Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டு இறைச்சி சாப்பிட்டால்... ஆயுள் குறையும்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kuh_004.gifBauernhof-_Tiere-__Familienferien-_Kuh.jpg kuh_007.gif

மாட்டு இறைச்சி சாப்பிடுவது, மனித ஆயுளை குறைக்கும் : ஆய்வில் தகவல்.

ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

பன்றியில் கோழிக்கறியை விட மையோக்ளோபின் (Mயொக்லொபின்) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டுக்கறி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டுக்கறியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டுக்கறிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டுக்கறியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

மாட்டிறைச்சி சாப்பிட்டால் மாட்டின் ஆயுளும் குறையும் என்பதை குத்திக்காட்ட விரும்புகின்றோம்.

பொதுவாகவே தாவரபட்சியாக இருந்தால் இல்லை மாமிசம் உண்பதை குறைத்தால் நீண்டகாலம் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் கன்றுக்குட்டிக்கு பால் கொடுப்பது மட்டும் இன்றி எமக்கும் பால் தரும் அந்த மாடுகளை சாப்பிடாதீங்கப்பா ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சி சாப்பிட்டால் மாட்டின் ஆயுளும் குறையும் என்பதை குத்திக்காட்ட விரும்புகின்றோம்.

மாட்டின் ஆயுளை விட... நமது, ஆயுள் தான் முக்கியம். :lol:

மாட்டிறைச்சி சாப்பிடுகின்றவர்கள் குறைந்த ஆயுளில் இறந்த பின், நரகத்தில் தான் இடம் கிடைக்குமாம்.

சொர்க்க வாசலை... எட்டிப் பார்க்கவே முடியாதாம்.

பொதுவாகவே தாவரபட்சியாக இருந்தால் இல்லை மாமிசம் உண்பதை குறைத்தால் நீண்டகாலம் வாழலாம்.

குளிர் நாட்டில் வசிப்பவர்களுக்கு தேவையான கொழுப்பு, புரதச் சத்துக்களை பெற... கிழமையில் மூன்று நாட்களாவது... கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதில் தவறு இல்லை என நினைக்கின்றேன். :)

தன் கன்றுக்குட்டிக்கு பால் கொடுப்பது மட்டும் இன்றி எமக்கும் பால் தரும் அந்த மாடுகளை சாப்பிடாதீங்கப்பா ........

மாடு எமக்கு பால் மட்டும் இல்லை.... பட்டர், சீஸ், ஜோக்கட் எல்லாம் தருகின்றது.

அதனால் தான்.... மாடு சாப்பிடக் கூடாது என்று எமது முன்னோர்கள் முன்பே... தீர்க்கதரிசனமாய் கூறியுள்ளார்கள். :rolleyes:

Edited by தமிழ் சிறி

எல்லா மாட்டு இறைச்சியும் கெடுதலை விழைவிக்கும் என்று இல்லை, இயற்கையாக புற்களை உணவாக உண்ணும் மாடுகளின் இறைச்சிகள் கெடுதல் குறைந்தே காணப் படுகிறது. பண்ணையில் கட்டிவைத்து சோளம் கலந்த செயற்கை உணவை உண்ணும் மாடுகளின் இறைச்சி தான் கெடுதலை அதிகம் கொடுக்கக் கூடியவை என நினைக்கிறேன்...

http://www.cchealthc...lly-bad-for-you

சரி உங்கள் மனதில் மாட்டு இறைச்சி கெடுதல் தான் உருவாகும் என்று ஒரு எண்ணம் இருப்பின் McDonald's, Burger King பக்கம் யாரும் போகாதேங்கோ... ^_^

அது மட்டுமில்லை, இப்படியான உடலுக்குக் கெடுதலை விழைவிக்கும் மாட்டு இறைச்சிப் பொரியலை திரும்பியும் பார்க்காதேயுங்கோ... :icon_mrgreen:

beef-fry.jpg

Beef-Ularthiyathu1.jpg

Beef+Fry_1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்கள் மனதில் மாட்டு இறைச்சி கெடுதல் தான் உருவாகும் என்று ஒரு எண்ணம் இருப்பின் McDonald's, Burger King பக்கம் யாரும் போகாதேங்கோ... ^_^

beef_cheese.gif

மக் டொனால்ஸ், பேர்கர் கிங்குக்கு போனால்... ஹம்பேர்கர் தான் சாப்பிட வேண்டுமில்லை.

