொழி சனிக்கிழமை சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரவேற்பு பலமாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லி அந்த வேலைகளை ஸ்டாலினிடம் ஒப்படைத் திருக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்கள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் வாய்மொழி உத்தரவாம்.

மகளின் சிறை வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்ட கருணாநிதி, கனிமொழிக்குப் பதவி, குடும்ப மோதல் என உண்மையான பிரச்னைகளை இனிதான் சந்திக்கப் போகிறார்!

மகனிடம் நெகிழ்ந்த கனிமொழி!

ஜாமீனில்03a.jpg விடுதலையானதும் மகன் ஆதித்யாவிடம் தொலைபேசியில் பேசினார் கனிமொழி. ‘‘அம்மா இரண்டு நாளில் சென்னை வந்துடுவேன். நீ சமத்தா ஸ்கூலுக்குப் போ’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆதியோ, ‘‘அதெல்லாம் முடியாது. நான் உடனே உன்னைப் பார்க்கணும்’’ எனச் சொல்லிவிட்டு, தனியாக விமானம் ஏறி டெல்லி சென்றி ருக்கிறான். மகன் விரும்பிய உணவை சமைத்துக் கொடுத்து, அவன் அருகிலேயே இருந்து நெகிழ்ந்திருக்கிறார் கனிமொழி.

ராசாவுக்கு ஜாமீன்?

கனிமொழி விடுதலையானாலும், தினமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடக்கும் 2-ஜி விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும். தினமும் போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு வந்த கனிமொழி, கடந்த 30-ம் தேதி சொந்த காரில் வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.

வழக்கில் இதுவரை ஜாமீன் கேட்காத ஆ.ராசாவிடம், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘‘கவலைப்படாதீங்க. உங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும்’’ என்று நம்பிக்கையளித்ததோடு, அவருடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்டார்.

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா நீங்களும் உங்கள் நாடகங்களும் !!!

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 11.12.11 ஹாட் டாபிக்

டிசம்பர் 3-ம் தேதி அதிகாலையில் இருந்தே கோபாலபுரம் குதூகலபுரமாக மாற, காலை 10 மணியளவில் சி.ஐ.டி. காலனியோ துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது.

காரணம் கனிமொழி!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்காக கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த ஆறு மாத காலமாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் சட்டப் போராட்டத்தால் ஜாமீன் கிடைத்தது. அதன் விளைவாக, சென்னை மண்ணை மிதித்திருக்கிறார். அந்தக் கொண்டாட்டத்தின் பிரதிபலிப்புதான் இது.

மூன்றாம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி விமானத்தில் கனிமொழியோடு அவர் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் கிளம்பினர். மதியம் 1.20மணிக்கு சென் னை விமான நிலையத்தில் லேண்ட் ஆனது விமானம். விமான நிலையத்தின் ஓய்வறையில் மகளைக் காண வேண்டும் என்ற தவிப்பில் 12.20 மணியிலிருந்தே காத்திருந் தார் கருணாநிதி; துணைக்கு துணைவியார். கூடவே, தயாளு அம்மாள், ஸ்டாலின், செல்வி, ‘முரசொலி’ செல்வம்... என பெரிய பட்டாளம்.

ஓய்வறைக்கு கனிமொழி வந்ததும், ‘அப்பாடா, வந்திட்டியா..’ என கண்கலங்கி மகளின் உச்சியில் முத்தமிட்டு, ‘பாரும்மா, உனக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க பாத் தியா..’ என்று வெளி01a.jpgயே கரகோஷம் செய்துகொண்டிருந்த கூட்டத்தைக் காட்டினார். அதைப் பார்த்து கனிமொழியின் கண்களும் கலங்கின. ‘நல்ல எதிர்காலம் உனக்குக் காத்திருக்கும்மா’ என்று கருணாநிதி ஆசிர்வதிக்க, தயாளு அம்மாள் கனிமொழியைக் கட்டிப்பிடித்து முத்தமிட, அவரைப் பார்த்து, ‘‘நீங்க எதுக்கும்மா இவ்வளவு து£ரம் வந்தீங்க. நான் வந்து உங்களைப் பார்த்திருப்பேன்’ல என்று புன்னகைத்தார் கனிமொழி. அருகில் வந்த செல்வி, கனிமொழியின் கையைப் பிடித்துக்கொண்டு நலம் விசாரித் தார். ஸ்டாலின், ‘வாம்மா..’ என்று சிரித்து வரவேற்றுவிட்டு சட்டென்று கிளம்பிவிட்டார். அடுத்தடுத்து சொந்தபந்தங்கள் எல்லாம் பாச மழை பொழிய... சந்தோஷத்தால் திக்குமுக்காடி தந்தையின் காரில் ஏறி கிளம்பினார் கனிமொழி.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இதற்கிடையே, கனிமொழி வரவேற்பை படாடோபமாகக் கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவித்ததால், சென்னை விமான நிலையத்திலும், சி.ஜ.டி. காலனியிலும் வழியெங்கும், ‘சூரியன் வந்தாச்சு.. தலைவி வந்தாச்சு..’ ‘மானமிகு கனிமொழி’ ‘கருணாநிதியே வருக’ என்று கனிமொழி பேரவை, தி.மு.க. கலை இலக்கியப் பேரவை சார்பிலும் பேனர்களும், போஸ்டர்களும் தூள் கிளப்பின.

