Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி தாத்ஸ் வாழ்க :D

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையில் விளங்கவில்லை என்ட கருத்து பிழையாக இருந்தால் மன்னிக்கவும்...மெசப்பொத்தேமியாவும்,சகாறா அக்காவும்,கு.சா அண்ணாவும் சேர்ந்து போக்குவரத்தின் பரிசுத் திட்டத்தினை தொடரப் போகிறார்களா? அப்படியாயின் போக்குவரத்து கொடுத்த மாதிரி அவர்களும் ஒவ்வொரு மாதமும் ஒருவரை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கப் போகிறார்களா?...அகோதாவும்,சுபேசும் சேர்ந்து அதைத் தானே செய்கிறார்கள் பிறகு எதற்கு நீங்கள் தனியாக செய்கிறீர்கள்?...உங்களுக்கு செய்ய விருப்பம் என்டால் அவர்களோடு சேர்ந்து செய்யலாம் தானே?...இப்படி ஆளாளுக்கு யாழில் பரிசு கொடுக்க வெளிக்கிட்டால் யாழ் என்னவாகும்?...எல்லோரும் காசைக் கொடுக்கவும்,பரிசை தேர்ந்தெடுக்கவும் வெளிக்கிட்டால் யார் யாழில் எழுதுவது?...எனக்கு என்னவோ இது யாழில் பிரிவினையை தூண்டும் போல இருக்கிறது...இது எனது கருத்து தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ ரதி.... இது இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை. எங்கள் கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறோம். இங்கு பிளவு பிரிவு என்பதற்கு இடமில்லை. எங்களுடைய விருப்புகளைத் தெரிவித்திருக்கிறோமே தவிர வேறு எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை. அடுத்த ஆண்டுத் திட்டமிடலுக்காகத்தான் இங்கு பதிவிட்டேன் இன்னும் மூன்று மாதங்கள் முழுமையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி மேலதிகமாக தெளிவு பெறுவதற்கு...

  • தொடங்கியவர்

எனக்கு வாழ்த்துக்கள் தந்தவர்களுக்கும் ,தாங்களாகவே உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி. உடனே பதில் தர முடியாமைக்கு மன்னிப்பீர்கள்தானே ???போக்குவரத்து அவர்களுக்கு அவரைமாதிரியே பதில்கொடுக்கலாமா அல்லது நான் புதிது என்பதால் கொஞ்சம் வேறுபாணியில் எழுதுவதா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் என் கேள்விகளுக்கு மற்றவர்களே பதிலும் தந்துவிட்டனர். நாங்கள் இங்கு சேவை செய்ய வரவில்லை என எழுதியிருந்தீர்கள் போக்குவரத்து. சேவை என்பதை எப்படி வரையருக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா? உதவிசெய்பவர்கள் நேரடியாகவே தாயகத்துக்கு வளங்கமுடியும்தான்.ஆனால் நான் யாழ் இணைய எழுத்துகளால் கவரப்படுத்தான் உங்களுடன் இணைந்தேன். நான்தரும் உதவி மற்றவருக்குப் சரியான முறையில் பயன்படவேண்டும் என்றமுறையிலும் இல்லாதமக்களுக்கு உதவும்போது கிடைக்கும் மனநிறைவே இன்னும் கொடுக்கத் தூண்டும் என்பதாலும்தான் என்யோசனையை முன்வைத்தேன். இதைவிட நினைவுப்பரிசு ஒருவருக்கு மகிழ்வைத் தருமென்று நான் எண்ணவில்லை. மற்றப்படி என்னை முன்னிலைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மற்றப்படி கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

பொற்கிளி(ழி) முயற்சி எவ்வாறு ஆரம்பித்தது என்பதையும், ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளையும், உங்கள் ஏனைய சந்தேகங்களுக்குமான பதில்களையும் இங்கு எழுதப்பட்டுள்ள முதலாவது கருத்து தொடக்கம் ஒவ்வொன்றாக வாசித்தால் உங்களுக்கு விளங்கும்.

2012ம் ஆண்டின் பின் எமது நிறுவனத்தின் பிரசன்னம் யாழ் இணையத்தில் இருக்காது. இந்த பொற்கிளி(ழி) முயற்சி அதிக வரவேற்பை பெற்றதால் யாழ் இணையத்திற்கு நன்மை கிடைக்கும் நோக்கில் இந்த முயற்சியை 2013இலும் தொடர்வதற்கு ஏதாவது நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் ஆதரவை கேட்டோம்.

