Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலையில் தூக்கில் தொங்கிய சுமந்திரனின் கொடும்பாவி

Featured Replies

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை தூங்கவிடப்பட்டுள்ளதாகவும் தமிழினதுரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் களுத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.

படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையிரினால் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென கோரும் ஊடக அறிக்கையொன்றினை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://meenakam.com/2012/03/01/40499

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலமாவது தமிழ்க்கூட்டமைப்பின் முடிவை, தமிழ்ச்சமூகம் வரவேற்கவில்லை என்பதை... சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும். நெடுகவும், மற்றவன் சொல்வதை கேட்டு... தமிழனுக்கு, குழி பறிக்கும் வேலைகளை... கூட்டமைப்பு கைவிட வேண்டும். தங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால்... ஒதுங்கியிருப்பதே நல்லது. வைக்கல் பட்டடை நாய் மாதிரி, குந்தி இருக்கப் படாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை நாங்கள் உசுப்பேத்தவில்லை ,அவர்களின் சுயவிருப்பின் படியே  செய்துள்ளார்கள்.....தேசிய பட்டியல் மூலம் பாராளமன்றம் சென்றவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது கூட்டமைப்பு...மக்களின் வாக்கு பெற்றுகொள்ளாத ஒருத்தர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran_effigy.jpg

Enragement over US-India stand results in Sumanthiran-effigy in Jaffna

[TamilNet, Wednesday, 29 February 2012, 23:44 GMT]

The nominated parliamentarian of Tamil National Alliance (TNA) M.A. Sumanthiran faced the brunt of public enragement in Jaffna on Wednesday, for reflecting the stand of the USA and India, in handing over even the last of the trumps of Eezham Tamils to Sri Lankan state, by internalizing war-crimes accountability and political solution. Washington allegedly backs proposals at the UNHRC sessions in Geneva that will give international legitimacy to the LLRC hoodwink of Colombo and whatever the differences with New Delhi backing Colombo that could only be related to binding Colombo with a time frame for the implementation of the LLRC recommendations. Meanwhile, the stands of both the Tamil Nadu chief minister Jayalalithaa and the DMK Chief Karunanidhi are also just confined to urging New Delhi to back the US proposal in Geneva that is ‘perceived’ to be against Sri Lanka.

Sumanthiran_effigy_97078_200.jpg

The effigy of TNA MP M.A. Sumanthiran at Jaffna Univiersity

Mr. Sumanthiran enraged Tamil public opinion in the island by recently saying to the BBC Sinhala Service, “TNA backs a domestic process to implement the LLRC recommendations. We should ask for an international probe only after a failure of that,” adding further, “It is a step-by-step process. It will take time. They took 30 years in Cambodia.”

Later, Mr. Sumanthiran circulated emails that he was only telling what was in the agenda of the powers and not his opinion. But the BBC stuck to its reporting.

As what Sumanthiran was telling was tallying with US-backed bailout of Sri Lanka at the Geneva sessions, more than a hundred students of the University of Jaffna on Wednesday evening, gathered inside the premises of the University and hanged the effigy of Mr. Sumanthiran on the wall of a multi-storey building with a question: where are the war-crimes investigations?

pdf.gif

Meanwhile, the Jaffna University Students Union (JUSU), reflecting the sentiments of the people, came with a statement condemning the TNA leadership for withdrawing from their earlier announcement giving hope to the people that they would participate in the Geneva sessions.

The general opinion in the island is that the TNA that was fathoming public opinion through Sumanthiran’s speeches in Canada and his interview to the BBC, decided to ‘boycott’ the Geneva sessions just to save its face.

But some political circles think that it was planned to sabotage any Tamil representation being heard in Geneva.

Hoping that the TNA would represent the Tamil side in giving oral statements in Geneva before the deadline on 24th, the diaspora groups were concentrating on other aspects. But the TNA parliamentary group leader R. Sampanthan ‘leaked’ the story of TNA’s non-participation only on the 25th, not giving room for any others also to come forward with oral statements before the deadline, political sections of Eezham Tamils in the island said.

The statement by the Jaffna University Student Union on Wednesday condemned the stand of the TNA for listening to others but not to the people who elected it.

Talking to BBC Tamil Service on Tuesday, Sumanthiran said that they were ‘advised’ by the countries from which they were seeking advice, on the futility of the TNA going to Geneva at this time.

TNA was constantly under the advice of India and it has also sought the advice of the USA when a delegation of it including Sumanthiran and Sampanthan visited Washington recently.

The JUSU statement sought a change in TNAs stand and said it should bring the aspirations of Eezham Tamils to the global forum.

