Jump to content

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?


Recommended Posts

பதியப்பட்டது

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?

சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்.

விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது.

இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்கள்.

இந்த விளம்பரம் இப்போது இந்தியாவில் ஊடகங்களிலும் சமூக இணைய தளங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.ஐ.டி மாணவனின் விந்தணு தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருப்பது, அறிவு என்பது மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்கு மாறும் என்ற நம்பிக்கை சமூகத்தில் இருப்பதைக் காட்டுகின்றது.

'மருத்துவ ஆதாரங்கள் இல்லை'

இந்த நம்பிக்கைக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இருக்கிறதா என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம் கேட்டபோது, இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லையென்று அவர் தெரிவித்தார்.

நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம் மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் ஐஐடித் துறைச் சார்ந்தவர்கள் திறமையானவர்கள், மற்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்று கருதுவது தவறான அபிப்பிராயம் என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

சொந்த முயற்சி, சூழல் மற்றும் அனுபவங்கள் மூலம் மட்டுமே நுண்ணறிவுத் திறமையாளர்கள் உருவாவார்கள் என்பதற்கான ஆதரங்களே உள்ளதாகவும் டாக்டர் என்.பாண்டியன் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/science/2012/01/120118_fertility.shtml

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விந்தணு உருவாக்கம் என்பது ஆண்களில் விதைகளில் நிகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் spermatogenesis என்பார்கள். மூலவுயிர் கலங்கள் என்ற சாதாரண உடற்கலத்தை ஒத்த கலங்களில் இருந்து இழையுருப் பிரிவு (Mitosis) ஒடுக்கற் பிரிவு (Meiosis) போன்ற கலப் பிரிவுகளின் வாயிலாக விந்தணு அணுக்கள் எனப்படும் 23 நிறமூர்த்தங்களை (Chromosomes) கொண்ட விந்துகள் உருவாக்கப்படுகின்றன. இதில் ஓமோன்களின் தூண்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒரு நுகம்.. அல்லது முளைய முதற் கலத்தை ஆக்க பெண் முட்டையும் ஆணின் விந்தும் சேர்ந்தாக வேண்டும். பெண்ணின் முட்டை 23 நிறமூர்த்தங்களை காவ.. ஆணின் விந்து 23 நிறமூர்த்தங்களை காவ.. கருட்டலின் போது அவை சேர்ந்து 23 சோடி நிறமூர்த்தங்களாக சாதாரண மனித கலத்திற்குரிய நிறமூர்த்தங்கள் உருவாகின்றன.

இந்த நிறமூர்த்தங்களில் டி என் ஏ என்ற பெரிய சங்கிலி மூலக்கூறுகள் உண்டு. அவற்றில் ஜீன்கள் எனப்படும் பகுதிகள் உண்டு. அந்த ஜீன்களே எமது இயல்புகளுக்கு காரணம்.

ஒரு முதிர்ந்த ஆணிடம் இருந்து இயற்கையாக தோன்று விந்தணுக்களில் உள்ள நிறமூர்த்தங்கள் ஒருபோதும் அவர்களில் உள்ள உடற்கலங்களில் உள்ளது போன்று அமைவதில்லை. காரணம்.. விந்தணு ஒரு தோன்றும் நிகழ்வின் போது cross over என்ற செயற்பாட்டின் மூலம் ஜீன்கள்.. ஒரு நிறமூர்த்தத்தில் இருந்து அடுத்ததற்கு பகுதியாக பரிமாறப்படுவதன் மூலம்.. நிறமூர்த்த அடிப்படையில்.. தனித்துவமான விந்துகள் உருவாகின்றன.

