Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது!

Featured Replies

எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..?

இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது.

sl_soldiers_ptk.jpg

குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந்து கல்வி கற்ற மாணவர்களை இலக்கு வைத்தே சிங்கள இராணுவப் புலனாய்வுக் குழு வலை விரித்திருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. வடக்கில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் மாணவர்களை உள்ளடக்கியதாக யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளன.

வடபகுதி மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்கு மாணவர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்கின்ற போதிலும் சிறீலங்காவிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களைப் போலவே மேற்படி இரு பல்கலைக்கழகங்களும் பாட வசதி மற்றும் இட ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப மாணவர்களைப் பரிமாறிக் கொள்வதும் உண்டு.

ஆயினும் தமிழீழத் தேசியப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு காத்திரமான பங்கு உண்டு. போராட்டத்தின் ஆரம்பகாலம், போராட்ட வளர்ச்சி, போராட்டத்தின் நியாயப்பாடும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டமை போன்ற பல்வேறு பரிணாமங்களிலும் யாழ்.பல்கலைக்கழகம் முனைப்புடனேயே செயலாற்றியது.

JU0830.jpg

பொங்குதமிழ் என்ற எழுச்சிப் போராட்டம் மூலம் யாழ். பல்கலைக்கழகம் உலகின் மூலை முடுக்கெங்கும் புகுந்து கொண்டது. ஈழத் தமிழ் மக்களின் பேசு பொருளாகவும் ஆணித்தரமான குரலாகவும் விளங்கிய யாழ். பல்கலைக்கழகம் இன்று வரை சிறிதும் பிசகின்றி - நிலை தளம்பாமல் - தடுமாறாமல் தன் பணியை ஆற்றி வருகின்றது.

கடந்த 2011ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உள்ள பாரிய நீர்த்தாங்கியின் மேலே ஏறி, வானளாவக் கொழுந்து விட்டு எரியக்கூடிய ஈகைச்சுடரை ஏற்றி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

சந்திக்குச் சந்தி காவலரண்களும் தினமும் இராணுவ ரோந்துகளும் நடைபெறுகின்ற யாழ். மண்ணில் இவ்வாறான செயல்களைச் செய்வதற்கு அசாத்தியமான துணிவு தேவை. இந்த எவருக்கும் அஞ்சாத மிடுக்கோடு தமிழ் மக்களுக்கான பணியை இன்று வரை யாழ். பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்றது.

விடுதலைப் பாசறையில் வளர்கின்ற வேங்கைகளுக்கு இயல்பாகவே வீரம் பிறப்பதைப் போல யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற மாணவர்களுக்கும் தானாகவே வீரமும் துணிவும் பிறக்கிறது. இதனால் தான் சிங்கள இராணுவத்திற்கும் இராணுவப் புலனாய்வாளார்களுக்கும் யாழ். பல்கலைக்கழகம் சிம்ம சொப்பனமாகத் தெரிகிறது.

இலங்கையிலேயே ஒரு பல்கலைக்கழகத்தைச் சுற்றி அதிகமான படையினர் காவல் நிற்கின்றனரென்றால் அது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாகவே இருக்க முடியும். இந்தப் பின்னணியில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களென்றால் சிங்களத்திற்கு சினம் வருகின்றது.

கடந்த காலங்களில் இங்கு கல்வி கற்று வெளியேறிய மாணவர்களிடம் யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலப்பகுதியில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. முதற் கட்டமாக யாழ்.பல்கலையில் கல்வி கற்ற வன்னி மாணவர்கள் மீது சிங்களத்தின் பார்வை திரும்பியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் 2005 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி மிக முக்கியமான காலகட்டமாகும் பல்வேறு திருப்பங்களும் இன அழிப்புகளும் இடம்பெற்றது இக் காலத்திலேயேயாகும். இக் காலப் பகுதியில் யாழ். பல்கலைகயில் கல்வி கற்ற வன்னி மாணவர்கள் எதிர்காலத்தில் அரசுக்கெதிரான சக்திகளாக உருவெடுக்கலாமென்ற அச்சம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர்களை அச்சுறுத்தி அடக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் இராணுவ புலனாய்வுத்துறை ஏவி விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திரட்டப்பட்ட மேற்படி மாணவர்களின் விபரங்களுடன் யாழ்ப்பாணம், மற்றும் வன்னியில் இருக்கின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்கின்ற இராணுவப் புலனாயவாளர்கள், குறித்த மாணவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