But, in a letter sent to UNHRC session in Geneva on Tuesday, the TNA leader Sampanthan reduced the aspirations of Eezham Tamils to the implementation of the LLRC.

“This Resolution [the proposed US-backed resolution on implementing the LLRC recommendations] will provide an opportunity for the fulfilment of the commitments repeatedly made by the government of Sri Lanka, and now contained in the recommendations of the LLRC, and thereby for the realization of the legitimate aspirations of the Tamil people,” Mr. Sampanthan concluded in the letter to the UNHRC.

Meanwhile, TNA parliamentarian Suresh Premachandran has publicly criticized the TNA decision of not participating in the Geneva sessions, as that of certain individuals and not that of the TNA.

Mr. Sampanthan has been reiterating his stand that the decision was that of the TNA.

The academics and civil society members have been trying to make a joint representation of all Tamil parties to the Geneva in the last minute, but the efforts have not materialised as TNA parliamentarians Sritharan and Mavai Senathiraja changed their stand to support Mr. Sampanthan.

The continued and orchestrated hoodwink of powers taking even their democratically elected politicians into ‘captivity’, has enraged the Tamil masses in the island and their anger turns against knowingly gullible politicians, political observers in the island said.

Unfortunately, but as usual, the puppets face the brunt of public anger, one of the political observers commented.

* * *

Further comments from the political observer follow:

The USA engineered an internationally orchestrated war in the island, tilting the balance against Eezham Tamils, knowing that it would end up in genocide. India joined in the orchestration, as revealed by the Wikileaks documents.

First the conduct of the genocidal war without witnesses was entirely handed over to state in Sri Lanka, then the ‘surrender’ and internment of Tamil civilians in the barbed-wire camps were hander over, later the rehabilitation–development–reconciliation farce was handed over, and now the entire accountability mechanism and future processes are also handed over exclusively to the genocidal state that has designed a time-set agenda in the name of the LLRC recommendations to complete the process by 2020.

The whole process, thoroughly international, has been engineered and executed to perfection to the end by the US–India partnership, to see that the victimised Eezham Tamils will not get any international scrutiny and will not get any international justice as well.

Both the US and India have worked out it long back, how to handle the Tamil polity after the genocidal war.

Homework has been done not only in the island and in the diaspora but also in Tamil Nadu.

The US Secretary of State, Hillary Clinton visited Jeyalalithaa when the latter won a historic victory mainly due to a wave of repulsion against her predecessor who failed in checking the genocide of Eezham Tamils.

Even though confined to the wanting paradigm of war crimes and not addressing on due political justice for a genocide-affected nation, Jeyalalithaa enacted a unanimous resolution in the state assembly, calling for international investigation of the war crimes in the island.

However, on Thursday, stopping just at reminding the earlier resolution on international investigations, Ms Jeyalalitha wrote to New Delhi: “I write to reiterate our stand and to insist India should support the US-backed resolution and condemn the Sri Lankan government when the same is brought forward in the UN Human Rights Council.”

According to a statement by Mr. Karunanidhi,“India should not back Sri Lanka at any cost when the UNHRC resolution comes up for voting.”

But the irony is that neither the US-backed resolution nor India ditching it or backing it, is going to be against the genocidal state in the island.

* * *

Eezham Tamils have long been following a repulsive and self-inflicting political culture of attacking their own people as ‘traitors’.

Experience has shown that it backfires on a small nation like ours with limited human resources in talent.

We have forgotten the saying in Tamil, “what is the point in blaming the arrow when there is the archer” (Eythavan irukka ampai noakalaama).

The conflict is no more confined to Tamils and Sinhalese in the island. At the end of a 60 years struggle of Eezham Tamils, both peaceful and militant, it has acquired a new perspective of international dimensions.

There is no more point in indirectly sending messages to the masters by disgracing the agents as traitors. If we have the guts, we should be able to directly rise against the masters in our struggles in the island, in the diaspora and in Tamil Nadu, commented a new generation Tamil politician in the island.

Global Tamils and their leaders should keep in mind that they are now vested with a new universal responsibility to fulfil, for the sake of themselves as well as for humanity in general, the politician further said.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34935

  • கருத்துக்கள உறவுகள்

மேலே... நெடுக்ஸ் இணைத்த படத்தில், சுமந்திரன் "ரை" கட்டியுள்ளாரா அல்லது மகிந்தவின் சால்வையை இரவல் வாங்கிப் போட்டுள்ளாரா...?

  • கருத்துக்கள உறவுகள்

Friday, January 15, 2010

சம்பந்த சாணக்கியம்...?!

464px-Tamil_eelam_stamp.jpg

சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார்.

அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்படுத்தி அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானையும்.. எல்லையில் எப்போதும் போல தொந்தரவாக இருந்து கொண்டிருந்த சீனாவை எதிரிகளாகவும் நோக்கும் நிலையைக் கொண்டிருந்தது.

அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் "படித்த மேதாவி சாணக்கிய சட்டாம்பி அரசியல்வாதிகளான" அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவை மையப்படுத்தி ஏன் இந்தியாவின் தத்துப்பிள்ளைகளாகி இந்திய நலனைக் கொண்டு ஈழத்தில் தமிழ் மக்களின் அரசியலை இருப்பை பாதுகாக்க முடியும் என்று நம்பித்தான் செயற்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா தான் எல்லாம்.அதன்சொற்படியே செயற்பட்டும் கொண்டனர்.

அவர்கள் இந்தியாவைத் தாண்டி வேறு எவரையும் அன்று தமிழர்களின் துன்பியல் தொடர்பில் ஆறுதல் ஆதரவு வேண்டி நாடிச் செல்ல முயலவும் இல்லை. தமிழர்களுக்கு சிங்களவர்களால் நேர்ந்த கதியை இந்தியாவைத் தவிர பிற உலகிற்கு தெளிவாகச் சொல்லக் கூட இவர்கள் முனையவில்லை. இந்திரா காந்தியின் முந்தாணைக்குள் தான் தமிழர்களின் நலன் அடங்கிக் கிடப்பதாக தவம் இருந்தனர். இந்திரா காந்தியும் அதையே பெரிதும் விரும்பினார். அன்றைய நிலையில் இந்திராவுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இருந்த பிரச்சனை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை சிங்கள அரசு மீது செலுத்தவும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிப்பதாக இருந்தது.

அமிர்தலிங்கம் கோஷ்டியினர் டெல்லிக்கும் சென்னைக்கும் பறப்பதையே 1983 இல் இருந்து 1989 இறக்கும் வரை கொள்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஈட்டிக்கொடுத்த இராஜதந்திர வெற்றி என்று எதுவும் கிடையாது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்தியாவின் செல்வாக்கை தாண்டி வளரும் நிலைக்கு வந்த ஒரு கட்டத்தில் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய ஒருமைப்பாடு இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையாக இருந்தது. ஈழத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசை தீர வேண்டும் என்பதல்ல அன்று முக்கியமாக அந்த ஒப்பந்தத்தில் இடப்பெற்றிருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூட அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் இராஜதந்திர வெற்றியால் ஏற்பட்ட ஒன்றல்ல. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் மூலம் கிடைத்ததை வைத்தே இன்று வரை அமிர்தலிங்கம் கோஷ்டியினரும் பிற தமிழர் விரோத தமிழ் ஆயுதக் கும்பல்களும் அரசியல் நடத்தி வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

1989 வாக்கில் ஏற்பட்ட சிங்கள அரசுத்தலைமை மாற்றங்கள் இந்தியப் படை விலகலுக்கும் இந்திய - சிறீலங்கா உறவு மோசமடையும் நிலைக்கும் இட்டுச் சென்றது. அன்று இந்தியாவின் வடகோடியில் முனைப்புப் பெற்றிருந்த காஷ்மீர் பிரச்சனையில் சிறீலங்காவின் அப்போதைய பிரேமதாச அரசு பகிரங்கமாகவே பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டு வந்ததும் அன்றி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தது. அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் மத்தியில் இருந்து இந்தியாவால் பொறுக்கி எடுத்து வளர்க்கப்பட்ட வரதராஜப் பெருமாள் உட்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியினர் (இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேமசந்திரன் உட்பட) இந்தியாவே தஞ்சம்.. இந்தியாவே எல்லாம் என்று ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை இந்தியாவை நம்பியே தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எவரும் இந்தியாவின் நலனுக்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை முன்னுறுத்திப் பார்க்க முன்வரவில்லை. அப்படிச் செய்வதை சாணக்கியமற்ற.. படிப்பறிவற்ற.. சட்டம் தெரியாத சின்னப்பொடியள்களின் மண்விளையாட்டாகவே காட்டி வந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் நகர்வுகளோ வேறுமாதிரி இந்ததன. அவர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை வைத்து தனது நலனை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்க முற்படுகிறது என்று சரியாக அறிந்து அதன் வழி இந்தியாவை தமிழர்களின் வழிக்குக் கொண்டு வர அதற்கான வழிவகைகளைக் காண முயற்சித்தனர். இது மிதவாதிகள் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் வன்முறையை வெறுப்போர் என்றும் (1977 இல் வட்டுக்கோட்டை பிரகடனத்தைக் கொண்டு வந்து இரத்தத் திலகம் இட்டு வன்முறைக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நன்று.) தம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்து வந்த அமிர்தலிங்கம் கோஷ்டியினருக்கும் மற்றும் இதர தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் எந்த மாற்றுச் சிந்தனையும் இன்றி இந்திய வழியில் போய் அதுபோடும் பிச்சையில் தான் தமிழர்களின் அரசியல் உரிமையை பெற முடியும் என்ற நம்பிக்கைக்கு நெருக்கடியாக அமைந்ததும் அன்றி இந்தியாவின் பார்வையில் அதன் நலனுக்கு எதிரானதாகவும் பட்டது.

