செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த யாழ். இளைஞன் - பரிதாபமாக பறிபோன உயிர் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறி…
-
- 8 replies
- 613 views
-
-
தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனவாத, இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்தபோது, தமிழ் மக்கள் மீது பொருளாதார, மருந்துத் தடைகளை விதித்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தோற்றம் பெற்றதுதான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation). பாதிக்கப்படும் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது, தங்களைக் கவனிப்பதற்கு யாருமே இல்லை என்று அவர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்கியது மட்டுமல்ல, சிறீலங்காவின் சட்டவிதிகளின் கீழ் அதனையரு அமைப்பாகப் பதிவு செய்து தமிழ் மக்களுக்கான உதவிகளைப் புரிவதற்க…
-
- 8 replies
- 772 views
-
-
ஆபாசப் படங்களில் நடிக்கும்போது நடிகர்கள் ஆணுறை அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் ஆபாசப் பட தாயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்திலே உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை மீறுவதாக இந்த கட்டுப்பாடு அமைந்துள்ளதென விவிட் எண்டர்டெய்ண்மெண்ட், கலீஃபா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் கூறுகின்றன. மெஷர் பி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த நிபந்தனைக்கு கடந்த நவம்பரில் லாஸ் ஏஞ்சலிஸ் வாக்காளர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர். ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்களை ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிபந்த…
-
- 8 replies
- 958 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார். இவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலாதிட்டத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில…
-
- 8 replies
- 770 views
-
-
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; மிரளவைக்கும் விலை ஏற்றம் - உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்குமா? த.கதிரவன் கோவேக்சின் தடுப்பூசி '' கொரோனா தடுப்பூசி பதுக்கல் நடைமுறைகளால் மருந்துகளின் விலை இன்னும் பல மடங்கு உயரும். எனவே, தடுப்பூசிகள் என்பது ஏழை மக்களுக்கு எட்டாத விஷயமாகிவிடும்'' என்கிறார் மருத்துவர் சாந்தி. கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகிவரும் இந்த வேளையில், 'கொரோனா தடுப்பூசி'களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மக்களை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வோடு செயல்பட்ட இஸ்ரேல் போன்ற சில நாடுகள், தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, 'கொரோனா பாதிப…
-
- 8 replies
- 838 views
-
-
நியூவார்க் நகர மேஜர், சுவாமி நித்தியானந்தாவின் கைலாசவினை 'சிஸ்டர் சிட்டி' உடன்படிக்கை மூலம், நியூவார்க் நகரத்துடன் இணைக்கும் ஒப்பந்த படம் வந்த போது, அது போட்டோஷாப் விளையாட்டு, கப்ஸா என்று பலரும் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால் அது உண்மைதான், மேயரும், அவரது அலுவலகமும், அவிந்து போய் இருக்கிறார்கள் என்று இப்போது செய்தி வந்துள்ளது. செய்தி, வந்து 9 நாட்கள்.... சாதாரண கூகிள் தேடுதலிலேயே, இது ஒரு டுபாக்கூர் என்று தெரிந்திருக்குமே என்று பேட்டி கொடுக்கும் மக்கள் சொல்லுமளவுக்கு மேஜர் நிலைமை வந்து இருக்கிறது. மேஜருக்கு, நம்ம நித்தி மாப்பு வைச்சான் பாரு ஆப்பு என்று சொல்லி ரசிக்க வேண்டியதுதான். மேஜரின் இடது பக்கம், வெள்ளை, கைகளை வைத்திருக்கும் பவ்வியம்... ஆகா ... …
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
மந்திர தந்திரத்தால் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தம்பகல்ல பிரதேசத்துக்கு வந்த புத்த பிக்கு ஒருவர் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 39 வயதான திருமணமாகாத பெண்ணொருவரின் நோயைக் குணப்படுத்த சாந்தி பூஜை செய்யவென வந்த பிக்கு அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று மந்திரம் செய்யும் பாவனையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் பிக்குவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய தம்பகல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=n…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலஙகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜுமஆப் பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
-
- 8 replies
- 897 views
-
-
போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகிறது. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துக்களை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்! கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப் பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்…
-
- 8 replies
- 581 views
-
-
சாவகச்சேரி பிரதேச சபை வீதியை அபகரித்த தனிநபர் – போராடி மீட்ட மக்கள் May 12, 2023 யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார். குறித்த நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வீதியை மீட்டு தர கோரி அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பிரதேச சபை செயலாளர் , கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சு நடாத்திய போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்…
-
- 8 replies
- 942 views
-
-
பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள் By General 2012-09-19 16:12:02 தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு…
-
- 8 replies
- 911 views
-
-
அடர்ந்த காட்டில் ஒபாமாவுக்கு மீன் விருந்து கொடுத்த சாகச வீரர் ! (வீடியோ) நியூயார்க்: அலாஸ்காவில் சமீபத்தில், இங்கிலாந்து சாகச வீரர் பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, காட்டுப் பகுதியில் மீன் சாப்பிட்டுள்ளார். அந்த காட்சி வீடியோவாக படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து சிறப்புப் படை முன்னாள் வீரர் கிரில்ஸ். இவர், இக்கட்டான நேரங்களில் உயிரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொடுக்கும் சாகச பயண நிகழ்ச்சிகளைக் தொலை காட்சிகளில் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விருப்பி பார்க்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் நடந்த இவரது சாகச நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொ…
-
- 8 replies
- 606 views
-
-
97 வயது மாதுவின் ஓர் ஆட்டம் b55d64ae4db3e60a85fbdec34cc3696b
-
- 8 replies
- 632 views
-
-
தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம். இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரை…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு April 18, 2020 (க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரி…
-
- 8 replies
- 1.3k views
-
-
கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...
