Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் இண்டைக்கு நல்ல தெளிவா இருக்கார் எழுத்தும் தெளிவா இருக்கு கருத்தும் தெளிவா இருக்கு

ஆளும் தெளிவா இருந்து தான் இதை எழுதி இருப்பார் எண்டு நினைக்கிறன் காலை தானே கனடாவில இப்ப

நான்.. காணுவது கனவா? நனவா? என்று என்னையே.. கிள்ளிப்பார்த்தேன்... நொந்தது.

  • Replies 81
  • Views 4.6k
  • Created
  • Last Reply

அர்ஜுன் இண்டைக்கு நல்ல தெளிவா இருக்கார் எழுத்தும் தெளிவா இருக்கு கருத்தும் தெளிவா இருக்கு

ஆளும் தெளிவா இருந்து தான் இதை எழுதி இருப்பார் எண்டு நினைக்கிறன் காலை தானே கனடாவில இப்ப

அபாரஜிதன் தன் கருத்துக்களுக்கு சாயமிடுகிறார். அவர் வர்ணம் தீட்டி எழுதுவதால் கருத்துக்கள் துலக்கமாக இல்லை. எழுதுவதை விளங்கத்தக்கதாக எழுதுங்கள்.

Edited by மல்லையூரான்

.அதற்குள் பல்கலைகழக மாணவர் சுமேந்திரனின் கொடும்பாவியை தூக்கிவிட்டார்கள்.

நான் நினைக்கவில்லை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இதைச் செய்து இருப்பார்கள் என.

டக்கிக்கு யாழ்ப்பாணத்தை விட்டால் அரசியல் செய்ய களம் இல்லை. ஆனால் அவரின் அரசியலை செய்ய விடாமல் தடுப்பது த.தே.கூ ஆகும். யாழ் மக்களுக்கும் த.தே.கூ இற்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தினால் தான் ஆகக்குறைந்தது வடக்கு முதலமைச்சராகவாவது வர வாய்ப்பு இருக்கு. சுற்றி வர இராணுவம் இருந்து கண்காணிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இப்படியான ஒரு கொடும்பாவியை கொண்டு வந்து எவருக்கும் தெரியாமல் கட்டித் தொங்கவிடும் அளவுக்கு Risk எடுக்க தேவையான விடயம் அல்ல இது....ஆகவே அரசின் ஆதரவு பெற்ற ஒரு அணிதான் இதைச் செய்ய முற்பட்டிருக்க கூடும்...அப்படிப் பார்த்தால் டக்கி தான் முதல் இடத்தில் வருகின்றார்.

  • தொடங்கியவர்

டக்கி முதலைமைச்சராக வருவதை இன்றுள்ள நிலையில் மகிந்த பெரிதாக விரும்பமாட்டார். நல்லிணக்க அறிக்கையில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, அதை நிறைவேற்ற சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது. இந்தநிலையில் அவரை முதலைச்சராக்கினால், கயிறு மேலும் இறுககூடும்.

ஆனால் கொடும்பாவியை எரித்ததில் டக்கியின் கைகள் இருக்கலாம்.

சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் தான்தோன்றித் தனமான போக்கினாலேயே குழப்பங்கள் ஏற்பட்டது. தாயக மக்களும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மிகத் தெளிவாக உண்மையை நேரில் அறிந்து, உணர்ந்து செயற்பட்டுள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயலையும், ஒட்டுக்குழு பொறுக்கி டக்ளசையும் இணைத்து கற்பனை செய்யுமளவுக்கு ஒருசிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதில் காட்டும் ஆர்வம் விளங்குகிறது. சுமந்திரனின் ஆங்கிலப் புலமையை வைத்து அவனது போக்கிரித்தனத்தை உணராதவர்கள் இன்னொரு கதிர்காமரை உருவாக்குகின்றனர்.

சம்பந்தனுக்கு நிதி உதவி வழங்கும் கனடாவில் உள்ள சிலர் அவருக்கு பின்னால் அலைவது ஏன் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அது அவர்களின் குடும்ப சுயநலம் சார்ந்தது. தேவை ஏற்படின் பெயர், பெற்ற அனுகூலங்கள், ....... இத்தியாதிகள் ஆதாரங்களுடன் வெளிவிடப்படும்.

சுயநல ஆதரவை, அரசியலை இக்கணத்தில் விலக்குவது சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லது.