இந்த நிலையில் தான் 1995 இல் பதவிக்கு வந்த இந்திய விசுவாசியான சந்திரிக்கா அம்மையாரும் சமாதானம் பேசி வந்து போரின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியாவால் கொண்டு வரப்பட்டார். அப்போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் சம்பந்தன் உட்பட பலரும் மெளனமாக இருந்து சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் திட்டத்தை செயற்படுத்த உதவினர். இந்தியாவின் மறைமுக ஆதரவோடு அன்று நடந்த போரில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மையமாக விளங்கிய யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப் போனது. அப்போதைய இந்திய ஆளும் வர்க்கம் யாழ்ப்பாணம் மீட்சியை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண வெற்றியோடு விடுதலைப்புலிகளைப் பூண்டோடு அழித்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு எங்கனும் நிறுவி விட துடித்தார் சந்திரிக்கா. ஆனால் அதற்கு முதல் சர்வதேசத்தின் முன்னும் இந்தியாவின் முன்னும் தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்ளவே சந்திரிக்கா விரும்பினார். தமிழ் மக்கள் முன்னும் தன்னை ஒரு பேரினவாதியாகக் காட்டிக்கொள்வதை சந்திரிக்கா அன்றைய நிலையில் வெளிப்படையாக விரும்பாத போதும் அவருக்குள் பேரினவாதச் சிந்தனைகளே பெரிதும் குடிகொண்டிருந்தன என்பதை மாங்குளம் வெற்றியோடு அவர்கள் நடந்து கொண்ட முறைகள் விளக்கி இருந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நோக்க வேண்டும். பொத்தல் விழுந்திருந்த சந்திரிக்காவின் சமாதான தேவதைக்கான முகத்திரையினூடு வெளித்தெரிந்த பேரினவாதத் தோற்றத்தை தையல் போட்டு மறைக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்ய தீவிரமாகப் பங்களிப்புச் செய்ய சிலர் தாமாகவே முன்வந்தனர். அப்படி முன்வந்தவர்களில் கதிர்காமர் அஷ்ரப் நீலன்-திருச்செல்வம் சம்பந்தன் ஆனந்தசங்கரி பிரேமச்சந்திரன் டக்கிளஸ் தேவானந்தா சித்தார்த்தன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போதும் கூட பிரித்தானிய சமாதான ஏற்பாடுகளை இயன் பொக்சின் முயற்சிகளை.. ஈழப்பிரச்சனையில் பிரித்தானிய தலையீட்டை விரும்பாத இந்திய விசுவாசிகள் இயன் பொக்சின் முயற்சிகளுக்கு முடிவுகட்டி சந்திரிக்காவை சமாதான தேவதையாகக் காட்ட 1998 வாக்கில் ஒரு தீர்வுப்பொதியை உருவாக்கி தந்துவிட்டிருந்தனர். அந்தத் தீர்வுப்பொதியை வரைந்தவர்களில் நீலன் திருச்செல்வம் முக்கிமானவர். வரவேற்றவர்களில் சம்பந்தன் முக்கியமானவர்.

இறுதியில் அந்தத் தீர்வுப் பொதி வந்த மாத்திரத்திலேயே சிங்கள எதிர் தரப்புக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே வி பி புத்த பிக்குகளின் பங்களிப்பு முதன்மையானது. விடுதலைப்புலிகள் அந்தத் தீர்வுப்பொதியில் எதுவும் உருப்படியாக அமையப் போவதில்லை.. அது சந்திரிக்காவின் போர் முகத்தை மறைக்க போடப்படும் முகமூடி என்று தீர்வுப்பொதிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போதே சொல்லிவிட்டனர். இறுதியாக நடந்தி முடிக்கப்பட்டதும் அதுதான். ஒரு வெற்றுப்பொதிக்கு பெரிய ஆர்ப்பாட்டம் அளித்தவர்களில் சம்பந்தன் உட்பட்ட சிலரும் அடக்கம்.