சீஸ் பேர்கர், ஃபிஷ் பேர்கரும் சாப்பிடலாம் குட்டி. :D

Edited by தமிழ் சிறி

beef_cheese.gif

மக் டொனால்ஸ், பேர்கர் கிங்குக்கு போனால்... ஹம்பேர்கர் தான் சாப்பிட வேண்டுமில்லை.

சீஸ் பேர்கர், ஃபிஷ் பேர்கரும் சாப்பிடலாம் குட்டி. :D

ஃபிஷ் பேர்கரும் சாப்பிடலாம் ஓகே! :D ஆனால் சீஸ் பேர்கரில தனிய சீஸ் மட்டும் இருக்காது... beefburger உம் தான் இருக்கும் சிறி அண்ணா... :D

cheeseburger.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஃபிஷ் பேர்கரும் சாப்பிடலாம் ஓகே! :D ஆனால் சீஸ் பேர்கரில தனிய சீஸ் மட்டும் இருக்காது... beefburger உம் தான் இருக்கும் சிறி அண்ணா... :D

cheeseburger.jpg

Beefburgerரை தூக்கி எறிஞ்சு போட்டு,தனிய Cheese உடன் சாப்பிட வேண்டியது தான் குட்டி. :D

Beefburgerரை தூக்கி எறிஞ்சு போட்டு,தனிய Cheese உடன் சாப்பிட வேண்டியது தான் குட்டி. :D

:lol: :lol: :D அதுவும் நல்ல யோசனை தான்!

குளிர் நாட்டில் வசிப்பவர்களுக்கு தேவையான கொழுப்பு, புரதச் சத்துக்களை பெற... கிழமையில் மூன்று நாட்களாவது... கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதில் தவறு இல்லை என நினைக்கின்றேன். :)

குளிர் நாட்டிலும் மாடுகள், ஆடுகள், குதிரைகள் என தாவரபட்சிணிகள் உள்ளன :D

அத்துடன் பருப்பு, தானியவகைகளை மற்றும் என புரத கொழுப்பு வகைகள் உள்ளன :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் கம் பேகர் பிரியன் என்று அழைக்கப்பட்ட

பழைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன் இன்னு முழு சைவமாகிவிட்டார்.

இப்போது அதைப்பற்றி மற்றவர்களுக்கும் கூறி மாமிசத்தை முற்றாகவே கைவிட சொல்கிறார்.

அவர் இப்போது பாலும் குடிப்பதில்லையாம்.

http://www.youtube.com/watch?v=R3ied_AD4iE

http://www.google.com/#hl=en&sclient=psy-ab&q=bill+clinton+vegan&oq=bill+cli&aq=2&aqi=g4&aql=&gs_sm=1&gs_upl=0l0l1l2384l0l0l0l0l0l0l0l0ll0l0&gs_l=hp.1.2.0l4.0l0l1l2384l0l0l0l0l0l0l0l0ll0l0.frgbld.&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.,cf.osb&fp=f3dffc7186102169&biw=1440&bih=79

நான் பெரும் மாட்டிறைச்சிப் பிரியன்... .37 வயது வரை வாழ்ந்தாச்சு....அனுபவிக்க வேண்டியவற்றை அளவுக்கு அதிகமாகவும் அனுபவித்தாச்சு....இப்பவே மண்டையைப் போட்டாலும், பிள்ளைகளும் மனிசியும் ஓரளவுக்கேனும் வசதியுடன் வாழ வழியும் செய்தாயிற்று...

