Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவா அமர்வை இடியப்ப சிக்கலாக்கிய மகிந்த – கொந்தளிக்கும் பீரிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

g.l.piris.jpg

எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார்.

தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் விடுதியில் ”வெய்டராக” பணியாற்றிய மகிந்த சமரசிங்கவை, அக்காலத்தில் அநேகமானோர் ”பிஸ்சு மைக்கல்” என்ற அடையாளப்படுத்துவதாகவும் ஜீ.எல். கூறியுள்ளார்.

அப்போது ”சார்” என்று தன்னை அழைத்த ஒருவரை, தனக்கு தலைவராக நியமித்தது ஜனாதிபதி தன்னை அவமதிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல் எனவும் ஜீ.எல். குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில்துறையில் வர்த்தமானி அறிவித்தலையோ, மனித உரிமைகள் தொடர்பான எந்தவொரு பொறுப்பையோ அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு வழங்காததால் ஜெனீவா மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மகிந்த சமரசிங்கவை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன. தமரா குணநாயகம் மனநிலை சரியில்லாதவர் என்பதால் மருத்துவ அறிக்கைக்கு அமைய அவர் இதற்கு முன்னர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நபர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவா பேரவையின் ஏராளமான பொறுப்புக்கள் இவ்வாறு மனநிலை சரியில்லாத ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமரா குணநாயகம் குறித்து தான் பலதடவை (இலங்கை) ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய போதிலும், அவர் இதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜெனீவா சென்ற சந்தர்ப்பத்தில் தமரா குணநாயகத்தின் வீட்டில் தங்கியிருந்தமையே இதனைப் பொருட்படுத்தாமைக்குக் காரணம் எனவும் ஜீ.எல்.குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்திருந்தால் இவ்வாறான பிரேரணைத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுத்திருக்கலாம். இதுகுறித்து கலந்துரையாட வொஷிங்டன் வருமாறு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், செல்ல வேண்டாம் என (இலங்கை) ஜனாதிபதி உத்தரவிட்டார். இவையே தற்போது இந்தப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த பட்சம், ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேணை தொடர்பாக மகிந்த ராஜபக்‌ஷ, அமெரிக்க ஜனாதிபதி அல்லது அமெரிக்க இராஜாங்கச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயத்தை சமரசம் செய்திருக்கலாம்.

எனினும், மகிந்த இதனையும் செய்யவில்லை. அத்துடன், தனக்கும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.(இலங்கை) ஜனாதிபதியின் இவ்வாறான பிடிவாத செயற்பாடுகளினால் சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கவோ, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவோ முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eeladhesa...lle-nachrichten

அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பீரிசின் தலை உருளக்கூடும், அதாவது பதவி பறிபோகும். ஆனால் இந்த உண்மையான சிங்கள இனவாதி ஐ.தே.க.வில் போய் ஓட்டிவிடுவான், தமிழரை அழிக்க.

தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் விடுதியில் ”வெய்டராக” பணியாற்றிய மகிந்த சமரசிங்கவை, அக்காலத்தில் அநேகமானோர் ”பிஸ்சு மைக்கல்” என்ற அடையாளப்படுத்துவதாகவும் ஜீ.எல். கூறியுள்ளார்.

அப்போது ”சார்” என்று தன்னை அழைத்த ஒருவரை, தனக்கு தலைவராக நியமித்தது ஜனாதிபதி தன்னை அவமதிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல் எனவும் ஜீ.எல். குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.எல்.பீரிஸ் அகதி அந்தஸ்து கோருவது தான் நல்லது.மகிந்த குடும்பம் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள்.உண்மையாக இப்படி பீரிஸ் அறிக்கை விட்டாரா என சந்தேகம் உள்ளது.

ஜி.எல் பீரிஸ்...சிரிக்கும் சம்பிக்க ரணவக்க..

