செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594
-
- 3 replies
- 399 views
-
-
62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப்"? இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான்கான் இருக்கிறார். இக்கட்சி கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் மிகவும் பணக்காரரும், நவாஸ் ஷெரிப்பின் நம்பிக்கைகுரியவரான மியான் மான்சாவின் உறவினர் மகளுடன் இம்ரான் கானுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப் அந்த 21 வயது இளம்பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ந…
-
- 3 replies
- 905 views
-
-
தூங்காத விழிகள் 30 வருடமாக! தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன…
-
- 3 replies
- 781 views
-
-
கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார். குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் (32), வைதேகி (35) என தெரியவந்தது. இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது …
-
- 3 replies
- 1.6k views
-
-
[size=4]தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…
-
- 3 replies
- 662 views
-
-
இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டதென கூறப்படும் மது மரம் அல்லது ஆங்கிலத்தில் சைக்காடேல்ஸ் (Cycadales) என்று சொல்லப்படும் மரத்தின் பழச் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த மது மரம் அல்லது சைக்காடேல்ஸ் என்பது விதை தாவர வரிசையாகும். இது குறிப்பாக உயரமாகவும், சிறிய மரமாகவும் வளரக்கூடியது. இதனுடைய பழத்தினை வெய்லில் காய வைத்து மாவாக்கி பிட்டு, முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மாத்தளை – லக்கல கிராம மக்களிடையே ஒரு சத்தான உணவாக பிரபலமாக உள்ளது. https://newuthayan.com/மது-மரப்-பழ-சீசன்-ஆரம்பித/
-
- 3 replies
- 518 views
-
-
சமஸ்கிருதத்தில் கதைத்தால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி.! ரெல்லி: சமஸ்கிருதத்தில் கதைத்தால் சர்க்கரை நோய் வராது, இதயத்தில் கோளாறுகள் எதுவும் வராது என்று பாஜக எம்பி கணேஷ் சிங் நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார் .அழிந்து வரும் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சமஸ்கிருத மொழியை கற்பிக்க பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமஸ்கிருத பல்கலைக்கழங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்பி கணேஷ் சிங், சமஸ்கிருத மொழியில் கதைப…
-
- 3 replies
- 861 views
-
-
இன்று காலை ஜனாதிபதி ரணிலை சந்தித்த மகிந்த, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தேசசத்தின் சிதைந்து போயுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னாலான அணைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார். கடன் வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதால், நாடு வேறு வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றார். மகிந்தவின்இந்த முன்னெடுப்பு, அரசியல், ராஜதந்திர வட்டாரத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. முன்னர் போல இனவாத அரசியல் செய்து கொண்டே, சர்வதேச ராஜதந்திர அரசியலுக்கு வாய்ப்பில்லை என்பதால், அரசியல் ஜாம்பவனான மகிந்த, பசுத்தோல் போர்த்தியவாறு கிளம்புகிறாரோ என்ன தமிழ் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். எதுவாயினும் நல்லது நடந்தால் சரிதான்.
-
- 3 replies
- 556 views
- 1 follower
-
-
கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது. இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையு…
-
- 3 replies
- 466 views
- 1 follower
-
-
39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…
-
- 3 replies
- 309 views
-
-
ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை மாற்றுவதற்காக, லாட்டரிச் சீட்டு வாங்கிய, ஓய்வு பெற்ற, நர்சுக்கு, 2.5 கோடி ரூபாயும், 101 சவரன் தங்க நகையும், பரிசாக கிடைத்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர், பொன்னம்மா. அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், நர்சாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சில தினங்களுக்கு முன், தன்னிடமிருந்த, 1,000 ரூபாய்க்கு சில்லரை மாற்றுவதற்காக, வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு, சித்திரை விஷுவை முன்னிட்டு, ஒரு வாகனத்தில், லாட்டரிச் சீட்டு விற்பனை செய்து கொண்டி ருந்தனர். இதைப்பார்த்த, பொன்னம்மா, சில்லரை மாற்றுவதற்காக, கடைக்கு செல்லும் முடிவை கைவிட்டு, லாட் டரிச் சீட்டு விற்கும் வாகனத்துக்கு சென்றார்.தன்னிடமிருந்த, 1,000 ரூபாயை கொட…