யாரங்கே கொண்டு வாருங்கள் நல்ல மாட்டு இறைச்சி டெவிலை!!

:o :o :rolleyes: !!

http://youtu.be/aemJAKuw3PQ

கோழி முட்டை தருது அதையும் சாப்பிடக் கூடாது

ஆடு ஆட்டுப் பால் தருகுது அதையும் சாப்பிடக் கூடாது

மீன் அவதாரத்தை எம் கடவுள் கிருஸ்ணன் எடுத்தமையால் அதுவும் கூடாது

சேவல் முருகனின் கொடி

பன்றி..அது சுகாதாரக் கேடு

முயல் வெட்டிப் போட்டால் ஒரு கைக்குழந்தை போல கிடக்கும்

ஆமை...சட்ட ரீதியில் தவறு

மான் அருகிவரும் உயிரினம்

சரி, மரக்கறி சாப்பிடுவம் என்றால் மேல் சொன்ன அனைத்து உயிர்களும் இதைச் சாப்பிடுவதால், அவற்றுக்கு போட்டியாக நாம் இருக்க கூடாது

வெறும் தானியம் சாப்பிடுவம் என்றால் balcony னியில் வந்து நிற்கும் குருவிகள் தனக்கு தா என்று சொல்லுதுகள்

என் நான்கு வேட்டைப் பற்கள் நல்லி எழும்பை நற நற என்று கடிக்க தவிக்கின்றன......

என்ன செய்யலாம் இதுக்கு?

எல்லாம் இந்த பிராண்டி செய்கின்ற வேலை :lol: :lol:

திங்கள் தொடக்கம் வெள்ளிவரை எல்லாம் சரியாக போய்விடும்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோழி முட்டை தருது அதையும் சாப்பிடக் கூடாது

ஆடு ஆட்டுப் பால் தருகுது அதையும் சாப்பிடக் கூடாது

மீன் அவதாரத்தை எம் கடவுள் கிருஸ்ணன் எடுத்தமையால் அதுவும் கூடாது

சேவல் முருகனின் கொடி

பன்றி..அது சுகாதாரக் கேடு

முயல் வெட்டிப் போட்டால் ஒரு கைக்குழந்தை போல கிடக்கும்

ஆமை...சட்ட ரீதியில் தவறு

மான் அருகிவரும் உயிரினம்

சரி, மரக்கறி சாப்பிடுவம் என்றால் மேல் சொன்ன அனைத்து உயிர்களும் இதைச் சாப்பிடுவதால், அவற்றுக்கு போட்டியாக நாம் இருக்க கூடாது

வெறும் தானியம் சாப்பிடுவம் என்றால் balcony னியில் வந்து நிற்கும் குருவிகள் தனக்கு தா என்று சொல்லுதுகள்

என் நான்கு வேட்டைப் பற்கள் நல்லி எழும்பை நற நற என்று கடிக்க தவிக்கின்றன......

என்ன செய்யலாம் இதுக்கு?

தம்பியரே!ஒடியல்புட்டு,புளுக்கொடியல்,குழல்புட்டு,குரக்கன்புட்டு,இடியப்பம்,இட்டலி,புக்கையும் சம்பலும்,வடை,முறுக்கு,மோதகம்,பருப்பும் சோறும்,முருக்கங்காய்,பாவக்காய் எண்டு கன சாமான்கள் இருக்கு...இதெல்லாம் தாவரபட்சனிகள் சாப்பிடாது...இவருக்கு தவிடு,பிண்ணாக்கு எல்லாம் தெரியாது போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காகவே வாழுங்கள்.

நாற்பதுக்கு பின் வாழ்வதற்காகவே சாப்பிடுங்கள்.