ஆக ஒருவரின் வாழ்நாளில் அவர் சார்ந்த இயல்புகள் அப்படியே விந்தணுவில் அடக்கப்படுவதில்லை. மாறல்கள் நிகழ்கின்றன. அதுவும் இல்லாமல்.. ஒரு ஆணின் ஜீன் தனது இயல்பை வெளிப்படுத்த வேண்டின் பெண்ணின் அதே நிலைக்குரிய ஜீன் சோடியின் தன்மையும் அதற்கு இணங்கியாக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் ஆதிக்கமுள்ள ஜீனையும் அதேவேளை அதே சோடிக்குரிய ஆதிக்கமற்ற ஜீனை ஆண் கொண்டிருந்தாலும்.. பெண்ணின் இயல்பே வெளிப்படும். மேலும் மனிதரில் குறிப்பிட்ட பல இயல்புகள் பல ஜீன்களின் ஒருமித்த வெளிப்பாட்டாலும் உருவாகின்றன.. (மதிநுட்பம் போன்றவை.)

ஆக.. விந்துகளை மட்டும் வைச்சுக் கொண்டு இயல்புகளை பூரணமாக தீர்மானிக்க முடியாது. ஆனால் முட்டையையும் விந்தையும் தேர்வு செய்து கருக்கட்ட விட்டால் மட்டுமே நல்ல இயல்புகளைப் பெற முடியும்.

எனி முட்டை + விந்து ஜீன்கள் அப்படியே பொருந்தினாலும்.. நல்ல இயல்பை வெளிப்படுத்தி விடுமா என்று பார்ப்போம்..

நல்ல ஜீன்களை பெண்ணின் முட்டையூடும்.. ஆணின் விந்தோடும்.. தெரிவு செய்து இணைத்துக் கொண்டாலும்.. ஜீன்கள் சரியாக வெளிப்பட கலங்கள் வளரும் முளையச் சூழல் சரியாக அமைய வேண்டும். முளையம் சரியான சூழலில் வளராவிட்டால்.. ஜீன்களின் வெளிப்படுத்தலில் தவறுகள் மாற்றங்கள் நிகழலாம்.

மேலும்.. முளையமும் சரியாக வளர்ந்து.. இயல்பும் வெளிப்பட்டு குழந்தையும் பிறந்திட்டு என்று வையுங்கோ..! அதன் பின் சூழல் இயல்பை தீர்மானிக்கும். சூழல் என்பது நாம் வாழும் பூமியின் பெளதீகச் சூழல்.. இரசாயன.. சமூகச் சூழல்.. எமது உடலினுள் உள்ள சூழல்.. என்று பல.

எனி மூளைத் திறமை.. அல்லது திறனை எடுத்து கையாண்டால்.. அதைத் தீர்மானிப்பது ஜீன்கள் மட்டுமல்ல. சூழலும் தீர்மானிக்கிறது. அந்த வகையில்.. எல்லாம் ஜீன் அளவில் சரியாக அமைந்து சூழல் சரியான சூழல் அமையவில்லை என்றால் திறமையான ஜீன் சரியாக வெளிப்பட மாட்டாது.

ஆகவே இந்த விளம்பரங்கள்.. ஓரளவுக்கு மேலோட்டமாக கருத்தைக் காவி வர முடியுமே அன்றி.. எல்லாம் 100% சரியாக அமைய வேண்டின் இயற்கையின் தேர்வும்.. சூழலும் சரியாக அமைய வேண்டும்.

இன்னொரு விடயம்.. ஒரு குழந்தையை இவ்வாறு தேர்வு முறையில் உருவாக்க ஆகும் செலவு பல மடங்கு. அந்தச் செலவை மீதப்படுத்தி இயற்கை வழியில் குழந்தையை உருவாக்கின்.. அந்த பணம்.. குழந்தைக்கு நல்ல உணவு உட்பட்ட சூழலை ஏற்படுத்தி உள்ள இயல்புகள் சரிவர வெளிப்படுத்த வகை செய்ய முடியும். உள்ளதை வைச்சு உச்ச பயனை பெறலாம்.

எனவே சாதாரண மக்கள் இதற்கு ஆசைப்படுவதை விடுத்து.. உருப்படியா இயற்கை வழியில் சிந்தியுங்கோ.