படிக்கின்ற காலப் பகுதியில் எதற்காக அடிக்கடி வன்னிக்குச் சென்றீர்கள்..? பல்கலைக்கழகத்தில் நீங்கள் தங்கி நின்று கல்வி கற்றபோது செலவுகளுக்கு யார் பணம் வழங்கியது..? புலிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தீர்களா.? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மேற்படிக் காலப்பகுதியில் கல்வி கற்று வெளியேறிய சிலர் திருமணமாகிய நிலையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய பலர் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களில் திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்பவர்களை விடுத்து ஏனையவர்களிடமே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இத் தகவல்களை வெளியே கூறவேண்டாமென்று இராணுவம் புனாய்வாளர்கள் தங்களை அச்சுறுத்தியதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோர் தெரிவித்தனர். விசாரணையின் போது தமது கை, கால்கள் மற்றும் உடற்கட்டமைப்பு மற்றும் உடல் பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளனவா போன்றவற்றை இராணுவப் புலனாய்வாளர்கள் தீவிரமாக அவதானிப்பதாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டோர் கூறுகின்றனர்.

இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த விசாரணை விடயங்கள் வெளியே தெரியவராத போதிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோரும் அவர்களின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வன்னியில் பெற்றோரைப் பார்க்கப் போனதும், மீண்டும் வந்து கல்வி கற்றதும், விடுமுறைகளின் போது வீட்டுக்குச் சென்றதும் தவறா என்றும் மேற்படி விசாரணைக்குட்படுத்தப்பட்ட, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சம நேரத்திலேயே தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள், தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு போன்ற துறைகளையும் கட்டி வளர்த்துக் கொண்டிருந்தார். ‘கல்வியும் மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்’ என்று தெளிவாகவே அவர் எடுத்தியம்பினார்.

தலைவரின் கொள்கை வழி நடந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பீடம், தமிழ் மக்களின் பாதிப்புக்களை ஓரளவேனும் குறைக்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டு `தேசியத் தலைவர் நிதியம்` என்ற ஒன்றை ஆரம்பித்தது. தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் இயங்கிய இந்த நிதியத்தின் ஊடாக, வறுமையில் வாடிய நிலையில் அவசர சிகிச்சைக்கு நிதி தேவைப்பட்டோர், வறுமை காரணமாக கற்றலைத் தொடர முடியாதோர், போன்றோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரவலத்தின் போது தமிழர் தாயகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இதே நிதியத்திலிருந்தே தேசியத் தலைவர் 30 கோடி ருபாவை ஒதுக்கீடு செயதிருந்தார். ஈழத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இதனை இலகுவில் மறந்து விட மாட்டார்கள். மறக்கவும் முடியாது.

இந்நிலையில், வறுமையால் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழக் கல்வியைத் தொடர முடியாத பல மாணவர்களுக்கு தேசியத் தலைவர் நிதியத்திலிருந்து தமிழீழ கல்விக் கழகத்தினூடாக மாதாந்தம் உதவுதொகை வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தச் சேவை தாயகத்திலும் புலத்திலும் வாழ்கின்ற பல தமிழ் மக்களுக்கே இன்று வரை தெரியாத நிலையில் சிறீலங்கா அரச படையின் புலனாய்வாளர்களின் காதுகளுக்கும் தற்போது தான் இவ்விடயம் தெரியவந்திருக்கிறது.

இதனாலேயே புலிகளின் நிதியில் கல்வி கற்ற மாணவர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்க சிங்களப் புலனாய்வுத்துறை முயன்று வருகிறது. தமிழ் இளைஞர், யுவதிகளை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாமென்று சிறீலங்கா இராணுவமும் புலனாய்வுத்துறையும் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீரம் விளையாடிய மண்ணில் பிறந்தவர்கள் சோரம் போக மாட்டார்கள். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. பாரியதொரு திருப்பத்தில் வந்து நிற்கின்றது. சர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் தமிழினம் மீண்டும், `தலைவன் சொன்ன வேதம் கேட்டு யாகம் செய்யப் புறப்படுமே தவிர அமைதியாக அடங்கியிருக்காது`.

நன்றி : ஈழமுரசு

http://www.lankasri.com/ta/link-3m4340SdMgb6eEIcQ372.html

அத்துடன் சர்வதேசத்தால் கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் கூடத்தான் நியாயமாக்கப்படுகின்றது !

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அதெல்லாம் இருக்கட்டும் உங்கட font சைஸ் கூட்டிவிடுங்க, இல்லையென்றால் கூடிய விரைவில் கண்ணாடி போடவேண்டி வாறது தவிர்க்க முடியாமல் போவிடும் :lol:

  • தொடங்கியவர்

முதல்வன் மன்னிக்கவும் ஏதோ கணனியில் கோளாறு

மாற்றுவதற்கு முயற்சிக்கிறேன்

நன்றி தமிழ்சூரியன், உங்களின் உடனடி reaction இற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு தகவல் இந்த முறை ஐ. நா. நோக்கி நடந்து சென்றவர்களால் ஐ.நாவிடம் சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்தது. இதை இங்கு எழுதுவது தப்பென்றால் அழித்துவிடவும்.

