Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உயிரின் அடுத்த நிலை என்ன..?

http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk

உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை...

அர்சுனா.. நீயும் நானும் இந்த உலகத்திற்கு புதியவர்கள் அல்ல பழைய உடலை விட்டு போட்டு புதிய உடலை தேவைக்கு ஏற்ப ஆத்மா வானது தனது புதிய உடலை அணிந்து கொள்கிறான்...

நீ என்பது இங்கு நீயும் அல்ல நான் என்பது இங்கு நானும் அல்ல .. அது அகங்காரம்...

உலகத்தின் சூரியன் நான் சந்திரன் நான் சூது நான்.. கள்வன் நான் ஞானியரும் நான்

பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..??

16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..?

யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா?

ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..?

எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..?

வொய்தீஸ் கொலைவெறி...

இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம்

எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்...

சிவலோகம் .. சந்திர லோகம் ... சொர்க்கம்... நரகம் ... கந்தர்வலோகம் எல்லாம் பூமியவிட்டு xxxx காத தூரம் உள்ளது என குறிக்கபட்டுள்ளது.. யாரு எங்கிட்டு போவா..? தெளிவாக விளக்கம் சொல்ல முடியாதவர்கள் ...வாழும் வரை இது ஒரு காட்சி அவ்வளவுதான் ..!! வாழும் வரை இந்த உடம்பு ஒரு காட்சி அவ்வளவுதான் .. நீங்கள் நீங்களும் அல்ல நான் நானும் அல்ல...

பிளீஸ் கம் இன்சைடு

டிஸ்கி:

பெண்கள் டவுசர் போடலாமா ..? வேண்டாமா..? ஆண்கள் அண்டர் வேர் போடலாமா வேண்டாமா..? இந்த மாறி அல்ப தனமான டொப்பிக் இல்லை இது.. எல்லோருக்கும் இருப்பது ஒரு உயிர் தான் .. அந்த உயிரின் அடுத்த நிலை பற்றி ஈழ தோழர்களுடன் உரையாட வந்திருக்கேன்...

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல முயற்சி

நேரம் கிடைக்கும்போது பேசலாம் சகோதரா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே....

Posted

உயிர் என்றால் என்ன? அதன் வரைவிக்கணம் என்ன?

உயிர் என்பது ஒரு காற்றடித்த பையா? அப்படியானால் அடுத்த நிலை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே...

உயிரின் அடுத்த நிலை சத்திரியர்களுக்கும் இந்திர லோகமும் வைசியர்களுக்கு கந்தர்வலோகமும் வருணாசரிம தர்ம படி ஒதுக்கபடும் என்கிறது.. இன்னும் எக்ஸ்ரா எகஸ்ரா... சிவபுராணம் மற்றும் அனைத்து புராணங்களும்.. எனக்கு ரம்பா ஊர்வசி என அங்கிட்டு வந்து குத்து பாட்டு ஆட வேண்டாம்... குத்து பாட்டுக்கு ஆடினாலும் நான் ஓரமாக போய்விடுவேன்.. புண்னியம் தீர்ந்த ஆத்மாக்கள் தலைகீழாக அங்கிட்டு இருந்து துரத்தபட்டு தலை கீழாக தொங்கியவாரே பூமிக்கு வந்து மீண்டும் ஒரு கருப்பைக்குள் குடிகொள்ளுமாம் அது நாயோ கழுதையோ..?

டிஸ்கி:

நான் இங்கு கேட்பது யார் இந்த விளையாட்டை விளையாடுவது .. ஏன் விளையாட வேண்டும்..? நான் மோடசத்திற்கு போகவேண்டும் (பிறப்பில்லாத நிலை) அட்வைஸ் பீளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மது மாமிசம் உண்ணாது வாராக பூஜை சின்சியராக செய்தால் கடவுள் நேரில் வந்து வரம் கொடுப்பார் என்கிறது விஸ்ணு புராணம் .. நானும் சின்சியராக செய்தனப்பா ஏன் வரவில்லை..?

டிஸ்கி:

ஏசு நாதர் வருவார் என்றாலும் அந்த பூஜைகளை நான் செய்ய ரெடி... அல்லா வந்தாலும் சரி மொத்ததில் நான் யாரையவது கண்டாக வேண்டும் ...

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

அல்லா விட்ட குல்லா மாறி இந்த மாதிரி நீயும் நானும் சிவன் என்ற கதை எனக்கு தெரியும் பிளீஸ் ஐவாண்டு சீ ...</p>

பாபாவின் தரிசனம் வேண்டுமானால் கூறுங்கள்ஏற்பாடு செய்யலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களுக்கு பேய் பிசாசில் நம்பிக்கை இருக்கிறதா

