செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
சென்னை விமான நிலையத்தில் எல்டிடிஇ போராளி கைது வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:27 [iST] சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு விடுதலை புலி இயக்கத்தைச் சேர்ந்த போராளி கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவர் பற்றி உளவுத்துறை பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடியுரிமை துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் www.thatst…
-
- 1 reply
- 834 views
-
-
பேருந்தில் இறங்க விடாது சித்திரவதை காணாமல் ஆக்க படடோரின் உறவுகள் , பேரூந்தில் இருந்து இறங்க விடாமல் காவல் துறை கட்டுப்படுத்தினர்.
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். கண் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர்
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரி…
-
- 1 reply
- 99 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு - டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். ப…
-
- 1 reply
- 717 views
-
-
உலகத்தின் மிக மோசமான பொதுக் கழிவறை எது? – 91 நாடுகளைச் சுற்றி கண்டுபிடித்த நபர்! நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு எதாவது காரணம் வேண்டும். எதாவது தேடல் வேண்டும். இந்த தேடல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக அமையும். இந்த கட்டுரையில் வரும் நபர் உலகிலேயே மோசமான பொதுக் கழிப்பறையை தேடிச் சென்றுள்ளார். ஆம் சரியாக தான் வாசித்தீர்கள்! இவரது தேடல் எங்கு தொடங்கி எங்கு முடிந்ததெனப் பார்க்கலாம். கர்ஹம் அஸ்கி என்ற பிரிட்டனை சேர்ந்த நபர் பயணங்களில் விருப்பம் கொண்டவர். உலகின் மாறுபட்ட கலாசாரங்களை கண்டறிவதிலும் சர்வதேச விவகாரங்களை மற்ற நாடுகளின் …
-
- 1 reply
- 406 views
-
-
கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஹோட்டல…
-
- 1 reply
- 646 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர், சாப்பாடு வழங்கப்படும் நேரத்தில் திடீரென இருக்கையைவிட்டு எழுந்து விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று யோகாசனம் மற்றும் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதனை அவரது மனைவியும், விமான ஊழியர்களும் தடுத்து அவரது இருக்கையில் அமரும்படி கூறியதால் கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அதே விமானத்தில் பயணம் செ…
-
- 1 reply
- 283 views
-
-
கொரோனாப் பரிசோதனை செய்வது இப்படித்தான்
-
- 1 reply
- 520 views
-
-
11 வயதில் சென்னை வந்தபோது லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தா கைது 6 ஆண்டுகளுக்கு பிறகு - போக்சோ சட்டத்தில் நடவடிக்கை திரு.வி.க. நகர், சென்னையை சேர்ந்த 45 வயது பெண், தனது கணவர் மற்றும் 17 வயது மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய மகள், கடந்த சில வருடங்களாக யாரிடமும் பேசாமல், குறிப்பாக ஆண்களிடம் கடும் கோபத்தை காட்டி வந்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய், லண்டனில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற கவுன்சிலிங் அனுப்பி வைத்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில் சிறுமி அதிர்ச்சி தரும் தகவல்களை டாக்டரிடம் கூறினார். 2014-ம் ஆண்டு அந்த சிறுமி, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் வந்தார். அப்போது 11 வயதான அந்த…
-
- 1 reply
- 528 views
-
-
கூடங்குளம் செய்திகள் வெளிச்சம் முக்கியம் மகனே ! --------------------------------------------- மகன்: அப்பா ஏன் அப்பா அவருக்கு ............ல தீ வைக்கிறாங்க? அப்பா: தீ வச்சாதானேடா மகனே வெளிச்சம் கிடைக்கும்! மகன்: வெளிச்சத்த வச்சி என்ன பண்ணலாம் அப்பா? அப்பா: வெளக்கு கொளுத்தி பன்னாட்டு கம்பனிகளுக்கு பிடிக்கலாம்! IPL match நடத்தலாம். வாண வேடிக்கை நடத்தலாம். சாலைகள், sez பார்க, அரசு கட்டிடங்கள், IT corridors க்கு தடை இல்லா ஒளி வெள்ளம் பாய்ச்சலாம். இலவச தொலைக்காட்சி பாக்கலாம். மகன்: தீ வச்சா அவருக்கு வலிக்காதா அப்பா? அப்பா: ஆனா நம் வளர்ச்சிக்கு வெளிச்சம் முக்கியம் மகனே! மகன்: அப்பா அவருக்கு வலிக்குதுனு நீங்களாவது எடுத்து சொல்லுங்கப்பா! அப்பா…
-
- 1 reply
- 503 views
-
-
பரஸ்பரம் விருப்பத்துடன் கப்பிள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார்கள் போலீஸார். கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு 'வைஃப் ஸ்வாப்பிங்' என்ற பெயரில் பல கும்பல்கள்…
-
- 1 reply
- 485 views
-
-
சிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் மார்டின் கும்புரா (57). இவருக்கு 11 மனைவிகளும், 30 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனக்கு 100 குழந்தைகள் வேண்டும் என விரும்பி இவர் சர்ஜ்சுடன் இணைந்த ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் 4 மீது 10 ஆண்டுகளுக்கு முன் 4 பெண்களை கற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கில் நீதிபதி ஹோசக் முஜாயா குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் கும்புராவுக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102918&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 583 views
-
-
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்! [Thursday 2017-09-28 17:00] இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னில…
-
- 1 reply
- 446 views
-
-