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மாட்டு இறைச்சியும் கெடுதலை விழைவிக்கும் என்று இல்லை, இயற்கையாக புற்களை உணவாக உண்ணும் மாடுகளின் இறைச்சிகள் கெடுதல் குறைந்தே காணப் படுகிறது. பண்ணையில் கட்டிவைத்து சோளம் கலந்த செயற்கை உணவை உண்ணும் மாடுகளின் இறைச்சி தான் கெடுதலை அதிகம் கொடுக்கக் கூடியவை என நினைக்கிறேன்...

http://www.cchealthc...lly-bad-for-you

சரி உங்கள் மனதில் மாட்டு இறைச்சி கெடுதல் தான் உருவாகும் என்று ஒரு எண்ணம் இருப்பின் McDonald's, Burger King பக்கம் யாரும் போகாதேங்கோ... ^_^

அது மட்டுமில்லை, இப்படியான உடலுக்குக் கெடுதலை விழைவிக்கும் மாட்டு இறைச்சிப் பொரியலை திரும்பியும் பார்க்காதேயுங்கோ... :icon_mrgreen:

beef-fry.jpg

Beef-Ularthiyathu1.jpg

Beef+Fry_1.jpg

உனக்கு என்ன கெடுதல்செய்தோம்

இவ்வளவையும் எம்முன் படைத்துவிட்டு சாப்பிடாதே என்பது எமது பொறுமையைச்சோதிக்கும் முயற்சி தம்பி.

வேண்டாமே இந்தக்கொலைவெறி...

:D :D :D

உனக்கு என்ன கெடுதல்செய்தோம்

இவ்வளவையும் எம்முன் படைத்துவிட்டு சாப்பிடாதே என்பது எமது பொறுமையைச்சோதிக்கும் முயற்சி தம்பி.

வேண்டாமே இந்தக்கொலைவெறி...

:D :D :D

...

சரி உங்கள் மனதில் மாட்டு இறைச்சியால் கெடுதல் தான் உருவாகும் என்று ஒரு எண்ணம் இருப்பின் McDonald's, Burger King பக்கம் யாரும் போகாதேங்கோ... ^_^

அது மட்டுமில்லை, இப்படியான உடலுக்குக் கெடுதலை விழைவிக்கும் மாட்டு இறைச்சிப் பொரியலை திரும்பியும் பார்க்காதேயுங்கோ... :icon_mrgreen:

^_^ ^_^ ^_^

மாட்டு இறைச்சி அதிகமாக சாப்பிடுவதில்லை.

இங்கு Costco வில் வாங்கும் மாட்டு இறைச்சி நன்றாக இருக்கும்.

எனக்கு ஒரு கேள்வி

எங்கள் ஊரில் வாங்கும் மாட்டிறைச்சி இங்குள்ளது போல இப்படி சிவப்பாக இருப்பதில்லையே ஏன்? எம்மூர் மாட்டிறைச்சியும் red meat வகைக்குள் அடங்குமா? நான் அவதானித்ததில் இஸ்லாமியர்கள் அதிகம் மாட்டிறைச்சி ஊரில் வாங்கிச் சாப்பிடுவார்கள்...ஆனால் அவர்களின் சமூகத்தில் புற்று நோயும் குறைவு...(என் அவதானம் இது..)..

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியரே!ஒடியல்புட்டு,புளுக்கொடியல்,குழல்புட்டு,குரக்கன்புட்டு,இடியப்பம்,இட்டலி,புக்கையும் சம்பலும்,வடை,முறுக்கு,மோதகம்,பருப்பும் சோறும்,முருக்கங்காய்,பாவக்காய் எண்டு கன சாமான்கள் இருக்கு...இதெல்லாம் தாவரபட்சனிகள் சாப்பிடாது...இவருக்கு தவிடு,பிண்ணாக்கு எல்லாம் தெரியாது போலை கிடக்கு

இவை அனைத்துக்கும் நாட வேன்டிய இடம் தமிழ்க்கடை :lol: :lol:

கோழி முட்டை தருது அதையும் சாப்பிடக் கூடாது

ஆடு ஆட்டுப் பால் தருகுது அதையும் சாப்பிடக் கூடாது

மீன் அவதாரத்தை எம் கடவுள் கிருஸ்ணன் எடுத்தமையால் அதுவும் கூடாது

சேவல் முருகனின் கொடி

பன்றி..அது சுகாதாரக் கேடு

முயல் வெட்டிப் போட்டால் ஒரு கைக்குழந்தை போல கிடக்கும்

ஆமை...சட்ட ரீதியில் தவறு

மான் அருகிவரும் உயிரினம்

சரி, மரக்கறி சாப்பிடுவம் என்றால் மேல் சொன்ன அனைத்து உயிர்களும் இதைச் சாப்பிடுவதால், அவற்றுக்கு போட்டியாக நாம் இருக்க கூடாது

வெறும் தானியம் சாப்பிடுவம் என்றால் balcony னியில் வந்து நிற்கும் குருவிகள் தனக்கு தா என்று சொல்லுதுகள்

என் நான்கு வேட்டைப் பற்கள் நல்லி எழும்பை நற நற என்று கடிக்க தவிக்கின்றன......

என்ன செய்யலாம் இதுக்கு?

இந்த திரியில் உள்ள செய்திக்கு ஏன் சமயம் அல்லது மாமிசம் சாப்பிட கூடாது என சொல்லும் நம்பிக்கைகளை இழுத்து வைக்கிறிர்கள் என விளங்கவில்லை.

இந்த கட்டுரை Harvard School of Public Health ஆய்வை மையப்படுத்தியதே தவிர சமய நம்பிக்கையை மையபடுத்தியது அல்ல. அத்துடன் தற்ஸ் தமிழ் கட்டுரை சொல்லுவது போல் மாட்டிறைச்சி மட்டும் பாதகமான விளைவை தரும் என்பதில்லை. அனைத்து சிவப்பு இறைச்சி வகையும் பொதுவாக ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி , பன்றி இறைச்சி மற்றும் பதப்படுத்திய இறைச்சி வகையான salami , hotdog என்பவற்றால் வரும் பதாக விளைவையே Harvard ஆய்வு கட்டுரை சொல்கிறது.

இந்த ஆய்வு ஓரளவுக்கு சிவப்பு இறைச்சி வகைகளின் பாதக தன்மையை சொன்னாலும், ஆய்வில் பல கட்டுபடுத்த முடியாத காரணிகள் இருப்பதால் முற்று முழுதான முடிவு என கொள்ள முடியாது.

நேரம் இருந்தால் இந்த கட்டுரையை வசித்து பாருங்கள். தமிழ் படுத்த நேரம் போதவில்லை.

Study: Too much red meat may shorten lifespan

Want to live longer? Trade some of the red meat in your diet for fish, nuts, whole grains, and other healthier protein sources, Harvard researchers say.

That's the conclusion of a new study, published this week in the Archives of Internal Medicine, that found that the risk of dying at an early age -- from heart disease, cancer, or any other cause—rises in step with red-meat consumption.

Eating too much red meat, which is high in saturated fat and cholesterol, has long been seen as unhealthy, especially for the heart. The new study, however, is the first to estimate the effect of swapping out red meat on a person's lifespan.

Is eating red meat bad for health?

Using data from two long-running studies of health professionals, researchers tracked the diets of more than 121,000 middle-aged men and women for up to 28 years. Roughly 20% of the participants died during that period.

On average, each additional serving of red meat the participants ate per day was associated with a 13% higher risk of dying during the study. Processed red meat products -- such as hot dogs, bacon, and salami -- appeared to be even more dangerous: Each additional daily serving was associated with a 20% higher risk of dying.

Based on these findings, the researchers estimate that substituting one daily serving of red meat with fish, poultry, nuts, legumes, whole grains, or low-fat dairy products would reduce the risk of dying in this stage of life by 7% to 19%. If everyone in the study had slashed their average red-meat intake to less than half a serving per day, the researchers say, 9% of deaths among men and 8% of deaths among women could have been prevented.