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)

மார்ச்சு 02, 2012

ஊடக அறிக்கை

இன்றைய உலக ஒழுங்கில் அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது ஒட்டித்தான் ஓடவேண்டும்

தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகளே!

வணக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஜெனீவாவில் நடைபெறும் அய்யன்னா மனிதவுரிமை அவைக்குச் செல்லாமைக்கு எதிராக இணையத்தளங்களிலும் செய்தி இதழ்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்படி எம்மோடு தொடர்பு கொள்பவர்களில் பலர் ததேகூ இன் மீதுள்ள பற்றுக் காரணமாக தமது ஆதங்கத்தை தெரியப்படுத்தியவர்கள்.

இந்த நிலையில் ததேகூ ஜெனீவாவுக்குச் செல்வதைத் தவிர்த்தமைக்கு ஆன காரணங்களை விளக்க விரும்புகின்றோம்.

1. அய்.நா மனிதவுரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானமானது போர்க்குற்ற விசாரணை பற்றியது அல்ல.

இது சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் (கபாமநஆ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில ஆக்க அடிப்படையிலான பரிந்துரைகளைச் செயற்படுத்துமாறு கோரும் ஒரு தீர்மாமாகும். இந்த கபாமநஆ அறிக்கையைத் ததேகூ நிராகரித்து விட்டது. இதுபற்றி 105 பக்க அறிக்கை மும்மொழிகளிலும் வெளிவந்தது தெரிந்ததே.

2. அய்.நா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரச சார்பற்ற அமைப்புச் சார்பாக வருபவர்கள் கலந்து கொள்வர். ததேகூ இந்த இரண்டு பிரிவிலும் அடங்காது.

3. அய்.நா மனிதவுரிமை அவையில் அரச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டமே முதன்மையானது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தத்தம் நாட்டு அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே பேசி வாக்களிப்பர். அந்தந்த நாட்டு அரசுகளோடு பேசித்தான் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்க வேண்டும். இந்தப் பணியை ததேகூ செவ்வனே செய்து வருகிறது. மேற்படி கூட்டத்தில் பங்கு கொள்ளும் 47 நாட்டுத் தூதர்களோடு தொடர்பு கொண்டு சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள். போரினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களிலும் கூடச் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கூட இராணுவத்தின் தலையீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதியில் இராணுவ நிர்வாகம் நடைபெறுகிறது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான இராணுவ முகாம்களை இராணுவ குடியிருப்புக்களையும் அமைத்துள்ளார்கள். இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறார்களும் ஆவர். போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து ஏதிலிகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் துணை இராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும் பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல், திட்டமிட்ட பரத்தமை போன்றவற்றிலும் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ததேகூ எமது பக்க நியாயங்களையும் தமிழ் மக்கள் படும் அவலங்களைகளையும் எடுத்துரைத்து தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பும் பன்னாட்டு அரசுகளின் அறிவுரைக்கு அமையவும் ஜெனீவா செல்வதில்லையென்ற முடிவை ததேகூ எடுத்தது.

இது இவ்வாறிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனின் உருவப் பொம்மையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பு பல்கலைக் கழக கட்டடத்தில் தொங்க விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தமிழினத் துரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் கழுத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. சுலோக அட்டையில் போர் குற்ற விசாரணை எங்கே? எனக் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளதாம்.

இந்தச் செய்தியினை TamilNet இணையதளமும் வெளியிட்டு தனது வழக்கமான அழுக்காற்றையும் வெளிக்காட்டியுள்ளது. இதில் இருந்து இந்தக் கீழ்த்தரமான பரப்புரைக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஒன்றியம் எனப் பல ஒன்றியங்கள் இயங்குகின்றன. இதில் எந்த ஒன்றியம் இப்படியான கீழ்த்தரமான செயலுக்குப் பொறுப்பு என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ழகர, ளகர வேற்றுமை தெரியாதவர்கள் இதை எழுதியுள்ளார்கள்.

பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிச் சிங்கள இராணுவமும் காவல்துறையும் காவலுக்கு நிற்கும் போது அதனையும் மீறி இலகுவில் யாரும் கழற்றி எடுத்துச் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கயிற்றினால் உயரமான மாடிக்கட்டடம் ஒன்றில் உருவப் பொம்மையை தொங்க விடப்பட்டிருப்பது இது உள்வீட்டு வேலை என்பதைக் காட்டுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வட்டாரத்தோடு தொடர்பு கொண்டு விசாரித்ததில் இபிடிபி டக்லஸ் தேவானந்தாவின் கைக்கூலி மாணவர்களே இந்தக் கைங்கரியத்தை செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. அதன் காரணமாகவே அந்த உருவப் பொம்மையை சிங்கள இராணுவமோ சிங்கள காவல்துறையோ அகற்றாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இந்தப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்துக்கு துணிவு இருந்திருந்தால் மாகாண சபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை இல்லை வட - கிழக்கு இணைப்புத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு இராசபக்சேயின் அமைச்சர் பரிவாரங்களோடு ஜெனிவாவுக்குப் போயிருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் கொடும்பாவியை யாழ்ப்பாண பல்கலைக் கழகக் கட்டடத்தில் தொங்க விட்டிருக்க வேண்டும்!

ததேகூ எடுத்த முடிவுக்கு திரு சுமந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மட்டும் அதற்குப் பொறுப்பல்ல. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக) அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ததேகூ இன் பொதுச் செயலாளர் திரு மாவை சேனாதிராசா, கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அப்படியிருக்க திரு சுமந்திரன் மீது மட்டும் சேறுவாரிப் பூசுவது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன?

திரு சுமந்திரன் ஒரு மூத்த வழக்கறிஞர். கட்சிப் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். வன்னிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அதனை ஆவணப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். கபாநஆ இன் அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து 105 பக்கங்களைக் கொண்ட திறனாய்வை மூன்று மொழிகளிலும் தயாரித்து வெளியிட உதவினார். அரசு தமிழ்ப் பகுதிகளில் மேற்கொண்ட தனியார் காணிப் பதிவு சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் சென்று வழக்காடி வெற்றிபெற்றார். கடந்த நான்கு மாதங்களில் இரண்டுமுறை அமெரிக்கா வந்து இராசாங்க திணைக்களத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இது போன்ற அவரது கட்சிப் பணிதான் ததேகூ இன் எதிரிகளுக்கு அவர் மீது காழ்ப்புணர்வை உரவாக்கியுள்ளது. அவர் பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால் அவர் மீது சேறு பூச யாரும் முன்வந்திருக்க மாட்டார்கள். படித்தவர்களைப் பிடிக்காத ஒரு கலாச்சாரம் எம்மிடையே இருக்கிறது.

மேலே கூறியவாறு ததேகூ அய். நா வல்லுநர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகளை வரவேற்றிருக்கிறது. குறிப்பாக போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்பதை ததேகூ வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளது.

கபாநஆ அறிக்கையை ததேகூ புறந்தள்ளியுள்ள அதே நேரம் அந்த அறிக்கையில் காணப்படும் உடன்பாடான (positive) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை அது வரவேற்றிருக்கிறது.

அதாவது ஆணையத்தின் பரிந்துரைகளான (1) வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சம் இராணுவத்தினர் அகற்றப்பட்டு சிவிலியன் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும். (2) போரின் போது அரச படைகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் சட்டப்படியான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். (3) ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள களையப்பட வேண்டும். (4) காவல்துறை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். (5) புரையோடிப் போய்க்கிடக்கும் இனச் சிக்கலுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பன உடன்பாடான பரிந்துரைகளாகும்.

அமெரிக்க அரசின் தீர்மானத்தை ததேகூ ஒரு தொடக்கமாகக் கருதுகிறது. சிறிலங்கா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தத் தவறின் பன்னாட்டு சமூகத்தின் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என அமெரிக்கா சிறிலங்கா அரசை எச்சரித்துள்ளது கவனிக்கத் தக்கது.

எமது வரலாற்றில் முதல்முறையாக உலக நாடுகளில் ஒரு பகுதி எம்மை ஆதரிக்கிறது. தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் அவர்களது அரசியல் வேட்கைகளை சிறிலங்கா அரசு நிறைவு செய்யப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றன. உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டும். சுண்டங்காய் அளவு நாடான சிறிலங்கா அமெரிக்கா என்ற வல்லரசோடு - ஒரு காலத்தில் நட்பு நாடாக இருந்த நாட்டோடு - மோதுகிறது. இது ததேகூ இன் இராசதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய உலக ஒழுங்கில் - புவிசார் அரசியலில் - அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது. ஒட்டித்தான் ஓடவேண்டும்.

அனைத்துலகம் என்பது முக்கியமாக அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளாகும். இந்த நாடுகளின் உதவி இல்லாமல், ஒத்தாசை இல்லாமல் எமது உரிமைகளைப் பெறலாம் என நினைப்பவர்கள் அந்த உத்தி அல்லது உத்திகள் எவை என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.

நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் ியாயமாகவும் நீதியாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருத வேண்டும். இப்போதைக்குச் சாத்தியம் இல்லாதவற்றைக் கேட்டுப் பயனில்லை.

முடிவாக ததேகூ இன் பேச்சாளர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ததேகூ இன் முடிவு திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் எடுத்த முடிவு என கனடிய தமிழ் வானொலியில் சொல்லிய கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம். கூட்டமைப்போடு கருத்து வேறுபாடு இருந்தால் அதனை நாலு சுவர்களுக்கு உள்ளே விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதை விடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என கருத்துக் கூறுவது அவர் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு அழகல்ல. அது மகிந்த இராசபக்சேயின் பொறிக்குள் விழுவது போல் ஆகிவிடும். அதற்கு அவர் பலியாகக் கூடாது.

இது தொடர்பாக மார்ச்சு 02 இல் கூடவிருக்கும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு எதுவானாலும் அதனை நாம் வரவேற்போம். ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் மீது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்பதை எந்த அய்யத்துக்கும் அப்பால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

வே. தங்கவேலு

தலைவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)

நக்கீரன் எனப் பெயரிடப்பட்டு குயினால் இணைக்கப்பட்டிருக்கும் பதிவு படிப்பதற்கு இனிமையாகவும் தெளிந்த வசன, கருத்துநடையுடனும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது ஆனால் அறமுட்டாள்கள் இல்லை என்பது ஆறுதலான விடையம்.

இனத்தை அறிவால் சுத்த தெரிந்த ஒரு கூட்டம் இருப்பது உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது?

(இப்படி நான் சொல்லவில்லை நீங்கள்தான் எழுதி உள்ளீர்கள் )

உங்களுடைய முகவரிகள்தான் எங்களுக்கு தெரியாதது. (உங்களுடைய வீட்டு விலாசம் இல்லை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)

இது தொடர்பாக தமிழ்மக்கள் பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பும் பன்னாட்டு அரசுகளின் அறிவுரைக்கு அமையவும் ஜெனீவா செல்வதில்லையென்ற முடிவை ததேகூ எடுத்தது.

அறிக்கை எப்போது விடப்பட்டது? கடிதம் எப்போது அனுப்பப்பட்டது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) பொய் பேசிப் பிழைப்பு நடாத்தும் கேவலம் இதில் மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முடிவை எடுத்தது கூட்டமைப்பா அல்லது சம்பந்தன் - சுமந்திரன் எதேச்சாதிகாரமாக எடுத்த முடிவு ஏனையோருக்கு அறிவிக்கப்பட்டதா?

கடந்த காலங்களில் இந்திய அரச பயங்கரவாதிகள் மீது விசுவாசத்தை வெளிப்படுத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன், இம்முறை சம்பந்தன் - சுமந்திரன் கும்பலின் எதேச்சாதிகாரத்தை தெளிவாக வெளிப்படுத்தியது பாராட்டப்படல் வேண்டும்.

சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் தான்தோன்றித் தனமான போக்கினாலேயே குழப்பங்கள் ஏற்பட்டது. தாயக மக்களும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மிகத் தெளிவாக உண்மையை நேரில் அறிந்து, உணர்ந்து செயற்பட்டுள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயலையும், ஒட்டுக்குழு பொறுக்கி டக்ளசையும் இணைத்து கற்பனை செய்யுமளவுக்கு ஒருசிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதில் காட்டும் ஆர்வம் விளங்குகிறது. சுமந்திரனின் ஆங்கிலப் புலமையை வைத்து அவனது போக்கிரித்தனத்தை உணராதவர்கள் இன்னொரு கதிர்காமரை உருவாக்குகின்றனர்.

சம்பந்தனுக்கு நிதி உதவி வழங்கும் கனடாவில் உள்ள சிலர் அவருக்கு பின்னால் அலைவது ஏன் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அது அவர்களின் குடும்ப சுயநலம் சார்ந்தது. தேவை ஏற்படின் பெயர், பெற்ற அனுகூலங்கள், ....... இத்தியாதிகள் ஆதாரங்களுடன் வெளிவிடப்படும்.

சுயநல ஆதரவை, அரசியலை இக்கணத்தில் விலக்குவது சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லது.