அதன் பின்னர் போர்க்கள நிலவரம் தலை கீழாக மாறி சிங்களப் படைகள் புலிகளிடம் அடிவாங்கி ஓடும் நிலை வந்தது. தானே ஏவிவிட்ட சிங்களப் படைகளை மீட்க தனது படைகளை தயார் செய்யும் துர்ப்பாக்கிய நிலையும் இந்தியாவுக்கு உருவானது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக் கொண்டது. பிராந்தியத்தின் தென்கோடியிலும் தனக்கு சவால் ஒன்று உருவாவதை அது உணர ஆரம்பித்தது. அந்தச் சவாலை விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் ஆதரவோடு விடுக்கின்றனர் என்பதையும் இந்தியா உணரத்தலைப்பட்டது. ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுத வேண்டும் இன்றேல் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு வேண்டும் என்ற நிலைக்கு வந்த இந்தியா அன்றைய பொழுதில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுதுவதை தள்ளிவைத்துவிட்டு சமாதான வேடம் பூண்டு கொண்டது. சில உறுதிமொழிகளை அளித்து விடுதலைப்புலிகளை போர் நிறுத்தத்துக்குள் தள்ளியது. இருந்தாலும் விடுதலைப்புலிகளோடு ஏற்பட்ட கடந்த கால கசப்புக்களையும் விடுதலைப்புலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துவராத வகைக்கு கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகளையும் இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அந்த வகையில் விடுதலைப்புலிகளை முழுமையாக நம்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சர்வதேசத்திடமே அவர்களைச் சிக்கவைத்து அதன் வழி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தேவையான சரியான சந்தர்ப்பத்தில் அவர்களை அழிப்பதை இந்தியா திட்டமாக வரைந்து கொண்டது. இது விடுதலைப்புலிகளுக்கு தெரிய வந்த போது அவர்கள் ஏற்கனவே பின்னப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தெற்குப் பிராந்திய பாதுகாப்பும் ஒருமைப்பாடுமே அதன் இருப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.ஈழத்தில் அல்லது தமிழகத்தில் உள்ள தமிழர்களின் அரசியல் நலன் அல்ல. அந்த வகையிலேயே இந்தியாவின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு முதலில் விடுதலைப்புலிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால் பின்னர் ஈழத்தில் தனக்கு வேண்டிய சக்திகளை வளர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் தனது செல்வாக்கையும் நலனையும் பாதுகாக்கும் கொள்கைகளைப் பரப்பிவிடலாம் என்பதில் இந்தியா தெளிவாக இருந்து கொண்டது. இந்த விடயத்தில் 1987ல் அது கண்ட பாடம் அதற்கு இவ்வாறான ஒரு தெளிவைக் கொடுத்திருந்ததோடு ஈழத்தமிழர்களின் பலம் புலிகளே தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தது. புலிகளை முடக்கி தனக்கு சார்ப்பான ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஈழத்தில் நிறுவுவதே இந்தியாவின் நோக்கம்.

அதன்படி இந்தியாவின் தேவைகள் எதிர்பார்ப்புக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஓரளவு நிறைவேறி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவே எல்லாம் என்ற நிலைக்கு மீண்டும் தமிழர்களை கொண்டு செல்லும் நிலையை சம்பந்தன் போன்றவர்கள் உருவாக்கி வருகின்றனர். இது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை இந்தியா தனது நலனுக்காக பாவிக்கும் நிலையில் வைத்திருப்பதை செய்யுமே தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க ஒருபோதும் உதவாது.

தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது விடுதலைப்புலிகள் கொண்டிருந்த திடமான அரசியல் மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளே. விடுதலைப்புலிகளிடம் திடமான இராஜதந்திரக் கொள்கைகள் இருந்த போதும் அவை பூரணத்துவம் அற்றனவாக இருந்தன. அதற்குக் காரணம் தமிழர் தரப்புக்களிடம் ஒருவித கண்மூடித்தனமான இந்திய விசுவாசம்.. காதல்.. ஒட்டிக் கொண்டிருந்தது தான்.

ஈழத்தமிழர்கள் இந்த நிலையைக் கடந்து சர்வதேச அளவில் பல நாடுகளோடும் நெருங்கிய உறவுகளை உருவாக்கிக் கொண்டு இந்தியாவிற்கு தம்மீதுள்ள ஆதிக்கத்தை விடுவித்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு இந்தியா மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு தமது அரசியல் இராஜதந்திர வெளிவிவகார கொள்கைகளை தொடர்புகளை பலப்படுத்துவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி இந்தியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்தும் சுதந்திரமான தலையீட்டுக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு முடிவு வராமல் ஈழத்தில் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் விடுதலையை இந்தியாவும் சிறீலங்காவும் வழங்க இடமளிக்கப் போவதும் இல்லை.