இவர் வாழ்க்கையில் செய்த உருப்படியான ஒரு விடயம், சந்திரிக்கா காலத்தில் அரசியல் தீர்வு பொதி என்று வரைந்து முதல் முதலில் வெளி வந்த தீர்வுத் திட்டம். மிகவும் உருப்படியான சமஸ்டி ஆட்சிக்குரிய பல அம்சங்களைக் கொண்டு அமைந்த திட்டம் அது. ஆனால் இனவாதிகளின் எதிர்ப்பால் கழுதை தேய்ந்து நுள்ளான் எறும்பாக மாறின மாதிரி, ஜி.எல் இனால் ஈற்றில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம் பல வெட்டுகளுடன் வந்து காணாமல் போன பட்டியலில் சேர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் எங்களால் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று மட்டும்தான். அது மேற்குலகிற்க்கும் சிங்கள அரசுக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள் கூர்மையாவதற்கான சூழலைக் குளப்பிவிடாமல் இருப்பதுதான்.

மேற்குலகின் குறைந்த பட்ச்சக் கோரிக்கைகளைக்கூட இலங்கை அரசு கேட்ட்க செய்ல்படுத்த தயாரில்லாமல் இருக்கிற புள்ளியில் தான் எமது அரசியல் இராசதந்திரம் செயல்பட வேண்டும். மேற்கின் நிலைபாட்டில் திருப்தியற்று அதை முன்னிலைப் படுத்தி ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் நாங்கள் அந்த புள்ளியை சிதறடிக்க வேண்டுமென்று சிங்கள அரசு எதிர்பார்க்கிறது.

அத்தகைய நகர்வில் நாம் ஈடுபட்டால் ஏற்க்கனவே மேற்குலகில் தோற்றுப்போன விடுதலைப் புலிகளின் இராசதந்திர அணுகுமுறையைத்தான் நாம் கைக்கொள்ள நேரிடும்.இது பிரச்சினையை இலங்கை எதிர் மேற்க்கு என்கிற புள்ளியில் இருந்து தமிழர் எதிர் மேற்க்கு என்ற புள்ளியை நோக்கி திருப்பும். இப்படி நாம் மேற்குடன் மோதும் சூழல் மட்டுமே சிங்கள அரசை காப்பாற்றும்.

இதே தந்த்ரத்தில் சிங்கள அரசியல்வாதிகள் நிபுணர்கள். தங்களோடு முரண்படும் சோழர்கலை பாண்டியரோடு மோத விட்டு பழம் எடுத்த வரலாற்று அனுபவம் அவர்களுக்கு உண்டு.

இந்தியா தங்களுடன் முரண்பட்டபோது அந்த முரண்பாட்டை இந்தியா புலிகள் முரண்பாடாக மாற்றுவதில் ஜே ஆர் வெற்றி பெற்றார். அதேபோல மேற்க்கு நாடுகளுக்கும் இலங்கைக்கும் உள்ள முரண்பாட்டை மேற்க்குநாடுகள் புலிகள் முரண்பாடாக மாற்றுவதில் கதிர்காமரின் உதவியுடன் சந்திரிகா வெற்றி பெற்றார். இந்த இரண்டு வெற்றிகளும்தான் எங்கள் தோல்வியின் ஆரம்ப புள்ளிலளாகியது

புலிகள் அரங்கில் இல்லாத சூழலினால் மேற்குலகின் நிலைபாடுகளின் மாற்றம் வந்துள்ளது. இந்திய நிலைபாடு மாற்றமடையா விட்டாலும் இந்தியாவின் இன்றய நிலைபாடு அவர்களது பழைய நிலைபாட்டின் தொடற்ச்சியல்ல. இதுதான் சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச பிராந்திய அரசியல் நெருக்கடிகலின் பின்னணியாகும்.

இன்றும் சிங்கள இராசதந்திரிகள் எங்கள் பக்க தீவிரவாதிகளை உசுப்பிவிட்டு மீண்டும் எம்மை சர்வதேசத்துடன் மோத வைக்த்து தாங்கள் தப்பிவிட முயல்கிறார்கள். இதனை நம்மவர்கள் பலர் உணரவில்லை.

