Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: முதலாவது தமிழ் காவல்துறை அதிகாரி (இன்ஸ்பெக்டர் )

Featured Replies

கனடா: முதலாவது தமிழ் காவல்துறை அதிகாரி

கனடாவில் டொராண்டோவுக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள மோல்ட்டன் பகுதியின் காவல்துறை அதிகாரியாக (இன்ஸ்பெக்டர்) நிசாந்தன் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

37 வயதுடைய இவர் தனது ஆறு வயதில் கனடாவுக்கு வந்தவர். இன்று வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

( கனடாவில் காவல்துறை நிர்வாகம் மாநகரசபை அளவில் இயங்கும் அமைப்பு. இதற்கான பணம் வீட்டு வரியில் இருந்து பெறப்படும்)

ND1231.jpg

Nishan Duraiappah was recently promoted to inspector for One District (Milton and Halton Hills) of the Halton Regional Police Service. Metroland West Media Group File Photo )

http://www.insidehal...lead-by-example

பின் குறிப்பு: நான் தான் 'முதலாவது' என குறிப்பிட்டுள்ளேன். எனக்கு தெரிந்தவரை இவர்தான் முதலாவது தமிழர் இந்த உயர்பதவிக்கு காவல்துறையில் தெரிவானவர்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அவரைப் பார்த்தால் கறுப்பினத்தவர் மாதிரி உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் (P.H.D) பெற்ற

Grade de Docteur à l’université Pierre et Marie Curie

Spécialité : Bio-organique/Spectrochimie

Ecole doctorale : iViV

ஈழப்பெண்ணின் பரீட்சையின் போதும் பட்டமளிப்பின்போதும் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

6 பேரின் 3 மணித்தியால இடைவிடாக்கேள்விகளுக்கும் பதிலளித்து பட்டத்தை தனதாக்கிக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவுதான் படித்தாலும் இதையும் தாண்டவேண்டுமே என்று.

மனது சந்தோசத்தால் பெருமிதம் கொண்டது. எமக்குள்ளும் ஒன்று ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டது என்று.

***அந்த நேரத்திலும் என் தம்பி நெடுக்கை நினைத்துக்கொண்டேன்.

குறிப்பு : பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் பெற்றவர்(P.H.D) என்பது எனது கணிப்புத்தான்(வேறு படிப்பில் சிலவேளை வேறு எவராவது இருக்கலாம்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் உணர்வுள்ளவரா ? சிலர் தமிழ் பெயரை கொண்டிருப்பார்கள் பேசினால் தமிழில் பேசமாட்டார்கள் அப்படியானவர்களை தமிழர் என்று சொல்லி என்ன பிரயோசனம். :(

இந்தியாக்காரனும் பாக்கிஸ்தானியும் மற்ற நாட்டவரும் பெரும்பாலும் தமது நாட்டவரைக்கண்டால் அவர்கள் மொழியிலேயே பேசுவார்கள் ஆனால் எமது இனத்தில் சிலர் அப்படியல்ல தமிழில் பேசினால் அவர்கள் ஆங்கிலமோ அல்லது அந்த நாட்டு மொழியையே பேசுவோரை பார்த்திருக்கின்றேன். ^_^

( கனடாவில் காவல்துறை நிர்வாகம் மாநகரசபை அளவில் இயங்கும் அமைப்பு. இதற்கான பணம் வீட்டு வரையில் இருந்து பெறப்படும்)

வீட்டு வரி மாற்றிவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் (P.H.D) பெற்ற

Grade de Docteur à l’université Pierre et Marie Curie

Spécialité : Bio-organique/Spectrochimie

Ecole doctorale : iViV

ஈழப்பெண்ணின் பரீட்சையின் போதும் பட்டமளிப்பின்போதும் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

6 பேரின் 3 மணித்தியால இடைவிடாக்கேள்விகளுக்கும் பதிலளித்து பட்டத்தை தனதாக்கிக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவுதான் படித்தாலும் இதையும் தாண்டவேண்டுமே என்று.

மனது சந்தோசத்தால் பெருமிதம் கொண்டது. எமக்குள்ளும் ஒன்று ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டது என்று.