உங்கள் அனுசரணைக்கு நன்றி. வல்வை சகாறா, குமாரசாமி ஆகியோர் உங்கள் முயற்சிக்கு உதவுவதாக கூறியுள்ளார்கள். அவர்களுடன் தகவல்களை பரிமாறி உங்கள் அனுசரனையை மேற்கொள்ளுங்கள். அனுசரணை உங்களுடையது எனவே, உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். 2012 முடிவு வரை எமது பிரசன்னம் யாழ் இணையத்தில் தொடரும். எனவே, அந்த இடைப்பட்ட காலத்தில் 2013 பொற்கிளி(ழி) முயற்சியை தொடர்வதற்கான உதவிகள், ஆலோசனைகள் ஏதாவது தேவைப்பட்டால் கேளுங்கள், உதவி செய்கிறோம். நன்றி

சூர்யாவின் ஒரு கோடி பார்த்தமாதிரி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துக்கள் தந்தவர்களுக்கும் ,தாங்களாகவே உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி. உடனே பதில் தர முடியாமைக்கு மன்னிப்பீர்கள்தானே ???போக்குவரத்து அவர்களுக்கு அவரைமாதிரியே பதில்கொடுக்கலாமா அல்லது நான் புதிது என்பதால் கொஞ்சம் வேறுபாணியில் எழுதுவதா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் என் கேள்விகளுக்கு மற்றவர்களே பதிலும் தந்துவிட்டனர். நாங்கள் இங்கு சேவை செய்ய வரவில்லை என எழுதியிருந்தீர்கள் போக்குவரத்து. சேவை என்பதை எப்படி வரையருக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா? உதவிசெய்பவர்கள் நேரடியாகவே தாயகத்துக்கு வளங்கமுடியும்தான்.ஆனால் நான் யாழ் இணைய எழுத்துகளால் கவரப்படுத்தான் உங்களுடன் இணைந்தேன். நான்தரும் உதவி மற்றவருக்குப் சரியான முறையில் பயன்படவேண்டும் என்றமுறையிலும் இல்லாதமக்களுக்கு உதவும்போது கிடைக்கும் மனநிறைவே இன்னும் கொடுக்கத் தூண்டும் என்பதாலும்தான் என்யோசனையை முன்வைத்தேன். இதைவிட நினைவுப்பரிசு ஒருவருக்கு மகிழ்வைத் தருமென்று நான் எண்ணவில்லை. மற்றப்படி என்னை முன்னிலைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மற்றப்படி கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

புதியவராக இணைந்த உங்களைப்பற்றி இருந்த மதிப்பை இத்தகைய வாசகத்தின் மூலம் இழந்துவிட்டீர்கள் தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை தான் நானும் நின்னைதேன் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்துக்கு பாடு எழுதிறவங்க எல்லாம் நல்லவங்களும் இல்லை

கள்ளுக்கொட்டில இருந்து பாட்டு படிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களும் இல்லை

சிலவேளை பகிடியாக கேட்டிருக்க மாட்டாரா? புதிது என்பதால் முகக்குறி போடாமல் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையில் விளங்கவில்லை என்ட கருத்து பிழையாக இருந்தால் மன்னிக்கவும்...மெசப்பொத்தேமியாவும்,சகாறா அக்காவும்,கு.சா அண்ணாவும் சேர்ந்து போக்குவரத்தின் பரிசுத் திட்டத்தினை தொடரப் போகிறார்களா? அப்படியாயின் போக்குவரத்து கொடுத்த மாதிரி அவர்களும் ஒவ்வொரு மாதமும் ஒருவரை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கப் போகிறார்களா?...அகோதாவும்,சுபேசும் சேர்ந்து அதைத் தானே செய்கிறார்கள் பிறகு எதற்கு நீங்கள் தனியாக செய்கிறீர்கள்?...உங்களுக்கு செய்ய விருப்பம் என்டால் அவர்களோடு சேர்ந்து செய்யலாம் தானே?...இப்படி ஆளாளுக்கு யாழில் பரிசு கொடுக்க வெளிக்கிட்டால் யாழ் என்னவாகும்?...எல்லோரும் காசைக் கொடுக்கவும்,பரிசை தேர்ந்தெடுக்கவும் வெளிக்கிட்டால் யார் யாழில் எழுதுவது?...எனக்கு என்னவோ இது யாழில் பிரிவினையை தூண்டும் போல இருக்கிறது...இது எனது கருத்து தான்

ரதி,

போக்குவரத்து 2012ம் ஆண்டு அறிமுகப் படுத்திய பொற்கிளி(ழி) விருது என்பது மாதா மாதம் கொடுக்கப் பட்டு வந்தது. அதனையே... இப்போ, 2013ற்காக மெசொபொத்தேமியா சுமேரியரும், வல்வை சகாறாவும், குமாரசாமி அண்ணாவும்... தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றார்கள்.