அழகு.. கல்வி அறிவு.. விளையாட்டுத் திறன்.. கணணி அறிவு.. இதெல்லாம் வெறும் ஜீன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜீன்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இயற்கைச் சூழலே இன்றும் இருக்கிறது..! என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது நன்று.

இதனை படிப்பறிவு மூலம்.. தருவது.. நெடுக்ஸ்..! :):icon_idea:

Posted

intelligence என்பது பாதி பிறப்பிலும், பாதி வளரும் சூழ்நிலையிலும் தங்கியுள்ளது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

இப்படியான நல்ல அறிவுள்ள ஒரு ஆணுக்கு பிறக்கும் குழந்தைக்கு, 25 % தந்தையிடம் இருந்து வருவதற்கு சாத்தியம் உள்ளது. அம்மாவும் கொஞ்சம் அறிவுள்ளவராக இருக்க வேண்டும். வளர்க்கும் விதத்திலும் தங்கியுள்ளது.

Posted

இதனை படிப்பறிவு மூலம்.. தருவது.. நெடுக்ஸ்..! :):icon_idea:

விரைவில் பட்டறிவு ஊடாகவும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் :)

மேலே உள்ள உங்கள் அலசல் நான்றாக உள்ளது, நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

intelligence என்பது பாதி பிறப்பிலும், பாதி வளரும் சூழ்நிலையிலும் தங்கியுள்ளது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

இப்படியான நல்ல அறிவுள்ள ஒரு ஆணுக்கு பிறக்கும் குழந்தைக்கு, 25 % தந்தையிடம் இருந்து வருவதற்கு சாத்தியம் உள்ளது. அம்மாவும் கொஞ்சம் அறிவுள்ளவராக இருக்க வேண்டும். வளர்க்கும் விதத்திலும் தங்கியுள்ளது.

இப்படி 25% என்று சொல்ல முடியாது. காரணம்.. intelligence என்பதை வெறும் ஒரு சோடி ஜீன்கள் (allele) தீர்மானிப்பதில்லை. அந்த வகையில் 25% என்ற நிகழ்தகவு (probability) இங்கு பொருந்தி வர வாய்ப்புக் குறைவு. பல alleles தீர்மானிக்கும் இயல்புகளில் நிகழ்தகவும்.. அதாவது சாத்தியப்பாட்டுக்கான வாய்ப்பும் குறைகிறது. காரணம்.. இடைநிலை இயல்புகள் பல உருவாகின்றன. அதாவது continuous variaion.. நிலை காணப்படுகிறது.

எனவே.. மக்கள் பிறப்புரிமை (genetics) சார்ந்து இதனை சரியாக விளங்கிக் கொண்டு.. இப்படியான non- scientific claims ( நம்ம.. சிங்கள அரச விசுவாச அரசியல் புத்திசீவிகள் விடுறாங்களே.. ஆதாரமற்ற அறிக்கைகள்.. அதுகளும் இதுகளும் கிட்டத்தட்ட ஒன்று தான்..) பற்றி தெளிவாக அறிந்து கொண்டு.. ஏமாற்றங்களையும் பண.. மற்று கால விரயங்களையும் தவிர்ப்பது நன்று. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விளக்கம் நன்றிகள்...இப்படியே மருத்துவம் சம்பந்தமான தொடர் எழுதும் பகுதியையும் திரு.நெ.கா அ.வை ஆரம்பித்து வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..கொஞ்சமாவது இவை பற்றிய மருத்துவ ரீதியிலான அறிவு இருந்தாலும் நாமள் இது பற்றி எல்லாம் எழுதும் அளவுக்கு நமக்கு பொறுமை ரொம்ப கம்மி சார்..நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான் தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயங்களில் மருத்துவரீதியிலான விளக்கங்கள்,கட்டுரைகள் எழுதவேண்டும்.அவற்றுக்கு பூரண ஆதரவு கிடைக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கண்ணா விளக்கம் அந்த மாதிரி இருக்கு இதுக்கும் ஒரு திறமை இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விளக்கம் நன்றிகள்...இப்படியே மருத்துவம் சம்பந்தமான தொடர் எழுதும் பகுதியையும் திரு.நெ.கா அ.வை ஆரம்பித்து வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..கொஞ்சமாவது இவை பற்றிய மருத்துவ ரீதியிலான அறிவு இருந்தாலும் நாமள் இது பற்றி எல்லாம் எழுதும் அளவுக்கு நமக்கு பொறுமை ரொம்ப கம்மி சார்..நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான் தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயங்களில் மருத்துவரீதியிலான விளக்கங்கள்,கட்டுரைகள் எழுதவேண்டும்.அவற்றுக்கு பூரண ஆதரவு கிடைக்கும். :lol:

அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..! :):lol::icon_idea:

Posted

அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..! :):lol::icon_idea:

சளைக்காமல் எழுதுங்கள். அந்த அலை வரிசையில் உள்ளவர்கள் வாசிப்பார்கள், பயனடைவார்கள், யாழுக்கும் கிராக்கி கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பதிவைப் பார்கையில் 'பெர்னார்ட் ஷா' அவர்களது வாழ்க்கை வரலாறு தான் நினைவுக்கு வருகின்றது!

இவர் கொஞ்சம் அழகில்லாதவர் என்று ஒரு கருத்து! ஆனால் அவர் ஒரு அறிவாளியாகக் கருதப் பட்டவர்!

இவரை ஒரு அழகி சந்தித்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டாள்!

தனது அழகும், பெர்னார்ட் ஷாவின் அறிவும் உள்ள குழந்தையொன்று பிறந்தால், அந்தக் குழந்தைக்கு உலகில் நிகரே இருக்காது என்று கூறினாள்!

ஷா சற்று நேரம் யோசித்தார்!

அவள் இதில் யோசிக்க என்ன இருக்கின்றது என அவரைக் கேட்டாள்!

இல்லை, ஒரு வேளை குழந்தை, எனது அழகும், உனது அறிவும் கொண்டு பிறந்து விட்டால், அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்று தான் யோசிக்கின்றேன் என்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..! :):lol::icon_idea:

எதைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும் யார்,யாருக்கு எந்தப் பகுதியில் ஆர்வம் இருக்கிறதோ அதைத்தானே கூடுதலாக கவனத்தில் கொள்வார்கள். ஆனாலும் மருத்துவம் பற்றி எழுனாலும் அந்தப்பகுதி கூட மக்களுக்கு உபயோகமானதாக தான் எப்போதும் இருக்கும்..கண்டிப்பாக நீங்கள் மருத்துவ தொடர் எழுதினால் வாசிப்பார்கள்,பயன்பெறுவார்கள்..கிழமையில் ஒரு மருத்துவ தொடர்,அதனூடாக எழும் கேள்விகளுக்கு பதில் என்று போனால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது ..நான் கஸ்ரப்படுத்த இல்லை உங்கள் விருப்பம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள்.:)

Posted

விந்தணு உருவாக்கம் என்பது ஆண்களில் விதைகளில் நிகழ்கிறது.

பள்ளியில சொல்லி தந்தாங்க என்டு சும்மா பொய் சொல்லகூடாது சார் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளியில சொல்லி தந்தாங்க என்டு சும்மா பொய் சொல்லகூடாது சார் :icon_idea:

பள்ளில படிச்சு.. யுனில.. dissection எல்லாம் செய்து.. சோதனையும் பாஸாகிட்டன். நீங்க என்னடான்னா.. இப்ப தான் பள்ளில நிற்கிறியள்..! :lol::icon_idea::D

(18.. + மாணவர்கள்.. பெரியவர்கள் பார்வையிடலாம்.)

testis.jpg

(ஒப்பீட்டிற்கு உடலமைப்பியல் விளக்கப் படம்.. எளிமை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேசாப் பொருள் பக்கம் இனிமேல் அடல்ஸ் ஒன்லி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.... :lol::lol:

Posted

பேசாப் பொருள் பக்கம் இனிமேல் அடல்ஸ் ஒன்லி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.... :lol::lol:

மேற்குலக நாடுகளில் உள்ள எமது பிள்ளைகளுக்கோ எல்லா சட்டபூர்வமாக படிப்பிக்கின்றார்கள், பத்து வயதிலிருந்தே ^_^

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேசாப் பொருள் பக்கம் இனிமேல் அடல்ஸ் ஒன்லி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.... :lol::lol:

இந்த dissection ஐ பார்வையிட 18 வயது அவசியம் என்றில்லை. ஆனால் யுரியுப்பில் தரவேற்றம் செய்தவர்கள் இதனை அப்படி பகுத்திருப்பதால்.. அப்படி இட வேண்டி இருக்கிறதே அன்றி.. இந்த காணொளி மனித உடலமைப்பியல் (Human anatomy) சார்ந்தது..! விடயத்தை விளங்கக் கூடிய எவரும் பார்வையிடலாம். :):icon_idea:

Posted

நெடுக்ஸ்

மருத்துவ அறிவியல் சார்ந்த விடயங்களை எளிமையாக எழுதுகிறீர்கள். எளிமைப்படுத்தி எழுதும் பொழுது கூறும் விடயங்கள் இலகுவாக பலரைப் போய்ச் சேரும். தொடருங்கள்.

அறிவியல் / மருத்துவத்திற்கு ஒரு திரியும், உங்கள் துறை சார்ந்த மருத்துவம் சம்பந்தமான கேள்வி பதிலிற்கு இன்னுமொரு திரியும் திறந்தால் நன்று.

ஒவ்வொரு திரியிலும் வந்து தொடர்பில்லாமல் கேட்டால் நன்றாக இராது. உதாரணத்திற்கு Homeopathy சிகிச்சை முறைபற்றி கேள்வி கேட்க நினைத்தேன். அதனை இங்கு கேட்பது சரியில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைவதால் உழைப்பு வீணாகப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த dissection ஐ பார்வையிட 18 வயது அவசியம் என்றில்லை. ஆனால் யுரியுப்பில் தரவேற்றம் செய்தவர்கள் இதனை அப்படி பகுத்திருப்பதால்.. அப்படி இட வேண்டி இருக்கிறதே அன்றி.. இந்த காணொளி மனித உடலமைப்பியல் (Human anatomy) சார்ந்தது..! விடயத்தை விளங்கக் கூடிய எவரும் பார்வையிடலாம். :):icon_idea:

18 + எங்கயோ எழுதிக்கிடந்திச்சு.......சரி விடுங்கோ புரிந்து கொள்ளக் கூடிய எல்லாரும் பார்க்கலாம்..:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்களுக்கு எப்படி, நலம் எடுப்பது பற்றியும்... நெடுக்ஸ் விளக்கமாக சொல்ல வேணும் என்று, மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விரும்பிக் கேட்கின்றது.

Posted

ஆண்களுக்கு எப்படி, நலம் எடுப்பது பற்றியும்... நெடுக்ஸ் விளக்கமாக சொல்ல வேணும் என்று, மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விரும்பிக் கேட்கின்றது.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்களுக்கு எப்படி, நலம் எடுப்பது பற்றியும்... நெடுக்ஸ் விளக்கமாக சொல்ல வேணும் என்று, மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விரும்பிக் கேட்கின்றது.

