Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை அதற்குள் கேரளா வேறு கீறுவதா? – வைரமுத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vairamuththu-150x150.jpg

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம்.

பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம் என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று கூறியிருக்கிறார்.

http://www.saritham.com/?p=43857

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா?

விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை?

தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’

இந்திய நடுவண் அரசை நம்பினால் தமிழனுக்கு நியாயம் கிடைக்காது என்பது அண்மைய வரலாறு. ஆனால் டெல்லியை தமிழனை ஏமாற்றி, ஏமாற்றி இறுதியில் தானே ஏமாறும்.

ஈழ மக்கள் தொடர்பான கொதிப்பை தவிர்க்க - மூவருக்கு தூக்குத்தண்டனையை விதித்தது

அதில் மக்கள் உறுதியாக இருக்க - இந்த பிரச்னையை உருவாக்கியுள்ளது.

அடுத்து ....

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நடுவண் அரசை நம்பினால் தமிழனுக்கு நியாயம் கிடைக்காது என்பது அண்மைய வரலாறு. ஆனால் டெல்லியை தமிழனை ஏமாற்றி, ஏமாற்றி இறுதியில் தானே ஏமாறும்.

ஈழ மக்கள் தொடர்பான கொதிப்பை தவிர்க்க - மூவருக்கு தூக்குத்தண்டனையை விதித்தது

அதில் மக்கள் உறுதியாக இருக்க - இந்த பிரச்னையை உருவாக்கியுள்ளது.

அடுத்து ....

எனக்கும் இதே சந்தேகம்.. :rolleyes:

மீனவருக்கு இல்லாத ஆதரவு விவசாயிகளுக்கு எப்படி என்று அதனால்தான் கேட்டிருந்தேன்..! உங்கள் பதிலில் இருந்து ஏதோ விளங்குவது போல் இருக்கிறது..! :unsure:

கேரள அரசியல்வாதிகள் மூலம் இது நடத்தப்படுகிறது என நினைக்கிறேன்..! தமிழ்நாட்டு மக்களும் இழுபடுகிறார்கள்..! :rolleyes:

ஏதோ நிபுணர்குழு அமைக்கிறார்களாம்..! அக்குழுவிடம் அணைபற்றிய முடிவை எடுக்க விடுவதுதான் சிறந்தது..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைரமுத்து சொல்வது சிங்களவனிடம் பட்ட காயம் ஆறியபின் நீ கீறு நாங்கள் பொறுத்துக்கொள்வோம் போல் இருக்கின்றது. இந்திய மத்திய அரசே கேரளத்தின் சிலர் கைகளின் பிடியில் தான் சிக்குண்டு தவிக்கின்றது.

இவர்களின் அறிக்கைகள் தங்களது தற்பெருமை தேடுவதற்க்கே ^_^

வைரமுத்து சொல்வது சிங்களவனிடம் பட்ட காயம் ஆறியபின் நீ கீறு நாங்கள் பொறுத்துக்கொள்வோம் போல் இருக்கின்றது. இந்திய மத்திய அரசே கேரளத்தின் சிலர் கைகளின் பிடியில் தான் சிக்குண்டு தவிக்கின்றது.

கவிஞரே சிங்களம் ஈழத்தமிழனை கீறி கிழித்த போது நீர் எல்ல்லாம் காட்டி கொடுத்த கருநாநிதிக்கு சாமரம் வீசி ,கயவனை பற்றி கவிதை பாடி சினிமா நிகழ்ச்சிகள்டும்நடாத்தி கொண்டு திரிந்தீர்கள்.

