Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீல் நனைந்தது யாழ் பஸ் நிலையம் ( காணொளி)

Featured Replies

இன்று காலை 10.30 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தால் யாழ் பஸ் நிலையப்பகுதி பெரும் களோபரம் நிறைந்த இடமாகக் காணப்பட்டது.

பொலிஸ் , இராணுவத் தடைகளைத் தாண்டி பஸ்நிலையப் பகுதியில் குவிந்த காணமல் போனோரின் உறவினர்களை பொலிசார் துரத்த முற்பட்டனர்.

இந் நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அனுமதி பெறாது ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிசாரை முற்றுகையிட்ட உறவுகள் 'எங்களின் அனுமதியைக் கேட்டா அவர்களைப் பிடித்தீர்கள் ' என ஆவேசமாக கத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் எச்சரித்தபோது அந்த இடத்திற்கு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிசாருக்கு அவர்களின் நிலையை விளக்கினார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மாவை சேனாதிராசா, எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் காணாமல் போனோரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இன்று யாழ் குடா நாடு எங்கும் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு வீதியால் செல்லும் வாகனங்களில் இருந்து பயணிகளை இறக்கி சோதனை இட்டதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமற் போனோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

arppaddam12.jpg

arppaddam13.jpg

arppaddam15.jpg

arppaddam16.jpg

arppaddam17.jpg

arppaddam18.jpg

Edited by புறோக்கர்

இது கண்ணீர் மட்டுமல்ல, ஆவேசமும் கூட. இன்னும் இவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்களென்றால...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கலங்குகின்றது...... இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் பேசத் தொடங்கியுள்ளார்கள்.

இன்னும் இன்னும் உரமாகப் பேசுங்கள்.

உலக நாடுகளின் கதவுகளையும் தட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமைக்கும், ஒரு எல்லை உண்டு.

அந்தப் பொறுமைக்கு நாம், கொடுத்த விலை மிக அதிகம்.

மக்கள் செய்வதறியாது இருப்பவர்கள்.அவர்களை சரியான பாதையில் அழைத்து செல்பவர்கள் தான் இலக்கை காட்டமுடியும்.மக்களை சரியான திசையில் அழைத்து செல்பவர்ககை நாம் அடையாளாப் படுத்த வேண்டும்

உறவுகள் பேசத் தொடங்கியுள்ளார்கள்.

இன்னும் இன்னும் உரமாகப் பேசுங்கள்.

உலக நாடுகளின் கதவுகளையும் தட்டுங்கள்.

உண்மைதான் .உறவுகளின் வாயை அடைத்து பல வருடங்காளாகிவிட்டது.இனியாவது பேச விடுவோம் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் .உறவுகளின் வாயை அடைத்து பல வருடங்காளாகிவிட்டது.இனியாவது பேச விடுவோம் .

50 வருடமாம பேசி எல்லாம் சிங்களவர்கள் தமிழர்களுக்கு கொடுத்து விட்டார்கள். இனியும் அவர்களிடம் தமிழர்களுக்கு தர ஏதும் இல்லை என்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்பது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் .உறவுகளின் வாயை அடைத்து பல வருடங்காளாகிவிட்டது.இனியாவது பேச விடுவோம் .

இதில் 2000 ஆண்டுக்குப்பிற்பட்ட காலத்தில் காணாமல் போன உறவுகளின் யாழ் மக்களே கூடியுள்ளார்கள். காணாமல் போனவர்கள் அரச படைகளாலேயே காணாமல் போயுள்ளார்கள் என்றுதான் இங்கு உறவினர்கள் கூறிக்கூறிக் கதறி அழுகிறார்கள்.

அடக்கி வைத்திருப்பது சிங்களம் என்ற உண்மையை இந்த இடத்திலாவது பேசுங்கள் அர்யுன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் .உறவுகளின் வாயை அடைத்து பல வருடங்காளாகிவிட்டது.இனியாவது பேச விடுவோம் .

இல்லை தெரியாமல் கேக்கிறன் அப்ப அந்த பல வருடங்களுக்கு முதல் அங்கை என்ன அண்ணை நடந்தது?

இதில் 2000 ஆண்டுக்குப்பிற்பட்ட காலத்தில் காணாமல் போன உறவுகளின் யாழ் மக்களே கூடியுள்ளார்கள். காணாமல் போனவர்கள் அரச படைகளாலேயே காணாமல் போயுள்ளார்கள் என்றுதான் இங்கு உறவினர்கள் கூறிக்கூறிக் கதறி அழுகிறார்கள்.