***அந்த நேரத்திலும் என் தம்பி நெடுக்கை நினைத்துக்கொண்டேன்.

குறிப்பு : பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் பெற்றவர்(P.H.D) என்பது எனது கணிப்புத்தான்(வேறு படிப்பில் சிலவேளை வேறு எவராவது இருக்கலாம்)

வாழ்த்துக்கள் அந்தப் பெண்மணிக்கு.

எனக்கு பிரஞ்சு மொழி தெரியாது. இருந்தாலும்.. தலைப்பில் உள்ள ஆங்கில உச்சரிப்பை அடிப்படையாக வைத்து.. இவா.. உயிரியல் சேதன இரசாயனத்தில்.. spectro-chemistry சார்ந்த தலைப்பில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார் என்று நினைக்கிறேன்.

கலாநிதிப் பட்டம் பெறுவது இன்றைக்கு ஒரு 30 - 40 ஆண்டுகளுக்கு முன்னர் சாதனைக்குரிய விடயமாக இருந்தது என்னவோ உண்மை. இன்று அப்படியாக இல்லை. இருந்தாலும்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ் போன்ற நாடுகளில்.. இங்கிலாந்து.. அமெரிக்கா.. கனடா.. அவுஸ்திரேலியா போன்று அவ்வளவு இலகுவாக.. இந்தப் பட்டத்தைப் பெற முடியாது என்பதை நான் எனது நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

நீங்கள் என்னைப் பற்றி அந்த நேரத்தில் என்ன நினைத்தீர்களோ தெரியாது.. spectro-chemistry ஐ எனது இளமானிப் பட்டத்தில் இறுதி ஆண்டில் ஒரு பாடமாகக் கற்றதில் அது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய பல இரசாயனப் பகுப்பாய்வுகள் இந்த இரசாயனத்துறை சார்ந்தே வளர்ந்து நிற்கின்றன. வளரவும் போகின்றன. அதற்கு இவரின் ஆய்வும் உதவி நிற்கும் என்று நம்புகின்றேன்.

ஆனால் நான் தற்போது.. திசை மாறி வேறொரு துறையில் நிற்கிறேன். எனக்கு மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபாடு அதிகம் என்பதால் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதனாலும் நிதி பிரச்சனையாலும் கலாநிதி படிப்பை தாமதித்துக் கொண்டுள்ளேன். ஆனால் நிச்சயமா Permanent Head Damage PhD அல்லது DSc வாங்காமல் படிப்பை நிறுத்தப் போறதில்லை..! :lol::icon_idea::)

மேலும்....................

இந்தக் கனடிய காவல் துறை அதிகாரியாகியுள்ள தமிழருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு.. தமிழர்கள் மத்தியில் கனடிய சமூகச் சட்டங்களை இறுக கடைப்பிடிக்க வலியுறுத்தி குற்றச் செயல்களைக் குறைக்க வேண்டிக் கொள்கின்றோம். தமிழர்கள் வன்முறைவாதிகள் என்ற கருத்தை மாற்றி அமைக்க இவர் பாடுபட வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

முதலாவது உயர் பதவி எடுத்தவராக இருக்கலாம் .எனது உறவில் ஒருவர் பல வருடங்களாக இருக்கின்றார் ,

அதைவிட எனது லண்டன் சில மாத ரூம்மேட் இங்கு போலிசாகிவிட்டார்.சென்றல்-சென் ஜோன்ஸ் பிக் மட்சில் என்னை சில வருடங்களின் பின் சந்தித்து கதைத்துவிட்டு எனது போன் நம்பரை அவர் கேட்டு எழுத, பார்த்துக்கொண்டிருந்த எனது மற்ற நண்பர்கள் நினைத்துவிட்டார்கள் மைதானத்தில் தண்ணி அடித்ததற்கு டிக்கெட் வாங்குவதாக,அவனும் கறுப்பினத்தவர் மாதிரித்தான்.பட்ட பெயரே ஜிம் கெல்லி.

பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ் போன்ற நாடுகளில்.. இங்கிலாந்து.. அமெரிக்கா.. கனடா.. அவுஸ்திரேலியா போன்று அவ்வளவு இலகுவாக.. இந்தப் பட்டத்தைப் பெற முடியாது என்பதை நான் எனது நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

நீங்கள் என்னைப் பற்றி அந்த நேரத்தில் என்ன நினைத்தீர்களோ தெரியாது.. spectro-chemistry ஐ எனது இளமானிப் பட்டத்தில் இறுதி ஆண்டில் ஒரு பாடமாகக் கற்றதில் அது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய பல இரசாயனப் பகுப்பாய்வுகள் இந்த இரசாயனத்துறை சார்ந்தே வளர்ந்து நிற்கின்றன. வளரவும் போகின்றன. அதற்கு இவரின் ஆய்வும் உதவி நிற்கும் என்று நம்புகின்றேன்.

