Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா போகவில்லையாம் – அறிக்கை வெளியிட்டார் சம்பந்தன்!

Featured Replies

கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் டெல்லி செல்வதும் அங்கு மாற்றங்களை உருவாக்க முயலுவதும் ஜெனீவா செல்வதை விட சிறந்த நகர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் தருணத்திற்கு மிகப் பொருத்தமானது பசில் ராஜபக்ஷ வரவேற்பு

basil_rajapaksha.jpgஜெனீவா அமர்வில் பங்கேற்பதில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்மானமானது தருணத்திற்கு பொருத்தமானவிடயமென்று பாராட்டியிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இல்லாவிடில் அண்மைக்காலத்தில் நாட்டில் இடம்பெற்ற அழிவுகளுக்கு அவர்கள் (கூட்டமைப்பு) பதிலளிக்க வேண்டியிருக்குமென்று தெரிவித்திருக்கிறார். ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பான தமிழ்த்÷ தசியக் கூட்டமைப்பின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பின் நடத்தையானது புலிகளுக்க சார்பானதாக இருந்தது. புலிகள் என்ன செய்திருந்தார்களோ அதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டியவர்கள் பொதுமக்களுக்கு அளித்த சகல வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இதனால் அரசாங்கம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நாங்கள் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளவில்லை. ஆனால், புலிகளினால் இழைக்கப்பட்ட சகல பிரச்சினைகளிலிருந்தும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளோம். 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்கிறோம். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளோம். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். நாங்கள் மின்சாரம் வீதிகள் போன்றவற்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். நாட்டில் அவசரகாலச் சட்டம் இல்லை. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை. ஜனநாயகத்தை ஸ்தாபித்து வருகிறோம். வடக்கு, கிழக்கில் தேர்தல்களை நடத்தினோம் இவ்வாறான நிலையில் இதற்கு முரண்பாடாக தமிழ்க் கூட்டமைப்பால் எவ்வாறு பேச முடியும். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பற்றி அவர்களால் எவ்விதம் பேச முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இப்போதும் ஈழ ஆட்சி தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு கனவைக் கொண்டிருக்குமானால் அவர்கள் யதார்த்தத்தை விளங்கிக்கொண்டிருக்கவில்லை. வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாத காலம் சில தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு இருந்தது. வடக்கு. கிழக்கு தமிழ் மக்கள் உட்பட மக்களின் ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி வருகிறார். மீண்டும் அழிவு நிலைக்கு தமிழர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என தமிழ்க் கூட்டமைப்பிற்கு நாங்கள் எச்சரிக்க வேண்டியுள்ளது. மீண்டும் அதே பிழையை செய்யாதீர்கள் என்று எச்சரிக்க வேண்டியிருக்கிறது. இதனால் நாட்டிற்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்பட்டிருந்தது என்று அமைச்சர் கூறியுள்ளார்

.http://thinakkural.c...6-16-27-00.html

Edited by nunavilan

கூட்டத்தொடரில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கலாம். ஆனால் கூட்டத் தொடருக்கு முன்பாக கூட்டத்தொடரில் பங்குபெறும் நாடுகளில் இராஜதந்திரிகளைச் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கலாம்.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் தாமாக முடிவெடுப்பதை விடுத்து ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விவாதித்து முடிவெடுக்கலாம்.

கனிந்துவரும் வாய்ப்புக்களை இவர்களின் முடிவுகள் நாசாமாக்கிவிடக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு and 4 others like this.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்பான தமிழ்பேசும் உறவுகளே !

ஜெனீவாவில் இன்று நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்து கொள்ளப்போவதில்லை என்கிற முடிவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைவரின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியத் தந்து இருக்கிறார்கள். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து ஆனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்பதுடன் இந்த அறிக்கையினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் இது தொடர்பாக உடனடியாக கலந்துரையாடி முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு :- இது தொடர்பாக எமது தலைமைப் பீடம் எடுத்த முடிவை பற்றி உங்கள் கருத்துக்கள் இங்கு பதிவிடுங்கள் கரணம் அவை நேரடியாக அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

facebook-tna

இந்த கூட்டமைப்பு இதுவரைக்கும் எதையும் சாதிக்கவில்லை நான் நினைத்தேன் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துவார்கள் என்று அனால் இதையும் கோட்டைவிட்டுவிட்டார்கள் எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மக்கள் முன் செல்வார்கள் ????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk/tamil/

Mr Sumanthiran explains why they decided not to attend to UNHRC meet.

வானொலி நிகழ்ச்சிகள் from mins 14:00


    • தமிழோசை

Edited by Queen

ஜெனிவா கூட்டத்தொடர் விவகாரம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு

[ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 01:18 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்ற முடிவும், அது தொடர்பாக இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லாக் கட்சிகளினதும் ஒப்புதல் பெற்றதல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் எடுக்கப்பட்டதாகவும், கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. கூட்டத்தில் பங்குகேற்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், ஆனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு எடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுதொடர்பாக தாம் ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120227105668

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரில் ஏதும் தங்கியில்லை. யார் போட்டாலும் அந்த எச்சில் இலையைததூக்கவேண்டியது தான். ராஜபக்ஷவுடன் காணாது என்று கூறலாம். சர்வதேசத்திடம் அவர்கள் சாப்பிட்டுவிட்டு இது தான் எனக்கு எடுத்துக்கோ என்று சொல்வார்கள் வாங்காவிட்டால் பிரச்சனை. அதைவிட நடந்து முடிந்தபின் அவர்கள் தாறதை தரட்டும் என்று இருக்கிறார்போல.

