Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபம் இல்லாத, மனைவி தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Angry-Wife.pngfarjun.jpeg

கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்!

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் 'மூடு அவுட்'டாக வாய்ப்பு அதிகம்.

4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி!

அடுத்ததாகக் 'கோபம் இல்லாத கணவன் தேவையா?" இணைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! :icon_mrgreen:

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அஜெஸ்ட்மெண்ட் செய்து மனைவிமாரட்ட வாங்கிற நிம்மதிக்கு... போசாம.. ஆச்சிரமத்தில போய் தியானம் செய்துகிட்டு இருக்கலாம்..! :lol::icon_idea:

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

சரியாய் சொன்னீங்க..! ஆண்கள் பலர் பொம்பிளப் பைத்தியங்கள். அவர்களுக்கு தங்கட சொந்த நிலையின் பரிதாப நிலை தெரிவதில்லை..! இவங்கள் எல்லாம் ஆம்பிளைன்னு... அதிலும்.. மனிசனுன்னு வாழ்றதுக்கே லாய்க்கில்ல..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

மனைவிமார் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் கணவன் மார் நிம்மதியாக இருக்கலாம் என்பதால்தான் இந்த சிந்தனை. அதாவது நிம்மதியை இழந்த கனவன் மார்களுக்காக் சிந்திக்க பட்ட சிந்தனை இது.

இவ்வளவு அஜெஸ்ட்மெண்ட் செய்து மனைவிமாரட்ட வாங்கிற நிம்மதிக்கு... போசாம.. ஆச்சிரமத்தில போய் தியானம் செய்துகிட்டு இருக்கலாம்..! :lol::icon_idea:

சரியாய் சொன்னீங்க..! ஆண்கள் பலர் பொம்பிளப் பைத்தியங்கள். அவர்களுக்கு தங்கட சொந்த நிலையின் பரிதாப நிலை தெரிவதில்லை..! இவங்கள் எல்லாம் ஆம்பிளைன்னு... அதிலும்.. மனிசனுன்னு வாழ்றதுக்கே லாய்க்கில்ல..! :lol::icon_idea:

கரும்பை ருசித்து பார்காதவன் சொன்னானாம் கரும்பின்ர சேப் சரி இல்லை இது கசக்கும் என்று

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பை ருசித்து பார்காதவன் சொன்னானாம் கரும்பின்ர சேப் சரி இல்லை இது கசக்கும் என்று

:icon_idea:

கரும்பாய் இருந்தா ருசிக்கலாம்.. இரும்பாய் இருந்தால்.. என்ன செய்வீங்க..???! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்பாய் இருந்தா ருசிக்கலாம்.. இரும்பாய் இருந்தால்.. என்ன செய்வீங்க..???! :lol::D:icon_idea:

கரும்புக்கும், இரும்புக்கு வேறுபாடு தெரியாத சிறுவனா நீங்ககள். :lol: :lol: :lol:

என்னோட வேலை செய்யிறவர் சொன்னது.

"Happy Wife Happy Life" :D

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக்கும், இரும்புக்கு வேறுபாடு தெரியாத சிறுவனா நீங்ககள். :lol: :lol: :lol:

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! அவங்களப் போயி கரும்போட உவமைக்கிறது.. இயற்கைக்கே அடுக்காது. வேணுன்னா.. பெண்கள்.. சப்பித் துப்பின கரும்புச் சக்கை போல எண்டுங்க.. ஒத்துக்கலாம். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! :lol::D

ஆண்கள் மட்டும் என்ன என்றும் மார்கண்டேயனா? எல்லாரும் துருப்பிடித்து மண்ணுக்கு போக கிறவர்கள்தான், இருக்கும் வரை இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், முடிந்த வரை நேர்மையாக் இருக்க வேண்டும், இயன்றவரை உதவிகள் செய்யவேண்டும், மன்ணுக்கு போது ஒரு உயிரினம் ஏன் உலகுக்கு வருகிறது என்பதன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். :icon_idea:

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! அவங்களப் போயி கரும்போட உவமைக்கிறது.. இயற்கைக்கே அடுக்காது. வேணுன்னா.. பெண்கள்.. சப்பித் துப்பின கரும்புச் சக்கை போல எண்டுங்க.. ஒத்துக்கலாம். :lol::D

அதுக்கு காரணம், சாறை ருசிப்பவர்கள் யார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் மட்டும் என்ன என்றும் மார்கண்டேயனா? எல்லாரும் துருப்பிடித்து மண்ணுக்கு போக கிறவர்கள்தான், இருக்கும் வரை இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், முடிந்த வரை நேர்மையாக் இருக்க வேண்டும், இயன்றவரை உதவிகள் செய்யவேண்டும், மன்ணுக்கு போது ஒரு உயிரினம் ஏன் உலகுக்கு வருகிறது என்பதன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். :icon_idea:

மண்ணுக்க எத்தனையோ கோடி விந்துகளும் முட்டைகளும் தான் வருகுது. அத்தனையும் குழந்தை குட்டியாவா ஆகிக்கிட்டு இருக்குதுங்க..???! உருவான கோடிகளையே ஒழுங்கா காப்பாத்த முடியல்ல.. பசி பட்டினி.. பிணி.. போர் என்று சாவுது. இதுக்குள்ள... இன்னும் இறைச்சிக்கிட்டு இருக்கனுமா.. என்ன...???! :lol::D

அதுக்கு காரணம், சாறை ருசிப்பவர்கள் யார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். :lol:

சாறை ருசிப்பவர்களுக்கு சாறை அள்ளிக்கொடுக்கிற க(இ)ரும்புகளும்.. யோசிக்க வேண்டாமோ..???! அதுகளுக்கு எங்க போறது புத்தி..???! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி

பெண்கள் இரும்பென்றே ஏற்றுக்கொள்கின்றேன்

நாங்கள் அது துருப்பிடித்தால் உலக சுகாதாரத்துக்கு ஆபத்து என்பதால் அதை பாவிக்கின்றோம் என்ற நிலைக்காகவாவது எம்மை ஏற்றுக்கொள்ளக்கூடாதா ராசா??? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்க எத்தனையோ கோடி விந்துகளும் முட்டைகளும் தான் வருகுது. அத்தனையும் குழந்தை குட்டியாவா ஆகிக்கிட்டு இருக்குதுங்க..???! உருவான கோடிகளையே ஒழுங்கா காப்பாத்த முடியல்ல.. பசி பட்டினி.. பிணி.. போர் என்று சாவுது. இதுக்குள்ள... இன்னும் இறைச்சிக்கிட்டு இருக்கனுமா.. என்ன...???! :lol::D

சாறை ருசிப்பவர்களுக்கு சாறை அள்ளிக்கொடுக்கிற க(இ)ரும்புகளும்.. யோசிக்க வேண்டாமோ..???! அதுகளுக்கு எங்க போறது புத்தி..???! :lol::icon_idea:

ஒரு உயிரினத்தின் பூமிக்கு வருவதற்காக கோட்பாடு என்ன?

கிணற்றி இருந்து வாட்டபம் நீரை உறுஞ்சி இறைக்கிறது இதற்காக கிணற்றை கோவிக்கலாமா? வாட்டபம்மை கோவிக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிரினத்தின் பூமிக்கு வருவதற்காக கோட்பாடு என்ன?

அங்க ஒரு கோட்பாடும்.. இல்ல. கூப்பாடும் இல்ல. எல்லாம் தற்செயலா நடக்குது..! :lol::icon_idea:

கிணற்றி இருந்து வாட்டபம் நீரை உறுஞ்சி இறைக்கிறது இதற்காக கிணற்றை கோவிக்கலாமா? வாட்டபம்மை கோவிக்கலாம்?

கிணற்றையும் வாட்டபம்மையும் கண்டுபிடிச்சவனை தான் கோவிக்கனும்..! அதுக்காக கிணறு பெரிய திரவியம் கிடையாது..! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலருக்கு சிறுவயதில் ஏற்பட்ட சொல்லணாத்துயரங்கள்..... வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது. :(

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி

நானும் மனைவியைப்பார்த்து புன்னகைப்பேன். என்ன விசரே பிடிச்சிருக்கு எனத் திருப்பிக் கேட்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மனைவியைப்பார்த்து புன்னகைப்பேன். என்ன விசரே பிடிச்சிருக்கு எனத் திருப்பிக் கேட்கிறாள்.

நான் நினைக்கிறன்.. மனைவியை சக மனிதன் என்று எண்ணிக் கொண்டு பழகினாலே போதும். இங்கு சிலர் விபரிப்பது போல.. மனைவியை விசித்திரமாக நோக்கிப் பழகப் போறதுதான்.. கோபத்துக்கே முக்கிய காரணமுன்னு..!

சிலர் ஊருக்கு நல்லா உபதேசிப்பாங்க.. தாங்க உள்ள மோசமான விளைவுகளை எல்லாம் சந்திச்சுக் கிட்டு சகித்துக்கிட்டு இருப்பாங்க. அப்படியான ஆட்களின் ஆலோசனைகளே.. அடுத்தவனுக்கு அறிவுரையாக வருவது அதிகம். ஈசனைப் போல ஓரிருவர் தான் உண்மை நிலையை.. நிகழ்வதைச் சொல்லுறது..!

மனைவியை விசித்திரமாக நோக்கத் தேவையில்ல. அவளும் உங்களைப் போன்ற ஒரு ஜென்மம் என்று எண்ணி முழு அக்கறையோடு பழகிக் கொண்டாலே.. இந்த ஆலோசனைகள்.. அறிவுரைகள்.. பெண்ணின் மனசு ஆழம் மண்ணாங்கட்டி எனறு சமூகத்தின் மத்தியில் போலி கருத்துக்களோடு.. கற்பனைகள் உள்ளடக்கிய ஓசி அறிவுரை விளையாட்டு விளையாடத் தேவையில்லை..! :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.