"Our message is to try to reduce the red meat consumption to less than two to three servings per week," says lead author An Pan, Ph.D., a research fellow at the Harvard School of Public Health, in Boston.

"We don't want everyone to be a vegetarian," Pan says, though he adds that avoiding processed red meat altogether may be a good idea. "It's better to go with unprocessed products and plant-based foods."

Dean Ornish, M.D., the founder and president of the Preventive Medicine Research Institute, in Sausalito, California, says a plant-based diet provides a "double benefit" in that it reduces a person's exposure to the harmful substances in meat while also providing valuable nutrients.

"There are literally hundreds of thousands of protective substances that you find in fruits and vegetables and whole grains and legumes and soy products that prevent disease," says Ornish, who wrote an editorial accompanying the study.

Why is red meat, and especially processed red meat, potentially harmful?

In addition to the high saturated fat content, which can contribute to heart disease, charring red meat (கருக பொரித்த/ கருக நெருப்பில் வட்டிய ) at high temperatures can produce carcinogens (புற்று நோயை தூண்டும் இராசயன பொருட்கள்) on the surface, Pan says. And processed meats contain certain additives that in high quantities are believed to promote cancer as well.

In addition, a diet rich in red meat is likely to come up short in other areas, says Robert Ostfeld, M.D., a cardiologist and associate professor of clinical medicine at Montefiore Medical Center, in the Bronx, N.Y.

"If you eat more red meat, on average, you may be eating fewer fruits and vegetables, so you're getting the bad things from the red meat and you're not getting the good things from the fruits and vegetables," says Ostfeld, who did not participate in the study. "My preference is for people to have as little red meat as they can, and I think it's ideal to avoid red meat."

Staffan Lindeberg, M.D., an associate professor of medicine at the University of Lund, in Sweden, says singling out red meat may be counterproductive. A bigger threat to health is the sugar- and starch-heavy Western diet as a whole, says Lund, who studies heart disease and diabetes and advocates a version of the so-called Paleolithic diet, which emphasizes lean meats, fruits, and vegetables.

"We need to focus more on common foods, like grains, dairy foods, refined fats, and refined sugar," Lindeberg says.

Studies like Pan's are inherently iffy due to red meat's unhealthy reputation, which makes red-meat consumption difficult to tease apart from a person's overall lifestyle, Lindeberg says. "Red meat has been perceived as a villain for many years, and people who avoid red meat take all sorts of precautionary measures for their future health," he says. "It is not possible to statistically adjust for all of these measures."

Sure enough, Pan and his colleagues found that the men and women in the study who ate the most red meat also tended to be heavier, less physically active, and more likely to smoke and drink alcohol than their peers. However, the researchers did take those and other factors into account in their analysis.

http://www.cnn.com/2...span/index.html

Edited by KULAKADDAN

எனக்கு ஒரு கேள்வி

எங்கள் ஊரில் வாங்கும் மாட்டிறைச்சி இங்குள்ளது போல இப்படி சிவப்பாக இருப்பதில்லையே ஏன்? எம்மூர் மாட்டிறைச்சியும் red meat வகைக்குள் அடங்குமா? நான் அவதானித்ததில் இஸ்லாமியர்கள் அதிகம் மாட்டிறைச்சி ஊரில் வாங்கிச் சாப்பிடுவார்கள்...ஆனால் அவர்களின் சமூகத்தில் புற்று நோயும் குறைவு...(என் அவதானம் இது..)..

உங்கள் கேள்விக்கு பதில் ஆம் என்பதே.

ஊரில் மாடு வளர்க்கும் முறைக்கும் இங்கு மாடு வளர்க்கும் முறைக்கும் இடையில் உள்ள வேறுபாடு, மற்றும் மாட்டு தீனியில் உள்ள வேறுபாடு.

அத்துடன் மிக முக்கியமானது எவ்வாறு ஊரிலும், இங்கும் இறைச்சி வாங்குகிறோம் என்பது.