சர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது!

தமிழர்கள் இனி போராயுதத்தைத் தூக்குவதைவிட அறிவாயுதத்தை தூக்கியே தமது விடுதலையைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சிங்களவனை மொக்கன் என்றும் எம்மை யுதனுக்கு அடுத்த அறிவாளி எண்டு பீற்றிக் கொள்ளும் நாம் தொடர்ந்து இலங்கைத் தீவில் எமது இருப்பை இழந்து கொண்டே இருக்கிறோம்.

இந்நிலையில் இன்னொரு ஆயுதப் போராட்டம் என்று தமிழ் ஊடக ஆய்வாளர்கள் பூச்சாண்டி காட்டுவதை விட்டுவிடுங்கள்.

யாதார்த்தம், தற்போதைய, எதிர்கால அரசியல் பொருளாதார சூழ்நிலை என்று எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதுவே எமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்.

அதைவிடுத்து இன்னொரு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது எம்மை நாமே அழித்துக் கொள்ளுவதற்கு ஒப்பானது.

Edited by மின்னல்

அப்படி ஒன்று இருக்கிற மாதிரியா கட்டுரை சொல்லுது?

இதுக்க விசுகு அண்ணை வேற ஜெனிவாக்கு போனவர்கள் நேரடியாக சொல்லிபோட்டினம் ஆயுதம் தூக்க போகிறம் முடிந்ததை சிங்களவன் செய்து பாக்கடுமே.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து 3 வருடத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம். தமிழர்கள் இன்னும் சில காலத்தில் இருக்கும் சில நிலப்பரப்பிலும் சிறுபான்மையாக்கப்படுவார்கள் என்பது நிச்சயமான ஒன்றாக உள்ளது.மேற்குலகமோ தனது சுயநலத்துக்கு எமது பிரச்சனையை கையில் தூக்கியுள்ளது. மேற்குலகம் போல் தமிழர் அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அரசியலில் உள்ளார்கள்.இவர்களோ இளைஞர்களை தமக்குள் உள்வாங்காமல் தாங்களே வாழ் நாள் தலைவர்களாக இருக்கிறார்கள்.தமிழ் இளைஞர்களோ பொறியியலாளர்,வைத்தியர்,கணினி போன்ற துறைகளிலேயே படிக்கிறார்கள் அல்லது பெற்றோரால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

மின்னலின் கருத்துக்களுடன் நூறு வீதம் உடன்படுகின்றேன்.

இன்று நாம் மேற்குலகம், இந்தியா ஆகிய நாடுகளை சிங்களத்திற்கு எதிராக மாற்றவேண்டும்.

தமிழர்கள் இனி போராயுதத்தைத் தூக்குவதைவிட அறிவாயுதத்தை தூக்கியே தமது விடுதலையைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

மாணவர்கள் படிக்க வேண்டும். இனிமேலைய போராட்டங்கள் புலம் பெயர் மக்களுடையது. தமது நாட்டு அரசாங்கங்களை ஈடுபட வைப்பது அவர்களின் பொறுப்பு. இப்படி கட்டுரைகள் இப்போதைக்கு அவசியமில்லை. இவற்றைப்போடுவோரை அடையாளம் காட்டி வைத்தீர்களானால் நம்பவா விடவா என்பது பற்றி முடிவெடுக்கலாம்.

ஆயுதப்போராட்டமா? கேணயன்களின் எழுத்து. அவர் இங்க புலத்தில் சொகுசாக இருந்துகொண்டு மற்றவரை பலிகொடுக்கப்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்று இருக்கிற மாதிரியா கட்டுரை சொல்லுது?

இதுக்க விசுகு அண்ணை வேற ஜெனிவாக்கு போனவர்கள் நேரடியாக சொல்லிபோட்டினம் ஆயுதம் தூக்க போகிறம் முடிந்ததை சிங்களவன் செய்து பாக்கடுமே.

தயவு செய்து விசுகு பற்றிய நீங்கள் வரைந்து வைத்திருக்கும் விம்பத்தை விடுங்கோ.

கருத்தை வாசியுங்கோ.

அதில் எங்கும் அது எனது கருத்தாகவோ அதை நான் வழி மொழிவதாகவோ குறிப்பிடவில்லை. கிடைத்த செய்தியைத்தான் பதிந்தேன்.

அதிலும் அது தமிழருக்கு தீங்குதருமாயின் அழித்துவிடும் படியும் எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறிருக்கிறது?? நடக்கக்கூடிய சாத்தியங்களையும், யதார்த்தையும் தூக்கித் தனியாக வைத்தால், தேவையென்று ஒன்று இருக்கிறதல்லவா??? 1983 இற்கு முன்னர் இருந்த அதே தேவை இப்போது இன்னும் பன்மடங்கு அதிகமாகவே இருக்கிறது.

