Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகம் பாரபட்சமாக நடக்கிறது இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்...எல்லோரையும் தங்களது அவாட்டரில் நடிக,நடிகைகளது பட‌ம் போட வேண்டாம் என்று சொன்ன நிர்வாகத்திற்கு தூயவன் ஜெயம் ரவியின் படத்தை போட்டு இருப்பது தெரியவில்லையோ :unsure: அதே மாதிரி மின்னலும் போராளியின் படம் போட்டு இருக்கிறார் அதுவும் போடக் கூடாது அல்லவா?

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கிய பிரமுகர்களின் படத்தைப் போடுவதும் போடாமல் விடுவதும்

அப்படிப் போட்டால் போட்டதைப் போடக்கூடாது எனப் போட்டுக்

கொடுப்பதும் நாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை வாத்தியார் நான் முதல் கஜோலின் படம் தான் போட்டு இருந்தேன் என்னிடம் படத்தை மாத்தத் சொல்லி இணையவன் தனி மடலில் கேட்டு இருந்தார்...எனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ^_^

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும்.:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதை நீங்கள் இணையவனிடம் தனிமடலில் கேட்டிருக்கவேண்டும். :D

ஏன் இப்ப இதில கேட்டதில் என்ன பிழை வாத்தியார் :( நிர்வாகம் என்பது அதில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயத்தை கொடுக்க வேண்டும் :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் இங்கு கேட்டது பிழை என நான் எழுதவில்லை.

தனிமடலில் கேட்பதுதான் நாகரீகம் எனக் கூறவந்தேன்.:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி சரி வாத்தியார் நமக்குள் எதற்கு தேவையில்லாத சண்டை இணையவனோ/நிழலியோ வந்து பதில் சொல்லட்டும் :D

Posted

அவதாரை மாற்றச் சொல்லி சிலருக்குத் தனிமடல் மூலம் கேட்டிருந்தோம். யாழில் அண்மையில் பல வேலைகள் இருந்ததால் எல்லோரிடமும் கேட்கவில்லை. இப்போது கவனிக்கிறேம். :)

பி.கு. : ரதி, நான் உங்களிடம் மாற்றச் சொல்லிக் கேட்டது கஜோலின் படத்தை அல்ல. வேறொன்று.

Posted

கஜோலின் படம் என்றாலும் அது வரையப்பட்ட படமாகும்.. :huh: ரதி சொன்னதால்தான் அது கஜோல் என்று விளங்கியது.. :rolleyes: ஆகவே ரதி மீண்டும் நிர்வாகத்தின் அனுமதியுடன் கஜோல் படத்திற்கு மாறவேண்டும்.. :D

இப்படிக்கு,

-யாழ் ரதி ரசிகர் மன்றம்- :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே என்னைப் பற்றி இழுத்துக்கதைப்பதால் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த விதியை யாழ் நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே இதே அடையாளப்படத்தினை(அவதர்)த் தான் இணைத்திருந்தேன்.நிர்வாகத்திற்கு முன்பு சொன்ன காரணத்தையே இப்போதும் சொல்கின்றேன்.

குறித்த நடிகரை உருவகம் செயது நகைச்சுவைக் கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். தவிர இந்த நடிகரிகன் செயற்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து, அவர் ரசிகராகவோ, அல்லது வெறுப்பாளனாக இக்களத்தில் கருத்துக்களை வைத்ததுமில்லை

கடந்த 7 வருடங்களில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியில் தான் என்னுடைய அவதர் படத்தினை மாற்றியிருந்தேன். புதிதாக வருகின்ற சக உறவுகள் விரும்பியபடி படங்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாமாதம் வௌ;வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தேன் எனில் இந்தக் கேள்வி நியாயமாக இருக்கலாம். கடந்த 7 வருடங்களாக ஒரே படத்தையே பேணி விட்டு அதை நீக்கச் சொல்வது நியாயமல்ல. இணையவன் உங்களின் மடலுக்கு மிக்க நன்றி. ஆனால் இதை நீக்கும் எண்ணம் எனக்கில்லை. இதை ஏதோ பெரிய பிரச்சனை என்று பெரிதாக வந்து விவாதிப்பவர்களுக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கவிரும்பின் எடுத்துக் கொள்ளுங்கள். நானும் எனக்கு எது சரியாகப்படுகின்றதோ அதையே செய்யமுடியும்.

ஒருவர் கருத்துக்களத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதல்ல முக்கியம் , அவர் களவிதிகளுக்கமைய நடக்கின்றாரா எனபதே முக்கியமானது . தூயவன் உங்கள் எழுத்துக்கள் கடும்போக்காகத் தெரிகின்றன . உங்களை எல்லோரும் முன்னுதாரணமாக எடுக்கமாட்டார்களா ? நிர்வாகம் தனிமடலில் தொடர்புகொண்டால் அதற்கு முன்னுரிமை கொடுப்பதே முறையாகும் . உங்களைக் குத்திக்காட்ட நான் இதை எழுதவில்லை .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பழைய உறுப்பினர் என்று ஆணவம் கொள்ளுவதாக உங்களின் கருத்தினை விளங்கிக் கொள்கின்றேன். அந்த எண்ணம் எனக்கில்லை. அந்தக் கருத்தினைப் பிரதிபலிப்பாகவும் அந்தக் கருத்து எழுதப்படவில்லை.

அடிக்கடி நான் வேறு படங்களை மாற்றிக் கொண்டிருந்தால் இப்படிச் சொல்லுவதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்தப்படத்தையே கிட்டத்தட்ட 7 வருடங்களில் முழுமையாக நான் பாவித்திருக்கின்றேன். அவதர் என்பது எதற்கு உபயோகிக்கப்படுகின்றது? ஒருவருடைய அவதாரம், அல்லது அது ஒரு முகமூடி. என்னால் என் முகமூடியை மாற்றிக் கொண்டிருக்கமுடியாது....