ஊரில் அன்றைக்கு காலையில் கொன்ற மாட்டின் இறைச்சி கடைக்கு வரும், நாங்கள் கடைக்கு போய் அன்றே வாங்கி அன்றே சமைப்போம்.

இங்கு அப்படி அல்ல.

சுப்பர் மக்கேட்டிர்க்கு இறைச்சி தொழிற்சாலையில் இருந்து இறைச்சி வந்து சேர 1 - 7 நாட்கள் எடுக்கும் (எவ்வளவு தொலைவு என்பதை பொறுத்து).

சுப்பர் மார்கெட்டில் அது 7 - 14 நாட்கள் இருக்கும் விற்பனைக்கு (எவ்வளவு வேகமாக விற்று முடிகிறது என்பதை பொறுத்து).

இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை தருவது மயோகுளோபின் எனும் நிறப்பொருள், எமது இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் போன்றது.

இது இறைச்சி தசைகளுக்கு ஓட்சிசனை வழங்குகிறது.

இது பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்றால் ஓட்சிசனுடன் தொடுகையில் இருக்க வேண்டும்.

அதே நேரம் நிண்ட நேரம் காற்றில் தொடுகையில் இருந்தால் மயோகுளோபின் இல் உள்ள Fe2+ அயன் (இதுவே சிவப்பு நிறத்துக்கு கரணம்) Fe3+ ஆக மற்றம் அடையும்.

இதனால் இறைச்சி கபில நிறமாக மாறிவிடும். கபில நிற இறைச்சியை யார் வாங்குவார்கள் :)

இதை தவிர்க்க/ பிரகாசமான சிவப்பு நிறத்தை பேண கனடாவில் இறைச்சி போதிகளினுள் அதிக (50 - 80 %) ஓட்சிசனை அடைத்து விற்பார்கள். சாதாரண காற்றில் 20 % தான் ஒட்சிசன்.

இதேபோல பிரகாசமான சிவப்பு நிறத்தை பேண ஐக்கிய அமெரிக்காவில் காபான் மோனோ ஓட்சைட் (CO) 0.4 - 0.5 % ஐ சிவப்பு இறைச்சி பையில் அடைத்து விற்கலாம். ஆனால் கனடாவில் இதற்கு தடை.

அடுத்த கேள்வி சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் கட்டாயம் உடல்நலம் பாதிக்கப்படுமா என்பது ?

இது உங்கள் உணவு பழக்கத்தில் தங்கி உள்ளது

எவ்வளவு சிவப்பு இறைச்சி சப்பிடுகிறிகள்?

பதப்படுத்திய சிவப்பு இறைச்சிய (அதாவது salami, ham, hotdog) போன்றவற்றையா அல்லது பதப்படுத்தாத (fresh meat) இறைச்சியை நீங்களே சமைத்து சாப்பிடுகிறிர்களா?

பொதுவாக முஸ்லிம்கள் ஊரில் தாமே சமைத்து தான் உண்பார்கள். பதப்படுத்திய இறைச்சியை உண்பதில்லை.

சமைக்கும் பொது இறைச்சியை கருக்காது சமைகிறிர்களா அல்லது நன்கு கருக்கி சமைக்கிறிர்களா?

எவ்வளவு பழங்கள் மரக்கறிகள் போன்றவற்றை சாப்பிடுகிறிர்களா?

எவ்வளவு சோறு அல்லது தனிய வகைகளை சாப்பிடுகிறிர்களா?

புகை பிடிக்கிறிர்களா? மது அருந்துகிறிர்களா?

வேறு இறைச்சி தவிர்ந்த பதப்படுத்திய உணவு வகைகளை சாப்பிடுகிறிர்களா?

இவை அனைத்தும் உடல் நலம் பேணுவதை / புற்றுநோய் / இதய நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்க அல்லது குறைக்க செய்வதில் பங்களிக்கும்.

சும்மா மொட்டையாக சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் இதய நோய்/ புற்று நோய் வரும் என சொல்ல முடியாது. :icon_idea:

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.