-
- 3 replies
- 841 views
-
-
அன்று பகல் சுவாமிஜி பலராம பாபுவின் இல்லத்தில் படுத்திருந்தார். தேசம் தேசமாய் அலைந்த அவரது பாதங்களை சீடரொருவர் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். திடீரென சங்கொலியும், மணி நாதமும் எழும்பின. "ஓ, இன்று சூரிய கிரகணம் அல்லவா? கிரகணம் பிடித்துவிட்டதைதான் இந்த ஓசை குறிக்கிறது. நல்லது! நான் தூங்குகிறேன்" என்று கண்களை மூடிக்கொண்டார் சுவாமிஜி. சிறிது நேரத்திற்குப்பிறகு அவர் எழுந்திருந்தார். "ஹூம்! கிரகணத்தின்போது ஒருவன் தனது விருப்பம் நூறு பங்கு நிறைவேறப் பெறுகிறான். கிரகணத்தில் ஒரு காரியத்தை செய்தால், அதை நூறு பங்கு சிறப்பாகப் பின்னால் முடிக்க முடியும் என்று சொல்வார்கள். நான் சிறிது நேரமாகிலும் ஆழ்ந்து உறங்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இதனால் இனிமேலும் இரவுகளில் நித்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
Elephant Rampage: கடந்த சில நாட்களாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. யானைகள் பொதுவாக அமைதியான விலங்குகள். ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். ஆக்ரோஷமான யானையின் மீது சுமார் ஐந்து மணி நேரம் தாக்குப்பிடித்துள்ளனர் இந்த சிறுமிகள்.
-
- 3 replies
- 281 views
- 1 follower
-
-
கணிதத்தில் அனைவரும் நினைவு வைத்திருக்கும் ஒரு பொது எண் பை (pi or π) . அதனுடைய உண்மையான பெறுமானம் 3.1415926535 8979323846 2643383279 5028841971 ... சுருக்கமாக 3.14 ஆக வழங்கப்படுவது. வரைவிலக்கணப்படி ஒரு 1 cm விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவு பை ஆகும். பை ஆனது கிரேக்க அரிசுவடியில் 16 வது எழுத்தாகும். இன்றைய நாளை அமெரிக்கன் முறையில் எழுதினால் அது 3 - 14 என்று வருவதால் இன்றைய நாள் பை நாள் என்று வழங்கப்படுகின்றது . அது மட்டுமல்லாம் இன்றைய தினம் தான் Albert Einstein பிறந்த நாள் கூட. இன்று வரை பை யின் உண்மையான பெறுமதி தசம தானத்தில் அறியப்படவில்லை. அது எல்லையில்லா ஒரு பெறுமதியகவே உள்ளது. அது மட்டும் அல்லாது எகிப்திய பிரமிட்டுகளின் வடிவமைப்பிலும் உபயோகிக்கபட்டுள்ளது.
-
- 3 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் ஒலிவாங்கியை எடுத்துவர மறுத்த மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று(வியாழக்கிழமை) காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது ( மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடு…
-
- 3 replies
- 1.1k views
-
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் பைலட், மாரடைப்பால் சரிந்ததால், அனுபவமில்லாத பயணி ஒருவர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பிரிட்டனின், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், சிறிய ரக விமானம், ஒரு பயணியுடன், கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பைலட்டுக்கு, மார்பில் வலி ஏற்பட்டது. உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு, மயங்கி விட்டார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தரையில் இருந்து, விமானத்தில் இருந்த பயணியிடம், விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர…
-
- 3 replies
- 512 views
-
-
மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை, கடிதங்கள் ஆகியவை, இங்கிலாந்தில் வரும் 17ம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள செராப்ஷையரில் வரும் 17ம் தேதி, உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம் பெறுகின்றன. காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி, ராட்டை, அவரது மரணத்தின் போது அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், ரத்தம் தோய்ந்த புல், ரங்கூனில் இருந்த ராகவன் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட அவரது பல்வேறு கடிதங்கள், குஜராத்தி மொழியில் உள்ள பிரார்த்தனை புத்தகம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன. மண்…