35 வருட போர் அவலங்களைக் காட்டி (இவ்வளவு அவலங்களையும் தந்தவர்களில் இந்தியாவின் பங்களிப்பே அதிகம்) அதில் இருந்து விடுதலை பெற்றுத்தருகிறோம் என்ற பாணியில் இந்தியா ஈழத்தமிழர்களை சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் போர் அரசியலை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ய இருந்த அத்தனை காரணிகளும் அப்படியே இந்தியாவால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு முடிவு கட்ட சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் விரும்பமில்லை. அப்படி முடிவு கட்டிவிட்டால் இந்தியாவின் தென்கோடியில் தனக்கு எழும் சவால்களை தமிழர்களை வைத்து சரிக்கட்ட வாய்ப்புக்கிடைக்காது என்ற ஒரு பயம் இந்தியாவிடம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட தமிழர்களின் துன்பியலை தனது ஒருமைப்பாடு இறையாண்மையை பிராந்திய ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தியா பயன்படுத்துகின்றதே அன்றி அதற்கு தமிழர்கள் அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் உரிமைபெற்று இந்தியாவின் நிரந்தர நண்பர்களாக வாழ வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

இந்த நிலையில்.. டெல்லிக்கும் சென்னைக்கும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் பாலம் போடும் பறந்து திரியும்.. அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் கடந்த கால அரசியலையா மீண்டும் சம்பந்தன் போன்ற நவீன சாணக்கியர்கள் செய்து ஈழத்தில் இந்திய நலன் காக்கும் அரசியல் செய்யப் போகின்றனர்..???!

இந்தியா எமது நண்பனா எதிரியா என்பது அது எம்மோடு வைத்துக் கொள்ளும் நட்பின் உண்மைத் தன்மையில் இருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமே எமது நண்பன் என்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

தமிழீழ தேசிய தலைவர் சொன்னது போல் ஆசியாவின் கைகளுக்கு மாறி வரும் உலகின் பொருண்மிய பலம் இந்தியாவை நம்பி நடக்க முனைவதிலும் இந்தியா எம்மை நாடி வர நடப்பதுதான் அவசியம். இந்தியா எமது நண்பன் என்பது இந்தியாவையே நம்பு என்பதாகாது..!

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் புலிகள் சம்பந்தப்படாத மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகள் தொடர்பில் சம்பந்த சாணக்கியர்கள்.. சிந்திக்க வேண்டிய நேரம் இது. நாடு கடந்த தமிழீழ அரசும் பரிசீலிக்க வேண்டிய விடயம் இது.

செய்வார்களா.. அல்லது மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா...???!

புலிகளின் மீள்வரவு வரை.. அரசியல் நிச்சயம் என்பது நிரந்தரமில்லை ஈழத்தில் தமிழர்களுக்கு..!

http://kundumani.blo...og-post_15.html

(ஜனவரி 2010 இல் எழுதிய கட்டுரை இன்றைக்கும் அப்படியே சம்பந்தருக்கு பொருந்தி நிற்கிறது. சம்பந்தர் தவறு செய்ய சந்தர்ப்பம் அளிப்பது எமது தவறா.... சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தவறு செய்யபவர் சம்பந்தர் என்று அறிந்தும் அவரை நம்பியது எமது தவறா.. அல்லது சம்பந்தரின் தவறா..??!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலே... நெடுக்ஸ் இணைத்த படத்தில், சுமந்திரன் "ரை" கட்டியுள்ளாரா அல்லது மகிந்தவின் சால்வையை இரவல் வாங்கிப் போட்டுள்ளாரா...?

சந்தேகம் ஏன்? சால்வைதான்....

சும்மா கொடும்பாவிகளை எரிப்பதோடு விடாது ஜரோப்பா நாடுகளை பொன்று சர்ச்சையில் சிக்கியவர்கள் ராஜினமா செய்வது போல் சுமந்திரனும் பதவி விலகி அடுத்தவருக்கு வழிவடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நியமனத்தில் பதவிக்கு வந்த ஒரு அல்லக்கைதானே உடனே பதவி விலகவும்,

அதுதான் இவருக்கு மரியாதை சூடு சுரணை உள்ளவர் என்றால் உடனே இராஜணாம செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் தற்போதைய நீலன் திருச்செல்வம்.!!!!!!!!!!!!!!!!!!!நெடுக்குக்கு ஒரு பச்சை!!!