? இருந்தா உயிர் இருக்கு இல்லாவிட்டால் உயில் இல்லை, உண்மையில் உயிர் என்று ஒன்றும் இல்லை, உயிரில் சின்னது பெரியது என்று ஏதாவது இருக்கா, என்னைக்காவது எறும்போட ஆவி வந்து உங்களை பயமுறுத்தி இருக்கா, மனிச ஆவிக்கு மட்டும் ஏன் பய படுறீங்க, ஆயிர கணக்கான எறும்புகளின் உயிர்கள் எங்கே போகுது ஏன் அவை மறுபிறப்பு எடுப்பது இல்லை. உண்மையில் அப்படி எதுவும் இல்லை அதே விதிதான் மனித உயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிங்கம் எடுக்கும் கோஸ்டிகள் கூடு விட்டு கூடு பாயும் கோஸ்டிகள் மீதெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லை... இவரு உடலை விட்டு போய் விட்டு வருகிறேன் உடலை பார்த்து கொள்ளுங்கள் என்றால் அதை வெள்ளைக்காரன் போட்டு எரித்து விட்டானாம்.. உடல் இல்லாமால் உயிர் எப்படி பக்த கோடிகளுக்கு அருள் பலிக்க முடியும்.. ஐவாண்ட் ஸ்ரைட் தரிசனம் தோழர்.... வாத்தியார்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே களத்தில் பேய் பட தலைப்புகளை கேட்டு பேய் படங்களை அர்த்த ராத்திரியில் பேய் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து தூங்கியவன் நான்.. பேயே என்னை பார்த்தால் பத்து ஸ்டெப் தள்ளி நிற்கணும்... அதை பார்த்தால் உன்னுடைய கிஸ்டரி என்ன ஜாகரிப்பி என்ன ஏன் இப்படி ஆனாய் ..? சாப்பாடு எங்கிட்டு கிடைக்கு ..? அடுத்து வருங்கால நிலமை என்ன என விசாரிக்க ஆரம்பித்து போடுவென்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

புரட்சி.... நாம் என்ன செத்து அலைந்து பிறப்பெடுத்தா வந்திருக்கோம்? ஆண்,பெண் சேர்க்கையால் உருவாக்கப்படுகிறோம்.... இதில் எங்கிருந்து கர்மாவுடன் அலையும் ஆன்மா, வந்து புகுந்து கொள்கிறது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்களுக்கு ஆன்மாவை பற்றி சரியான புரிதல் இல்லை சகோதரி... தெருவோரம் எச்சில் துண்டுக்கு அலையும் நாயுக்கும் நமக்கும் இருப்பது ஒரு உயிர்தான் .. இங்க சிக்கலே ஏற்ற தாழ்வு யார் கொடுப்பது என்பதுதான் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிகாசத்தில் தர்மனுடன் கடைசி காலத்தில் ஞமலி ஒன்று அலைந்ததாக படித்துள்ளேன். அந்த ஞமலி யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம் புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது நாய்.. சொர்க்கத்தில் சேர்க்க உங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்ற பிறகு ,,, இந்த நாய்க்கு அனுமதி இல்லை எனில் எனக்கும் வேண்டாம் என தூக்கியறிந்தவன் தர்மன்... ஐ நோ ஆல் த புராணா இதிகாசா லொட்டு லொசுக்ஸ்... ஐ வாண்டு சீ காட்... ஐ வாண்டு சீ காட்... உங்களால் முடியுமா..? உங்களால் முடியுமா ..?

ஐயாம் சில்லிப்புங்கு ... அலோ நிர்வாகதின்ரோ ஏன் மாத்தடிடுத்து கொத்தில் வாரே... சமஸ் பெரிசி இ டோப்பிக்கு டெலிட் மாட் பேடா.. அந்தே நா நிமிக்கு ரெகுவஸ்ட் ஸேஸ்குண்ணாடு....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சி அந்த ஞமலி யாருடைய ஆன்மா என்றுதான் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது தர்ம தேவன் என்ற எம ராஜா.. அய்யோ சகோதரி அதெல்லாம் எனக்கு தெரியும் கண்ணகியின் ட முற்பிறப்பு என்ன ஏன் ..? ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்... என எல்லாம் தெரியும்...

இங்க சிக்கலே ஊட்டுவது யார் என்பது தான்..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி கண்டு பிடித்தால் எனக்கும் அறிவியுங்கள் புரட்சி...

ஆமா என் இந்த வயசுல இந்த ஆராய்ச்சி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள தோழர்கள் பலர் கடவுளை கண்டு இருப்பார்கள் .. அவர்கள் பாவித்த வழி முறையை இங்கிட்டு பகிர்ந்து கொள்ளவேணும் .. ஒம் நமோ நாராயணா என்று சொல்லி மண்டை கிழிந்து அது மேல்லோகத்தில் மட்டும் தான் செல்லுபடி ஆகுமாம் .. ஆதை இந்த இக லோகத்தில் சொல்லி மண்டை கிழிந்து செத்து போனார் நம்ம ராமானுஜர் திரும்பெரும்புதூர் (ராஜுவ் பழி தீர்க்க பட்ட இடம் ..) யார் மண்டை கிழிந்தால் என்ன ..? எனக்கு இக வாழ்கை போரடித்து போய்விட்டது ஐ வாண்ட் நெக்ஸ்ட்... புயுச்சர் பிளான்ஸ்.. அவரவர் செய்த பாவங்களும் புண்ணியங்களும் அந்த அந்த ஆத்மாவை சுற்றி ஒரு நூல்கண்டு போல வருமாமே..? தியானம் செய்து அதை அறுக்க முடியுமா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

குடும்பங்களுக்குள் சண்டைகள் சச்சரவுகள் வருவது சகசமானதே.............

அதற்காக அத்தானை இப்படி நடு சந்தியில் வைத்தா அவமானபடுத்த வேண்டும்???

சென்ற மாதம் எல்லாம் நல்லாய் தானே போய்கொண்டிருந்தது நீங்களும் இடைக்கிடை இடைவெளிவிட்டு இங்கு எழுதிகொண்டிருன்தீர்கள்.

அதுகும் காதலர்தினம் அது இது என்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் பரிமாறி சந்தோசமாக இருக்கும் இந்த மாசி மாதத்தில் அப்படியென்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. காதலர்தினத்தை சாட்டி ஏதும் டைமனுக்கு நீங்கள் விரலை காட்ட அவர் முடியாது என்று முடித்துவிட்டாரோ?

மருது நான் "பேய்' என்று குறிப்பிட்டால் ஏன் அத்தானை இழுக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.