-
- 3 replies
- 742 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்மாறு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் 'கொரோனா முன்னெச்சரிக்கை' நடவடிக்கையாக பெங்களூருவை சேர்ந்த இன்ஸ்டா கிளீன் என்ற நிறுவனம் தேனி மாவட்ட மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் 8 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந் ராஜு 'இன்ஸ்டாகிளீன்' என்ற செயலி உருவாக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 20 பேர் பணி புரிந்து வருகின்றனர். கிராமத்தில் ஐ.டி நிறுவனம் 'கொரோனா'வின் பாதிப்பால் ஊழியர்கள் அலுவலகம் வர அஞ்சியதால் தேனி மாவட்டம் தேவாரம், அனுமந்தன்…
-
- 3 replies
- 574 views
-
-
ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன் தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது. இதனைய…
-
- 3 replies
- 426 views
-
-
பாதுகாப்புக்காக வங்கி பாதுகாப்பு வைப்பு பெட்டகத்தில் (locker) வைத்திருந்த பணம் கரையான் அரித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக். இந்த பெண்மணி தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவர் வங்கியின் சேமிப்பு கணக்கு அல்லது நீண்ட கால சேமிப்புத் திட்டங்களையோ தேர்ந்தெடுக்காது, வங்கி பெட்டகம் வசதியை நாடினார். இதன்படி வாங்கி ஒன்றின் பெட்டகத்தில் மகள் திருமணத்துக்கான நகைகள் மற்றும் இந்திய ரூபா மதிப்பில் 18 இலட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார். அண்மையில் வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. வங்கி பெட்டக …
-
- 3 replies
- 451 views
- 1 follower
-
-
ஆபாச வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் கிம் கதர்ஷியனுடன் ட்ரம்ப் மனைவி ஆபாச வலைத்தளம் ஒன்றில் கடந்த ஆண்டு மிக அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மொடல் அழகி கிம் கதர்ஷி யன் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்பின் மனைவி மெலானியா 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மிக பிரபலமான ஆபாச வலைத்தளம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் அல் லது காட்சிகள் எதுவும் இணையத்தில் பதிவேற்றப்பட் டுள்ளனவா என்ற தேடலின் ஒருபகுதியாக குறித்த வலைத்தளம் இந்த பிரபலங்களின் பெயர்களை பட்டிய லிட்டுள்ளது. இதில் அமெரிக…
-
- 3 replies
- 475 views
- 1 follower
-
-
இசைக்கருவிகளுக்கு பதில் மரக்கறிகளால் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இசைக்குழு மரக்கறிகளை சமைப்பதற்கு மட்டுமன்றி இசைப்பதற்கு பயன்படுத்தி பிரபல்யமாக முடியும் என அவுஸ்திரேலிய இசைக்குழுவொன்று நிரூபித்துள்ளது. மரக்கறி இசைக்ழுழு எனப் பிரபல்யம்பெற்றுள்ள த வெஜிடபிள் ஓர்செஸ்ட்ரா இசைக்குழு தமது தனித்துவமான நிகழ்ச்சியின் மூலம் உலகம் பூராகவும் ரசிகர்களைக்கொண்டுள்ளனர். இக்குழு இசை நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய மரக்கறிகளை கொள்வனது செய்து அதனை இசைக்கருவிகளாக தயார் செய்கின்றனர். இதற்காக 125 அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 15 ஆயிரம் ரூபா) வரையில் செலவிடுகின்றனர். பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் மரக்கறிகளை இவர்கள் தமக்கு ஏற்றவகையில் ;இசைக்கருவிகளாக மாற்றிக்கொள்கின்ற…
-
- 3 replies
- 547 views
-
-
சிறுநீரை சேமியுங்கள்!!! மக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்! சிறுநீரை சேமித்தால் யூரியா இறக்குமதியை நிறுத்திவிடலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் முக்கிய பங்கை பகிப்பவர் அமைச்சர் நிதின் கட்கரி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவோம் என பாஜக சும்மா சொன்னது என கூறி கடும் சர்ச்சையைக் கிளப்பினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் சிறுநீரில் உள்ள அமோனியம் சல்ஃபேட் மற்றும் நைட்ரஜனிலிருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் கூறினார். நாடு முழுவதும் சிறுநீரை சேமித்து வைத்தால் யூரியா இற…
-
- 3 replies
- 869 views
-
-
மேல் மாகாண சபை உறுப்பினர் கிருனிக்கா படசாலை நாட்களில் தனது நண்பிகளுடன் இணைந்து படம் எடுத்ததுடன் அவற்றை நீண்ட நாளைக்கு பிற்பாடு வெளியிட்டுள்ளார். http://www.jvpnews.com
-
- 3 replies
- 1.1k views
-