அகூதாவும், சுபேஸும் நடாத்தும் விழாவானது முழு ஆண்டுக்கு ஒரு முறை, எங்காவது ஒரு மண்டபத்தை... வாடகைக்கு எடுத்து, எல்லோரும்... பங்குபற்றக் கூடியதான... கற்பனையான, கலக‌லப்பான‌ நிகழ்ச்சி. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ ரதி.... இது இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை. எங்கள் கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறோம். இங்கு பிளவு பிரிவு என்பதற்கு இடமில்லை. எங்களுடைய விருப்புகளைத் தெரிவித்திருக்கிறோமே தவிர வேறு எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை. அடுத்த ஆண்டுத் திட்டமிடலுக்காகத்தான் இங்கு பதிவிட்டேன் இன்னும் மூன்று மாதங்கள் முழுமையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி மேலதிகமாக தெளிவு பெறுவதற்கு...

அப்படியாக அக்கா பொறுத்திருப்போம்...எனக்கு இது நல்லதிற்கு இல்லை என்ட மாதிரி படுகுது

ரதி,

போக்குவரத்து 2012ம் ஆண்டு அறிமுகப் படுத்திய பொற்கிளி(ழி) விருது என்பது மாதா மாதம் கொடுக்கப் பட்டு வந்தது. அதனையே... இப்போ, 2013ற்காக மெசொபொத்தேமியா சுமேரியரும், வல்வை சகாறாவும், குமாரசாமி அண்ணாவும்... தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றார்கள்.

அகூதாவும், சுபேஸும் நடாத்தும் விழாவானது முழு ஆண்டுக்கு ஒரு முறை, எங்காவது ஒரு மண்டபத்தை... வாடகைக்கு எடுத்து, எல்லோரும்... பங்குபற்றக் கூடியதான... கற்பனையான, கலக‌லப்பான‌ நிகழ்ச்சி. :)

தான் தொடர்ந்து பரிசு வழங்கப் போவதாக அகோதா எங்கேயோ எழுதியிருந்தார் என்று நான் எங்கேயோ வாசித்த மாதிரி இருந்தது :unsure:

கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

கு .சா உங்களையும் தன் கள்ளடிக்கும் ப்ழக்கத்திற்கு சேர்க்காது இருந்தால் சரி ... :D

நீங்கள் இங்கு இவர்களுடன் சேர்ந்ததற்கு அதுதானே நோக்கம் கு.சா.. :lol: :lol:

[size=5]புதியவராக இணைந்த உங்களைப்பற்றி இருந்த மதிப்பை இத்தகைய வாசகத்தின் மூலம் இழந்துவிட்டீர்கள் தோழர். [/size]-வல்வை சகாறா

அவர் பகிடியாகத் தானே கேட்டவர்... பிறகென்ன சீரியஸாக எடுத்துக் கொண்டு...

[size=5]கு.சாவுடன் பகிடி விடாதவர் பகிடியெல்லாம் பகிடியல்ல- அவருடன் கூடி[/size]

[size=5]குடிக்காத குடியெல்லாம் குடியல்ல[/size] - நக்கினார்க்கு இனியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வாழ்த்துக்கள் தந்தவர்களுக்கும் ,தாங்களாகவே உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி. உடனே பதில் தர முடியாமைக்கு மன்னிப்பீர்கள்தானே ???போக்குவரத்து அவர்களுக்கு அவரைமாதிரியே பதில்கொடுக்கலாமா அல்லது நான் புதிது என்பதால் கொஞ்சம் வேறுபாணியில் எழுதுவதா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் என் கேள்விகளுக்கு மற்றவர்களே பதிலும் தந்துவிட்டனர். நாங்கள் இங்கு சேவை செய்ய வரவில்லை என எழுதியிருந்தீர்கள் போக்குவரத்து. சேவை என்பதை எப்படி வரையருக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா? உதவிசெய்பவர்கள் நேரடியாகவே தாயகத்துக்கு வளங்கமுடியும்தான்.ஆனால் நான் யாழ் இணைய எழுத்துகளால் கவரப்படுத்தான் உங்களுடன் இணைந்தேன். நான்தரும் உதவி மற்றவருக்குப் சரியான முறையில் பயன்படவேண்டும் என்றமுறையிலும் இல்லாதமக்களுக்கு உதவும்போது கிடைக்கும் மனநிறைவே இன்னும் கொடுக்கத் தூண்டும் என்பதாலும்தான் என்யோசனையை முன்வைத்தேன். இதைவிட நினைவுப்பரிசு ஒருவருக்கு மகிழ்வைத் தருமென்று நான் எண்ணவில்லை. மற்றப்படி என்னை முன்னிலைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மற்றப்படி கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