.. சில வருடங்களுக்கு முன், சிங்கள கட்சியான யு.என்.பியில் இருந்து மிலிந்த மொரகொட, பேராசிரியர் பீரிஸ், ராஜித செனவிரட்ன போன்றோர் ஆளும் கட்சியில் இணைந்தார்கள். உண்மையில் என்ன நடந்தது, இவர்கள் கடந்த காலங்களில் நடத்திய தில்லுமுல்லுக்கள்/பெண்களின் தொடர்புகள்/ஊழல்கள் எல்லாவாற்றினதும் ஆவணங்களை இவர்கள் முன் மகிந்த போட்டு, ஆதரவளிக்கப் போகிறீர்களா? இல்லை உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஸ்தம்பிதம் ஏற்படுத்தப் போகிறீர்களா? என்று கேட்க, வேறு வழியற்று சரணடைந்தார்கலாம்!!

... சம்பந்தரும் சரணாகதிதான்!! ... எதற்கு சரணாகதி என்பது, சம்பருக்குள்தான்??? ... ஆனால் அறிக்கையோ "த.தே.கூ" பக்குவமாக கருமங்களை முன்னெடுக்குமாம்" .... எல்லோரும் மொட்டை அடித்தார்கள் எமக்கு, இன்று சம்பந்தனும் சேர்ந்திருக்கிறார்!!!!!!!!!

Edited by Nellaiyan

இனத்தை அறிவால் சுத்த தெரிந்த ஒரு கூட்டம் இருப்பது உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது?

(இப்படி நான் சொல்லவில்லை நீங்கள்தான் எழுதி உள்ளீர்கள் )

உங்களுடைய முகவரிகள்தான் எங்களுக்கு தெரியாதது. (உங்களுடைய வீட்டு விலாசம் இல்லை)

30 வருடமாக வெறும் காசோடு தமிழீழம் அமைப்போம் என்றதை ஏற்றுக் கொண்டு கொடிபிடித்தவர்கள் மத்தியில் கூட்டமைப்பு செய்யும் எதுவும் தவறாக தான் இருக்கும்..... அதுக்காக கூட்டமைப்பு தமிழீழம் பெற்றுத்தரும் என எதிர்பாக்க முடியாது, ஆனால் பசிக்கு தோறு தின்று கொண்டு வாழுவதுக்கு வீட்டைக் கேக்கலாம்.

இந்த ஜநா விடையத்தில் கூட்டமைப்பு தவறு செய்தால் அடுத்தா தேர்தலில் கூட்டமைப்பை வீட்டுக்கு அனுப்பலாம்.

கூட்டமைப்பு ஒன்றும் ஆயுதக் குழுவில்லைத்தானே? 30வருடமாக தமிழீழம் பெற்றுதருவோம் என்று சொன்னவர்கள் ஒருமுறை தேர்தலை நேரடியாக சந்த்தித்து இருந்தால்? அடுத்த தேர்தலில் எங்கை இருப்பார்கள்?

Edited by I.V.Sasi

.. சில வருடங்களுக்கு முன், சிங்கள கட்சியான யு.என்.பியில் இருந்து மிலிந்த மொரகொட, பேராசிரியர் பீரிஸ், ராஜித செனவிரட்ன போன்றோர் ஆளும் கட்சியில் இணைந்தார்கள். உண்மையில் என்ன நடந்தது, இவர்கள் கடந்த காலங்களில் நடத்திய தில்லுமுல்லுக்கள்/பெண்களின் தொடர்புகள்/ஊழல்கள் எல்லாவாற்றினதும் ஆவணங்களை இவர்கள் முன் மகிந்த போட்டு, ஆதரவளிக்கப் போகிறீர்களா? இல்லை உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஸ்தம்பிதம் ஏற்படுத்தப் போகிறீர்களா? என்று கேட்க, வேறு வழியற்று சரணடைந்தார்கலாம்!!

... சம்பந்தரும் சரணாகதிதான்!! ... எதற்கு சரணாகதி என்பது, சம்பருக்குள்தான்??? ... ஆனால் அறிக்கையோ "த.தே.கூ" பக்குவமாக கருமங்களை முன்னெடுக்குமாம்" .... எல்லோரும் மொட்டை அடித்தார்கள் எமக்கு, இன்று சம்பந்தனும் சேர்ந்திருக்கிறார்!!!!!!!!!

30 வருடம் புலிகள் போராடும் போது உங்களுக்கு கேக்க தோனாத ஒன்றை கூட்டமைப்பை பார்த்து கேக்க துனிவு வந்துவிட்டது......