அதிஸ்ட்ட வசமாக தமரா குணநாயகம் இராசதந்திரியாக செயல்படாமல் அரசியல் வாதிபோல செயல்படுகிறார். மேற்குலகிற்க்கு எதிராக அவர் ஆரம்பிதிருக்கும் offensive தாக்குதல் அணுகுமுறை நமக்கு நல்லது.

எங்கள் இலட்ச்சியங்களை அடைவதல்ல எதிரி தன் இலட்சியங்களை அடைவதை சிக்கலாக்குவது மட்டுமே இப்பொழுது நமக்கு சாத்தியமானது என்பதைப் புரிந்து கொள்லாமல் நாம் எந்த இலக்கையும் அடைய முடியாது. எதிரியின் சிக்கல் நிலை எமது இலட்சியங்களுக்கான போராட்டத்துக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

அரசியல் இராசதந்திரம் விடுதலைக்கு எதிரானதல்ல மலைகளும் மடுக்களும் சூழ்ந்த சூழலில் எங்கள் திசையை நோக்கி நேர்கோட்டில் செல்ல முடியாது என்றும் பின் முன்னாக வழைந்த பாதையில் செல்ல வேண்டும் என்று சொல்வதை துரோகமாகப் பார்கிற - விடுதலைக்கு எதிரானதாகப் பார்க்கிறபோக்கு 1984ல் இருந்தே எல்லா விடுதலை அமைப்புகளிடமும் காணப்பட்டது. . இது தொடர்பான அரசியல் இராணுவ தந்திரங்கள் பறிய விவாதம்தங்களில் 1980ல் இருந்து நானும் பல்வேறு சந்தர்பங்களில் சம்பந்தப் பட்டிருந்தேன்..

என்னுடைய ஈழபோரின் தோல்வி - மூல உபாயம் எதிர் தந்திரஉபாயம் Failure of Elam war- strategy vs tactics என்கிற நூலில் இவைதொடர்பாக ஆராய இருக்கிறேன்.

0

poet

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீ.எல்.பீரிஸ் அகதி அந்தஸ்து கோருவது தான் நல்லது.மகிந்த குடும்பம் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள்.உண்மையாக இப்படி பீரிஸ் அறிக்கை விட்டாரா என சந்தேகம் உள்ளது.

எண்டாலும் கேட்க நல்லா இல்லை?  புலியை பற்றி எத்தனை கதை அளந்தவை. 

அதெல்லாம் அந்த காலம் அண்ணா.  

மேற்கின் ஆசையை நிறைவேற்ற பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்று கிழம்பியாவர்களின் நிலை? 

புலி இப்ப இல்லை மற்றும் எமது தமிழ் அரசியல்வாதிகளது ஏமாற்று வேலைகள் எடுபடுபவதில்லை.

காலம் மாறிவிட்டது.  

தங்களூக்குள் யார் முதலாவது மகிந்தா தொண்டர் என்று காட்ட வந்த அடிபாடு இது. லாபம்/நட்டம் அதோடுதான் சேர்த்து கணக்கு பார்ப்பது.

யாழ்ப்பாணத்தார் கிழக்கு மாகாணத்தை அழிக்கிறார்கள் என்று சில நாடக்ளுக்கு முன் இதேகளத்திலை பச்சை நஞ்சு துவேசம் காக்கினவர்கள் திரி அழிஞ்சு போயிருக்கும் என்று நினத்து இப்போ சர்வதேசத்தின்முன் நமது நீதியை கேட்க முயல்வது இராஜதந்திரமாகாது என்றும் போதிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களன் எதிலாவது வெற்றி பெற்றால் எல்லோரும் சேர்ந்து ஆளாலளுக்கு மார்பு தட்டிக்கொள்வார்கள் ^_^