4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது. ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் தான், மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தக் காணொளியை சந்தேக நபரின் மனைவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்ல…
-
- 1 reply
- 151 views
-
-
தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்! 2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மரணங்கள் ஜப்பானில் அதிகரித்து வரும் தனிமைப் பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும், பல முதியோர் கவனிப்பாரின்றி தமது இறுதிக் காலத்தை தனிமையில் கழித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண,அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து ச…
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
``ஸ்கூபிக்கு பார்வை கிடையாது!' - நெட்டிசன்களை நெகிழவைத்த ரமேஷ் சென்னிதாலாவின் `குட்டி ஸ்டோரி' சிந்து ஆர் வளர்ப்பு நாய் ஸ்கூபியுடன் ரமேஷ் சென்னிதாலா ``ஸ்கூபி எனச் சத்தமாக அழைத்தால், அது வேகமாக வந்து என் மனைவி அனிதாவின் காலில் இடித்து நிற்பதைக் கவனித்தோம். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான், ஸ்கூபிக்கு பார்வை இல்லை என்ற விஷயம் தெரியவந்தது" கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில், யூஸப் என்பவர் தனது வீட்டில் வளர்த்த நாயை காரின் பின்புறம் கயிற்றால் கட்டி ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர் தனது மொபைல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த…
-
- 1 reply
- 376 views
-
-
திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 5வது ரக தலைமுடி ஏலம் போகாததால் 260 டன் தேங்கியுள்ளது.இதனால் விலையை குறைத்து ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி சுவாமிக்கு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த தலைமுடிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. இருப்பினும் உலக சந்தையுடன் மதிப்பிடும்போது இந்த விலை குறைவு என கருதி ஆன்லைனில் ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவன உதவியுடன் ஆன்லைனில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.150 கோடி கூடுதல் லாபத்துடன் ரூ.200 கோட…
-
- 1 reply
- 509 views
-
-
ஒரு எலுமிச்சை பழம் ரூ.14 ஆயிரத்திற்கு ஏலம் முருகன் கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், ஒரு வேல் மட்டும் இருந்தது. மலைக்குன்றிற்கு கீழ் கடந்த மாதம் முருகன், வள்ளி, தெய்வானை சிலையுடன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வேலில் சொருகப்படும், 9 நாட்களின் எலுமிச்சை பழம் இடும்பன் பூஜையின் போது ஏலம் விடப்படும். இப்பழத்தை குழந்தை இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால், அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், பல …
-
- 1 reply
- 546 views
-
-
கணவர் 2 ஆவது திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் இரகசியமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 52 வயதான அன்ட்ரூ மெக்லியொட் பெய்கி என்பவர் ஏற்கெனவே திருமணமாகியிருந்த நபர். இவரின் மனைவி சுசான் (51). அண்மையில் 48 வயதான ஹெலன் எனும் மற்றொரு பெண்ணை அண்ட்ரூ அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இவ்விடயம் அன்ட்ரூவின் முதல் மனைவி சுசானுக்குத் தெரியாது. ஆனால், அன்ட்ரூ தனது புது மனைவியுடன் தான் காணப்படும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத…
-
- 1 reply
- 424 views
-
-
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. சில பெண்கள் சில செண்ட்விச்சுகளுக்காகவும் சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக எதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பே…
-
- 1 reply
- 427 views
-
-
லண்டனில் இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள சிவந்தன் கோபி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் 12ஆம் திகதிவரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். தன்னை சந்தித்து வரும் பல இளையவர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதுடன், புலம்பெயர் நாடுகளில் இது போன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி தன்னுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட அவர் மின்னஞ்சல் மூலமாக ஆதரவினை வழங்கி வரும் தமிழக உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்தார். சிவந்தன் பெரும்பாலான நேரத்தில் படுக்கையில் சோர்வாகக் காணப்படுகிறார். இது தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் இந்து குமரேந்…
-
- 1 reply
- 541 views
-
-
கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்! கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்…
-
- 1 reply
- 161 views
-
-
சிகிச்சை பெற பெயர் பதிவுசெய்யும்போதே வீழ்ந்து இறந்த தொற்றாளர்! மருத்துவமனையில் சிகிச்சை பெற பெயர் பதிவுசெய்யும்போதே வீழ்ந்து இறந்த தொற்றாளர்! காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வவுனியா மருத்துவமனைக்கு சென்ற நபர், தனது பெயர் விவரங்களை பதிவுசெய்துகொண்டிருந்தபோதே நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றது. வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.அந்த நபர், காய்ச்சல் காரணமாக வவுனியா மருத்துவமனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் மருத்துமனையைச் சேர்ந…
-
- 1 reply
- 870 views
-
-
அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார். அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக…
-
- 1 reply
- 498 views
-