ஏன் 10 வருடம் முடிய கேட்டு இருக்காலாம் தானே 10 வருடம் ஆகிவிட்டது விட்டு ஒதுங்க சொல்லி கேட்டு இருக்கலாம். சரி இன்னும் 10 வருடம் கூட கொடுத்த பின் கேட்டு இருகலாமே போராடினது போதும் இடத்தை காலி பன்ன சொல்லி???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஜெனிவா செல்லாதிருப்பiயிட்டு வரும விவாதங்களை நோக்கினால்.

1.கூட்டமைப்பு ஜெனிவா போய் எதையும் சாதிக்க முடியாது.

இதை தெரிந்திருந்தும் கடைசிவரை ஜெனிவா போவோம் என்று கூட்டமைப்பினர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்கள்?

2.சுரேஸ் பிரேமச்சந்திரன் அரியநேந்திரன் ஆகியோர் சம்பந்தருக்க எதிராகப் போர்கொடி தூக்கியதன் மூலம் கூட்டமைப்புக்குள் இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.இந்த பிளவை வெளிக்காட்டாமல் இருப்பதற்காகவேனும் ஜெனிவாவுக்கு சுற்றுலா போய் வந்திருந்தால் மக்கள் குழப்ப மடைய மாட்டார்'கள்.

3.கூட்டமைப்பு போகாததை சிறிலங்கா அரசு சாதகமகப் பரப்புரை செய்கிறது.

4.கனகரத்தினம் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்ற வைத்தியர்.டக்ளஸ் போன்றவர்களை அழைத்துச் சென்றது எதற்காக எந்தப்பயனும் இல்லாமலா? அவர்களின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவாவது போயிருக்கலாம்தானே!

5.நாட்டில் நிலவும் நல்ல சூழலைக் கெடுக்க விரும்பவிலை;லை என்ற அறிக்கை சிறிலங்காவுக்குச் சாதகமாகத்தானே இருக்கிறது.

30 வருடம் புலிகள் போராடும் போது உங்களுக்கு கேக்க தோனாத ஒன்றை கூட்டமைப்பை பார்த்து கேக்க துனிவு வந்துவிட்டது......

ஏன் 10 வருடம் முடிய கேட்டு இருக்காலாம் தானே 10 வருடம் ஆகிவிட்டது விட்டு ஒதுங்க சொல்லி கேட்டு இருக்கலாம். சரி இன்னும் 10 வருடம் கூட கொடுத்த பின் கேட்டு இருகலாமே போராடினது போதும் இடத்தை காலி பன்ன சொல்லி???????????????????

... நாங்கள் கடந்த காலங்களில் புலிகளிடம் கேட்காதபடியால், ததேகூவிடம் கேட்ககூடாதாம்??? ... நாங்கள் புலிகள் இருந்த காலங்களில் விட்ட தவறை தொடர்ந்து விட சொல்கிறீர்கள்?????

... இங்கு ததேகூ என்பது யார்?? சம்பந்தனை பிழையாக வழி நடத்தும் சுமத்திரனா? இல்லை ஏனைய எல்லா கட்சி சேர்ந்த அங்கத்தவர்களுமா??

... நேற்றைய தினமும் யாழ் உதயனில் ... ததேகூ, ஜெனிவா செல்லாதது தொடர்பாக மக்கள் விசனம் ... என்ற தலைப்புடன் செய்தி!! ... அதற்கு மேல் சுரேஸ் பிராமச்சந்திரன், தொடக்கம் அரியநேந்திரன் வரை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். தமிழர்களின் ஒரே கட்சி, தமிழர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் கட்சி ... தமிழின அழிப்பை சர்வதேசத்தில் நீதி கேட்க முற்படாதாம்!!???? .. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்குமாம்!!!!!!!!!!!!??????? ... விட்டால் மொட்டை அடிப்பதென்ன ... சந்தனமும் தடவி, பூவும் போட்டு செம்புள்ளி கரும்புள்ளியும் குத்திப் போட்டு விடுவியல்!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பற்றி வெளிநாட்டில் இருக்கும் குல்மா கோஸ்டிக்ள் விமர்சிப்பதற்கு அருகதை இல்லை... இப்போ களம் இலங்கைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது .. இப்போ புலிகள் இல்லை... அவர்கள் செய்தது ஆயிரம் தவறு இருக்கலாம் விடுங்கப்பா.. தவறுவது ஜகஜம்...இப்போ மாற்று கருத்து மாணிக்கங்கள் செல்லலாம்... புதிய கொள்கையை கோட்பாடை உருவாக்க உங்களின்ட உதவி தேவைபடுகிறது...