ஆனால் ஏதாவது பிரச்சனை என்றுவந்தால் ....... யாரவது ஒருவனின் தலையில் அரைப்பானுகள் இம்முறை பீரிசின் தலை கிடைத்திருக்கு ........ :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன. தமரா குணநாயகம் மனநிலை சரியில்லாதவர் என்பதால் மருத்துவ அறிக்கைக்கு அமைய அவர் இதற்கு முன்னர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நபர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது தெரிந்ததுதானே..!?? :D

அத்துடன், மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜெனீவா சென்ற சந்தர்ப்பத்தில் தமரா குணநாயகத்தின் வீட்டில் தங்கியிருந்தமையே இதனைப் பொருட்படுத்தாமைக்குக் காரணம் எனவும் ஜீ.எல்.குறிப்பிட்டுள்ளார்.

:wub: :wub: :wub:

தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் விடுதியில் ”வெய்டராக” பணியாற்றிய மகிந்த சமரசிங்கவை, அக்காலத்தில் அநேகமானோர் ”பிஸ்சு மைக்கல்” என்ற அடையாளப்படுத்துவதாகவும் ஜீ.எல். கூறியுள்ளார்.

அப்போது ”சார்” என்று தன்னை அழைத்த ஒருவரை, தனக்கு தலைவராக நியமித்தது ஜனாதிபதி தன்னை அவமதிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல் எனவும் ஜீ.எல். குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு காலம் தமிழ் தலைவர்கள் தான் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டார்கள். இப்பொழுது தான் சிங்களவர்களில் ஆரம்பித்திருக்கிறது. முதலில் பொன்சேகா. அடுத்தது பீரிஸாக இருக்கலாம். இவர்கள் இன்னும் பல பிரிவுகளாக பிரிவுபட வேண்டும்.

சிங்களன் எதிலாவது வெற்றி பெற்றால் எல்லோரும் சேர்ந்து ஆளாலளுக்கு மார்பு தட்டிக்கொள்வார்கள் ^_^

ஆனால் ஏதாவது பிரச்சனை என்றுவந்தால் ....... யாரவது ஒருவனின் தலையில் அரைப்பானுகள் இம்முறை பீரிசின் தலை கிடைத்திருக்கு ........ :lol::icon_mrgreen:

இது கூட அவர்களின் ராஜதந்திரம். ஒருவனில் பழியை போட்டு விட்டு மற்றைய அனைவரும் தப்பிவிடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் தமிழ் தலைவர்கள் தான் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டார்கள். இப்பொழுது தான் சிங்களவர்களில் ஆரம்பித்திருக்கிறது. முதலில் பொன்சேகா. அடுத்தது பீரிஸாக இருக்கலாம். இவர்கள் இன்னும் பல பிரிவுகளாக பிரிவுபட வேண்டும்.

இது கூட அவர்களின் ராஜதந்திரம். ஒருவனில் பழியை போட்டு விட்டு மற்றைய அனைவரும் தப்பிவிடுவார்கள்.

சிங்களவனின் இராஜதந்திரம் இப்போது சொதப்பலாகி சில நாட்கள் ஆகிவிட்டது ......

அதற்காக உலகநாடுகள் உடனடியாக தமிழருக்காக தீர்வினை பெற்று தந்திடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது !

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்கள் தமிழர்களிடையே பிரிவினையை வளர்த்தது போல.

எங்கட தமிழ்/ஆங்கில ஊடகங்களும் இப்போ சிங்களவர்களிடையே பிரிவினையை வளர்க்கவேண்டும்.

சிங்களம் தெரிந்த தமிழ் தெர்சிய ஆதரவாளர்கள், சிங்கள இணைய ஊடகங்களில் சிங்கள பிரிவினையை ஊக்குவிச்சு கருத்து பகிரவேண்டும்.

நாங்களும் ஒரு சிங்கள ஊடகம் தொடங்கி, அவர்களிடையே பிளவு வரக்கூடிய கருத்துகளை பிரசுரிக்க வேண்டும்.

எல்லாரும் ஒற்றுமையாக செய்வோம் வாரீங்களா .?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.