1950 இலிருந்து 1980 வரை சனநாயகம், அகிம்ஸை என்று போராடிப் பார்த்தோம், எதுவுமே கிடைக்கவில்லை. 1980 இலிருந்து 2009 வரை ஆயுதப்போராட்டம் நடத்தினோம், இந்தியப் பரதேசி நாய்களும், சனிப்பிடித்த அமெரிக்கா தலமையிலான மேற்குலகும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனும் பம்மாத்தைக் காட்டியும் வெற்றிபெறும் தறுவயிலிருந்த எமது தாயக விடுதலைப் போராட்டத்தை ஒன்று சேர்ந்து அழித்து முடித்தார்கள். ஆக, வெற்றிகொள்ளப்பட வேண்டிய ஒரு போராட்டம் அநியாயமாக வஞ்சகர்களினால் அழிக்கப்பட்டது. மாறாக நாம் ஆயுதப் போராட்டத்தைப் போதுமடா சாமி என்று கைவிடவில்லை இதுவரையிலும்.

இவை இரண்டும் இல்லையென்றால் இனி என்ன செய்வதாக உத்தேசம்? எங்களை அழித்த அமெரிக்காவையும் இந்தியாவையும் எமக்கு நீதி தாருங்கள், சுதந்திரம் பெற்றுக்கொடுங்கள் என்று கேட்கலாம் என்கிறீர்களா??? எப்படி ?

பாலஸ்த்தீனியர் இதுவரையிலும் அதைத்தானே செய்கிறார்கள், என்னத்தை இதுவரையில் அடைந்திருக்கிறார்கள்?? குர்திஸ்களும் இதைத்தானே கேட்கிறார்கள். என்னத்தைக் கண்டார்கள்?? திபெத்தியர், காஷ்மீரியர், குரொஸ்னியர், பர்மிய கரன் போராளிகள், காலிஸ்த்தான் போராளிகள், மணிப்பூர் நாகலாந்துப் போராளிகள் என்று எவருமே எதையுமே அடையவில்லை. இப்படியிருக்க யாரிடம் நீதி கேட்கப் போகிறீர்கள்???

ஒன்றில் உங்களிடன் எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது உங்களது நாட்டின் சர்வாதிகாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரியாக இருக்கவேண்டும், குறைந்தது நீங்கள் ஐரோப்பாவின் மத்தியிலாவது இருக்கவேண்டும். ஆனால் நாங்களோ உலகின் அடையாளமில்லாத மூலையில் அடைபட்டு அழிபடு நாதியற்ற இனம். எமக்காக யார் வருவார் என்று நினைக்கிறீர்கள்??? இப்படியே அமெரிக்காவை நம்பினால் குறைந்தது இன்னொரு 50 - 60 வருடங்கள் சந்தோசமாக அறவழிப்போராட்டம் நடத்தலாம, எந்தப் பிரச்சனையுமில்லை.

ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கான சூழ்நிலையும், யதார்த்தமும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தேவையில்லை என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது என்றும் போல இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே கணன்றுகொன்டிருக்கிறது. 1980 இல் ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கான தேவை எவ்வளவுக்கு இருந்ததோ அதைவிட இப்போது 250,000 காரணங்கள் அதிகமாகவே இருக்கிறது.

தயவு செய்து விசுகு பற்றிய நீங்கள் வரைந்து வைத்திருக்கும் விம்பத்தை விடுங்கோ.

கருத்தை வாசியுங்கோ.

அதில் எங்கும் அது எனது கருத்தாகவோ அதை நான் வழி மொழிவதாகவோ குறிப்பிடவில்லை. கிடைத்த செய்தியைத்தான் பதிந்தேன்.

அதிலும் அது தமிழருக்கு தீங்குதருமாயின் அழித்துவிடும் படியும் எழுதியுள்ளேன்.

விசுகு அண்ணை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கருத்துக் களத்தில் இப்படியான கதைகளை எழுதலமா?

அவர் சொல்லும் போது சொன்னவ்ருக்கு காதப்பொத்தி அடிக்க தோன்றவில்லையா? இல்லை விசில் அடித்து விட்டு வந்தீர்களா? :lol::D

என்னப்பா இந்தாளு

ஒரு பக்கத்தால வன்முறை வேண்டாம் வராது என்கிறார்

இன்னொரு பக்கத்தால என்னை வன்முறைக்குள் தள்ளுகிறார்...

:(

வனமுறையால் நாடு பெற போய் அழிந்த கூட்டம் நாம் மீண்டும் வன்முறையை சரியான பாதையாக எடுக்க சொல்பவனுக்கு எதிராக வன்முறையை பாவிக்க வேண்டியது தான். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.