அடக்கி வைத்திருப்பது சிங்களம் என்ற உண்மையை இந்த இடத்திலாவது பேசுங்கள் அர்யுன்.

இன்று நடந்த இந்த ஊர்வலம் மிக மகிழ்சியை பல மட்டங்களிலும் தந்திருகின்றது.சிங்களவனுக்கு எதிராகத்தான் போராடுகின்றார்கள் .இதே திராணி இம் மக்களுக்கு இல்லாமல் செய்தது விடுதலை இயக்கங்கள் தான் .சிங்கள அரசிற்கு பயந்ததை விட எமது விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் பயந்ததென்பது உலகமறிந்த உண்மை .எம் மக்கள் வாய் மூடி மவுனமாக்கப்பட்டு பல வருடங்கள் என்று அதைத்தான் எழுதினேன் .

கொழும்பு காலி முகதிடலிலேயே சத்தியாக்கிரகம் இருந்தவன் தமிழன்.அதே போல் இன்றும் மனோ கணேசன் பல ஊர்வலங்கள் வைக்கின்றார்.நாம் போராடினோம் என்பது உண்மைதான்,ஆனால் சரியாக போராடவில்லை.சரியாக போராடியிருந்தால் நாம் தோற்றிருக்க மாட்டோம்.

இவ்வளவு வேதனைகளும், மனகலங்கல்களும் சிங்களத்தை தீயாக சுடும்.

இல்லை தெரியாமல் கேக்கிறன் அப்ப அந்த பல வருடங்களுக்கு முதல் அங்கை என்ன அண்ணை நடந்தது?

சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவன் என மங்கையர்க்கரசியும் ,வண்ணை ஆனந்தனும்,ஆலால சுந்தரமும் எப்படி எல்லாம் அரசை எதிர்த்து பேசினார்கள்.எமது ஒரு இயக்கத்தவர்கள் எவைரை எதிர்த்து ஒரு சொல் தானும் சொல்லமுடியுமா ?

புலம் பெயர்ந்த நாடுகளிலேயே முடியாமல் இருந்தது என்பதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த இந்த ஊர்வலம் மிக மகிழ்சியை பல மட்டங்களிலும் தந்திருகின்றது.சிங்களவனுக்கு எதிராகத்தான் போராடுகின்றார்கள் .இதே திராணி இம் மக்களுக்கு இல்லாமல் செய்தது விடுதலை இயக்கங்கள் தான் .சிங்கள அரசிற்கு பயந்ததை விட எமது விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் பயந்ததென்பது உலகமறிந்த உண்மை .எம் மக்கள் வாய் மூடி மவுனமாக்கப்பட்டு பல வருடங்கள் என்று அதைத்தான் எழுதினேன் .

கொழும்பு காலி முகதிடலிலேயே சத்தியாக்கிரகம் இருந்தவன் தமிழன்.அதே போல் இன்றும் மனோ கணேசன் பல ஊர்வலங்கள் வைக்கின்றார்.நாம் போராடினோம் என்பது உண்மைதான்,ஆனால் சரியாக போராடவில்லை.சரியாக போராடியிருந்தால் நாம் தோற்றிருக்க மாட்டோம்.

சரியாக போராடல் என்றால் என்ன? ஆயுதபோராட்டம், அகிம்சை போராட்டம் தோல்வி அடைந்து அல்லது அடைய வைக்கப்பட்டது. இனி ஒரு சரியான போராடல் இருந்தால் அது எந்த நாட்டில் போராடப்பட்டு வெல்லப்பட்டது என்று கூறமுடியுமா?

பிற்குறிப்பு:முழு இலங்கையையும் ஒரே அடியில் பிடிப்பது என்று மட்டும் குறிப்பிட்டு விடாதீர்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து அவர்களை, அழ விடுங்கள்!

அழுவதற்குக் கூட அவர்கள், மேலிடத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது!

சரியாக போராடல் என்றால் என்ன? ஆயுதபோராட்டம், அகிம்சை போராட்டம் தோல்வி அடைந்து அல்லது அடைய வைக்கப்பட்டது. இனி ஒரு சரியான போராடல் இருந்தால் அது எந்த நாட்டில் போராடப்பட்டு வெல்லப்பட்டது என்று கூறமுடியுமா?