வணக்கம் சுமேரியர்! மற்றவர்கள் அத்தாட்சிப்படுத்திய பின்னர்தான் நான் இந்த உதவித்திட்டத்தில் இணையவேண்டுமென்ற உங்கள் கோரிக்கையின்மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.அடுத்தது எனக்கும் என்போன்றவர்களுக்கும் எம் உடன்பிறப்புகளுக்கு உதவிசெய்வதற்க்கு நிறையவே வழிகள் இருக்கின்றன.உங்கள் இந்த ஆலோசனைதான் எமக்கு ஒருவழியென்று நினைத்தால் அது உங்கள் முட்டாள்த்தனம்.

ஒவ்வொரு சிறு உதவிகள்மூலமும் யாழ்களம் பலப்படவேண்டும்.இதற்காகத்தான் உங்கள்திட்டத்திற்கு ஆதரவளித்தேன்.நான் ஒன்றும் இதுவரைகாலமும் உங்கள் வருகைக்காக காய்ந்து கிடக்கவில்லை.பொல்லு கொடுத்து அடிவாங்கிவிட்டேன்...நன்றி

எனது இந்த கருத்தை உங்கள் தனிமடலுக்கும் அனுப்பியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புதியவராக இணைந்த உங்களைப்பற்றி இருந்த மதிப்பை இத்தகைய வாசகத்தின் மூலம் இழந்துவிட்டீர்கள் தோழர்.

இதுல எங்க புதுசு பழசு வந்திச்சு ,புதுசா யாரும் வராம பெரிய மண்ணனை போட்டு பக்கத்தில குந்த்தியிருங்கோ :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]புதியவராக இணைந்த உங்களைப்பற்றி இருந்த மதிப்பை இத்தகைய வாசகத்தின் மூலம் இழந்துவிட்டீர்கள் தோழர். [/size]-வல்வை சகாறா

அவர் பகிடியாகத் தானே கேட்டவர்... பிறகென்ன சீரியஸாக எடுத்துக் கொண்டு...

அவர் நிச்சயம் பகிடியாக எழுதியிருந்தால் சகாராவின் கருத்துக்கு பதிலளித்திருக்கவேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நிச்சயம் பகிடியாக எழுதியிருந்தால் சகாராவின் கருத்துக்கு பதிலளித்திருக்கவேண்டும். :D

கூல் கு .சா . கொஞ்சம் ரைம் குடுங்கோ புதுசா வந்தவங்களை பயமுறுத்தாதீங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எல்லாரும் என்னை மனிச்சுக்கொள்ளுங்கோ. நான் பகிடிக்குத்தான் எழுதினனான். எனக்கு இரண்டுநாளும் சரியான வேலை.அதோட எனக்கு இன்னும் யாழ்களம் அத்துபடியாகவில்லை. அவசரத்தில தேடிப்பார்க்க நான் எழுதிய பக்கத்தையும் காணேல்லை. நிர்வாகம் நான் எழுதியதைத் தடை செய்துபோட்டினம் எண்டு நினைத்தேன். புதியவர்கள் அதிகசலுகை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது இதிலிருந்து தெரிகிறது. என்ர விதி இப்பிடி எல்லாம் நடக்கவேணும் எண்டு. மன்னிச்சுக்கொள்ளுங்கோ குமாரசாமியர். இப்பகூட ஒரு பக்கத்தைமட்டும் வாசித்துவிட்டுதான் பதில் எழுதிறன்.micaththai வாசித்துவிட்டுப் பிறகு வடிவா எழுதிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனம் நோகும் படி கருத்தெழுதி இருந்தால் மன்னிக்கவும் சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, நந்தன், எல்லாளமகாராசா உங்களுக்கு நன்றிசொல்லமாட்டன் அனால் சுண்டலுக்கு நன்றி :rolleyes: நான் எப்பொழுதுமே மிக இலகுவாக எல்லோருடனும் ஒன்றிவிடுவேன். அதனால் அதிக உரிமை எடுத்துக்கொண்டுவிட்டேன் என நினைக்கிறேன். நான் மிகத் துணிவானவள் என்று கூறுவர். என்னை ஒருநிமிடம் பதைக்க வைத்துவிட்டார்கள். பிழை என்னிலும்தானே. நான் ஏற்கனவே நான்கு தோணியில் கால்களை வைத்துவிட்டு நான்கிலும் இதுவரை தளராமல் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். நேரமின்மை காரணமாக தொலைக்காட்சி பார்ப்பதுகூட இல்லை. என் மின்னஞ்சலில் வந்த யாழ் இணைய மெயில் ஒன்றைத் திறந்து பார்த்ததால் பிடிச்சது சனி. எழுதவும் நேரமில்லாமல் எழுதாமல் விடவும் மனமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தாலும் யாழ் களத்தை வாசிப்பதும் அதில் எழுதுவதும் மனதுக்கு மகிழ்வைத் தருவதால் தொடர்ந்தும் வருவேன். தொடர்ந்தும் யாழின் பொற்கிளி விடயமாக துளசிக்குத்தான் கரைச்சல் தரப்போறன். கடைசிவரை பயந்து ஓட மாட்டேன்.