ராஜபக்ஷவுடன் இவர்கள் நன்றாக மிண்டுப்பட்டால் கூடக்கிடைக்கும். மிண்டு நன்றாக இல்லையென்றால் அதிலும் குறையத்தானே கிடைக்கும்.

சம்பந்தரின் ராஜதந்திரமும் பரவாயில்லை

எந்த தாளிக்குள் எங்கே வத்து மோர் கடைந்து கைகள் பொங்கி கவலைப் படுகிறீர்கள். நீங்கள் பங்குபற்றிய போராடங்கள் சந்தித்த இழப்புக்கள் என்பவற்றை பகிங்கரமாகக் (படங்கள் இருந்தால் அவற்றுடன்) இங்கே கூறமுடியுமா?

தமிழில் சொற்கள் இருப்பதை தெரியாதென்றால் கள நிவாகத்திற்கும், உறவுகளுக்கும் மன்னிப்பு தெரிவித்துவிட்டு ஆங்கிலத்தில் எழுதுங்கள் அடுத்த தடவை.

நான் மழை பனி பாரரமல் எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அதுபற்றி இங்கு உமக்கு கூற வேண்டிய அவசியமில்லை. கூத்தமைப்பைப் போல ஒரு சோம்பேறி அமைப்பை இதுவரை பார்த்ததில்லை. அன்று போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் சரி இன்றும் சரி ஒரு அழிந்துகொண்டிருக்கும் இனத்தின் பிரதிநிதிகள் மாதிரியா நடந்து கொண்டிருக்கிறார்கள்? "சம்பந்தர் பெட்டி வாங்கும்" புகழ் விக்கிலீக்ஸ் வரைக்கும் பரவியிருக்கு.

நான் மழை பனி பாரரமல் எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அதுபற்றி இங்கு உமக்கு கூற வேண்டிய அவசியமில்லை. கூத்தமைப்பைப் போல ஒரு சோம்பேறி அமைப்பை இதுவரை பார்த்ததில்லை. அன்று போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் சரி இன்றும் சரி ஒரு அழிந்துகொண்டிருக்கும் இனத்தின் பிரதிநிதிகள் மாதிரியா நடந்து கொண்டிருக்கிறார்கள்? "சம்பந்தர் பெட்டி வாங்கும்" புகழ் விக்கிலீக்ஸ் வரைக்கும் பரவியிருக்கு.

கூட்டமைப்பை சோம்பேறியாக தூற்றி பதில் வாங்க முயலும் உற்சாகமான மனிதனிடமிருந்து இப்படி ஒரு வக்கில்லாத பதிலை வரவழைத்து இந்தக் களதில் பதியவைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு கேள்வியைப் போட்டேன். உமக்கு புத்தியிருந்தால் இப்போது உமது கருத்து களத்தில் இருப்பது நான் அதற்கு பதில் எழுதியதால் மட்டுமே எனபது விளங்கி எனக்கு நன்றி சொல்லியிருக்கலாம். கவனமாக எழுதும். இல்லையேல் நான் இவ்வளவு கஸ்டப்பட்டு வரவழைச்ச உமது பதிலை மற்றையோர் படிக்க முன் வெட்டுப்பட்டுவிடும்.

இப்போது நீர் புலத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு போரட்டம் பற்றி கேட்டால் மிடுக்காக நான் யாருக்கும் பதில் கூறவேண்டிய தேவை இல்லை என்றுவிட்டு, வேலைக்கரனை ஒருவனைபார்த்து திட்டாத வார்தைகளால் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த தலைவனை திட்டிவிட்டு இலகுவில் போய்விடுகிறீர். இவ்வளவு தரமில்லாத உமது மனத்தில் எவருக்காக இரங்கி போராடவேண்டும் என்ற சிந்தை வருகிறது.

அழிந்துகொண்டிருக்கும் மக்களுக்காக கதைப்பவர் போல் இல்லாததால்த்தான் உமது கருத்து இருந்த இடத்தில் இப்போது காணவில்லை. நடத்தையை பார்த்தால் அழிந்துகொண்டிருக்கும் இனத்தவரின் பேச்சுப்போல் இல்லை. அதிகாரத்திமிரில் இருந்து வரும் வார்தைகள் போல் இருக்கு. உமது கவலையைப் பார்த்தால் தேவதாசன் இறந்ததிற்கு ஐயோ என் பணம் போச்சே என்று அழுத விசுவாமித்திரரின் கதை போலத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் அரசியல் சாணக்கியம் தமிழர்களுக்கு சொன்னாலும் விளங்காது என்று போகாததற்குப் போதிய விளக்கம் தராமல் இருந்திருக்கக்கூடும்!

ஏதோ தம்மால் இயன்றவரையில் தாயகத்தில் தமிழர்கள் அடிமையாக இருக்காமல் இருக்க கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று நம்பிக்கை கொள்ளவேண்டியதுதானே...

சாணக்கியம் , இராஜதந்திரம் என்ற பேருக்குள் முட்டாள்தனம், சந்தர்ப்பவாதம், முடிச்சவிக்கித்தனம் என எல்லாத்தையும் மறைக்கலாம்.

@மல்லையூரான்

உங்க தூதரக ஆக்கள் எடுத்த போட்டோக்கள் காணாதோ? என்னை உசுப்பேத்தி இப்பவும் ஆர் அடங்க மறுக்கிறான் என பார்த்து போட்டு தள்ளவோ?

  • கருத்துக்கள உறவுகள்

மத்தளத்திற்கு இரண்டு பக்கத்தாலேயும் இடி சம்மந்தருக்கும் இரண்டு பக்கத்தாலேயும் அடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.