பிளீஸ் ஏர் சிறிலங்கோ... ???

... உந்த சுமந்திரன் ததேகூவில் இருந்து வெளியேற்றப்படும்வரை ததேகூவினால் எவ்விதமான ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாது!!!!

முள்ளிவாய்காலுடன் ஓர் மிகப்பெரிய அழுத்த்தில் ததேகூ இருந்தது உண்மைதான்!!! அப்போ தப்பிப்பது என்பதே மிகபெரிய ஒன்றாக இருந்தது. இன்றைய நிலையில், அன்றையதோடு ஒப்பிட்டு ததேகூ அரசியல் செய்யுமாயின் அது தமிழினத்துக்கு இழைக்கும் துரோகம்!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக வெறும் காசோடு தமிழீழம் அமைப்போம் என்றதை ஏற்றுக் கொண்டு கொடிபிடித்தவர்கள் மத்தியில் கூட்டமைப்பு செய்யும் எதுவும் தவறாக தான் இருக்கும்..... அதுக்காக கூட்டமைப்பு தமிழீழம் பெற்றுத்தரும் என எதிர்பாக்க முடியாது, ஆனால் பசிக்கு தோறு தின்று கொண்டு வாழுவதுக்கு வீட்டைக் கேக்கலாம்.

இந்த ஜநா விடையத்தில் கூட்டமைப்பு தவறு செய்தால் அடுத்தா தேர்தலில் கூட்டமைப்பை வீட்டுக்கு அனுப்பலாம்.

கூட்டமைப்பு ஒன்றும் ஆயுதக் குழுவில்லைத்தானே? 30வருடமாக தமிழீழம் பெற்றுதருவோம் என்று சொன்னவர்கள் ஒருமுறை தேர்தலை நேரடியாக சந்த்தித்து இருந்தால்? அடுத்த தேர்தலில் எங்கை இருப்பார்கள்?

நரி ரனிலை வீட்டுக்கு அனுப்பும் படி சும்மா கண்ணை காட்டியதற்கே என்ன நிலை என்பது உங்களின் சிறிய நினைவு சக்திக்கு தெரிய நியாயமில்லை.

30 வருடம் புலிகள் போராடும் போது உங்களுக்கு கேக்க தோனாத ஒன்றை கூட்டமைப்பை பார்த்து கேக்க துனிவு வந்துவிட்டது......

ஏன் 10 வருடம் முடிய கேட்டு இருக்காலாம் தானே 10 வருடம் ஆகிவிட்டது விட்டு ஒதுங்க சொல்லி கேட்டு இருக்கலாம். சரி இன்னும் 10 வருடம் கூட கொடுத்த பின் கேட்டு இருகலாமே போராடினது போதும் இடத்தை காலி பன்ன சொல்லி???????????????????

புலிகள் எல்லா பம்மாத்துக்களையும் ( மேற்குலகம், இந்தியா,சிறிலங்கா அரசு) நன்கு அறிந்ததால் தான் யாரையும் கேட்காமல் தமது மக்களுக்காக இறுதி வரை மார்பில் குண்டை ஏந்தினார்கள் என்பதை சாதாரண பாமர மக்களும் அறிவர். புலிகள் மக்களுக்காக நேர்மையாக இருந்தார்கள் என்பதை யாரும் அறிவர். என்ன புலிகளை கேள்வி கேட்கவில்லையா? புலிகளுக்காக எழுதும் ஊடகங்களை விட இன்றும் கூட புலிகளை விமர்சிக்கும் ஊடகங்கள் மிக அதிகமானவை.

கூட்டமைப்பு நாடகம் (உண்மையில்) ஆடுமெனில் அடுத்த தேர்த்தலில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது.

புலிகளை பற்றி வெளிநாட்டில் இருக்கும் குல்மா கோஸ்டிக்ள் விமர்சிப்பதற்கு அருகதை இல்லை... இப்போ களம் இலங்கைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது .. இப்போ புலிகள் இல்லை... அவர்கள் செய்தது ஆயிரம் தவறு இருக்கலாம் விடுங்கப்பா.. தவறுவது ஜகஜம்...இப்போ மாற்று கருத்து மாணிக்கங்கள் செல்லலாம்... புதிய கொள்கையை கோட்பாடை உருவாக்க உங்களின்ட உதவி தேவைபடுகிறது...