அது ஐந்தறிவு.. 4 அறிவு விலங்குகளுக்குத் தான். அதுகளுக்கு பகுத்தறிவு இல்லை என்பதால்.. அதைச் செய்யினம். மனித ஆண்கள் நீங்கள் பகுத்தறிவோடு.. கட்டுப்பாட்டோடு நடப்பீங்கள் என்று தான் அதைச் செய்யுறதில்ல. வேணும் என்றால்.. vasectomy செய்து முக்கிய குழாய் ஒன்றை அறுத்து விடலாம்.

vasectomy1.gif

vasectomy-operation-thumb13366332.jpg

வசதி எப்படி..??! எப்படி அறுக்கிறாங்கன்று பாருங்க.. பார்த்திட்டு.. மகளிர் மேம்பாடு அப்படி.. இப்படின்னு.. வந்தீங்க.. கத்தக் கத்த அறுக்க வேண்டி வரும். சொல்லிப் புட்டன்..! அந்த வகையில் கட்டுப்பாட்டோட.. டாக்குத்தருக்கு எக்ஸ்ரா வேலை வைக்காம.. அன்பா நடந்துக்கோங்க...! எத்தனையோ இயற்கை முறையான வழிமுறைகள் இருக்கு.. அதைக் கையாண்டால் பிரச்சனை முடியுது. அதுக்காக எனி நான் contraception (குடும்பக் கட்டுப்பாடு அல்லது கருத்தடுப்பு) வகுப்பு எடுக்க முடியாது. நாங்கள் யுனில படிக்கும் போது மாணவிகள் கூர்ந்து அவதானித்த பாடம் அதுதான்..! நாங்க விளையாட்ட நினைக்க அவங்க சீரியஸா இருந்து விளக்கம் கேட்டு கேட்டு படிச்சாங்க. பெண்கள் எப்பவும்.. கில்லாடிகள். பின்வரப் போறது முன் கூட்டியே.. சிந்தித்து வைக்கிற ஆக்கள் என்று அப்ப விளங்கல்ல.. இப்ப விளங்குது. அவங்க உங்களை விட தங்கள் மேம்பாடு குறித்து நல்லா அறிஞ்சிருக்காங்க..! :D:):icon_idea:

Posted

பெண் பிள்ளைகள் பருவமடைவது தெரிந்த விடயம். தமிழர் கலாச்சாரத்தில் அதற்கான சடங்குகளும் உண்டு.

ஆண் பிள்ளைகள் பருவமடைவதை எப்படி அறிவது. அந்தக் காலப் பகுதியில் பெற்றோர்களின் பங்களிப்பு எதுவாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண் பிள்ளைகள் பருவமடைவதை எப்படி அறிவது. அந்தக் காலப் பகுதியில் பெற்றோர்களின் பங்களிப்பு எதுவாக இருக்க வேண்டும்.

ஆண் பிள்ளைகளுக்கு பருவ வயதில்.. மீசை.. தாடி முளைக்கும். குரல் உடைந்து மாறும். மேலும் பாலுறுப்பு வளர்ச்சிகள் தூண்டல்கள்.. துலங்கல்கள்.. நடக்கும்..! பெண் பிள்ளைகளிலும்.. அகம்.. புறம் என்னு மாற்றங்கள் இருக்குது தானே. அப்படி தான்..! ஏதோ தெரியாத மாதிரி எல்லாம் கேட்கிறாங்கப்பா..! :lol::D:icon_idea:

Posted

ஆண் பிள்ளைகளுக்கு பருவ வயதில்.. மீசை.. தாடி முளைக்கும். குரல் உடைந்து மாறும். மேலும் பாலுறுப்பு வளர்ச்சிகள் தூண்டல்கள்.. துலங்கல்கள்.. நடக்கும்..! பெண் பிள்ளைகளிலும்.. அகம்.. புறம் என்னு மாற்றங்கள் இருக்குது தானே. அப்படி தான்..! ஏதோ தெரியாத மாதிரி எல்லாம் கேட்கிறாங்கப்பா..! :lol::D:icon_idea:

புலம்பெயர் நாடுகளில் வகை உணவுகளை உண்பதால் இளையவர்களின் ஹோமோன்கள் அதிகூடிய வளர்ச்சியை குறுகிய வயதான காலத்திலேயே சந்திக்கின்றது எனக்கூறப்படுகின்றது. அதேவேளை தாயகத்தில் உள்ளது போன்று Organic உணவுவகைகள் இங்கே அதிக விலை :o

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.