சுமந்திரனின் கொடும்பாவி எரித்தமை என்பதற்கு அப்பால், மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு பாராட்டுக்கள்.

தமிழர்தரப்பை ஒரு நெகிழ்வு அற்ற ஒரு அரசியல் தலைமைக்குள் கொண்டு செல்லவே காலம்காலமாக சிங்கள பேரினவாத பெளத்த அரசு கடும் உழைப்பு செலுத்தி பல அரசியல் நாடகங்களை அரகேற்றி வருகிறது. அதன் ஒரு காட்சியே இப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கூட்டமைப்பு நியமன எம்.பி. சுமந்திரனின் கொடும்பாவி கட்டித்தொங்கவிடுவது ஒன்றும் ’சிரஞ்சீவி மலையை காவிவந்த’ வீரசகாச செயல் அல்ல.

அரசுக்கு எதிராக மகிந்த அல்லது சந்திரசிறீ அல்லது ஹத்துறு சிங்காவின் ஒரு கொடும்பாவியை யாழ். பல்கலைக்கழகத்தில் கட்டித்தொங்க விட்ட முடியாதவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள அரசியல் கலாநிதிகளாக இருக்கத்தேவை இல்லை.

தமிழர்களை போல ஒரு உசார் மடையர்கள் கிடைக்க சிங்களம் என்ன தவம் செய்ததோ?

Edited by ராஜகுரு

சிங்கள அரசின் சூட்சுமமான அரசியல் சித்து விளையாட்டின் தமிழர் தரப்பு பங்காளிகளாக டக்கிளசையும் கருணாவையும் தான் எங்களால் வெளிப்படையாக் இனம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆபத்தான ஒரு அரசியல் சக்தி, சிங்கள பேரினவாதத்தின் நீண்ட கால அரசியல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் உருமறைக்கப்பட்டு அரசியல் அடியாளாக வேலை செய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களை போல ஒரு உசார் மடையர்கள் கிடைக்க சிங்களம் என்ன தவம் செய்ததோ?

உண்மை தான்,

இங்கு சம்பந்தரையோ,சுமந்திரனையோ ஆதரிக்கவில்லை ஆனால்

எம்மை பிரிக்க பல சூட்சிகள் நடக்கின்றன் அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் சரியாக ஆராயமல்

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருப்பது எமக்கு தான் இன்னும் இன்னும் ஆபத்து.

தமிழ்க்கூட்டமைப்பிரித்து, தமிழ்த்தலைமைகளுக்கும் புலம்பெயர்மக்களுக்கும் இடையே பிரிவினையை

ஏற்படுத்தி தமிழரை வலிமையிழக்க செய்வதே எதிரியின் நோக்கம் அதை நாமே கச்சிதமாக செய்து முடித்திடுவோம் போல. :icon_idea:

சுமந்திரன் துரோகியாக இருந்தால் அடுத்த தேர்தலில் ஆளை இல்லாமல் பண்ணவேண்டுமே எமக்குள் இருக்கும் பிளவை வெளிக்காட்ட கூடாது.

ராஜபக்சாவை மேற்குலகுடன் சேர்ந்து தூக்கிவிட்டு தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று எண்ணாமல் ரணிலும் அரசுக்கு சார்பாக ஒத்து ஊதுகின்றான்.

இங்குதான் காலம் காலமாக சிங்களம் எம்மை வெல்கின்றது.(குருபரனின் கட்டுரைகள அதை வடிவாக சொல்லுகின்றது)

இன்று தாயக மக்கள் உள்ள அரசியல் நிலையில் அவர்களால் டக்ளசின் இல்லை சந்திரசிறியின் இல்லை கந்துருசிங்கவின் இல்லை மகிந்தாவின் கொடும்பாவியை எரிக்க முடியாது.

ஆனால், ஒபாமாவின் இல்லை சுமந்திரனின் கொடும்பாவியை எரிக்கும் சுதந்திரத்தை மட்டுமே எதிரி விட்டுவைத்துள்ளான்.

கூட்டமைப்பு நாளை கூடுகிறது

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனித உரிமைக் கூட்டம் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்காக நாளை வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான மனித உரிமைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதமை குறித்துப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தாயகத் தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும், கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்கே இந்தக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடர் குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=83030870201115025

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் துரோகியாக இருந்தால் அடுத்த தேர்தலில் ஆளை இல்லாமல் பண்ணவேண்டுமே எமக்குள் இருக்கும் பிளவை வெளிக்காட்ட கூடாது.

ராஜபக்சாவை மேற்குலகுடன் சேர்ந்து தூக்கிவிட்டு தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று எண்ணாமல் ரணிலும் அரசுக்கு சார்பாக ஒத்து ஊதுகின்றான்.