ஆனால் நான் தற்போது.. திசை மாறி வேறொரு துறையில் நிற்கிறேன். எனக்கு மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபாடு அதிகம் என்பதால் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதனாலும் நிதி பிரச்சனையாலும் கலாநிதி படிப்பை தாமதித்துக் கொண்டுள்ளேன். ஆனால் நிச்சயமா Permanent Head Damage PhD அல்லது DSc வாங்காமல் படிப்பை நிறுத்தப் போறதில்லை..! :lol::icon_idea::)

அமெரிக்கா, கனடாவை விட இங்கிலாந்தில் PhD எடுப்பது இலகு. இங்கிலாந்தில் மாஸ்ரேஸ் எடுக்காமல் 3 வருடத்தில் (paper published பண்ணாமலே) PhD எடுக்கினம், எடுத்தவை இருக்கினம்.

அவரைப் பார்த்தால் கறுப்பினத்தவர் மாதிரி உள்ளது

இது என்ன புதுக் கதை தம்பி ரதி :rolleyes: தமிழாக்கள் கனபேர் பார்த்தா கறுப்பு.........

  • தொடங்கியவர்

இவர் போன்றவர்கள் பற்றிய செய்திகள் எமது இளையோர் மத்தியில் செல்லும்பொழுது :

- தாமும் நேர்வழியில் முன்னேறலாம் என்ற உணர்வு ஏற்படும்

- தீய வழிகளில் செல்வதை குறைக்கும்/தடுக்கும்

- எமது இனத்திற்கு பெருமை சேர்க்கும்

- ....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, கனடாவை விட இங்கிலாந்தில் PhD எடுப்பது இலகு. இங்கிலாந்தில் மாஸ்ரேஸ் எடுக்காமல் 3 வருடத்தில் (paper published பண்ணாமலே) PhD எடுக்கினம், எடுத்தவை இருக்கினம்.

கனடாவிலும் அமெரிக்காவிலும் எடுக்கலாம். இங்கிலாந்தில்.. பொதுவாக.. உங்கள் இளமானிப் பட்டத்தில் முதல் வகுப்பில் சித்தியும்.. துறை மாறாமலும் இருந்தால்.. முதுமானிப் பட்டம் இன்றி கலாநிதிப் பட்டம் படிக்கலாம். இளமானியில் இருந்து துறைமாறி செல்ல வேண்டின்.. புதிதாக நுழைய விரும்பும் பகுதியில் முதுமானிப் பட்டம் அவசியம். முதுமானிப் பட்டம் என்பது குறித்த துறையில் கூடிய பரீட்சயத்தை பெற்றுக் கொள்வதே அன்றி.. அங்கொன்றும் விசேடம் கிடையாது. மேலும்.. ஆராய்ச்சிக்கு உதவியாக ஆராய்ச்சி முறைகளை போதிப்பார்கள். ஒரு சுயாதீன ஆராய்ச்சி நடத்தி கட்டுரை சமர்ப்பிக்க கேட்பார்கள். அவ்வளவும் தான்.

கலாநிதிப் பட்டத்தை இங்கிலாந்தில் இரண்டு வழிகளில் பெறலாம்..

1. conventional way PhD.

2. New route PhD.

இரண்டிற்கும் நல்ல முதுமானிப் பட்டம் அல்லது முதல்நிலை வகுப்புச் சித்தியோடு.. இளமானி (Hons) சித்தி இருந்தால் படிக்க முடியும். நான் அறிந்த வரை விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்காமல் யாரும் கலாநிதிப் பட்டம் பெற்றதை காணவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1.கனேடிய மண்ணில் காவல்துறையில் அதிகாரி ஆகிய நிசாந்தன் துரையப்பாவுக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.காவல்துறைக்குள்ளும் நிறையவே தமிழர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களும் கால கிரமத்தில் நல்ல,நல்ல பதவிகளுக்கு உயர்த்தபடும் அளவுக்கு தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள் என்று நம்புன்றேன்..