சி.ஜ.டி. காலனி வீட்டின் வாயில், காலை 10 மணி முதல் மேளதாளங்கள் முழங்க, சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. கேரளாவில் இரண்டு நம்பூதிரிகள், செம்பில் இருந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து பூஜை செய்து கழகக் குடும்பம் வருவதற்காக சுறுசுறுப்பாக இருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து கருணாநிதி கனிமொழி கார் சி.ஜ.டி. காலனி வீட்டுக்கு வந்ததும், பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். அதன் பின்னரே கனிமொழி இறங்கினார். முன்னதாக, 30-க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுக்க வீட்டில் காத்திருந்தனர். என்ன கணக்கோ தெரியவில்லை, 13 பேர் மட்டுமே ஆரத்தி எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

கனிமொழி வருவதற்கு முன்பு ‘சங்கமம்’ நிகழ்ச்சியில் எமலோக தர்பார் நாடகம் நடத்தப்பட்டது. பூலோகத்தில் இருந்து எமலோகம் வருபவர்களிடம் விசாரணை நடத்தி பாவக் கணக்கைத் தீர்க்க நரகத்திற்கும், நன்மை செய்தவர்களை சொர்க்கத்திற்கும் அனுப்புவதுதான் இந்த நாடகத்தின் சாராம்சம். ‘‘ஏன் இந்த நாடகம்?’’ என்று கட்சியின் முக்கியப் பிரமுகரிடம் காதைக் கடித்தோம். ‘‘கேரள பணிக்கரின் ஐடியாதான் இது. சிறையில் இருந்து வெளியே வரும் கனிமொழி மனக்கலக்கத்தோடு இருக்கக்கூடாது. எதிர்காலத்திலும் அது அவருக்கு ஒரு திருஷ்டியாக இருக்கும். நடந்துவிட்ட சிறை சம்பவம் ஒரு வடுவாகவே அவரை அலைக்கழிக்கும். ஆகவே, அதை நிவர்த்திக்கத் தான் இந்த நாடகம். தலைவரின் மகள் இதைப் பார்த்தால் இனி எந்தப் பிரச்னையும் வராது. அதற்காகத்தான் இந்த நாடகம்’’ என்றார். திராவிடச் சடங்கோ என நினைத் துக்கொண்டோம்.

வீட்டிற்குள் நுழைந்த கனிமொழி அங்கிருந்த பொதுச் செயலாளர் அன்பழகன் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது, ‘‘அம்மா, டெல்லி வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை’’ என்று வருத்தப்பட்டார். ‘‘பரவாயில்லை, உங்கள் உடல்நிலை எப்படி? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?’’ என்று கேட்டார் கனிமொழி.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது பயனடைந்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் அணியினர் வாழ்த்துகளைச் சொன்னார்கள். கருணாநிதி வரும்போது முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வணக்கம் தெரிவிக்க, ‘‘உன்னைய யாரு இந்தக் கூட்டத்துல வரச் சொன்னது?’’ என்று கோபப்பட்டார் கருணாநிதி. பிறகு கூட்டத்தில் இருந்தால், மேலே விழுந்துவிடுவார்கள் என்று அவரை தனது அறையில் உட்கார வைக்கும்படி உதவியாளர்களிடம் சொன்னார். எல்லோரும் சாப்பிட்டுப் போங்க என்று கூறிவிட்டு, மதிய உணவு அருந்த மாடிக்குச் சென்றார். மேலும், கனிமொழி வெளியே வந்திருப்பதால், அவருக்கு ந ல்லது நடக்கும் என ஆயிரம் தொண்டர்களுக்கு அன்னதானமும் நடந்தது.