பிளீஸ் ஏர் சிறிலங்கோ... ???

வன்னியில் இருந்து கொண்டு அட்வைஸ் சொல்லும் உங்கள் கருத்துகள் நாளை நூல்களகாக வெளிவரும்.

நரி ரனிலை வீட்டுக்கு அனுப்பும் படி சும்மா கண்ணை காட்டியதற்கே என்ன நிலை என்பது உங்களின் சிறிய நினைவு சக்திக்கு தெரிய நியாயமில்லை.

புலிகள் எல்லா பம்மாத்துக்களையும் ( மேற்குலகம், இந்தியா,சிறிலங்கா அரசு) நன்கு அறிந்ததால் தான் யாரையும் கேட்காமல் தமது மக்களுக்காக இறுதி வரை மார்பில் குண்டை ஏந்தினார்கள் என்பதை சாதாரண பாமர மக்களும் அறிவர். புலிகள் மக்களுக்காக நேர்மையாக இருந்தார்கள் என்பதை யாரும் அறிவர். என்ன புலிகளை கேள்வி கேட்கவில்லையா? புலிகளுக்காக எழுதும் ஊடகங்களை விட இன்றும் கூட புலிகளை விமர்சிக்கும் ஊடகங்கள் மிக அதிகமானவை.

கூட்டமைப்பு நாடகம் (உண்மையில்) ஆடுமெனில் அடுத்த தேர்த்தலில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது.

இன்னும் எனது கேள்வியை புரிந்து கோளாதையிட்டு மனவருத்தமடைகிறேன்.

  • தொடங்கியவர்

வன்னியில் இருந்து கொண்டு அட்வைஸ் சொல்லும் உங்கள் கருத்துகள் நாளை நூல்களகாக வெளிவரும்.

இப்ப தான் கொஞ்ச நாள் முன்னம் நாடுகடந்த அரசு கேபியின் ஆள் மற்றது நாள்கடத்தும் அரசு என்று நக்கல் அடித்தீர்கள் இப்ப என்னட என்றால்? இது எல்லாம் ஒரு பெழைப்பு. :D

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து கொண்டு அட்வைஸ் சொல்லும் உங்கள் கருத்துகள் நாளை நூல்களகாக வெளிவரும்.

இன்னும் எனது கேள்வியை புரிந்து கோளாதையிட்டு மனவருத்தமடைகிறேன்.

வன்னி பூமி ஓக்கே... நான் பண்டார வன்னியன் கோத்திரம்தான் ஆனால் இடம் தான் கொஞ்சம் மிஸ் ஆகுது...

ஏனப்பா வன்னி ஈழத்தில்தான் இருக்கவேண்டுமா.

ஒரே டமாஸ்தான்

நல்லது.

பொய் பேசமாட்டான் அரிச்சந்திரன் அது அவனை நாடுழந்து சுடுகாடுவரை கொண்டு சென்றது ஆனால் அங்கை அதே பொய் பேசாத அதே உறுதி தான் மீழும் இழந்தத அனைத்தையும் திரும்ப கிடைக்க உதவியது ஆனால் இங்கே.......................... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெருசு..

நான் செஞ்சி கோட்டை சிறுத்தை.. சும்மா சகட்டு மேனிக்கு அடித்து விட வேண்டாம்...

பெருசு..

நான் செஞ்சி கோட்டை சிறுத்தை.. சும்மா சகட்டு மேனிக்கு அடித்து விட வேண்டாம்...

தெரியும் மறுபக்கம். கிளறவேண்டாம் என கூவம் கூவுது.

  • கருத்துக்கள உறவுகள்

பெருசு எனக்கே பொழுது போகல என்று இருக்கேன் .. ஜஸ்ட் ரைம் பாஸ்.. நீங்கள் என்னை திட்டுங்கள் நான் உங்களை திட்டவே மாட்டேன்.... பொழுது போக வேணாமாப்பா..?

லோகிதாசன் சந்திரமதியில் இருந்து ஸ்டார்ட் பணுங்க பெருசு ...

மற்ற பதிவுகளில் எனக்கு என்ன எழுத தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன். ஆனால் உங்கள் உங்களுக்கு எழுதும் போது மட்டும் எனது கருத்தின் தொகை அதிகரிக்கிறதே என்ற அற்ப சந்தோசம் மட்டும் தான்.

Edited by I.V.Sasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.