2.பிரான்ஸ் நாட்டில் கலாநிதிப் பட்டம் பெற்ற பெண்பிள்ளைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Edited by யாயினி

( கனடாவில் காவல்துறை நிர்வாகம் மாநகரசபை அளவில் இயங்கும் அமைப்பு. இதற்கான பணம் வீட்டு வரியில் இருந்து பெறப்படும்)

தனியே மாநகரங்கள் மாத்திரம் காவல்துறையைக் கொண்டிருக்கவில்லை.

மத்திய, மாநில காவல்துறைகளும் கனடாவில் உள்ளன.

ஆர்.சிம்.எம்.பி மத்திய காவல்துறை

ஓ.பி.பி. ஒன்ராரியோ மாநிலக் காவல்துறை

நிசாந்தன் துரையப்பா ஆய்வாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநகரசபை கூட தனியான ஒரு காவல்துறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் மூன்று மாநகரசபைகளுடன் இணைந்ததான கால்ரன் பிராந்திய காவல்துறையே அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகிறது.

நிசாந்தன் துரையப்பா தொடர்பான மேலதிக தகவல்கள்

http://www.hrps.on.ca/Locations/Milton/Pages/default.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போன்றவர்கள் பற்றிய செய்திகள் எமது இளையோர் மத்தியில் செல்லும்பொழுது :

- தாமும் நேர்வழியில் முன்னேறலாம் என்ற உணர்வு ஏற்படும்

- தீய வழிகளில் செல்வதை குறைக்கும்/தடுக்கும்

- எமது இனத்திற்கு பெருமை சேர்க்கும்

- ....

அந்தவகையில்

டிசம்பர் 21ந்திகதி பட்டம் பெற்ற இந்தப்பிள்ளையை டிசம்பர் 31ந்திகதி எமது விழாவுக்கு கௌரவ விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியிருந்தோம்.

அவரைக்கௌரவப்படுத்தும் அதேவேளை எமது அடுத்த சந்ததிக்கு ஊக்குவிப்பாகவும் இருப்பதற்காகவே இது செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் உணர்வுள்ளவரா ? சிலர் தமிழ் பெயரை கொண்டிருப்பார்கள் பேசினால் தமிழில் பேசமாட்டார்கள் அப்படியானவர்களை தமிழர் என்று சொல்லி என்ன பிரயோசனம். :(

இந்தியாக்காரனும் பாக்கிஸ்தானியும் மற்ற நாட்டவரும் பெரும்பாலும் தமது நாட்டவரைக்கண்டால் அவர்கள் மொழியிலேயே பேசுவார்கள் ஆனால் எமது இனத்தில் சிலர் அப்படியல்ல தமிழில் பேசினால் அவர்கள் ஆங்கிலமோ அல்லது அந்த நாட்டு மொழியையே பேசுவோரை பார்த்திருக்கின்றேன். ^_^

வீட்டு வரி மாற்றிவிடுங்கள்

நான் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் அங்கு செலவிட்டேன்.

அது எதற்காக எனப்புரிந்தால்.....???

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புதுக் கதை தம்பி ரதி :rolleyes: தமிழாக்கள் கனபேர் பார்த்தா கறுப்பு.........

தமிழர்களின் நிறம் மத்திமமான கறுப்பு..! கலர் உள்ளவர்களெல்லாம் கலப்பு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரியை திசை மாத்திவிடாதீர்களப்பா

நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட.. :icon_idea:

விசுகுவின் மகள் அல்லது சகோதரியாகவிருக்கலாம் எப்படியோ தமிழன் என்ற வகையில் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

இளைய தலைமுறையினர் பல்துறைகளிலும் பரிணாமிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

பல துறைகளில் எம்மவர்கள் முன்னேற தடையாக இருப்பதில் 'இனவாதமும்' ஒன்று. அதற்கு காவல்துறையும் விதிவிலக்கு அல்ல.

காவல்துறையிலும் கூட பல தடைகள் உள்ளன. பல காவல்துறை உறுப்பினர்கள் 'பரம்பரையாக' வேலைசெய்கிறனர். எனவே அவர்கள் வேற்று இனத்தவர்களை விரும்புவதில்லை. எம்மவர்கள் உட்பட புதியவர்கள் புதிய இடங்களிலேயே இல்லை புதிய துறைகளிலேயே கடின உழைப்பு மூலம் மட்டுமே முன்னேற கூடியதாக உள்ளது. பல இடங்களில் திறமைகள் இருந்தும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.