சுண்டல் நீங்கள் அனுப்பியதைப் பார்க்கமுன் நான் எழுதியதை அனுப்பியமைக்கு வருந்துகிறேன்.

மொசொபோத்தேமியா சுமேரியர்,

நீங்கள் பகிடியாக எழுதிய வரிக்குப் பின் 'ஸ்மைலி' அடையாளம் போடாததால் தவறான விளங்கம் தந்துள்ளது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எல்லோருக்கும் வாறதுதான். :)

சுமேரியர் அக்கா, பொற்கிழி விடயமா உங்களுக்கு உதவி செய்யுமளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது. :unsure: தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு சொல்ல முடிந்தால் சொல்லுறன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் யாழ் களத்தில ஜோக் அடிக்கிறதெண்டா சொல்லிட்டு அடிங்கப்பா அப்போ தான் நாங்கலாம் சிரிக்க முடியும்.... :D

  • தொடங்கியவர்

நேரமின்மை காரணமாக தொலைக்காட்சி பார்ப்பதுகூட இல்லை. என் மின்னஞ்சலில் வந்த யாழ் இணைய மெயில் ஒன்றைத் திறந்து பார்த்ததால் பிடிச்சது சனி. எழுதவும் நேரமில்லாமல் எழுதாமல் விடவும் மனமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தாலும் யாழ் களத்தை வாசிப்பதும் அதில் எழுதுவதும் மனதுக்கு மகிழ்வைத் தருவதால் தொடர்ந்தும் வருவேன். தொடர்ந்தும் யாழின் பொற்கிளி விடயமாக துளசிக்குத்தான் கரைச்சல் தரப்போறன். கடைசிவரை பயந்து ஓட மாட்டேன்.

அனுசரணை வழங்குவதை விட ஒருங்கிணைத்து பொற்கிளி(ழி)யை தொடர்வதே மிகவும் கடினமான பணி. இந்த முயற்சிக்கு உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஓரிருவர் முன் வந்தாலே இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். நாம் நேரப்பற்றாக்குறை காரணமாகவே 2013ம் ஆண்டில் இந்த முயற்சியை தொடர்வது கடினமாக உள்ளது. உங்களுக்கு நேரப்பற்றாக்குறை காணப்படுமாயின் இந்த முயற்சியை 2013இலும் நல்லபடியாக உங்களால் கொண்டு செல்ல முடியும் என்று நாம் நினைக்கவில்லை.

நேரம் கிடைக்கும் போது இந்த பகுதியில் எழுதப்பட்டுள்ள எல்லா கருத்துக்களையும் வாசியுங்கள். அத்துடன், வாழிய வாழியவே பகுதியில் உள்ள கடந்த எட்டு சுற்று பொற்கிளி(ழி)களையும், அங்கு எழுதப்பட்டுள்ள விமர்சனங்களையும் பாருங்கள். இவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பகிடிக்குத்தான் சொன்னனான் துளசி. உதவிக்கு ஏற்கனவே மூன்று பேர் முன்வந்திருக்கினம்தானே. பயம் வேண்டாம். போக்குவரத்து எனக்கு இந்த மாதம் முடியும் மட்டும் நேரம் தாங்கோ. என்னால் போட்டி தொடர்பான விடயங்களை வாசித்து உள்வாங்க நேரம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். முடியாவிடில் நான் அனுசரணை வழங்குவதோடு மட்டும் நிற்கிறேன். மற்றவர்களே நடாத்துங்கள். அப்பப்ப என்ன நடக்கிறது என்று அறியத்தந்தால் சரி. குமாரசாமி அண்ணை என்னில உள்ள கோபத்தில இனிமேல் இந்தப்பக்கத்துக்கு வாறதில்லை எண்டு முடிவெடுத்திட்டாரோ. ஆளையே காணேல்லை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.