இப்போ என்ன அடி வேண்டும் தமிழனை பற்றி கவலைப்படுகிறீர்

374336_2326458847253_1423116401_32076260_1989665957_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இந்தியாவும் சிங்களமும் சேர்ந்தே நடத்திய நரபலியாட்டத்தின் உச்ச கட்டத்தினை தமிழகத்தின் கண்களிலிருந்து மறைக்க கருநாநிதி என்கிற பணத்தாசை பிடித்த எட்டப்பன் செய்த பாசாங்குதான் "செம்மொழி மாநாடு". தமிழ்த்தாய் ஈழத்தில் குற்றியிரும் கொலை உயிருமாகச் செத்துக்கொண்டிருக்க அவளது ரத்தத்தை எடுத்தே அவளை அழகுபடுத்தி வேஷம் போட்டான் அந்தக் கயவன். அந்தக் கயவனின் இந்த வேஷத்துக்கு நாடகம் ஆடியவர்களில் இந்த பணத்தாசையும், புகழாசையும் பிடித்த கவிஞரும் அடக்கம். எத்தனையோ பேர் எவ்வள்வோ தடவை சொல்லியும் செம்மொழி மாநாட்டை நடத்துவதை, அதுவும் முள்ளிவாய்க்காலுக்குச் சமாந்தரமாக நடத்துவதை நியாயய்ப்படுத்தி வந்தக் கயவர்களில் ஒருவரான வைரமுத்து இதுவும் சொல்லுவார், இன்னமும் சொல்லுவர். <_<

தமிழனுக்கு என்று ஒரு தனிநாடு அமையும்வரை இந்த அடிமைத்தனமும், அடாவடித்தனங்களும் இருக்கத்தான் செய்யும். போலித் தேசிய்வாத்ச் சகதிக்குள் இர்நுதுகொண்டு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தமிழகத் தமிழன் உணர வேண்டும். அப்போதுதான் எங்கள் எல்லோருக்கும் விடிவுகாலம். தமிழகம் இந்தியாவிலிருந்து விடுபட்டு வரவேண்டும், அதன்பிறகு எல்லாமே சரியாக நடக்கும். செய்யுமா தமிழகம் ?

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவுக்கு மலையாளப் பாட்டு எழுதும் சான்ஸ் இல்லைதானே..! :wub: அதுதான்..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவுக்கு மலையாளப் பாட்டு எழுதும் சான்ஸ் இல்லைதானே..! :wub: அதுதான்..!! :lol:

:rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை துதிபாடியதாக வைரமுத்துவைக் கேட்கும் எம்மவர்கள் வீடுகளில் கருணா நிதியின் சன், கலைஞர் தொலைக்காட்சிகளை காசு கொடுத்து பார்க்கலாமா?. சிங்களதேசத்துக்கு சிங்களவனின் விமானத்தில் பறக்கலாமா?. சிங்களத்து தேநீரைக்குடித்துக் கொண்டு சிங்கள நாட்டின் துடுப்பாட்ட போட்டிக்கு ஆதரவு தரலாமா? சிறுவயதில் படித்த 'உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாகவே திருந்தும்' என்பது ஞாபகத்துக்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா!!!!!!!!!!!தமிழருக்கு உரிமை பெற்றுத்தருவதாகச் சொல்லும் கூட்டமைப்பு எம்பியே மகிந்தவோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறாராம் நீங்க வேற,,,,,,,,,,,,,,,

கருணாநிதியை துதிபாடியதாக வைரமுத்துவைக் கேட்கும் எம்மவர்கள் வீடுகளில் கருணா நிதியின் சன், கலைஞர் தொலைக்காட்சிகளை காசு கொடுத்து பார்க்கலாமா?. சிங்களதேசத்துக்கு சிங்களவனின் விமானத்தில் பறக்கலாமா?. சிங்களத்து தேநீரைக்குடித்துக் கொண்டு சிங்கள நாட்டின் துடுப்பாட்ட போட்டிக்கு ஆதரவு தரலாமா? சிறுவயதில் படித்த 'உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாகவே திருந்தும்' என்பது ஞாபகத்துக்கு வருகின்றது.

உந்த மக்கள் வானொலி என்று சொல்கிற இலன்டன் ஜ.எல்.சி வானொலியே அவன் மலர் cash&carry கடைக்க்காரன் சிங்கள எம்பசியில போய் தீவாளி கொண்டாடினார் என்டு விளாவாரியா படங்களோட வந்தாப்பிறகும் தொடந்து விளமபரத்தோட கத்துகினம்.

எல்லாம் காசு பிரச்சனைதான்.. காசு வந்தா வாய் மூடு அவ்வளவுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.