எனவே நாம் ஒவ்வொரு தடையையும் வெற்றிகரமாக உடைப்பது மூலம் அடுத்த தலைமுறைக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் நிறம் மத்திமமான கறுப்பு..! கலர் உள்ளவர்களெல்லாம் கலப்பு..! :lol:

கலியாணம் பேச்சு ஓரளவு சரிவந்து கொண்டிருக்கிற இந்த நேரம்.

இப்படியொரு குண்டை தூக்கி போடுறீங்கள்?

இனி என்ன கலப்பு என்பதை அறிய நான் என்ன செய்யிறது?

கலியாணம் பேச்சு ஓரளவு சரிவந்து கொண்டிருக்கிற இந்த நேரம்.

இப்படியொரு குண்டை தூக்கி போடுறீங்கள்?

இனி என்ன கலப்பு என்பதை அறிய நான் என்ன செய்யிறது?

இசைக்கலைஞன் பொறாமையில் எழுதினவர் :wub: அதைப் பற்றிக் கவலை வேண்டாம் தம்பி :) அப்படி கலப்பு, கிலப்பு ஒன்றுமிராது.ஓகே!

விசுகுவின் மகள் அல்லது சகோதரியாகவிருக்கலாம் எப்படியோ தமிழன் என்ற வகையில் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

இளைய தலைமுறையினர் பல்துறைகளிலும் பரிணாமிக்க வேண்டும்.

விசுகரின் மகளா................ :rolleyes: அப்படியென்றால் விசுகு தாத்தாவா...........................................

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் பேச்சு ஓரளவு சரிவந்து கொண்டிருக்கிற இந்த நேரம்.

இப்படியொரு குண்டை தூக்கி போடுறீங்கள்?

இனி என்ன கலப்பு என்பதை அறிய நான் என்ன செய்யிறது?

இப்ப எல்லாம் டி.என்.ஏ பரிசோதனை செய்தால் உங்கள் மூதாதையர் எந்தக் கண்டம் என்று சொல்லிவிடுவார்கள்..! :wub:

இசைக்கலைஞன் பொறாமையில் எழுதினவர் :wub: அதைப் பற்றிக் கவலை வேண்டாம் தம்பி :) அப்படி கலப்பு, கிலப்பு ஒன்றுமிராது.ஓகே!

அலையக்கா.. எனது மூதாதையர் ஆபிரிக்கா..! :icon_idea:அதான் பொறாமை..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் மகளா................ :rolleyes: அப்படியென்றால் விசுகு தாத்தாவா...........................................

நன்றி தம்பி

உன் ஆதங்கத்தை எல்லோரும் புரிந்து கொள்ளணும்

நன்றி தம்பி

உன் ஆதங்கத்தை எல்லோரும் புரிந்து கொள்ளணும்

:lol: :lol:

நான் அறிந்த வரை விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்காமல் யாரும் கலாநிதிப் பட்டம் பெற்றதை காணவில்லை..! :):icon_idea:

நெடுக்கர் சொன்னது போல் நல்ல திறமையான இளமாணிப் பட்டம் இருந்ததால் நேரடியாக PhD செய்யலாம். ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவிடாத போதும், மாநாடுகளில் கலந்துகொண்டு தம் ஆராய்ச்சியைப்பற்றி உரை நிகழ்த்தியோ அல்லது போஸ்ரர் விளக்கம் செய்தோ பட்டம் பெறலாம். எனினும் எந்த பல்கலைக்கழகம் பட்டமளிக்கின்றது என்பது முக்கியம். நானும் இந்த துறையில் தான் இருக்கிறேன் என்பதால் சற்று விஷயங்கள் புரியும்.

நெடுக்கர், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். எம்மவருக்கு பணத்தேவைகள் அதிகம் என்பதாலும் பெற்றோர் உதவி புலம் பெயர்ந்தவர்களுக்கு இல்லாததனாலும் மேல்படிப்புகளுக்கு செல்ல தயக்கம் இருப்பது தான்.

பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் (P.H.D) பெற்ற

Grade de Docteur à l’université Pierre et Marie Curie

Spécialité : Bio-organique/Spectrochimie

Ecole doctorale : iViV

ஈழப்பெண்ணின் பரீட்சையின் போதும் பட்டமளிப்பின்போதும் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்தப் பெண் உங்களுக்கு நெருங்கியவராக இருக்க வேண்டும். வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள். நன்றி.

பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் (P.H.D) பெற்ற

Grade de Docteur à l’université Pierre et Marie Curie

Spécialité : Bio-organique/Spectrochimie

Ecole doctorale : iViV

ஈழப்பெண்ணின் பரீட்சையின் போதும் பட்டமளிப்பின்போதும் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

6 பேரின் 3 மணித்தியால இடைவிடாக்கேள்விகளுக்கும் பதிலளித்து பட்டத்தை தனதாக்கிக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவுதான் படித்தாலும் இதையும் தாண்டவேண்டுமே என்று.

மனது சந்தோசத்தால் பெருமிதம் கொண்டது. எமக்குள்ளும் ஒன்று ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டது என்று.

***அந்த நேரத்திலும் என் தம்பி நெடுக்கை நினைத்துக்கொண்டேன்.

குறிப்பு : பிரான்சில் முதலாவது கலாநிதிப்பட்டம் பெற்றவர்(P.H.D) என்பது எனது கணிப்புத்தான்(வேறு படிப்பில் சிலவேளை வேறு எவராவது இருக்கலாம்)

2000ஆம் ஆண்டிலேயே பிரான்சில் ஓரு தமிழ்ப்பெண் மருத்துவ வைத்தியராகப் படித்து முடித்திருந்தார். அவர்கள் வெளி மாநிலம் என்பதாலும் தமிழர்களோடு அவ்வளவு பரிச்சயம் இல்லாததாலும் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அப்பெண்ணும் நிசாந்தன் போல் சிறு வயதிலேயே பிரான்சிற்கு வந்து விட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் ஒரு தமிழர்கூட இருக்கவில்லை. முழுக்க முழுக்க பிரெஞ் காரர்களே இருந்தார்கள். அப்பெண் அப்போதே தன்னோடு கூடப் படித்த பிரெஞ் நண்பரைத் திருமணம் முடித்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

2000ஆம் ஆண்டிலேயே பிரான்சில் ஓரு தமிழ்ப்பெண் மருத்துவ வைத்தியராகப் படித்து முடித்திருந்தார். அவர்கள் வெளி மாநிலம் என்பதாலும் தமிழர்களோடு அவ்வளவு பரிச்சயம் இல்லாததாலும் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

அப்பெண்ணும் நிசாந்தன் போல் சிறு வயதிலேயே பிரான்சிற்கு வந்து விட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் ஒரு தமிழர்கூட இருக்கவில்லை. முழுக்க முழுக்க பிரெஞ் காரர்களே இருந்தார்கள். அப்பெண் அப்போதே தன்னோடு கூடப் படித்த பிரெஞ் நண்பரைத் திருமணம் முடித்திருந்தார்.

நன்றி தமிழிச்சி தகவலுக்கு

மருத்துவப்படிப்பு படித்து வைத்தியராக வேலை செய்பவர்கள் பலர் உள்ளனர் இங்கு.

இது போன்று செய்வதாக நாங்கள் விளம்பரம் செய்ததைப்பார்த்து வேறு சிலரும் தகவல்களுடன் வந்திருந்தனர். ஆனால் அவர்களே மருத்துவதத்துறையில் மேலும் முன்னேறி ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்து doctorat (PH.D) பட்டத்தை வென்றவர் இவர் ஒருவர்தான் என வாழ்த்திச்சென்றனர்.

(இவரை அழைழப்பதற்காக நாம் அவரது வீட்டுக்கு சென்றபோது அவரது அண்ணன்மார் 3 பேர் ஏன் தம்மை கூப்பிடவில்லை என பகிடியாகக்கேட்டனர். அவர்கள் மூவரும் பொறியியலாளர்கள் -( கட்டிடம் - கணணி - மெக்கானிக்கல்). ஆனால் அது எமது இலக்ககல்ல.

அடுத்த ஆண்டுக்கு பலர் இதற்குள் வரலாம். ஏனெனில் தற்போது மேலும் தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இது தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.