ஒருவருடைய படத்தினைக் காணும்போது இவரின் கருத்து என அடையாளம் செய்து கொள்ள முடிகின்றது. அதற்காகத் தானே இது பயன்படுகின்றது? தவிர வேறு என்ன சிறப்பு அவதரில் இருக்கின்றது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் என்றால் அந்த படம் ஞாபகம் வரும். :icon_idea:

Posted

இந்த விதி என்பது புதியதுமல்ல. இந்த வரையறையை 2007களில் வலைஞன் கொண்டு வந்திருந்தார். அதையே நிழலி உள்ளீடு செய்திருக்கின்றார். இதே காரணத்தை அப்போது அவரும் ஏற்றுக் கொண்டுமிருந்தார்.

http://www.yarl.com/...showtopic=22182

அதாவது தூயவன் நைனா 2007ம் ஆண்டிலிருந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

நீங்கள் எழுதிய கருத்து என்னைத் தாக்குவது மட்டுமல்ல, இரத்தக்கண்ணீர் வரவைக்கின்றது. 2வது விதி மீறல்

3.கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

உகும்... யாழ் தொடங்கிய காலத்தில் இருந்தே இவ்விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை.

4.யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.

பின்வரும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது:

a. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்

இந்த விதியை மீறிய படங்கள் பலவற்றைச் சினிமாப்பகுதியிலோ, வேறு இடங்களிலோ காட்டமுடியும்.

5.கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.

இதை விடப் பலவிடயங்களை விதாண்டவாதமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க முடியும். என்னுடைய அவதர் தான் மற்றவர்களுக்குப் பிரச்சனை எனில், அவர்கள் எழுதுகின்ற எல்லாக் கருத்துக்களிலும் குறை கண்டு பிடித்துப் போடத் தயார். எனக்குஇப்போது கொஞ்சநாளாக வேலை, வெட்டி இல்லாமல் தான் இருக்கின்றேன்....

Posted

அப்படிப் பார்த்தால் பின்வரும் விதிமுறைகளை எத்தனை பேர் மேற்கொள்கின்றார்கள்:

1.யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.

நீங்கள் பாவித்திருக்கும் நைனா என்பது தமிழில்லை. இதில் விதியை நீங்கள் மீறுகின்றீர்கள்

2..

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்குத் தான் இலகுவான இலக்கினைத் தேடிக் கொள்ள முடியுமே? ஏன் இதற்காக கவலைப்படுகின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

எரிகிற வீட்டிற்கு பெற்றோல் ஊத்துறது என்று கேள்விப்பட்டுள்ளேன்

இன்று தான் அதனை நேரில் தரிசிக்கின்றேன் :lol::D :D

Posted

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமூகம், வர்த்தகம் போன்ற சொற்களை பாவிக்க முடியுமா? ஏனென்றால் இவையெல்லாம் தமிழில்லையாம்...

நீங்கள் எந்த விதியை மீறினீர்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த விதி ஓரளவு பொருந்துகின்றது. ஆகவே நீங்கள் யாழ்கள விதியை மீறி இருக்கின்றீர்கள். :-)1.கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

பிரபலமானவர்களின் படங்கள் தொடர்பான வரையறைகள் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டனவென்றால் அவற்றை Retroactive (பழையனவுக்கும் சேர்த்து) ஆகவும் செயற்படுத்த நிர்வாகம் எண்ணியிருந்ததா? :rolleyes: இதை நிர்வாகம் விளங்கப்படுத்தினால் விவாதத்தை மேலும் செம்மையாகக் கொண்டுசெல்ல முடியும். :icon_idea:

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

திரு விசுகு அவர்கள் இந்த விதியை மீறுகின்றார்::

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

Posted

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

நான் நிர்வாகத்தைத்தான் கேட்டேன்.. :unsure: மற்றும்படி உள்குத்து எதுவும் கிடையாது.. :blink:

இதற்கு நிர்வாகம் அளிக்கப்போகும் பதிலை வைத்து விவாதத்தை நகர்த்தலாம் அல்லவா..

நகரங்களில் வடிவமைப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்பாது பழைய கட்டடங்களுக்கு பெரும்பாலானவை செல்லுபடியாவதில்லை.. அதேபோலத்தான் இந்தக் கேள்வியும். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்தச் சமாளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது...

Posted
:D :D :D
Posted

டமிழ் எழுதினா சங்க கால டமிழுங்களா நாம எழுத முடியும் ...மட்ராஸ் டமிழை தமிழில்லை என்று சொல்லி கருத்து கள விதியை மீறினது என்று சொல்லுவீங்கள் என்னா கெட்ட கோபம் வரும் ஆமா....தூயவன் மாதிரி நானும் சீனியர்....தாங்க....இப்படித்தான் நாம பேசிறோம் ,....அப்படித்தான் எழுதுவோம் ....

Posted

ஒரு நிர்வாகம் ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது அதற்கு அங்கத்தவர்கள் என்ற வகையில் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

அல்லது இந்தக் களவிதி முழுமையாக அகற்றப்பட வேண்டும். மாறாக ஒரு சிலர் அந்த விதியைப் பின்பற்ற இன்னும் சிலர் அந்த விதியைப் பின்பற்ற மறுப்பது அல்லது அவ்வாறு மறுத்தவர்களைத் தொடர்ந்து விதிகளை மீற அனுமதிப்பது களவிதிகள் தொடர்பான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும்.

எனவே இந்த விடயத்தில் கள நிர்வாகம் உடனடியாக ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.