பிற்குறிப்பு:முழு இலங்கையையும் ஒரே அடியில் பிடிப்பது என்று மட்டும் குறிப்பிட்டு விடாதீர்கள். :icon_mrgreen:

ஒவ்வொரு நாட்டின் போராட்டத்திற்கும் தனித்துவம் இருக்கின்றது.தென் ஆபிரிக்கா.கிழக்கு திமோர், கொசோவா,தென் சூடான் எம் கண் முன்னே விடுதலை பெற்ற நாடுகள் .நாம் தனிநாடு பெற்று இருப்போமோ தெரியாது ஆனால் எமக்கு ஏற்ற ஒரு தீர்வை பெற்றிருக்க முடியும் . இந்தியா,கனடா , சுவிர்சிலாந்து இம் மூன்று நாடுகளினதும் மாநில சுயாட்சி முறைகள் ஆராயப்பட்டன.

அகிம்சையோ இல்லை ஆயுதப்போரட்டமோ - எல்லாம் எமது மக்களால் தான் அடுக்குமுறைக்கு எதிராக போராடப்பட்டது, போராடப்பட்டு வருகின்றது.

இந்த மக்கள் போராட்டம் கூட, இத்தனை ஆயுதம் ஏந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மத்தியில் மக்கள் செய்கிறார்கள் என்றால், அதன் துணிவை கூட தந்தது எமது ஆயுதப்போராட்டமே.

புலம்பெயர் தேசங்களில் கூட இவைபற்றி நாம் அரசியல் பரப்புரைகள் செய்யவேண்டும். அந்த மக்களுக்கு பலமாக இருக்கவேண்டும்.

இன்று நடந்த இந்த ஊர்வலம் மிக மகிழ்சியை பல மட்டங்களிலும் தந்திருகின்றது.சிங்களவனுக்கு எதிராகத்தான் போராடுகின்றார்கள் .

என்னாது மகிழ்ச்சியை தந்திருக்கிறதா?

மகனை ,மகளை..தந்தையை தம்பிய அண்ணாவ காணலை ....

யாருமே எமக்கில்லையேன்னு அந்த சனம் அழுறது ..... உங்களுக்கு அப்பிடியா இருக்கு அர்ஜுன் அண்ணா?

பைத-வே அது என்ன ஊர்வலம் போலவா உங்க கண்ணுக்கு தெரியுது??

இதே திராணி இம் மக்களுக்கு இல்லாமல் செய்தது விடுதலை இயக்கங்கள் தான் .சிங்கள அரசிற்கு பயந்ததை விட எமது விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் பயந்ததென்பது உலகமறிந்த உண்மை .

அதென்ன திராணி ,,,ஸ்குரூ ஆணி என்னுகிட்டு ...?

அங்க பலபேரு அழுறாங்களே,,, ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்ல உங்களுக்கு மனசு வரலியா அர்ஜுன் அண்ணா?

சிம்ப்லி யு ஆர் கிரேட்!

யூஸ்லெஸ் ... கருத்து எழுதுற அர்ஜுன் அண்ணா...

அங்கே காணாமல் போனவங்களுக்கு காரணம்,,,

விடுதலை இயக்கம் நிர்வகித்த ஒரு பிரதேசத்தில் , சுந்தந்திரமாக அவர்கள் வாழ்ந்ததினால்தான்!!,, இல்லைன்னா...

சிங்களவன் முழு இடத்தையும் பிடிச்ச உடனயே... ஒட்டு மொத்த சனமுமே... சிங்களவர்கள் பக்கம் ஓடி இருப்பாங்களே.. ஏன் ஓடல?

புலிகளே இல்லாத , ஒரு தேசத்தில்... அழுது தொலைச்சாலும்,, அந்த மக்கள் ,, ஏதாவது ஒரு வரி.. புலிகளை இகழ்ந்து பேசுறாங்களா கவனியுங்க ... அர்ஜுன் அண்ணா?

அவர்கள் மனசில் இருப்பதும்,,,எல்லார் மனசில் இருப்பதும்...

எங்க பலத்த்தை நாங்க இழந்திட்டோமே , எங்கிற ஆதங்கம்தான்!

உங்களூக்கு தேவை படுறதெல்லாம்...

எங்க ஆவது... ஒரு எனக்கு எதிரியானவங்க வீடு எரியட்டுமே... எனக்கு பீடி பத்த வைக்க நெருப்பு தேவை !!

நீங்க இப்டி இருக்குறத நாங்க மன்னிக்கிறோம் அர்ஜுன் அண்ணா,,,

தயவு செய்து உங்க ஜெனரேசனுக்கு ... உங்க கொள்கைகளை பரப்ப்பி விட்டு போகாதீங்க!!...

ஏன்னா...அவங்களாவது, சமுதாயத்தில் , மனசுல ஈரமுள்ள மனிதர்களாய் வாழட்டுமே! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.