கனிமொழியும் கல்லூரித் தோழிகளுடன் சாப்பிடும் அறைக்குச் செல்ல,01b.jpg கருணாநிதி மகளை அழைத்து சாதத்தை பாசமாக ஊட்டினார். மகள் சிறைக்குச் சென்ற பிறகு அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திய கருணாநிதி, சாம்பார் சாதம், காலிஃபிளவர் கூட்டு, வறுத்த வஞ்சரம் மீன் இரண்டு துண்டு, இரண்டு மெதுவடை ஆகியவற்றைச் சாப்பிட்டார். வழக்கமாக, அவர் இப்படிச் சாப்பிட மாட்டார். அன்றைய தினம் அவர் மெனு ஃபுல்லாக இருந்ததற்குக் காரணம் மகளின் வருகை. பின்பு, கருணாநிதி ஓய்வு எடுக்கச் செல்ல, கனிமொழி கீழே வந்து கட்சிப் பிரமுகர்களிடம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். இரவில் கனிமொழியே சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறினார்.

மறுநாள் காலையில், வெளியூரில் இருந்து கட்சித் தொண்டர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டை மொய்க்க., பெரும் திருவிழாவைப் பார்த்ததைப்போல் கனிமொழியின் முகத்தில் கூத்தாடியது சந்தோஷம்!

கனிமொழி சென்னை வந்த அதே விமானத்தில்தான், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் வந்தார். அவரை வரவேற்க, கலைஞர் டி.வி. நிர்வாகிகளும், குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வெளியே இருந்த மீடியாக்களின் கூட்டத்தைப் பார்த்து அவர் மாற்றுவழியில் சென்றுவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினரை சந்திப்பதால், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம் சரத்குமார்.

01c.jpg

அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டை அபகரித்துக்கொண்டதாக முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின் மீது சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் புகார் கொடுக்க, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் சுப்பாரெட்டி, வேணுகோபால் ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அறிந்து வக்கீல்கள் புடைசூழ டி.ஜி.பி. ஆபீஸுக்கு விரைந்தார் ஸ்டாலின். ‘என் மீது எப்.ஐ.ஆர். போட்டீர்களே, கைது செய்யவேண்டியது தானே’ என்று கேள்வி எழுப்ப, அப்போது அங்கிருந்த கூடுதல் டி.ஜி.பி.ராஜேந்திரன் அமைதியாக இருந்தார்.

உடனே, ஸ்டாலின் இரண்டு புகார் மனுக்களை அவரிடம் கொடுத்தார். ஒன்று, தன் மீது கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான விளக்கம், மற்றொன்று, சிறுதாவூர் மற்றும் கொடநாடு நிலம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீதான புகார். அதன்பிறகு பரபரப்பாக பேட்டியளித்துவிட்டு பறந்து சென்றார் ஸ்டாலின்.

இந்தப் புகார் தொடர்பாக, ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் வி01c1.jpgளக்கம் கேட்க முயற்சித்தோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்க

வில்லை.

இது குறித்து ஸ்டாலின் தரப்பில் விசாரித்த போது, ‘‘ஸ்டாலின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக போலீஸார் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் பினாமி பெயரில் அந்த வீட்டை வாங்கியதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர் வாங்கிய வீட்டை, உதயநிதியின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்குக் கொடுத்தார், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது’’ என்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர்.

இதற்கிடையில், முதல்வர் மீது பொய்குற்றச்சாட்டுக்களைக் கூறிய ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி கூறியுள்ளார். ‘‘கனிமொழி ஜாமீனில் வந்ததால், க ட்சியில் தனக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால் தொண்டர்களிடம் ஸ்டாலின் நாடகமாடுகிறார்’’ என்று அமைச்சர் பரஞ்சோதி குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாத ஸ்டாலின் ‘ஆதாரம் இருக்கிறது. நடவடிக்கையை சந்திக்கத் தயார்’ என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். ஸ்டாலினின் இந்த அதிரடிக்குக் காரணம் ‘கனியா? கிலியா?’ என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள் போலீஸார்.

படங்கள்: ம. செந்தில்நாதன், ஞானமணி, கணேஷ்

இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.