-
-
- 8 replies
- 1.2k views
-
-
இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள் ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது. அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்போது மி…
-
- 8 replies
- 780 views
-
-
அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது. ட்ரக் வண்டிக்கு வெளியில் பிகினி உடையுடன் நிற்கும் பெண்கள், கூலான ஐஸ் கிறீமை சூடாக விற்பனை செய்கின்றனர். நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள மேற்படி ஐஸ் கிறீம் நிறுவனமானது தனது வியாபாரத்தை பிரித்தானியாவிற்கு விஸ்தரிக்கவுள்ளது. பிரித்தானியாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கோடை நாட்களிலேயே கவர்ச்சிப் பெண்கள் பிரித்தானிவில் ஐஸ் கிறீம் விற்பனைக்காக களம் இறங்கவுள்ளனராம். 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவர்ச்சி ஐஸ் கிறீம் விற்பனை குறித்து அதனை ஆரம்பித்த …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்! அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
அண்மையில் தனது முகப்புத்தகக் கணக்கில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக பதிவேற்றம் செய்த பதிவொன்றின் விளைவாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறிய நியூஸ் பர்ஸ்ட் செய்தி வாசிப்பாளர் பஸ்லுல்லாஹ் முபாரக்கின் தெலிவூட்டல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. "விபச்சாரம் என்று ஏன் நான் குறிப்பிட்டேன்? முதலில் அந்தப் பதிவு முற்றிலும் இஸ்லாமியப் பெண்கள் குறித்தானது. #Hashtag பார்த்தால் அது நன்கு தெரியும். வேறு இனப் பெண்களை இதில் ஒவ்வொருத்தரும் சம்பந்தப்படுத்திக் கொண்டது, அது அவரவர் சிந்தனை மட்டம். இஸ்லாத்தின் பார்வையில் எப்படி என்பதை தவிர அடுத்த மதங்களை இங்கு எங்கும் குறிப்பிடவில்லை “மறைக்க வேண்டியதை” என்று குறிப்ப…
-
- 8 replies
- 1.2k views
-
-
12 SEP, 2023 | 11:08 AM (ஆர்.சேதுராமன்) 1980 ஆம் ஆண்டில், அப்போதைய லிபிய அதிபரான கேணல் முவம்மர் கடாபியை கொலை செய்யும் முயற்சியில் 81 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த இத்தாலியப் பயணிகள் விமானமொன்றை பிரெஞ்சுப் படையினர் கவனயீனமாக சுட்டு வீழ்த்தினர் என இத்தாலியின் முன்னாள் பிரதமர் குய்லியானோ அமாட்டோ குற்றம் சுமத்தியுள்ளார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவும், பிரான்ஸும் பொறுப்பு எனவும், தோல்வியடைந்த இப்படுகொலை முயற்சி மூடி மறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 1992, 1993 மற்றும் 2000, 2001 காலப்பகுதிகளில் இரு தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர் குய்லியானோ அமாட்டோ. …
-
- 8 replies
- 597 views
- 1 follower
-
-
உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் …
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.[/size] [size=4]கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.[/size] [size=4]வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்…
-
- 8 replies
- 828 views
-
-
'ஹிலாரி தேர்தலில் போட்டியிடுவதற்கே முதல்வர் ஜெயலலிதாதான் காரணம்!' சசிகலா புஷ்பா - முதல்வர் அறைதல் விவகாரம், இந்தியா முழுவதும் ட்ரெண்டாகும் ஒரு விஷயம். அதைக் கடந்து, ஹிட் அடித்து இருக்கிறார் குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு. 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஹிலாரி க்ளின்டன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்தார் ஹிலாரி. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஹிலாரி க்ளின்டனும், டொனால்டு ட்ரம்ப்பும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது, குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு பேசினார். அப்போது அவர், "தமிழக முதல்வர…
-
- 8 replies
- 698 views
-