இங்குதான் காலம் காலமாக சிங்களம் எம்மை வெல்கின்றது.(குருபரனின் கட்டுரைகள அதை வடிவாக சொல்லுகின்றது)

இலங்கையில் தமிழனின் அரசியல் தளமும், சிங்களவனின் அரசியல் தளமும் ஒரே தன்மை கொண்டது அல்ல.

சிங்கள அரசியல் தளத்திற்கு மக்கள் சக்திக்கு மேலே ஒரு அதிகாரம் படைத்த சக்தி இருக்கவில்லை! ஆனால் தமிழனின் அரசியல் தளம் அப்படி அல்ல, அது மக்கள் சக்தியை மிஞ்சிய சக்தியாக சிங்கள அதிகாரத்தின் 'தயவு', செல்வாக்கு செலுத்துகின்றது. அதன் வெளிப்பாடுதான் மக்களால் வெறுக்கப்படும் சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப் பெறுகின்ற நிலை. உதாரணக்கள்; டக்ளஸ், கருணா, பிள்ளையான்,

இந்த விடயம் உள்மனதிற்கு தெரியாதது போல் தமிழனின் DNA வரை குற்றம் சுமத்தி இன்பம் காண்பது ஒரு வகையான நோய்!

ஆத்துக்கட்டைக் கதையும் தமிழரின் நிலையும்.

ஒருவன் வெளியூர் பிரயாணம் செய்தபோது. ஒரு வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு கொழுக்கொட்டை செய்து கொடுத்தார்கள். அவன் கொழுக்கொட்டையை முன் பின் கண்டதும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. வாய்க்கு ருசியாக இருந்ததால் வீட்டுக்கு வந்து மனைவியைக்கொண்டு அதைச் செய்வித்து திரும்பவும் சாப்பிட நினைதது, அதன் பெயரை மறக்காமல் கொழுக்கொட்டை, கொழுக்கொட்டை என்று பாடமாக்கிக் கொண்டு வந்தானாம். வரும்போது ஒரு ஆற்றுவழியால் வந்தபோது, ஆற்றில் இடைக்கிடை கட்டைகள் நாட்டப்பட்டிருந்தன. அது என்ன என்று கேட்டதற்கு அவனுடன் கூட வந்தவர்கள் ஆத்துகட்டை என்று கூறினார்கள். இப்போது அவன் ஆத்துககட்டை, ஆத்துக்கட்டை என்று பாடமாக்கியதால் கொழுக்கட்டையை மறந்து விட்டான். கதை இவ்வாறு தொடருகிறது,…

தமிழர்கள் காலாகாலம் இப்படித்தான். முள்ளிவாய்காலில் மும்மரமாக நின்றவர்கள் அதை மறந்தார்கள். இப்போது ஜெனிவாவில் மனித உரிமை கவுன்சில் மாநாடு நடக்கிறது. ஜெனிவாவில் தமிழருக்கு சாதகமான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு நாங்கள் என்ன பங்களிப்பு செய்தோம்? ஜெனிவாவுக்குச் சென்று ஒரு குரலாவது கொடுத்தோமா? அல்லது வேறு எந்த விதத்திலாவது ஏதாவது செய்தோமா? அதைச் சிந்தித்காமல், குட்டிசிறியை செத்தபின் தூக்கிலிட்டார்களா? சாகமுன் தூக்கிலிட்டார்களா? என்ற விவாதம் மாதிரி சம்பந்தரையும் சுமந்திரனையும் பற்றி பேசி என்ன பலன்? காக்கைவன்னியன் கூட்டத்தில் கடசியாகச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியவாறு இருந்த படி நாங்கள் தனியாகவோ கூட்டாகவோ என்ன செய்யலாம் என்று சிந்தித்து அதைச் செய்ய வேண்டியதுதான். சும்மா இருந்துகொண்டு கருத்துச் சொல்வதில் அர்த்தமில்லை.

தமிழரைப் படுகொலை செய்த சிங்களவன் அதனை மறைப்பதற்கு, தமிழர் என்று சொல்பவரையும் சேர்த்துக்கொண்டு, படாத பாடு படுகிறான். படுகொலை செய்யதவனோடு கிறிக்கற் விளையாடிய சுமந்திரனைப்பற்றிப் பேசிப் பயன் என்ன?;. தமிழீழம் வேண்டுமென்று துவக்குத் தூக்கியவங்களே மகிந்தாவுக்கு ஆலாத்தி எடுக்கும்போது, படுகொலையின்பின் கிறிக்கெற் விளையாடிய சுமந்திரன் எந்த மட்டு?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.