Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க. நாள் முழுக்க தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07-nakkeeran-ofc-attak-300.jpg

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள் முழுக்க தாக்குதல்!

சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்

நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எரித்தனர்.

சிதம்பரத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

சாத்தூரில் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பஸ்நிலையம் அருகே வாரப்பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எம்எல்ஏ பரஞ்ஜோதி தலைமையிலும், வேலூரில் அமைச்சர் விஜய் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் டவுன், அரூர் மற்றும் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குன்னூரில் நகராட்சி சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலுவலகம் முற்றுகை... தாக்குதல்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர். பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது.

மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர்.

நக்கீரன் அலுவலகத்துக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.

நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்.எல்.ஏ

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவல.க வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.

அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

-தற்ஸ் தமிழ்-

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nakkheeranbook-3.jpg

nakkheeranbook-4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் மீது தாக்குதல்- கருணாநிதி கண்டனம்

07-karuna300.jpg

சென்னை: நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் பத்திரிகை பிரதிகளை மாநிலம் முழுக்க எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதிமுகவினர்.

அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து எதுவும் வெளிப்படையாக கருத்து கூறவில்லை.

இந்த நிலையில், நக்கீரன் அலுவலகத்தின் மீது இன்று அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும், நக்கீரன் பிரதிகளை தீயிட்டுக் கொள்ளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதிமுகவினரின் இந்த செயலுக்கு திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கைப் பார்க்கக் கூடாது", என அவர் கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/01/07/tamilnadu-karunanidhi-condemns-attack-on-nakkheeran-office-aid0136.html

வை திஸ் கொலைவெறி? :o:blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வை திஸ் கொலைவெறி? :o:blink:

ஐயர் பெண்ணை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர் என்று நக்கீரன் எழுதினால்... தொண்டன் சும்மா இருப்பானா? :rolleyes:

"மீசை கார நண்பா! உனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி டா"!!# நக்கீரன் கோபால்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கைப் பார்க்கக் கூடாது", என அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தது சரியானதாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோட நக்கீரனின் புளுகலுக்கு முற்றுபுள்ளி வைப்பதோடு நக்கீரனுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்fடும்,

நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய வேளச்சேரி எம்எல்ஏ அசோக்... நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்....

-தற்ஸ் தமிழ்-

wtf?:lol:

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/8U4DRa1SsuU

  • கருத்துக்கள உறவுகள்

2012

<a href="http://adrasaka.blogspot.com.au/2012/01/blog-post_5634.html">நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

Tamil_News_large_381227.jpgமுதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன் சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..

நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.

சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு..

இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.

சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.

சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்

jaya-nakkeeran-1.jpg

நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு...

நக்கீரனில் வந்த செய்தி...

nakkheerannews.jpg

nakkheerannews2a%20%281%29.jpg

nakkheerannews2a.jpg

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20077.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20076.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20075.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20074.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20073.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20072.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20071.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20070.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20069.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20068.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20067.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20066.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20065.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20064.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20063.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20062.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20061.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20060.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20059.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20058.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20057.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20056.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20055.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20054.jpg http://www.nakkheeran.in/AllImages/Gallerys/20053.jpg

http://adrasaka.blogspot.com.au/2012/01/blog-post_5634.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.